நிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே!

நிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே!

periyar-nudism

பெரியாரையும் வென்ற ராதிகா ஆப்தே: நிர்வாணம் என்றால் இப்பொழுதெல்லாம் நடிகைகள் கவலைப் படுவதில்லை, ஸங்கோஜப் படுவதில்லை, ஏன் வெட்கப் படுவது கூட இல்லை. அதாவது பிறந்த மேனியில் இருந்து பழகிவிட்டார்களா, பழக்கி விட்டார்களா மற்றவர்களையும், பழக்கிக் கொள்ளச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், திகம்பரர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டதாகத் தெரிகிறது. பெரியார் கூட, நிர்வாண கிளப்பில் சேர்ந்து, நிர்வாணமாக இருந்து, போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டதாக, பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. ஆனால், இதுவரை, அந்த புகைப்படத்தை காட்டவில்லை, போடவில்லை, மறைத்துதான், பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஜைன திகம்பரத் துறவிகள் தமிழகத்திற்கு வந்தால், அவர்களைத் தாக்க கிளம்பி விடுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. ராதிகா ஆப்தே, இவ்விசயத்தில் பெரியாரையும் வென்று விட்டார் எனலாம்.

radhika-apte-leaked-video-response-1நிர்வாண படம் வெளிவந்தத்தைக் கேட்டவரிடம் கொதித்த ராதிகா ஆப்தே: ‘பார்ச்டு’ இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. ‘பார்ச்டு’ படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின[1]. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ராதிகா ஆப்தே, ‘வெற்றி செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் ‘தோனி,’ கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ‘ ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.  சென்ற மாதம் செப்டம்பரில், தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஊடகக்காரர்களிடம் புகார் கூறினார்.

is-it-half-nude-75-nudeஅப்பொழுது படுக்கைக்கு அழைத்தவன் நரகத்திற்கு போவான் என்றது (செப்டம்பர் 2016): இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[2]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர்[3]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[4]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன்.  அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[5]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[6].

jaina-nude-munisமுதலில் னது நிர்வாணத்தைப் பார்த்து விட்டு, பிறகு எனது நிர்வாணத்தைப் பற்றி கேட்கலாம் என்று சாடியது (அக்டோபர் 2016): இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் ‘பார்ச்டு’ வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார்[7].  ராதிகா ஆப்தே, நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நிருபர் ஒருவர், “படம் வெளியாவதற்கு முன்பாகவே உங்களது ஆபாச காட்சி வெளியானது படத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகமா? என்று கேட்டார்[8]. இதற்கு ராதிகா ஆப்தே “மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது[9]. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்[10]. நான் ஒரு நடிகர். எனது வேலைக்கு தேவை என என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை. அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்[11]. உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்[12]. அதற்குப் பிறகு நாம் பேசலாம்” என்று கடுமையாக சாடினார்[13].

maxresdefault-2நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்; நிருபருக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார்[14]. அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்[15].  ஆக இனி நிர்வாணமாக இருப்பது எப்படி என்றால், ராதிகா சொன்னது போல, கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு பயிற்சி பெருங்கள். முன்னர் சிவாஜி கணேசன் போன்றோர் கண்ணாடி முன்பு நின்று வசனம் பேசி நடித்து தான், நடிப்பு கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மணி இப்பொழுது, நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார். எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். நடிப்பில், இல்லை, நிர்வாணத்தில் சிறக்கலாம், நிர்வாணமாக நடிப்பதிலும் மிஞ்சலாம். திகம்பரர்களையும், நங்கா சாதுக்களையும், முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டார் என்பதனை இனி ஒப்புக்கொள்வர்களா?

© வேதபிரகாஷ்

05-10-2016

jaina-nude-munis-another-with-young-ladies

[1] தி.இந்து, நிர்வாணம்சர்ச்சை ஆவது எப்போது?- ராதிகா ஆப்தே ஆவேசம், ஐ.ஏ.என்.எஸ்Published: October 5, 2016 11:07 ISTUpdated: October 5, 2016 11:07 IST

[2] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]

[3] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள்ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai

[4]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

[5] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள்அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.

http://seithi.mediacorp.sg/mobilet/entertainment/radhika-apte/3146810.html

[6] http://tamil.filmibeat.com/heroines/radhika-apte-too-faced-casting-couch-bollywood/slider-pf50072-042355.html

[7]http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article9187647.ece

[8] சென்னை.ஆன்லைன், ராதிகா ஆப்தேவிடம் மன்னிப்பு கேட்ட நிருபர்நடந்தது என்ன?, October 05, 2016, Chennai.

[9] தமிழ்.வெப்துனியா, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? விளக்கமளித்த ராதிகா ஆப்தே, Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)

[10] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/radhika-apte-described-about-naked-body-116100500018_1.html

[11] பிளிம்.பீட்.தமிழ், நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல், Posted by: Siva, Published: Wednesday, October 5, 2016, 10:47 [IST]

[12] http://tamil.filmibeat.com/heroines/parched-leaked-clip-controversy-here-s-why-radhika-apte-042584.html

[13] தினத்தந்தி, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? முதலில் உங்கள் உடலை பாருங்கள் நிருபரிடம் கோபபட்ட நடிகை ராதிகா ஆப்தே, பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST.

[14] http://www.chennaionline.com/article/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9

[15] http://www.dailythanthi.com/News/CinemaNews/2016/10/05113616/Radhika-Aptes-lovemaking-scene-with-Adil-Hussain-from.vpf

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: