காசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்!

காசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்!

madras-university-girls-dance-17_11_2016_007_039

புகழ் மிக்க சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் 16-11-2016 புதன் கிழமை அன்று குத்தாட்டம்[1]: சென்னை பல்கலை வளாகத்தில், வகுப்பு நேரத்தில் மேளதாளத்துடன், மாணவியர் குத்தாட்டம் ஆடி, திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், 30 துறைகளின் வகுப்புகள் ஸ்தம்பித்தன. சென்னை பல்கலையில் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், முற்றுகையிடுவதும் வழக்கமாக இருக்கிறது. சமீப காலமாக, அரசுக்கு எதிரான கூட்டங்கள் நடத்தும் களமாக, சென்னை பல்கலை மாறி வருகிறது. அதாவது அரசியல் மற்றும் சித்தாந்தம் உள்ளே நுழைந்து விட்டதால், இதெல்லாம் ஊக்குவிக்கப்படுகின்றன. 14-11-2016 அன்று புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக, சென்னை பல்கலை அரங்கில், கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. அல்கலைகழகத்திலேயே, இத்தகைய ஒருதரப்பு கருத்துருவாக்கம் உண்டாக்கும் வகையில் இருக்கும் கூட்டத்தினர் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். இது மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தக் கூடிய விவகாரமாகி விடும் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

actrsses-who-danced-at-reddy-nalungu-function-2

ஆடி வந்த மாணவ, மாணவியரை, அங்கு வந்த பொது மக்கள், பேராசியர்கள், ஊழியர்கள் வேடிக்கை பார்த்தனர்: இந்நிலையில் 16-11-2016 அன்று சென்னை பல்கலையின் மாணவ, மாணவியர் சிலர், தப்பட்டை அடித்து கொண்டு, குத்தாட்டம் ஆடி வலம் வந்தனர். சென்னை பல்கலை வளாகம் முழுவதும், 32 துறைகளையும் சுற்றி ஆடி வந்த மாணவ, மாணவியரை, அங்கு வந்த பொது மக்கள், பேராசியர்கள், ஊழியர்கள் வேடிக்கை பார்த்தனர். பல்கலையின் பதிவாளர் டில்லிக்கு சென்றிருந்ததால், நிர்வாகத்தினர் தவியாய் தவித்தனர். இதுகுறித்து பல்கலையின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்.க்கு புகார் அளிக்க சிலர் சென்றனர். ஆனால், அவர் மூன்று பல்கலைகளின் சிண்டிகேட் கூட்டத்தில் பிசியாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. இதையெடுத்து, ஒரு மணி நேரம், வகுப்புகளில் பாடம் நடத்துவது நிறுத்தப்பட்டு, மாணவர்கள் குத்தாட்டம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குத்தாட்டத்தின் போது, கூடி நின்ற மாணவர்கள் சிலர் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, துண்டு பிரசுரம் வைத்திருந்தனர்.

kerala-woman-slap_her-daughterபேராசிரியர்கள், துணையாசிரியர்கள் முதலியோர் எப்படி பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார்கள்?: பேராசிரியர்கள், துணையாசிரியர்கள் இவர்கள் எல்லோரும், அந்தந்த மாணவ-மாணவியர் தம் துறையைச் சேர்ந்தவர்கள் என்றறிந்திருக்கும் போது, ஏன் கூப்பிட்டுக் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை. 32 துறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள், அவர்களை தொந்தரவு புரியும் விதமாக எப்படி ஆடி-பாடி கலாட்டா செய்யலாம். அவர்களது படிப்பு பாதிக்கும் என்று, பல்கலையில் படிக்கும் இந்த மாணவ-மாணவிய ரத்தினங்களுக்குத் தெரியாமல்-புரியாமல் போகுமா?  கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என்றெல்லாம் பேசும் போது, இத்தகைய குத்தாட்டங்கள், ஏற்புடையதா? அப்பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்க்க நேர்ந்தால், அவர்கள் இத்தகைய குத்தாட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா, ரசிப்பார்களா அல்லது கண்டிப்பார்களா? மார்ச்.2016ல் கேரளாவில், ஒரு இளம்பெண், இவ்வாறு ஆட்டம் போட்டபோது, எதேச்சையாக பார்த்த, அவளது தாயார், கன்னத்தில் “பளார்” என்று அறை விட்டதை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்[2]. அதாவது, தவறு என்று தெரிய வரும்போது, நிச்சயமாக குரு, ஆசான், ஆசிரியர் என்ற தகுதியில் உள்ளவர் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் நின்றது, அவர்களது பொறுப்பற்றத் தன்மையினை எடுத்துக் காட்டுகிறது.

rakul-preet-singh-dance-stills-at-filmfare-awards-2016-02

நடனம் போர்வையில் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆபாச குத்தாட்டம் அனுமதிக்கப்படுவது: பொதுவாகவே, இப்பொழுதெல்லாம் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் முதலியவற்றில் விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்றெல்லாம் நடக்கும் போது, சினிமா பாடல்களை, மிகசப்தமாக போட்டு, மாணவ-மாணவியர்கள் கண்டபடி கை-கால்களை ஆட்டிக் கொண்டு நடமாடுவது சகஜமாகி விட்டது. மாணவியர் தனியாகவும் ஆடுகின்றனர். இதெல்லாம் ஆபாசமான, அசிங்கமான, இரட்டைப் பொருள் தொணிக்கும் இக்கால சினிமா பாடல்களுக்கு ஏற்றபடி ஆடி காட்டுகிறார்கள். இதைத்தான் “குத்தாட்டம்” என்கின்றனர். இதற்காக நாட்கணக்கில் பயிற்சி செய்கின்றனர். சிலர் கற்றுக் கொண்டும் ஆடதயாராகின்றனர். பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், தாளாளர், அதிகாரிகள், பேராசிரியர்கள், பெற்றோர்…..என்று எல்லோரும் உட்கார்ந்து கொண்டு தான் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இவர்கள் தங்களது மகள்களை அவ்வாறு ஆடவிட்டு மற்றவர்கள் எஅசிக்குமாறு செய்வார்களா என்று தெரியவில்லை. மாலைநேர கலாச்சார நிகழ்ச்சி என்ற விதத்திலும் அவை நடந்து கொண்டிருக்கின்றன. சினிமா மோகத்தில் இவ்வாறு, இக்கால பெண்கள் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து வருத்தப்பட வேண்டிய விசயமாகி விட்டது.

2cr-remuneration-rakul-preet-dance-gali-wedding-celebrations

பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்![3]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது தமிழக நடிகைகள் குத்தாட்டம் போட்டதை கவனிக்க வேண்டும்[4]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[5]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].  நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[7]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது[8]. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள். ஆனால், கல்லூரி- பல்கலை மாணவியர் அத்தகைய செயலை செய்யலாமா என்பதுதான், இப்பொழுதைய கேள்வி, பிரச்சினை.

bollyhood-dance-culture

கோடிகள் வாங்கி நடனம் ஆடிய நடிகை: ரெட்டி மகள் திருமணத்தின் முன்னராக நடிகைகள் ஆடினர் என்றால், திருமணத்திலும் ஆடியுள்ளனர். கலி ஜனார்தன நடிகை ராகுல் ப்ரீத் சிங் [Rakul Preet Singh] என்ற நடிகை நடனமாட ரூ. 1.65 கோடி வாங்கியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன[9].  சில ஊடகங்கள் ரூ. 2 கோடிகள் வாங்கியதாகக் கூறுகின்றன[10]. ஆடிய விடியோ காட்சி வளைதளாத்தில் காணப்படுகிறது[11]. எப்படியாகிலும் நடனமாட கோடிகள் கிடைக்கின்றன எனத்தெரிகிறது. இதையெல்லாம் கேள்விப்படும் இளம்பெண்கள், உசுப்பேற்றுவதற்கு, வேறு ஒன்றும் தேவையில்லை என்ற நிலையை கொண்டு வந்து விடும் எனலாம். பணம் என்றால், இனி தாயும் மாறலாம், கன்னத்தில் அறைவதற்குப் பதிலாக, “மானாட, மயிலாட” ரீதியில், ஆட அனுமதிக்கலாம்.

பெண்கள் சிறந்த உதாரணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்: சினிமா நடிகைகள் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஏன் கற்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை. திருமணம், கணவன், குடும்பம் முதலியவற்றிலும் கட்டுப்பட தயாராக இல்லை. நடிகைகளில் பலர் இத்தகைய விவகாரங்களைப் பற்றி வெளிப்படையாகவே தங்களது கருத்துகளை சொல்லி வந்துள்ளார்கள்-வருகிறார்கள். ஆனால், இவற்றை இந்திய பெண்கள் உதாரணமகவோ, பின்பற்றக் கூடிய குணங்களாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. பெரும்பாலான பெண்கள், தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏனெனில், இத்தகைய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், ஒரு நிலையில் கசக்க ஆரம்பித்து விடும். நடிகைகளுக்கு, இளமை, அழகு, நடனமாடும் அல்லது நடிக்கும் திறமை, மார்க்கெட் இல்லாவிட்டால், யாரும் சீண்ட மாட்டார்கள். சில குறுகிய காலங்களிலேயே மறக்கப்படுவர், மறைந்தும் விடுப்வர். ஆனால், மற்ற பெண்கள் அப்படியில்லை.  இந்திய மதிப்புகளுக்கு மரியாதை கொடுத்து, உயர்ந்த பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து, சிறக்க வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், பெண்மை போற்றப்படும், குடும்பங்கள் சிறக்கும்.

© வேதபிரகாஷ்

17-11-2016

[1] தினமலர், சென்னை பல்கலையில் மாணவியர் குத்தாட்டம், பதிவு செய்த நாள். நவம்பர். 17, 2016.

[2][2] http://indianexpress.com/article/trending/viral-videos-trending/video-kerala-flash-mob-woman-slaps-girl/

[3] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்!, November 12, 2016, Chennai

[4]http://m.chennaionline.com/article/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=258297

[6] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.

[7] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.

[8] https://www.youtube.com/watch?v=_yGy7_9DR4Y

[9]http://english.sakshi.com/entertainment/2016/11/16/how-much-rakul-is-paid-for-dancing-at-gali-janardhan-daughters-wedding

[10] http://pressks.com/world/2cr-remuneration-rakul-preet-dance-gali-wedding-celebrations/10447/

[11] PressKS, 2Cr Remuneration for Rakul Preet Dance at Gali Wedding Celebrations, By Press Ks Admin, Thursday, November 17, 2016

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: