குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா? நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா?:

குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா? நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா?:

relations-coming-together-viji-chandrasekarநடிகைகள் ஒவ்வொரு செனல்களிலும் குடும்ப பஞ்சாயத்து செய்து வைப்பது: விஜய் டிவியின் “கதையல்ல நிஜம்” தொடங்கி இன்றைய சன்டிவியில் “நிஜங்கள்” வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. என்னத்தான் நிஜம், உண்மை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவர்கள் “குடும்பம்”, “உறவு” முதலிய காரணிகளில் போலியாக இருப்பதால், அந்நிகழ்ச்சிகள் வேடிக்கைக்காக, பொழுது போக்கிற்காக அமைகிறதே அன்றி, “உண்மைக்காக” – “நிஜத்திற்காக” யாரும் பார்ப்பதாக இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது[1]. எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது[2]. அதிகம் அழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது. ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

family-courts-and-actressesகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சின்னிமா நடிகைகளும் ஒன்றாவார்களா?: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா? நடிகை என்ற தகுதி மட்டும் போதுமா?

tv-show-responsible-for-the-suicide-of-the-driverலாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்[3]: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்தார். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்தினார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்தார். இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்[4]. இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால், போன உயிர் வராதே?

actress-gita-chided-transgender-for-relationship-11-2016

20 வயது பெண், 23 வயது திருநங்கையை கல்யாணன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததை கண்டித்த நடிகை கீதா: நடிகை கீதா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர். 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா? என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார். மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6].

could-lakhsmi-viji-roja-khushboo-have-solved-their-problemsஇவ்விசயத்தில் கீதா சொன்னதில் தவறில்லை: 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கல்யாணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தது தவறு என்று கண்டிக்க, “ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா?,” என்று அந்த பெண்ணிடம் நிதர்சனமாக கேட்டதில் தவறில்லை. ஏனெனில், திருமங்களைகள், கல்யாணம் செய்து கொண்டால், குழந்தை பெறமுடியாது. அதிலும், பெண், திருநங்கையை திருமணம் செய்வது என்பது அபத்தமானது. அப்பெண் இக்காலத்தில் ஏதோ புரட்சிகரமாக செய்ய வேண்டும் என்றா ரீதியில், குழப்பத்தில் மேற்கொண்ட முடிவு என்று சொல்லலாம். மேலும், டிவி-ஷோக்களில் அவ்வாறு பங்கு கொள்வது, விளம்பரத்திற்காக என்றும் சொல்லலாம். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறியது சரியாகத்தான் உள்ளது.

amala-paul-divorceசினிமா நடிகைகளை வைத்து, பேட்டி கண்டு, அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போல டிவி-செனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்களா?:  சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா? ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா? டிவி-செனல்கள் முன் வருவார்களா? இல்லை அந்த நடிகை-நடிகர்கள் முன் வௌவார்களா?

© வேதபிரகாஷ்

19-11-2016

khushboo-show

[1] பிளிமி.பீட்.தமிழ், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, Posted by: Mayura Akilan, Published: Wednesday, October 5, 2016, 9:01 [IST]

[2]  http://tamil.filmibeat.com/television/lakshmi-ramakrishnan-kushboo-tv-reality-show/slider-pf50425-042581.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன், By: Karthikeyan, Published: Sunday, September 4, 2016, 1:55 [IST]

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/lakshmy-ramakrishnan-explanation-about-landed-controversy-261945.html

[5] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-you-can-have-relationship-after-marriage-actress-geetha-in-telugu-tv-program-116110700032_1.html

[7] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: