டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

actresses-cannot-solve-family-problems

actresses-cannot-solve-family-problems

மக்கள் தங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் நடிகைகள் தீர்த்து வைப்பார்களா?: மக்கள் தங்களது உறவுகளை, தாம்பத்திய முறைகளை, தங்களால் பேண முடியவில்லை என்பதும், சமூகம் பலவழிகளில் சீர்கெட்டு கிடக்கும் போது, குடும்பத்து பெரியவர்கள், பெற்றோர், இல்வாழ்க்கை நலன் விழையும் மற்றோர், உற்ற நண்பர்கள் முதலியவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பதும், அந்நிலைகளில் இவர்கள் சரிசெய்ய முடியாததை, சினிமா நடிகைகள் சரிசெய்து வைக்கிறார்கள் என்பது போன்ற நிகழ்ச்சிகளை டிவி-செனல்கள் காட்டி வருவது மிகக் கேவலமாகும். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது, லஞ்சம் வாங்குபவன் யோக்கியன் போல லஞ்சம் வாங்காதே என்று பிரச்சாரம் செய்வது, விபச்சாரிகள் கற்பைப் பற்றி விவாதிப்பது-பரிந்துரைப்பது போன்றவை எல்லாம் கேவலத்திலும் கேவலமான விசயங்கள். ஆனால், அத்தகையவை மேடைகளில் நடந்து வந்தன. இப்பொழுது, டிவி-செனல்களில் நடந்து வருகின்றன.

actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

When actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

நடிகைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் யோக்கியதை, அதிகாரம் உள்ளதா?: நடிகைகளின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கக் கூடாது என்று கூட சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கிறேன் என்று டிவி-ஷோக்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரீதியில் இறங்கி விட்ட போது, அதைத் தட்டிக் கேட்கத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதை நடத்தும் நடிகைகள், தங்களை ஏதோ பெரிய ரிஷி-முனி, நீதிபதி, எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தீர்க்கதரிசி என்பது போல பாவித்துக் கொண்டு, கலந்து கொள்பவர்களுக்கு, ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது, திட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு யார் அத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது, அல்லது கலந்து கொள்பவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லையா, என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ramba-gives-petition-in-the-family-court

Ramba-gives-petition-in-the-family-court

குடும்ப நீதிமன்றங்களை அவமதிக்கும் டிவி-நிகழ்ச்சிகள்: குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சிலருக்குத்தான் தெரிகிறது, தெரிய வருகிறது. அங்கு நீதிபதிகள் சட்டதிட்டங்களில் வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுருத்தப்படுகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், டிவிசெனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, பார்ப்பவர்களுக்கே சங்கடமாக இருக்கிறது. சில நேரங்களில், அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க வருகிறார்களா அல்லது விளம்பரத்திற்காக வருகின்றானரா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா அல்லது டிவிசெனல்காரர்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றானரா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

urvasi-actress-spotted-drunk

urvasi-actress-spotted-drunk

விவாகரத்து பெற்று மறுமணம் செய்து, குடிக்கும் நடிகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது: தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் “கைரளி” செனலில் “ஜீவிதம் சாட்சி” என்று நடத்தி வருகிறார்[1]. நடிகை ஊர்வசி மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 9, 2016 அன்று விசாரணைக்கு வருகிறது[2].  செபின் என்பவர் “ராயல் காவடியர் பொரட்க்ஷன் போர்ஸ்” [Royal Kavadiyar Protection Force president Shefin] என்ற அமைப்பின் தலைவரான இவர் தான் ஊர்வசியின் மீது புகார் கொடுத்தார்[3]. டிவி நிகழ்ச்சியின் மீது குடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்[4]. 2015ல் கேரள மாநில சட்டசபை பெண்-ஊழியர்கள் கூட்டத்தில், குடித்த நிலையில் பேசும் போது, பிரச்சினை ஏற்பட்டதால், இவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்[5]. மனோஜ் கே. ஜெயன் [Manoj K. Jayan] என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு எட்டாண்டு வாழ்ந்தார். 2008ல் விவாகரத்து செய்து கொண்டு, 2013ல் சென்னையைச் சேர்ந்த பில்டர் சிவபிரசாத் [Chennai-based builder Sivaprasad] என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

urvasi-actress-blaming-for-her-drinking-habit

Urvasi-actress-blaming-for-her-drinking-habit

ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி[6]. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்[7]. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம்[8]. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[9]: “நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்று கேட்டுள்ளது சரியான கேள்விதான்[10]. ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது[12].  இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்[13]. அதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[14]. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது[15].

the-fact-or-reality-khusbooகுஷ்புவும் குடும்ப பஞ்சாயத்து செய்ய வந்து விட்ட நிலை: தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி / அதிமுக தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார்[16]. இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்[17]. குஷ்புவைப் பொறுத்த வரையில், பெண்களின் விசயங்களில், குறிப்பாக பெண்களின் கற்பு போன்ற விவகாரங்களில் சர்ச்சைகள் நிறைந்த கருத்துகளையே வெளியிட்டார். வழக்குகளும் போடப்பட்டன. ஆனால், அரசியல் ஆதரவு இருந்ததால் தப்பித்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தன்னுடைய அரசியல் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இருப்பினும், குடும்ப-பாங்கானவர்கள் குஷ்புவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. நடிகை என்றுதான் பார்க்கின்றனரே அன்றி, வேறெந்த விதத்திலும் பார்ப்பதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மற்ற நடிகைகளுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

19-11-2016

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

[1] தினமலர், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை ஆபாசமாக திட்டுவதாக புகர்: ஊர்வசிக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ், November 18, 2016, 11:58 [IST].

[2] http://cinema.dinamalar.com/other-news/53207/cinema/otherlanguage/Human-Rights-Commission-seeks-explanation-for-actress-Urvashi.htm

[3] english.manoramaonline, ‘Urvashi was drunk on TV show’: Here’s what landed the actor in trouble, byOnmanorama Staff, Friday 18 November 2016 09:42 AM IST.

[4] The complaint, filed by Royal Kavadiyar Protection Force president Shefin, also accused Urvashi of appearing on the TV show drunk.

http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/urvashi-drunk-misbehavior-tv-show-kerala-human-rights-commission.html

[5] Last year, the actor addressed an event organized by a section of Kerala assembly’s women employees in a drunken stage and the officials had to pack her off.

[6] மக்கள்முரசு, ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?, Posted on November 18, 2016.

[7] http://makkalmurasu.com/actress-urvashi-trouble-rude-behaviour-talk-tv-show/

[8] தமிழ்.வெப்துபனியா, அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST).

[9] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actor-urvashi-misbehaves-during-tv-show-kerala-rights-panel-seeks-report-116111800003_1.html

[10] பிளிமி.பீட்.தமிழ், ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?, Posted by: Siva, Published: Thursday, November 17, 2016, 17:54 [IST].

[11] http://tamil.filmibeat.com/heroines/urvashi-misbehaves-on-television-show-043348.html

[12] தினகரன், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ், Date: 2016-11-18@ 00:32:51.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, . By: Essaki, Published: Friday, November 18, 2016, 14:34 [IST].

[14] http://tamil.oneindia.com/news/india/actress-urvashi-trouble-267578.html

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=259544

[16] தமிழ்நாடு.நியூஸ், சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு, OCTOBER 21, 2016

[17]http://newstnn.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: