டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

khushboo-ramakrishnan-sripriya

விகடனுக்கு ஶ்ரீபிரியா சொல்லியது[1]: இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “எப்ப டீவியை போட்டாலும் எதோ குடும்பத்தின் பிரச்னையும் கண்ணீரும் அடிதடியும்தான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் தமிழ் சேனல்களை மட்டும் சொல்ல வில்லை. தென்னிந்திய சேனல்கள் அனைத்திலும் இதுதான் இருக்கிறது. இன்னும் சொல்வதானால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அனைவரும் எனக்கு மிக நெருக்கம். இருந்தாலும் என் கருத்தினையும் என் உணர்வினையும் பகிர்ந்துதானே ஆக வேண்டும். திரைத்துறையில் அடிமட்ட தொழிலாளிகளான புரொடக்ஷன் உதவியாளரில் தொடங்கி தயாரிப்பாளர், கலைஞர்கள், இயக்குநர்கள் வரை மிகமிக உணர்வு பூர்வமானவர்கள். கண்ணீர் சுரப்பி என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆசையுடன் திரைத்துறைக்குள் வந்த அனைவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். நிகழ்ச்சியை நடத்தும் முன்னணி நடிகைகளுக்கு அங்கு பங்கேற்கும் நபர்களின் பின்னணியோ, பிரச்னைகளின் ஆழமோ 100 சதவிகிதம் முழுதாக தெரியப்போவதில்லை.”

 khushboo-rowdism-malaimalar-photo

நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே[2]: ஶ்ரீபிரியா தொடர்கிறார், “அப்படியான சூழலில் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே. இன்றைக்கும் சினிமாவில் எவ்வளவோ பேர் சத்தமில்லாமல் உதவி வருகின்றனர். அதே போல தனிப்பட்ட மனிதர்களின் துயரங்களையோ, கஷ்டங்களையோ வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற குடும்பப் பிரச்னைகளில் ஈடுபடுவதை என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் 8-வது வரைதான் படித்துள்ளேன். ஒருவர் அவரின் வாழ்க்கை பிரச்னை குறித்து என்னிடம் யோசனை கேட்டாலோ அல்லது அந்த பிரச்னையை சொன்னாலோ என் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்னால் யோசனை சொல்லமுடியும். அதற்கு என படித்த சட்ட அறிஞர்களோ, குடும்ப நல ஆலோசகர்ளோ தான் சரியான ஆலோசனையோ, வழிகாட்டுதலோ செய்ய முடியும். யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் என் நெருங்கிய தோழிகள்தான். இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை,” என்று தெரிவித்தார்[3].

khushboo-rowdism-malaimalar-photo-ranjani-condemns

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்: “இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம். ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாகநல்லடிரஸ்பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது,” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக, பிரச்சினையை விட்டுவிட்டு, குழாயடி சண்டையில் இறங்கி விட்டனர். இனி, இவர்களுக்கு “கவுன்சிலிங்” கொடுக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

pooooo-pooooooooo-shouting-khusboo-inciting-fight

“ராடான்” ராதிகா கூறிய கருத்து[4]: அதேபோல், நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்று குறிப்பிட்டுள்ளார்[5]. பலமுறை திருமணம் செய்த இவர், இப்படி சொல்லியிருப்பதும் வேடிக்கைதான். “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள்”. என்றால், முட்டாள் பெட்டி நிகழ்ச்சிகளை உருவாக்கும், இந்த அம்மையாரைப் பற்றி என்ன சொல்வது?அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்பது ஒப்புக்கொள்வது போன்றுதான் உள்ளது. ஆமாம், டிவி-நிகழ்ச்சிகள், ரீரியல்கள் இல்லையென்றால், இவர்களுக்கு, வரும்படி எங்கிருந்து வரும்? “தகுதி, அந்தஸ்து, யோக்கியதை” இவர்களை பாதித்து விட்டது என்று தெரிகிறது.

ranjani-sripriya-twitter-comments

தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியது[6]: “தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்யுமாறு மனித உரிமை ஆணையத்தில் முறையிட இருக்கிறோம். அவர்களால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்எனக் கொந்தளிக்கிறார் தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், “ இதுபோன்ற நிகழ்ச்சிகள் பிரச்னைகளைத் தீர்ப்பது போலத் தெரியவில்லை. பிரச்னைகளை மேலும் மேலும் பூதாகரமாக்கும் வேலைகளையே செய்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில், யாரிடம் தவறு இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், வேதனையோடு நிகச்சிகளுக்கு வருபவர்களை மிகவும் கஷ்டப்படுத்துகின்றனர். இது நாகரிகம் கிடையாது. குடும்ப நல நீதிமன்றங்களில் எதற்கு சமசர மையங்களை வைத்திருக்கிறார்கள்? தொலைக்காட்சிகளில் நாள்தோறும் ஒளிபரப்ப, இது ஒன்றும் நாடகம் கிடையாது. ஒரு குடும்பத்தின் கண்ணியம் காக்கப்படாமல் தொடர் போல் நடத்துவது சரிதானா? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது ஆரோக்கியமான சமூகத்துக்கு வழியமைக்காது. சில படங்களில் நடித்துவிட்டால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏதோ அரச சபையை நடத்துவதுபோல் மற்றவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

family-courts-and-actresses

நடிகைகள்-கட்டப்பஞ்சாயத்து விசயத்தில் அமுக்கி வாசிக்கும் பெண்ணியங்கள்: குஷ்பு-கற்பு கருத்து விசயத்தில் பாமக கொதித்து எழுந்தது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குஷ்புவை காப்பாற்றினார் என்று தான் சொல்லவேண்டும், ஏனெனில், மற்ற வழக்குகளோடு, உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக இருந்தது. திமுக இப்படி கருத்து சொன்னபோது, மற்ற கட்சியினர் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. குறிப்பாக, பாஜகக்காரர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தமாஷாகத் தான் இருக்கிறது. பெண்ணிய வீராங்கனைகள் பற்றி சொல்லவே வேண்டாம், இதில் கூட “ரைட்-லெப்ட்” என்று பார்ப்பார்கள் போலும்.

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-fight-scene-sun-tv-radhika

எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை: குஷ்பு இப்படி சொன்னதே வியப்பாக இருக்கிறது. அரசியல், கோவில்-நுழைவு, பெண்ணியம், கற்பு, திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்று தாராளமாக அத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் கருத்து கூறும் குஷ்பு, இதற்கு ஒதுங்குவது வினோதமே! விகடன் நிருபர் நிஜங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை குஷ்புவிடம் பேசியபோது[7], “எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை,” என்றதோடு முடித்துக் கொண்டார். என்று செய்தி காணப்படுகிறது[8]. அப்படியென்றால், அந்நிருபர், குஷ்பு சொன்னதை முழுமையாக வெளியிடவில்லை என்று தெரிகிறது. கருத்து என்று வரும் போது, அதிலும், நடிகைகள் குடும்பப்பிரச்சினை விசயத்தில், மனோதத்துவரீதியில் அல்லது கட்டப்பஞ்சாயத்து பாணியில், டிவி-நிகழ்ச்சிகள் நடத்தலாமா, என்ற கேள்வி எழுந்த விட்டப் பிறகு, இப்படி ஒதுங்குவது, அந்த “யோக்கியதை” பாதிக்க ஆரம்பித்து விட்டது என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

03-12-2016

actresses-cannot-solve-family-problems

[1] விகடன், நாம என்ன நாட்டாமையா?” –டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!, Posted Date : 10:00 (29/11/2016); Last updated : 15:07 (29/11/2016).

[2] தமிழன்.தொலைகாட்சி, என்னம்மா நீங்க இப்படி பண்ட்ரீங்களம்மா? டிஆர்பி .நடிகைகளிடம்ஸ்ரீப்ரியா கேள்வி !! , 30 நவம்பர் 2016.

[3]http://www.tamilantelevision.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3-33341.html

[4] தமிழ்.வெப்துனியா, அறிவில்லாதவர்கள் பார்க்கிறார்கள்பஞ்சாயத்து நிகழ்ச்சியை கலாய்த்த ராதிகா, Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (12:34 IST).

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actess-radhika-sarathkumar-twitteed-tv-shows-116113000015_1.html

[6] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[7] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[8] http://www.vikatan.com/news/tamilnadu/74003-khushbu-slams-activists-for-condemning-family-debates-on-channels.art

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: