நயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

நயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

nayanthara-dressing

நடிகைகளின் குத்தாட்டம் – விவகாரங்கள்: நடிகைகளின் உடை, அத்தகைய உடையோடு, நடனம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அவற்றைப் பற்றிய விமர்சனம் என்று வந்தால், அவர்களுக்கே பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது போலும். இப்பொழுதெல்லாம் “குத்தாட்டம்” என்று பெரிய-பெரிய நடிகைகள் ஆடத் தயாராக உள்ளார்கள். அவர்களில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் வேறு. அந்நிலையில் உள்ளூர் நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார்கள். கோடிகளில் பணம் கொடுப்பதால், நடிப்பதை விட, இப்படி ஆடுவதற்கு முன்னணி நடிகைகளும் தயாராக உள்ளார்கள். நிச்சயமாக பெரியவர்கள் பார்த்தாலே அருவருப்பாக உள்ளநிலையில், அசிங்க ஆட்டமும், ஆபாச பாட்டமும் உள்ளன. ஒரு நடனமாடும் பெண்ணைச் சுற்றி 30-40-50 ஆண்கள் இரையைச் சுற்றி வருவது போன்று வலம் வருவது, முகர்ந்து பார்ப்பது, தூக்கிப் போட்டுப் பிடிப்பது, போன்ற சேட்டைகளுக்கும் குறைவில்லை. சும்மா இருப்பவனையும் உசுப்பி விடும் வகையில் தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றின் பின்னணியில் உள்ள அனைவருமே அத்தகைய, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு முதலியவற்றிற்கு பொறுப்பாவார்கள். உடலைக் காட்டத் தயாராகி விட்டநிலையில், இவர்கள் பேச்சும் “பெண்ணுரிமை” பேச்செல்லாம் ஒருமாதிரியாக இருந்தாலும், சமுதாயம் உருப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள்-ஆண்கள் இரு வகையறாக்களும் மாற வேண்டும்.

helen-jyoti-lakhsmi-dancresஹெலன், ஜோதிலட்சுமி, வகையறாக்களை மிஞ்சிவிட்டார்களா இக்கால நடிகையர்?: “பணம் கொடுத்தால் ஆடைகளை களைவார்கள் என்று நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா, நாங்கள் எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” [We are not strippers – Nayanatara] என்று நயனதாரா காட்டமாக பதில் கூறியுள்ளார்[1].  இதில் பணப்பிரச்சினையா, மானப்பிரச்சினையா என்று தெரியவில்லை[2]. “எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” என்று, “இந்தியா டுடே”வும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[3]. ஆகவே உடை குறைத்து, உடையில்லாமல், நிர்வாணமாக நடிப்பது-ஆடுவது என்ற பிரச்சினை வெளிவந்துள்ளது[4]. இனி விவாதிக்க தயாராகி விடுவார்கள். நடிப்பது அவர்கள் தொழில் எனும்போது, “நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும்”, என்பது போல, “கிளப் டான்ஸர்” எனும் போது, அப்படித்தான் நடிக்க வேண்டும். 30-40  வருடங்களுக்கு முந்தைய ஹெலன் என்ற நடன நடிகையை இவர்கள் மிஞ்சி விட்டார்களா என்று தெரியவில்லை. அதே போல, தென்னிந்திய திரையுலகத்தில், ஜோதிலட்சுமி ஆடாத ஆட்டம் இல்லை. அத்தகைய ஆட்டத்திற்கும், பாட்டிற்கும் ஓடிய படங்களும் உள்ளன.

nayantara-suraaj-tamanna-26-12-2016ஏன் குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோதானோ உடைகளில் நடிகைகள் நடிக்கஆட வேண்டும்: “நடிகைகள் குறைந்த உடையில் இருப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்”, என்ற தொணியில் பேசிய டைரக்டர் சுராஜுக்கு, நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[5]. “ஏனோ-தானோ உடையில் நடித்தால் தான் கிளாமர், அதற்கு நடிகைகள் தயாராக இருக்க வேண்டும்”, என்ற தோணியிலும் நீட்டியுள்ளார்[6].  “நியூஸ்-எக்ஸ்” ஆங்கில செனல், இதைப்பற்றிய விவாதத்தையே 26-12-2016 அன்று வைத்து விட்டது. முதலில், “குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ-தானோ உடைகள்” என்றால், அவை எப்படி வரையறுக்கப்படு, யார் செய்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. “உடலை மறைக்க ஆடையா, ஆடையை மறைக்க உடையா?”, என்ற நிலையில் தான் நடிகைகள் ஆடி வருகிறார்கள். எது குறைந்தால், எது அதிகமாகும் – நேர் விகிதமா, எதிர் விகிதமா, தலை கீழ் விகிதமா – என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, கற்பழிப்பு விசயத்தில், பெண்கள் ஆபாசமாக, ஈர்க்கும் வகையில் ஆடை அணிவதால் தான், அத்தகைய குற்றங்கள் ஏற்படுகின்றன, என்று சமூக சேவகி, போலீஸ் அதிகாரி முதலியவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “நாங்கள் எப்படி ஆடை அணிவது என்பதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது”, என்றெல்லாம் ஆர்பாட்டத்தோடு கருத்துத் தெரிவித்தார்கள். இப்பொழுது, நடிகைகளுக்கே, அப்பிரச்சினை வந்து விட்டது.

suraj-comment-and-apology-26-12-2016சுராஜ் தெரிவித்த சர்ச்சையான கருத்து: விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ் கூறும்போது, “‘நான் சாதாரண கீழ் வர்க்க ரசிகர்களுக்காக படம் எடுப்பவன். ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் கஷ்டப்பட்டு சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவைகத்திச்சண்டைபடத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்,” என்று கூறியிருந்தார்[7].

nayatara-and-tamanna

கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும்: “நடிகைகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அதற்கான படத்தில் நடிக்க வேண்டியதுதான். கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்றைக்கு முன்னணி ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் டி.வி சீரியல்களில் முக்கியமான வேடங்கள் கிடைக்கக்கூடும். கிளாமராக நடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக நடிக்க வேண்டும். அதற்காகத்தான் கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்வேன். கத்தி சண்டைபடப்பிடிப்பில் காஸ்ட்யூம் டிசைனர், தமன்னாவின் கால்கள் முழுவதையும் மூடி இருக்கும்படி டிரெஸ் எடுத்துக்கொண்டு வருவார். உடனே நான், ‘அந்த டிரெஸ்சை கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வாஎன்று சொல்வேன். உடனே காஸ்ட்யூமர், ‘இல்ல சார். மேடம் திட்டுவாங்கஎன்பார். ‘மேடம் கிட்ட போய் சொல்லு. படம் பார்க்கிற ஆடியன்ஸ் என்னை உதைப்பார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கறாங்க. நடிக்கச் சொல்லுஎன்று சொல்வேன். எப்படியும் நான் அவர்களை வேலை வாங்கிவிடுவேன்’” என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.

tamanna-response-26-12-2016தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்?. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா? ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா?. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?. ‘தங்கல், பிங்க்போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. அவற்றில் பெண்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியும், பெண்களுக்கான மரியாதை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. பெண்களை உயர்வாக  மதித்து படங்கள் வெளியாகும் இந்த காலக்கட்டத்தில், பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை[9]. நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை[10].

 

© வேதபிரகாஷ்

27-12-2016

bollyhood-dance-culture

[1] gulte.com, We are not strippers – Nayanatara, December 26th, 2016, 07:00 PM IST

[2] http://www.gulte.com/movienews/54623/We-are-not-strippers-Nayanatara

[3] Indian today, Nayanthara on director Suraaj’s anti-women remarks: Heroines are not strippers, IndiaToday.in | Written by Srivatsan, New Delhi, December 26, 2016 | UPDATED 19:01 IST

[4] http://indiatoday.intoday.in/story/nayanthara-tamannaah-slam-director-suraaj-for-misogynist-remarks/1/843211.html

[5] thequint.com, Tamil Actresses Slam Director For Asking Them to Dress ‘Skimpily’, December 26, 2016.

[6] https://www.thequint.com/women/2016/12/26/tamanaah-nayanthara-suraj-cinema-tamil-actresses-slam-director-for-asking-them-to-dress-skimpily

[7] தினத்தந்தி, நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா? டைரக்டர் சுராஜ் மீது நயன்தாரா, தமன்னா பாய்ச்சல், பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 1:05 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 4:30 AM IST.

[8] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/27010541/Nayan-Tamanna-Flow.vpf

[9] தினகரன், நடிகைகள் வெறும் கவர்ச்சிப் பொம்மைகளா?: இயக்குநர் சுராஜ் மீது நயன்தாரா கடும்தாக்கு, Date: 2016-12-27@ 01:13:02

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=268368

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: