50 ஆண்டுகள் இசைப்பயணத்தின் நிறைவாக ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்!

50 ஆண்டுகள் இசைப்பயணத்தின் நிறைவாக ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்!

spb-paid-emotional-tribute-to-guru

ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்: தமிழகத்தில் “டி.எம்.எஸ்”ல்லு அடுத்தப்படி, பிரபலமான பாடகர் என்றால் எஸ்.பி.பி அல்லது பாலு எனலாம். கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் “ஹோட்டல் ரம்பா’ திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார். 1969ல் “சாந்தி நிலையம்” படத்திற்காக பாடினார். “சங்கராபரணம்” பாடல்களின் மூலம் உலகபிரசித்தி பெற்றார். 40,000ற்கும் மேலாக இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு மொழிகளில் சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றுள்ளார். பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார்[1]. அப்போது அவர் தனது குருவுக்கு காணிக்கை செலுத்துவதாக கூறினார்[2]. தன் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்[3]. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார்.

spb-conducted-padapuja-of-jesudass-dinamani50-75 வருடங்களாக பாடி வரும் பாடகர்கள்: 30-12-2016 அன்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ். பி. பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார்[4]. அப்போது அவர் கூறியதாவது: “50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம். பூர்வஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக்கிறார். நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, ‘‘நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்’’ என்று சொன்னார். எனக்கு பிடித்த பாடகர் முகமது ரபி. அவரை அடுத்து எனக்கு பிடித்தமான பாடகர் ஜேசுதாஸ் அண்ணா. நான் எதிர்பார்த்ததற்கு மேலாக கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார். கடந்த, 1966ல், தெலுங்கு படத்தில், பாடகராக அறிமுகமானேன். தொடர்ந்து கன்னடத்திலும், 1969ல், தமிழிலும் பாடகரானேன். சாந்தி நிலையம் படத்தில், எனக்கு ஸ்வர பிச்சை போட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன்[5]. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டேன். பல நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறேன்[6]. சில அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன்”.

spb-paid-emotional-tribute-to-kjj-salvaiதனது உயர்விற்காக எல்லோடுக்கும் நன்றி தெரிவித்த எஸ்.பி.பி: பாலசுபரமணியம் தொடர்ந்தார், “என் உயர்வுக்கு காரணம், படத்தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், சக பின்னணி பாடகர், பாடகிகள், நடிகர்நடிகைகள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி, எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால், அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம். என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி,இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்[7]. என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும் இருப்பதாக நினைக்கவில்லை. இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள் வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும்”, என்றார் எஸ்.பி.பி[8].

spb-paid-emotional-tribute-to-kjjபின்னணி பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது: ஜேசுதாஸ் தம்பத்தியர், பாலசுப்ரமணியம்-அபர்ணா தம்பதியருக்கு சால்வை போற்றி வாழ்த்தினர். பிறகு, ஜேசுதாஸ், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள். நான் பாரிஸ் நகரில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, ஓட்டலுக்கு திரும்பியபோது சாப்பாடு எதுவும் இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு பசியாறலாம் என்று ஆப்பிள் பழத்தை கையில் எடுத்தேன். அப்போது ‘‘ரூம் சர்வீஸ்’’ என்று ஒரு குரல் கேட்டது. கதவை திறந்துபார்த்தால், கையில் சாப்பாடு பிளேட்டுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நின்றுகொண்டிருந்தார். அன்று நான் சாப்பிட்டது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சாப்பாடு”, மேற்கண்டவாறு ஜேசுதாஸ் கூறினார். இருவரும் நெகிழ்ச்சியாக பேசியது அவர்களது முதிர்ச்சியையும், தன்னடக்கத்தையும், பாரத பண்பு, கலாச்சாரம், இசைப் பாரம்பரியம் முதலியவற்றைப் மதிப்பது தெரிந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், அவருடைய மனைவி அபர்ணா ஆகிய இருவரும் செய்து இருந்தார்கள். அவர்களது பேச்சை இங்கே கேட்கலாம்[9] மற்றும் பார்க்கலாம்[10].

spb-conducted-padapuja-of-jesudass

சினிமா உலகத்தில் பண்பாளர்களாக இருக்கு நிலை: பொதுவாக, சினிமா உலகம் என்றாலே, கேவலமாக, தரக்குறைவாக, ஏளனத் தனமாக மதிக்கும் போக்கு இருக்கிறது. “கூத்தாடிகள்” என்ரும் பேசும் வழக்கமும் இருந்தது. 1940-60 மதிப்பு, மரியாதை, கொள்கைகள் முதலியவை பிறகு கெட்டுப்போனதால், அத்தகைய எண்ணம் மக்களிடம் உருவாகியது. இப்பொழுதோ, முழுக்க-முழுக்க “பொழுதுபோக்கு” என்ற குறுகிய வட்டத்தில் தான் சினிமா மதிக்கப்படுகிறது. நடிகர்-நடிகைகளின் சொந்த வாழ்க்கை, அவர்களின் நடத்தைகள் முதலியவற்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அந்நிலயில், எஸ்.பி.பி, ஜேசுதாஸை, குரு ஸ்தானத்தில் வைத்து பாதபூஜை செய்தது, சிறந்த உதாரணமாகக் கொள்ள வேண்டும். மேலும், இருவரது பணிவு, அடக்கம், முதிர்ச்சி முதலிய குணங்கள் அவர்களது பேச்சுகளில் வெளிப்பட்டது. இதெல்லாம், இப்பொழுதுள்ளவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

27-12-2016

spb-kjj-govinda-saranagati

[1]தினத்தந்தி, பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார் குரு காணிக்கை செலுத்துவதாக பேட்டி, பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 31,2016, 1:22 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 31,2016, 4:30 AM IST

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/31012256/Balasubramaniam-Foot-performed-puja.vpf

[3] தினமலர், சினிமாவில் 50: ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி, பதிவு செய்த நாள் டிசம்பர்.30 2016. 17.20.

[4] http://cinema.dinamalar.com/tamil-news/54584/cinema/Kollywood/SPB-did-Guru-Paatha-Pooja-to-Legendary-singer-Yesudas-.htm

[5] தினமலர், ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி., நெகிழ்ச்சி, பதிவு செய்த நாள் டிசம்பர்.30 2016. 23.10.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1680441&

[7] தினமணி, இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை, By DIN  |   Published on : 31st December 2016 02:00 AM.

[8] http://www.dinamani.com/cinema/cinema-news/2016/dec/31/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2624725.html

[9] http://www.tvtamilshows.net/2016/12/sp-balasubramaniam-gives-emotional.html

[10] https://www.youtube.com/watch?v=T90hNi6eg8s

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: