என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா?

என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காதுஇப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா?

kavya-madhavan-dilip-marriage

நடிகைநடிகர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது: இன்றைக்கு, இணைதள சமூக ஊடகங்களில் உலா வரும் கருத்துக்களை வைத்துக் கொண்டு, செய்திகளை தயாரிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது[1]. மலையாள பட உலகில் ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன்[2]. இவர் 2009–ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே, அதாவது 2010ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்[3]. அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் 2016ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்[4]. திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார். அவர்கள் மூலம் பிறந்த மீனாக்ஷி என்ற மகள் உள்ளாள் என்பது குறிப்பிடத் தக்கது.

dileep-and-kavya-madhavan-wedding-dileep-kavya-madhavan-meenakshiகாவ்யா நடித்தால் என்ன, நடிக்க விட்டால் என்ன?: காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது என்றெல்லாம் கயிறு திரிக்கின்றன. எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள். ஆக, இவர்கள் எல்லொருமே, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு, கவனித்து, செய்திகளை கொடுக்கிறார்கள் போலும்!

kavya-nishal-chandra-marriageமஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவையும் நடிக்க விடமட்டார்[5]: மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார். அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது. மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் நடிக்க மாட்டார் என்றார்[6]. திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை. மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள். காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது. நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. திலீப் தனது மகள் மீனாக்ஷியை, காவ்யா கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார்[7]. பொதுவாக, கேரள நடிகர்கள் கூட இவ்வாறு தங்களது ஆணதிகாரத்தைக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், கேரளாவில், பெண்ணதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டுள்ளது[8].

kavya-madhavanஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது[9]: நடிகன் மட்டுமல்ல, எவனும் அப்படித்தான் சொல்வான். “என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது” என்றதில் என்ன புதியதாக உள்ளது என்று தெரியவில்லை. எந்த ஆணுமே அப்படித்தான் நினைப்பான் என்பதில், எந்தவித விசித்திரமும் இல்லை. இது ஒரு ஆணின் மற்றும் பெண்ணின் விருப்பம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், இதை தேவையில்லாமல் செய்தியாக்கியுள்ளன[10]. அத்தகைய போக்கை மலையாள மனோரமா எடுத்துக் காட்டியுள்ளது[11]. அதாவது, அதுவும் இதில் சேர்ந்து அதையை வளர்க்க முயல்கின்றது. இணைதளத்தில், இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனது மனைவியைப் பற்றி அடுத்தவர்கள், இப்படி செய்ய வேண்டும் – கூடாது என்று தீர்மானிப்பது வியப்பாக இருக்கிறது[12]. ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தீர்மானிப்பதும் வினோதமே. இந்த பேச்சை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. ஒரு நடிகன், பல நடிகைகளைத் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, நெருக்கமாகத் தான் நடித்து வருகிறான். இப்பொழுதோ, மிகக் கேவலமான முறையில், முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகளில் கூட நடித்து வருகிறார்கள். அதேபோல, நடிகைகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். திருமணமான நடிகன் / நடிகை இன்னொரு திருமணம் ஆன / ஆகாத நடிகை / நடிகனைக் கட்டிப் பிடித்து நடிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இருப்பினும், நடிகனான கணவன் அவ்வாறு நிர்பந்தித்தால், நடிகை ஒப்புக் கொண்டு வாழலாம். அந்நிலையில், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு மறைந்து விடுவது தெரிந்த விசயம் தான். பத்மினி முதல் ராதா வரை அவ்வாறு நடந்துள்ளது.

© வேதபிரகாஷ்

12-01-2017

dilip-manju-warrior-meenakshi-child

[1] தினத்தந்தி, திலீப்பை திருமணம் செய்து கொண்ட காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்? , பதிவு செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST.

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/01/07040707/Kavya-MadhavanCinemaTo-leaveStepped.vpf

[3] குமரி எக்ஸ்பிரஸ், காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்?, 4 ஜன., 2017.

[4]http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5/

[5] பிலிமி.பீட்.தமிழ், என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!, Posted by: Siva, Published: Tuesday, January 10, 2017, 15:53 [IST]

[6] http://tamil.filmibeat.com/news/has-kavya-madhavan-quit-acting-044204.html

[7] Indian Express, Dileep’s remark after his wedding reflects a misplaced sense of superiority — but not just his own, Written by Soumya Mathew | New Delhi | Updated: November 26, 2016 3:31 pm.

[8] The misplaced sense of patriarchy in his words directed towards ‘protecting the honour’ of a woman who has been affected by rumours that surrounded them, was too obvious to go unnoticed.

http://indianexpress.com/article/blogs/dileep-kavya-madhavan-wedding-manju-warrier-patriarchy-4396137/

[9] சினிமா.உலகம், என் மனைவி வேறொரு ஆணுடன் கட்டி பிடித்து நடிப்பது பிடிக்காதுபிரபல நடிகர், ஜனவரி.10, 2017, by Mahalakshmi.

[10] http://www.cineulagam.com/celebs/06/135192

[11] manoramaonline.com, Dileep-Kavya Madhavan wedding divides the Internet, Saturday 26 November 2016 12:52 PM IST, byOnmanorama Staff

[12] http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/dileep-kavya-madhavan-wedding-divides-the-internet.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: