ராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்!

 

ராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்!

ranveer-ready-to-play-alavuddheen-khiji-distorting-history-bollywood-style-song-dance

ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்ப்புத் தெரிவித்தது: இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்[1]. இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள்[2]. சரித்திரத்தைத் திரித்து படம் எடுப்பதை எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா கண்டனம் தெரிவித்தனர். பன்சாலி இப்படத்தின் கதை கற்பனை என்று சொல்லிக்கொண்டு, சரித்திர ஆதாரமில்லாமல், காட்சிகளை எடுப்பதாக அறிந்ததால், இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் சித்தூர்கர் கோட்டையில் நடந்ததபோது ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டது[3]. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4]. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார். போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.

bhansal-concocted-movie-padmavathi

நடிகநடிகையர்களுள் கருத்து வேறுபாடு: ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது எனும் தினத்தந்திக்கு[5]சரித்திரம் என்னவென்பது தெரியாதா என்ன?. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, யாதாவது ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு, முற்போக்கு முகமூடியுடன் கலாட்டா செய்ய வேண்டும் என்று பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டு வேலைசெய்வது தெரிகிறது. சகிப்புத் தன்மை என்ற போர்வையில், 2015ம் வருடம் கலாட்டா செய்தனர். ஆனால், அவர்களே இப்பொழுது, இத்தகைய திரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.

ranveer-to-play-alavuddheen-khiji-distorting-history-bollywood-style-song-danceபத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை: பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்[7]. இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்[8]. இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கெனவே, டிரைலர் போன்ற காட்சிகளில் அத்தகைய காட்சிகள் இருப்பது, ஊடகங்களில் அந்து விட்டன. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களின் கற்பும் காக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஜௌஹர் என்ற முறையில் தீக்குளித்தனர் ராஜபுதன பெண்கள். ஆகவே, அவர்களது தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை, எந்த இந்தியனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எனவே, பொய் சொல்லி இப்படக்காட்சிகளை உண்மையான சரித்திர இடங்களில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலுக்கு மற்ற நடிகை-நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[9]. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்[10].

ranveer-ready-to-play-alavuddheen-khiji-distorting-history-bollywood-styleஅலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர்.  மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள்.  இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின.  ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வாறு முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.

ranveer-ready-to-play-alavuddheen-khiji-distorting-history-bollywood-styleஇந்திய சரித்திரமும், திரிபுவாதமும், பொய்மாலங்களும்: ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலேயர், இந்திய சரித்திரத்தை திரித்து எழுதினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இடதுசாரி-மார்க்சீய சரித்திர வரைவியல் போர்வையில், ஜே.என்.யூ, தில்லி, அலிகர் போன்ற பல்கலைக்கழக சரித்திராசிரியர்கள் அதே போக்கைக் கடைப்பிடித்து, சரித்திர புத்தகங்களை எழுதினர், இன்றும் எழுதி வருகின்றனர். ஆனால், இணைதளம் போன்ற வசதிகளினால், சரித்திர ஆவணங்கள், மூல நூல்கள் முதலியன இன்று பலரும் பார்க்க, படிக்க, சரிபார்க்க ஏதுவாகி விட்டது. இதனால், உண்மை எது பொய் எது என்பது, இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏனெனில், அவர்கள் சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கெல்லாம் சிதைக்கப் பட்ட சிற்பங்கள், இடிபாடுகளுடன் கிடக்கும் கோவில்கள், மசூதி எனப்படும் கட்டிடங்கள் கோவில் தூண்கள், சிற்பங்கள் முதலியவற்றுடன் இருப்பது, அவர்களது, அறிவைத் தூண்டுவதால், படித்து உண்மையினை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாம் படித்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களும் தெரிய ஆரம்பித்தன. இதனால், இத்தனை ஆண்டுகளாக பொய்யான சரித்திரம் தம் மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு விட்டனர். அதனால் தான், அவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான், இந்த பத்மாவதி திரைப்படம், ராஜஸ்தான் மக்களை பாதித்துள்ளது. அதனால் தான், எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்த்துள்ளது. பிடிவாதமாக அந்த இயக்குனர், தொடர்ந்து தனது வேலையைத் தொடர்ந்ததால், தாக்கியுள்ளதும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

30-01-2017

ranveer-ready-to-play-alavuddheen-khiji-rajput-karni-sena

[1] தினமலர், பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம், பதிவு செய்த நாள். ஜனவரி.29, 2017. 06.09.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1699753

[3] தினகரன், பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு, 2017-01-28@ 11:40:08

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=275617

[5] தினத்தந்தி, தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார், ஜனவரி 28, 04:31 PM.

[6] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/28163112/Padmavati-row-Bwood-slams-heinous-attack-on-Bhansali.vpf

[7] தமிழ்.இந்து, பத்மாவதிபடப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு, Published: January 28, 2017 14:23 ISTUpdated: January 28, 2017 14:49 IST.

[8]http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9507205.ece

[9] விகடன், இயக்குனர் பன்சாலிக்கு அடி: கொதித்தெழுந்த பாலிவுட், Posted Date : 18:45 (28/01/2017); Last updated : 18:49 (28/01/2017

http://www.vikatan.com/news/india/79035-bollywood-stars-condemn-the-attack-on-sanjay-leela-bansali.art

[10] http://www.vikatan.com/news/india/79035-bollywood-stars-condemn-the-attack-on-sanjay-leela-bansali.art

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: