இத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா?

இத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா?

suchis-twitter-hansika-sanjita-etc

நடிகைநடிகர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏன்?: திரைப்படத் துறை எப்படி போனால் நமக்கென்ன, நடிகை-நடிகர்கள் ஒழுக்கங்கெட்டால் நமக்கென்ன என்று இருக்கலாமா என்றால், அவர்கள் தான் சாதாரண மக்களின் வாழ்க்கைக்களை பலவிதத்தில் பாதிக்கிறார்கள். தினக்கூலி வேலையாள், வேலையில்லாத பட்டதாரி, நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்கள், ஓய்வூதியக் காரர்கள், வெட்டிப் பேச்சு வீரர்கள், சோம்பேறிகள் என்று எல்லோருமே ரூ.50. 100, 200/- என்று காசு கொடுத்து படம் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, நடிகை-நடிகர்களை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அழைத்து, பேச வைக்கின்றனர். கற்பு முதல் விபச்சாரம் வரை, தொலைக்காட்சி விவாதங்களில் கூப்பிட்டு கருத்து கேட்டு, பார்வையாளர்களின் மீது திணிக்கின்றனர். இவ்வாறு சமூகத்தில் பலவழிகளில், அத்துமீறியோ அல்லது வேறுவகையிலோ நுழைவதால், அவர்களின் நடவடிக்கைகளை, ஒழுக்கம் அல்லது ஒழுக்கமில்லாத செயல்களை கண்காணித்து, விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது.

suchis-twitter-anirudh-and-dd

நள்ளிரவு பார்ட்டிகளில் திருமணம் ஆன நடிகைநடிகர்கள் கலந்து கொள்வது ஏன்?: எங்கேயோ நள்ளிரவில் நடந்த பார்ட்டியில், தனுஷ் அல்லது தனுஷின் “பாடிகார்ட்”, பாடகி சுசித்ராவின் கையை வலுக்கட்டாயமாக, பிடித்து இழுத்ததால், காயம் ஏற்பட்டதாக, சுசித்ரா டுவிட்டரில் போட்டோவை வெளியிட்டார். நடிகை-நடிகர்கள் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஏன் இப்படி நள்ளிரவில், வீட்டின் படி தாண்டி சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும், குடித்து கும்மாளம் போட்டு, ஆடி அலைய வேண்டும். நடிகையுடன், நடிகன் கட்டிப் பிடித்து ஆடவேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும்………இவற்றை ஓட்டலில், ரிசார்ட்டில்,…….பலபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், போட்டோ-வீடியோக்களும் எடுக்கிறார்கள், ……என்றெல்லாம் தெரியாமலா அவ்வாறு ஈடுபடுகிறார்கள். பிறகு, அவரை பொது மக்களின் பார்வைக்கு வரும் போது, ஏன் வெட்கப்பட வேண்டும், ஏன் தவிர்க்க முயல வேண்டும், நான் அது இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை….என்றெல்லாம் சொல்ல வேண்டும்? ஒன்று அவ்வாறே, அவர்களின் உலகத்தில் இருந்து விட வேண்டும், பொதுமக்களின் பிரச்சினகளில் மூக்கி நுழைக்கக் கூடாது. இல்லை, பொதுமக்களுக்கு அறிவுரை கூற வருவதாக இருந்தால், ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

suchitra-news-cutting

சுசித்ராவின் டுவிட்டர் ஆபாசப் படங்கள்: 03-03-2017 அன்று முழுவதும் முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய சுசித்ரா, அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார். அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் போக, செல்வராகவன் – ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து சுசித்ரா, “முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்[1]. இந்நிலையில், தற்போது சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார்[2]. இதனால் ஏற்பட்டு வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

dhanush-responsible-for-suchitra-karthik-divorce-condition

சுசித்ரா மறுத்தது, தனது டுவிட்டர் ஹாக் செய்யப்பட்டது என்று அறிவித்தது: சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா. உச்சகட்டமாக 03-03-2017 அன்று தனுஷ் – த்ரிஷா அந்தரங்கமாக உள்ள படங்களை வெளியிட்டார். தனுஷுடன் டிடி எனும் திவ்யதர்ஷினி கும்மாளமடிக்கும் படங்களையும் வெளியிட்டார். அடுத்து ஆன்ட்ரியா – அனிருத் படங்களும் வெளியாகின. இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்[3]. ஆனால், சஞ்சிதா செட்டி அது நான் இல்லை என்று மறுத்துள்ளார்[4]. இந்தப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகு, அவரது ட்விட்டர் பக்கத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்காமல், அவரைப் பின் தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி செட்டிங்ஸை மாற்றியுள்ளார். அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை திங்கள் கிழமை 06-03-2017 அன்று வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார் சுசித்ரா[5]. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அனுமதித்தால் மட்டுமே அந்தப் பக்கத்தில் இணையும் வகையில் செட்டிங்ஸை மாற்றி வைத்துள்ளார் சுசித்ரா[6]. சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது சுசித்ராவின் டிவிட்டர் தளம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார்[7]. அதேநேரம், இன்று காலைவரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின. இப்பொழுது, அந்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது[8].

suchis-twitter-next-release-dhanush-amla-paul-leelai

சுசித்ரா கார்த்திக் என்று இன்னொரு டுவிட்டர் முளைத்தது: பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானதில் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்ட திரையுலகினர், இப்போது பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். சுசித்ரா கார்த்திக் (Suchitra_Karthi) என்ற புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அமலா பால், பாபி சிம்ஹா, டிடி ஆகியோரின் அந்தரங்கப் படங்களை பதிவேற்றியுள்ளனர்[9]. இந்த நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு முன் புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில், சுசித்ரா புகைப்படத்துடன் உள்ள அந்தப் பக்கத்தில் ஏகப்பட்ட ஏ சமாச்சாரங்கள். ஞாயிற்றுக்கிழமை சின்மயி – அனிருத், திங்கள் கிழமை தனுஷ் – அமலா பால், செவ்வாய்க்கிழமை தனுஷ் – பார்வதி நாயரின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன் என்ற ட்விட்டும் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. சினிமா உலகின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று இன்னொரு பதிவு கூறுகிறது[10]. ஒரு ஆபாச வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இன்னொரு ட்வீட்டில் நடிகர் பாபி சிம்ஹா போல ஒருவர் இளம் நடிகையுடன் (மான் கராத்தேயில் நடித்த ஒரு நடிகை) படுக்கையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு பதிவில் டிடியும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடித்தபடி இருக்க, அதற்கு பவர் பாண்டி என தலைப்பிட்டு, பதிவேற்றியுள்ளனர். பவர் பாண்டி என்பது தனுஷ் இயக்கும் புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டிடியும் நடிக்கிறார். இன்னும் என்னென்ன படங்கள், வீடியோக்கள் அரங்கேறப் போகின்றனவோ என அச்சத்தில் உள்ளனர் சினிமா பிரபலங்கள்.

suchitra-twitter-revealing-or-faked

ஆங்கில ஊடகங்களின் உசுப்பிவிடும் போக்கு: ஆங்கில ஊடகங்களும் இவ்விவரங்களை அள்ளிவீசி அலசியுள்ளன[11]. ஏதோ “விக்கி லீக்” போன்று “சுசித்ரா லீக்” என்று பெயரிட்டு, புகைப்படங்களோடு செய்திகளை வெளியிட்டுள்ளன[12]. அவ்வாறு கசிந்ததால், அவர்களுக்கு ஏதாவது வெட்கம், மானம், சூடு, சொரணை வந்து வருத்தப் பட்டார்களா என்று தெர்விக்கவில்லை. ஆனால், எல்லாமே பொதுமக்களை உசுப்பிவிடும் போக்கில் தான் உள்ளனவேயன்றி, அந்த ஒழுக்கம் கெட்ட நடிகை-நடிகர்களின் போக்கைக் கண்டித்தல், அறிவுரை கூறுதல் என்றில்லாமல் பொழுது போக்கு ரீதியில் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்[13]. எதனையும் வியாபாரமாக்கும் போக்குதான் புலப்படுகிறது[14]. தமிழக ஊடகத்தினர் சிலரும் அவற்றை காப்பியடித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். காசு கொடுத்து, சினிமா பார்ப்பது போல, காசு செலவழித்து, இவை போடும் செய்திகளைப் படிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

05-03-2017

suchitra-complaints-about-midnight-brawl

[1] தி.இந்து, ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் சுசித்ரா, Published: March 4, 2017 13:13 IST; Updated: March 4, 2017 13:13 IST

[2] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/article9570858.ece

[3] தினமலர், அது நான் இல்லைசஞ்சிதா செட்டி, 04 மார்ச், 2017: 17.54 IST.

[4] http://cinema.dinamalar.com/tamil-news/56897/cinema/Kollywood/Sanchita-shetty-clarify-about-controversy-photo.htm

[5] தமிழ்.பிளிமி.பீட், அடுத்து தனுஷ்அமலா பால் லீலையை வெளியிடுவேன்! – சுசித்ராவின் அடுத்த குண்டு, Posted by: Shankar, Published: Saturday, March 4, 2017, 11:59 [IST].

[6] http://tamil.filmibeat.com/news/suchithra-s-next-release-is-dhanush-amala-paul-private-pic-045053.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகர், நடிகைகள் அந்தரங்க போட்டோக்கள் வெளியிட்ட பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கு திடீர் நீக்கம், By: Veera Kumar, Published: Saturday, March 4, 2017, 13:35 [IST].

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-suchitra-karthik-twitter-account-has-been-removed-275808.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அடங்காத சுசிலீக்ஸ்புதிய ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் ஆபாசப் படங்கள் பதிவு! #SuchiLeaks, By: Shankar, Published: Saturday, March 4, 2017, 16:17 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/another-page-created-the-name-suchithra-karthik-twitter-suchileaks-275824.html

[11] Hindustan Times, Singer Suchitra reveals private party pics of Dhanush and other Tamil celebs, Updated: Mar 03, 2017 16:44 IST.

[12] http://www.hindustantimes.com/regional-movies/shocking-singer-suchitra-reveals-private-party-pics-of-tamil-celebs/story-ibKsjO3sWD7HqWD0RqW3HM.html

[13] Firtpost, RJ Suchitra tweets Dhanush, Anirudh Ravichander’s private photos: What’s the story behind #SuchiLealks?, Hemanth Kumar, Mar, 04 2017 15:40:30 IST, Published Date: Mar 04, 2017 03:40 pm | Updated Date: Mar 04, 2017 03:40 pm

[14] http://www.firstpost.com/entertainment/rj-suchitra-tweets-dhanush-anirudh-ravichanders-private-photos-whats-the-story-behind-suchileaks-3314940.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: