பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்! (1)

பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்! (1)

gautami-says-goodbye

கமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை?: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 Kamal Hasan -on- Bahubali

அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்?: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்!? சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக?! முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும்! இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே? காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி![2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான!?

 Kamal Hasan - caricatured as - Bahubali

பாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,

பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம்பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].

“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி! போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன?

 

 Sangamitra - sruti Hassan

இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும்ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.

பாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.

பணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள்? அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின?

 Kamal Hasan silence on Bahubali

அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், பாகுபலிபடம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.

ஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].

கமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா? இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.

© வேதபிரகாஷ்

14-05-2017

492080-shruti-gautami

[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு?, வீ.கே. சுந்தர், Posted by: Shankar

Updated: Wednesday, May 10, 2017, 19:09 [IST].

[2] http://tamil.filmibeat.com/news/why-no-film-personalities-talk-about-baahubali/gallery-cl4-046231.html

[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai

[4]https://chennaionline.com/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.

[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்ஆனால்?, மகாலட்சுமி, 12-05-2017.

[7] http://www.cineulagam.com/films/06/140092

[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லைகமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)

[9] http://www.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamalhaasan-talks-about-two-parts-of-his-movie-117051300030_1.html

[10] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article9695056.ece

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: