சங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை!
சென்னையில் இன்னொரு நடிகை கைது: மறுபடியும் இன்னொரு நடிகை விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் படுவது, ஆச்சரியமாக இல்லை. பலமுறை எடுத்துக் காட்டிய படி, நடிகைகள் எப்பொழுது கற்பு பற்றி அலட்சியமான கருத்துகளை வெளியிட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் பரத்தைத் தனத்தை ஒப்புக் கொண்டது போலாகி விட்டது. தொலைக் காட்சி வந்து, “டிவி சீரியல்” என்பது வந்தவுடன், அதனையே தொழிலை வைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரக் கணக்கில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சிகளில் [பட்டி மன்றம், சினிமா, பாட்டு…..] பங்கு கொள்ள வேண்டும், தங்களது முகம் டிவியில் வர வேண்டும் போன்ற அல்ப ஆசைகளைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம், துறைகளில் உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வெறியோடு அலைகிறார்கள் என்பது தெரிந்த விசயம் தான்.
அமெரிக்கமயமாகும் ஓ.எம்.ஆர்: ஓ.எம்.ஆர் பகுதிகளில் தொழிற்சாலைகள், குறிப்பாக ஐடி கம்பெனிகள் வந்த பிறகு, வெளிநாட்டவர் போக்குவரத்து அதிகமாக்கி விட்டது. தவிர தனியாக தங்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் “எஞ்சாய்” பண்ன வேண்டும் என்ற்ற குறிக்கோளுடன் அலையும் அவர்களுக்கு, ஒழுக்கம், நியாயம், தர்மம் எல்லாம் பற்றி கவல்லைப் படுவதில்லை. இதனால், இவர்களுக்கு எல்லாம் கமிழ்ச்ச்சி தர, விபச்சாரம் பெருகி விட்டது. கடந்த 15-25 வருடங்களில் மூடி கிடந்த ரிசார்ட்டுகளுக்கு “கிராக்கி” வந்து விட்டது. முன்பெல்லாம், அரசிய்யல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலியவகளை மகிழ்விக்க இந்த ரிசார்ட்டுகள் உபயோகப் பட்டன. இப்பொழுது, கவல்லையே இல்லை பலவிதமான “கஸ்டமர்கள்” பெருகி விட்டார்கள். அதனால், பார்ட்டிகள் நடத்த ஹால், பப் போன்ற வசதிகளும் சேர்க்கப் பட்டு விட்டன.
ஆடம்பர ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[1]. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. போலீஸ்காரர் ரிசார்ட் வைத்திருக்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறார் மற்றும் அது விபச்சாரத்திற்கு உபயோகப் பட்டது என்பத்உ நோக்கத் தக்கது. அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா பாலன் [42], சென்னையில், ஆழ்வாதிருநகரில் வசிப்பவர். செல்லமாய், சபீதா என்கின்ற சபாபதி, அவள், அன்னக்கொடியும், ஐந்து பெண்களும், பிள்ளை நிலா, வள்ளி முதலிய டெலிசீரியல்களில் நடித்துள்ளார்[3]. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், கருப்பு ராஜா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[4].
பாலியல் தொழில் செய்தவர் கைது ஆனால், சேவை பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை: இவர் 01-06-2018 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்[5]. இவருடன் நடன பெண், துணை நடிகை உள்ளிட்ட நான்கு பேர் கைதானார்கள்[6]. ஆனால், யார் மகிழ்விக்கப் பட்டனர், அவர்களின் விவரங்கள் வெளிடப்படவில்லை. இவர் போரூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஏஜென்டாக செயல்பட்டதும் தெரிகிறது[7]. மேலும் சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டார்[8]. “வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை,” என்றும் “புதிய தலைமுறை” செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளது[9]. கைதான பெண்களும் இளவயதில் உள்ளது திகைப்படையச் செய்கிறது. எப்படி, இவ்வாறு விபச்சாரம் செய்ய துணிகிறார்கள் என்றும் பதைக்க வைக்கிறது[10].
மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைப்பு: போலீஸார் இவர்களை 02-06-2018 அன்று முறைப்படி, மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்[11]. நீதிபதி உத்தரவை அடுத்து நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர் போலீசார்[12]. பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காக்கிகள் வட்டாரம் தெரிவிக்கிறது[13].
வெளி மாநில பெண்கள் வைத்து விபச்சாரம் –
மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று புகார் கொடுத்த தாய்: நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்[14]. அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரெனெ வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர். என் மகளோடு வந்தவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் வீட்டிற்கு ஆண்கள் பலரும் வந்து செல்கின்றனர். எனவே, என் மகளை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். கொலை மிரட்டும் விடுக்கிறார். இதுபற்றி விசாரித்ததில் அவரும், அவரின் உதவியாளரும் விபச்சாரம் செய்து வருவது எனக்கு தெரியவந்தது. மேலும், எனது மகள் மற்றும் அவருடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்” என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். அதோடு, தனது மகள் உள்ளிட்ட மாணவிகள் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி தொடர்ந்து இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அது தொடர்பான சில புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது மகள் தொடர்பான புகைப்படங்களுடன் தாயே புகார் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[15]. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சரியில்லை என்றால், சரி செய்ய வேண்டும்:
- பி.காம் படிக்கும், 19-வயது மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று தாயே, போலீஸாரிடம் புகார் கொடுத்த அவலம் – நாகர்கோவிலில்!
- கண்ணகி, கற்பு என்பவற்றைப் பற்றி பறைச்சாற்றும் தமிழகத்தின் பெண்மைநிலை இப்படியா இருக்க / மாற வேண்டும்?
- படிக்கும் பெண்ணிற்கு உடலை விற்கலாம், படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொடிய-குரூர எண்ணம் எப்படி உருவாகியது?
- மன-ஒழுக்கம், உடல்-ஒழுக்கத்தின் மீது ஆதிக்கம் செல்லுத்துகிறது. மனவொழுக்கம், நற்சிந்தனைகள், சமுதாய சிறப்புகளினால் மேம்படுவது.
- இந்திய பெண்மையினை சீரழித்தால், இந்திய சமூகம் கெட்டு விடும், இந்தியாவை அழித்து விடலாம் போன்ற திட்டம் உள்ளதா?
- சேர்ந்து வாழ்வேன், திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன், திருமணத்திற்கு முன்பாக கற்பு இருப்பது எதிர்பார்க்க முடியாது. இவற்றை சொன்னது இன்றைய தமிழக அரசியல்வாதியின் மகளும், காங்கிரஸ் கட்சி தலைவியும் தான்!
- தனிமனித ஒழுக்கம், மனத்தூய்மை, உடல் புனிதம் எல்லாம் வேண்டாம் என்ற அளவிற்கு தமிழச்சியை தூண்டி விடுவது எந்த சித்தாந்தம்?
- பெண்—குழந்தை காப்போம், பெண்மையை போற்றுவோம் என்ற நிலையில் பாடுபடும் போது, இத்தகைய பெண்-விரோதிகள் எவ்வாறு உருவாகின்றனர்?
- ஒழுக்கம் கெடுக்கும் ஜிஹாத், புனிதத்தை சீரழிக்கும் சிலுவை-போர், தார்மீகத்தை அழிக்கும் புரட்சி என்றெல்லாம் இருந்தால், அவை அழிக்கப் படவேண்டும்.
- பெண்மை நிச்சயமாக பெண்மைக்கு எதிராக செயல்படாது, பெண்மையை பழிக்காது, அத்தகைய பெண்மை தான் பாரதத்திற்கு வேண்டும்.
© வேதபிரகாஷ்
02-06-2018
[1] news18, ‘வாணி ராணி‘ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது!, Updated: June 1, 2018, 9:14 PM IST.
[2] https://tamil.news18.com/news/entertainment/famous-serial-actress-arrested-in-prostitution-24323.html
[3] News Today, Actress runs sex racket in ECR villa, arrested, NT Bureau June 2, 2018
[4] https://www.newstodaynet.com/index.php/2018/06/02/actress-runs-sex-racket-in-ecr-villa-arrested/
[5] நக்கீரன், விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா புழல் சிறையிலடைப்பு – மேலும் சில நடிகைகள் சிக்குகிறார்கள், சி.ஜீவா பாரதி, Published on 01/06/2018 (22:23) | Edited on 01/06/2018 (22:26).
[6] தமிழ்.வெப்துனியா, விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது – வாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி, ஜூன்.2, 20018.
[7] On investigation, police identified the accused as Sangeetha, 42, of Alwarthirunagar. She had appeared in several Tamil television serials. She was running the racket along with Satish, 30, of Porur. The police said the team received information that the duo would lure young women promising well-paid jobs in private firms and chance to be cast in movies or television serials.
[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vani-rani-actres-sangeetha-arrest-118060200009_1.html
[9] புதிய தலைமுறை, வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை கைது!, Web Team, ஜூம்.2, 2018: 12.41
[10] http://www.puthiyathalaimurai.com/news/cinema/46253-tv-serial-actress-arrested-for-prostitution.html
[11] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actress-sangeetha-pooja-imprisonment-case-adultery-and-some-actresses
[12] Times of India, Vani Rani actress arrested for prostitution, TNN | Jun 2, 2018, 15:25 IST.
[13] https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vani-rani-actress-arrested-for-prostitution/articleshow/64427426.cms
[14] தமிழ்.வெப்துனியா, கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம் – நாகர்கோவிலில் அதிர்ச்சி, Last Modified சனி, 2 ஜூன் 2018 (12:13 IST)
[15] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/college-girls-forced-to-do-prostitution-118060200019_1.html
குறிச்சொற்கள்: ஆடம்பர ரிசார்ட், ஓ.எம்.ஆர், சங்கீதா, செக்ஸ், டிவி சீரியல், பாலியல், பாலியல் ரீதியான குற்றங்கள், மகாபலிபுரம், ரிசார்ட், ரிஸார்ட், வாணி ராணி, விபச்சாரம்
மறுமொழியொன்றை இடுங்கள்