நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (1)!
சினிமா உலகத்தில் கணவன் – மனைவி உறவுகள்: ஆரம்ப காலத்திலிருந்தே (1930களிலிருந்தே) நடிகையாக நடிக்க வந்து விட்டால், எப்படி பல ஆண்களுடன் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது, “நடிப்பு” என்ற முறையிலும், “ஷூட்டிங்”, “டேக்கிங்” போன்ற திரும்ப-திரும்ப செய்யும் சேட்டைகளிலும், சகநடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், மேக்கப்-மேன் என்று எல்லோரும் தொடுவது, தொட்டுப் பேசுவது, கட்டிக் கொள்வது என்பதெல்லாம் காமிராவுக்கு முன்பு-பின்பு என்ற விவகாரங்கள் இருந்து வருகின்றன. அப்பொழுது மிகக்குறைவு எனும்போது, இப்பொழுது ஒழுங்காக இருப்பவர்கள் “மிகக்குறைவு” என்றாகி விட்டது. நடிகையைத் திருமணம் செய்து கொண்ட ஆணும், நடிகனைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணும் தனது மனைவி-கணவன் ஒழுக்கமாக இருந்திருக்கிறாளா-இருந்திருக்கிறானா என்று சொல்ல முடியாது. பெண்ணிற்கு “கற்பு” என்று தராதரம் பார்க்கும் போது, ஆணுக்கு அது பார்ப்பதில்லை. பொதுவாக, நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு போன்ற விவகாரங்களில் இதுவரை நடிகைகள் தாம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஒருவேளை முதன்முதலாக, ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டது இதுவே போலும்!
திருமணம் ஆகி ஒரே வருடத்திற்குள் கருத்து வேறுபாடு தோன்றியது: தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த தொடரில் இவர் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் ‘மைனா’ நந்தினி என்று அழைக்கப்பட்டார்[1]. தற்போது மற்றொரு தொலைக் காட்சியில் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ‘வம்சம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட தமிழ் திரைப் படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம்.5, 2016 மதுரையில் கார்த்திக் என்ற கார்த்திகேயனை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்[2]. விருகம்பாக்கம் விஎஸ்எஸ் நகரை சேர்ந்த கார்த்திகேயன், தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். கார்த்திகேயன், நந்தினி இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், என்கிறது தினத்தந்தி[3]. தற்போது, உடற்பயிற்சிக் கூடத்தை வேறு ஒருவரிடம் அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கணவன்: வடபழனி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கார்த்திகேயன் அடிக்கடி தங்குவது வழக்கம். 03-04-2017 அன்று இரவும் அவர் அங்கு தங்கியுள்ளார். 04-03-2017 அன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து, தங்கும் விடுதி நிர்வாகிகள் விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை திறக்க முயன்றபோது, அது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கார்த்திகேயன் சடலமாக கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளது பிரச்சினையாகியுள்ளது: இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் போலீஸார் கூறும்போது, “நந்தினிக்கும் அவரது கணவருக்கும் திருமணமான 2-வது மாதத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். இதை கார்த்திகேயன் விரும்பாததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மூன்று பக்க கடிதத்தை கார்த்திகேயன் எழுதி வைத்துள்ளார். அதை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்றனர். ஆக, புதியதாக எந்த காரணமும் இல்லை. கணவன், நடிகை-மனைவியை நடிக்க ஒப்புக் கொள்கிறான், ஆனால், இரவு மட்டும் நேரத்தோடு வர விரும்புகிறான். தொழில் நிமித்தம் அவளால் முடியவில்லை. இரண்டு மனைவிகளிடமும் தோல்வியுற்ற ஆண், தற்கொலைக்கு சென்று விடுகிறான்.
கார்த்திகேயனின் இறுதி விருப்பம்[4]: இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்[6]. இதிலிருந்து, கார்த்திகேயனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இதனை “கள்ளத் தொடர்பு”, என்று சென்னை.ஆன்.லைன் வர்ணிக்கிறது[7]. ஆனால், அவள் தற்கொலை செய்து கொண்டாள், கைது செய்யப்பட்டார் என்றெல்லாம் குறிப்பிட்டாலும், எப்படி வெளியே வந்தார், மறுபடியும் நதினியைத் திருமணம் செய்து கொண்டார் என்ற விவரங்கள் குறிப்பிடப் படவில்லை[8].
திருமணம் ஆகி, ஒரே வருடத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டால், மனைவி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?: திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது. மனைவி தரப்பில் புகார் கொடுத்தாலே, கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினரை கைது செய்யும் அளவுக்கு சட்டநிலை உள்ளது. இங்கு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். மனைவி, நேர்மாறாக, கணவன் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்ததாக மனைவி கூறுகிறாள்! இதை எப்படி சட்டவல்லுனர்கள் அணுகுவார்கள் அல்லது பெண்ணியப் போராளிகளபேடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஆண் சித்தாந்த போராளிகள் சட்டம் என்றால், எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று வாதிப்பார்களா? ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டமா என்ற பல்லவியைப் பாடுவார்களா? இதையும் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்ற முறையில் வாதிப்பார்களா என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
06-04-2017
[1] தி.இந்து, நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை: திருமணமான ஒரு ஆண்டுக்குள் சோகம், Published: April 5, 2017 08:26 ISTUpdated: April 5, 2017 08:34 IST
[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9616365.ece
[3] தினத்தந்தி, டி.வி.நடிகை நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள், ஏப்ரல் 05, 11:05 AM
[4] வெப்துனியா, நடிகை நந்தினி கணவர் கார்த்திக்கின் கடைசி விருப்பம்!, புதன், 5 ஏப்ரல் 2017 (17:31 IST).
[5] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/04/05110525/Nandinis-husband-tivinatikai-What-is-the-reason-for.vpf
[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-nandini-s-husband-karthik-s-last-option-117040500042_1.html
[7] சென்னை.ஆன்.லைன், நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை : காரணம் கள்ளத்தொடர்பாம்!, April 05, 2017, Chennai
[8] http://chennaionline.com/article/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D