தேசத்துரோகக் குற்றம் செய்துள்ள சினிமாக்காரர்களுக்காக பரிந்து பேசுவது ஏன்?
உச்சநீதி மன்றம் பாகிஸ்தானின் பங்கை உறுதி செய்துள்ளது.
சஞ்சய்தத்தின்வீடில்இருந்தஆயுதங்களும், தாவுத்தின்தொடர்பும்: சர்ச்சைக்குரிய கட்டிடம் அயோத்தியாவில் இடிக்கப்பட்டப் பிறகு டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை ஏற்பட்ட மத கலவரங்களில் சுமார் 275 இந்துக்கள் மற்றும் 575 முஸ்லீம்கள் இறந்துள்ளனர். மார்ச் 1993ல் தாவூத் இப்ராஹிம் மும்பையில் தொடர்குண்டுவெடிப்புகளுக்கு ஏற்பாடு செய்தான். அந்த குண்டு வெடிப்பு தீவிரவாதத்தில் 250 பேர் குரூரமாகக் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்பொழுது தாவூத் இப்ராஹிமின் டி-குழு அதிநவீன துப்பாக்கிகளை தீவிரவாதிகளுக்காக விநியோகம் செய்ய மும்பைக்கு அனுப்பி வைத்தது. அதில் ஒரு பார்சல் தான் சஞ்சய் தத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இருந்தவை[1]:
காயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்படும் விதம்.
- 3 AK-56 rifles,
- 9 magazines,
- 450 cartridges,
- a 9mm pistol and
- over 20 hand grenades.
பிளாட்பாரத்தில் ரத்தம் சொட்ட-சொட்ட கிடக்கும் ஒரு பிணம்.
இவையெல்லாம் ஏதோ தற்காப்பிற்காக வைத்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்கள் அல்ல. அபு சலீம், பாபா மூஸா சௌஹான் மற்றும் சமீர் ஹிங்கோரா முதலியோர் அவற்றைக் கொண்டுவந்து, சஞ்சய் இல்லத்தில் ஜனவரி 16, 1993 அன்று சேர்த்தனர். அப்பொழுது சஞ்சய் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இதனால் பிரச்சினை வரும் என்றபோது, AK-56 துப்பாக்கியைத் தவிர மற்றவற்றை டி-குழுவைச் சேர்ந்த யூசுப் நல்வாலா என்பவன் மூலம் திரும்ப அனுப்பபட்டன மற்றும் சில அழிக்கப்பட்டன. துபாயில் உள்ள தாவூத் இப்ராமின் சகோதரன் அனீஸ் இப்ராஹிமுடன் சஞ்சய் பலமுறை தொலைபேசி மூலம் பேசியுள்ள அத்தாட்சிகள் தொடர்பைக் காட்டுகின்றன.
மும்பையில் நடந்துள்ள வெடிகுண்டு சாவுகளின் விவரங்கள்.
மார்க்கண்டேயகட்ஜுவக்காலத்து வாங்குதல்: 1993 ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் “1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை மன்னிக்க கோரியிருந்தார். 1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்”, என்று கூறியிருந்தார்.
பிணங்கள் – பாகங்கள் கிடப்பது.
நடிகர் கஷ்டப்படுகிறார் என்று இவர் ஏன் கவலைப்படுகிறார்?: இது குறித்து அவர் கூறுகையில், “இது கொலை போன்ற பெரிய குற்றம் அல்ல. குண்டு வெடிப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் அவர் தீவிரவாதி என கைது செய்யப்பட்டார். கடந்த 20 வருட காலத்தில் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போதும் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இது போன்ற பல அலைக்கழிப்புகளை சந்தித்து விட்டார். இவரின் பெற்றோர் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். இதனால் சஞ்சய் தத்தை மன்னிக்கவேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக்-பி அமிதாப் அச்சனுடன் நெருக்கமான நேரங்கள்!
இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார். தனது கணவருக்கும் தாவூத் இப்ராஹிமோடு தொடர்பு இருந்ததால், இவ்வாறு பரிந்துரைக்கிறார் என்று தெரிகிறது.
சல்மான் கானுடன் நட்பு, உறவு………..
காங்கிரஸ்தொடர்பாளர்கூறிவது: மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி, ”ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து கட்ஜு கருத்து தெரிவித்தால், அதனை அரசும் மற்றவர்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆனால் இந்த விசயத்தை பொருத்தமட்டில் பலவற்றை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. இந்த விசயத்தை கையாளும் அரசின் பல்வேறு அமைப்புகள், இவருடைய கருத்தை கவனத்தில் கொள்ளும். தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”என்று கூறினார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
மும்பை தாதாக்கள் – தீவிரவாதிகள்
ரஜினிகாந்தின்கவலைஅவரோடுவைத்துக்கொண்டால்நல்லது: இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது[2]. அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்”, என தெரிவித்துள்ளார்[3].
உச்சநீதி மன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பத்தாண்டுகள் கழித்து 2003ல் குண்டுகள் வெடித்தபோது.
போதை மருந்து கடத்தல் முதலியவற்றிலும் ஈடுபட்டவர்கள் என்று அமெரிக்க ஆவணங்கள் கூறுகின்றன.
அப்படிபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட இந்த நடிகனுக்கு மன்னிப்புத் தேவையா?
குரூரமாக கொலைசெய்யப்பட்டவர்களை விட சினிமாக்காரன் உசத்தியா?: கொல்லப்பட்ட 250 பேர், காயமடைந்த 700 பேர், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரைப் பற்றி இவர்கள் ஏன் கவலைப்படவில்லை. பிணங்களின் பாகங்களில் சிதறி பறந்தன; ரத்தம் ஓடியது; சதைகள் சிதறின; பிணங்கள் அல்லது பாகங்களை வண்டிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இன்றும், அந்த கொடியவர்களுக்கு தண்டனை கிடைக்காதா என்ருதான் காத்திருந்தனர். அந்நிலையில் குற்றம் செய்தவன் யாராக இருந்தால் என்ன? ஒரே ஒருவனுக்குத்தான் மரணதன்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கீர்த்தி அஜ்மீரா வருத்தத்துடன் கூறுகிறார்[4]. அத்மட்டுமல்லாது ரூ.25,000/- கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தும், இன்று வரை பணம் கொடுக்கப்படவில்லை என்கிறார். இதைப் பற்றி ஜட்ஜு, ஜெயா, ரஜினி முதலியோர் ஏன் கவலைப்படவில்லை?
© வேதபிரகாஷ்
23-03-2013