நடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)!
சினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].
திராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா?: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.
திராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.
ராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா?: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.
- பொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.
- சட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.
- பெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.
- அவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].
- ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.
- தங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.
- விவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.
- தாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.
- இவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
- ஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.
© வேதபிரகாஷ்
06-04-2017
[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.
[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.
[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.
[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.
[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.
[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.
[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]
[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.