Archive for the ‘அரசியல்’ Category

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)!

ஜூன் 4, 2017

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)!

GST - businessmen ready

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் நிதியமைச்சரை சந்திக்கப் போவதாக கூறுதல்: பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுரேஷ் 12 அல்லது 18 ஆக குறைக்க வேண்டும் என்றார்[1]. அருண் ஜெட்லியுடன் பேசப் போவதாகவும் சொன்னார்[2]. ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார்[3]. ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்[4]. இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள சம்பந்தங்கள், தொடர்புகள் மற்றும் உறவுகள் அறிந்தது தானே, அதனால், நிதியமைச்சரையே பார்ப்பது அல்லது பிரதம மந்திரியைப் பார்ப்பது, என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனால் தான் முடியாது.

GST Kamal Hassan- minister ridicules him

தமிழக அமைச்சரின் விமர்சனம், கருத்து: இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 15வது கூட்டம், டில்லியில் 02-06-2017 அன்று நடைபெற்றது. இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது[5]. அதற்கு மிகவும் காட்டமாக, கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார்[6]. அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற, உதவ மற்றும் கணக்கு-வழக்குகளைக் கவனித்துக் கொள்ள, மாற்றியமைக்க ஏராளமானோர் தயாராக உள்ளனர். இத்தகைய கோடானு-கோடீஸ்வரர்கள் வரிகுறைப்புப் பற்றி பேசுவது, மிரட்டுவது எல்லாமே போலித்தனம் தான். இனி மேலே குறிப்பிட்ட “உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit]” பற்றி பார்ப்போம்.

GST Kamal Hassan- Shruthi-evade

மதிப்பீடு, மதிப்பீடு செய்யும் முறை, முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகள், பிரச்சினைகள்: ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில் விலைப்பட்டி / இன்வாய்ஸ் இல்லாமல், வரிகட்டாமல் எதையும் விற்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருப்பதை வியாபாரிகள் அறிந்து கொண்டுள்ளார்கள். அதாவது சினிமாக்காரர்கள், டிக்கெட்டில் ரூ.100/- என்று போட்டால், உண்மையில் அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது, பயனாளுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தயாரகிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ப சட்டங்களையும் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன்படியே, ஜி.எஸ்.டி கவுன்சில் கீழ்கண்ட சரக்கு மற்று பொருட் உற்பத்தியின் நான்கு மாதிரி வரையறை சட்டங்கள் விவாதத்திற்கு வைத்து, ஏற்றுக்கொண்டது[7].

  1. முழுஅமைப்பு [composition],
  2. உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit],
  3. வாட் / சென்வாட்”களிலிருந்து ஜி.எஸ்.டிக்கு மாறும் நிலையில் வரி அனுமதிக்கப்படும் நிலை / முறை [transition]
  4. மதிப்பீடு செய்தல் [valuation].

வாட்/சென்வாட் முறையிலிருந்து, ஜி.எஸ்.டிக்கு வரும்போது, இருக்கின்ற பொருட்களின் மீதான வரி, 01-07-2017 முதல் எடுத்துக் கொண்டு உபயோகிக்க அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. இந்த நிலைமாற்றத்திற்கு ஏதுவாக, கடைபிடிக்கக் கூடிய முறை/திட்டம் அறிவிக்க வேண்டியுள்ளது. பொதுவாக,

  1. வாங்கிய மூலப்பொருள் அப்படியே இருப்பது.
  2. உற்பத்திற்கு அனுப்பப்பட்டு, உற்பத்தி முழும அடையாமல், தொழிற்சாலையில் இருப்பது,
  3. பூர்த்தியடைந்த பொருட்கள் அப்படியே இருப்பது.

என்ற மூன்று நிலைகளில் இருக்கும் என்பதால், 30-06-2017 அன்று அதன் வைப்பை, கணக்கிட்டு, அவற்றின் எண்ணிக்கை, மதிப்பு, அவற்றில் வரிசெல்லுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு, அதன் மேலுள்ள வரி முதலியவற்றை கலால்துறையில் கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, அது திரும்பக் கொடுக்கப்படும். அதனை 01-07-2017லிருந்து ஜி.எஸ்.டி கட்டும் போது, உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் பற்றியும் கமல் ஹஸன் போன்ற நடிகர்கள் சொல்வதில்லை.

GST Kamal Hassan- Shruthi

நடிகர்கள், நிஜவாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றி வருவது: சினிமாக்காரர்கள், நிஜவாழ்க்கையிலும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை. திராவிட சித்தாந்திகள் சினிமா மூலம் தான் பிரபலம் ஆகி, பேசி-பேசியே மக்களை ஏமாற்றி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். மது-மாது என்பதனை தமது வாழ்க்கையிலும், தொண்டர்களின் வாழ்க்கையிலும் சேர்த்து வைத்த புண்ணியவான்களே அவர்கள் தாம். பெரியார், அறிஞர், கலைஞர், மேதாவி, பிரஹஸ்பதி, மூதறிஞர், டாக்டர், பேராசிரியர், பெருங்கவிக்கோ, என்றெல்லாம் அடிமொழிகளை வைத்துக் கொண்டு, தான் தான் எல்லாமே அன்ற அகம்பாவத்தை வளர்த்தவர்களும் இவர்கள் தாம். இந்தியர்களை, குறிப்பாக தென்னாட்டவரை, அதிலும், தமிழகத்தவரை, அதிகமாகவே சினிமா போதையில் மூழ்கடித்து, கொள்ளைய்டித்தவர்கள் தாம் சினிமாக்காரர்கள். இன்றளவிலும், நடிகைகள் பின்னால் சுற்றுவது, பார்க்க கூட்டம் சேருவது, தொடுவதற்கு முயற்சிப்பது போன்ற அளவில் மக்களைக் கெடுத்து வைத்துள்ளார்கள். அடுத்தப் பெண்ணை தொடவேண்டும், கற்பழிக்க வேண்டும் போன்ற அருவருப்பான எண்ணங்களை வளர்த்தது, சினிமாக்காரர்கள் தாம். இப்பொழுதும், மது விசயத்தில் வேடம் போடுகிறார்கள், சினிமா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

GST -percentage

சேவை வரி, ஜி.எஸ்.டி என்று எதுவாக இருந்தாலும், கமலுக்கு அலர்ஜி ஏன்?: கமல் ஹஸனைப் பொறுத்த வரையில், இவ்விசயத்தில் என்ன பேசினாலும், அது அசிங்கம் தான். “சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது”, என்பது, அவரது வாழ்க்கை நன்றாகவே மெய்ப்பித்துள்ளது. எத்தனை நடிகைகள் சீரழிந்தார்கள், எத்தனை நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்தார், கல்யாணம் ஆகாமலேயே இரண்டு பெண்களை பெற்றுக் கொண்டார்[8], நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்தார், மகளையும் ஆபாசமாக நடிக்க சம்மதித்துள்ளார், அம்மகளும் அப்பாவைப் போலவே, திருமணம் இல்லாமலேயே, குழந்தைப் பெற்றுக் கொள்ள தயார்[9] ஏன்றெல்லாம் பேசும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ளார் எனும் போது, வரி விவகாரத்தில், இவர் தலையிடுவது அசிங்கமான செயலாகும். முன்பு, எங்கு, சேவை வரி வந்து விடுமோ என்று பயந்து, டநான் பணம் வாஙவில்லை, கொடுக்கவில்லை என்றெல்லாம் மாற்றி-மாற்றி பேசினார். வெள்ளத்தின் போது, மற்ற நடிகர்கள், லட்சங்களில் கொடுத்த போது, தன்னிடத்தில் பணம் இல்லை, அவ்வாறெல்லாம், பணம் கொடுக்க முடியாது என்று வெள்ளத்தின்போது, “பஞ்சப்பாட்டு” பாடியதும், எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கிறது..

© வேதபிரகாஷ்

04-06-2017

GST provide facilities to viewers

[1] தினமலர், சினிமாவை விட்டே விலகுவேன்கமல் பகீர் அறிவிப்பு, ஜூன்.2, 2017. 18.14 IST.

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59815/cinema/Kollywood/I-will-leave-cinema-says-Kamal.htm

[3] தினகரன், அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம், 2017-06-03@ 00:38:00

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=308188

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா?… ஜெயகுமார் நக்கல், By: Lakshmi Priya, Published: Saturday, June 3, 2017, 15:23 [IST]

[6] http://tamil.oneindia.com/news/india/minister-jayakumar-comments-on-kamal-s-warning-284797.html

[7] Four draft set of rules relating to composition, input tax credit, transition and valuation were approved by the council last week March 2017.

[8] Daily Bhaskar, Kamal Hassan’s Wife Sarika, Sridevi: Bollywood Actresses Who Got Pregnant Before Marriage, Poornima Bajwa Sharma, Nov 03, 2016, 14:45 PM IST.

Bollywood superstar Kamal Hassan, who has proved his acting mettle with a number of impressive performances in his filmy career spanning over 40 years now, has always been talked about his personal life too. The actor is recently hogging the limelight for his break up with his 13-year-long girlfriend Gautami. The couple was living-in together during their happier times. Besides Gautami, Kamal’s relation with his former wife Sarika was also a talking point. The two came in news when they started living in together in 1988 and then got married. They got married after they had their first child Shruti Hassan in 1986. Sarika got pregnant before the couple tied the knot. Prenuptial pregnancy might be a casual affair in Hollywood but in Bollywood where everything is blown out of proportion, it indeed is a taboo till date. And perhaps that’s why many tinsel town celebrities got hitched in no time as to avoid any media glare. But there have been many actresses who shouted out on the roof top to announce their pregnancy news even before tying the knot. Besides Sarika, there have been many actresses who conceived before getting married. One such beauty is yesteryear actress Sridevi who publicly accepted her pregnancy. The actress was going around with director Boney Kapoor, who was married to Mona Kapor at that time. He later divorced his wife Mona (Arjun Kapoor’s late mother) in the year 1996 and married Sridevi. As per the reports, the English Vinglish actress was seven months pregnant at the time of wedding and within a few months, she gave birth to their daughter Jahnvi.

http://daily.bhaskar.com/news/ENT-BOW-pregnant-before-marriage-5451879-PHO.html

[9] News18Hindiशादी से पहले बच्चे के सवाल पर श्रुति ने दिया ये बिंदास जवाब,
Updated: May 27, 2017, 7:53 AM IST

http://hindi.news18.com/news/entertainment/bollywood/shruti-hassan-says-she-do-not-mind-having-babies-before-getting-married-999858.html

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

ஜூன் 4, 2017

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

GST Kamal Hassan- Suresh and others

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,

GST Kamal Hassan- ubjected to jokes

சினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

GST Kamal Hassan- and others

28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.

பல முதல்அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

அதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும்? அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே? நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.

GST Kamal Hassan

இந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?[3]  நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.

இப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது[4].

Kamal Hasan -on- Bahubali

சினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,

பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].

ஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம்! நல்ல தமாஷாதான்! அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம்!! என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்? காசுதான் மிச்சமாகும்.

அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

© வேதபிரகாஷ்

04-06-2017

Kamal Hassan - Maya Ravan

[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்புசினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்

[2] http://www.dailythanthi.com/News/State/2017/06/03001106/Service-Tax-Kamal-Hassan-strongly-opposed.vpf

[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9718870.ece

[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ – கமல், Posted Date : 19:20 (02/06/2017); Last updated : 19:42 (02/06/2017)

[6] http://www.vikatan.com/news/cinema/91172-may-quit-from-cine-industry-says-kamalhassan.html

[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed  | June 02, 2017 22:30 IST

[8] http://movies.ndtv.com/tamil/kollywood/dont-make-us-move-away-from-cinema-kamal-haasan-opens-up-1707323

பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்! (2)

மே 14, 2017

பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்! (2)

Sruti competing with Anushka

பெண்ணை தனது மூதாதையர் அல்லத காலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்?: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா? இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா? ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.

Kamal Hasan negative freaction against Bahubali

எதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெற்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை  இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.

 Kamal Hasan -against- Bahubali-cannot beat Hollywood

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”.  முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.

 Kamal Hasan -on- Bahubali-cannot beat Hollywood

தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3].  மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.

Modi, elizabeth saw preview of BAHUBALI

ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், கிராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

14-05-2017

Kamal Hasan - Marudhanayagam compared- Bahubali

[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு

[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.

[3]  மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.

[4] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html

[5] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece

[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி,  மே.13, 2017.

[7] http://cinema.dinamalar.com/tamil-news/59205/cinema/Kollywood/Kamal-speaks-about-Bahubali-2.htm

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்? (3)

ஏப்ரல் 1, 2017

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கைகுடும்பம் சிறப்பதுஅழிவது முதலியனயார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்? (3)

Kamal Hassan - with muslims surrendering

பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா ? கமல்ஹாசன் கேள்வி …! கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:

கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.

கமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.

Kamal Hassan - agreeing with Karu

கருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:

  1. கமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.
  2. கருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
  3. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.
  4. “ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன.  இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
  5. இந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா?
  6. ரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.
  7. “மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
  8. ஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே? கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே? ஏன் செய்வதில்லை?
  9. “நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா? அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா?
  10. முகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.

Kamal Hassan - agreeing with Karu-Ravan

கமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.

* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.

* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.

* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,

அந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு”  கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].

Kamal Hassan - Maya Ravan

மாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா?: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.

 Kamal Hassan - karu - turning Ravan - Tuchadga

ராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு!

அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].

“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்

தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .

பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது

விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.

கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்

எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்

மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது

கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!

 

ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?

எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா?

அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா?

கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா?

© வேதபிரகாஷ்

31-03-2017

Akhsayta and sruti - daughters of Kamal

Akhsayta and sruti – daughters of Kamal

[1] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html

[2] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html

[3]https://dravidianatheism.wordpress.com/2009/10/25/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

[4] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/

நடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை!

மார்ச் 15, 2017

நடிகை கஸ்தூரி பேட்டி:  தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை!

Kasturi about cast-couch controversy-2

நடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].

Kasturi about cast-couch controversy-TOI

பெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]:  “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக  சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.

 Kasturi about cast-couch controversy

தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது  காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9].  இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.

கஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].

நடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள்,  அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

15-03-2017.

[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி!, ஞாயிறு, 12 மார்ச் 2017 (13:23 IST)

[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-film-opportunities-in-the-field-of-cinema-doing-adjustment-true-actress-kasthuri-117031200006_1.html

[3] “People have an obsession in the US about looking a certain way after pregnancy. They have Jessica Alba and Beyonce as their role model and want to have the same body structure. They cannot accept their body with stretch marks or sagging breasts. I had just given birth to my son and wanted to be part of the shoot,”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms

[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர்நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)

[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)

[6] http://news.lankasri.com/entertainment/03/121121

[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017  10:46:AM

[8] http://tamil.adaderana.lk/news.php?nid=89069

[9] http://www.tamil.webdunia.com/article/star-interview/actress-kasthuri-share-her-experience-117031300009_1.html

[10] Times of India, Casting couch in filmdom isn’t a myth, it does exist,  Mrinalini  Sundar | TNN | Mar 12, 2017, 01.00 AM IST.

[11] http://www.gulte.com/movienews/56528/Telugu-Hero-Asked-Her-To-Sleep-With-Him

[12] https://www.mirchi9.com/movienews/radhika-apte-kasthuri-hinting-person/

[13] தி.இந்து, சக நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசவில்லை: கஸ்தூரி, Published: March 14, 2017 12:19 ISTUpdated: March 14, 2017 12:19 IST

[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/article9583040.ece

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

நவம்பர் 19, 2016

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

actresses-cannot-solve-family-problems

actresses-cannot-solve-family-problems

மக்கள் தங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் நடிகைகள் தீர்த்து வைப்பார்களா?: மக்கள் தங்களது உறவுகளை, தாம்பத்திய முறைகளை, தங்களால் பேண முடியவில்லை என்பதும், சமூகம் பலவழிகளில் சீர்கெட்டு கிடக்கும் போது, குடும்பத்து பெரியவர்கள், பெற்றோர், இல்வாழ்க்கை நலன் விழையும் மற்றோர், உற்ற நண்பர்கள் முதலியவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பதும், அந்நிலைகளில் இவர்கள் சரிசெய்ய முடியாததை, சினிமா நடிகைகள் சரிசெய்து வைக்கிறார்கள் என்பது போன்ற நிகழ்ச்சிகளை டிவி-செனல்கள் காட்டி வருவது மிகக் கேவலமாகும். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது, லஞ்சம் வாங்குபவன் யோக்கியன் போல லஞ்சம் வாங்காதே என்று பிரச்சாரம் செய்வது, விபச்சாரிகள் கற்பைப் பற்றி விவாதிப்பது-பரிந்துரைப்பது போன்றவை எல்லாம் கேவலத்திலும் கேவலமான விசயங்கள். ஆனால், அத்தகையவை மேடைகளில் நடந்து வந்தன. இப்பொழுது, டிவி-செனல்களில் நடந்து வருகின்றன.

actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

When actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

நடிகைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் யோக்கியதை, அதிகாரம் உள்ளதா?: நடிகைகளின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கக் கூடாது என்று கூட சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கிறேன் என்று டிவி-ஷோக்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரீதியில் இறங்கி விட்ட போது, அதைத் தட்டிக் கேட்கத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதை நடத்தும் நடிகைகள், தங்களை ஏதோ பெரிய ரிஷி-முனி, நீதிபதி, எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தீர்க்கதரிசி என்பது போல பாவித்துக் கொண்டு, கலந்து கொள்பவர்களுக்கு, ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது, திட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு யார் அத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது, அல்லது கலந்து கொள்பவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லையா, என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ramba-gives-petition-in-the-family-court

Ramba-gives-petition-in-the-family-court

குடும்ப நீதிமன்றங்களை அவமதிக்கும் டிவி-நிகழ்ச்சிகள்: குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சிலருக்குத்தான் தெரிகிறது, தெரிய வருகிறது. அங்கு நீதிபதிகள் சட்டதிட்டங்களில் வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுருத்தப்படுகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், டிவிசெனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, பார்ப்பவர்களுக்கே சங்கடமாக இருக்கிறது. சில நேரங்களில், அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க வருகிறார்களா அல்லது விளம்பரத்திற்காக வருகின்றானரா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா அல்லது டிவிசெனல்காரர்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றானரா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

urvasi-actress-spotted-drunk

urvasi-actress-spotted-drunk

விவாகரத்து பெற்று மறுமணம் செய்து, குடிக்கும் நடிகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது: தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் “கைரளி” செனலில் “ஜீவிதம் சாட்சி” என்று நடத்தி வருகிறார்[1]. நடிகை ஊர்வசி மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 9, 2016 அன்று விசாரணைக்கு வருகிறது[2].  செபின் என்பவர் “ராயல் காவடியர் பொரட்க்ஷன் போர்ஸ்” [Royal Kavadiyar Protection Force president Shefin] என்ற அமைப்பின் தலைவரான இவர் தான் ஊர்வசியின் மீது புகார் கொடுத்தார்[3]. டிவி நிகழ்ச்சியின் மீது குடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்[4]. 2015ல் கேரள மாநில சட்டசபை பெண்-ஊழியர்கள் கூட்டத்தில், குடித்த நிலையில் பேசும் போது, பிரச்சினை ஏற்பட்டதால், இவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்[5]. மனோஜ் கே. ஜெயன் [Manoj K. Jayan] என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு எட்டாண்டு வாழ்ந்தார். 2008ல் விவாகரத்து செய்து கொண்டு, 2013ல் சென்னையைச் சேர்ந்த பில்டர் சிவபிரசாத் [Chennai-based builder Sivaprasad] என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

urvasi-actress-blaming-for-her-drinking-habit

Urvasi-actress-blaming-for-her-drinking-habit

ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி[6]. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்[7]. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம்[8]. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[9]: “நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்று கேட்டுள்ளது சரியான கேள்விதான்[10]. ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது[12].  இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்[13]. அதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[14]. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது[15].

the-fact-or-reality-khusbooகுஷ்புவும் குடும்ப பஞ்சாயத்து செய்ய வந்து விட்ட நிலை: தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி / அதிமுக தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார்[16]. இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்[17]. குஷ்புவைப் பொறுத்த வரையில், பெண்களின் விசயங்களில், குறிப்பாக பெண்களின் கற்பு போன்ற விவகாரங்களில் சர்ச்சைகள் நிறைந்த கருத்துகளையே வெளியிட்டார். வழக்குகளும் போடப்பட்டன. ஆனால், அரசியல் ஆதரவு இருந்ததால் தப்பித்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தன்னுடைய அரசியல் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இருப்பினும், குடும்ப-பாங்கானவர்கள் குஷ்புவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. நடிகை என்றுதான் பார்க்கின்றனரே அன்றி, வேறெந்த விதத்திலும் பார்ப்பதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மற்ற நடிகைகளுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

19-11-2016

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

[1] தினமலர், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை ஆபாசமாக திட்டுவதாக புகர்: ஊர்வசிக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ், November 18, 2016, 11:58 [IST].

[2] http://cinema.dinamalar.com/other-news/53207/cinema/otherlanguage/Human-Rights-Commission-seeks-explanation-for-actress-Urvashi.htm

[3] english.manoramaonline, ‘Urvashi was drunk on TV show’: Here’s what landed the actor in trouble, byOnmanorama Staff, Friday 18 November 2016 09:42 AM IST.

[4] The complaint, filed by Royal Kavadiyar Protection Force president Shefin, also accused Urvashi of appearing on the TV show drunk.

http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/urvashi-drunk-misbehavior-tv-show-kerala-human-rights-commission.html

[5] Last year, the actor addressed an event organized by a section of Kerala assembly’s women employees in a drunken stage and the officials had to pack her off.

[6] மக்கள்முரசு, ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?, Posted on November 18, 2016.

[7] http://makkalmurasu.com/actress-urvashi-trouble-rude-behaviour-talk-tv-show/

[8] தமிழ்.வெப்துபனியா, அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST).

[9] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actor-urvashi-misbehaves-during-tv-show-kerala-rights-panel-seeks-report-116111800003_1.html

[10] பிளிமி.பீட்.தமிழ், ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?, Posted by: Siva, Published: Thursday, November 17, 2016, 17:54 [IST].

[11] http://tamil.filmibeat.com/heroines/urvashi-misbehaves-on-television-show-043348.html

[12] தினகரன், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ், Date: 2016-11-18@ 00:32:51.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, . By: Essaki, Published: Friday, November 18, 2016, 14:34 [IST].

[14] http://tamil.oneindia.com/news/india/actress-urvashi-trouble-267578.html

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=259544

[16] தமிழ்நாடு.நியூஸ், சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு, OCTOBER 21, 2016

[17]http://newstnn.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

நவம்பர் 8, 2016

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

kushboo-supports-ucc-puthiya-thalaimuraiகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

khusbo-and-nagma-ucc-fightநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில்   தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில்தலாக்பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.

khusbo-and-nagma-uccகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு![9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.

 கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

 பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

 கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?

 பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].

kushboo-supports-ucc-puthiya-thalaimurai-pon-says-she-should-teach-tirivavuதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].

thirunaugasarar-kushboob-nagma-long_12443காங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

08-11-2016

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.art

[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா, By: Mayura Akilan, Updated: Monday, November 7, 2016, 16:12 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-slams-kushboo-talaq-issue/slider-pf214152-266544.html

[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.

[6] http://www.dailythanthi.com/News/State/2016/11/06181731/Uniform-civil-code-Nagma-attacks-Khushbu-over-her.vpf

[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்?:நக்மா காட்டம்!, Sunday, 06 November 2016 20:18 Published in தமிழகம்

[8] http://www.inneram.com/news/tamilnadu/10821-nakma-attack-on-kushboo.html

[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!, திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/khushboo-answer-about-nakma-s-complaint-116110700007_1.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்புநக்மா இடையே எந்த மோதலும் இல்லையேஅடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-rift-bewtween-nagma-kushboo-says-thirunavukkarasan-266570.html

[13] விகடன், குஷ்புநக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் , Posted Date : 12:10 (07/11/2016), Last updated : 12:40 (07/11/2016).

[14] http://www.vikatan.com/news/tamilnadu/71608-rift-between-kushboo-nagma-tirunavukkarasar-explains.art

குஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

மே 24, 2016

குஷ்புநமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ்திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

நமீதா-திருமலை-விஜயம்.2

ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].

நமீதா-திருமலை-விஜயம்.1பிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம்! நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.

kushboo, சோனியா, இளங்கோநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.

kushboo-rahul-ilangaovanவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும்!. நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.

குமரி அனந்தன், குஷ்பு பிரச்சாரம்தோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான்!! ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:

ஆௐஆஆ, ௐஊஶ்ஊடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற .தி.மு..வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’  இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.

குஷ்பு, குமரி அனந்தன்நடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.


© வேதபிரகாஷ்

24-05-2016

[1] தினபூமி, .தி.மு.. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016

[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)

[3] http://www.thinaboomi.com/2016/05/22/56438.html

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/namitha-went-to-tirupati-again-for-jayalalithaa-s-win-116052300004_1.html

[5] விகடன், ஜெயலலிதா வெற்றிதிருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா!, Posted Date : 11:44 (23/05/2016).

[6] தினத்தந்தி, .தி.மு.. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:

திங்கள் , மே 23,2016, 3:18 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , மே 23,2016, 3:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்மா வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா!, By: Shankar, Published: Monday, May 23, 2016, 10:24 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/namitha-s-thanks-giving-visit-tirumala-254334.html

[9]  http://www.dailythanthi.com/News/State/2016/05/23031829/Actress-Namitha-darshan-at-Tirupati.vpf

[10] http://www.vikatan.com/news/tamilnadu/64480-jayalalitha-victory-namita-went-to-tirupathi.art

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/khushbu-wishes-jayalalithaa-254210.html

[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.

[14] http://www.dailythanthi.com/News/State/2016/05/22032120/Actress-Khushboo-opinion-about-the-results-of-legislative.vpf

[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?, Last Modified: ஞாயிறு, 22 மே 2016 (09:58 IST).

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-khushboo-congratulate-admk-government-116052200003_1.html

 

ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்!

மார்ச் 10, 2016

ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்சொன்னது ஜெமினியின் மகள்!

Gamini Ganesan daughter said about him on 08-03-2016ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்: ”திரையுலகில், என் தந்தை ஜென்டில்மேனாக பார்க்கப்பட்டார்,” என, பிரபல மருத்துவரும், நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான கமலா செல்வராஜ் கூறினார்[1]. சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், 08-03-2016 அன்று நடந்த மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது: “மருத்துவம் படித்த அனைவருக்கும், நோயாளிகளுக்கு என்ன மருந்து தர வேண்டும் என, உடனடியாக தெரிந்து விடுவதில்லை. துவக்கத்தில் நானும், 120 ரூபாய்க்கு அறை பிடித்து, ‘கிளினிக்துவங்கினாலும், வைத்தியம் பார்க்க தெரியவில்லை. மூத்த டாக்டர்களை கேட்டு தான் சிகிச்சை அளித்தேன். என் தந்தை, சினிமாவில் நடிப்பதை விட்டு, 35 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவமனை கட்ட துவங்கினேன். அதனால், அவரிடம் நிறைய பணம் இல்லை; ஆறு கிரவுண்ட் இடம் மட்டும் கொடுத்தார். வங்கியில் கடன் வாங்கி, மருத்துவமனையை கட்டினேன். எனக்கு, அவர் நிறைய செல்வத்தை தரவில்லை; நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தார். திரை உலகில் அவர் ஒரு, ‘ஜென்டில்மேன்என அழைக்கப்பட்டார். அவர் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை[2]. அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்”, இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில பா.ஜ.,தலைவர் தமிழிசை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.

Gamini Ganesan familyஜெமினி கணேசன் பலதிறமைகளைக் கொண்ட மனிதன்: ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 –22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார் மற்றும் பல திறமைகள் கொண்டவர். “காதல் மன்னன் “, என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லூரி நாட்களில் அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்பொழுது, நாட்டுநடப்புகளை எழுதி வைத்திருப்பது, அவருக்கு அவற்றில் இருந்த நாட்டத்தைக் காட்டுகிறது[3]. அந்த டைரி குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறது, அத்தனை விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதை அவரது இளைய மகள் மருத்துவர் ஜெயா ஶ்ரீதர் என்பவர் தனது “பழைய நினைவுகள்” பகுதியில் “தி இந்து”வில் குறிப்பிட்டுள்ளார்[4]. பாட்டுப் பாடுவதிலும் திறமையுண்டு. யோகா மாஸ்டர், வேகமாக கார் ஓட்டுபவர் என்று பல திறமைகள் உண்டு. போதாகுறைக்கு தான் “காதல் மன்னன்” ஆகி, நான்கு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டார் போலும்.

Gemini, Pushpavalli, Rekhaஜெமினியின் மனைவிகள்: ஜெமினி கணேசன் 1940லிருந்து 1998 வரை நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜெமினியின் மனைவிகள் விவரங்கள் கீழ் வருமாறு:

எண் மனைவி / துணைவி பெயர் திருமணம் செய்து கொண்ட ஆண்டு மற்ற விவரங்கள்
1 டி. ஆர். அலமேலு 1940 என்கின்ற பாப்ஜி
2 புஷ்பவள்ளி. 1950 (?) 1954ல் ரேகா பிறந்தார், 1991ல் காலமானார்.
3 சாவித்திரி. 1952 1981ல் காலமானார்.
4 ஜூலியானா ஆன்ட்ரூஸ் 1998 78 வயதில், 36 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்[5]

மூன்று மனைகள் மூலம் ஒரு மகன் மற்றும் மகள்கள் என்று பலர் பிறந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே தத்தம் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

Juliana Andrews and Gemini Ganesanஜூலியானா ஆன்ட்ரூஸ் விவகாரம் (1998-99): ஜூலியானா ஆன்ட்ரூஸ் [Juliana Andrews] ஜெமினி கணேசனின் காரியதரியாக வேலை பார்த்து வந்ததால், அவருடைய கணக்கு-வழக்குகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது. ஜெமினுக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன, அதனால், அவற்றை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அவரை வளைத்துப் போட முயற்சித்தார் என்றும் சொல்லப்பட்டது[6]. திருமணம் ஆகி தி.நகர் பிளாட்டில் வசித்து வரும் வேளையிலேயே, ஐந்து மாதங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. 1999ல் “அப்படியே ஆகட்டும்” என்ற டிவி-சிரியலை எடுப்பதில் வேலை செய்துள்ளார்[7]. இவள் அடித்தாள் என்ற புகார் எல்லாம் இருந்தது. இதனால் ஜெமினி குடிக்க ஆரம்பித்தார். தொந்தரவு தாங்காமல் அமெரிக்காவுக்கு போய்விட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது[8]. சொத்துப் பிரச்சினையில், ஜூலியானா ஏகபட்ட புகார்களைக் கொடுக்க ஆரம்பித்தார். கருணாநிதியிடமும் மனு கொடுத்தார். தான் சிங்கப்பூரில் வசதியாக வாந்து வந்ததாகவும், ஜெமினி தான் சென்னைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புருத்தினார் என்றெல்லாம் கூறினார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய பிறகு கூட, அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அவரை சந்திக்க ஜெமினி குடும்பத்தினர் தடுக்கின்றனர் என்றெல்லாம் கூட கூறினார். முடிவாக விவாகரத்து செய்ய்ய ரூ.50 லட்சம் கேட்டதாகவும், ஆனால், ரூ.7 லட்சம் கொடுத்து முடித்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன[9].

Daughters of Gemini GAnesanஜெமினியின் மனைவி, குடும்பங்கள்: ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்[10]. பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி. தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத் திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[11]. சில மாதங்கள் அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவிட்டு மீண்டும் பாப்ஜியிடமே திரும்பி வந்தார். பாப்ஜி மூலம் ஜெமினிக்கு 4 மகள்கள் பிறந்தனர். ஜெமினி கணேசனின் மகள்கள் – டாக்டர் ரேவதி, நாராயணி, டாக்டர் கமலா, நடிகை ரேகா, விஜய சாமூண்டீஸ்வரி, டாக்டர் ஜெயா, முதலியோர். மூத்த மகள் டாக்டர் ரேவதி அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் சென்னையில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆய்வில் உலகப் புகழ்  பெற்றவர். இரண்டாவது மனைவியான புஷ்பவள்ளி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரை ஜெமினி காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் தான் இந்தித் திரையுலகில் தற்போதும் பரபரப்பாக இருக்கும் ரேகா. ஜெமினியின் 3வது மனைவியான நடிகை சாவித்ரி மூலம் விஜய சாமுண்டீஸ்வரி எனற மகளும், விஜய சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சாவித்ரி மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று குடியேறி விட்டனர். ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி[12], என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்[13].

Sridhar, ........Gemini, MGR, NTR, Sivajiஜெமினியும், கருணாநிதியும் சொந்தக்காரர்கள்!: கருணாநிதி தனது பேச்சில், இவ்வாறு கூறிக் கொண்டார். “ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தசந்திரம்மாஎன்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா?”, என்று கேட்டு முடித்தார். பிறகு இத்தகைய பார்ப்பன பந்தங்களை வைத்துக் கொண்டுதான், இந்த மனிதர், பார்ப்பனரைகள் வைதே இன்று வரை காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

10-03-2016

[1] தினமலர், எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை, மார்ச்.9, 2016:00.15,

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1474463

[3] http://www.thehindu.com/mag/2005/04/03/stories/2005040300560500.htm

[4] The Hindu, Pages from the past, Sunday, April.3, 2005. Dr. Jaya Shreedhar, the youngest daughter of Gemini Ganesh, is Health Advisor, Internews Network. Contact her atjaya_shreedhar@vsnl.net

[5] Juliana, whom Gemini Ganesan married to the surprise of his family, friends and fans, lived with him in a flat in T Nagar in Madras for five months before their marriage was on the rocks. Gemini Ganesan’s family had claimed that Juliana had been torturing the star as a result of which he had taken to excessive drinking. It was also alleged that Juliana had demanded Rs 5 million to agree to a separation but Gemini Ganesan’s family agreed to pay only Rs 700,000.

 http://m.rediff.com/news/1999/nov/23gem.htm

[6] http://www.rediff.com/news/1999/nov/27gem.htm

[7] Tamil film legend Gemini Ganesan and Juliana Andrews have announced another joint venture: a TV serial called Appadiye Aakattum. (Let it be so). So? Well, he happens to be 79, Rekha’s dad, and a fourth-time groom; she’s 35; and for the record, Gemini’s first wife is still alive. The couple’s not saying much, but we snatched this gem from Gemini: “If Nelson Mandela can marry at 82, why not I?” He’s even three years younger! India Today, She and I, Anna M.M. Vetticad December 7, 1998 | UPDATED 18:48 IST.

 http://indiatoday.intoday.in/story/tamil-film-legend-gemini-ganesan-juliana-andrews-announce-joint-tv-venture/1/265387.html

[8] Another personality splits up with his wife. Thespian Gemini Ganesan, 79 (superstar Rekha’s father), is rumoured to have fled the country to escape his fourth find, Juliana Andrews, 35. “He’s ill and gone to the US for treatment,” insists a family member. Rubbish, snorts Juliana, who sees this as a ploy to isolate her and force her into a financial settlement. She’s been accused by Gemini’s family of eyeing his wealth, and a young man in the neighbourhood. “I was a well-employed NRI,” she rages in response, “but I gave it all up when Gemini’s first wife (who’s still alive) called me saying if I didn’t come to Chennai, he’d die of a broken heart. I agreed to marry him on humanitarian grounds.” No comments from the hero of this plot. Yet. India Today, Just split, Anna M.M. Vetticad, March 8, 1999, UPDATED 18:06 IST.

[9] http://m.rediff.com/news/1999/nov/23gem.htm

[10] தமிழ்.ஒன்.இந்தியா, காதலிலேயே வாழ்ந்து மறைந்த ஜெமினி!, Published: Tuesday, March 22, 2005, 5:30 [IST]

[11] http://tamil.oneindia.com/news/2005/03/22/gemini1.html

[12] http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=81

[13] ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்… ரேவதி சுவாமி நாதன், மருத்துவர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ்,  மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர். அவ்விழாவில், இதை தெரிவித்தார்.

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece