Archive for the ‘அழகு ஆராதிக்கப் படுகிறதா? ஆபாசப் படுகிறதா?’ Category

நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு

ஜூலை 1, 2010

நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா: நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா, ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவியுள்ளது.

வதந்திதான், உயிரோடு இருக்கிறார்: முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீதா பற்றிய இந்த‌ செய்தியால் ‌‌கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை நமீதாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நமீதா இப்போது மும்பை ஆம்ப்வேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அங்கு அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தற்கொலை வதந்தியைத் தொடர்ந்து நமீதா விரைவில் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான்: நடிகை நமீதா இன்று தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர். ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், இன்று காலை நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது.ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உண்மையை அறிய நாம் நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டு கேட்டோம்.அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார்.இப்படியெல்லாமாப்பா வதந்தி கிளப்புவது…?

நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை!

மே 26, 2010

நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை!

இதெல்லாம், எதற்கு?

Model-cum-singer-cum-actress Sherlyn Chopra, recently, shocked many when she posted pictures of herself in her birthday suit on social networking site Twitter just to see viewers’ reactions.

// <![CDATA[//
// <![CDATA[//

இதுவே போதும்.

/photo.cms?msid=5977619

இனி இரண்டு துண்டு துணிகளுக்கு எல்லாம் வேலையே இல்லை.

ஆமாம், ஸெர்லின் சோப்ரா அன்ற நடிகை நிர்வாணமாகவே போஸ் கொடுத்துவிட்டாளாம்!

வாழ்க, இனி புத்தரை துணி போட்டு மூடவேண்டியதுதான்!

இந்தியா முன்னேறிவிட்டது!

இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

ஏப்ரல் 29, 2010

இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

இப்படங்களை இங்கே பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். இத்தகைய ஆபத்து இந்தியாவில் நுழைகிறது, மற்றும் அதற்கான ஆதரவு பல நிலைகளில் வருகிறது, கிடைக்கிறது, ஊக்குவிக்கப் படுகிறது, என்பதெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தி படவுலகத்தின் மூலமாக, முன்பெல்லாம் (40-60 ஆண்டுகளுக்கு முன்பு) நல்லது கிடைத்துவந்தது.

இப்பொழுதோ, ஆபாசம், அசிங்கம், அனைத்துல ஆபாசம், நிர்வாணம், வேசித்தனம்…………………..எல்லாமே, கிடைக்கின்றன. தறிகெட்டுப் போகிறது. ஏன் திவிரவாதம் கூடக் கிடைக்கிறது.

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

வெளிநாட்டு நடிகைகள் அழைத்துவரப் படுகிறார்கள். நடிப்பதற்கு மட்டுமல்ல, நிஜவாழ்க்கைக்கிற்கும். கிரிக்கெட், ஒரு பாதிதான். சென்ஸார் எல்லாம் பெயருக்குத்தான்!

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

தாவூத் இப்ராஹிம் போன்ற அனைத்துலக தீவிரவாதக் கட்டுப்பிடியில் இயங்கும் அவலம். செக்ஸ் தொழில் தாராளமாக நடக்கும் நிலை, தோல்-வியாபாரம் நடத்தும் விதம்…………முதலியன அவனுக்கே உரித்தானது. நேபாளத் தொடர்பு பல கதைகள் சொல்கின்றன.

துபாயில் அரங்கேற்றப்படும் ஆபாசங்கள்………………………….

barbaramori-இது-போதுமா

barbaramori-இது-போதுமா

தமிழகத்தில் அந்த நாற்றம் அடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழர்கள் வார்த்தையாலே, பார்வையாலே கற்பழித்துவிடுவார்கள்! தமிழ் கவிஞர்களை விட்டால், போதும். செந்தமிழே, சிவப்பாகிவிடும்.

புதுமை, தொழிற்நுட்பம், என்ற பெயரில், நிர்வாணம் புகுத்தப் படுகிறது.

மறைமுகமாக, ஊடகங்கள், தொழிற்சாலை முதலாளிகள், வியாபாரப் புலிகள், அரசியல்வாதிகள்………………….பல வகைகளில் உதவுகின்றனர்.

திருமதிகள் ஆடினால் மதி ஆடுமா, கெடுமா, சீரழியுமா?

நவம்பர் 14, 2009
அழகிப் போட்டி
நவம்பர் 14,2009,00:00  IST

http://www.dinamalar.com/district_detail.asp?news_id=257865&ncat=Chennai

Top City news updateசென்னை: திருமதி சென்னை-2009 அழகிப் போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் சென்னையில் நடந்து வருகின்றன. தங்களுக்குப் பிடித்த பாடலுக்கு ஏற்ப உடையணிந்து குத்தாட்டம் ஆடிய திருமதிகள்.

இதென்ன கலாட்டா?

மானாடி விட்டது!

மயிலாடி விட்டது!

இனி திருமதிகள் ஆடுகின்றனவா?

கணவன்மார்கள்  என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அவர்களும் இதற்கு சம்மதமா?

உடனே கேட்பார்கள், பெண்கள் பரத நாட்டியம் ஆடுவது மட்டும் சரியா என்று!

ஆனால், அதுவும் இதுவும் ஒன்றகுமா?

ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிப்பு!

ஒக்ரோபர் 27, 2009
ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிப்பு
அக்டோபர் 27,2009,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13625

Important incidents and happenings in and around the world

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிக்கும் போராட்டம் நடந்தது. ஆபாச சினிமா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்து கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர தலைவர் ராஜலட்சுமி, நகர செயலர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர். பொது செயலர் சரளா, மாநிலத் தலைவர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் சினிமா படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாச திரைப்படங்களை வெளியிடும் சினிமா தியேட்டர் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச திரைப்படங்களை வெளியிடக் கூடாது என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

———————————————————————————————————————————

ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை என்ன செய்யப் போகிறார்கள்?

அவர்களையும், இதே மாதிரி கவனிப்பார்களா?


ரொம்ப அழகாயிருக்காங்க: சினேகாவை பாராட்டிய கமல்

ஒக்ரோபர் 21, 2009

ரொம்ப அழகாயிருக்காங்க: சினேகாவை பாராட்டிய கமல்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18889

வெங்கட்பிரபுவின் கோவா ஏறக்குறைய முடிந்துவிட்டது. வழக்கமான ‌ஹியூமருடன் கிளாமரும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்க இப்போதே தவம் கிடக்கிறது இளைய சமுதாயம்.

கோவாவின் சீக்ரெட் வெப்பன் யார் தெ‌ரியுமா? வேறு யாராக இருக்க முடியும்… புன்னகை இளவரசி சினேகாதான் அந்த வெப்பன்.

படத்தில் சினேகாவுக்கு எந்த மாதி‌ரி கேரக்டர்? வில்லியா? கிளாமரா? நீச்சல் உடையில் அவர் நடித்திருக்கிறாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள்… கேள்விகள்…

இவை எல்லாவற்றுக்கும் புன்னகை மட்டுமே சினேகாவின் பதில். நீச்சல் உடை கேள்விக்கு மட்டும், அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என சீ‌ரியஸாக பதிலளிக்கிறார். இதுவரை பார்க்காத கிளாமரான சினேகாவை கோவாவில் பார்க்கலாம் என வெங்கட்பிரபு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

சினேகாவின் எக்ஸ்ட்ரா உற்சாகத்துக்கு காரணம், கமல். சமீபத்தில் ஒரு விழாவில் சினேகாவைப் பார்த்த கமல், சினேகா இப்போ ரொம்ப அழகாயிருக்காங்க என எல்லோர் முன்பும் பாராட்டியிருக்கிறார்.

இதுபற்றி கேட்டால், டயட், உடற்பயிற்சின்னு உடம்பை ஸ்லிம்மாக்கிட்டேன். கமல் சார் அதனால்தான் பாராட்டியிருக்கணும். அவரே பாராட்டியதில் ரொம்ப சந்தோஷம் என்றார் பூ‌ரிப்புடன்.

நடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்

ஒக்ரோபர் 21, 2009

நடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18876


ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை கங்கணாவிடம் ரசிகர்கள் தொட்டு சில்மிஷம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ என்ற படத்தில் நடித்தவர். தற்போது இவர் மாதவனுடன் நடிக்கும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற திரைப்பட ஷநிட்டிங் மும்பை கெய்சர்பாத்தில் நடந்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்தது. மாதவன், கங்கணா, சிமி ஜெர்கில் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதில் கடந்த ஞாயிறன்று இரவு 10 மணி அளவில் நடந்த ஷூட்டிங்கை பார்க்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். அங்குள்ள லால்பதாரி கட்டிடத்தில் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது இளைஞர்கள் கும்பல் ஒன்று நடிகை கங்கணா ரணாவத் அருகில் வந்து அவரை கிண்டல் அடித்தனர். அவரது அங்க அடையாளங்களை கூறி மிக மோசமான முறையில் விமர்சித்ததோடு, அவரைத் தொட்டு சில்மிஷம் செய்தனர்.

கூட்டம் அதிகமானதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனால் கங்கணாவை கேலி செய்தது குறித்து புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இப்பொழுதெல்லாம் இத்தகைய செய்திகள் அதிகம் வருகின்றன. “இடுப்பில் கிள்ளியதற்காக ஒரு நடிகை பளார்”, “யாரோ தன்னைத் தொட்டார்” என நடிகை புகார்”………………….

முதலில், இந்நடிகைகள் எதற்காக அப்படி, பார்ப்பவரைத் தூண்டித் தொடும் அளவிற்கு இருக்கவேண்டும்? ஆண்கள் பெண்களைப் பார்த்தால் கவரப் படுவர் என்பது இயற்கை விதி, அப்படி இருக்கும் போது, பொது இடங்களில் அவர்கள் வரும்போது கண்ணீயமாக உடை அணிந்து கொண்டு வரவேண்டாமா?

இவ்விஷயத்தில் ஊழலும் காம-இச்சையைத் தூண்டும் ஆபாசமும், ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. ஆகவே, தொடுபவர்-தொட வைப்பவர் இருவரையும் தண்டிக்க வேண்டும்!