“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்!
குறும்படம் தயாரிப்பில் இறங்கிய தோழிகள்[1]: கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார். முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார்[2].
திகில் படம் போர்வையில் ஓரின சேர்க்கை கொள்கையை ஆதரிக்கும் போக்கு: இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை. இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.
பழக்கம் போல விமர்சனம் இத்யாதிகள்: இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
ஓரினசேர்க்கை எப்படி வரலாம் – எப்படியும் வரலாம்!: ஒரே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிற ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வருகிறது[3]. இருவரும் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். நெருக்கமாகவும் நடித்திருக்கிறார்கள்[4]. இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான லெஸ்பியன் காதல், நெருக்கமான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்ற கூறிவிட்டனர்[5]. இதனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது[6]. “ஆண்களே நடித்திராத படத்திற்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்பதற்காக ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புதாக ஜாலியாக சில காட்சிகள் வைத்தோம். ஒரு டூயட்டையும் வைத்தோம். இவை எல்லாம் காமெடிக்காகத்தான் மற்றபடி படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை.
இயக்குனரின் வாதம்: இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறியதாவது[7]: பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு பற்றியும், ஆண்களுக்கு இடையிலானா ஹோமோ செக்ஸ் பற்றியும் இப்போது நிறைய படங்கள் வந்திருக்கிறது. பல படங்கள் விருதும் வாங்கி உள்ளது. சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் அரவிந்த்சாமி ஹோமோ செக்ஸ் மேனாக நடித்திருந்தார். ஆனாலும் எனது படத்தில் லெஸ்பியன் உறவு பற்றி சித்தரிக்கவில்லை. பெண்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண்ணுக்கு எல்லை மீறிய ஈர்ப்பு வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். பிறகு பெற்றவர்கள் அவர்களை கண்டித்து அது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது பெண் ஆணோடுதான் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்த அவர்களும் திருந்துகிறார்கள். இப்படித்தான் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆபாசமான காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை[8].
இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்[9]. ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு[10].
சென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட படங்கள் மற்றும் காரணங்கள்[11]: இந்தியாவில் செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி காலத்தில் கிஸ்ஸா குர்சி கா என்ற படம் அவரை விமர்சிக்கிறது என்ற காரணத்திற்காகவே அழிக்கப் பட்டது. தாராளமயமாக்கல், ஹனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை வந்ததும், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் முதலியோர் ஏதோ உரிமை, எண்ண்வுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, ஓரின சேர்க்கையாளர்களின் உரிமை, கொள்ளைக்காரகளின் உரிமை, தீவிரவாதிகளின் உரிமை, பயங்கரவாதிகளின் உரிமை,……………என்ற ரீதியில் றாங்கி விட்டார்கள். அந்நிலையில் உருவானதுதான், இந்நிலை.
1. Bandit Queen (1994) |
1. கொள்ளைக்கார ராணி | அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. |
2. Fire (1996) |
2. நெருப்பு | லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு பெண்கள்]. |
3. Kama Sutra – A Tale Of Love (1996) |
3.காம சூத்திரம் – உண்மையான காதல் கதை. | ஆபாசம், பாலியல் முதலிய காட்சிகள். [முலைகளைத் தொடுவது] |
4. Urf Professor (2000) |
4. யு.ஆர்.எப். புரபசர். | அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறையை நியாயப் படுத்தல். |
5. The Pink Mirror (2003) |
5. ஊதா நிற கண்ணாடி. | லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு ஆண்கள்]. |
6. Paanch (2003) |
6. ஐந்து. | அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறை, போதை மருந்து முதலியவற்றை நியாயப் படுத்தல். |
7. Black Friday (2004) |
7. கருப்பு வெள்ளிக்கிழமை. | மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து பின்னிய சினிமா |
8. Parzania (2005) |
8. பூமியின் மீது நரகம். | |
9. Sins (2005) |
9. பாவங்கள். | ஒரு கத்தோலிக்கப் பாதிரியின் பாலியல் விவகாரத்தைச் சித்தரிக்கிறது. |
10. Water (2005) |
10. நீர். | வாரணாசி ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை அவதூறு செய்யும் விதத்தில் சித்தரித்தது. |
11. Firaaq (2008) |
11. முரண்பாடு. | 2002 குஜராத் கலவரம் பற்றியது, பாரபட்சமானது. கதாநாயகி இந்து-முஸ்லிம்களை புண்படுத்துவது போன்ற வசனக்கள் பேசுவது. |
12. Gandu (2010) |
12. கன்டு. | பாலியல் மற்றும் நிர்வான ஆபாச காட்சிகள் கொண்டது. |
13. Inshallah, Football (2010) |
13. இன்ஸா அல்லா, கல்பந்து. | இந்தியாவில் தீவிரவதியாக இருப்பவன் அயல்நாட்டில்கால் பந்து வீரனாக ஆசைப்படும் போக்கு. |
14. Dazed in Doon (2010) |
14. டூன் பள்ளியில் மயக்கம். | டூன் என்ற பிரபல பள்ளியின் மாணவன் அடாத காரியங்களை செய்வது. |
15. Unfreedom (2015) |
15. விடுதலையற்ற நிலை | ஓரின சேர்க்கை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சித்தரிப்பது. |
© வேதபிரகாஷ்
31-10-2016
[1] வெப்துனியா, திரைக்கு வராத கதை!, Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (21:10 IST).
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thiraikku-varatha-kathai-movie-audio-release-116100200019_1.html
[3] சென்னை.ஆன்.லைன், லெஸ்பியன்கள் படத்தில் நதியா!, October 21, 2016, Chennai
[4]http://chennaionline.com/article/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
[5] பிலிமி.பீட்.தமிழ், சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு, Posted by: Siva, Published: Friday, October 21, 2016, 17:23 [IST]
[6] http://tamil.filmibeat.com/news/thiraiku-varatha-kathai-faces-issue-censor-board-042881.html
[7] தினமலர்.சினிமா, லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தவில்லை: நதியா பட இயக்குனர் விளக்கம், பதிவு செய்த நாள்: அக் 22, 2016 16:05
[8] http://tamil.dinamalar.in/m/cinema_detail.php?id=52298
[9] அததெரண, திரைக்கு வராத கதை – திரைவிமர்சனம், October 31, 2016 03:28:PM.
[10] http://tamil.adaderana.lk/news.php?nid=84908
[11] https://www.scoopwhoop.com/entertainment/banned-hoon-main/ – .srtx6cd7c