Archive for the ‘ஆண்-ஆண் உறவு’ Category
ஜூலை 3, 2017
நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்?

திலீப்–காவ்யா பிரிவுக்கு காரணமாகத்தான் பாவனா கடத்தப் பட்டாரா?: நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, 2017, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. படப்பிடிப்புகளில் திலீப், காவ்யா மாதவன் நெருக்கமாக பழகி வருவதை மஞ்சு வாரியாரிடம் சொல்லி அவர்களின் பிரிவுக்கு பாவனா காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க நடிகர் திலீபின் ஏற்பாட்டில் பாவனா கடத்தப் பட்டார் என்று குற்றம் சாட்டப் படுகிறது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்து வருகிறார்.

பல்சார் சுனி, திலீப்பிற்கு மிரட்டல் எழுதியது: அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப்பிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த ஜூலை. 1ம் தேதி 2017 போலீசார் திடீர் சோதனை நடத்தினர்[1]. கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலின் நண்பன் ஜின்சன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் இந்த அதிரடி சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது[2].

சிம்கார்டு காவ்யா மாதவன் கம்பெனியில் இருந்ததா? 01-07-2017 அன்று சோதனை: பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளிகளும் அவரை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் செல்போன் மெமரி கார்டை அளித்ததாக கூறியுள்ளார்[3]. கொச்சி அருகே காகநாட்டில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் கடந்த மே 30ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள் பல மணிநேரம் ஆய்வு செய்யப்பட்டன[4]. பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை தொடர்ந்து, அவரது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலீப், நாதிர்ஷா கொடுத்த புகார்கள், போலீஸ் 30-06-2017 அன்று விசாரணை: இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்[5]. இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் 30-06-2017 அன்று மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்[6]. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். போலீசார் அவர்களிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

சிம் கார்டுகளும், செல்பீக்களும்: பிப்ரவரி 2017ல் ஓதனையிட்டபோதே, இரண்டு-மூன்று சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார், பல்சார் சுனில் நண்பன் மனு வீட்டில் சோதனையிட்டபோது, ஒரு சிம் கார்டை கண்டெடுத்தனர்[7]. ஆனால், அதுதான், சுனில் உபயோகித்ததா என்று தெரியவில்லை[8]. பிரியேஷ் வீட்டில் சோதனையிட்டபோதும், இரண்டு மெமரி கார்ட், பென் டிரைவ் முதலியவை கைப்பற்றப்பட்டன என்று தெரிந்தது[9]. சுனி தான் அந்த சிம் கார்டை, டிரைனேஜில் போட்டு விட்டதாக சொன்னான்[10]. பிறகு, எத்தனை சிம்கார்டுகள் இருந்தன, எவற்றில் அப்படங்கள்-வீடியோ இருந்தன என்று தெரியவில்லை. திலீப் தொடர்ந்து, தனக்கு பல்சார் சுனி யாரென்றே தெரியாது என்று சொல்லிவந்த நிலையில், திலீப் நடித்த ஒரு படத்தின் லொகேஷனில் இருந்தது போன்ற செல்ஃபி புகைப்படங்கள் தெரியவந்துள்ளன[11]. இதனால், பாவனா வழக்கில் திலீப்பின் பங்கு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[12].
© வேதபிரகாஷ்
03-07-2017.

[1] வெப்துனியா, நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? – போலீசார் விசாரணை, Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (11:41 IST)
[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/police-enquiry-with-kavya-madhavan-in-bhavana-case-117070300014_1.html
[3] தி.இந்து.தமிழ், பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை, Published: July 3, 2017 07:40 ISTUpdated: July 3, 2017 07:46 IST.
http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece
[4]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece
[5] ஈநாடு.இந்தியா, பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் போலீசார் 13 மணி நேரம் தீவிர விசாரணை, Published 01-Jul-2017 11:00 IST
http://tamil.eenaduindia.com/Entertainment/OtherEntertainment/2017/07/01110048/Bhavana-Kidnap-case-Police-Interrogated-Actor-Dileep.vpf
[6] http://cinema.dinamalar.com/tamil-news/60673/tamil-news/Why-raid-at-Kavya-Madhavans-office.htm
[7] Manorama.online, Actress attack: police find memory card from Pulsar Suni’s friend’s house, Tuesday 28 February 2017 10:39 PM IST.
[8] http://english.manoramaonline.com/news/kerala/actress-attack-pulsar-suni-phone-memory-card-sim-card.html
[9] Manorama.online, Crucial evidence? Cops find memory cards from house Pulsar Suni visited on night of crime, Saturday 25 February 2017 06:02 PM IST
http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html
[10] http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html
[11] India Samvad, Bhavana abduction case gets ugly as pics of actor Dileep with accused goes viral, 3 July 2017, 03:06 PM
[12] The alleged involvement of Malayalam superstar Dileep in the infamous abduction and molestation case of actress Bhavana is getting support from the recently surfaced pictures of him with accused Pulsar Suni. The photos surfaced online and quickly went viral on social media. These pictures were then aired on most of the TV channels adding fuel to the speculations that Dileep might be a part of the conspiracy of abduction and molestation of the actress. In the viral picture, Pulsar Suni is seen in a selfie at the shooting locations of one of the films starring Dileep in the lead role. On the other hand, Dileep has maintained his stance that he does not even know anyone by the name Pulsar Suni.
http://www.indiasamvad.co.in/entertainment/photos-of-dileep-with-pulsar-suni-goes-viral-22905
குறிச்சொற்கள்:காரில் கடத்தல், காவ்யா, காவ்யா மாதவன், சுனில், திலிப், திலீப், பல்சார் சுனி, பல்சார் சுனில், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாவனா, மஞ்சு, மஞ்சு வாரியார், மலையாளம்
அர்த்த ராத்திரி, ஆண்-ஆண் உறவு, ஆபாச வீடியோ, ஆபாசம், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, காரில் கடத்தல், காவ்யா, காவ்யா மாதவன், திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், திலிப், திலீப், பலாத்காரம், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாவனா, மலையாளம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 8, 2017
நடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)!

சினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].

திராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா?: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.

திராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.

ராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா?: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.
- பொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.
- சட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.
- பெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.
- அவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].
- ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.
- தங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.
- விவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.
- தாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.
- இவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
- ஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.
© வேதபிரகாஷ்
06-04-2017

[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.
[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.
[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.
[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.
[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.
[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.
[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]
[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.
குறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து
அசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 15, 2017
நடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை!

நடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].

பெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.

தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9]. இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.

கஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].

நடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
© வேதபிரகாஷ்
15-03-2017.

[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி!, ஞாயிறு, 12 மார்ச் 2017 (13:23 IST)
[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-film-opportunities-in-the-field-of-cinema-doing-adjustment-true-actress-kasthuri-117031200006_1.html
[3] “People have an obsession in the US about looking a certain way after pregnancy. They have Jessica Alba and Beyonce as their role model and want to have the same body structure. They cannot accept their body with stretch marks or sagging breasts. I had just given birth to my son and wanted to be part of the shoot,”
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms
[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் – நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)
[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)
[6] http://news.lankasri.com/entertainment/03/121121
[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017 10:46:AM
[8] http://tamil.adaderana.lk/news.php?nid=89069
[9] http://www.tamil.webdunia.com/article/star-interview/actress-kasthuri-share-her-experience-117031300009_1.html
[10] Times of India, Casting couch in filmdom isn’t a myth, it does exist, Mrinalini Sundar | TNN | Mar 12, 2017, 01.00 AM IST.
[11] http://www.gulte.com/movienews/56528/Telugu-Hero-Asked-Her-To-Sleep-With-Him
[12] https://www.mirchi9.com/movienews/radhika-apte-kasthuri-hinting-person/
[13] தி.இந்து, சக நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசவில்லை: கஸ்தூரி, Published: March 14, 2017 12:19 ISTUpdated: March 14, 2017 12:19 IST
[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/article9583040.ece
குறிச்சொற்கள்:கற்பு, கஸ்தூரி, காஸ்டிங் கவுச், நடிகை, நடிப்பு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கை அறைக் காட்சிகள், படுக்கைக்கு வா, படுக்கையறை, படுக்கையறை பேச்சு
அந்தப்புரம், அமெரிக்கா, அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசம், ஆப்தே, இச்சை, இடுப்பு, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கமல் ஹஸன், கற்பு, கவர்ச்சி, கஸ்தூரி, காம சூத்ரா, காமம், காஸ்டிங் கவுச், கிளர்ச்சி, கொக்கோகம், படு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கையறை பேச்சு, படுத்தல், படுத்தால் சான்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 5, 2017
இத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா?

நடிகை–நடிகர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏன்?: திரைப்படத் துறை எப்படி போனால் நமக்கென்ன, நடிகை-நடிகர்கள் ஒழுக்கங்கெட்டால் நமக்கென்ன என்று இருக்கலாமா என்றால், அவர்கள் தான் சாதாரண மக்களின் வாழ்க்கைக்களை பலவிதத்தில் பாதிக்கிறார்கள். தினக்கூலி வேலையாள், வேலையில்லாத பட்டதாரி, நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்கள், ஓய்வூதியக் காரர்கள், வெட்டிப் பேச்சு வீரர்கள், சோம்பேறிகள் என்று எல்லோருமே ரூ.50. 100, 200/- என்று காசு கொடுத்து படம் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, நடிகை-நடிகர்களை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அழைத்து, பேச வைக்கின்றனர். கற்பு முதல் விபச்சாரம் வரை, தொலைக்காட்சி விவாதங்களில் கூப்பிட்டு கருத்து கேட்டு, பார்வையாளர்களின் மீது திணிக்கின்றனர். இவ்வாறு சமூகத்தில் பலவழிகளில், அத்துமீறியோ அல்லது வேறுவகையிலோ நுழைவதால், அவர்களின் நடவடிக்கைகளை, ஒழுக்கம் அல்லது ஒழுக்கமில்லாத செயல்களை கண்காணித்து, விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது.

நள்ளிரவு பார்ட்டிகளில் திருமணம் ஆன நடிகை–நடிகர்கள் கலந்து கொள்வது ஏன்?: எங்கேயோ நள்ளிரவில் நடந்த பார்ட்டியில், தனுஷ் அல்லது தனுஷின் “பாடிகார்ட்”, பாடகி சுசித்ராவின் கையை வலுக்கட்டாயமாக, பிடித்து இழுத்ததால், காயம் ஏற்பட்டதாக, சுசித்ரா டுவிட்டரில் போட்டோவை வெளியிட்டார். நடிகை-நடிகர்கள் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஏன் இப்படி நள்ளிரவில், வீட்டின் படி தாண்டி சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும், குடித்து கும்மாளம் போட்டு, ஆடி அலைய வேண்டும். நடிகையுடன், நடிகன் கட்டிப் பிடித்து ஆடவேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும்………இவற்றை ஓட்டலில், ரிசார்ட்டில்,…….பலபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், போட்டோ-வீடியோக்களும் எடுக்கிறார்கள், ……என்றெல்லாம் தெரியாமலா அவ்வாறு ஈடுபடுகிறார்கள். பிறகு, அவரை பொது மக்களின் பார்வைக்கு வரும் போது, ஏன் வெட்கப்பட வேண்டும், ஏன் தவிர்க்க முயல வேண்டும், நான் அது இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை….என்றெல்லாம் சொல்ல வேண்டும்? ஒன்று அவ்வாறே, அவர்களின் உலகத்தில் இருந்து விட வேண்டும், பொதுமக்களின் பிரச்சினகளில் மூக்கி நுழைக்கக் கூடாது. இல்லை, பொதுமக்களுக்கு அறிவுரை கூற வருவதாக இருந்தால், ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

சுசித்ராவின் டுவிட்டர் ஆபாசப் படங்கள்: 03-03-2017 அன்று முழுவதும் முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய சுசித்ரா, அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார். அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் போக, செல்வராகவன் – ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ட்விட்டர் தளத்தின் நிகழ்வுகள் குறித்து சுசித்ரா, “முதலில் ட்விட்டர் கணக்கை மூடுங்கள் என சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு மூடிவிட்டால், யார் என் கணக்கில் பதிவிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பிறகு இது சகஜமான ஒன்றாகிவிடும். இதனால் நானும் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்[1]. இந்நிலையில், தற்போது சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார்[2]. இதனால் ஏற்பட்டு வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

சுசித்ரா மறுத்தது, தனது டுவிட்டர் ஹாக் செய்யப்பட்டது என்று அறிவித்தது: சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா. உச்சகட்டமாக 03-03-2017 அன்று தனுஷ் – த்ரிஷா அந்தரங்கமாக உள்ள படங்களை வெளியிட்டார். தனுஷுடன் டிடி எனும் திவ்யதர்ஷினி கும்மாளமடிக்கும் படங்களையும் வெளியிட்டார். அடுத்து ஆன்ட்ரியா – அனிருத் படங்களும் வெளியாகின. இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்[3]. ஆனால், சஞ்சிதா செட்டி அது நான் இல்லை என்று மறுத்துள்ளார்[4]. இந்தப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகு, அவரது ட்விட்டர் பக்கத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்காமல், அவரைப் பின் தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி செட்டிங்ஸை மாற்றியுள்ளார். அடுத்து தனுஷ் – அமலா பாலின் லீலைகளை திங்கள் கிழமை 06-03-2017 அன்று வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார் சுசித்ரா[5]. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அனுமதித்தால் மட்டுமே அந்தப் பக்கத்தில் இணையும் வகையில் செட்டிங்ஸை மாற்றி வைத்துள்ளார் சுசித்ரா[6]. சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது சுசித்ராவின் டிவிட்டர் தளம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார்[7]. அதேநேரம், இன்று காலைவரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின. இப்பொழுது, அந்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது[8].

சுசித்ரா கார்த்திக் என்று இன்னொரு டுவிட்டர் முளைத்தது: பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானதில் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்ட திரையுலகினர், இப்போது பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். சுசித்ரா கார்த்திக் (Suchitra_Karthi) என்ற புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அமலா பால், பாபி சிம்ஹா, டிடி ஆகியோரின் அந்தரங்கப் படங்களை பதிவேற்றியுள்ளனர்[9]. இந்த நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு முன் புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில், சுசித்ரா புகைப்படத்துடன் உள்ள அந்தப் பக்கத்தில் ஏகப்பட்ட ஏ சமாச்சாரங்கள். ஞாயிற்றுக்கிழமை சின்மயி – அனிருத், திங்கள் கிழமை தனுஷ் – அமலா பால், செவ்வாய்க்கிழமை தனுஷ் – பார்வதி நாயரின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன் என்ற ட்விட்டும் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. சினிமா உலகின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று இன்னொரு பதிவு கூறுகிறது[10]. ஒரு ஆபாச வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இன்னொரு ட்வீட்டில் நடிகர் பாபி சிம்ஹா போல ஒருவர் இளம் நடிகையுடன் (மான் கராத்தேயில் நடித்த ஒரு நடிகை) படுக்கையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு பதிவில் டிடியும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடித்தபடி இருக்க, அதற்கு பவர் பாண்டி என தலைப்பிட்டு, பதிவேற்றியுள்ளனர். பவர் பாண்டி என்பது தனுஷ் இயக்கும் புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டிடியும் நடிக்கிறார். இன்னும் என்னென்ன படங்கள், வீடியோக்கள் அரங்கேறப் போகின்றனவோ என அச்சத்தில் உள்ளனர் சினிமா பிரபலங்கள்.

ஆங்கில ஊடகங்களின் உசுப்பிவிடும் போக்கு: ஆங்கில ஊடகங்களும் இவ்விவரங்களை அள்ளிவீசி அலசியுள்ளன[11]. ஏதோ “விக்கி லீக்” போன்று “சுசித்ரா லீக்” என்று பெயரிட்டு, புகைப்படங்களோடு செய்திகளை வெளியிட்டுள்ளன[12]. அவ்வாறு கசிந்ததால், அவர்களுக்கு ஏதாவது வெட்கம், மானம், சூடு, சொரணை வந்து வருத்தப் பட்டார்களா என்று தெர்விக்கவில்லை. ஆனால், எல்லாமே பொதுமக்களை உசுப்பிவிடும் போக்கில் தான் உள்ளனவேயன்றி, அந்த ஒழுக்கம் கெட்ட நடிகை-நடிகர்களின் போக்கைக் கண்டித்தல், அறிவுரை கூறுதல் என்றில்லாமல் பொழுது போக்கு ரீதியில் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்[13]. எதனையும் வியாபாரமாக்கும் போக்குதான் புலப்படுகிறது[14]. தமிழக ஊடகத்தினர் சிலரும் அவற்றை காப்பியடித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். காசு கொடுத்து, சினிமா பார்ப்பது போல, காசு செலவழித்து, இவை போடும் செய்திகளைப் படிக்க வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
05-03-2017

[1] தி.இந்து, ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் சுசித்ரா, Published: March 4, 2017 13:13 IST; Updated: March 4, 2017 13:13 IST
[2] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/article9570858.ece
[3] தினமலர், அது நான் இல்லை – சஞ்சிதா செட்டி, 04 மார்ச், 2017: 17.54 IST.
[4] http://cinema.dinamalar.com/tamil-news/56897/cinema/Kollywood/Sanchita-shetty-clarify-about-controversy-photo.htm
[5] தமிழ்.பிளிமி.பீட், அடுத்து தனுஷ் – அமலா பால் லீலையை வெளியிடுவேன்! – சுசித்ராவின் அடுத்த குண்டு, Posted by: Shankar, Published: Saturday, March 4, 2017, 11:59 [IST].
[6] http://tamil.filmibeat.com/news/suchithra-s-next-release-is-dhanush-amala-paul-private-pic-045053.html
[7] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகர், நடிகைகள் அந்தரங்க போட்டோக்கள் வெளியிட்ட பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கு திடீர் நீக்கம், By: Veera Kumar, Published: Saturday, March 4, 2017, 13:35 [IST].
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-suchitra-karthik-twitter-account-has-been-removed-275808.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, அடங்காத சுசிலீக்ஸ்… புதிய ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் ஆபாசப் படங்கள் பதிவு! #SuchiLeaks, By: Shankar, Published: Saturday, March 4, 2017, 16:17 [IST].
[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/another-page-created-the-name-suchithra-karthik-twitter-suchileaks-275824.html
[11] Hindustan Times, Singer Suchitra reveals private party pics of Dhanush and other Tamil celebs, Updated: Mar 03, 2017 16:44 IST.
[12] http://www.hindustantimes.com/regional-movies/shocking-singer-suchitra-reveals-private-party-pics-of-tamil-celebs/story-ibKsjO3sWD7HqWD0RqW3HM.html
[13] Firtpost, RJ Suchitra tweets Dhanush, Anirudh Ravichander’s private photos: What’s the story behind #SuchiLealks?, Hemanth Kumar, Mar, 04 2017 15:40:30 IST, Published Date: Mar 04, 2017 03:40 pm | Updated Date: Mar 04, 2017 03:40 pm
[14] http://www.firstpost.com/entertainment/rj-suchitra-tweets-dhanush-anirudh-ravichanders-private-photos-whats-the-story-behind-suchileaks-3314940.html
குறிச்சொற்கள்:அநிருத், அனிருத், அனுயா, அன்சிகா, அன்ஷிகா, அமலா, அமலா பால், ஆண்ட்ரியா, கார்த்திக், சஞ்சிதா, சஞ்சிதா ஷெட்டி, சுசித்ரா, சுசித்ரா கார்திக், டிடி, தனுஷ், திவ்யதர்ஷினி, மோட்வானி
அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அநிருத், அனிருத், அனுயா, அனுஷ்கா, அன்சிகா, அமலா, அமலா பால், அர்த்த ராத்திரி, ஆண்-ஆண் உறவு, ஆபாசம், உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, கட்டிப் பிடிப்பது, குஷ்பு, சஞ்சிதா, சண்டை, சுசித்ரா, சுசித்ரா கார்திக், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செல்வமணி, டிடி, தனுஷ், திவ்யதர்ஷினி, நடு இரவு, நடு ராத்திரி, ஹன்சிகா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 30, 2017
ராணி பத்மாவதியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி, காமுகன் கில்ஜியைத் தூக்கிப் பிடிக்கும் படத்தை இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்!

ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்ப்புத் தெரிவித்தது: இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்[1]. இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள்[2]. சரித்திரத்தைத் திரித்து படம் எடுப்பதை எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா கண்டனம் தெரிவித்தனர். பன்சாலி இப்படத்தின் கதை கற்பனை என்று சொல்லிக்கொண்டு, சரித்திர ஆதாரமில்லாமல், காட்சிகளை எடுப்பதாக அறிந்ததால், இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் சித்தூர்கர் கோட்டையில் நடந்ததபோது ஜெய்ப்பூரில் உள்ள ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டது[3]. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4]. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார். போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.

நடிக–நடிகையர்களுள் கருத்து வேறுபாடு: ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது எனும் தினத்தந்திக்கு[5]சரித்திரம் என்னவென்பது தெரியாதா என்ன?. ”ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?” என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்[6]. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல இந்தி டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, யாதாவது ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு, முற்போக்கு முகமூடியுடன் கலாட்டா செய்ய வேண்டும் என்று பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டு வேலைசெய்வது தெரிகிறது. சகிப்புத் தன்மை என்ற போர்வையில், 2015ம் வருடம் கலாட்டா செய்தனர். ஆனால், அவர்களே இப்பொழுது, இத்தகைய திரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை: பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார்[7]. இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்[8]. இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவுகாட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால், ஏற்கெனவே, டிரைலர் போன்ற காட்சிகளில் அத்தகைய காட்சிகள் இருப்பது, ஊடகங்களில் அந்து விட்டன. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களின் கற்பும் காக்கப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக ஜௌஹர் என்ற முறையில் தீக்குளித்தனர் ராஜபுதன பெண்கள். ஆகவே, அவர்களது தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதை, எந்த இந்தியனும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எனவே, பொய் சொல்லி இப்படக்காட்சிகளை உண்மையான சரித்திர இடங்களில் படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலுக்கு மற்ற நடிகை-நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[9]. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்[10].
அலாவுத்தீன் கில்ஜி – சதி, ஜோஹர் போன்றவற்றில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல்: அலாவுத்தீன் கில்ஜியால் ராஜபுதன பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் முகமதிய கொடுங்கோலர்களிடமிருந்து தங்களது மானத்தை, கற்ப்பைக் காத்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக தீக்குளித்து இறந்தனர். அம்முறை “ஜோஹர் / ஜௌஹர்” எனப்பட்டது. அழகான இளம்பெண்கள் எப்படி தீக்குண்டத்தில் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்வது, உடல்கள் கருங்கட்டைகளாக, எலும்புகளாக மாறுவது கண்டு முகமதியர்கள் திகைத்தனர். மனரீதியில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கணவனுக்காக உயிர்விட்ட மனைவி சதியாக, சதிக்கடவுளாக மாற்றப்பட்டாள். இப்பெண்கள் உயிர் விட்ட இடங்கள், அவர்களது அஸ்தி-எலும்புகள் புதைக்கப்பட்ட இடங்கள் மற்றும் தீக்குண்டங்கள் முதலியனவும் புனித இடங்களாக மாறின. ஒவ்வொரு மாதம் மற்றும் ஆண்டு நினைவு நாட்களில் மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்து சிரார்த்தம் / அஞ்சலி செய்தனர். இவ்வாறு முகமதியர் காலத்தில் காமத்திற்கு இலக்கான பெண்கள், தெய்வமாக்கப்பட்டார்கள், தெவீகச் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள்.
இந்திய சரித்திரமும், திரிபுவாதமும், பொய்மாலங்களும்: ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலேயர், இந்திய சரித்திரத்தை திரித்து எழுதினார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இடதுசாரி-மார்க்சீய சரித்திர வரைவியல் போர்வையில், ஜே.என்.யூ, தில்லி, அலிகர் போன்ற பல்கலைக்கழக சரித்திராசிரியர்கள் அதே போக்கைக் கடைப்பிடித்து, சரித்திர புத்தகங்களை எழுதினர், இன்றும் எழுதி வருகின்றனர். ஆனால், இணைதளம் போன்ற வசதிகளினால், சரித்திர ஆவணங்கள், மூல நூல்கள் முதலியன இன்று பலரும் பார்க்க, படிக்க, சரிபார்க்க ஏதுவாகி விட்டது. இதனால், உண்மை எது பொய் எது என்பது, இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஏனெனில், அவர்கள் சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து, அங்கெல்லாம் சிதைக்கப் பட்ட சிற்பங்கள், இடிபாடுகளுடன் கிடக்கும் கோவில்கள், மசூதி எனப்படும் கட்டிடங்கள் கோவில் தூண்கள், சிற்பங்கள் முதலியவற்றுடன் இருப்பது, அவர்களது, அறிவைத் தூண்டுவதால், படித்து உண்மையினை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். தாம் படித்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களும் தெரிய ஆரம்பித்தன. இதனால், இத்தனை ஆண்டுகளாக பொய்யான சரித்திரம் தம் மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு விட்டனர். அதனால் தான், அவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான், இந்த பத்மாவதி திரைப்படம், ராஜஸ்தான் மக்களை பாதித்துள்ளது. அதனால் தான், எதிர்த்து ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எதிர்த்துள்ளது. பிடிவாதமாக அந்த இயக்குனர், தொடர்ந்து தனது வேலையைத் தொடர்ந்ததால், தாக்கியுள்ளதும் தெரிகிறது.
© வேதபிரகாஷ்
30-01-2017

[1] தினமலர், பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம், பதிவு செய்த நாள். ஜனவரி.29, 2017. 06.09.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1699753
[3] தினகரன், பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு, 2017-01-28@ 11:40:08
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=275617
[5] தினத்தந்தி, தீபிகா படுகோனே நடித்த படப்பிடிப்பில் ரகளை டைரக்டர் தாக்கப்பட்டார், ஜனவரி 28, 04:31 PM.
[6] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/01/28163112/Padmavati-row-Bwood-slams-heinous-attack-on-Bhansali.vpf
[7] தமிழ்.இந்து, ‘பத்மாவதி‘ படப்பிடிப்பில் பன்சாலி மீது தாக்குதல்: இந்தி திரையுலகினர் கடும் எதிர்ப்பு, Published: January 28, 2017 14:23 ISTUpdated: January 28, 2017 14:49 IST.
[8]http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9507205.ece
[9] விகடன், இயக்குனர் பன்சாலிக்கு அடி: கொதித்தெழுந்த பாலிவுட், Posted Date : 18:45 (28/01/2017); Last updated : 18:49 (28/01/2017
http://www.vikatan.com/news/india/79035-bollywood-stars-condemn-the-attack-on-sanjay-leela-bansali.art
[10] http://www.vikatan.com/news/india/79035-bollywood-stars-condemn-the-attack-on-sanjay-leela-bansali.art
குறிச்சொற்கள்:அலாவுத்தீன், உடன்கட்டை, கான், கார்னி சேனா, கில்ஜி, சஞ்சய் லீலா பன்சால், சதி, சாஹித் கபூர், சாஹித்கபூர், சித்தூர், ஜோஹர், ஜௌஹர், தீபிகா, தீபிகா படுகோனே, படுகோனே, பட்கோன், பத்மினி, பன்சால், பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர் சிங், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா
அங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அலாவுத்தீன் கில்ஜி, ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி, இந்து, இஸ்லாம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, கார்னி சேனா, கொக்கோகம், கொங்கை, சாஹித்கபூர், சித்தூர், சித்தூர் ராணி, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், செக்ஸ், செக்ஸ் தூண்டி, தீபிகா படுகோனே, பத்மாவதி, பிரியங்கா சோப்ரா, மகேஷ்பட், மாலிகாபூர், ரன்வீர்சிங், ராம்கோபால் வர்மா, ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 19, 2016
குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா? நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா?:
நடிகைகள் ஒவ்வொரு செனல்களிலும் குடும்ப பஞ்சாயத்து செய்து வைப்பது: விஜய் டிவியின் “கதையல்ல நிஜம்” தொடங்கி இன்றைய சன்டிவியில் “நிஜங்கள்” வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. என்னத்தான் நிஜம், உண்மை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவர்கள் “குடும்பம்”, “உறவு” முதலிய காரணிகளில் போலியாக இருப்பதால், அந்நிகழ்ச்சிகள் வேடிக்கைக்காக, பொழுது போக்கிற்காக அமைகிறதே அன்றி, “உண்மைக்காக” – “நிஜத்திற்காக” யாரும் பார்ப்பதாக இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது[1]. எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது[2]. அதிகம் அழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது. ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சின்னிமா நடிகைகளும் ஒன்றாவார்களா?: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா? நடிகை என்ற தகுதி மட்டும் போதுமா?
லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்[3]: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்தார். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்தினார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்தார். இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்[4]. இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால், போன உயிர் வராதே?

20 வயது பெண், 23 வயது திருநங்கையை கல்யாணன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததை கண்டித்த நடிகை கீதா: நடிகை கீதா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர். 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா? என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார். மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6].
இவ்விசயத்தில் கீதா சொன்னதில் தவறில்லை: 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கல்யாணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தது தவறு என்று கண்டிக்க, “ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா?,” என்று அந்த பெண்ணிடம் நிதர்சனமாக கேட்டதில் தவறில்லை. ஏனெனில், திருமங்களைகள், கல்யாணம் செய்து கொண்டால், குழந்தை பெறமுடியாது. அதிலும், பெண், திருநங்கையை திருமணம் செய்வது என்பது அபத்தமானது. அப்பெண் இக்காலத்தில் ஏதோ புரட்சிகரமாக செய்ய வேண்டும் என்றா ரீதியில், குழப்பத்தில் மேற்கொண்ட முடிவு என்று சொல்லலாம். மேலும், டிவி-ஷோக்களில் அவ்வாறு பங்கு கொள்வது, விளம்பரத்திற்காக என்றும் சொல்லலாம். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறியது சரியாகத்தான் உள்ளது.
சினிமா நடிகைகளை வைத்து, பேட்டி கண்டு, அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போல டிவி-செனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்களா?: சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா? ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா? டிவி-செனல்கள் முன் வருவார்களா? இல்லை அந்த நடிகை-நடிகர்கள் முன் வௌவார்களா?
© வேதபிரகாஷ்
19-11-2016

[1] பிளிமி.பீட்.தமிழ், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, Posted by: Mayura Akilan, Published: Wednesday, October 5, 2016, 9:01 [IST]
[2] http://tamil.filmibeat.com/television/lakshmi-ramakrishnan-kushboo-tv-reality-show/slider-pf50425-042581.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன், By: Karthikeyan, Published: Sunday, September 4, 2016, 1:55 [IST]
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/lakshmy-ramakrishnan-explanation-about-landed-controversy-261945.html
[5] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)
[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-you-can-have-relationship-after-marriage-actress-geetha-in-telugu-tv-program-116110700032_1.html
[7] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)
குறிச்சொற்கள்:ஊர்வசி, குடும்ப நீதிமன்றம், குடும்பம், குஷ்பு, சன் டிவி, சினிமா, பரஸ்பர விவாகரத்து, பெண், பெண்ணியம், லக்ஷ்மி, வாழ்க்கை, விஜய் டிவி, விஜி, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து
அசிங்கம், அநாகரிகம், அந்தஸ்து, ஆணவம், ஆண், ஆண்-ஆண் உறவு, ஊடகம், ஒழுக்கம், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், குட்டி பத்மினி, குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், செல்வமணி, தாய், தாய்மை, தாலி, திருநங்கை, திருமண பந்தம், திருமண முறிவு, துணைவி, நடத்தை, நடிகை, புகார், மனைவி, மனைவி மாற்றம், விஜய் டிவி, விஜி, விஜி சந்திரசேகர், வியாபாரம், விளம்பரம், விவாக ரத்து, விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 19, 2016
டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

actresses-cannot-solve-family-problems
மக்கள் தங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் நடிகைகள் தீர்த்து வைப்பார்களா?: மக்கள் தங்களது உறவுகளை, தாம்பத்திய முறைகளை, தங்களால் பேண முடியவில்லை என்பதும், சமூகம் பலவழிகளில் சீர்கெட்டு கிடக்கும் போது, குடும்பத்து பெரியவர்கள், பெற்றோர், இல்வாழ்க்கை நலன் விழையும் மற்றோர், உற்ற நண்பர்கள் முதலியவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பதும், அந்நிலைகளில் இவர்கள் சரிசெய்ய முடியாததை, சினிமா நடிகைகள் சரிசெய்து வைக்கிறார்கள் என்பது போன்ற நிகழ்ச்சிகளை டிவி-செனல்கள் காட்டி வருவது மிகக் கேவலமாகும். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது, லஞ்சம் வாங்குபவன் யோக்கியன் போல லஞ்சம் வாங்காதே என்று பிரச்சாரம் செய்வது, விபச்சாரிகள் கற்பைப் பற்றி விவாதிப்பது-பரிந்துரைப்பது போன்றவை எல்லாம் கேவலத்திலும் கேவலமான விசயங்கள். ஆனால், அத்தகையவை மேடைகளில் நடந்து வந்தன. இப்பொழுது, டிவி-செனல்களில் நடந்து வருகின்றன.

When actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs
நடிகைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் யோக்கியதை, அதிகாரம் உள்ளதா?: நடிகைகளின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கக் கூடாது என்று கூட சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கிறேன் என்று டிவி-ஷோக்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரீதியில் இறங்கி விட்ட போது, அதைத் தட்டிக் கேட்கத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதை நடத்தும் நடிகைகள், தங்களை ஏதோ பெரிய ரிஷி-முனி, நீதிபதி, எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தீர்க்கதரிசி என்பது போல பாவித்துக் கொண்டு, கலந்து கொள்பவர்களுக்கு, ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது, திட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு யார் அத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது, அல்லது கலந்து கொள்பவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லையா, என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

Ramba-gives-petition-in-the-family-court
குடும்ப நீதிமன்றங்களை அவமதிக்கும் டிவி-நிகழ்ச்சிகள்: குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சிலருக்குத்தான் தெரிகிறது, தெரிய வருகிறது. அங்கு நீதிபதிகள் சட்டதிட்டங்களில் வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுருத்தப்படுகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், டிவிசெனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, பார்ப்பவர்களுக்கே சங்கடமாக இருக்கிறது. சில நேரங்களில், அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க வருகிறார்களா அல்லது விளம்பரத்திற்காக வருகின்றானரா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா அல்லது டிவிசெனல்காரர்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றானரா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

urvasi-actress-spotted-drunk
விவாகரத்து பெற்று மறுமணம் செய்து, குடிக்கும் நடிகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது: தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் “கைரளி” செனலில் “ஜீவிதம் சாட்சி” என்று நடத்தி வருகிறார்[1]. நடிகை ஊர்வசி மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 9, 2016 அன்று விசாரணைக்கு வருகிறது[2]. செபின் என்பவர் “ராயல் காவடியர் பொரட்க்ஷன் போர்ஸ்” [Royal Kavadiyar Protection Force president Shefin] என்ற அமைப்பின் தலைவரான இவர் தான் ஊர்வசியின் மீது புகார் கொடுத்தார்[3]. டிவி நிகழ்ச்சியின் மீது குடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்[4]. 2015ல் கேரள மாநில சட்டசபை பெண்-ஊழியர்கள் கூட்டத்தில், குடித்த நிலையில் பேசும் போது, பிரச்சினை ஏற்பட்டதால், இவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்[5]. மனோஜ் கே. ஜெயன் [Manoj K. Jayan] என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு எட்டாண்டு வாழ்ந்தார். 2008ல் விவாகரத்து செய்து கொண்டு, 2013ல் சென்னையைச் சேர்ந்த பில்டர் சிவபிரசாத் [Chennai-based builder Sivaprasad] என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

Urvasi-actress-blaming-for-her-drinking-habit
ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி[6]. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்[7]. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம்[8]. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[9]: “நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்று கேட்டுள்ளது சரியான கேள்விதான்[10]. ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது[12]. இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்[13]. அதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[14]. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது[15].
குஷ்புவும் குடும்ப பஞ்சாயத்து செய்ய வந்து விட்ட நிலை: தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி / அதிமுக தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார்[16]. இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்[17]. குஷ்புவைப் பொறுத்த வரையில், பெண்களின் விசயங்களில், குறிப்பாக பெண்களின் கற்பு போன்ற விவகாரங்களில் சர்ச்சைகள் நிறைந்த கருத்துகளையே வெளியிட்டார். வழக்குகளும் போடப்பட்டன. ஆனால், அரசியல் ஆதரவு இருந்ததால் தப்பித்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தன்னுடைய அரசியல் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இருப்பினும், குடும்ப-பாங்கானவர்கள் குஷ்புவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. நடிகை என்றுதான் பார்க்கின்றனரே அன்றி, வேறெந்த விதத்திலும் பார்ப்பதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மற்ற நடிகைகளுக்கும் பொறுந்தும்.
© வேதபிரகாஷ்
19-11-2016

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ
[1] தினமலர், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை ஆபாசமாக திட்டுவதாக புகர்: ஊர்வசிக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ், November 18, 2016, 11:58 [IST].
[2] http://cinema.dinamalar.com/other-news/53207/cinema/otherlanguage/Human-Rights-Commission-seeks-explanation-for-actress-Urvashi.htm
[3] english.manoramaonline, ‘Urvashi was drunk on TV show’: Here’s what landed the actor in trouble, byOnmanorama Staff, Friday 18 November 2016 09:42 AM IST.
[4] The complaint, filed by Royal Kavadiyar Protection Force president Shefin, also accused Urvashi of appearing on the TV show drunk.
http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/urvashi-drunk-misbehavior-tv-show-kerala-human-rights-commission.html
[5] Last year, the actor addressed an event organized by a section of Kerala assembly’s women employees in a drunken stage and the officials had to pack her off.
[6] மக்கள்முரசு, ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?, Posted on November 18, 2016.
[7] http://makkalmurasu.com/actress-urvashi-trouble-rude-behaviour-talk-tv-show/
[8] தமிழ்.வெப்துபனியா, அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST).
[9] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actor-urvashi-misbehaves-during-tv-show-kerala-rights-panel-seeks-report-116111800003_1.html
[10] பிளிமி.பீட்.தமிழ், ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?, Posted by: Siva, Published: Thursday, November 17, 2016, 17:54 [IST].
[11] http://tamil.filmibeat.com/heroines/urvashi-misbehaves-on-television-show-043348.html
[12] தினகரன், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ், Date: 2016-11-18@ 00:32:51.
[13] தமிழ்.ஒன்.இந்தியா, மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, . By: Essaki, Published: Friday, November 18, 2016, 14:34 [IST].
[14] http://tamil.oneindia.com/news/india/actress-urvashi-trouble-267578.html
[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=259544
[16] தமிழ்நாடு.நியூஸ், சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு, OCTOBER 21, 2016
[17]http://newstnn.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/
குறிச்சொற்கள்:ஊர்வசி, கணவன், கணவன் மாற்றம், குடும்பம், சமரசம், சமாதானம், சினிமா, துணைவி, பஞ்சாயத்து, பெண், பெண்ணியம், மனைவி, மனைவி மாற்றம், ரஜினிகாந்த், ரோஜா, லக்ஷ்மி, லட்சுமி ராமகிருஷ்ணன், வாழ்க்கை, விஜி, விஜி சந்திரசேகர், விவாக ரத்து, விவாகம், விவாகரத்து
அசிங்கம், அடுத்தவர், அமலா பால், அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, உறவு, ஊடகம், எச்சரிக்கை, ஒழுக்கம், ஒழுங்கீனம், குஷ்பு, சினிமா, சேர்ந்து வாழ்தல், தற்கொலை, நடிகை, நாகரிகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒக்ரோபர் 31, 2016
“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்!

குறும்படம் தயாரிப்பில் இறங்கிய தோழிகள்[1]: கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார். முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார்[2].
திகில் படம் போர்வையில் ஓரின சேர்க்கை கொள்கையை ஆதரிக்கும் போக்கு: இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை. இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.
பழக்கம் போல விமர்சனம் இத்யாதிகள்: இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
ஓரினசேர்க்கை எப்படி வரலாம் – எப்படியும் வரலாம்!: ஒரே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிற ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வருகிறது[3]. இருவரும் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். நெருக்கமாகவும் நடித்திருக்கிறார்கள்[4]. இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான லெஸ்பியன் காதல், நெருக்கமான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்ற கூறிவிட்டனர்[5]. இதனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது[6]. “ஆண்களே நடித்திராத படத்திற்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்பதற்காக ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புதாக ஜாலியாக சில காட்சிகள் வைத்தோம். ஒரு டூயட்டையும் வைத்தோம். இவை எல்லாம் காமெடிக்காகத்தான் மற்றபடி படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை.
இயக்குனரின் வாதம்: இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறியதாவது[7]: பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு பற்றியும், ஆண்களுக்கு இடையிலானா ஹோமோ செக்ஸ் பற்றியும் இப்போது நிறைய படங்கள் வந்திருக்கிறது. பல படங்கள் விருதும் வாங்கி உள்ளது. சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் அரவிந்த்சாமி ஹோமோ செக்ஸ் மேனாக நடித்திருந்தார். ஆனாலும் எனது படத்தில் லெஸ்பியன் உறவு பற்றி சித்தரிக்கவில்லை. பெண்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண்ணுக்கு எல்லை மீறிய ஈர்ப்பு வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். பிறகு பெற்றவர்கள் அவர்களை கண்டித்து அது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது பெண் ஆணோடுதான் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்த அவர்களும் திருந்துகிறார்கள். இப்படித்தான் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆபாசமான காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை[8].
இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்[9]. ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு[10].
சென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட படங்கள் மற்றும் காரணங்கள்[11]: இந்தியாவில் செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி காலத்தில் கிஸ்ஸா குர்சி கா என்ற படம் அவரை விமர்சிக்கிறது என்ற காரணத்திற்காகவே அழிக்கப் பட்டது. தாராளமயமாக்கல், ஹனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை வந்ததும், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் முதலியோர் ஏதோ உரிமை, எண்ண்வுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, ஓரின சேர்க்கையாளர்களின் உரிமை, கொள்ளைக்காரகளின் உரிமை, தீவிரவாதிகளின் உரிமை, பயங்கரவாதிகளின் உரிமை,……………என்ற ரீதியில் றாங்கி விட்டார்கள். அந்நிலையில் உருவானதுதான், இந்நிலை.
1. Bandit Queen (1994)
|
1. கொள்ளைக்கார ராணி |
அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. |
2. Fire (1996)
|
2. நெருப்பு |
லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு பெண்கள்]. |
3. Kama Sutra – A Tale Of Love (1996)
|
3.காம சூத்திரம் – உண்மையான காதல் கதை. |
ஆபாசம், பாலியல் முதலிய காட்சிகள். [முலைகளைத் தொடுவது] |
4. Urf Professor (2000)
|
4. யு.ஆர்.எப். புரபசர். |
அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறையை நியாயப் படுத்தல். |
5. The Pink Mirror (2003)
|
5. ஊதா நிற கண்ணாடி. |
லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு ஆண்கள்]. |
6. Paanch (2003)
|
6. ஐந்து. |
அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறை, போதை மருந்து முதலியவற்றை நியாயப் படுத்தல். |
7. Black Friday (2004)
|
7. கருப்பு வெள்ளிக்கிழமை. |
மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து பின்னிய சினிமா |
8. Parzania (2005)
|
8. பூமியின் மீது நரகம். |
|
9. Sins (2005)
|
9. பாவங்கள். |
ஒரு கத்தோலிக்கப் பாதிரியின் பாலியல் விவகாரத்தைச் சித்தரிக்கிறது. |
10. Water (2005)
|
10. நீர். |
வாரணாசி ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை அவதூறு செய்யும் விதத்தில் சித்தரித்தது. |
11. Firaaq (2008)
|
11. முரண்பாடு. |
2002 குஜராத் கலவரம் பற்றியது, பாரபட்சமானது. கதாநாயகி இந்து-முஸ்லிம்களை புண்படுத்துவது போன்ற வசனக்கள் பேசுவது. |
12. Gandu (2010)
|
12. கன்டு. |
பாலியல் மற்றும் நிர்வான ஆபாச காட்சிகள் கொண்டது. |
13. Inshallah, Football (2010)
|
13. இன்ஸா அல்லா, கல்பந்து. |
இந்தியாவில் தீவிரவதியாக இருப்பவன் அயல்நாட்டில்கால் பந்து வீரனாக ஆசைப்படும் போக்கு. |
14. Dazed in Doon (2010)
|
14. டூன் பள்ளியில் மயக்கம். |
டூன் என்ற பிரபல பள்ளியின் மாணவன் அடாத காரியங்களை செய்வது. |
15. Unfreedom (2015)
|
15. விடுதலையற்ற நிலை |
ஓரின சேர்க்கை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சித்தரிப்பது. |
© வேதபிரகாஷ்
31-10-2016

[1] வெப்துனியா, திரைக்கு வராத கதை!, Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (21:10 IST).
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thiraikku-varatha-kathai-movie-audio-release-116100200019_1.html
[3] சென்னை.ஆன்.லைன், லெஸ்பியன்கள் படத்தில் நதியா!, October 21, 2016, Chennai
[4]http://chennaionline.com/article/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
[5] பிலிமி.பீட்.தமிழ், சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு, Posted by: Siva, Published: Friday, October 21, 2016, 17:23 [IST]
[6] http://tamil.filmibeat.com/news/thiraiku-varatha-kathai-faces-issue-censor-board-042881.html
[7] தினமலர்.சினிமா, லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தவில்லை: நதியா பட இயக்குனர் விளக்கம், பதிவு செய்த நாள்: அக் 22, 2016 16:05
[8] http://tamil.dinamalar.in/m/cinema_detail.php?id=52298
[9] அததெரண, திரைக்கு வராத கதை – திரைவிமர்சனம், October 31, 2016 03:28:PM.
[10] http://tamil.adaderana.lk/news.php?nid=84908
[11] https://www.scoopwhoop.com/entertainment/banned-hoon-main/ – .srtx6cd7c
குறிச்சொற்கள்:அசிங்கம், ஆபாசம், இணைப்பு, ஊடகம், காதல், செக்ஸ், நிர்வாண காட்சி, நிர்வாணம், பார்ட்டி, புகைப்படம், பெண், முக்கால் நிர்வாண ஆட்டங்கள், வாழ்க்கை
அங்கம், அசிங்கம், அடல்டு, அடல்ஸ் ஒன்லி, அநாகரிகம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுதல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆண்-ஆண் உறவு, ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்குவித்தல், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், கட்டிப் பிடித்தல், கற்பழிப்பு, கவர்ச்சி, காட்டுவது, காண்பித்தல், காம சூத்ரா, காமம், குறும்படம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 22, 2016
மறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்!

ராதா-பைசூல் விவகாரம் (2013): நடிகைகளைப் பற்றிய செய்திகள் என்றாலே, தமி ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பது ஒரு குணாதிசயம் எனலாம். சிறையில் இருந்து செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக மறைந்த முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார் என்ற செய்தி மூலம், மறுபடியும் ராதா வெளிப்பட்டுள்ளார். சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், வழக்கு, புகார், காதல் விவகாரம், மிரட்டல் என தொடர்ந்து ஊடகங்களில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது என்ற பீடிகையுடன் இப்பொழுது ஆரம்பித்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ராதா பைசூல் என்ற தொழில்அதிபர் ஒருவர் மீது போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும்’ கூறியிருந்தார். மேலும், தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், பிறகு புகாரை வாபஸ் வாங்கியதாகத் தெரிகிறது.
உமாதேவி-முனிவேல் பிரச்சினை, புகார் (ஆகஸ்ட்.2016): அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகரின் மனைவி உமாதேவி என்பவர் ராதா மீது போலீசில் புகார் அளித்தார்[1]. அதில் அவர், ‘ராதா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்’ தெரிவித்திருந்தார்[2]. உமாதேவின் கணவர் முனிவேல் அதிமுகவை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது[3]. மேலும், என் கணவரை 14-08-2016 அன்று முதல் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்தான் என் கணவரை ஏதோ செய்துள்ளார் என்று அச்சமாக உள்ளது. எனவே அவரிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரவேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஆனால், தன் மீதான இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்தார். கடந்த ஆகஸ்ட்.11ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், கோடம்பாக்கம் வட்ட அதிமுக துணை செயலாளராக உள்ள என் கணவர் முனிவேல் சில மாதங்களாக “சுந்தரா டிராவல்ஸ்” படத்தின் கதாநாயகி ராதாவுடன் நெருக்கமாக இருந்தார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது முனிவேலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி, கடந்த 12ம் தேதி தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்[4]. பின்னர், இந்த வழக்கை விசாரிக்க கோடம்பாக்கம் போலீசாருக்கு பரிந்துரை செய்திருந்தார்[5].
ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல் – ராதா புகார்: இந்நிலையில், சிறையில் உள்ள பிரபல ரவுடி வைரம் தன்னை போன் மூலம் மிரட்டுவதாக ராதா புகார் தெரிவித்துள்ளார்[6]. ராதாவை ரவுடி வைரம் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது[7]. தனது காதல் விவகாரத்தில் ரவுடி வைரம் தலையிடுவதாக நடிகை ராதா குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு விவகாரங்களுக்குப் பிறகு, என்ன காதல் என்று தெரியவில்லை. 2013ல் இவர் பைசூலுடன் சம்பந்தப் பட்டபோது, பல விவகாரஙளை வெளியிட்டார். பிறகு, அறுபடியும் என்ன காதல், மோதல், மிரட்டல் என்றெல்லாம் புரியவில்லை. மேலும், ‘வைரத்தின் இந்த மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், புழல் சிறையில் இருக்கும் ஒருவர் செல்போனில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது‘ என்றும் அவர் கூறியுள்ளார்[8]. ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியுள்ள வைரம் மீது கடந்த மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைரம் எப்படி செல்போனில் பேசினார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[9]. 2013 மற்றும் 2014 லேயே இவன் கைது செய்யப்பட்டாத செய்தியுள்ளது[10].
‘வாட்ஸ்–அப்’ உரையாடல்[11]: ரௌடி வைரத்தின் உரையாடல் இப்படியுள்ளதாக, ஊடகங்கள் செய்தியைப் போட்டுள்ளன. வழக்கம் போல ஆடியோ-விடியோ புகழ் நக்கீரன், இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது. “என் பெயர் வைரம். நான் கந்துவட்டி தொழில் செய்கிறேன். தற்போது புழல் சிறையில் இருக்கிறேன். முனிவேலுடன் உனக்கு இருக்கும் தொடர்பை விட்டுவிட வேண்டும். என் பெயரை முனிவேலிடம் சொன்னாலே, உன் பின்னால் வரமாட்டார். ஓடி போய்விடுவார். நான் ரவுடியாக இருந்தாலும், நேர்மையாக நடப்பவன். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். பிரச்சினையை பெரிதாக்க நினைத்தால் நீ இருக்க மாட்டாய். இப்படி நான் மிரட்டுவதை போலீசில் சொன்னாலும், கவலை இல்லை. உன்னை கொலை செய்கிற அளவுக்கு, நீ பெரிய ஆள் இல்லை[12]. ஒரு சாதாரண நடிகை. என் மீது 16 வழக்குகள் உள்ளன. முனிவேலை நீ கல்யாணம் பண்ணிப்பார். நீ இருக்க மாட்டாய்[13]. முனிவேலும் இருக்க மாட்டார்”, இவ்வாறு ‘வாட்ஸ்-அப்’ உரையாடல் நீடிக்கிறது[14].
மிரட்டலுக்கு ராதாவின் பதில்: இந்த ‘வாட்ஸ்-அப்’ உரையாடலை வெளியிட்டு நடிகை ராதா கூறியதாவது[15]: “ரவுடியிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. புழல் சிறையில் இருந்து பேசுவதாக கூறி என்னை மிரட்டுகிறார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்[16]. அந்த ஆடியோ தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அவ்வுரையாடலில், தான் முனிவேலின் மனைவியை சந்திக்கவில்லை, ஆனால், ஒரு நண்பனிடமிருந்து விசயத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளான்[17]. அவன் புழல் சிறையில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்துதான் அவன் பேசியிருக்க வேண்டும் என்றாகிறது[18].

பிரச்சினை அலசல்: செய்தியின் ஊக்குவிப்பு, நடிகை அம்பந்தப்பட்டுள்ளதால் கிளுகிளுப்பு, என்றெல்லாம் பார்த்தாலும், இப்பிரச்சினை சமுக பிரஞையுடன் அலச வேண்டியுள்ளது.
- தாம்பத்திய உறவுமுறைகளைக் கடந்த விவகாரமா,
- ஒரு பெண் / நடிகை அத்தகைய உறவுகளில் தோல்வியடைந்ததால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை அடைந்த சுவபாவமா,
- பெண்ணுக்கும்-பெண்ணுக்கும் நடக்கும் மோதலா.
- அரசியல் சம்பந்தப்பட்ட விசயமா,
- சினிமாவினால் சீரழிந்த கதையா,
- இக்கால நாகரிக சமூக பிறழ்சியா.
- இனி என்ன நடந்தாலும் ஒன்றும் கவலையில்லை என்ற மனோபாவம் உருவாகிய நிலையா.
என்று எப்படி பார்த்தாலும், கணவன் மனைவி உறாவுமுறைகளை காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. எங்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை, ஒத்துவராது, கட்டுப்படுத்தாது, என்று நடிகைகளோ, அரசியல்வாதிகளோ இருந்துவிட முடியாது. ஊடகங்களில் பொதுசெய்தியாக, மக்களின் கவனத்திற்கு எடித்துவரும் போது, மக்களுக்கு அதிக கடமையுணர்வு ஏற்படுகிறது. ஏனெனில், எல்லோருமே இதே மாதிரி இருந்துவிட முடியாது. எப்படியாவது தார்மீக உணர்வுகளை நுழைக்க வேண்டும், இவர்களை மாற்ற வேண்டும்.
© வேதபிரகாஷ்
22-08-2016

[1]வெப்துனியா, பிரபல நடிகையிடமிருந்து என் கணவரை காப்பாற்றுங்கள் : மனைவி கதறல், Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (12:07 IST)
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-woman-complaint-against-actress-radha-116081200041_1.html
[3] http://cinema.dinamalar.com/tamil-news/50043/cinema/Kollywood/actress-radha-in-the-movie-sundara-travels-is-now-in-a-issue.htm
[4] தினகரன், அதிமுக நிர்வாகி மாயம் நடிகை ராதா மீது போலீசில் புகார், Date: 2016-08-15@ 00:32:16.
[5] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238885
[6] தமிழ்.ஒன்.இந்தியா, சிறையில் இருந்தபடி நடிகை ராதாவை செல்போனில் மிரட்டும் பிரபல ரவுடி… வைரலாகும் வாட்ஸ் அப் ஆடியோ, By: Jayachitra, Published: Sunday, August 21, 2016, 13:18 [IST]
[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-radha-complaints-against-rowdy-260738.html
[8] தினகரன், செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ராதா புகார், Date: 2016-08-21 10:34:24
[9] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=240292
[10]http://www.dinamani.com/edition_chennai/chennai/2013/07/23/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article1697449.ece?service=print
[11] தினத்தந்தி, “ரவுடியிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது” நடிகை ராதா பரபரப்பு பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 22,2016, 2:00 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 22,2016, 4:15 AM IST.
[12] இந்நேரம்.காம், சிறையிலிருந்து நடிகை ராதாவுக்கு ரவுடி மிரட்டல்:பரபரப்பு ஆடியோ!, திங்கட்கிழமை, 22 August 2016 04:21
[13] http://www.inneram.com/entertainment/movies/10146-threaten-to-actress-radha.html
[14] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rowdy-threatening-actress-radha-released-audio-116082100006_1.html
[15] வெப்துனியா, சிறையிலிருந்து ரவுடி என்னை மிரட்டுகிறார் : ஆடியோ வெளியிட்ட நடிகை , Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (12:50 IST)
[16] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/08/22020004/Actress-Radha-tabloid-interview.vpf
[17] Deccan Chronicle. Actress gets threat call from Puzhal jail, Published: Aug 22, 2016, 6:13 am IST; Updated: Aug 22, 2016, 6:23 am IST
[18] http://www.deccanchronicle.com/nation/in-other-news/220816/actress-gets-threat-call-from-puzhal-jail.html
குறிச்சொற்கள்:உடலுறவு, உமாதேவி, கவர்ச்சிகர அரசியல், காதல், சமூக குற்றங்கள், சினிமா கலகம், சினிமா கலக்கம், சுந்தரா டிராவல்ஸ், புழல், முனிவேல், ராதா, ரௌடி, ரௌடி வைரம், வைரம்
ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், உணர்ச்சி, உமாதேவி, ஒழுங்கீனம், கற்பு, கலவி, காமக்கிழத்தி, சபலங்களை நியாயப்படுத்துவது, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, திருமண பந்தம், திருமண முறிவு, புழல், பெண்-பெண் உறவு, பெண்டாட்டி, பெண்மையை ஆபாசமாக்குதல், மிரட்டல், ராதா, ரௌடி வைரம், விவாக ரத்து, வைரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல் 26, 2016
பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].
மாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
- இரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
- மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
- அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
- அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.
- 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.
- 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- லைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].
மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.
பெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.
பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8]. தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9].

பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே? பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும்? ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா? யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்?
© வேதபிரகாஷ்
26-04-2016
[1] http://www.vikatan.com/news/india/63085-better-to-dance-than-to-beg-says-supreme-court.art
[2] விகடன், ‘பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!, Posted Date : 18:41 (25/04/2016)
[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.
[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/license-for-women-dance-bar-supreme-court-116042500041_1.html
[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)
[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24
[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.
[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/25154616/1008388/Better-to-dance-in-bars-than-beg-on-streets-Supreme.vpf
[9] http://ns7.tv/ta/nasty-not-act-dancing-supreme-court.html
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508964
[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1509337
குறிச்சொற்கள்:கற்பு, கிளப் டான்ஸ், குடி, குத்தாட்டம், சினிமா, செக்ஸ், டான்ஸ், தமிழ் பெண்ணியம், தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், நடனம், நடிகை, நைட்-கிளப், நோட், பணம், பப்-டான்ஸ், பிச்சை, பிச்சையெடுப்பது, மஹாராஷ்ட்ரா, மும்பை, முலை, விபச்சாரம்
அங்கம், அசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அல்குல், ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இடைக் கச்சை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கிளர்ச்சி, குனிதல், கூத்து, கொக்கோகம், கொங்கை, கொச்சை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, தொடுதல், தொடுவது, தொடை, தொட்டுவிடவேண்டும், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »