Archive for the ‘இளையராஜா’ Category

“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன

ஒக்ரோபர் 6, 2013

“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன?

 

அரைத்தமாவைஅரைத்துவியாபாரம்செய்யும்சினிமாக்காரர்கள்:  36 வருடங்களூக்கு முன்பு 1977-ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே’ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அரைத்த மாவை அரைக்கும் விசயத்திற்கு தொழிற்நுட்பம் தேவையா என்று யாரும் யோசிப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. வியாபாரத்திற்கு விளம்பரம் தேவையென்றால் விழாவை நடத்திதான் செய்வார்கள். விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் பாரதிராஜா முன்னிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்[1]. ஆனால், இளையராஜா வரவில்லையாம்!

 

விழாவில்நடிகர்ரஜினிகாந்த்பேசியது: வழக்கம் போல, இவர் தத்துவம் பேச ஆரம்பித்தார். “36 ஆண்டுகளுக்கு பின் இந்த மாதிரி ஒரு விழா நடப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை இன்று வரைக்கும் பலர் பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கமலுடன் நெருக்கமாக இருப்பார். என்னிடம் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர் நல்ல மனிதர். “விஸ்வரூபம்பட பிரச்னையின்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். “”16 வயதினிலேபடத்தை புதுப்பித்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கமலுக்கு கொடுத்து அவருடைய நட்டத்தை ஈடு செய்வேன்என கூறியிருந்தார். தான் சிரமத்தில் இருந்தாலும், ஒரு ஹீரோவுக்கு சிரமம் என்ற நிலையில் உதவ முன்வந்த ராஜ்கண்ணுவை பார்த்து நெகிழ்ந்து போனேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோதும், நட்புக்கு மரியாதை கொடுத்த கண்ணியமான மனிதர் அவர். பதினாறு வயதினிலே படத்தை ரூ.5 லட்சம் செலவில் அவர் தயாரித்தார். அப்போது ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகையாக இருந்தது. படத்தை யாரும் வாங்காததால், அவரே ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது[2]. அந்தளவுக்கு கண்ணியமான மனிதர் ராஜ்கண்ணு”.

 

சுயமரியாதையுடன்சினிமாவில்இருப்பதுசிரமம்: ரஜினிகாந்த தொடர்ஃப்ந்தார், “அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவியும் பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பதினாறு வயதினிலே படத்தை அடுத்து, ராஜ்கண்ணு நினைத்தால் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் துணிச்சலாக புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரெயில்படத்தை எடுத்து வெற்றி பெற்றார். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது மிகவும் சிரமம். ராஜ்கண்ணு சுயமரியாதை பார்ப்பவர். அவர் யாரிடமும் போய் நின்றதில்லை. பதினாறு வயதினிலே படத்துக்காக விழா வைக்கப் போகிறேன் என்று அவர் வந்து என்னை அழைத்தபோது, இந்த படத்தின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்குமானால் வருகிறேன் என்றேன். அதன்படி வந்து இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். எதுவும் நிரந்தரம் அல்ல. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ரசிகர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ராஜ்கண்ணு மாதிரி தயாரிப்பாளர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர வேண்டும்’’, என்று தெரிவித்தார்.

 

நடிகர்களின்நிலையேஇப்படியென்றால், நடிகைகளின்நிலையென்ன? இங்கு தயாரிப்பாளரான ஆணைப் பற்றி குறிப்பிட்டாலும், அது சினிமா தொழிலில் உள்ள பெண்களுக்கும் பொறுந்தும். ஆமாம், சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது. அவர்கள் எல்லாம் தத்துவம் பேச ஆரம்பித்தால், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், கேமராமேன்கள், மேக்கப்மேன்கள், ………………….முதலியவர்களின் கதை கந்தலாகி விடும். விபச்சாரத்தை உருவாக்கியதில் சினிமாவின் பங்கு பற்றி எந்த தத்துவமும் யாரும் பேசமாட்டார்கள் என்பதுதான், சினிமாக்காரனின் சுயமரியாதை. புவனேஸ்வரி விசயத்தில் இதே ரஜினிகாந்த பேசிய பேச்சை ரசிகர்கள் நினைத்துப் பார்த்தால், அவரது தத்துவம் எப்படி இடத்திற்கு ஏற்ப மாறுகிறது என்பதை கவனிக்கலாம். ரஜினி தத்துவம் பேசக் கற்றுக் கொண்டுள்ளார், ஆகவே, அவ்வாறே பேசிக் கொண்டிருப்பார்.

 

நண்பர்களேஊக்கசக்திகமல்ஹாசன்: கமல் தமிழில் பேசினார், “ரஜினி, கமல், ஸ்ரீதேவி என எல்லோரையும் எப்படி இந்தப் படத்துக்காக பாரதிராஜா தேடிக் கண்டுபிடித்தார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது என்னிடம் வந்து பாரதிராஜா மாதிரி கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் பொல்லாத கோபம் வந்துவிடும். லட்சியம் இல்லாமல் சாதரணமாக அவர் புறப்பட்டு வந்துவிடவில்லை. பெரிய தேடல்களும், அனுபவங்களும் அவரை முன் எடுத்து சென்றிருக்கிறது. புட்டணகனகல், கிருஷ்ணநாயர் உள்ளிட்ட மேதைகளிடம் கற்ற பாடமும், அனுபவமும்தான் பாரதிராஜாவின் பயணம். முதலில் இந்தப் படத்துக்குமயில்என பெயர் வைத்திருந்தார். கதை என்னவென்று எனக்கு அப்போதே தெரியும். ஆனால் இந்த கால கட்டம் வரை பேசப்படும் கதையா என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 36 வருடங்களுக்கு முன்பே நவீன இசை, அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தை பார்த்து கிண்டல் அடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என சொன்னவர்கள் குறைவு. சினிமா வியாபாரத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசினார். ஆனால் ரசிகர்கள் தங்க கீரிடத்தை வைத்து விட்டார்கள். அந்த தன்னம்பிக்கையின் முதல் நாயகன் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.

 

சினிமாநடிகர்களின்நட்பில்கூடஇடைதரகர்கள்: அப்பொழுதெல்லாம் ஒரு சில்வர் ஜூப்ளி விழா நடக்கும்போது, மற்றொரு படத்தின் ஷூட்டிங்கில் இருப்போம். ஆனால் இப்போதுதான் நானும், ரஜினியும் வேகத்தை குறைத்துக் கொண்டு விட்டோம். அதற்கு காரணம் வயதல்ல. முதலீடுதான் காரணம். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கியபோதும் ரஜினி அப்படியேதான் இருந்தார். பத்து வருடங்களுக்கு பின்பும், ஏன் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான். எனக்குள் இருக்கிற தன்னம்பிக்கைக்கு, நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள்தான் ஊக்க சக்தியாக இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.

 

தமிழில்பேசும்கமல்ஹஸன்: கமல் ஹஸன் என்ற நடிகன், எப்பொழுதுமே நடித்துக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு யாரிடம் என்ன தேவையோ, அதனை “நண்பர்” என்று சொல்லி, மூன்று-நான்கு நண்பர்கள் மூலமாக நான்காவது-ஐந்தாவது நண்பரிடம், ஏட்ய்ஹாவது கிடைத்தல், அதனை சாமர்த்தியமாக வங்கிக் கொள்வார். அதில், தனது ஜாதிமுறையையும் அழகாக உபயோகித்துக் கொள்வார். கமலஹாசனே கேட்டு விட்டாரே என்று அவர்கள் மகிழ்ச்சியோடு தானமாக கொடுத்து விடுவார்கள், ஆனால், கமல் ஹஸன் அதனை நன்றாகவே பயன் படுத்திக் கொள்வார். “மெட்ராஸ் பாஷையை” ஒரு நடிகரிடம் கற்றுக் கொண்டார் என்றால், தமிழ் பேசவும் கற்றுக் கொண்டு பேசி வருகிறார். இவர் மற்றவர்களை “பண்டிதர்” என்றெல்லாம் நக்கல் அடிக்கும் போது, இவரையும் விமர்சிக்கத்தான்ம் செய்கிறார்கல். ஆனால், இப்பொழுதெல்லாம் பழி வாங்கும் எண்ணம் இவருக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

 

புதிதாகபிறந்தஉணர்வுபாரதிராஜா: “காலம் உருவங்களை மாற்றி விட்டது. ஆனால் உள்ளம் மட்டும் இளமையாகவே இருக்கிறது. கார், .சி, புகழ் எல்லாம் வந்தாலும் வாழ்க்கை மாசு அடைந்து விட்டது. வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் தெளிந்த நீரோடை போல் இருந்தது வாழ்க்கை. “ரஜினி சார், கமல் சார்என்று சொல்லுவதை விடரஜினி, கமல்என்று சொல்லுவதில்தான் உண்மை இருக்கிறது. இந்தப் படத்தில் கமலுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம். ரஜினி ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் ரூ.3 ஆயிரம்தான் கொடுத்தேன். அதிலும் ரூ.500- இன்னும் நான் தரவில்லை.  இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை[3]நண்பன் இளையராஜா இங்கு வரவில்லை. இந்தப் படத்துக்கு ரத்தமும், நாளமுமாக இருந்தவன். என்னுடன் பயணப்பட்ட பாமரன். இன்றைக்கும் வற்றாத ஜீவ நதி அவன். இது என் முதல் படம். மீண்டும் வெளிவருகிற இந்த சமயத்தில் மீண்டும் புதிதாகப் பிறந்த உணர்வு இருக்கிறது”, என்றார் இயக்குநர் பாரதிராஜா.

 

வாழ்க்கைமாசுஅடைந்துவிட்டது: இப்படி அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளவர் பாரதிராஜா! ஒருவேளை, ரஜினிகாந்த சொன்னதற்கு விளக்கம் கொடுத்துள்ளாரோ என்னமோ? சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டது, பிறகு வாழ்க்கை மாசு படாமல் எப்படி இருக்க முடியும்? நிஜவாழ்க்கை மற்றும் ரீல்-வாழ்க்கை என்றிருக்கும் இவர்கள், உறவுகளை பல வழிகளில், முறைகளில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவுட்-டோர் சூட்டிங், வீகென்ட் மற்றும் பொழுதுபோக்கு பார்ட்டிகள், பண்ணைவீட்டில் ஜாலி கொண்டாட்டங்கள், தனியாக ஜாலியாக இருப்பது என்ற முறைகளில் அவர்கள் மற்றவர்களை மாசுபடுத்தி, தங்களையும் மாசுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான், முன்னவர் சினிமாத் தொழிலில் சுயமரியாதையோடு இருக்கமுடியாது என்றார். இவரோ சுத்தமாகவே இருக்க முடியாது என்கிறார்.

 

சினிமாநடிகர்களின்நட்புகளுக்குஇடைதரகர்கள்தேவையா: கமல் ஹஸன் சொல்லியிருக்கிறார், “பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான், அதாவது அவரது நட்பு ரஜினியுடன் அப்படியே இருப்பதற்கு பல இடைத்தரகர்கள் இருந்திருக்கிறார்களாம்! சினிமாக்காரர்களின் நட்பிற்கு, குறிப்பாக “நட்பு” தொடர்வதற்கு, அப்படியே இருப்பதற்கு “பல இடைத்தரகர்கள்” தேவையா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால் “ரஜினி-கமல்” அல்லது “:கமல்-ரஜினி” ஊடல்-கூடல்கள் அதிகமாகவே இருந்துள்ளன. 36 வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறதோ என்னமோ? தொழில் ரீதியாக எப்படி வியாபாரிகள் தங்களது “வணிணீடங்களை” வரையறைத்துக் கொண்டு, போட்டியை ஏற்படுத்தி நுகர்வோர்களை சுரண்டுகிறார்களோ, அதேபோல, ரசிகர்களை சுரண்டும் வேலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ரூ.100 முதல் ரூ 5,000/- வரை டிக்கெட் கொடுத்து சினிமா பார்க்க எப்படி பணம் வருக்கிறது? சினிமா வெளியிட்ட ஒரு வாரத்தில்-பத்து நாட்களில் ரூ.30-40-50 கோடிகள் எப்படி வசூலாகிறது? ஒருவேளை சசப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும் ரசிகன் எப்படி அப்படி பணம் கொடுத்துப் படம் பார்க்க முடிகிறது? ஒருவேளை இதற்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் போலும்!

 

® வேதபிரகாஷ்

05-10-2013


Advertisements