Archive for the ‘உறுப்பினர்’ Category

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

ஜூன் 4, 2017

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

GST Kamal Hassan- Suresh and others

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,

GST Kamal Hassan- ubjected to jokes

சினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

GST Kamal Hassan- and others

28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.

பல முதல்அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

அதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும்? அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே? நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.

GST Kamal Hassan

இந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?[3]  நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.

இப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது[4].

Kamal Hasan -on- Bahubali

சினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,

பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].

ஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம்! நல்ல தமாஷாதான்! அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம்!! என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்? காசுதான் மிச்சமாகும்.

அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

© வேதபிரகாஷ்

04-06-2017

Kamal Hassan - Maya Ravan

[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்புசினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்

[2] http://www.dailythanthi.com/News/State/2017/06/03001106/Service-Tax-Kamal-Hassan-strongly-opposed.vpf

[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9718870.ece

[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ – கமல், Posted Date : 19:20 (02/06/2017); Last updated : 19:42 (02/06/2017)

[6] http://www.vikatan.com/news/cinema/91172-may-quit-from-cine-industry-says-kamalhassan.html

[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed  | June 02, 2017 22:30 IST

[8] http://movies.ndtv.com/tamil/kollywood/dont-make-us-move-away-from-cinema-kamal-haasan-opens-up-1707323

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

நவம்பர் 14, 2013

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக  சம்பளம்  கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.

சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.

சினிமாக்காரர்கள்  மற்ற தொழில்களில்  ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத்  தேவையான  துறைகளில்  சினிமாக்காரர்கள்  மூலதனம்  போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

வியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.

© வேதபிரகாஷ்

14-11-2013