Archive for the ‘எச்சரிக்கை’ Category

இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

ஏப்ரல் 29, 2010

இந்தி படவுலகம் மூலமாக இறக்குமதி செய்யப்படும் ஆபாசங்கள்!

இப்படங்களை இங்கே பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். இத்தகைய ஆபத்து இந்தியாவில் நுழைகிறது, மற்றும் அதற்கான ஆதரவு பல நிலைகளில் வருகிறது, கிடைக்கிறது, ஊக்குவிக்கப் படுகிறது, என்பதெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தி படவுலகத்தின் மூலமாக, முன்பெல்லாம் (40-60 ஆண்டுகளுக்கு முன்பு) நல்லது கிடைத்துவந்தது.

இப்பொழுதோ, ஆபாசம், அசிங்கம், அனைத்துல ஆபாசம், நிர்வாணம், வேசித்தனம்…………………..எல்லாமே, கிடைக்கின்றன. தறிகெட்டுப் போகிறது. ஏன் திவிரவாதம் கூடக் கிடைக்கிறது.

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

barbara-mori1-இந்தியாவில்-நிர்வாணத்தை-என்னல்-காட்டமுடியாது

வெளிநாட்டு நடிகைகள் அழைத்துவரப் படுகிறார்கள். நடிப்பதற்கு மட்டுமல்ல, நிஜவாழ்க்கைக்கிற்கும். கிரிக்கெட், ஒரு பாதிதான். சென்ஸார் எல்லாம் பெயருக்குத்தான்!

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

கிஸ்ஸிங்-கலவை-கலவி-கூடல்

தாவூத் இப்ராஹிம் போன்ற அனைத்துலக தீவிரவாதக் கட்டுப்பிடியில் இயங்கும் அவலம். செக்ஸ் தொழில் தாராளமாக நடக்கும் நிலை, தோல்-வியாபாரம் நடத்தும் விதம்…………முதலியன அவனுக்கே உரித்தானது. நேபாளத் தொடர்பு பல கதைகள் சொல்கின்றன.

துபாயில் அரங்கேற்றப்படும் ஆபாசங்கள்………………………….

barbaramori-இது-போதுமா

barbaramori-இது-போதுமா

தமிழகத்தில் அந்த நாற்றம் அடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழர்கள் வார்த்தையாலே, பார்வையாலே கற்பழித்துவிடுவார்கள்! தமிழ் கவிஞர்களை விட்டால், போதும். செந்தமிழே, சிவப்பாகிவிடும்.

புதுமை, தொழிற்நுட்பம், என்ற பெயரில், நிர்வாணம் புகுத்தப் படுகிறது.

மறைமுகமாக, ஊடகங்கள், தொழிற்சாலை முதலாளிகள், வியாபாரப் புலிகள், அரசியல்வாதிகள்………………….பல வகைகளில் உதவுகின்றனர்.

எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு!

ஏப்ரல் 1, 2010

எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு

புதன்கிழமை, மார்ச் 31, 2010, 11:55[IST]

Kushboo

குஷ்புவின் கருத்து – தனது மகள்களுக்காகப் பாராடுகிறாராம்!: இதுகுறித்து குஷ்பு கூறுகையில், இப்போது எனது மனதுக்குப் பட்டதை நான் சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சுச் சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்குப் போராட காரணமே, எனது மகள்களுக்கு, நான் மன உறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்றார் குஷ்பு.இந் நிலையில் மீண்டும் இந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் குஷ்பு. கடைசியாக அவர் இந்தியில் நடித்த படம் தீவானா முஜ்ஸா நஹின். இதில் ஆமிர்கான், மாதுரி தீட்சித்துடன் இணைந்து நடித்திருந்தார் குஷ்பு.

குஷ்புவைப் பற்றி தமிழ் மக்கள் பெருமைப் படவேண்டுமாம்! திருமாவளவன், பாமக மற்றும் இந்து மக்கள் கட்சி இவைகள் எல்லாம் அப்பீல் செய்யுமா அல்லது குஷ்புவின் மயக்கத்தில் ஆழ்ந்துவிடுமா? சரி, தமிழ் மக்கள் ன்ன செய்ய போகிறார்கள்? குஷ்பு சொல்லியபடி பெருமைப் படப் போகிறார்களா?

நக்கீரனும், நித்யானந்தாவும், சினிமாவும்!

மார்ச் 16, 2010

நக்கீரனும், நித்யானந்தாவும், சினிமாவும்!

நக்கீரன் இப்படி செய்திகளை வாரி இரைக்கிறது!

நித்யம் நித்யானந்த மயம் தான்!

தேவநாதனை வைத்துத் திரைப்படம் என்றர்கள்!

அதில் தேவநாதனை நடிக்க வைக்க மறந்துவிட்டார்கள் தமிழ்-இயக்குனர்கள்!

இப்பொழுது நித்யானந்தா படம் என்று நக்கீரன் சொல்கிறது.

அதற்கு சரியான இயக்குனர்கள் நக்கீரன் கோபால் தான்; கேமரமேன் லெனின் தான்; வீடியோ நக்கீரன் தான்; விளம்பரம் தினகரன் தான்; விநியோகம் சன்பிக்சர்ஸ்தான்!

இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த சினிமா! நித்யானந்தா முடிவு?

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28780

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்திருக்கும் நித்தியானந்தா இதுவரை நான்கைந்து பேட்டிகளை கொடுத்து விட்டாலும், பத்திரிகையாளர்கள் முன் தோன்றி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

அதேபோல சாமியாருடன் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதாவும் இந்த விவகாரம் குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் ரகசியமாக இருந்தாலும், இந்த விவகாரம் குறித்த செய்திக்கு பஞ்சமில்லை.

இப்போது நித்தியானந்தா குறித்து வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது. புகழின் உச்சியில் இருந்த நித்தியானந்தர், சர்ச்சைக்குரிய வீடியோவால் ஒரே நாளில் பல பக்தர்களின் மனதில் இருந்து ஓரம் கட்டப்பட்டது என்னவோ நிஜம்தான். சரிந்த புகழை தூக்கி நிறுத்தும் வகையில் சினிமாப்படம் ஒன்றை எடுக்க நித்தியானந்தர் ஆசிரமம் முயன்று வருகிறதாம்.

இதற்காக பெரிய அளவில் பணம் ஒதுக்க திட்டமிட்டிருக்கும் ஆசிரமம், இப்போதும் தங்களுடன் தொடர்பில் இருக்கும் சினிமா பிரபலங்களிடம் இந்த விஷயத்தை சொல்லி சரியான இயக்குனரை தே‌டிக் கொண்டிருக்கலாம். நித்தியானந்தரின் புகழை பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் இப்படத்தில், நிஜமாகவே நித்தியானந்தா இடம்பெறும் பிரசங்க, அருளாசி காட்சிகளும் இடம்பெறவிருக்கின்றனவாம்.

அதேநேரம் நித்யானந்தர் விவகாரத்தையே சினிமாவாக்கவும் இன்னொரு தரப்பு முயன்று வருகிறது. இதற்காக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று ஆராய்ச்சி வேறு நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த இரண்டு சினிமாக்கள் பற்றிதான் கோடம்பாக்கத்தில் பரபர டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. 2 படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் எந்த படம் வெற்றி பெறும் என்பது பற்றியும் கோலிவுட்டில் பட்டிமன்றமே நடந்து வருகிறது!

இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட பாலியல் காட்சி என்னுடையது தான்: நித்யானந்தா

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28741

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி குறுகிய காலத்தில், உலகம் முழுவது:ம லட்சக்கணக்கான பக்தர்களை தன் வசம் இழுத்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதையடுத்து, தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹரிதுவாரில் ரகசிய இடத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புது சி.டி.யில், சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என்று மீண்டும் கூறியுள்ளார்.

பாலியல் தொடர்பான கேள்விகள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஆன்மீக ரீதியான, மன ரீதியான தீர்வுகளைப் பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கின்றேன் பேசியிருக்கின்றேன். எப்படி ஆழ்ந்து யோசித்தாலும் சட்ட விரோமான செயலை நான் செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் கும்பமேளா முடிந்தவுடனேயே பெங்களூரு ஆசிரமத்துக்கு திரும்பி, பொதுமக்கள் மற்றும் மீடியா சம்மந்தப்பட்ட அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக இருக்கின்றேன்.

இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட பாலியல் காட்சி என்னுடையது தான் என்று நித்யானந்தா அந்த சிடியில் தெரிவித்துள்ளார். இந்த முறையும் இந்த சிடி எங்கு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.

ரஞ்சிதாவுடன் இருந்தது ஆன்மீக ஆராய்ச்சிக்காகத்தான்: நித்யானந்தா புது விளக்கம்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28740

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தா, அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று நூதன விளக்கம் கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி குறுகிய காலத்தில், உலகம் முழுவது:ம லட்சக்கணக்கான பக்தர்களை தன் வசம் இழுத்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதையடுத்து, தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹரிதுவாரில் ரகசிய இடத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார்.

தன் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நித்தம் ஒரு பதிலை அளித்து வரும் நித்யானந்தா, இன்று அளித்துள்ள விளக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஆன்மீக ஆராய்ச்சி என்றும், பக்தர்களுக்கு இது பிடிக்காவிட்டால் இதை நிறுத்திக்கொள்வதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நித்யானந்தா மீது பணமோசடி வழக்கு
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28739

நித்யானந்தா மீது சேலம் நீதிமன்றத்தில் பணமோசடி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லட்சுமணப் பெருமாள் என்ற வழக்கறிஞர் சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் பிப்ரவரி 12ஆம் தேதி அரியலூர் அருகே உள்ள சீரகப்பாடி கிராமத்திற்கு ஆசிரமம் திறக்க நித்யானந்தா வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவரை சந்தித்து தனது மனைவி வசந்தியின் ஒற்றை தலைவலியை குணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதற்கு கட்டணமாக நித்யானந்தா சீடர் கேட்ட ரூ.25 ஆயிரத்தை ரொக்கமாக கவரில் நித்யானதாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நித்யானந்தா கொடுத்த சில பயிற்சிகளை தொடர்ந்து செய்தும், தனது மனைவியின் ஒற்றைத் தலைவலி குணமாகவில்லை என்றும், எனவே தன்னை ஏமாற்றி பணமோசடி செய்த நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பணமோசடி தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

நான் சாமியார் மட்டுமல்ல….என்னை அந்த கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள்: நித்யானந்தா பேட்டி

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28737

நித்யானந்தா தற்போது அரித்துவாரில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் எங்கு தங்கியிருந்து புனித நீராடி வருகிறார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
அரித்து வாரில் ஏன் நீங்கள் ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறீர்கள்?

நான் இங்கு பதுங்கி இருக்கவில்லை. மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன். என்னைத் தேடி வரும் பக்தர்களிடம் பேசுகிறேன். பத்திரிக்கையாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கிறேன்.

அரித்துவாருக்கு நான் கும்ப மேளாவில் பங்கேற்கவே வந்துள்ளேன். மேளா முடிந்ததும் நான் பெங்களூர் ஆசிரமம் செல்வேன். நான் செய்து வரும் மனிதநேய சேவைப் பணிகளை தொடர்ந்து செய்வேன்.

உங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

தியான பீடம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்யும்.

இங்கிருந்து எங்கு செல்வீர்கள்?

கும்பமேளா பணி முடிந்ததும் ஆசிரமம்தான் செல்வேன். தொடர்ந்து எனது ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவேன். தியான பீட சொற்பொழிவுகளில் கலந்து கொள்வேன்.

உங்கள் பக்தர்கள் இன்னமும் உங்களை நம்புகிறார்களா? உங்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்களா?

எனக்கு எதிரான சதி திட்டங்கள் வெளியானதும் ஏராளமான அன்பர்கள், பக்தர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக தியான பீடம் சார்பில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம். அதில் 90 சதவீதம் பக்தர்கள் தொடர்ந்து என் பக்தர்களாக, என்னை ஆதரிப்பவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

படுக்கை அறை காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானதால் உங்கள் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளதே?

சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருப்பவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவும் வழி வகை செய்திருக்க வேண்டும்.

என்னை எல்லாரும் சாமியார் என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். நான் ஆய்வாளனும் கூட. அது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

நீங்கள் எங்கு படித்தீர்கள்? எப்போது ஆன்மீக வழியை தேர்வு செய்தீர்கள்?

எனக்கு இப்போது 33 வயது ஆகிறது. மிக சிறிய வயதிலேயே நான் ஆன்மீகத்துக்கு வந்து விட்டேன்.

எனது ஆன்மீகத் தேடல்கள், படிப்புகள், பயிற்சிகள் மூலம் நான் ஆன்மீக சாதனையை எட்ட முடிந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் இந்த ஆன்மீக பாதைக்கு வந்தேன். அதற்கு முன்பு நான் வேலூரில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தேன்.

நித்யானந்தா வழக்கு விவகாரம்: லத்திகாசரண் பதில்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28723

தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் மதுரையில் நடைபெறும் தென் மாவட்ட போலீசார் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நித்தியானந்தா வழக்கு குறித்த விசாரனை எந்த அளவில் இருக்கிறது?

நித்தியானந்தா வழக்கு விசாரணை கர்நாடகா அரசுக்கு மாற்றப்பட்டு விட்டது.

ஆனால் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கான தகவல் கிடைக்கவில்லை என கர்நாடகா கூறியுள்ளதே?

வழக்கு மாற்றம் குறித்து ரிஜிஸ்டர் தபாலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 21, 2010

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

கோலிவுட்டில் அமைதி உடன்படிக்கை!
இனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது!
Temporary truce in Kollywood!
By Moviebuzz | Sunday, 21 February , 2010, 12:48

A temporary truce has been brought out after a meeting of various unions of Tamil film industry met on Saturday (Feb 20) to sort out the aftermath of Ajith’s controversial speech at a function organised to felicitate Chief Minister M Karunanidhi.

The meeting chaired by Tamil Film Producers Council president Rama Narayanan, FEFSI president V C Guhanathan, Nadigar Sangam general secretary Radha Ravi, R K Selvamani from Tamil Film Directors Association and representatives of film distributors association, exhibitors and theatre owners association demanded an unconditional apology from Ajith. They also condemned Rajinikanth’s statements on the issue.

Meanwhile Ajith and Rajinikanth kept their cool and refused to make any apology. In an interview to an English newspaper, Ajith struck to what he had said in his speech.

Expanding on the comments made at a function, the actor made it clear: “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,”

The Saturday film industry meeting has temporarily put the “Ajith issue” on the backburner. They requested artistes and associations not to talk to media over the issue and vitiate the matter further.

ajith-rajini-fefsi-20-02-10-2

ajith-rajini-fefsi-20-02-10-2

திருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது! ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே!

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.  விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].

தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா? எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும்? இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது! கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.

முன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்!


[1] தட் ஈஸ் தமிள், ரஜினிஅஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/thirumavalavan-condemns-ajith-rajin.html

[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.

[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.

[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27325