ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது?
“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.
கெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.
ஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!
பிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.
ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.
“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].
சினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.
© வேதபிரகாஷ்
16-05-2018
[1] https://www.instagram.com/yashikaaannand/?hl=en; https://www.facebook.com/Yashikaaannand/;
https://twitter.com/iamyashikaanand?lang=en
[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]
[3] https://tamil.filmibeat.com/heroines/there-is-nothing-wrong-losing-virginity-before-wedding-yashika-053606.html
[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.
[5] http://tamil.eenaduindia.com/Entertainment/Bollywood/2018/05/15071631/Its-not-wrong-for-women-to-lose-virginity-before-marriage.vpf
[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM
[7] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html
[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.!, By Kaniyan – May 15, 2018
[9] https://www.cinemapettai.com/yashika-open-talk-about-1st-standard/
[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை!, Samayam Tamil | Updated: May 15, 2018, 05:27PM IST
[11] https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/iruttu-arayil-murattu-kuthu-actress-yashika-anand-hot-stills/articleshow/64176533.cms
[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM.
[13] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html