Archive for the ‘கடற்கரை’ Category

சங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை!

ஜூன் 2, 2018

சங்கீதா, டிவி சீரியல் நடிகை கைதுவெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை!

Prostitution with other states women - TV-vani-rani-group- 02-06-2018-2

சென்னையில் இன்னொரு நடிகை கைது: மறுபடியும் இன்னொரு நடிகை விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் படுவது, ஆச்சரியமாக இல்லை. பலமுறை எடுத்துக் காட்டிய படி, நடிகைகள் எப்பொழுது கற்பு பற்றி அலட்சியமான கருத்துகளை வெளியிட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் பரத்தைத் தனத்தை ஒப்புக் கொண்டது போலாகி விட்டது. தொலைக் காட்சி வந்து, “டிவி சீரியல்” என்பது வந்தவுடன், அதனையே தொழிலை வைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரக் கணக்கில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சிகளில் [பட்டி மன்றம், சினிமா, பாட்டு…..] பங்கு கொள்ள வேண்டும், தங்களது முகம் டிவியில் வர வேண்டும் போன்ற அல்ப ஆசைகளைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம், துறைகளில் உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வெறியோடு அலைகிறார்கள் என்பது தெரிந்த விசயம் தான்.

OMR resort Prostitution 02-06-2018-2

அமெரிக்கமயமாகும் .எம்.ஆர்: ஓ.எம்.ஆர் பகுதிகளில் தொழிற்சாலைகள், குறிப்பாக ஐடி கம்பெனிகள் வந்த பிறகு, வெளிநாட்டவர் போக்குவரத்து அதிகமாக்கி விட்டது. தவிர தனியாக தங்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் “எஞ்சாய்” பண்ன வேண்டும் என்ற்ற குறிக்கோளுடன் அலையும் அவர்களுக்கு, ஒழுக்கம், நியாயம், தர்மம் எல்லாம் பற்றி கவல்லைப் படுவதில்லை. இதனால், இவர்களுக்கு எல்லாம் கமிழ்ச்ச்சி தர, விபச்சாரம் பெருகி விட்டது. கடந்த 15-25 வருடங்களில் மூடி கிடந்த ரிசார்ட்டுகளுக்கு “கிராக்கி” வந்து விட்டது. முன்பெல்லாம், அரசிய்யல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலியவகளை மகிழ்விக்க இந்த ரிசார்ட்டுகள் உபயோகப் பட்டன. இப்பொழுது, கவல்லையே இல்லை பலவிதமான “கஸ்டமர்கள்” பெருகி விட்டார்கள். அதனால், பார்ட்டிகள் நடத்த ஹால், பப் போன்ற வசதிகளும் சேர்க்கப் பட்டு விட்டன.

OMR luxurious resort- 02-06-2018

ஆடம்பர ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[1]. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. போலீஸ்காரர் ரிசார்ட் வைத்திருக்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறார் மற்றும் அது விபச்சாரத்திற்கு உபயோகப் பட்டது என்பத்உ நோக்கத் தக்கது. அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா பாலன் [42], சென்னையில், ஆழ்வாதிருநகரில் வசிப்பவர். செல்லமாய், சபீதா என்கின்ற சபாபதி, அவள், அன்னக்கொடியும், ஐந்து பெண்களும், பிள்ளை நிலா, வள்ளி முதலிய டெலிசீரியல்களில் நடித்துள்ளார்[3]. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், கருப்பு ராஜா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[4].

Prostitution with other states women - TV-vani-rani-group- 02-06-2018

பாலியல் தொழில் செய்தவர் கைது ஆனால், சேவை பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை: இவர் 01-06-2018 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்[5]. இவருடன் நடன பெண், துணை நடிகை உள்ளிட்ட நான்கு பேர் கைதானார்கள்[6]. ஆனால், யார் மகிழ்விக்கப் பட்டனர், அவர்களின் விவரங்கள் வெளிடப்படவில்லை. இவர் போரூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஏஜென்டாக செயல்பட்டதும் தெரிகிறது[7]. மேலும் சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டார்[8]. “வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை,” என்றும் “புதிய தலைமுறை” செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளது[9]. கைதான பெண்களும் இளவயதில் உள்ளது திகைப்படையச் செய்கிறது. எப்படி, இவ்வாறு விபச்சாரம் செய்ய துணிகிறார்கள் என்றும் பதைக்க வைக்கிறது[10].

Prostitution with other states women - vani-rani-group- 02-06-2018

மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைப்பு: போலீஸார் இவர்களை 02-06-2018 அன்று முறைப்படி, மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்[11]. நீதிபதி உத்தரவை அடுத்து நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர் போலீசார்[12]. பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காக்கிகள் வட்டாரம் தெரிவிக்கிறது[13].

Colege girl abducted for prost 02-06-2018

வெளி மாநில பெண்கள் வைத்து விபச்சாரம் –

Prostitution with other states women - Puthiya thalaimurai - 02-06-2018

மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று புகார் கொடுத்த தாய்: நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்[14]. அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரெனெ வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர். என் மகளோடு வந்தவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் வீட்டிற்கு ஆண்கள் பலரும் வந்து செல்கின்றனர். எனவே, என் மகளை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். கொலை மிரட்டும் விடுக்கிறார். இதுபற்றி விசாரித்ததில் அவரும், அவரின் உதவியாளரும் விபச்சாரம் செய்து வருவது எனக்கு தெரியவந்தது. மேலும், எனது மகள் மற்றும் அவருடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்” என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். அதோடு, தனது மகள் உள்ளிட்ட மாணவிகள் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி தொடர்ந்து இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அது தொடர்பான சில புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது மகள் தொடர்பான புகைப்படங்களுடன் தாயே புகார் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[15]. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Prostitution with other states women - Times of India- 02-06-2018

சரியில்லை என்றால், சரி செய்ய வேண்டும்:

  1. பி.காம் படிக்கும், 19-வயது மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று தாயே, போலீஸாரிடம் புகார் கொடுத்த அவலம் – நாகர்கோவிலில்!
  2. கண்ணகி, கற்பு என்பவற்றைப் பற்றி பறைச்சாற்றும் தமிழகத்தின் பெண்மைநிலை இப்படியா இருக்க / மாற வேண்டும்?
  3. படிக்கும் பெண்ணிற்கு உடலை விற்கலாம், படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொடிய-குரூர எண்ணம் எப்படி உருவாகியது?
  4. மன-ஒழுக்கம், உடல்-ஒழுக்கத்தின் மீது ஆதிக்கம் செல்லுத்துகிறது. மனவொழுக்கம், நற்சிந்தனைகள், சமுதாய சிறப்புகளினால் மேம்படுவது.
  5. இந்திய பெண்மையினை சீரழித்தால், இந்திய சமூகம் கெட்டு விடும், இந்தியாவை அழித்து விடலாம் போன்ற திட்டம் உள்ளதா?
  6. சேர்ந்து வாழ்வேன், திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன், திருமணத்திற்கு முன்பாக கற்பு இருப்பது எதிர்பார்க்க முடியாது. இவற்றை சொன்னது இன்றைய தமிழக அரசியல்வாதியின் மகளும், காங்கிரஸ் கட்சி தலைவியும் தான்!
  7. தனிமனித ஒழுக்கம், மனத்தூய்மை, உடல் புனிதம் எல்லாம் வேண்டாம் என்ற அளவிற்கு தமிழச்சியை தூண்டி விடுவது எந்த சித்தாந்தம்?
  8. பெண்—குழந்தை காப்போம், பெண்மையை போற்றுவோம் என்ற நிலையில் பாடுபடும் போது, இத்தகைய பெண்-விரோதிகள் எவ்வாறு உருவாகின்றனர்?
  9. ஒழுக்கம் கெடுக்கும் ஜிஹாத், புனிதத்தை சீரழிக்கும் சிலுவை-போர், தார்மீகத்தை அழிக்கும் புரட்சி என்றெல்லாம் இருந்தால், அவை அழிக்கப் படவேண்டும்.
  10. பெண்மை நிச்சயமாக பெண்மைக்கு எதிராக செயல்படாது, பெண்மையை பழிக்காது, அத்தகைய பெண்மை தான் பாரதத்திற்கு வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-06-2018

Prostitution with other states women - News Today - 02-06-2018

[1] news18, வாணி ராணிசீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது!, Updated: June 1, 2018, 9:14 PM IST.

[2] https://tamil.news18.com/news/entertainment/famous-serial-actress-arrested-in-prostitution-24323.html

[3] News Today, Actress runs sex racket in ECR villa, arrested, NT Bureau June 2, 2018

[4] https://www.newstodaynet.com/index.php/2018/06/02/actress-runs-sex-racket-in-ecr-villa-arrested/

[5] நக்கீரன், விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா புழல் சிறையிலடைப்புமேலும் சில நடிகைகள் சிக்குகிறார்கள், சி.ஜீவா பாரதி, Published on 01/06/2018 (22:23) | Edited on 01/06/2018 (22:26).

[6] தமிழ்.வெப்துனியா, விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைதுவாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி, ஜூன்.2, 20018.

[7] On investigation, police identified the accused as Sangeetha, 42, of Alwarthirunagar. She had appeared in several Tamil television serials. She was running the racket along with Satish, 30, of Porur. The police said the team received information that the duo would lure young women promising well-paid jobs in private firms and chance to be cast in movies or television serials.

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vani-rani-actres-sangeetha-arrest-118060200009_1.html

[9] புதிய தலைமுறை, வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை கைது!, Web Team, ஜூம்.2, 2018: 12.41

[10] http://www.puthiyathalaimurai.com/news/cinema/46253-tv-serial-actress-arrested-for-prostitution.html

[11] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actress-sangeetha-pooja-imprisonment-case-adultery-and-some-actresses

[12] Times of India, Vani Rani actress arrested for prostitution, TNN | Jun 2, 2018, 15:25 IST.

[13] https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vani-rani-actress-arrested-for-prostitution/articleshow/64427426.cms

[14] தமிழ்.வெப்துனியா, கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம்நாகர்கோவிலில் அதிர்ச்சி, Last Modified சனி, 2 ஜூன் 2018 (12:13 IST)

[15] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/college-girls-forced-to-do-prostitution-118060200019_1.html

 

செக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை!

பிப்ரவரி 14, 2017

செக்ஸ் தொல்லைகடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை!

nivedhita-actress-caught-at-goa-by-the-haraser

சுதந்திர உணர்வுகளுடன் வளர்க்கப்பட்ட நிவேதிதா, தனியாக கோவாவுக்குச் சென்றது: பிரபல கன்னட நடிகை நிவேதிதா தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதா வளர்ந்த போது, தான் பெண் என்ற ரீதியில் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை[1]. தன்னுடைய பெற்றோர் அவரை சுதந்திரமாக இருக்கும் முறையில் வளர்த்துள்ளனர்[2]. அதனால் தான் போலும், தைரியமாக கோவாவிற்கு செல்ல தீர்மானித்தார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன[3]. இந்நிலையில் இருவரும் கோவாவுக்கு சேர்ந்து செல்ல முடிவு எடுத்தனர். தொழிலதிபர் என்பதால் ஒரு வேளை காதலரால் உடனடியாக புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி அவரிடம் கூறிவிட்டு நிவேதிதா தனியாக கோவா சென்றார்[4]. ஊடகங்கள் இப்படி கதையை ஆரம்பித்தன. நடிகைக்கு காதல், கல்யாணம், விவாக ரத்து, சேர்ந்து வாழ்தல், பிரிந்து வாழ்தல் என்றாலே கொண்டாட்டம் தான், அவற்றையெல்லாம் செய்திகளாக்கி, எழுதி தள்ளுவர்.

nivedhita-actress-caught-at-goa-by-the-harassersகோவா கடற்கரையில் நிவேதிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை: நிவேதிதா கோவாவிற்குச் சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். நாள் முழுவதும் பொழுதைக் கழித்தப் பிறகு, பிறகு, இரவு 9 மணிக்கு கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினார். உலக பிரசித்தி பெற்ற கோவா கடற்கரையில் தனியாக 15 நிமிடங்கள் நடந்து சென்றார். அப்பொழுது, நிவேதிதாவை குடிபோதையில் இருந்த சில ஆசாமிகள் நோட்டம் விட்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர்[5]. இதனால், திகைத்து விட்டார். போய் விடுவார்கள் ஒதுங்கி சென்றார். ஆனால், அவர்களோ, ஆபாசமாக பேசியும் கேலி செய்தார்கள் அசிங்கமாக கமெண்ட் அடித்து சிரித்துள்ளனர். மேலும் சிலர் நிவேதிதா பயந்து போகும் அளவுக்கு அருகில் வந்துள்ளனர்[6]. இதனால், அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிவேதிதா அருகில் இருந்த சிறிய ஓட்டலுக்குள் நுழைந்தார்[7]. ஆனால், உள்ளேயும் அவருக்கு நிலைமை மாறவில்லை. அங்கும் சிலர் குடிபோதையில் இருந்தவர்கள், வா, வா என்றைத்து, தங்கள் அருகில் வந்து உட்காருமாறு அழைத்து தொல்லை கொடுத்தார்கள்[8]. இதனால், சர்வரின் உதவியுடன் அவர்களிடம் இருந்தும் நிவேதிதா தப்பி ஓடினார்[9]. ஒரு வழியாக தான் தங்கிய இடத்திற்கு சென்றுள்ளார்[10].  தன் அறைக்குச் சென்றடைந்ததும், காதலருக்கு போன் செய்து வரவழைத்து உடனேயே கோவாவில் இருந்து கிளம்பி விட்டார்[11].

nivedhita-actress-harassed-at-goa

எந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம்: பெங்களூரு திரும்பிய அவர் கோவாவில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என்று மிரட்சியோடு கூறினார்[12]. கோவாவில், தனக்கு இந்த இந்த கசப்பான அனுபவத்தை தனது நண்பர்களிடம் பயத்துடன் கூறியுள்ள நடிகை நிவேதிதா[13], இது குறித்து போலீஸில் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லையாம்[14]. “பொதுவாக, ஒரு பெண் ஆணுடன் இருந்தாலே, பார்ப்பவர்கள், அந்த ஆணுக்குத் தான் அப்பெண் சொந்தம் என்பது போல நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவளது நிலைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது மிகவும் அபத்தமானது,” என்றார்[15]. இதற்காக தான் எந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை என்றும், அடிப்படையிலேயே, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம் என்றார். இப்பொழுது சுத்தி என்ற படத்தில் நடித்து வருகிறாராம்[16]. நிவேதிதா, “சந்தனக் கட்டை” நடிகை என்று, செல்லமாக அழைக்கப்படுகிறார்[17]. ஸ்மிதா என்று கன்னடத்தில் பிரபலமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவ்வ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான மாநில அரசின் விருதையும் பெற்றார்[18].

nivedita-cneglitz

அந்நியருக்காக வசதிகள் செய்யப்பட்ட கோவாவில் எகப்பட்ட சட்டமீறல்கள்: கோவாவில், 60 ஆண்டுகளாக, அந்நியர்கள், மேனாட்டவர் சுற்றுலாவிற்கு வருகிறார்கள், அதனால், வருமானம் வருகிறது என்ற நோக்கில் தான், சலுகைகள்-வசதிகள் என்ற போர்வையில், அவர்கள் கடற்கரையில், அரைகுறை உடைகளுடன் படுத்து கிடக்கலாம், அவ்வாறே உட்கார்ந்து கொண்டு ஆண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கலாம், குடித்து கும்மாளம் அடிக்கலாம் போன்றவை அனுமதிக்கப் பட்டன. அந்நிலையில், போதை மருந்து விற்பது போன்றவையும் அரங்கேறின. போதாகுறைக்கு, நாகரிகமான விபச்சாரமும் சேர்ந்து கொண்டது. அறை என்று எடுத்து கொண்டால், குடி-கூத்தி என்றெல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் உண்டாகி, அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் செல்ல ஆரம்பித்தனர். 2015 ஜூனில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில், விபசார பெண் தரகர் ஆயிஷா சய்யத் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்[19]. அவர், பல்வேறு ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. மற்றொரு ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இந்த சோதனையின்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு நடிகை, போலீசாரால் மீட்கப்பட்டார்[20]. அவர் பல்வேறு தெலுங்கு மற்றும் இந்தி வெற்றிப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவரை அரசின் பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

niveditha-hot2சாதாரண பெண்ணின் நிலை என்னவாகும்?: நடிகை, பிரபலமான நடிகை, வசதியாக வாழ்கின்ற பெண், என்ற ரீதியில் உள்ள இவருக்கே, இந்த கதி என்றால், சாதாரண பெண்ணின் நிலை என்ன, என்னாவாயிருக்கும் என்று நினைத்தால், அச்சமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை கோவாவை அம்மாதிரி உருவாக்கி இருக்கிறார்கள் எனலாம். தமிழில், கோவா என்ற படத்தில் கூட, கோவாவுக்குச் சென்றால், பெண்கள் கிடைப்பார்கள், அழகான பெண்கள் கிடைப்பார்கள், மேலும் அந்நிய நாட்டு பெண்கள் கிடைப்பார்கள், ஜாலியா இருக்கலாம், பொழுது போக்கலாம், அனுபவிக்கலாம் என்ற ரீதியில் தான் அப்படம் எடுக்கப்பட்டது. இதனால், பார்க்கும் இளைஞர்கள் மற்றும் சபலமானவர்களுக்கும் அவ்வாறே கருத்துருவாக்கம் ஏற்பட்டு, எப்படியாவது, கோவாவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்றே துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள். வியாபாரத்துடன், இத்தகைய அசிங்கங்கள், சட்டமீறல்கள் எல்லாமே சகஜமாகி விட்டன. அந்நிலையில், நிவேதிதா அல்ல, எந்த பெண்ணுமே அங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. இல்லை, அங்கு செல்லாமலே கூட இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

14-02-2017

nivedhita-sexually-harassed-at-goa-beach

[1] The Times of India, Actress speaks out about being harassed in Goa, Dhwani Desai| TNN | Updated: Feb 11, 2017, 09.40 AM IST.

[2] http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/niveditha-on-goa-harassment/articleshow/57082318.cms?

[3] சினி.உலகம், கோவாவில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள், மகாகலட்சுமி, பிப்ரவரி 13, 2017.

[4] http://www.cineulagam.com/actors/06/136545

[5] மாலைமலர், நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை, பதிவு: பிப்ரவரி 13, 2017 10:02 . IST.

[6] http://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/02/13100255/1067936/kannada-actress-nivedita-harassment.vpf

[7] தமிழ்.பிளிம்.பீட், கோவா பீச்சில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷமிகள், Posted by: Siva, Published: Sunday, February 12, 2017, 10:59 [IST]

[8] http://tamil.filmibeat.com/news/kannada-actress-harassed-goa/slider-pf53736-044693.html

[9] தினமலர், பிறமொழி சினிமா: கோவாவில் நிவ்ந்ந்திதாவுக்கு நேர்ந்த கொடுமை, பிப்ரவரி.13, 2017. 10.27. IST.

[10] http://cinema.dinamalar.com/tamil-news/56168/cinema/Kollywood/Niveditha-sexually-harassed-in-Goa.htm

[11] தினத்தந்தி, நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை , பிப்ரவரி 13, 02:24 AM

[12] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/02/13022418/actress-Nivedita-harassment.vpf

[13] சென்னை.ஆன்.லைன், செக்ஸ் தொல்லைகடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை!, February 13, 2017, Chennai

[14]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88

[15] The Times of India, Niveditha sexually harassed in Goa, TNN | Updated: Feb 9, 2017, 10.56 AM IST.

[16] http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/niveditha-sexually-harassed-in-goa/articleshow/57053813.cms

[17] India.today.cinema, Sandalwood actress Niveditha sexually harassed by a group of hooligans in Goa, February 9, 2017 5:03 pm.

[18] http://movies.indialivetoday.com/2017/02/09/sandalwood-actress-niveditha-sexually-harassed-by-a-group-of-hooligans-in-goa/

[19] தினத்தந்தி, கோவா நட்சத்திர ஓட்டலில் நடந்த விபசார வேட்டையில் நடிகை சிக்கினார் பெண் தரகர் கைது, ஜூன் 03, 2015, 02:26 AM.

[20] http://www.dailythanthi.com/News/India/2015/06/03022659/GoaStar-hotelThe-actress-was-involved-in-prostitution.vpf