Archive for the ‘கலை விபச்சாரி’ Category

விபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்? – [2]

ஒக்ரோபர் 30, 2018

விபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும்திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்? – [2]

Chennai prostitution- Annanagar arrest

அட்டோபர் 2018ல் விபச்சார விவகாரங்கள்: ஹைடெங் பங்களா.. 60 பெண்கள்… கொட்டும் மாமூலுடன் கூடிய பணமழை.. எட்டு வருட விபச்சார சொகுசு வாழ்க்கை என்று வாழ்ந்து எட்டு வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிய 58 வயது டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார்[1]. அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அபார்ட்மெண்ட்டில் ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்தது. இவர் ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்தவர். பல பெண்களை வைத்து ரவி பாலியல் தொழில் செய்து வருபவர். இதனால் எட்டு வழக்குகள்கூட இவர் மீது உள்ளது. சில நடிகைகளை இறக்கிவிட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை கையும் களவுமாக பிடிபட போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான்.

Chennai prostitution- actresses arrested-2

இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி பணத்தை அள்ளி வந்திருக்கிறார். அதனால் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனோ ரவியை பிடித்தே ஆக வேண்டும் கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டார். இதனால் ரவியை பிடிக்க ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டது. அவரது ரகசிய நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு இதே குடியிருப்பில் கன்னட நடிகை பிரியா என்பவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது போலீசார் வீட்டுக்குள் நுழைந்து நடிகை பிரியாவை பிடித்தனர். மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மற்ற பெண்களையும் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் ரவி அப்போதும் எஸ்கேப்!! சம்பவத்தன்று வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தது. இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களும் மீட்டனர். ரவியையும் கைது செய்தனர்[2]. தற்போது ரவியை போலீசார் இனி கவனிக்கும் விதத்தில் விசாரித்தால்தான் இந்த 8 வருடங்களில் செய்த அட்டூழியங்களும், இளம்பெண்களின் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவரும். அதோடு 8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பதும் தெரியவரும்!

Chennai prostitution- Annanagar arrest-2

ஆகஸ்ட் 2018ல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்: வெளிநாட்டு பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த நான்கு பேரை, விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்[3]. சென்னையில் மைலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வெளிநாட்டு பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வருவதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[4]. அந்த ஓட்டலில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாட்டு பெண்களை வைத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த, சேலத்தைச் சேர்ந்த மதியழகன், 21 உட்பட நான்கு பேரை கைது செய்தனர். ஹஸன் சமீர் என்பவன் உக்ரைன் நாட்டு விபச்சாரிகளை மும்பை-பெங்களூரு மூலம் சென்னைக்கு வரவழைத்து, விபச்சாரம் மேற்கொண்டான். இதற்ற்கு ஓட்டல் மேனேஜர் முரளியும் உடந்தை[5]. அவர்களிடமிருந்து, இரண்டு வெளிநாட்டு பெண்களை மீட்டு, போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Chennai prostitution- actresses arrested

2012ல் அம்மா நடிகை சோபனா கைது: ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து உட்கார்ந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து உல்லாச விருந்து படைப்பதாக போலீசுக்கு ரகசிய புகார் வந்தது[6]. பிரபல அம்மா நடிகை சோபனா இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் கண்டறியப்பட்டது[7]. இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை நியமிக்கப்பட்டது.அம்மா நடிகையிடம் போலீஸார் போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினர்[8].

Chennai prostitution- reasons- ME TOOworks

போலீசார் விரித்த வலையில் சோபனா சிக்கினார். பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா-தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர்.  நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து ஒருமணி நேரம் கழித்து அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்[9]. அடுத்து அக்கா-தங்கை இருவரும் பிடிபட்டனர். சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Chennai prostitution- Rape scene

தமிழகத்து சினிமா, அரசியல், திராவிடத்துவம் முதலியன: நடப்பது சரியில்லை என்றால், முதலில் சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் சினிமாவின் ஆதிக்கம் திராவிட அரசியலுடன் ஒன்றி விட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி, என்ற திராவிடத்துவ வெறி, வன்முறை அரசியலிலிருந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற அனுசரித்து செல்லும் வழியில் வளர்த்து, இன்று ரஜினி, கமல்ஹஸன், விஜய் ரீதியில், ஹைடெக் பாணியில், கார்புரேட் வழியில் நடக்கின்ற நிலைக்கு மாறிவிட்டது. இருப்பினும், பெண்கள் நிலை படுமோசமாகத் தான் இருக்கிறது.

  1. கண்ணகி, கற்பு என்பவற்றைப் பற்றி பறைச்சாற்றும் தமிழகத்தின் பெண்மைநிலை இப்படியா இருக்க / மாற வேண்டும்?
  2. படிக்கும் பெண்ணிற்கு உடலை விற்கலாம், படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொடிய-குரூர எண்ணம் எப்படி உருவாகியது?
  3. மன-ஒழுக்கம், உடல்-ஒழுக்கத்தின் மீது ஆதிக்கம் செல்லுத்துகிறது. மனவொழுக்கம், நற்சிந்தனைகள், சமுதாய சிறப்புகளினால் மேம்படுவது.
  4. இந்திய பெண்மையினை சீரழித்தால், இந்திய சமூகம் கெட்டு விடும், இந்தியாவை அழித்து விடலாம் போன்ற திட்டம் உள்ளதா?
  5. சேர்ந்து வாழ்வேன், திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன், திருமணத்திற்கு முன்பாக கற்பு இருப்பது எதிர்பார்க்க முடியாது. இவற்றை சொன்னது இன்றைய தமிழக அரசியல்வாதியின் மகளும், காங்கிரஸ் கட்சி தலைவியும் தான்!
  6. தனிமனித ஒழுக்கம், மனத்தூய்மை, உடல் புனிதம் எல்லாம் வேண்டாம் என்ற அளவிற்கு தமிழச்சியை தூண்டி விடுவது எந்த சித்தாந்தம்?
  7. பெண்—குழந்தை காப்போம், பெண்மையை போற்றுவோம் என்ற நிலையில் பாடுபடும் போது, இத்தகைய பெண்-விரோதிகள் எவ்வாறு உருவாகின்றனர்?
  8. ஒழுக்கம் கெடுக்கும் ஜிஹாத், புனிதத்தை சீரழிக்கும் சிலுவை-போர், தார்மீகத்தை அழிக்கும் புரட்சி என்றெல்லாம் இருந்தால், அவை அழிக்கப் படவேண்டும்.
  9. திராவிட சித்தாந்தம், அரசியல், சினிமா, முதலியவற்றால், பெண்கள் நிலை மாறவில்லை,, இத்தகைய பாலியல் குற்றங்கள் பெருகின்றன எனும்போது, பரிசீலினை, மறுபரிசீலினை செய்ய வேண்டியுள்ளது.
  10. பெண்மை நிச்சயமாக பெண்மைக்கு எதிராக செயல்படாது, பெண்மையை பழிக்காது, அத்தகைய பெண்மை தான் பாரதத்திற்கு வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-10-2018

Chennai prostitution- Rape scene.2

[1] தமிழ்.ஒன்.இந்தியா, 8 ஆண்டுகளில் 60 இளம்பெண்கள் நாசம்.. விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது, ஹேமாவந்தனா, அக்ட்டோபர்.4, 2018. 09.17.

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/prostitution-broker-tailor-ravi-arrested-after-8-years-late-in-chennai-331188.html

[3] தினமலர், பாலியல் தொழில்வெளிநாட்டு பெண்கள் கைது, Added : ஆக 04, 2018  06:39

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=2075065

[5] Two of the arrested are Pandian, 21, and Mathialagan, 22. Both of them worked for Samir, a Bengaluru-based pimp, who lured the women from abroad to work in India. The other two arrested suspects are Murali and Hasan. Police said Hasan worked as a front office assistant while Murali as the security lobby manager at the hotel. Preliminary inquiries revealed that the two women came from to India after being in touch with Samir through a common friend. One women reached India on July 6 and the other on July 9. They first came to Mumbai and stayed there for two weeks as per the direction of Samir before coming to Chennai. Through Hasan Samir booked rooms for the girls close to the service lift on two separate floors. As per plans, the customers were directed by security lobby manager Murali to use the service lift to reach the rooms.

[6] வெப்துனியா, விபச்சாரத் தொழில்: பிரபல அம்மா நடிகை கைது, பிப்ரவரி 21, 2012

[7] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-112022200012_1.htm

[8] தினமலர், நடிகைகளை வைத்து விபச்சாரம்! பிரபல அம்மா நடிகை கைது, பிப்ரவரி 21, 2012

[9] http://cinema.dinamalar.com/tamil-news/6547/cinema/Kollywood/Actress-arrest-under-prostution-case.htm

விபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும்  – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]

ஒக்ரோபர் 30, 2018

விபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும்  – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]

Chennai prostitution- Court orders DAVC to complete investigation

சினிமா நடிகைகளுக்கு ஐங்குணங்கள் இல்லை: “மீ டூ” இயக்கம் ஆரம்பித்து, ஏதோ பெரிய புரட்சி செய்து விட்டது போன்று, சமூக வளைதளங்களில் பதிவுகள், பாலியல் குற்றச்சாட்டுகள், பரஸ்பர செக்ஸ் சதாய்ப்புகள், தகாத முறையில் தொட்டு விட்டார் என்றெல்லாம் நடிகைகள் புகார் சொல்ல ஆரம்பித்தது வேடிக்கையாகவும், திகைப்பாகவும், தமாஷாகவும் இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதில் மேலும் படுவேடிக்கை என்றவெல்லாம், கவர்ச்சி மற்றும் ஆபாசமாக நடித்த நடிகைகள், தாங்கள் இதுவரை, அத்தகையில், சதாய்ப்புகளில் மாட்டிக் கொள்ளவில்லை என்றெல்லாம் அறிக்கை விட்டது தான்!

  1. 1960களின் ரேப் காட்சிகள்,
  2. 1970களின் ஈர உடை டூயட்கள்,
  3. 1980களின் ஈருடை கட்டிப் பிடிப்புகள், அணைப்புகள், ஊர்வன-தடவுதல்-ஆ-ஊ-ஊளையிடல்,
  4. 1990ளின் குத்தாட்டங்கள்,
  5. 2000களின் முலைகள் காட்டும், ஆட்டும் நடனங்கள்,
  6. 2010களின் கேமரா வெளிப்படையான சிலுமிஷன்கள் [மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிஞ்சும்]

முதலியவை பெண்களை உயர்த்துவதாக இல்லை. பணத்திற்காக, பெரிய நடிகைகளே அத்தகைய “கேபரா” ரேஞ்சில் நடித்து, தங்களது “மீ டூ” அல்லது “வி…டூ” போன்றவற்றைக் கட்டிக் கொண்டார்கள். சினிமா நடிகைகளுக்கு ஐங்குணங்கள் இல்லை, இருந்தால், நடிகை ஆக முடியாது.

Chennai prostitution- reasons

அரசியல்வாதி குஷ்பு போன்ற நடிகையின் வெளிப்பாடு மற்றும் நிலைப்பாடு: மீ டூ பிரச்சனையில் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்[1]. கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் ‘மீ டூ’ ஹேஷ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக மட்டுமே இது தமிழகத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை குஷ்புவை பாலியல் குறித்த பிரச்சனைகளை நீங்கள் சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு கூறியதாவது: “40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றியதால் எனக்கு எந்த பாலியல் பிரச்சனைகளும் ஏற்படவில்லை”, என்று கூறியுள்ளார்[2]. சின்மயி விசயத்தில் மாறுபட்ட கருத்து கூறியதும், அவரது, பாரபட்ச, நிலையற்ற, பொய்யான வெளிப்பாட்டைக் காட்டியது[3]. சின்மயியின் கணவரே கண்டிக்க வேண்டியதாயிற்று[4]. கற்பைப் பற்றி கேவலமாக பேசி, அரசியல் ஆதரவில் தப்பித்த நடிகை இவ்வாறு பேசுவது?

Chennai prostitution- and Me too

சினிமா விபச்சாரம் புவனேஸ்வரி முதல் இப்பொழுது வரை: சென்னை சினிமா உலகம் – “கோலிவுட்” விபச்சாரிகளை உண்டாக்குவதில் பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான். முன்னரே குறிப்பிட்டது போல சினிமா நடிகைகளுக்கு ஐங்குணங்கள் இல்லை, இருந்தால், நடிகை ஆக முடியாது. 1950களிலிருந்து உள்ள கதைகளை இங்கு திரும்பி அலச வேண்டிய அவசியம் இல்லை.  புவனேஸ்வரி விசயத்தில் குதித்த பெரிய-பெரிய நடிகர்-நடிகைகள், தொடர்ந்து, மாட்டும் நடிகைகளின் விபச்சார விவகரங்களில் அமைதியாக இருந்து கொண்டு, “மீ டூ” விசயத்தில் குதிக்கிறார்கள். “படுத்தால் சான்ஸ்” விவகாரம் இப்பொழுது வெளிப்படையாகி விட்டது. அதனை மீறி “மீ டூ” செய்ல்படுவது போல காட்டிக் கொள்கிறார்கள். பலமுறை எடுத்துக் காட்டிய படி, நடிகைகள் எப்பொழுது கற்பு பற்றி அலட்சியமான கருத்துகளை வெளியிட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் பரத்தைத் தனத்தை ஒப்புக் கொண்டது போலாகி விட்டது. தொலைக் காட்சி வந்து, “டிவி சீரியல்” என்பது வந்தவுடன், அதனையே தொழிலை வைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரக் கணக்கில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சிகளில் [பட்டி மன்றம், சினிமா, பாட்டு…..] பங்கு கொள்ள வேண்டும், தங்களது முகம் டிவியில் வர வேண்டும் போன்ற அல்ப ஆசைகளைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம், துறைகளில் உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வெறியோடு அலைகிறார்கள் என்பது தெரிந்த விசயம் தான்.

Chennai prostitution- Court orders DAVC to complete investigation.News18

வேலியே பயிரை மேயும் விவகாரங்கள்: விபசார தடுப்பு பிரிவு போலீசார் என்ற தனிப்பிரிவு போலீஸார் இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விபச்சாரம் நடப்பது, அதிலும் திட்டமிட்டு, ஏற்படுத்தப் பட்ட ரீதியில் பல வழிகளில், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வரை நடப்பது பிரமிக்க வைக்கிறது. ஏனெனில், அந்நிலையில், பலருக்கு அவ்விவகாரங்கள் தெரிய வருகின்றன. ஏதோ ஒரு பெண் தனது ஏழ்மைக்காக, குடும்பத்தைக் காப்பதற்காக செய்கிறாள் என்றில்லாமல், அதையே ஒரு தொழிலாக, வியாபாரமாக, லட்சங்களில், ஏன் கோடிகளில் அள்ளும் கார்புரேட் பாணியில் செய்யும் போது, அவற்றில் பலர் பலவிதங்களில் சம்பந்தப் பட்டிருப்பது, ஒத்துழைப்பது, முதலியவை தெரிகின்றன. சினிமா, அரசியல், போலீஸார் என்று பலரும் அதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப் பட்டிருக்கின்றனர். கைதாகி மாட்டிக் கொள்பவர் சிலரே, சிக்கிக் கொள்ளாமல் இருப்பவர் பலர் என்பது தெரிந்த விசயமே…

Chennai prostitution- Court orders DAVC to complete investigation.Dinakaran

விபச்சார தடுப்பு போலீஸாரே விபச்சாரத்திற்கு துணை போனது: சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[5]: “கடந்த மே மாதம் வெளியான பத்திரிக்கை செய்தியில்[6] விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் (சாம் வின்சன்ட் மற்றும் சரவணன்) விபசாரத்தை தொழிலாக செய்யும் புரோக்கர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு விபசாரத்தை அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் இருவரும் வேறு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். மக்களுக்காக பணியாற்ற இரு காவலர்களும் தகுதியற்றவர்கள், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எப்படி நேர்மையாக மக்கள் பணியாற்ற முடியும்.  அதனால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்து அவர்கள் மீது சட்ட விரோத கடத்தல் சட்டத்தின் படி குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன். அதன் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேநீதிமன்றம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவிட வேண்டும்”, என குறிப்பிட்டிருந்தார்[7].

Chennai prostitution- actresses arrested

நீதிமன்ற உத்தரவுகாவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரண்டு மாதத்தில் முடித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு: லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்னையில் பாலியல் தொழிலை அனுமதித்த இரு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரண்டு மாதத்தில் முடித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு [ Directorate of Vigilance and Anti-Corruption (DVAC)] சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[8]டிப்பொழுது நடந்து வரும் பாலியல் பலாத்காரங்கள், அதன் ரீதியில் அரங்கேறும் வன்முறைகள், கொலைகள் சமூகத்தை அதிக அளவில் பாதித்து வருகின்றன. அந்நிலையில், இத்தகைய “வேலியே பயிரை மேயும்” விவகாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அது மட்டுமல்லாது, திராவிடத்துவம் பேசும் கலாச்சாரக் காவலர்களால் ஏன் சமூகத்தை திருத்த முடியவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. சென்னையில் விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளர்களாக பணியாற்றிய சாம் வின்சென்ட் [Sam Vincent], சரவணன் [M Saravanan ] ஆகிய இருவரும், பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சென்னை நகரில் பாலியல் தொழிலை அனுமதித்ததாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின[9]. “டைம்ஸ் ஆப் இந்தியாவில்” வந்ததாக, அந்நாளேடு பதிவு செய்துள்ளது[10]. இதுசம்பந்தமாக விசாரணை நடத்திய சென்னை காவல் ஆணையர், இரு ஆய்வாளர்களையும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றி உத்தரவிட்டார்[11]. இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யக் கோரி அக்பர் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்[12]. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் [Justice S Manikumar] மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் [Justice Subramoniam Prasad ] அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த இரு ஊழல் அதிகாரிகளும் காவல் துறையில் பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவர்களைபணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்[13]. இதையடுத்து, இரு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

© வேதபிரகாஷ்

30-10-2018

OMR resort Prostitution 02-06-2018-2

[1] தமிழ்.மினட்ஸ், மீ டூபிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு, By  bala, 13th October 2018.

[2] https://www.tamilminutes.com/kushoo-tweet-about-her-metoo-experience/5809/

[3] தினத்தந்தி, ட்விட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்ட சின்மயிகுஷ்பூ, பதிவு : அக்டோபர் 24, 2018, 11:52 PM.

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/24235204/1012918/Twitter-Kushbu-Sundar-Chinmayi-Rahul-Ravindran.vpf

[5] தினகரன், பாலியல் தொழில் நடத்த அனுமதி அளித்த 2 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஐகோர்ட் அதிரடி, 2018-10-30@ 00:42:57.

[6]  Kotturpuram inspector Mahalakshmi and intelligence wing inspector Shanmugavelan have taken their place as AVS inspectors. The department on Tuesday also announced routine transfers of police officers, moving at least 13 other officers. Inspector Padmavathi will take charge as the Kodungaiyur crimewing inspector; Jothilakshmi has received a posting to the MKB Nagar asinspector (law andorder); inspector Tiripurasundari and inspector Jayabharathi will move to the Central Crime Branch(CCB); and inspector ValarmathijoinstheKotturpuram police(crimewing). Inspector Murugan was moved to the Foreshore Estate (crime) and inspector Thanga Mangani to the special security unit of the Chennai Police; it transferred inspector Prema to the Ennore police (crime); inspector IdhayaKala to the Muthialpet police (crime); inspector JayarajtotheMarina police(law andorder); andinspector E Saravanan tothecontrol room.TOI dated May 16, 2018, titled ‘Two anti-vice officers caught in sex racket’.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=446615

[8] Times of India, Cops in flesh trade: HC asks DVAC to complete probe, TNN | Oct 29, 2018, 23:54 IST.

https://timesofindia.indiatimes.com/city/chennai/cops-in-flesh-trade-hc-asks-dvac-to-complete-probe/articleshow/66421622.cms

[9] தினத்தந்தி, பணம் பெற்றுக் கொண்டு, பாலியல் தொழிலை அனுமதித்த விவகாரம், பதிவு : அக்டோபர் 29, 2018, 05:31 PM

[10] Times of India, Chennai: Two anti-vice officers caught in sex rackets, TNN | May 16, 2018, 05:37 IST

https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-two-anti-vice-officers-caught-in-sex-rackets/articleshow/64183107.cms

[11] https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/29173158/1013423/Chennai-Police-Case.vpf

[12] நியூஸ்.18, சென்னையில் பாலியல் தொழிலை அனுமதித்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம், news18 , Updated: October 29, 2018, 6:13 PM IST.

[13] https://tamil.news18.com/news/tamil-nadu/madras-high-court-directs-vigilance-department-to-take-against-two-police-inspectors-for-taking-bribe-in-prostitution-case-64809.html

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்!

ஓகஸ்ட் 19, 2016

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்!

Shruti_Hassan_Gautami_2016_08_16_18_27_33

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்த மற்றும் கணவன்: கமல் ஹஸன் பொருத்த வரையிலும், பெண்களிடம் கொண்ட உறவுகள் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்துள்ளன. திரைக்கு முன் மற்றும் பின் என்று அவ்விவகாரங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இருந்துள்ளன. கௌதமி கமலுடன் சேர்ந்து வாழும் முறையில் வந்து சேர்ந்த பிறகு, ஸ்ருதி மற்றும் பல்லவி இருவருக்கும் தாயன்பு கிடைத்தது என்ற விதத்தில் கூட சொல்லப்பட்டது. ஆனால், பெண்கள் வளர-வளர சிறிது சிறிதாக வேறுபாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கமலின் துணைவி கவுதமி இருந்து வருகிறார். அந்த வகையில், சபாஷ் நாயுடு படத்திற்கும் கவுதமி காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில், கவுதமியை தவிர்த்து படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டாக்களை சமூக வலை தளங்களில் கமலின் இரு பெண்களும் வெளியிட்டனர். இது கவுதமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது[1]. மேலும், அமெரிக்காவில் கவுதமி தரும் ஆடைகளை குறை சொல்லி, வேண்டாம் என்று மறுத்து ரகளை செய்துள்ளார் ஸ்ருதி[2]. இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிப்பதை அறிந்த கமல் ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளார். ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

492080-shruti-gautami

சபாஷ் நாயுடுபடத்தின் படப்பிடிப்பின் போது கெளதமிஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு: ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவில் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பின் போது கெளதமி – ஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்த படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது[3] என்கிறது தினத்தந்தி. அதாவது, கமலுக்கு சாதகமாக செய்தியை வெளியிட்டது போலும்.

kamal-shruti-gautami

ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம்: இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்[4]. அதில், “ஸ்ருதி ஒரு ஃபேஷன் பிரியை. அதனால் அவரது படங்களிலும் கூட அது பிரதிபலிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதேவேளையில் தயாரிப்பாளர், இயக்குநருடன் இணைந்தே தன்னுடைய தோற்றம் ஆடைகளை அவர் இறுதி செய்கிறார். அப்படித்தான் அவரது தந்தையின் படத்திற்கும் அவர் மெனக்கெட்டிருக்கிறார். தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் தனக்கென்று ஒரு தனி டிசைன் என்று தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் விரும்புகிறார். தனது ஆடை அலங்காரம் பற்றி இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் அவர் கலந்து பேசுவது வழக்கம்[5]. ஆனால், இம்முறை பேசவில்லையா என்ன? இப்பொழுது, தோற்றம் ஆடைகளை தேர்ந்தெடுப்பது ஸ்ருதிக்கு என்பதால் தான் பிரச்சினையே. ஸ்ருதி, அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடிப்பது, கௌதமிக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ள வேளையில், தெலுங்கில் தாராளாமாக கவர்ச்சி காட்டி வரும் ஸ்ருதி, இப்படத்திலும் அவ்வாறே தோன்ற விரும்பியதில் வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

ஸ்ருதி, கௌதமி

ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது: ‘சபாஷ் நாயுடு’வில் ஸ்ருதியின் கதாபாத்திரம் வித்தியாசமானது. ஒரு ஃபேஷனபிள் இளம் பெண். குறும்புக்கார பெண். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளர்ந்த கவலைகள் அறியா பெண்ணாக நடிக்கிறார். இதை மனதில் கொண்டு கெளதமி சில ஆடைகளை ஸ்ருதிக்காக வாங்கினார். ஆனால், வழக்கம்போல் அந்த ஆடை அலங்காரப் பொருட்கள் பற்றி தயாரிப்பாளர் மற்ற கலைஞர்களுடன் ஆலோசித்தபோது ஸ்ருதிக்கு அந்த ஆடைகளை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் ஆடைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. கெளதமியும் அதை ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைக்குப் பின்னர் அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து திரையுலகில் ஒருவர் “ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது[6]. ஸ்ருதிக்கும் கமலுக்கும் இடையில் அன்பும் திறந்த மனப்பான்மையும் கொண்ட உறவு நிலவுவதால் அவர்கள் குடும்பத்தில் கெளதமியையும் ஏற்றுக் கொண்டனர். ஸ்ருதி தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய போது, அதில் கெளதமியும் பங்கேற்றுக் கொண்டார். இதிலே அவர்களுடைய உறவு எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்கும்” என்று தெரிவித்தார்[7].

ஸ்ருதி, கௌதமி., பல்லவி

உண்மையில் நடந்தது என்ன?: இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரியாக செய்திகளை வெளியிட்ட நிலையில், ஆங்கில ஊடகங்கள், இல்லை அண்டை போட்டது உண்மைதான் என்கின்றன. மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஸ்ருதி ஒரு முன்னணி வேடத்தில் நடிக்கிறார். கௌதமி, ஸ்ருதியின் தோற்றம் மாறும்படியான, ஆடைமாற்றத்தை செய்யும் கௌதமியின் போக்கு பிடிக்கவில்லை என்று பலர் சொல்லித் தெரியய வந்துள்ளது[8]. செட்டிங்குகளில், ஆடைப்பற்றிய விவகாரத்தில், இருவரும் எப்பொழுதுமே வாதித்துக் கொண்டிருப்பதை பலரும் பார்க்க நேர்ந்தது[9]. இதனால், சூடான வாதம், விவாதமாகி, வாய் சண்டை வரைக்கும் போய் விட்டது[10]. ஒருமுறை, இவ்விருவருக்கும் ஏற்பட்ட சண்டையினால், சூட்டிங்கே ஒத்திவைக்கும் நிலைக்குப் போய்விட்டது[11]. அந்நிலையில் தான், விசயம் அனைவருக்கும் தெரிந்து, வெளியே வந்தது. இந்தியா-பாகிஸ்தான் சண்டையா இது, முக்கியமாக செய்திகளை போட, மக்கள் படித்துத் தெரிந்து கொள்ள? ஆனால், தமிழ் மக்களுக்கு உக்கியமாக உள்ளது, தேவையாக உள்ளது. இனி ஸ்ருதி மற்றும் கௌதமிகளுக்கு ஏதாவது நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டியது தான் பாக்கி. சீகிரம் அதுவும் நடக்கும், செய்தி வரத்தான் செய்யும்!


© வேதபிரகாஷ்

19-08-2016

27-1467012572-shruti-hassan

[1] தமிழ்.வெப்.துனியா, ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை, Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:51 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/what-is-problem-between-shruti-haasan-and-gowthami-116081800016_1.html

[3] தினத்தந்தி, நடிகை கவுதமியுடன் சுருதிஹாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி செய்தி தொடர்பாளர் அறிக்கை, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 12:15 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST

[4] தி இந்து, கெளதமியுடன் கருத்து வேறுபாடா? – ஸ்ருதி தரப்பு விளக்கம், ஸ்கிரீனன், Published: August 16, 2016 18:07 ISTUpdated: August 16, 2016 18:07 IST

[5] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/08/17001555/Actress-Shruti-Hassan-differences-with-kavutami.vpf

[6] http://tamil.filmibeat.com/heroines/no-difference-opinion-with-gouthami-shruthi-hassan-041744.html

[7] http://cinema.dinamalar.com/tamil-news/49875/cinema/Kollywood/Shruti-denied-there-is-miff-behttp://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8994441.ecetween-her-and-Gouthami.htm

[8] Gautami had been brought on as a costume designer for the trilingual film, which has Shruti in the lead role. Several sources from the film’s sets had revealed that Shruti was unhappy with Gautami for changing her look in the film, leading to a spat between the two of them. “There was always tension in the atmoshpere as Shruti and Gautami would constantly quabble over costumes. There would heated arguments and tiffs between the two of them. At one stage, things got so ugly that a whole day’s shoot had to be cancelled,” a source said.

Indian Express, Shruti-Gautami spat: The real story, By Suhas Yellapantula, Published: 17th August 2016 02:47 AM; Last Updated: 17th August 2016 11:02 AM

[9] http://www.newindianexpress.com/entertainment/telugu/Shruti-Gautami-spat-The-real-story/2016/08/17/article3582770.ece

[10] DNA, Shocking: Shruti Haasan and Kamal Haasan’s partner have an ugly fight on the sets!, Mon, 15 Aug 2016-05:01pm , dna webdesk

[11] http://www.dnaindia.com/entertainment/report-shocking-shruti-haasan-and-kamal-haasan-s-partner-have-an-ugly-fight-on-the-sets-2245379

நடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்!

ஓகஸ்ட் 11, 2016

நடிக்கனும்னா படுக்க வாகேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்!

tisca-chopra2-750x500

தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது:  கேஸ்டிங் கௌச் என்று நாகரிகமாக இப்பொழுதெல்லாம் சொல்லப்படுகிறது[1]. அதாவது, பெண்கள் வேலை செய்யும் இடங்களில், தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும், சலுகை பெற வேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. இந்தியாவில் இது பெரிய இடங்களில் நடப்பதால் தெரியாமல் போகிறது. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் சகஜமாக இருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்த வரையில் முன்னமே இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன என தெரிகிறது[2]. அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர்சட்டையை  கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது[3]. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.

 டிஸ்கா சோப்ரா -சமரசம் - 11-08-2016

நடிகை டிஸ்கா சோப்ரா சொன்ன கதை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் [casting couch] செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா [Tisca Chopra], பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்[4]. இது தான் இப்பொழுது, முக்கியமான செய்தி போன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கொம்யூன் இந்தியா [Kommune India] என்ற அமைப்பு நிகழ்ச்சியில், கதை சொல்லுதல் என்ற முறையில் முதலையை கிருமிகளிடமிருந்து காத்தல் [Reptile Dysfunction] என்ற தலைப்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்[5]. தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ராவுக்கு, 42 வயதாகிறது. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது[6]. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு திரையுலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[7]. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார்[8]. ஆனால், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, தப்பித்து வந்ததாக கூறியுள்ளார்[9]. உண்மையிலேயே முதலையிடமிருந்து தப்பியுள்ளார்[10].

Tisca chopra-b w-2ஆண்களைக் கூட அழைக்கிறார்களாம்; பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆண்கள் எப்படி சமரசம் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை வயதான பெண்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்னமோ?. இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார்[11]. ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்[12]. அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை.

Tisca chopra-b wபிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகையின் கதி என்ன?: டிஸ்கா சோப்ரா இவர் பிரபல எழுத்தாளர், குஷ்வந்த சிங்கின் பேத்தி முறையாவார் [grand-niece]. ஏர் இந்தியாவின் பைலட் கேப்டன் சஞ்சய் சோப்ராவின் மனைவி. பல அரசுசாரா நிறுவனங்கள், முதலியவற்றுடன் சேர்ந்து கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் முதலியவற்றிற்காக பாராடி வருகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகைகளின் கதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், வருத்தமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. முன்பு மனீஷா என்ற நடிகை டைரக்டர் சச்சேந்திர சர்மா மீது அத்தகைய புகாரை வைத்தார்[13]. ஒரு மேடை நிகழ்ச்சியில், நடிகை, டைரக்டரை அறைய பெரிய கலாட்டாவே நடந்தது.

Tisca chopraஇளைஞர்களுக்கு எச்சரிக்கை: இக்காலத்தில் இந்திய சமுதாயத்தைக் கெடுக்க பலர், பலவிதமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. சினிமா, போதை, மேனாட்டு கலாச்சாரம் போன்றவை எல்லைகளை மீறி சென்று கொண்டிருக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியனவும், தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மோகத்தில் சிக்கிக் கொண்டு, இளம்பெண்களை சீரழித்து வருகின்றனர். அது கொலை போன்ற கொடூரங்கங்களிலும் முடிகின்றன. ஆனால், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. தினம்-தினம் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், இப்பிறழ்சிள், சீரழிவுகள், பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்புகள், கொலைகள் முதலியன நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர்கள் தங்கள் மீது தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு வாழாவிட்டால், இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி.

© வேதபிரகாஷ்

[1] The casting couchcasting-couch syndrome or casting-couch mentality is the trading of sexual favors by an aspirant, apprentice employee or subordinate to a superior in return for entry into an occupation, or for other career advancement within an organization. The term “casting couch” originated in the motion picture industry, with specific reference to couches in offices that could be used for sexual activity between casting directors or film producers and aspiring actresses or actors.

[2] For those who don’t know, casting couch is basically a system where opportunity or incentive is given to a person in return for sexual favours. And nowhere is this system more prevalent than in the film and entertainment industry. Bollywood especially has a long history of casting couch stories and scandals and despite all the negative attention it has garnered over the years, it is still very much a thing.

http://www.news18.com/news/buzz/actor-tisca-chopra-recalls-her-hilarious-casting-couch-experience-1277905.html

[3] http://english.manoramaonline.com/news/kerala/cherian-philip-lands-in-soup-with-sexist-remark-congress.html

[4] தினமலர், சான்ஸ்க்கு சமரசம் : பாலிவுட் நடிகைபகீர், ஆகஸ்ட்.10.2016, 22.09.

[5]  Ankita Rajeshwari, WATCH: Actor Tisca Chopra shares her experience with the casting couch, August 10, 2016, 11:24 PM IST

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582785

[7] daily.bhaskar.com, Tisca Chopra Tricked her Way off a Casting Couch Experience; Here’s a List of Some Not-so-Lucky Celebs!, Jasmine Philip | Aug 07, 2016, 17:39PM IST

[8] http://daily.bhaskar.com/news/ENT-BOW-bollywood-casting-couch-5390800-PHO.html

[9] http://www.news18.com/news/buzz/actor-tisca-chopra-recalls-her-hilarious-casting-couch-experience-1277905.html

[10] http://indiatoday.intoday.in/story/tisca-chopra-casting-couch-experience-sexy-bollywood-video-watch/1/733287.html

[11] IndiaToday.in, Tisca Chopra on casting couch and how she tricked her way out of a big Bollywood director’s scheme,  Posted by Devarsi Ghosh New Delhi, August 5, 2016 | UPDATED 23:30 IST

[12] http://blogs.timesofindia.indiatimes.com/everything-social/watch-actor-tisca-chopra-shares-her-experience-with-the-casting-couch/

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1136541

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

ஏப்ரல் 26, 2016

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

can beggars start dancing

மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].

India has been haven for pedophilesமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  2. இரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
  3. மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
  4. அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
  5. அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.
  6. 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.
  7. 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  8. லைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].

give us money - prostitution or just beggingமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

neither begggar nor prostituteபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.

மும்பை நடன பெண்கள்.6பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8].  தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர்.  மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9]. 

 mumbai_dance_bars_dancers_640x360_bbc_nocredit

பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே? பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும்? ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா? யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்?

© வேதபிரகாஷ்

26-04-2016

[1] http://www.vikatan.com/news/india/63085-better-to-dance-than-to-beg-says-supreme-court.art

[2] விகடன், பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!, Posted Date : 18:41 (25/04/2016)

[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/license-for-women-dance-bar-supreme-court-116042500041_1.html

[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)

[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24

[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/25154616/1008388/Better-to-dance-in-bars-than-beg-on-streets-Supreme.vpf

[9] http://ns7.tv/ta/nasty-not-act-dancing-supreme-court.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508964

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1509337

கொச்சை, மோசம், கேவலம், ஆபாசம், அசிங்கம் முதலியவற்றை சாடியுள்ள ஒரு இளம்பெண்ணின் எதிர்ப்பு கட்டுரை!

திசெம்பர் 13, 2015

கொச்சை, மோசம், கேவலம், ஆபாசம், அசிங்கம் முதலியவற்றை சாடியுள்ள ஒரு இளம்பெண்ணின் எதிர்ப்பு கட்டுரை!

 Stigmatises-women-recital--Actor-Simbu-musicProtesting - தினத்தந்தி போட்டோ

மணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்) அவர்களின் கடிதம்[1]: மிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே… திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு. அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

Anirudh Dhanush anti-Indian attitude

nirudh Dhanush anti-Indian attitude

பெண்கள் வார்த்தை வதைக்கு உட்படுத்துதல்[2]: ரமணி தொடர்கிறார், “பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள். இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள்வெர்பல் அப்யூஸ்எனப்படும், ’வார்த்தை வதையை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்நாங்கள் பெண்களை திட்டவில்லைஎன்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி! அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். “க்ளப்புல மப்புலபெண்கள் திரிவதாக பாடியஹிப்பாப் தமிழாதிரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள்.

அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார்.

பாரதியையே, சிலர், பேஸ்புக்கில், அவரது பிறந்த நாள் அன்று “ஜாதிய நோக்கில்” வசைபாடியுள்ளனர். அதாவது, பிரச்சாரம் கூட அந்த அளவுக்கு, நாகரிகம் இல்லாமல், கீழ்த்தரமாக செய்ய முனைந்து விட்டனர்.

குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை.

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவளஎன்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ: ரமணி தொடர்கிறார், “பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். ‘ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறுபெண்களும் குடிக்க வேண்டும்என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால்பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை. இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்படஅடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவளஎன்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லைபொயட்டுதிரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா?

உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனைஆண்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா?

இந்திரனுக்குக் கொடுத்த தண்டனையைத் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் போலும்!

உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?

Americanized westernized Indians degrading Indian womanhood.song

Americanized westernized Indians degrading Indian womanhood.song

வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர்: ரமணி தொடர்கிறார், “இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா?

பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும்வெர்ஜினிட்டிபோய்விடும். தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது?

இந்த அளவுக்கு வருத்தப்பட வேண்டாம். குஷ்பு வழக்கில் விடுவிக்கப்பட்டது ஞாபகத்தில் இருக்கலாம். உண்மை என்றாள் கூட, “வாய் சவடாலாக” எதையும் சொல்லக் கூடாது! பெண்கள் உறுதியாக, இப்பிரச்சினையில், போராடி, ஒரு முடிவை கொண்டு வர வேண்டும்.

அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்புதிரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்தபீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி,

 

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு.கூட்டு

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு.கூட்டு

பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்: ரமணி தொடர்கிறார், பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.

ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும்.

நிஜ வாழ்க்கையில் அவர்கள் அப்படி இருப்பதால், அவர்களால், பெண்மையைப் பற்றி அந்த அளவுக்கு யோசிக்கவும் முடியாது, மதிக்கவும் முடியாது! பொழுது போக்கிற்காக, “போர்னோகிராபி” அளவில், படம் எடுக்கின்ற அவர்களிடத்தில், ஒழுக்கம், கட்டுப்பாடு, நெறிமுறை முதலியவற்றை எதிர்பார்க்க முடியாது.

இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை.

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு

உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்குவிமர்சன சுதந்திரமும்இருக்கிறது: ரமணி தொடர்கிறார், “பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்! அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்ஷன்அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்குவிமர்சன சுதந்திரமும்இருக்கிறது.

இன்னுமொரு முக்கியமான விஷயம்சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லைஇப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..!

பாவம், கமல் ஹஸனே, அப்படித்தான், ஜன்னல் வழியாக பார்த்தேன் என்று, எல்லாம் தெரிந்ததைப் போன்று தீர்மானித்துக் கொண்டு, தனது உரிமையை வெளிப்படுத்தி, மாட்டிக் கொண்டார். இவர்களைப் பற்றிய விசயமே வேறு. வெள்ள நேரத்திலும், வீடுகளில் புகுந்து திருடிய செய்திகள் வந்ததே, அந்த வகையறாக்களை விட மோசம்! காசுதான் பிரதானம் என்று கலைவேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம், இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதே?

இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!

Shruti-haasan-s-late-night-fun-with-anirudh

hruti-haasan-s-late-night-fun-with-anirudh

பெண்களை அனுதினமும் துரத்துகின்றனதீண்டுகின்றன: ரமணி தொடர்கிறார், “இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்…. அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள்படைப்புகள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றனதீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியானபடைப்புகளைப் படைக்க மாட்டீர்கள்! நன்றி!

வேதபிரகாஷ்

13-12-2015

[1] ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்), திரு சிம்பு அவர்களேஇந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’, விகடன், Posted Date : 13:28 (12/12/2015).

[2] http://www.vikatan.com/cinema/article.php?aid=56256

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

பிப்ரவரி 11, 2015

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்டவர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

Cutz n Glitz

வழக்கமான செய்தி வந்துள்ள விதம்: காதலர் தினத்தை நெருங்கும் வேளையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்[1] என்று செய்தி வந்துள்ளது. தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, 08-02-2015 அன்று, வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார்[2].  அந்த பெயர் தெரியாத வாலிபர் நல்ல காரியத்தை செய்துள்ளார். இருப்பினும், அந்த 14-வயது சிறுமி அல்லது இளம்பெண் மனபாதிப்பு, மற்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு வர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை.

Padma Priya

போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள்: குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இந்த புகார் கொடுக் கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்[3]. அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர்.  அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர்[4]. போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார்[5]. அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது[6].

தாயார் புகார் - மகளை வைத்து ஆபாசப்படம் 2014

தாயார் புகார் – மகளை வைத்து ஆபாசப்படம் 2014 – அது அதோடு போயிற்றோ, இதுவோ?

சினிமா ஆசையில் மகளை நடிக்க வைத்து, பிறகு விபச்சரத்தில் தள்ளிய தாய்: பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. தந்தை இறந்து விட்டதாகவும், இதனால் தாய் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால், தன்னுடைய மகளை நடிகை ஆக்க வேண்டும் என்ற பேராசையில் இறங்கி, விபச்சாரத்தில் தள்ளியதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுகிறது[7]. தாயே நடிகை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது[8], “நடிகை தனது மகளை விபச்சாரத்தில் தள்ளினாள்” என்று தலைப்பிட்டு, இதே செய்தியை கொடுத்துள்ளது[9]. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்தார். குறிப்பிட்ட சிறுமி 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். பலருடன் வாழும் பெண், இப்படி கற்பு பற்றிய சிந்தனை போய், மகளையும் விபச்சாரத்தில் தள்ளுவாள் என்றால், அந்நிலையை மற்ற பெண்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பலருடன் உடலுறவு கொள்வதால் மரத்து விடுவதால், பெண்மையை, தாய்மையை மறந்துவிடுவது வியப்பான விசயமே.

தமிழ்பட படுக்கையறைக் காட்சி

தமிழ்பட படுக்கையறைக் காட்சி – அறையில் நடப்பதை அரங்கேற்றுகிறார்களா?

தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கு அனுப்பிய கொடூரன்: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரை பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் டைரக்டு செய்து வெளியிட்டு இருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறினார்[10]. இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாக தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்[11]. சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் 09-02-2015 அன்று கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்[12]. அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன[13]. இவன் ஒரு கிரிமினல், குற்றவாளி கடுமையாகத் தன்டிக்கப் படவேண்டியவன், அவ்வளவுதான்.

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

நடிப்பதடூள்ளங்களைக் கெடுக்கவா

இயக்குனர் அல்ல அவன், கற்ப்பழிப்பாளி, சமூக சீர்ப்பழிப்பாளி: இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இவர் டைரக்டு செய்யாமல் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எது எப்படியிருப்பினும், அவன் ஒரு கற்ப்பழிப்பாளி மற்றும் சமூக சீர்ப்பழிப்பாளி ஆவான். தாய் முறைதவறி நடக்கும் போது, அவள் மகளையும் கெடுக்கத் துணிந்துள்ளாள் என்றாகிறது. ஆனால், இவ்வாறு கெட்டவர்கள், மற்றவர்களைக் கெடுத்துக் கொண்டு போனால், சமூகம் எப்படி உருப்படும் என்று தெரியவில்லை.

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்!

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்! பெண் உரிமைகள் இவற்ரையும் எதிர்க்குமா?

பெண்களின் பாலிய உரிமைகள் எதுவரை செல்லும்?: சமூகம் இவ்வாறிருக்கும் போது, எப்படி தார்மீக உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை கேலி செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் என்று பேசுபவர்கள் இவற்றையும் பெண்களின் உரிமைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சமீபத்தில் விபச்சாரிகளின் உரிமைகளுக்கு மாநாடு நடத்தி, கோரிய பெண்மணிகள் இப்படி இளம்பெண்கள் சீரழிவதை தவறு என்பார்களா அல்லது தங்களது வியாபாரத்திற்கு இன்னொரு வரவு என்று ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. விவாக ரத்து, பலதார திருமணம், திருமணத்திற்கு வெளியே செக்ஸ்-உடலுறவு, அவற்றை நியாயப்படுத்துக் உக்கால நாரீமணிகள் முதலியவை இனிமேல் என்னாகும், என்ன செய்வார்கள்? தாங்கள் சொன்னது சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிப்பார்களா அல்லது சமூகம் கெடுவதைத் தடுப்பார்களா? அவர்களது பெண்களையும், இப்பெண் போல விபச்சாரத்திற்கு அனுப்புவார்களா, இப்படி கேட்பது தவறுதான், இருப்பினும், அவர்களது வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஆராயும் போது, இத்தகைய எண்ணமும் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் எப்படி கட்டுப்பாடு வரும், எல்லைகள் வரையறுக்கப் படும் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

11-02-2015


 

[1] தினமலர், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய், சினிமா இயக்குனர் உட்பட 3 பேர் கைது, 10-02-2015: 23:57.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1181116

[3] http://www.dailythanthi.com/News/State/2015/02/11013658/Having-cinematic-figure-girl-arrested-for-prostitution.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=131335

[5] தினகரன், பாலியல் புகாரில் திரைப்பட இயக்குனர் கைது பெண் புரோக்கரும் சிக்கினார், 10-02-2015.

[6] தினத்தந்தி, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு விற்ற தாயும் சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்:

புதன், பெப்ரவரி 11,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: புதன், பெப்ரவரி 11,2015, 1:36 AM IST

[7] The girl’s father died when she was young and her mother married another man. It was the zeal to “show off” that her daughter was an actress that made the mother force her child into flesh trade, the officer said.

http://www.newindianexpress.com/cities/chennai/14-yr-old-Girl-Rescued-From-Flesh-Trade-Racket/2015/02/11/article2663106.ece

[8] A Selvaraj, Actress held for forcing daughter into flesh trade, TNN | Feb 11, 2015, 05.33 AM IST

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Actress-held-for-forcing-daughter-into-flesh-trade/articleshow/46194751.cms

[10] The Hindu, Three arrested on prostitution charge, Chennai, February 11, 2015.

[11]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/article2663251.ece

[12] http://www.thehindu.com/news/cities/chennai/three-arrested-on-prostitution-charge/article6880406.ece?ref=tpnews

[13] தினமணி, சிறுமிக்கு பாலியல் நிர்பந்தம்: தாய், திரைப்பட இயக்குநர் கைது, By dn, சென்னை; First Published : 11 February 2015 04:03 AM IST.

புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் – சினிமாவின் உற்பத்திப்பொருட்கள், சமூகசீரழிப்பாளிகள், ஆனால் ஊடகங்களுக்கு லாபங்கள்.

பிப்ரவரி 7, 2014

புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் – சினிமாவின் உற்பத்திப்பொருட்கள், சமூகசீரழிப்பாளிகள், ஆனால் ஊடகங்களுக்கு லாபங்கள்.

 

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் – சினிமாவின் உற்பத்திப்பொருட்கள்: புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் தமிழ் ஊடகங்களில் மிகவும் பிரசித்தினனவர்கள். ஒருவேளை யார் பிரபலம் என்று ஒரு இணைதள போட்டி வைத்தால், அதில் பங்கு கொள்ளும் அறிவிஜீவிகள் அதிகமாகவே இருப்பார்கள். இருவருமே பெண்ணியத்தை, பெண்களை, சமூகத்தை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகவே பாதித்துள்ளார்கள் எனலாம், சினிமா ஒரு தொழில் என்றாகி விட்டப்படியால், சினிமாவின் உற்பத்திப்பொருட்கள் சமூகத்தில் விற்கப்படுகின்றன, நுகர்வோர்கள் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம், ஒரு படம் வெளிவந்தாலே எந்த்தனை கோடிகள் கிடைக்கும் என்று கணக்குப் பார்க்கிறார்கள். பிறகு, கோடிகளைக் கொட்டி சினிமா தொழிலை செய்பவர்களிடம், நாணய, நேர்மை, தர்மம், நியாயம் போன்ற சுத்தமான சமாசாரங்களை எதிர்பார்க்க முடியாது. ஒரு பெண் நடிகையாகி, எப்படி நூற்றுக்கணக்கான சினிமா முதலாளிகளால் தொடப்படுகிறாளோ, அப்பொழுதே அவளது ஐங்குணங்களும் போய் விடுகின்றனவோ, அதே போல, ஒரு ஆணும் நடிகனாகி விட்ட பிறகு, தனது பிரமச்சரியத்தைக் காப்பதில்லை. அவனால் நூற்றுக்கணக்கான சினிமா பெண் தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள். பணம், புகழ் கிடைக்கும் வரையில், தொழில் நன்றாகவே நயந்து கொண்டிருக்கும். பிறகு, யாரும் அவர்களை சீண்ட மாட்டார்கள். அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் எல்லாவிதங்களிலும் தயாராகவே இருப்பார்கள்.

 

Kamal family, it is real

Kamal family, it is real

சட்டமீறல்களில் புவனேஸ்வரியும், கமல் ஹஸனும்: சினிமாவில் நடிப்பு மற்றும் உற்பத்தி என்ற தொழிகளில் இறங்கியுள்ள இருவருக்கும் அவரவர் நிலையில் ஏகப்பட்ட கொடுக்கல்-வாங்கல் இருக்கவே செய்துள்ளன. ஆர்.பி.எப். நிறுவனத்தை திவாலாகியதற்கு காரணம் கமல் ஹஸன் என்றும் சொல்லப்பட்டது. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, திருமணம் ஆகாமலேயே குழந்தைகளைப் பேற்றுக் கொண்டது, இப்பொழுதும் கல்யாணம் இல்லாமலேயே இன்னொரு மணமான பெண்ணை அல்லது விவாக ரத்து பெற்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது என்ற பல சட்டமீறல்களையும் செய்துள்ளார் கமல் ஹஸன். ஆனால், சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யவில்லை என்ற காரணங்களினால் தப்பித்து நியாயவானாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கமல் ஹஸன்[1]. ஆனால், புவனேஸ்வரி 2002லேயே மாட்டிக் கொண்டார். அப்பொழுது அவர் உண்மையை வெளியிட்டபோது, ரஜினி காந்த போன்ற ஆன்மீக நடிகர்களே மிகக்கொடுமையாக புவனேஸ்வரியைத் தூஷித்தனர். சினிமா தொழில், தொழிற்சாலைகள், தொழிற்சங்கம் என்பன எல்லா சினிமா தொழிலாளர்களுக்கும் என்றிருந்தபோதும், அவை புவனேஸ்வரிக்கு எதிராக செயல் பட்டன. ஆனால், கமல் ஹஸன் விசயத்தில் கண்டு கொள்ளவில்லை அல்லது சமரசம் செய்து கொண்டன. ஒருவேளை, புவனேஸ்வரி உற்பத்தி ரீதியில் கோடிகளை உற்பத்தி செய்திருந்தால், அவர்களும் இவரோடு சேர்ந்திருப்பர். ஆனால், வேறுவிதமாக இருந்ததால், 2002லிருந்து 2014 வரை புவனேஸ்வரி புராணம் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே தான் சமூகசீரழிப்பாளிகள் எனும் நிலையிலும் பாகுபடுத்தி ஊடகக்காரர்கள் மதித்து வருகிறார்கள்.

 

Sarika kamal divorce 2002

Sarika kamal divorce 2002

விபச்சார வழக்கு (2002): புவனேஸ்வரி விடுதலை[2](2004): ஊடகக்காரர்கள் புவனேஸ்வரி என்றாலே, செய்திகளை அள்ளிக் கொடியுள்ளார்கள். 2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை புவனேஸ்வரி நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் புவனேஸ்வரி. கடந்த 2002ம்ஆண்டு சென்னை வட பழனியில் அவர் விபசாரத்திற்கு முயன்றதாக கூறி போலீஸார் புவனேஸ்வரி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இதில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் அபராதம் கட்டி விட்டு சென்றனர். ஆனால் புவனேஸ்வரி அபராதம்கட்டாமல் வழக்கை எதிர்கொண்டார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர் தீனதயாளன் முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கில், புவனேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனவேஅவரை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து புன்னகை பூத்த முகத்துடன் புவனேஸ்வரி வெளியே வந்தார். விசாரணைகளின்போது முகத்தை மூடியபடி வந்த புவனேஸ்வரி தீர்ப்பின்போது பட்டுச் சேலையில் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வந்திருந்தார்[3]. தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் என் மீது விரோதம் கொண்ட சில அரசு உயர் அதிகாரிகள்தான் இந்த பொய் வழக்குக்குக் காரணம். கடவுள் என்னைக் கைவிடவில்லை .உண்மைதான் ஜெயிக்கும் என்று கூறினார் அவர்

 

Kamal new relationship it is too real, but not so real

Kamal new relationship it is too real, but not so real

பெண்களைவைத்துவிபசாரம்நடத்தியதாக புவனேஸ்வரி சென்னைவிபசாரதடுப்புபிரிவுபோலீசாரால்கைது (2009): இது இப்பொழுதைய செய்தி. பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மும்பையை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர்[4]. இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4-வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சரவணன் முன் நடந்தது. இதில் 6 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் 03.02.2014 திங்கள்கிழமை மாஜிஸ்திரேட்டு சரவணன் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை புவனேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது[5]. இதையடுத்து குற்றம் புரிந்த புவனேஸ்வரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்[6]. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி ஆஜராகி வாதிட்டார்[7].

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

தியேட்டரில் கலாட்டா, கைது (2011): 2011ல் குமார் என்பவர் தா கொடுத்த கடனான ரூ.10 லட்சம் கொடுக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார். கோர்ட்டில் ஆஜராகததால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது[8]. முன்பு ஒரு தடவை தியேட்டரில் சினிமா பார்க்கச் சென்றபோது, சண்டை போட்டதால், பூகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்[9]. சென்னை தியேட்டர் ஒன்றில், தகராறில் ஈடுபட்ட, சினிமா நடிகை புவனேஸ்வரியை, ஆம்பூர் அருகே போலீசார் கைது செய்தனர். சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், கார் நிறுத்தும் போது, குமார் என்ற டிரைவருக்கும்; நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் வந்த வக்கீல்கள் இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், கார் டிரைவர் குமார், அவர் குடும்பத்தினர், தியேட்டர் காவலாளி மற்றும் விசாரணை நடத்திய போலீசார், சரமாரியாக தாக்கப்பட்டனர்.

 

Vani with Kamal

Vani with Kamal

போலீசார் தனிப்படைஅமைத்து, தலைமறைவானநடிகைபுவனேஸ்வரிமற்றும்அவருடன்இருந்தவக்கீல்களைதேடினராம்: சென்னை, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் இருந்த வக்கீல்களை தேடினர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த, “இனோவா காரை, காலை, 10:00 மணிக்கு, பச்சகுப்பத்தில் மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்; காருக்குள் நடிகை புவனேஸ்வரி இருப்பது தெரிந்தது. சந்தேகப்பட்ட போலீசார், கார் டிரைவரிடம், “காரில் இருப்பவர், புவனேஸ்வரி தானே? என, கேட்டனர். அதற்கு, “நான் புவனேஸ்வரி இல்லை; பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என, புவனேஸ்வரி பதிலளித்தார். ரோந்து போலீசார், காரை, ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, காருக்குள் இருப்பது, நடிகை புவனேஸ்வரி என்பது தெரிந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை நீலாங்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார், வந்து அழைத்து செல்வதாக கூறினர். இதனால் புவனேஸ்வரியை, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அழைத்து வந்தனர். அங்கு புவனேஸ்வரி, 30 நிமிடம் அமர்ந்திருந்தார். பகல், 12:30 மணிக்கு நீலாங்கரை போலீசாரிடம் புவனேஸ்வரி ஒப்படைக்கப்பட்டார். பின், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

 

ஆம்பூர் பிரியாணிகேட்டபுவனேஸ்வரிக்கு வேலூர் பிரியாணி கொடுக்கப்பட்டதாம்[10]ஆம்பூர் போலீசார், புவனேஸ்வரியை கைது செய்த போது, “நான் சாப்பிடவில்லை என, அவர் கூறினார். இட்லி, தோசை வாங்கி தந்த போது, “எனக்கு, ஆம்பூர் பிரியாணி வேண்டும் என கேட்டார். “இந்த நேரத்தில், பிரியாணி ரெடியாகாது எனக் கூறிய போலீசார், இட்லி, தோசை கொடுத்துள்ளனர். புவனேஸ்வரி தோசை மட்டும் சாப்பிட்டார். நீலாங்கரை போலீசார் வரும் வரை, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி காத்திருந்தார். அந்த நேரத்தில், பிரியாணி குறித்து, மீண்டும் பேச்சு எழுந்தது. சில போலீசார், ஆர்வமாக, “ஆம்பூர் பிரியாணிக்கு பதில், வேலூர் பிரியாணி நன்றாக இருக்கும் என்று கூறி, வாங்கி கொடுத்துள்ளனர். அதை புவனேஸ்வரி, ருசித்து சாப்பிட்டார் என்று கூறப்பட்டது. நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்குள்ள போட்டோகிராபர்கள், நிருபர்கள் சென்றனர். படம் எடுக்க விடாமல், பல காரணங்களை கூறி, போலீசார் தடுத்து விட்டனர். பிறகு, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ரகசியமாக, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

புவனேஸ்வரி மீதும் மேலும் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன: தினகரன் இப்படி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது[11]. புவனேஸ்வரி மீதும் மேலும் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவையெல்லாமே சினிமா சம்பந்தப்பட்டவையாகும். தொலைக்காட்சி தொடர் எடுக்கிறேன் என்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் உள்ளன. பொதுவாக புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு சில போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என்று கூறி தப்பித்து வந்தார்.

 

தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை[12]: நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நடிக்க வந்துவிட்டார்[13]. “டி டே”ஏன்ற படத்தில் படுக்கையறை காட்சியில் தத்ரூபமாக நடித்து, ஹாலிவுட் நடிகைகளையும் மிஞ்சிவிட்டார் என்ற நிலையில் ஊடகங்கள் விமர்சித்தன, காட்சிகளையும் வெளியிட்டன. ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில்  சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர், ஆனால், யார் அந்த “பலர்” என்று தெரியவில்லை. இறுதியில் இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார்[14] என்று செய்திகள் வந்துள்ளன. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடித்தார்[15]. இந்த படத்தை பால்கி இயக்குகிறார். இப்படியாக கமல் ஹஸனின் இரண்டு பெண்களும் சினிமாத்தொழிலில் தீவிரமாக இறங்கி விட்டனர்.

வேதபிரகாஷ்

© 07-02-2014

 

 


[1] இவரைப் பார்த்து பலர் முஸ்லிம்களே பொறாமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ப நேரங்களில் எப்படி இவர் தப்பித்துக் கொண்டு வந்துள்ளார் என்று கேள்விகளையும் எழுப்பி வந்துள்ளனர்.

[2] தமிள்-ஒன்-இந்தியா, விபச்சாரவழக்கு: புவனேஸ்வரிவிடுதலை, Published: Thursday, June 24, 2004, 5:30 [IST]

[7] நக்கீரன், விபசாரவழக்கில்பிரபலதமிழ்நடிகைக்குஅபராதம்! சைதாப்பேட்டைகோர்ட்தீர்ப்பு!, பிப்ரவரி.4, 2014

[12] தினமணி, தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை, By Web Dinamani, First Published : 06 February 2014 04:14 PM IST

பாலியல் சித்தாந்ததில் கமல் ஹஸனை மிஞ்சத்துடிக்கும் ஸ்ருதி ஹஸன் – இந்தியில் விபச்சாரம், தமிழில் பத்தினி வேடம் என்றால் அது என்ன குடும்பப்பாங்கா, புரியவில்லை!

பிப்ரவரி 1, 2014

பாலியல் சித்தாந்ததில் கமல் ஹஸனை மிஞ்சத்துடிக்கும் ஸ்ருதி ஹஸன் – இந்தியில் விபச்சாரம், தமிழில் பத்தினி வேடம் என்றால் அது என்ன குடும்பப்பாங்கா, புரியவில்லை!

Shruti opposing bed scene in Tamil

Shruti opposing bed scene in Tamil

“டி டே”வும், இந்தியப்பெண்மையும், பத்தினித்தனமும்: கடந்த ஆண்டு 2013ல், “நிகில் அத்வானி” இயக்கத்தில் “ஸ்ருதிஹாசன்” நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம் ‘டி டே’. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்[1] என்று தினமணி கூறுகின்றது. இதில் என்ன துணிச்சல் வேண்டிக்கிடக்கிறது என்று தெரியவில்லை.. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. சினிமாவில் தான் பிடிப்பார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு நமது ஆட்களை கேவலப் படுத்தியிரூக்க வேண்டாம். அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் விபசார பெண் வேடம் ஏற்று நடித்திருந்தார். இதில் ஹீரோ அர்ஜுன் ராம்பாலுடன் ஸ்ருதி நடித்த பெட் ரூம் காட்சி  பரபரப்பாக பேசப்பட்டது[2]. இணைதளங்களில் அவை பதிவாகியுள்ளன[3]. “டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ள “டாப்-10” நெருக்கமான காட்சிகள்  வீடியோக்களிலும் உள்ளது[4]. இந்நிலையில் டி டே படத்தை தமிழில் “தாவூத்” என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

ஹாஸ்மி-ஹஸன் முத்த காட்சி

ஹாஸ்மி-ஹஸன் முத்த காட்சி

பெட்ரூம் சீன் ஸ்ருதி கடும் எதிர்ப்பு / எச்சரிக்கை[5]: பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படத்துக்கு தன்னால் டப்பிங் பேச முடியாது என்று கூறியதுடன், பெட் ரூம் சீனில் தான் நடித்த இந்த படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[6]. தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தபடம் வெளிவரவிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் இது குறித்த விவரங்கள் ரெடியான உடன் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

இந்தியில் விபச்சாரம், தமிழில் பத்தினி வேடம் என்றால் அது என்ன என்று புரியவில்லை: குறிப்பிட்ட பெட்ரூம் காட்சியில் மிகவும் மோசமாக, கேவலமாக ஒரு சாதாரண ஹாலிவுட் நடிகைடயைப் போன்று நடித்திருக்கிறார். ஹீரோவுடன் பேசுகிறார், கட்டிக் கொள்கிறார், முத்தமிடுகிறார், ……………..தொடர்கிறது, சட்டைக் கழட்டுகிறார், மேலே படுத்துக் கொள்கிறார், உடலுறவு கொள்வது போன்ற உணர்ச்சிகளைக் காட்டுகிறார். இது இணைதளங்களில் உள்ளது[8]. பார்ப்பவர்கள், பார்க்கத்தானே செய்வார்கள். இந்தியில் விபச்சாரம், தமிழில் பத்தினி வேடம் என்றால் அது என்ன என்று புரியவில்லை. உண்மையிலேயே பெண்மையின் மீது அக்கரை, மரியாதை, போற்றும் தன்மை என்றெல்லாம் இருந்தால், இப்பெண் இவ்வாறு நடித்திருக்க மாட்டார். அப்பனாகிய கமல் ஹஸனும் தடுத்திருப்பான். ஆனால், பணம், புக்ழ் போன்ற போதைகளுக்கு அடிமையாகி, ஹாலிவுட்டில் கால் பதிக்க வேண்டுமானல், இவ்வாறெல்லாம் கால் சறிக்கியாக வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த “பெட்ரூம் எதிப்பு” கலாட்டா, ஆர்பாட்டம் எல்லாம்?

“குடும்பப் பாங்கான நடிகை என்று நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கு”: “குடும்பப் பாங்கான நடிகை என்று நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கு” என்று ஒரு ஊடகம் அறிவிக்கிறது[9]. தமிழில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து ஏற்படுத்திக் கொண்டுள்ள இமேஜை இந்த படம் கெடுத்துவிடும் என்று எதிர்ப்பதாக சில ஊடகங்கள் கருத்தை வெளியிட்டுள்ளன[10] (இரண்டும் ஒன்றுதான்). இவர்களுக்கு குடும்பம் எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை. விஜய்டிவி காட்சியில் ஹஸன் திருமணமான பெண்களைக் கட்டிப் பிடுத்து தனது பெண்மையின் மீதான மரியாதையை வெளிப்படுத்தியபோது, பெண்களே கூனிக் குறுகினர்[11]. ஸ்ருதிக்கு தந்தை கமல் என்றல், தாய் மொழிக்கு மொழி இப்படி வேடங்களை போட்டுக் கொண்டு நடித்தால், பெண்மையின் மதிப்பு மாறிவிடுமா என்ன? நடிகையாக நடிக்க வந்த பிறகு வேடத்தில் என்ன மானம், மரியாதை எல்லாம்? நாய் வேடம் போட்டால் குறைக்க வேண்டும் எனும் போது, விபச்சாரி வேடம் போட்ட போது உடையை அவிழ்த்து படுக்கத்தான் வேண்டும். அப்படித்தான் ஹஸன் செய்துள்ளார். பிறகு அதில் என்ன குறைபாடு, எதிப்பு, மானப்பிரச்சினை என்றெல்லாம் வருகிறது?

திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு: வாணி கணபதி முதல் சிம்ரன் வரை பல நடிகைகளுடன் வாழ்க்கை நடத்திய கமல் ஹஸன், திருமணம் இல்லாமலே இரு பெண்களுக்கும் தந்தையாக இருக்கிறான். அவனுடைய அத்தகைய சாமர்த்தியத்தைப் பற்றி, முஸ்லீம்களே வியந்தனர், பொறாமை கொண்டனர். ஆகவே, இந்நிகழ்சியில், திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது, ஒன்றும் வியப்பான விஷயம் இல்லை, ஏனெனில், அதிலும் உலக மகா நாயகன் திருவாளர் கமல் ஹஸன் தான். அவரது பலதார அல்லது பெண்களுடன் வாழ்ந்த சரித்திரம் கற்பு என்றால் என்ன விலை என்று பேசக்கூடிய நிலையில் தள்ளிவிட்டது[12].

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: வாலி எழுதிய பாடலை அசிங்கமாக்கிய போது, நான் இட்ட பதிவு ஞாபகத்திற்கு வருகிறது[13]. தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் இந்த பாட்டில் வெளிப்படுகின்றன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது.

எனவே யாருக்காகவும் அந்தப் பாடலை நீக்க வேண்டிய அவசியமில்லை (கமல் ஹஸன்), பிறகு படுக்கை காட்சியை ஏன் எதிர்க்க வேண்டும்? (ஸ்ருதி ஹஸன் இப்பொழுது): முன்னதாக மன்மதன் அம்பு படத்தின் விளம்பரத்துக்காக நேற்று கொச்சிக்கு வந்தார் கமல்ஹாஸன். அவருடன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஆகியோரும் வந்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய கமல்ஹாஸனிடம், படத்தில் இடம்பெறும் ‘கண்ணோடு கண்ணை கலந்தால்’ என்ற பாடலில் இடம்பெறும் வரிகள் ஆபாசமாக இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. இந்தப் பாட்டை நீக்குவீர்களா என்றும் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல், அந்தப்  பாட்டு  இந்துக்  கடவுள்களுக்கு  எதிரானதல்ல. அப்படி  எதையும்  நான்  எழுதவும்  இல்லை.  இன்னொன்று இந்தப்  பாடலுக்கு  சென்சார்  எந்த  எதிர்ப்பும்  காட்டவில்லை.  யுசான்றிதழ்  கொடுத்துள்ளனர்.  இதிலிருந்தே தெரியவில்லையா? எனவே  யாருக்காகவும்  அந்தப் பாடலை நீக்க  வேண்டிய  அவசியமில்லை”, என்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[14]. பிறகு இப்பொழுது, அவர் மகள் படுக்கைக் காட்சிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?

வேதபிரகாஷ்

© 01-02-2014


[6] தினமணி, டிடேபடத்தைதமிழில்வெளியிடக்கூடாது! ஸ்ருதிஹாசன், By Sasikumar Balakrishnan, First Published : 30 January 2014 12:40 PM IST.

மறுபடியும் சனாகான் பேட்டி – சினிமா வசனமும், நிஜவாழ்க்கையும்

ஏப்ரல் 9, 2013

மறுபடியும் சனாகான் பேட்டிசினிமா வசனமும்,  நிஜவாழ்க்கையும்

 

சனாகான் என்ற இந்தி நடிகை அளித்த பேட்டி: அசிங்கமான, ஆபாசமான பொருள் தரும் வகையில் நடித்துவிட்டு, பெரிய ஞானி போல பேசுவதில் திறமைசாலியாக இருக்கும் நடிகை சனாகா எனலாம்[1]. முன்பு நடிகைகள் புகைப்பது, குடிப்பது பற்றி அளித்த பேட்டி: நான் ஒரு மும்பைக்காரி. எனக்கு பாய் பிரென்டு என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை. சாதாரணமாக (அல்லோரும் நினைப்பது மாதிரி இல்லாமல்) பாலிஹுட் நடிகைகள் அதிகமாகவே புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து வரும் நடிகைகளும், அவ்விதமான ஆடம்பரங்களில் அதிகமாகவே ஈடுபடுகின்றனர். நான் இங்கு நடிகைகள் குடித்து விட்டுத் தள்ளாடி நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்கிடையேயுள்ள உறவுகளை நன்றாகத் திறம்பட நிர்வகித்து வருவதால், அத்தகைய பழக்கவழக்கங்கள் வெளியே வராமல் மறைக்கப்படுகின்றன. ஆகையால் ஒருவர் மும்பையில் அல்லது சென்னையில் பிறந்தார் என்பது கேள்வியில்லை[2], சுற்றுப்புற சூழ்நிலகளால் பாதிக்கப்படாமல் எப்படி உறுதியாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியமானது”, என்று சனாகான் என்ற இந்தி நடிகை சென்னைக்கு வந்தபோது பேட்டி அளித்திருக்கிறார். இப்பொழுது (ஏப்ரல் 2013) மறுபடியும் அளித்த பேட்டியில், செக்ஸ் உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

 படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: 

நடிகை சனாகான் 

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘நடிகையின் டைரி’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், சில்க் சுமிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். அனில் டைரக்டு செய்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. அதன்பிறகு நடிகை சனாகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சனாகான் அளித்த பதில்களும் :

 

சில்க் சுமிதாவின் படங்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

அவர் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு ஆனதும், இணையதளத்தில் அவர் நடித்த படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகளை பார்த்து தெரிந்துகொண்டேன்.

 

 அவருடைய மரணம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சில்க் சுமிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தரப்பினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னொரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும், சில்க் சுமிதாவின் மரணம் திரையுலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

 

நிஜ வாழ்க்கையில் சில்க் சுமிதாவுக்கு நடந்த சோகங்கள் உங்களுக்கும் நடந்தால், என்ன செய்வீர்கள்?

நான் தைரியமான பெண். நான் யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன்[3]. என் சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஒரு ஆண் மகனாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிப்புக்குள்ளாக மாட்டேன்.

சினிமாவில், செக்ஸ் உடன்பாடு செய்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்றுநடிகையின் டைரிபடத்திலேயே வசனம் வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

செக்ஸ் உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்[4]. நடிகையின் டைரியில் ஒரு வசனம்: “ஒரு நட்கைக்கு என்னதான் திறமை இருந்தாலும், பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்துதான் ஆகணுமா?” என்று பேசி நடித்தபோது, வருத்தமாக இருந்தது. வய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்று திரையுலகத்தில் சொவது உண்மை. அது அவரவருடைய விருப்பம். ஆனால், அப்படி எந்த சம்பவத்தையும் நான் சந்தித்தது இல்லை”. இவ்வாறு சனாகான் பேசினார்.
‘செக்ஸ்’ உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்[5]. அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். செக்ஸ் உடன்பாடு வைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் பர்சனல் விஷயம். ஆனால் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. நடக்கவும் அனுமதிக்க மாட்டேன். நான் உறுதியான பெண். யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்[6].

இப்படி நாளிதழ்கள் சிறிதே மாற்றி, அச்செய்தியை அப்படியே போட்டிருக்கிறார்கள்.

 

சில்க் சுமிதாவின் வேடத்தில் நடிப்பதால், அவருடைய ஆவி உங்கள் கனவில் வந்தால்…?

நிச்சயமாக சில்க் ஆவி என்னை மிரட்டாது. பாராட்டும். என் வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்லும்.

சினிமாவைப் பொறுத்த வரையில், உடம்பைக் காட்டி நடிப்பதே சமரசம் செய்து கொண்டது போலத்தான். மார்பகங்களைக் காட்டி நடிப்பதில் எந்த நடிகையும் மறுப்பதில்லை. வெளியே காண்பிப்பதில் தான் வித்தியாசம் உள்ளது. முன்பெல்லாம் முத்தம் கொடுக்க மாட்டேன் என்றர்கள். இப்பொழுதோ முத்தம் கொடுக்கிறார்கள். கொஞ்சம் நாட்களில் ஹாலிவுட்டைப் போல எல்லா விஷயங்களுக்கும் தயார் என்று வந்து விடுவார்கள். பிறகென்ன, நான் செய்யவில்லை, இதுவரயிலும் செய்யவில்லை………..என்ற பேச்சு?

அசிங்கமாக, ஆபாசமாக நடிப்பது சரியா, உடைகளை அப்படி அணிந்து கொண்டு நடிப்பது நியாயமா, தூண்டுவதாக இரட்டைப் பொருள் அளிகும் வகையில் செய்து காட்டுவது தர்மமா…….என்றெல்லாம் அந்த நடிகைதான் பதில் சொல்லவேண்டும். குஷ்புவும் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். ஒரு இடத்தில், இருவரும் சந்தித்துக் கொண்டால், அவர்கள் என்ன்ச் பேசுவார்கள், பேசியிருப்பார்கள் என்பது அவர்களது புத்தகங்களினின்று அறிந்து கொள்ளலாம்.