Archive for the ‘காஜாமைதீன்’ Category

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

ஒக்ரோபர் 4, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

குறிப்பு: தனிப்பட்ட நபர்கள் முதலியோரை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால், இவர்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், பல நேரங்களில் அறிவுரைக் கூறுவது, பல்கலைக்கழக்ச்ங்களில், ஏதோ பெரிய விஞ்ஞானி, அறிவாளி, மாமேதைகள் போல “டாக்டர்” பட்டங்கள் பெறுவது, கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவதால், அவர்களது உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய நிலையுள்ளது. மேலும் அவர்கள் தமக்குத் தேவையில்லாத விஷயத்தில் கூட மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைகள் விடுவார்கள். அரசியில் என்று வந்துவிடும் போது, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி……………..என்று பதவிகளுக்கு ஆசைப்படும்போது, மக்களின் வரிப்பணத்தில் வாழும்போது, அனுபவிக்கும்போது, அவர்களைப் பற்றி அம்மக்கள் அறிந்தே ஆகவேண்டும். ஆக, பகுதி-2 தொடர்கிறது[1].

கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முயன்ற காஜா மைதீன்: 2004-2005களில் இந்த காஜா மைதீனைப் பற்றி பலவிதமான செய்திகள்: “கிடுகிடுத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம், இப்படி சொல்கிறது, ஒரு செய்தி –  முன்னணி தயாரிப்பாளர் ஒருவரே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயல, நம் கதி என்னாகுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் சிறு தயாரிப்பாளர்கள்.  தமிழ் சினிமாவில் பிரபமான பெயர் ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன். ‘பொற்காலம்’, ‘வாஞ்சிநாதன்’ திரைக்கு வரவிருக்கும் ‘பேரரசு’ போன்ற பல படங்களை தயாரித்தவர். கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தயாரிப்பவரும் இவரே (15 July 2005). ஆனால் பைனான்ஸ் பிரச்சனையால் ‘வேட்டையாடு விளையாடு’ இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவரிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் காஜாமைதீன். இதற்காக காஜாமைதீன் பெயரிலிருந்த நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பைனான்சியர் தனது மனைவி பெயரில் எழுதி வாங்கியிருக்கிறார் இந்த மோசடியால் மனமுடைந்தவர் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பே அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டோஸ் சற்று அதிகம் என்பதால் இன்னும் மயக்கம் தெளியவில்லை காஜாமைதீனுக்கு. படம் எடுப்பவர்களை பயப்படவைத்திருக்கிறது இவரது தற்கொலை முயற்சி”! செய்தி தொடர்கிறது……………

தற்கொலை தூண்டுதலுக்கு கமலஹாசன் காரணமா? “கடந்த சில தினங்களுக்கு முன் (ஜூலை 2005) தயாரிப்பாளர் காஜாமைதீன் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ய, யார் செய்த புண்ணியத்தாலோ உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனாலும் இந்த விவகாரம் பல்வேறு வடிவங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்துவட்டி கும்பல்தான் இதற்கு காரணம், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் ஒத்துழைக்காததே காரணம் என செய்திகள் கசிய, தயாரிப்பாளர்கள் மத்தியில் இது கடும் புயலை கிளப்பியது. இது குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நேற்று (18 July 2005) நடந்த நிலையில் காஜாமைதீனும் கமலும் சேர்ந்து இன்று அளித்த பேட்டியில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பனிரெண்டு மணிக்கு இரு தரப்பினரிடமிருந்தும் பத்திரிகைகளுக்கு அவசர அழைப்பு வர ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் ஆஜராகினார்கள் நிருபர்கள். கமல், காஜாமைதீன் தவிர தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தியாகராஜன், இயக்குனர் கௌதம் ஆகியோரும் அங்கு இருக்க பத்திரிகையாளர்களுக்கு செம ஷாக்”.

தற்கொலை முயற்சி பற்றி காஜா மொய்தீன் விளக்கம்: “இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் வந்தபடி பேசிய காஜாமைதீன், “சில பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேனே தவிர இதற்கு வேறு யாரும் காரணமல்ல. இனி இது போன்ற தவறான முடிவுகளை எடுக்கமாட்டேன்” என்றார். நடுநாயகமாக அமர்ந்திருந்த கமலிடம் ‘நீங்கள்தான் காரணமென்று செய்திகள் வந்ததே’ என்று நிருபர்கள் கேட்க, பதில் சொல்ல தயாரானார். “யாரும் காரணமல்ல என்று காஜாமைதீனே சொல்லிவிட்டபோது இந்த விவகாரத்தில் என் பெயரை சேர்ப்பது சரியாகாது[2]. அதேபோல் இயக்குனர் கௌதமிற்கும் எனக்கும் எவ்வித பிச்சனையும் இல்லை. அடுத்தவாரம் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் படபிடிப்பு தொடங்கும். இனி பிரச்சனைக்கே வேலை இல்லை. எல்லாம் சுமூகமாக நடக்கும்”, என்று முடிக்க தயாரிப்பாளர்கள் சார்பாக தியாகராஜன் முகத்தில் திருப்தியின் உச்சம். “செவன்த் செனல்” மாணிக்கம் நாராயணன் (முதலில் பட்ஜெட்டிற்காகத் தயங்கினாலும்) மூலம் பிறகு படம் முடிக்கப்பட்டது“[3].

சினிமா குடும்பம்! பிரபல தயாரிப்பாளர் “ரோஜா கம்பைன்ஸ்’ எம். காஜாமைதீனின் அண்ணன் மகன் கஜினி. ஆம்னி (born 16 November 1973) என்கின்ற மீனாட்சி, முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். மீனாட்சி ஆமனியாகி தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படவுலகில் நுழைந்தார். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து 1997ல் கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய ஆம்னி / ஆமனி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்[4]. இதைத் தவிர மற்ற நடிகர்களும் உறவினர்களாக உள்ளனர்.

ஸ்ரீவித்யா பட்டபாடு: இங்கு கூட, ஸ்ரீவித்யா நிலை ஆமனிக்கு ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், அவருக்கும் கமலஹாசனுடன் தொடர்பு இருந்தது. கமலஹாசன் அவரை ஏமாற்றினார். ஒரு கிருத்துவ இயக்குனரை திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டார். தனது வீடு, சொத்து முதலியவற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெல்லவேண்டிய நிலை வந்தது. ஒருநிலையில் பணம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்ட நிலையும் இருந்தது. இன்று “சேர்ந்து வாழ்கிறோம்” என்று பெருமையாக, சிம்ரன், கௌதமி………………என்று நடிகைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தியவருக்கு அன்று அப்படி “சேர்ந்து வாழ” மனமில்லை போலும்!

குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் எடுத்தவர் காஜா மைதீன்: பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன். குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

துபாயில் நிகழ்ச்சிகள், தொடர்பு, மர்மங்கள்: இவரது துபாய் தொடர்பு மர்மமாக உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார் என்ற நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் புதிராக உள்ளது. இதனால் துபாயிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார். ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.

வேதபிரகாஷ்

04-10-2010


[1] வேதபிரகாஷ், நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?,  https://evilsofcinema.wordpress.com/2010/10/03/நடிகைகளைக்-கட்டிப்-பிடிப/

 

[2] http://www.hindu.com/2005/10/31/stories/2005103107080200.htm

Kamal Haasan said that he was in no way a cause for Kaja Moideen’s suicide attempt. After hectic parleys and discussion Kaja Moideen has decided to hand over the project to a person who will finish the project without a hitch. Now everything has fallen in place.

[3] `Seventh Channel’ Manicam Narayanan, a popular name in the film and television circles had taken over the project. According to Manicam Narayanan he is happy to do a film featuring Kamal Haasan. “When Kaja Moideen approached me I was a little bit hesitant as it involves big money. I am a friend of Kamal Haasan for nearly 20 years. But I did not have the opportunity to work with him. Goutham Menon is a very talented director and I am sure he will deliver the goods.”

[4] சினிமா உலகில் மதம் மாறுவது சகஜமாக இருக்கலாம், ஆனால், அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள் முதலியவற்றை, சமூக ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ ஆய்வாளர்கள் முதலியோர் சரியாக ஆராய்ச்சி செய்வதில்லை.

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?

ஒக்ரோபர் 3, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்?

அன்பு தோழி, மின்சாரம், முதலிய சினிமாக்களில் நடித்த திருமாவளவன்: மின்சாரத்தில் நடித்தபோது சொன்னது: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், என்கிறார் திருமாவளவன். ‘மின்சாரம்’ படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

Kaja with other Bigwigs

Kaja with other Bigwigs

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம்: “அன்புள்ள தோழி”யில் நடித்தபோது சொன்னது: கிருபா என்பவர் இயக்கும் “அன்புத் தோழி’ படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன். சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார். இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது: “நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கியகேரக்டர்ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை”, என்றார். “எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றார் திருமாவளவன்.

விளம்பரம் வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டும்: முதல்வராக ஆசையிருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டும்: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்றால், சினிமாவில் நடிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றவரை நிலை மாறியுள்ளது!

முதல்வராக ஆசைப்படும் நடிகர்கள்: நான் முதல்வர் ஆகக்கூடாதா? கேட்பது திருமா, நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறதுஎன்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது?” என்றார் திருமா[1].

பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி: பிரபல தயாரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீனுக்கு[2] விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் திருமாவளவன். காஜா மைதீன் / காஜா மொய்தீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சயில் நேற்று முன்தினம் (29-09-2010) இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார். காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.

நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது:. கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது[3]:தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனைக் கட்டுப்பாடு சகிப்புத் தன்மையால் முறியடிக்க வேண்டும். நிறைய பேர் பதவிக்காக பெரிய அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரி மக்களைப் பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்”.

கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி: சினிமாவில் திருமாவே நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது…” என்றார்.  கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே. செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமைதீன் ஏற்கெனெவே நடிகைகளைக் கட்டிப்பிடித்தவர் தாம், ஒருந்டிகையை கல்யாணமே செய்துகொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியும்!

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்? நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா? சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம்,  அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன்? இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா? மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா? சினிமாவை எதிர்த்து, சினிமாக்காரர்களிடல் பணம் வாங்குவது விபச்சாரமா, முதலீடா?


[1] http://thatstamil.oneindia.in/movies/specials/2009/04/08-thiruma-speaks-on-his-cm-role-in-minsaaram.html

[2] http://rojacombines.com/people.htm

Kajamydeen, gained extensive experience as a producer making live action movie in Tamil Language and Mega Television Serial for Tamil Channel Industry, as well as successfully conducted Star night shows with Tamil film celebrities. In 1981 Kajamydeen came to Tamil film industry and. The film Chutti Kulandhai (shrewd kid) which was originally taken in the language telugu, was a critical and box office success in Tamilnadu.. Due to the nature of the film, Kajamydeen’s company took the task of marketing and distributing the picture. In 1984, at the age of 35 kajamydeen, produced and financed the highly successful “Porkalam,” (Goldendays) which was directed by the in famous director Cheran and the film acclaimed the best movie state award.Kajamydeen, Successfully organized the Mega hit Star night show participated by everyone in the tamil film industry includes Kamalhasan and Rajinikanth in the year 2002 in Malaysia and Singapore for the benefit of Film Artist Association. Once again he organized mega hit show at Dubai and London for tamil film producer council during the year 2003.He won the best producer award for five times from FILM FAN club. Kajamydeen was the vice president for the South Indian Film Producer Council in the year 2006-08 and has served as the Treasurer for the same in the year 2004-2006. Again during the year 2008 he has been elected as the Treasurer for the second time and currently holding the post till the year 2010. Currently Kajamydeen is in development with Rajinikanth starring Enthiran as Executive producer.

[3] http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/02-thiruma-blasts-film-heroes.html