Archive for the ‘காதல்’ Category

செக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை!

பிப்ரவரி 14, 2017

செக்ஸ் தொல்லைகடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை!

nivedhita-actress-caught-at-goa-by-the-haraser

சுதந்திர உணர்வுகளுடன் வளர்க்கப்பட்ட நிவேதிதா, தனியாக கோவாவுக்குச் சென்றது: பிரபல கன்னட நடிகை நிவேதிதா தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதா வளர்ந்த போது, தான் பெண் என்ற ரீதியில் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை[1]. தன்னுடைய பெற்றோர் அவரை சுதந்திரமாக இருக்கும் முறையில் வளர்த்துள்ளனர்[2]. அதனால் தான் போலும், தைரியமாக கோவாவிற்கு செல்ல தீர்மானித்தார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன[3]. இந்நிலையில் இருவரும் கோவாவுக்கு சேர்ந்து செல்ல முடிவு எடுத்தனர். தொழிலதிபர் என்பதால் ஒரு வேளை காதலரால் உடனடியாக புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி அவரிடம் கூறிவிட்டு நிவேதிதா தனியாக கோவா சென்றார்[4]. ஊடகங்கள் இப்படி கதையை ஆரம்பித்தன. நடிகைக்கு காதல், கல்யாணம், விவாக ரத்து, சேர்ந்து வாழ்தல், பிரிந்து வாழ்தல் என்றாலே கொண்டாட்டம் தான், அவற்றையெல்லாம் செய்திகளாக்கி, எழுதி தள்ளுவர்.

nivedhita-actress-caught-at-goa-by-the-harassersகோவா கடற்கரையில் நிவேதிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை: நிவேதிதா கோவாவிற்குச் சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். நாள் முழுவதும் பொழுதைக் கழித்தப் பிறகு, பிறகு, இரவு 9 மணிக்கு கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினார். உலக பிரசித்தி பெற்ற கோவா கடற்கரையில் தனியாக 15 நிமிடங்கள் நடந்து சென்றார். அப்பொழுது, நிவேதிதாவை குடிபோதையில் இருந்த சில ஆசாமிகள் நோட்டம் விட்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர்[5]. இதனால், திகைத்து விட்டார். போய் விடுவார்கள் ஒதுங்கி சென்றார். ஆனால், அவர்களோ, ஆபாசமாக பேசியும் கேலி செய்தார்கள் அசிங்கமாக கமெண்ட் அடித்து சிரித்துள்ளனர். மேலும் சிலர் நிவேதிதா பயந்து போகும் அளவுக்கு அருகில் வந்துள்ளனர்[6]. இதனால், அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிவேதிதா அருகில் இருந்த சிறிய ஓட்டலுக்குள் நுழைந்தார்[7]. ஆனால், உள்ளேயும் அவருக்கு நிலைமை மாறவில்லை. அங்கும் சிலர் குடிபோதையில் இருந்தவர்கள், வா, வா என்றைத்து, தங்கள் அருகில் வந்து உட்காருமாறு அழைத்து தொல்லை கொடுத்தார்கள்[8]. இதனால், சர்வரின் உதவியுடன் அவர்களிடம் இருந்தும் நிவேதிதா தப்பி ஓடினார்[9]. ஒரு வழியாக தான் தங்கிய இடத்திற்கு சென்றுள்ளார்[10].  தன் அறைக்குச் சென்றடைந்ததும், காதலருக்கு போன் செய்து வரவழைத்து உடனேயே கோவாவில் இருந்து கிளம்பி விட்டார்[11].

nivedhita-actress-harassed-at-goa

எந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம்: பெங்களூரு திரும்பிய அவர் கோவாவில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என்று மிரட்சியோடு கூறினார்[12]. கோவாவில், தனக்கு இந்த இந்த கசப்பான அனுபவத்தை தனது நண்பர்களிடம் பயத்துடன் கூறியுள்ள நடிகை நிவேதிதா[13], இது குறித்து போலீஸில் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லையாம்[14]. “பொதுவாக, ஒரு பெண் ஆணுடன் இருந்தாலே, பார்ப்பவர்கள், அந்த ஆணுக்குத் தான் அப்பெண் சொந்தம் என்பது போல நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவளது நிலைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது மிகவும் அபத்தமானது,” என்றார்[15]. இதற்காக தான் எந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை என்றும், அடிப்படையிலேயே, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம் என்றார். இப்பொழுது சுத்தி என்ற படத்தில் நடித்து வருகிறாராம்[16]. நிவேதிதா, “சந்தனக் கட்டை” நடிகை என்று, செல்லமாக அழைக்கப்படுகிறார்[17]. ஸ்மிதா என்று கன்னடத்தில் பிரபலமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவ்வ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான மாநில அரசின் விருதையும் பெற்றார்[18].

nivedita-cneglitz

அந்நியருக்காக வசதிகள் செய்யப்பட்ட கோவாவில் எகப்பட்ட சட்டமீறல்கள்: கோவாவில், 60 ஆண்டுகளாக, அந்நியர்கள், மேனாட்டவர் சுற்றுலாவிற்கு வருகிறார்கள், அதனால், வருமானம் வருகிறது என்ற நோக்கில் தான், சலுகைகள்-வசதிகள் என்ற போர்வையில், அவர்கள் கடற்கரையில், அரைகுறை உடைகளுடன் படுத்து கிடக்கலாம், அவ்வாறே உட்கார்ந்து கொண்டு ஆண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கலாம், குடித்து கும்மாளம் அடிக்கலாம் போன்றவை அனுமதிக்கப் பட்டன. அந்நிலையில், போதை மருந்து விற்பது போன்றவையும் அரங்கேறின. போதாகுறைக்கு, நாகரிகமான விபச்சாரமும் சேர்ந்து கொண்டது. அறை என்று எடுத்து கொண்டால், குடி-கூத்தி என்றெல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் உண்டாகி, அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் செல்ல ஆரம்பித்தனர். 2015 ஜூனில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில், விபசார பெண் தரகர் ஆயிஷா சய்யத் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்[19]. அவர், பல்வேறு ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. மற்றொரு ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இந்த சோதனையின்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு நடிகை, போலீசாரால் மீட்கப்பட்டார்[20]. அவர் பல்வேறு தெலுங்கு மற்றும் இந்தி வெற்றிப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவரை அரசின் பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

niveditha-hot2சாதாரண பெண்ணின் நிலை என்னவாகும்?: நடிகை, பிரபலமான நடிகை, வசதியாக வாழ்கின்ற பெண், என்ற ரீதியில் உள்ள இவருக்கே, இந்த கதி என்றால், சாதாரண பெண்ணின் நிலை என்ன, என்னாவாயிருக்கும் என்று நினைத்தால், அச்சமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை கோவாவை அம்மாதிரி உருவாக்கி இருக்கிறார்கள் எனலாம். தமிழில், கோவா என்ற படத்தில் கூட, கோவாவுக்குச் சென்றால், பெண்கள் கிடைப்பார்கள், அழகான பெண்கள் கிடைப்பார்கள், மேலும் அந்நிய நாட்டு பெண்கள் கிடைப்பார்கள், ஜாலியா இருக்கலாம், பொழுது போக்கலாம், அனுபவிக்கலாம் என்ற ரீதியில் தான் அப்படம் எடுக்கப்பட்டது. இதனால், பார்க்கும் இளைஞர்கள் மற்றும் சபலமானவர்களுக்கும் அவ்வாறே கருத்துருவாக்கம் ஏற்பட்டு, எப்படியாவது, கோவாவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்றே துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள். வியாபாரத்துடன், இத்தகைய அசிங்கங்கள், சட்டமீறல்கள் எல்லாமே சகஜமாகி விட்டன. அந்நிலையில், நிவேதிதா அல்ல, எந்த பெண்ணுமே அங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. இல்லை, அங்கு செல்லாமலே கூட இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

14-02-2017

nivedhita-sexually-harassed-at-goa-beach

[1] The Times of India, Actress speaks out about being harassed in Goa, Dhwani Desai| TNN | Updated: Feb 11, 2017, 09.40 AM IST.

[2] http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/niveditha-on-goa-harassment/articleshow/57082318.cms?

[3] சினி.உலகம், கோவாவில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள், மகாகலட்சுமி, பிப்ரவரி 13, 2017.

[4] http://www.cineulagam.com/actors/06/136545

[5] மாலைமலர், நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை, பதிவு: பிப்ரவரி 13, 2017 10:02 . IST.

[6] http://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/02/13100255/1067936/kannada-actress-nivedita-harassment.vpf

[7] தமிழ்.பிளிம்.பீட், கோவா பீச்சில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷமிகள், Posted by: Siva, Published: Sunday, February 12, 2017, 10:59 [IST]

[8] http://tamil.filmibeat.com/news/kannada-actress-harassed-goa/slider-pf53736-044693.html

[9] தினமலர், பிறமொழி சினிமா: கோவாவில் நிவ்ந்ந்திதாவுக்கு நேர்ந்த கொடுமை, பிப்ரவரி.13, 2017. 10.27. IST.

[10] http://cinema.dinamalar.com/tamil-news/56168/cinema/Kollywood/Niveditha-sexually-harassed-in-Goa.htm

[11] தினத்தந்தி, நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை , பிப்ரவரி 13, 02:24 AM

[12] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/02/13022418/actress-Nivedita-harassment.vpf

[13] சென்னை.ஆன்.லைன், செக்ஸ் தொல்லைகடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை!, February 13, 2017, Chennai

[14]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88

[15] The Times of India, Niveditha sexually harassed in Goa, TNN | Updated: Feb 9, 2017, 10.56 AM IST.

[16] http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/niveditha-sexually-harassed-in-goa/articleshow/57053813.cms

[17] India.today.cinema, Sandalwood actress Niveditha sexually harassed by a group of hooligans in Goa, February 9, 2017 5:03 pm.

[18] http://movies.indialivetoday.com/2017/02/09/sandalwood-actress-niveditha-sexually-harassed-by-a-group-of-hooligans-in-goa/

[19] தினத்தந்தி, கோவா நட்சத்திர ஓட்டலில் நடந்த விபசார வேட்டையில் நடிகை சிக்கினார் பெண் தரகர் கைது, ஜூன் 03, 2015, 02:26 AM.

[20] http://www.dailythanthi.com/News/India/2015/06/03022659/GoaStar-hotelThe-actress-was-involved-in-prostitution.vpf

கமல்-கவுதமி விவகாரம் – அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

நவம்பர் 2, 2016

கமல்கவுதமி விவகாரம்அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

gautami-says-goodbye

கமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்.  ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.

கமலின் அந்தப் பாடல்[1] நடிகை / சக்களத்தி விளக்கம்
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
ஸ்ரீபிரியா
கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
ஸ்ரீதேவி
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
சரிகா
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
வாணி கணபதி
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்

கமலைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தன.

shruti-haasan-gautami-fight

கவுதமிகமல் பிரிவுக்குக் காரணம் நடிகையா, காதலா, மகளா, நஷ்டமா?: ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 05-11-1954ல் பிறந்த 63வயதில் உள்ள கமல் ஹஸனுக்கு காதல் வருமா, கத்தரிக்காய் காய்க்குமா என்பது பிரச்சினை அல்ல, இந்த வயதிலும்  அதெல்லாம் தேவையா ஏன்பது தான் கேள்வி. கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது[2]என்று தமிழ் ஊடகம் நக்கலடிக்கிறது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்[3] என்று கூட்டிச் சொல்கிறது. “பார்த்தச்சாரதி”யானவர் இவர் இப்படி பார்த்து ஓட்டுகிறார் எனும் போது, இனி யார் மாட்டிக் கொள்ளப் போகிறாரோ என்று தெரியவில்லை.

kamal-gautami-break

சந்திரபாபு பாடிய பாட்டு, கமலின் வாழ்க்கைக்கு பொறுத்தமாக உள்ளது இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மனம் முடிப்பதில்லை

மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

© வேதபிரகாஷ்

02-11-2016

gautami-says-goodbye-to-kamal-hassan

[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்!, வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, கமல்கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா?, Updated: Tue, Nov 1, 2016, 23:52 [IST]

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-is-the-reason-behind-the-split-between-kamal-gautami-266135.html

 

“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்!

ஓகஸ்ட் 27, 2016

“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்!

Alisha boy frien video threateningஆபாச வீடியோவும் திடீர் திருமணமும்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம் என்று ஆரமிக்கின்றன தமிழ் ஊடகங்கள். அதாவது சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில், சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்தால் தான் அவர் பெயர் மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும், இல்லையென்றால் மறந்து விடுவர். அந்நிலையில் சினிமா மோகம் கொண்ட அலிசா கான் எல்லாவற்றிற்கும் துணிந்த நிலையைத் தான் காட்டுகிறது. இதனால், பல நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவரது நண்பர்  ஒரு ஆபாச விடியோ எடுத்து மிரட்டினார். ஆனால், அலிசா அதற்கு அசையவில்லை. சமீபத்தில் நடிகை அலிசா கானின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து டெல்லி சாலை ஓரங்களில் அவர் வசித்து வந்தார்[1]. இதனால் தெருவோரம் வசித்து வந்த அவர் திடீர் என்று லவ் கபூர் என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்[2]. ஜூன் 17 2016 அன்று அவர்கள் திருமணம் நடந்தது[3]. இந்நிலையில் கர்ப்பமான அலிஷாவை அவரது கணவர்  பிரிந்து சென்றுவிட்டார்[4]. காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.

அலிசா கான் வீடு தாக்குதல் 26-08-2016லவ் கபூர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த அலிசா கான்: ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை அலிசா கான் தாம் இந்த நிலைக்கு காரணம் கணவர் தான் என்று கூறி கங்கால் [ Kankhal] என்ற இடத்தில் உள்ள கணவரின் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சிகள் –  கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் – தற்போது வெளியாகி உள்ளது[5]. அவள் மெதுவாக செல்வது, கதவை பிடித்து ஆட்டுவது, யாருமே இல்லாத வராண்டாவில் உள்ள இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது என்றுள்ளன[6]. இந்த வீடியோவை இங்கு காணலாம்[7]. இரண்டு-மூன்று பேர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளது தெரிகிறது[8]. இதைப் பார்க்கும் போது, ஏதோ திட்டமிட்டு செய்வது போலவும், அதை யாரோ வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது, அதாவது, விளம்பரத்திற்காக செய்வது போல உள்ளது. அந்நடிகையே அத்தகைய ஏற்பாடுடன் சென்று கலாட்டா செய்துள்ளாளா அல்லது யாராவது ஊடகக் காரர்கள் துணையுடன் செய்தாளா என்றும் யோசிக்கத் தக்கது. என்னை இவ்வாறு தவிக்க வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டினார் அந்நடிகை.

alisha-khan My husbands wifeசினிமா ஆசையில் ஆபாச வீடியோவில் சிக்கிக் கொண்டது, வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது: சினிமா மோகத்தில் திரிந்த அலிசா, ”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” [My Husband’s wife], “எனது கணவனின் மனைவி” என்ற படத்தில் நடித்து தான் பிரபலமானவர் பாலிவுட் நடிகை அலிசா கான்[9].  முன்னரே குறிப்பிட்டபடி, “சினிமா சான்ஸ்” வாய்ப்பிற்காக பல நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தாள். மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது[10]. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர். அரச குடும்பம் மற்றும் முஸ்லிம்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை போலும். இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை போலீசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது[11].

எல்லாவற்றையும் துறக்க தயாரான பெண்கணவர் மீது புகார் கொடுத்தது: பெயரும் கெட்டு, சினிமா சான்ஸும் போனதால், ஆடம்பாமாக, ஜாலியாக இருக்க பணம் இல்லாமல் போனது. இதனால் வறுமையால் சிக்கி தவித்த அலிசா கான் டெல்லியில் உள்ள கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.  இந்நிலையில் ஹரித்துவாரில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு சென்ற அலிசா கான் தாம் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது கணவர் தான் என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ மறுப்பதாகவும் நடிகை அலிசா குற்றம் சாட்டினார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து ஹரித்துவார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்[12]. அலிசா கானின் இந்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[13]. சிலர் பணத்தை தந்து படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று மனம்நொந்துள்ளார்[14].

Alisha - kapoor not to fight with herகலாட்டாவிற்குப் பிறகு வெள்ளிக்கிழமை 26-08-2016 அன்று சமாதானம் ஆனது: இந்நிலையில் இருவரும் “பிக் பாஸ்” என்ற நிகழ்சியில் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினர்[15]. அலிசா கான், “நான் காதலுக்காக இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன். என கணவர் லவ் என்னை பார்த்துக் கொள்வார் ஆனால் என்னுடன் சண்டையிட மாட்டார் என்று நம்புகிறேன்”, என்று “பிக் பாஸ்” நிகழ்சியில் கூறினார்[16]. இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் சினிமா உலகத்தில் பெரிய விசயமே இல்லை. ஏனெனில், அங்கு மதம் வேலை செய்யலாம், ஆனால், இஸ்லாம் மாதிரி, இந்துமதம் ஒன்றும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை[17]. 26-08-2016 வெள்ளிக்கிழமை, லவ் கபூர் வந்து சமாதானம் செய்து வைத்தார். “அவளுக்காக நான் பொருட்களை விற்று நடிகை ஆக்கும் ஆசைக்கு உதவியுள்ளேன். அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை. அவள் ஒரு நல்ல மனைவியாக மற்றும் மறுமகளாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அவ்வாறே நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்[18].

She is a good actor, but she is yet to become a good wife.அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை: லவ் கபூர் சொன்னது மிகவும் நியாயமானது தான். அது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும். சினிமாவில் இக்காலத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர், நிதிநிறுவன முதலாளிகள், விநியோகஸ்தர்கள், அரசில்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோருமே நடிகைகளுக்கு வலைவீசிக்க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே, சமாளித்து, துறையில் நிரந்தரமாக இருக்க முடியாது. மவுசு, பிரபலம், இளமை, அழகு முதலியனவெல்லாம் இருக்கும்வரை ஓடும். புதியதாக வேறு யாராவது வந்து விட்டால், சான்ஸ் மட்டுமல்ல, எல்லா ஆதரவும் போய் விடும். ஆகவே, மனைவியாகி விட்டப் பிறகு, கணவருடன் அனுசரித்து வாழ்வது விட்டு மறுபடியும் சினிமா என்று சென்று சீரழிய வேண்டாமே? பெற்றோர்களே உதவவில்லை எனும் போது, மற்றவர்கள் எப்படி உதவுவார்கள். மேலும், கோடிகள் கொட்ட வேண்டும் என்று தான், லாபநோக்குடன் படம் எடுப்பார்கள். அலிசா கானை வைத்து யாரும் படம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் லவ் கபூரி வற்புருத்தி, தன்னை வைத்து படம் எடு என்று நச்சரித்தால், அவர் என்ன செய்வார்?

© வேதபிரகாஷ்

27-08-2016

லவ் கபூர் மற்றும் அலிசா கான் ஜூன் 17 2016 அன்று அவர்கள் திருமணம் நடந்தது

[1] தினகரன், ஆபாச வீடியோவால் வீதிக்கு வந்த நடிகை!: ஆத்திரத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கி ரகளை, Date: 2016-08-26@ 11:54:25

[2] பிளிமி.பீட்.தமிழ், கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ, Posted by: Siva, Published: Friday, August 26, 2016, 16:21 [IST]

[3] http://www.amarujala.com/delhi-ncr/exclusive-bollywood-actress-alisha-khan-married-in-the-temple-with-film-producer

[4] http://tamil.filmibeat.com/heroines/actress-alisha-khan-creates-ruckus-at-husband-s-house-041913.html

[5] தினத்தந்தி, ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை:கோபத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு,; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016, 1:38 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, 1:38 PM IST.

[6] நக்கீரன், கணவர் வீட்டை அடித்து நொறுக்கிய நடிகை (வீடியோ), பதிவு செய்த நாள் : 26, ஆகஸ்ட் 2016 (14:52 IST); மாற்றம் செய்த நாள் :26, ஆகஸ்ட் 2016 (14:52 IST).

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=171816

[7] https://youtu.be/TekhecQjSmY

[8] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=171816

[9] பிறபலம், ஆபாச வீடியோ வெளியானதால் தெருவுக்கு வந்த நடிகை, By  Niru Raj, Jun 16, 2016.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/08/26133845/Actress-Alisha-Khan-creates-ruckus-at-inlaws-house.vpf

[11] தமிழன்.தொலைக்காட்சி, பரிதாப நிலைக்கு தள்ளப்பட நடிகை பாலிவுட் நடிகை அலிசா கான் கோவில்களில் தஞ்சம், 15 ஜூன், 2016.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=241397

[13]http://www.tamilantelevision.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-30049.html

[14] http://pirapalam.com/bollywood/4811/

[15] Daily pioneer, After a ‘filmy’ tiff, it’s a happy ending for alisha khan, hubby, Saturday, 27 August 2016 | PNS | Haridwar | in Dehradun.

[16] The actor, Alisha Khan who is to appear in reality television show Big Boss soon said, “Mere pyaar ki jeet hui (My true love won at last). For Love, I adopted Hindu religion. I hope and wish that Love would take care of me and not fight with me.”

http://www.dailypioneer.com/state-editions/after-a-filmy-tiff-its-a-happy-ending-for-alisha-khan-hubby.html

[17] இந்தி திரைப்பட உலகத்தைப் பொறுத்த வரையில், பல இந்து நடிகைகளை முஸ்லிம்கள் காதலித்து / அபகரித்து / கட்டாயப்படுத்தி / சீரழித்து திருமணம் செய்து கொண்டுள்ளது தான் அதிகமாக உள்ளது. மதாகினி, ஹேமமாலினி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

[18] Love Kapoor, however, said at  the same  time  that he  had done everything possible for him to help his wife with her career. “I spent all his movable and immovable property to make my wife’s career. She is a good actor, but she is yet to become  a good wife. Now, I hope that things would turn for the better. I wish she will be a good wife and daughter-in-law.”

http://www.dailypioneer.com/state-editions/after-a-filmy-tiff-its-a-happy-ending-for-alisha-khan-hubby.html

 

ஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது!

நவம்பர் 17, 2013

ஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது!

செம்பகலட்சுமி, வசந்ட்ய்ஹகுமாரி, ஶ்ரீவித்யா

ஶ்ரீவித்யாவின் இளமை வாழ்க்கை (1953-1978): ஸ்ரீவித்யா (1953-2006) கிருஷ்ணமூர்த்தி என்கின்ற தமிழ் நகைச்சுவை நடிகர் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரிக்கும் 24-07-1953 அன்று பிறந்தார். அவரது தந்தையின் மரணத்தால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது. சிறுவயதிலேயே ஶ்ரீவித்யா 1966லிருந்தே நடிக்க ஆரம்பித்தாலும், குடும்பத்தின் நிலை மாறவில்லை. நடனம் கற்றுக் கொண்டு கிருஷ்ணகான சபையில் அரங்கேற்றமும் நடந்தது. ஒரு அமெரிக்க விஞ்ஞானியுடன் திருமண சந்தர்ப்பமும் ஏற்பட்டது, ஆனால், குடும்பத்தின் நிதிநிலைகுறைவால் கனவாகிப் போனது. பிறகு நடிகையாக பிரபலமானஆர். 1975ல் “அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிக்கும் போது கமலஹாசனுடன் காதல் ஏற்பட்டது. இரு குடும்பங்களும் அதனை ஏற்றுக் கொண்டன. ஆனால், அது சர்ச்சைகளுடன் முறிந்தது. கமலஹாசன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை அல்லது ஏமாற்றிவிட்டார் என்ற செய்திகள் வந்தன. இதைத்தவிர வந்த கிசுகிசுக்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் கமலஹாசன் தான். இதனால், மிகவும் நொந்துபோய், மனநிலை பாதிப்புடன் இருந்தார். கமலஹாசனின் பாதிப்பில் இப்பொழுதுள்ள, இறந்த நடிகைகளில் இவர் முதலாவதாக இருந்தார் போலும். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

ஶ்ரீவித்யாவின் அரங்கேற்றம்-கே.கே.ஷா கவர்னர்

கமல்ஹாசனுக்குப் பிறகு வந்த ஜார்ஜ் தாமஸ் (1978-1987): இந்நிலையில் 1977-78களில் ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு நட்பு ஏற்பட்டது. ஶ்ரீவித்யா மன-அழுத்தத்தோடு உள்ளார் என்பதனை அறிந்து, ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து அவருக்கு ஆறுதல் கூறினார், உதவி வந்தார். இதனால், நட்பு காதலாகியது. திருமணம் செய்து கொள்ள உடன் பட்டபோதுதான், ஶ்ரீவித்யாவை மதம் மாற வேண்டும், அதாவது கிருத்துவமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்டு, மதம் மாறி 19-01-1978 அன்று திருமணம் செய்து கொண்டார்.ஶ்ரீவித்யா-கிருத்துக்கொடுமை-இறப்பு மதரீதியில் கூட அவருக்குத் தொல்லைக் கொடுத்தார்[1]. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஆனால், சில மாதங்களிலேயே, ஜார்ஜ் தாமஸ் சினிமாக்களில் நரிக்க வற்புறுத்தினார். அதற்கு ஶ்ரீவித்யா ஒப்புக் கொள்ளாத போதுதான், ஜார்ஜ் தாமஸ் தனது சுயரூபத்தைக் காட்டினார். அதனை உணர்ந்தபோது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். அதாவது தன்னை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது வெட்டவெளிச்சமாகியது.

kamal-hassan-srividya

ஜார்ஜ் தாமஸின் தொல்லைகள் தொடர்ந்தன – வீட்டை அபகரிக்க வழக்கு போட்டது (1987-2003): மஹாலிங்கபுர வீடு தனது தான்,. கடாரில் உள்ள தனது சகோதரன் சாம்ஸன் தான் பணம் கொடுத்தார் என்றெல்லாம் வழக்கு போட்டார்.: போதாகுறைக்கு தனது சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள முயன்றபோது, கோர்ட்டுக்கும் செல்லவேண்டியதாகியது. மார்ச் 2003ல் சென்னை உயர்நீதி மன்றம் ஜார்ஜ் தாமஸின் வழக்கை தள்ளுபடி செய்தது[2]. சென்னையில் மஹாலிங்பபுரத்தில் இடம் வாங்கி (21-04-1983), வீடு கட்டிக் கொண்டு கணவனுடன் வாழ்ந்து வந்தார்.  ஆனால், ஜார்ஜ் தாமஸ் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்[3]. 14-06-1987 அன்று தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று அஞ்சிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ ஆரம்பித்தார்[4]. இதனால் விவாக ரத்து பெற்றுக் கொண்டார்[5]. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று தனது வீட்டில் – பிடிபி நகர் – வாழ ஆரம்பித்தார். ஜார்ஜ் தாமஸ் அவரை விடுவதாக இல்லை. ஜூன் 1988ல் சென்னை உயர்நீதி மன்றம், மஹாலிங்புரம் வீடு இவருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மறத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது ஜூன் 2003ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது[6].

ஶ்ரீவித்யா-கனவர் ஜார்ஜ் ஜோசப்

புற்றுநோயால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் இறந்தது (2006): மனநிலையில் பாதிக்கப் பட்ட இவருக்கு, உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. திடீரென்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போது, தன்னை பார்க்க வருபவர்களை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஒருமுறை கமலஹாசன் வந்தபோது (அக்டோபர் 2006), அவரை பார்க்க ஒப்புக் கொண்டார்[7]. சோதனைகள் செய்த போது, அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கீமோதெரபி எல்லாம் கொடுக்கப்பட்டது, ஆனால், 19-10-2006 அன்று சித்திரை திருநாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்தார்[8]. அவர் இறந்தபோது பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சர், கே.பி.கணேஷ்குமார் முதலியோர் இருந்தனர்[9]. அவர் தனது உயிலில் (17-08-2006) சகோதரன் சங்கரராமனின் குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்சம் மற்றும் ஒவ்வொரு வேலைக்காரருக்கும் ஒரு லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்தார். அவரது பணத்தை வைத்து ஒரு நாட்டியப்பள்ளி துவங்கப்பட்டது.

ஶ்ரீவித்யா-ஜார்ஜ் தாமஸ்

இப்பொழுது வரும் செய்திகள் (2013): 1970ளிலிருந்து 1990 ஆண்டுகள் வரை தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வந்தார். நன்றாகப் பாடக்கூடியவர், நடிகையானதே வினோதமான விசயமாகும். அதுவே அவரது வாழ்க்கையை சோகமயமாக்கி விட்டது. கமல்-ஶ்ரீவித்யா காதலை வைத்து திரைப் படம் எடுத்து வியாபாரமும் செய்யப்பட்டது[10]. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பால் 2006ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைக்கு இருந்த நோய் குறித்தும் அவரின் உயிரை காப்பாற்ற விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியுள்ளார்[11]. இதனால் தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகையில், வெளியாகியுள்ள தகவல் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறுவது உண்மையில்லை என்றும் மருந்தை மாற்றினால் பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார் எனவும் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

17-11-2013


[1] இதைபற்றி முன்னர் www.indiainteracts.com என்ற தளத்தில் விவரமாக பதிவுகள் செய்திருந்தேன். ஆனால், அவையெல்லாம் மறைந்து விட்டன. அதற்கு ஆதாரணமான விவரங்களும் இப்பொழுது இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்துள்ளன. ஆனால், 60 வருட செய்தி மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்பு இருப்பதனால், மறுபடியும் இப்பொழுது தமிழில் கொடுக்க முயற்சித்துள்ளேன்.

[2]Madras High Court, George Thomas vs Smt. Srividya And The Tax Recovery … on 4 March, 2003; Equivalent citations: (2003) 1 MLJ 823;  http://www.indiankanoon.org/doc/627763/

[3] Due to misunderstanding that arose between them, the defendant started ill-treating the plaintiff. The defendant, in fact was cruel and indulged in several acts of cruelty. Since the life was miserable, the plaintiff had to leave the house fearing for her life on 14.06.1987. Since then, the plaintiff is living separately. The defendant is squatting over the property besides enjoying the luxury articles left by the plaintiff in the house viz., sofa sets costly furniture, ward robes etc.

[4] The personal life of Srividhya was not anywhere closer to the cheerful and smiling mother in good spirits that she portrayed onscreen. After her marital relationship turned sour with George, she retreated herself for a while and is even believed to have lived in temples. Rubbing salt to the already sore wound was her husband’s claim for her property. Although Srividhya won the case quite later, the mental agony that she endured during that period ruined her career and ultimately her peace of mind. http://www.indusladies.com/forums/movies/172374-black-and-white-actress-3.html

[7] Srividya declined to entertain any visitors, guests or even her relatives. Under these circumstances, Kamal was in Kochi recently for participating in a ceremony hosted by Amritha Institute of Medical Technology. He decided to pay a visit to his former heroine and flew to Trivandrum. He expressed his wish to meet her at the hospital. Following this, after Srividya’s consent Kamal was let inside the ward. Srividya was all in tears to meet Kamal who expressed shock at her plight. Kamal promised to provide her with the best treatment and told that he is even ready to fly her elsewhere. However, Srividya refused for the same and thanked Kamal. http://kollywood.allindiansite.com/g/2006101003.html

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

ஓகஸ்ட் 6, 2013

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம்,  காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

பிரஸ்மீட்,  பேட்டிவிளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”,  என்றும் பேசினார்[4].

அமீருடைய  ஒழுக்கத்தைப்  பற்றிய  பொன்  மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா? ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும்? இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது? நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா? விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

காதலன்  குடும்பத்தினரின்  பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].

தந்தை  –  மகள்  பரஸ்பர  புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

போலீசாரிடம்  முரண்பட்ட  புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சேரன்,   தாமினி,  சந்துரு  கலந்து  கொண்ட  போலீஸ்  விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சேரனின்  தொடர்  குற்றச்  சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழக  போலீசாருக்கு  காதல்  விவகாரங்களை  ஆராய்வது  தவிர  வேறு  வேலை  இல்லை  போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்!

ஊடகங்களின்  அனுதாபம்,  பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.

சேரனின்  மீது  முன்பு கற்பழிப்  புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.

2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].

போலீசிடமிருந்து  கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

களவு – கற்பு முறைகள்,  விதிகள்,  சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள்,  இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.

வேதபிரகாஷ்

© 06-08-2013


[7] In her petition, Eswari Ammal submitted that her son fell in love with Dhamini, 20, on June 4, 2011 after witnessing her dance programme. When informed, Cheran had initially agreed for the marriage but later said the couple should wait for a couple of years.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Film-director-Cherans-daughter-case-reaches-HC/articleshow/21621677.cms

நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)

ஜூன் 5, 2013

நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்-  நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)

Jiah khan with swmming suit wet

இப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1].  இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].

Jiah khan with her mother

தாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்

பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.   இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பாராட்டு பெற்றவர் ஜியாகான்.  அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.
Hot Sexy Actress Model Jiah Khan Wallpapers for PC

உடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்

தற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர்.   அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை.  ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா? நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

It is all in the game - no virtue only for money

மற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்

காதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.

Jiah khan acting with...........

இதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா?

காதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா?: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].

Jiah khan acting with swim suit

இதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்

தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது?: WHAT TRANSPIRED BETWEEN JIAH AND SOORAJ[10]

Saturday morning, June 1: Jiah Khan leaves for Hyderabad to audition for a Tamil film. However, she is turned down and the casting directors tell her she is too underweight for the role

Around 7pm: Jiah returns to Mumbai. Sources said she was upset and told her mother that her career in the film industry was going nowhere and she was contemplating becoming an interior designer

Around 9pm: Jiah goes to her boyfriend Sooraj Pancholi’s residence at Gandhigram Road in Juhu, Vile Parle (West). She stays at his house for the night and the following day

Sunday, June 2, around 9pm: Jiah and Sooraj have dinner at a Juhu-based five-star hotel, following which he drops her home at Sagar Sangeet building in Juhu

Monday, June 3: Jiah and Sooraj exchange several calls and text messages on the day she killed herself. Police said at least 10 calls, each lasting for over two minutes, are made between the two, apart from seven to eight text messages

Around 7pm: Jiah tells Sooraj over the phone that she has bagged roles in three films

Around 8.45pm: Sooraj sends a congratulatory bouquet to her residence, which is delivered by his help Deva

Around 9pm: After Sooraj does not respond to her calls, Jiah sends him a text message: “Why are you so cold?” Sooraj replies saying he is busy with work. Jiah then expresses suspicion that he is dating another woman, to which Sooraj replies that she is misunderstanding him. The police on Tuesday said that the woman who Jiah suspected is Sooraj’s jeweller.

Around 9.15pm: Jiah goes to the watchman of her building, gives him the bouquet asking him to throw it, and returns to her apartment

Around 9.30pm: Jiah goes to Sooraj’s residence and calls him from outside, but he does not answer. She then calls Deva, who says Sooraj is busy as he is talking to his father, actor Aditya Pancholi

Around 9.50pm: Jiah returns to her apartment

10.53pm: Jiah calls Sooraj and has a two-minute-long conversation with him

11.07pm: She messages him saying if things continue the way they are, she will return to London

Between 11.07pm and 11.22pm: Sooraj sends Jiah three messages requesting her to call him, but she does not respond

11.23pm: Jiah’s mother Rabea returns home and finds her hanging from the ceiling fan in her bedroom.

Jiah khan with swimming suit2

நடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்?[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].

வேதபிரகாஷ்

© 05—06-2013


[4] Jiah was born Nafisa Khan on February 20, 1988 in Chelsea, London. Her father Ali Rizvi Khan is an Indian American and mother Rabiya Amin, a former Hindi film actress, who worked in Tahir Hussain’s Dulha Bikta Hai. Check out all the latest News, Sport & Celeb gossip at Mirror.co.uk http://www.mirror.co.uk/news/world-news/nafisa-jiah-khan-dead-recap-1930520#ixzz2VIIgTnZj
Follow us: @DailyMirror on Twitter | DailyMirror on Facebook

சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

பிப்ரவரி 23, 2012

சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

சினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.

தாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர்.  அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.

கைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன்  என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].

சைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].

வருடம்

செய்த குற்றம், வழக்கு

முடிவு – விடுவிப்பு, விடுதலை

1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].
2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].
2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்

23-02-2012


[4] Assistant commissioner of police Iqbal Shaikh said the charge was filed against Saif and two unknown others as the women present during the brawl were not involved. The two others arrested were later identified as Bilal Amrohi, the grandson of Kamaal Amrohi (maker of Pakeezah and Meena Kumari’s husband), and Shakeel. They were also granted bail along with Saif.

[7] Khan married actress Amrita Singh in October 1991 After thirteen years of marriage and two children (son Ibrahim Ali Khan and daughter Sara Ali Khan), the couple divorced in 2004. The children live with their mother.

[8] Saif said: “People say that marriage doesn’t affect your career but the fact is it does. Today the whole definition of marriage has changed. We are so well connected, so close that marriage is just a stamp of validation for the society.

http://www.mid-day.com/entertainment/2009/oct/311009-saif-ali-khan-kareena-kapoor-marriage.htm

ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்!

ஜனவரி 31, 2012

ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்!

மக்கள் சினிமாக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிரிஷ் குந்தர் என்ற இயக்குனரை அடித்த ஷாருக் கான்: ஷாருக்கான் குடித்து கலாட்டா செய்வதில் திறமையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இவர் எப்பொழுதுமே மற்றவர்களுடன் தகராறு செய்வதில் பிரசித்தி பெற்றவர். அமீர்கானுடன், நெட்ருங்காலமாக “காகா” விட்டிருந்தார். பேட்டிகளில் இருவருமே, காரசாரமாக திட்டிக் கொண்டனர். இப்பொழுது ஒருகாலத்தில் தனது நெருங்கிய தோழியாக இருந்தவரும், இயக்குநருமான ஃபராகானின் கணவர் சிரிஷ் குந்தரை நடிகர் ஷாருக்கான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. இப்பொழுதெல்லாம், திரைப்பட உலகத்தில், ராத்திரி பார்டி, நடிகைகளுடன் கும்மாளம் என்பது சகஜமாகி விட்டது. இதற்காகவே, சில நடிகர்கள் வருவது உண்டு.

ஷாருக் கான் எப்படி, ஏன் அடித்தார்: மும்பையில் அக்னீபாத் பட வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை (29-01-2012) இரவு நடிகர் சஞ்சய் சத் அளித்த விருந்தின்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. போதையில் இருந்த குந்தர், போதையில் இருந்த ஷாருக்கானை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுத்ததாகவும், குளியறைக்கு சென்றபோதும் அவருடனே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஷாருக்கான் அவரை சோபாவில் தள்ளி, நீண்ட தலைமுடியைப் பிடித்து புரட்டி எடுத்துள்ளார். இதையடுத்து சஞ்சய் தத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். சமாதானப்படுத்தும்போது அவரும் குந்தரை கன்னத்தில் ஒரு அறை அறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி மன்யதாவுக்கு கீழ்த்தரமான எஸ்எம்எஸ்களை அனுப்பிவந்ததற்காகவும், அந்த விருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும் குந்தரை சஞ்சய் தத் கன்னத்தில் அறைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடித்தார்-அடிக்கவில்லை – சமரசம் ஆகிவிட்டது: முதலில், ஷாருக் கான் அடித்தார், சஞ்சய் தத்தும் கன்னத்தில் அறைந்தார், என்று தான் செய்திகள் வந்தன[2]. ஷாருக் கான், தனது பாடிகார்டுகளுடன் உள்ளே நுழைந்தார். சிரிஷ் குந்தர் என்ற இயக்குனர் பக்கத்தில் சென்ற போது, ஷாருக்கான், திடீரென்று அடிப்பதை பார்க்க முடிந்தது. சஞ்சய் வந்து ஷாருக்கை விலக்கி விட்டார். அதற்குள், பாடி கார்டுகள் ரிரிஷின்ன் மீது பாய்ந்தனர். இருப்பினும், சிரிஷ் அங்கிருந்து வெளியேறி விட்டார்[3]. இந்த சம்பவம் குறித்து ஃபராகானும், குந்தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். எனினும் இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனர். ஆனால், ஷாருக் கானும், அவரது பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து தனது கணவரை தாக்கியுள்ளதாக, இப்பொழுது கூறுகிறார்[4]. மிகவும் அசிங்கமகி விட்டது என்றும் வருத்தப் பட்டுக் கொண்டார்[5]. மேலும், பாரா கான், குந்தர் கான் இருவருமே ஷாருக்கானின் வீட்டிற்குச் சென்று சமரசம் செய்து கொண்டதாக, பாரா கானின் சகோதரர் சஜ்ஜித் நாடியாவாலா கூறுகிறார்[6].

குடித்தோ, குடிக்காமலேயோ பாலிஹுட்டில் இப்படி அடித்துக் கொள்வது சகஜமான விஷயம்: பாலிஹுட்டில் இப்படி அடித்தவர்கள், அடித்துக் கொண்டவர்கள், கைகலப்பு சண்டைகள் முதலியன புதியதல்ல[7]. திலாவர் கான்[8] என்கின்ற தர்மேந்திரா, பலதடவை கேமராமேன், ரசிகர்கள் போன்றவர்களை அடித்து அபராதம் கட்டியிருக்கிறார்.

  • சொஹைல் கான்: இவர் தன்னுடைய சகோதரர் சல்மான் கானை, சிகந்தர் கேர் கிண்டல் செய்ததற்கு, நைட்கிளப்பிலேயே அடித்தார். அப்பொழுது அஸ்மித் படேல் சொஹைலுக்கு உதவ வந்தார். அனுபம் கேர், இரண்டு கான்கள் மீதும் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
  • அஸ்மித் படேல்: மேலே குறிப்பிடப் பட்ட சண்டை மட்டும் அல்ல, இவர் பல சண்டைகளில் பங்குக் கொண்டுள்ளார். வேறொரு சண்டையில், விக்கி என்ற மேக்கப் மேனின் மூக்கை உடைத்தார். அவர் இம்ரான் கானின் நல்ல நண்பர் கூட. இது நடந்தது, ஒரு பப்பில் – அதாவது குடித்து-ஆடும் இடம்.
  • சல்மான் கான்: 2004ல் தன்னுடைய கேர்ள் பிரண்ட் காத்ரீனா கைபை, ஒரு கேமரா மேன் புகைப்படம் எடுக்க முயன்றபோது, கையால் குத்தியுள்ளார்.
  • ராஹுல் பட்: நிர்வாண போஸ் கொடுத்த பூஜா பட்டிமன் சகோதரர். 2002ல், ர்ன்வீர் சோரே என்ற பூஜா பட்டின், ப்ழைய பாய்-பிரண்டை அடித்துள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டது. சமீபத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக, விசாரணைக்குள்ளானார்.
  • கோவிந்தா: ஒரு விழாவில், ஒரு கேமரா மேன் தன்னுடைய கவனத்தைத் திருப்பியதற்காக அடித்துள்ளார். ஆர்யன் வைத் என்பவர், அறையும் மாதிரி நடிக்கும் போது, கெட்டியாக அறைந்து விட்டார் என்று பதிலுக்கு அறைந்துள்ளார். தட்டிக் கேட்டதால், இயக்குனர் நீரஜ் வோராவுக்கும் ஒரு அறை விழுந்தது.
  • ஜைத் கான்: தன்னுடை மனைவி மாலிகா மற்றும் மைத்துனி நடாஷா இருவருக்கும் அருகில் நடந்து சென்றனர் என்பதற்காக, மூன்று பேர்களை, இரண்டு தனித்தனியான இடங்களில் அடித்துள்ளார்.

இப்படி பலர் உள்ளனர். தமிழ் படவுலகில், இப்படியொரு லிஸ்டை எடுக்கவில்லை போலும்!

வேதபிரகாஷ்

31-01-2012

 

[1] “We didn’t know what was happening. We saw SRK enter. Then we saw him head towards Shirish from behind the director. SRK pulled Shirish down to the ground by his long hair. We were all shocked. We had never seen SRK behave this way before,” said an eyewitness. “Before anyone could react, Baba Dewan, the owner of Aurus, ran in and intervened. SRK told Dewan to keep out. Dewan said the place belonged to him and he must intervene. The fight would’ve been prolonged had Sanjay Dutt not pulled SRK away from the ugly scene,” the eyewitness added. Read more at: http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN20120193420&keyword=bollywood&subcatg=MOVIESINDIA&nid=171726&cp

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு!

ஜனவரி 9, 2012

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு!


மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம்: மேனாட்டு கலாச்சாரத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விட்ட நிலையில், இன்று மது-மாது இரண்டுமே தேவை என்ற விஷயமாகி, அவற்றைக் கொடுக்கவும் வியாபாரிகள் தயாராகிவிட்ட நிலையில், விபச்சரத்தைப் பற்றி விவாதிப்பது வேடிக்கையான விஷயமே[1]. கோலிவுட் விபச்சாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சினிமாக்களில் ஜோக்ஸ் என்ற பெயரில் உடலுறவப் பற்றி கொச்சையாக, வெளிப்படையாக சொல்லித் தரப்படுகிறது. அதற்கேற்றாற் போல கேமராக்களும் விரைவாக நகர்ந்து காட்ட வேண்டியதை காட்டவே செய்கிறது. அதனால், தெரியாதவர்களும், தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. பிறகு, பார்ப்பதை செய்து பார்க்க விரும்புகிறது மனம். இந்நிலையில் விபச்சாரம் வியாபாரமாகிறது. சில நேரங்களில் பொழுதுபோக்காக்கிறது[2]. சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் சுலபமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மற்றும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது சுலபமன வேலையாக பலருக்கு இருக்கிறது. “நடன கலைஞர்கள் சங்கம்”, “துணை நடிகைகள் சங்கம்”, “நடன நடிகைகள் சங்கம்”, “சினிமா பயிற்சி சங்கம்” என்ற போர்வையில் இவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. முன்பு “பாடி-மசாஜ்” சாதாரணமாக இருந்தது[3].

வியாபார நிமித்தம் வருபவர்கள் வெளிப்படையாகவே கேட்கும் அளவிற்கு வந்து விட்ட நிலையில், சில ஹோட்டல்களில் அதற்கான புரோக்கர்கள் இருந்து செயல்படுகிறர்கள். நட்சத்திர ஹோட்டல்களில் நாகரிகமாக நடந்து முடிந்து விடுகிறது. மற்ற நிலைகளில் வெளிப்படும்போது, அகப்பட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக மொபைல்போன் மூலமும், இணைத்தளங்கள் வழியாகவும் தொயர்பு கொண்டு ஏற்பாடு செய்வதால், அகப்படாமலும் தப்பித்து விடுகின்றனர். கடந்த டிசம்பரில் இணைத்தளம் மூலம் விபச்சாரம் செய்து வந்த பெண்ணை, போலீஸார் கைது செய்தனர்[4]. பல நேரங்களில் விபச்சாரம் கடனை அடைக்கும் வழியாகவும் பயன்படுத்துகின்றனர்[5]. அதற்காகவே “நிதி நிறுவன ஆலோசகர்கள்” வேலைசெய்து வருகிறார்கள். இதில் பிளாக்-மெயில் செய்யும் வேலையும் இணைந்து விடுகிறது. விபச்சாரத்துடன் புருனோகிராபியும் சேர்ந்து விடுகிறது[6]. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், சிலர் எல்லாவிதமான குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். அரசியலும் கலக்கும் போது, சட்டங்கள் மீறப்படுகின்றன[7]. கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும்[8] போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது[9].


விபச்சாரத் தடுப்பு போலீஸாரின் நடவடிக்கை: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்[10]. சினிமா பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்[11]. சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை வைத்து, அத்தகைய புரோக்கர்கள் சிலரிடம் வாடிக்கையர் போல பேசி, பெண்களைக் கேட்டனர்.  மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் சரோஜினி தெருவில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்[12]. அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.


திரைப்படம் தயாரிப்பவர் விபச்சாரத்தையும் தொழிலாக செய்கிறாராம்: விசாரணையில் செல்வ நாயகன் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது ‘பேசாதே’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


குடும்ப பெண்கள் சீரழியும் போக்கு – பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர்[13]. சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி, விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.

வாழ்க்கை பறிபோகும்: பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லை வாயலில்[14] நடைபெற்ற பெண்களின் கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில் யாஸ்மினுக்கு எமனாக மாறிவிட்டது.

போலீஸ் அதிரடி நடவடிக்கை: இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாக குடும்பப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.  பெரம்பூர் ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் திருந்த என்ன செய்வார்கள்?

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்: மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்த தனம் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கலாச்சார சீரழிவு – காரணம் ஏன், தீர்வு என்ன – சொல்வதில்லையே?: சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். என்னத்தான் கலாச்சார சீரழிவு என்று காரணம் சொன்னாமல், கலாச்சாரத்தைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லையே?

சென்னைக்கு அடுத்து கோவை: கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்[15]. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர் இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம் வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன. உடனே போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும், வாடிக்கையாளர்களும் இருந்தனர்.  இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்த போது சென்னையை சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டான்சர்கள் சிந்து (20), ஷீபா (21), கேரளாவை சேர்ந்த காயத்திரி மற்றும் ஆந்திராவை சேர்ந்த கவிதா (21) என தெரியவந்தது. மற்றொரு அறையில் இருந்த வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண மூர்த்தி (47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இன்டர்நெட் மூலம் அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அனுப்பி வைக்கும் புரோக்கர்கள்: விசாரணையில் பாலாஜியும், கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார். ஒரு அழகியை அழைத்து சென்றால் 5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும் என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால் போதுமாம். அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை, தேவையான சேவை, அதற்கான ஊதிய பங்கீடு: அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மகிழ்வித்து ஒத்துழைப்பார்கள். இதற்காக ஏதாவது கல்லூரிகள் கூட நடத்தப் படுகின்றனவோ என்னமோ? வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள். மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு.  அழகிகள் கைது செய்யப்பட்ட அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


[8]

என் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும் – நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”!

திசெம்பர் 30, 2011

என் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும் – நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”!

sherin-spicy-pose-photo-shootஇயக்குனர் ஆசையில் அபாய நடிகை! “துள்ளுவதோ இளமை” படத்தின் நாயகி ஷெரீன் “அபாயம்” படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். “டேன்ஜர்”

ஷெரின் ஶ்ரீருங்கார் என்ற கன்னட நடிகை மே 5, 1985ல் பிறந்தவர். அலி என்ற முஸ்லீம் மற்றும் யசோதா என்பவருக்கும் பிறந்தவர். பெங்களூரில் பிறந்து, வளர்ந்து, படித்து மாடலாக இருந்து வந்தார். பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் “அபாயமாக” தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாவம், ஏதோ தமிழில் “அபாயமே” இல்லத மாதிரி! அந்த நடிகைக்கு தான் டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டு சொன்னதை இப்படி தமாஷாக “நக்கீரன்” நக்கலடித்துள்ளார்[1]. அவர் ஏற்கெனெவே பலான படத்தை எடுப்பதில் கூட வல்லவர் என்று நிரூபித்துள்ளார்.

ஷெரின் காணவில்லை என்று நிருபர்களுக்கு கவலையாம்: ஷெரின் காணாமல் போன மாயம் பற்றி நிருபர்கள் கேட்ட போது, ”நான் இத்தனை நாட்கள் ஆஸ்திரேலியாவில் “ட்ராயிங் மற்றும் ஸ்கிரீன் பிளே கோர்ஸ்” (பாருங்கள் நமது நிருபர்களுக்கு, இதனை தமிழில் எழுதமுடியவில்லை போலும்) படிக்க சென்றிருந்தேன்.  வந்ததும் நல்ல கதையம்சம் கொண்ட படமாக அபாயம் வந்ததால் அதில் நடித்தேன். என் படிப்பு  இன்னும் முடியவில்லை. அதை முடித்துவிட்டு தமிழ் டைரக்டர் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலைக்கு சேர்ந்து நல்ல டைரக்டரா ஆகணும்.”, என்று கூறியுள்ளார்[2]. பாவம், தமிழ் நிருபர்களுக்கு, நடிகைகள் காணாமல் போனது தான் கவலையளிக்கிறது போலும். அப்படியென்ன அவர்கள் தருகிறார்கள்? கவரா, பரிசு பொருட்களா, ஹோட்டலில் பார்ட்டியா அல்லது வெறேதையாவது விஷேசமாக கொடுக்கிறாரா?

sherin shringar - 11111என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்: ஷெரீன் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தார். அப்போது, “உங்களது காதல் என்னாயிற்று?  ஒரு பாய் ஃபிரண்டுடன் சுற்றிக்கொண்டு இருப்பதாக நியூஸ் வந்திச்சே?”, என நிருபர்கள் கேட்டதற்கு, “எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என கேட்டதோடு, என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம்”, என்றும் கூறியுள்ளார். பாவம், அப்படி கிளரத்தான் அவர்கள் வந்தார்களோ? நித்தி என்ற போது ஜொல்லு விட்டுக் கொண்டு, படுக்கையறையிலேயே “புளூ பிளிம்” எடுத்தார்களே, இதையெல்லாம் எப்படி விட்டு வைத்தார்கள்?

ஆகா, இவர்களுக்குத் தான் தெரியும் போல – அவர் ஓபன் டைப்பா, இல்லை குளோஸ்ட் டைப்ப என்று. எது இருந்தாலும் விட்டு வைக்க மாட்டார்கள் போலும். தமிழ் ரசிகர் வேண்டும் என்கிறாரே, அப்ளிகேஷன் போட வேண்டியதுதானே?

 “பெட் டாக்”குக்கு நாய் என்றால், மற்றதற்கு யார்? படுக்கையறை பேச்சிற்கு நாய் தான், என்றால், மற்றதற்கு யார்? “ஹாஹா….. ஹா…ஹா…. (முத்து பல் தெரிய

சிரிக்கிறார்) ஒரு பாய் ஃபிரண்டா? எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் என்னோட பெட் டாக் வெண்ணிலாதான். இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. நல்லா சமைக்க தெரிந்த, வீட்டை சுத்தமாக வைக்க தெரிந்த தமிழ் ரசிகரை[3] கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்”, என்ற ஷெரின் அநியாயத்திற்கு ஓபன் டைப்பாக இருக்கிறார்[4]. அதாவது வேலைக்கரனுக்கு ஒரு தமிழனைத் தேடுகிறார் போலும்!

sherin shringarஎன் நாயை நன்றாக கவனித்துக் கொள்பவர் தாம் எனக்கு கணவராக வரமுடியும்! ஒருவழியாக, இப்படி உண்மையைச் சொல்லியுள்ளார், “மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி பெண் நாய் குட்டி வெண்ணிலா தான் என்றார். அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும்[5]. மற்றபடி நான் அவரிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்”, என்று கூறியுள்ளார் ஷெரீன்[6].  அதாவது, அவரும் அதேப்போல, நாயைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான், ஷெரினிடம் எதுவும் கிடைக்காது. நாயுக்கு முத்தம் கூட கிடைக்கும், ஆனால், நாயை கவனிப்பவருக்கு எதுவும் கிடைக்காது.

நடிகையின் நாய், சிலிகான் பொருத்திய மார்பகத்தில் ஏடாகூடமாக பாய்ந்து, காயம் ஏற்படுத்தி விட்டது: முன்பு இப்படியொரு செய்தி வந்தது. மார்பக சீரமைப்புக்காக சிகிச்சை செய்துகொண்ட, மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவருக்கு, அவர், செல்லமாக வளர்த்த நாயால், தொல்லை ஏற்பட்ட விவகாரம், நுகர்வோர் கோர்ட்டில், அவர் தொடர்ந்த வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர், மும்பை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த நடிகை, பாலிவுட் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிரபலமான மாடலும் ஆவார். (இந்த நடிகையின் பெயரை, நுகர்வோர் கோர்ட் வெளியிடவில்லை) கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

பார்கவா நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில், மார்பக சீரமைப்புக்காக சிகிச்சைக்காக சேர்ந்தேன். டாக்டர்கள் சந்தீப் சர்மா, பாலி சிங் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். எனக்கு மார்பகத்தை எழிலாக்க “சிலிகான் ஜெல்’ பொருத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில், என் மார்பகத்தில் வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு சென்று, என் பிரச்னையை கூறினேன். பரிசோதனை செய்த டாக்டர்கள், மார்பகத்தில் சிலிகான், சரியாக பொருத்தப்படவில்லை என்றும், அதனால் தான் வலி ஏற்பட்டுள்ளது என்றும் கூறி, சிலிகானை அகற்றினர். டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான், மார்பக அறுவை சிசிச்சை சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக, ஏராளமான பணத்தை செலவு செய்தும், சிகிச்சை சரியாக செய்யப்படாததால், அனைத்தும் வீணாகி விட்டது. எனவே, எனக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த நடிகை, தன் மனுவில் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

சம்பந்தப்பட்ட நடிகைக்கு, மிகவும் கவனமாகவும், உரிய மருத்துவ முறைப்படியும், சிகிச்சை அளித்தோம். சிகிச்சைக்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

இவர் இப்படி நாயை வைத்துக் கொண்டு பிரச்சினை பண்ணியிருக்கிறாரே? என்ன செய்ய. நாய்கள் பொதுவாகவே, தோல், ரப்பர், பிளாச்டிக் முதலியவற்றைக் கடித்துக் கொண்டுதான் இருக்கும். அப்படி பட்ட நிலையில், நடிகை ஏன் அதை நாயுக்குக்  காட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

செய்யப்பட்ட தரமான சிலிக்கான் ஜெல் மற்றும் உபகரணங்களைத் தான், இதற்கு பயன்படுத்தினோம். சிகிச்சை முடிந்த, அடுத்த இரு நாட்களில், மருத்துவமனைக்கு வந்த, அந்த நடிகை, தான் செல்லமாக வளர்த்து வந்த நாய், சிலிகான் பொருத்திய மார்பகத்தில் ஏடாகூடமாக பாய்ந்து, காயம் ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். நாயால் ஏற்பட்ட தொல்லை காரணமாக பிரச்னை ஏற்பட்டது. அப்பகுதியில் காயமும், கீறலும் காணப்பட்டன. அவருக்கு பொருத்தியிருந்த சிலிகானை, அகற்ற வேண்டியதாகி விட்டது. இதுதான், உண்மையில் நடந்தது. ஆனால், அந்த நடிகை, எங்களிடம் பணம் பறிப்பதற்காக, கோர்ட்டில் பொய்யான காரணங்களை கூறி, வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, மும்பை நுகர்வோர் கோர்ட் தலைவர் தேஷ்பாண்டே மற்றும் உறுப்பினர் பிட்நுர்கர் ஆகியோர், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: நடிகை வளர்த்த நாயால் தான், அவருக்கு பிரச்னை ஏற்பட்டது என்ற, மருத்துவமனை நிர்வாகத்தின் ஆதாரமான வாதத்தை மறுக்க முடியாது. இதை மறுப்பதற்கு, நடிகைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும், அவர் சார்பில், கோர்ட்டில், இதை மறுத்து பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையின்போது, தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராவதையும், நடிகை தவிர்த்து வந்தார். மேலும், தவறான சிகிச்சை காரணமாகவே, தனக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது என்பதை அவர் உறுதி செய்ய ஆவணங்கள் தரவில்லை. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது. ஏனெனில் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு, டாக்டர்கள் பொறுப்பின்மை என்று முடிவு செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

 

வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்: நடிகை த்ரிஷா[7]: நடிகை த்ரிஷா திரைப்படங்களில் நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து, பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். இப்பொழுது தன்னுடைய திருமணம் பற்றி வேறு ஒரு கருத்தினை முன்வைத்திருக்கிறார். ‘நான் மிருகங்களை அதிகம் நேசிப்பவள். என்னுடைய வீட்டில் ஏராளமாக நாய்கள் இருக்கின்றன. இவற்றினை அன்பாக கவனிக்கக்கூடிய ஒருத்தர்தான் எனக்கு கணவராக அமையவேண்டும் என காத்திருக்கிறேன்‘ என திரிஷா கூறியிருக்கிறார்[8].

இப்படி நடிகைகள் நாய்களிடம் பிரியமாக இருப்பது, ஆராய்ச்ச்சிற்குரிய விஷயமாகிறது. மேலை நாட்டு நடிகைகள் எப்பொழுதுமே நாய்களுக்காக எதையும் செய்வார்கள். தமது காதலர்கள், கணவன்களையே தூக்கியெரிவார்கள். அதே மாதிரி, இந்திய நடிகைகளும் காப்பியடிக்கிறர்களா அல்லது மனோதத்துவ ரீதியில், நாய்களிடம் யாதாவது பிடிப்பு உள்ளதா என்று ஆராய வேண்டும்.

நாய்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். அவருடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். அதில் ஒன்று, தெரு நாய். ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் சென்றிருந்தபோது, ஒரு நாய்க்குட்டி அடிபட்டு ரோட்டு ஓரம் கிடந்தது. அதை காப்பாற்றி நடிகை அமலா நடத்தி வரும் தெரு நாய் முகாமுக்கு கொண்டு சென்றார். அடிபட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தபின், அந்த நாய்க்குட்டியை ஒரு கூடையில் வைத்து விமானம் மூலம் சென்னை கொண்டுவந்து விட்டார். அன்று முதல் அந்த நாய்க்குட்டி, திரிஷா வீட்டில் செல்லமாக வளர்ந்து வருகிறது. திரிஷாவின் இந்த சேவை பற்றி கேள்விப்பட்ட பேடா என்ற நாய்கள் நல அமைப்பு அவரை பாராட்டியதுடன், சென்னையில் நடத்த இருக்கும் நாய்கள் நல முகாமில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. இந்த முகாம் நாளை  சென்னை பார்க் ஓட்டலில் நடைபெறுகிறது. அந்த முகாமில் த்ரிஷா,  வீட்டுக்கொரு தெரு நாயை எடுத்து வளர்த்தால், தெரு நாய் தொல்லைகளே இருக்காது என்று அந்த முகாமில் அவர் பேச இருக்கிறார். தெரு நாய்களை எடுத்து வளர்க்கும்படி, தனது ரசிகர்களுக்கும் அன்பான வேண்டுகோள் விடுக்க முடிவு செய்து இருக்கிறார். “இந்திய நாய்களை விரும்புங்கள். நாய்களை வாங்காதீர்கள், தத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற அறிவிப்புப் பலகையை ஏந்தி போஸும் கொடுத்தார்[9].


 


[5] நக்கீரன், என் நாயை நன்றாக கவனித்துக்கொள்பவர்தான் எனக்குகணவராகவரமுடியும் : நடிகைஷெரின், http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=67967

[9] Beaming a smile, she posed with a dog mascot with a heart shaped placard reading, “Love Indian dogs, Adopt don’t buy”.

http://www.dnaindia.com/entertainment/report_tamil-actress-trisha-makes-appeal-to-look-after-stray-dogs_1395195