Archive for the ‘குந்தர் கான்’ Category

சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

பிப்ரவரி 23, 2012

சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

சினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.

தாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர்.  அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.

கைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன்  என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].

சைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].

வருடம்

செய்த குற்றம், வழக்கு

முடிவு – விடுவிப்பு, விடுதலை

1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].
2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].
2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்

23-02-2012


[4] Assistant commissioner of police Iqbal Shaikh said the charge was filed against Saif and two unknown others as the women present during the brawl were not involved. The two others arrested were later identified as Bilal Amrohi, the grandson of Kamaal Amrohi (maker of Pakeezah and Meena Kumari’s husband), and Shakeel. They were also granted bail along with Saif.

[7] Khan married actress Amrita Singh in October 1991 After thirteen years of marriage and two children (son Ibrahim Ali Khan and daughter Sara Ali Khan), the couple divorced in 2004. The children live with their mother.

[8] Saif said: “People say that marriage doesn’t affect your career but the fact is it does. Today the whole definition of marriage has changed. We are so well connected, so close that marriage is just a stamp of validation for the society.

http://www.mid-day.com/entertainment/2009/oct/311009-saif-ali-khan-kareena-kapoor-marriage.htm

Advertisements

ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்!

ஜனவரி 31, 2012

ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்!

மக்கள் சினிமாக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிரிஷ் குந்தர் என்ற இயக்குனரை அடித்த ஷாருக் கான்: ஷாருக்கான் குடித்து கலாட்டா செய்வதில் திறமையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இவர் எப்பொழுதுமே மற்றவர்களுடன் தகராறு செய்வதில் பிரசித்தி பெற்றவர். அமீர்கானுடன், நெட்ருங்காலமாக “காகா” விட்டிருந்தார். பேட்டிகளில் இருவருமே, காரசாரமாக திட்டிக் கொண்டனர். இப்பொழுது ஒருகாலத்தில் தனது நெருங்கிய தோழியாக இருந்தவரும், இயக்குநருமான ஃபராகானின் கணவர் சிரிஷ் குந்தரை நடிகர் ஷாருக்கான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. இப்பொழுதெல்லாம், திரைப்பட உலகத்தில், ராத்திரி பார்டி, நடிகைகளுடன் கும்மாளம் என்பது சகஜமாகி விட்டது. இதற்காகவே, சில நடிகர்கள் வருவது உண்டு.

ஷாருக் கான் எப்படி, ஏன் அடித்தார்: மும்பையில் அக்னீபாத் பட வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை (29-01-2012) இரவு நடிகர் சஞ்சய் சத் அளித்த விருந்தின்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. போதையில் இருந்த குந்தர், போதையில் இருந்த ஷாருக்கானை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுத்ததாகவும், குளியறைக்கு சென்றபோதும் அவருடனே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஷாருக்கான் அவரை சோபாவில் தள்ளி, நீண்ட தலைமுடியைப் பிடித்து புரட்டி எடுத்துள்ளார். இதையடுத்து சஞ்சய் தத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். சமாதானப்படுத்தும்போது அவரும் குந்தரை கன்னத்தில் ஒரு அறை அறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி மன்யதாவுக்கு கீழ்த்தரமான எஸ்எம்எஸ்களை அனுப்பிவந்ததற்காகவும், அந்த விருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும் குந்தரை சஞ்சய் தத் கன்னத்தில் அறைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடித்தார்-அடிக்கவில்லை – சமரசம் ஆகிவிட்டது: முதலில், ஷாருக் கான் அடித்தார், சஞ்சய் தத்தும் கன்னத்தில் அறைந்தார், என்று தான் செய்திகள் வந்தன[2]. ஷாருக் கான், தனது பாடிகார்டுகளுடன் உள்ளே நுழைந்தார். சிரிஷ் குந்தர் என்ற இயக்குனர் பக்கத்தில் சென்ற போது, ஷாருக்கான், திடீரென்று அடிப்பதை பார்க்க முடிந்தது. சஞ்சய் வந்து ஷாருக்கை விலக்கி விட்டார். அதற்குள், பாடி கார்டுகள் ரிரிஷின்ன் மீது பாய்ந்தனர். இருப்பினும், சிரிஷ் அங்கிருந்து வெளியேறி விட்டார்[3]. இந்த சம்பவம் குறித்து ஃபராகானும், குந்தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். எனினும் இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனர். ஆனால், ஷாருக் கானும், அவரது பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து தனது கணவரை தாக்கியுள்ளதாக, இப்பொழுது கூறுகிறார்[4]. மிகவும் அசிங்கமகி விட்டது என்றும் வருத்தப் பட்டுக் கொண்டார்[5]. மேலும், பாரா கான், குந்தர் கான் இருவருமே ஷாருக்கானின் வீட்டிற்குச் சென்று சமரசம் செய்து கொண்டதாக, பாரா கானின் சகோதரர் சஜ்ஜித் நாடியாவாலா கூறுகிறார்[6].

குடித்தோ, குடிக்காமலேயோ பாலிஹுட்டில் இப்படி அடித்துக் கொள்வது சகஜமான விஷயம்: பாலிஹுட்டில் இப்படி அடித்தவர்கள், அடித்துக் கொண்டவர்கள், கைகலப்பு சண்டைகள் முதலியன புதியதல்ல[7]. திலாவர் கான்[8] என்கின்ற தர்மேந்திரா, பலதடவை கேமராமேன், ரசிகர்கள் போன்றவர்களை அடித்து அபராதம் கட்டியிருக்கிறார்.

  • சொஹைல் கான்: இவர் தன்னுடைய சகோதரர் சல்மான் கானை, சிகந்தர் கேர் கிண்டல் செய்ததற்கு, நைட்கிளப்பிலேயே அடித்தார். அப்பொழுது அஸ்மித் படேல் சொஹைலுக்கு உதவ வந்தார். அனுபம் கேர், இரண்டு கான்கள் மீதும் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
  • அஸ்மித் படேல்: மேலே குறிப்பிடப் பட்ட சண்டை மட்டும் அல்ல, இவர் பல சண்டைகளில் பங்குக் கொண்டுள்ளார். வேறொரு சண்டையில், விக்கி என்ற மேக்கப் மேனின் மூக்கை உடைத்தார். அவர் இம்ரான் கானின் நல்ல நண்பர் கூட. இது நடந்தது, ஒரு பப்பில் – அதாவது குடித்து-ஆடும் இடம்.
  • சல்மான் கான்: 2004ல் தன்னுடைய கேர்ள் பிரண்ட் காத்ரீனா கைபை, ஒரு கேமரா மேன் புகைப்படம் எடுக்க முயன்றபோது, கையால் குத்தியுள்ளார்.
  • ராஹுல் பட்: நிர்வாண போஸ் கொடுத்த பூஜா பட்டிமன் சகோதரர். 2002ல், ர்ன்வீர் சோரே என்ற பூஜா பட்டின், ப்ழைய பாய்-பிரண்டை அடித்துள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டது. சமீபத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக, விசாரணைக்குள்ளானார்.
  • கோவிந்தா: ஒரு விழாவில், ஒரு கேமரா மேன் தன்னுடைய கவனத்தைத் திருப்பியதற்காக அடித்துள்ளார். ஆர்யன் வைத் என்பவர், அறையும் மாதிரி நடிக்கும் போது, கெட்டியாக அறைந்து விட்டார் என்று பதிலுக்கு அறைந்துள்ளார். தட்டிக் கேட்டதால், இயக்குனர் நீரஜ் வோராவுக்கும் ஒரு அறை விழுந்தது.
  • ஜைத் கான்: தன்னுடை மனைவி மாலிகா மற்றும் மைத்துனி நடாஷா இருவருக்கும் அருகில் நடந்து சென்றனர் என்பதற்காக, மூன்று பேர்களை, இரண்டு தனித்தனியான இடங்களில் அடித்துள்ளார்.

இப்படி பலர் உள்ளனர். தமிழ் படவுலகில், இப்படியொரு லிஸ்டை எடுக்கவில்லை போலும்!

வேதபிரகாஷ்

31-01-2012

 

[1] “We didn’t know what was happening. We saw SRK enter. Then we saw him head towards Shirish from behind the director. SRK pulled Shirish down to the ground by his long hair. We were all shocked. We had never seen SRK behave this way before,” said an eyewitness. “Before anyone could react, Baba Dewan, the owner of Aurus, ran in and intervened. SRK told Dewan to keep out. Dewan said the place belonged to him and he must intervene. The fight would’ve been prolonged had Sanjay Dutt not pulled SRK away from the ugly scene,” the eyewitness added. Read more at: http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN20120193420&keyword=bollywood&subcatg=MOVIESINDIA&nid=171726&cp