Archive for the ‘குரான்’ Category

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்? (3)

ஏப்ரல் 1, 2017

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கைகுடும்பம் சிறப்பதுஅழிவது முதலியனயார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்? (3)

Kamal Hassan - with muslims surrendering

பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா ? கமல்ஹாசன் கேள்வி …! கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:

கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.

கமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.

Kamal Hassan - agreeing with Karu

கருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:

  1. கமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.
  2. கருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
  3. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.
  4. “ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன.  இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
  5. இந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா?
  6. ரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.
  7. “மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
  8. ஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே? கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே? ஏன் செய்வதில்லை?
  9. “நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா? அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா?
  10. முகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.

Kamal Hassan - agreeing with Karu-Ravan

கமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.

* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.

* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.

* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,

அந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு”  கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].

Kamal Hassan - Maya Ravan

மாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா?: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.

 Kamal Hassan - karu - turning Ravan - Tuchadga

ராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு!

அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].

“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்

தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .

பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது

விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.

கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்

எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்

மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது

கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!

 

ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?

எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா?

அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா?

கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா?

© வேதபிரகாஷ்

31-03-2017

Akhsayta and sruti - daughters of Kamal

Akhsayta and sruti – daughters of Kamal

[1] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html

[2] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html

[3]https://dravidianatheism.wordpress.com/2009/10/25/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

[4] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்? (2)

ஏப்ரல் 1, 2017

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்? (2)

Kamal Hassan could not find any relation between the rapists and their scriptures

கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்?: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா? இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா? பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை?

Mahabharat - Kamal Hassans blabber reached all-PIL

இந்து  மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்துவிரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா? பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.

Kamal Hassan - complaint filed

கமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].

Father- daughter competing with each other

பார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம்! ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.”  இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.

Kamal Hassan - Pranavananda complaint filed

பிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு,  மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை  சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு  காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர்  கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா  கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக  எந்த ஆதரமும் இல்லை  என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள்  என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை.  மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே  வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி  அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].

© வேதபிரகாஷ்

31-03-2017

Shruti hasan - Mayim

[1] Hindusthan Times, PIL filed against Kamal Haasan for alleged derogatory remarks on Mahabharata, Updated: Mar 21, 2017 17:12 IST, KV Lakshmana , Hindustan Times

[2] http://www.hindustantimes.com/india-news/pil-filed-against-kamal-haasan-for-alleged-derogatory-remarks-on-mahabharata/story-oWRYVWjcyzyqKNMqd2MdaM.html

[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு!, Posted Date : 20:21 (21/03/2017); Last updated : 09:49 (22/03/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/84251-valliyur-court-orders-to-submit-investigation-report-on-case-against-kamalhassan.html

[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.

[6]http://www.dinamani.com/tamilnadu/2017/mar/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2670020.html

[7] தி.இந்து, காபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST

[8] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9604204.ece

[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53

[10]http://www.dinakaran.com/News_detail.asp?Nid=290106&fromNewsdog=1&utm_source=NewsDog&utm_medium=referral