Archive for the ‘குஷ்புவின் விளக்கம்’ Category

டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

திசெம்பர் 3, 2016

டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

khushboo-ramakrishnan-sripriya

விகடனுக்கு ஶ்ரீபிரியா சொல்லியது[1]: இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “எப்ப டீவியை போட்டாலும் எதோ குடும்பத்தின் பிரச்னையும் கண்ணீரும் அடிதடியும்தான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் தமிழ் சேனல்களை மட்டும் சொல்ல வில்லை. தென்னிந்திய சேனல்கள் அனைத்திலும் இதுதான் இருக்கிறது. இன்னும் சொல்வதானால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அனைவரும் எனக்கு மிக நெருக்கம். இருந்தாலும் என் கருத்தினையும் என் உணர்வினையும் பகிர்ந்துதானே ஆக வேண்டும். திரைத்துறையில் அடிமட்ட தொழிலாளிகளான புரொடக்ஷன் உதவியாளரில் தொடங்கி தயாரிப்பாளர், கலைஞர்கள், இயக்குநர்கள் வரை மிகமிக உணர்வு பூர்வமானவர்கள். கண்ணீர் சுரப்பி என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆசையுடன் திரைத்துறைக்குள் வந்த அனைவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். நிகழ்ச்சியை நடத்தும் முன்னணி நடிகைகளுக்கு அங்கு பங்கேற்கும் நபர்களின் பின்னணியோ, பிரச்னைகளின் ஆழமோ 100 சதவிகிதம் முழுதாக தெரியப்போவதில்லை.”

 khushboo-rowdism-malaimalar-photo

நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே[2]: ஶ்ரீபிரியா தொடர்கிறார், “அப்படியான சூழலில் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே. இன்றைக்கும் சினிமாவில் எவ்வளவோ பேர் சத்தமில்லாமல் உதவி வருகின்றனர். அதே போல தனிப்பட்ட மனிதர்களின் துயரங்களையோ, கஷ்டங்களையோ வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற குடும்பப் பிரச்னைகளில் ஈடுபடுவதை என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் 8-வது வரைதான் படித்துள்ளேன். ஒருவர் அவரின் வாழ்க்கை பிரச்னை குறித்து என்னிடம் யோசனை கேட்டாலோ அல்லது அந்த பிரச்னையை சொன்னாலோ என் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்னால் யோசனை சொல்லமுடியும். அதற்கு என படித்த சட்ட அறிஞர்களோ, குடும்ப நல ஆலோசகர்ளோ தான் சரியான ஆலோசனையோ, வழிகாட்டுதலோ செய்ய முடியும். யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் என் நெருங்கிய தோழிகள்தான். இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை,” என்று தெரிவித்தார்[3].

khushboo-rowdism-malaimalar-photo-ranjani-condemns

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்: “இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம். ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாகநல்லடிரஸ்பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது,” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக, பிரச்சினையை விட்டுவிட்டு, குழாயடி சண்டையில் இறங்கி விட்டனர். இனி, இவர்களுக்கு “கவுன்சிலிங்” கொடுக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

pooooo-pooooooooo-shouting-khusboo-inciting-fight

“ராடான்” ராதிகா கூறிய கருத்து[4]: அதேபோல், நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்று குறிப்பிட்டுள்ளார்[5]. பலமுறை திருமணம் செய்த இவர், இப்படி சொல்லியிருப்பதும் வேடிக்கைதான். “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள்”. என்றால், முட்டாள் பெட்டி நிகழ்ச்சிகளை உருவாக்கும், இந்த அம்மையாரைப் பற்றி என்ன சொல்வது?அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்பது ஒப்புக்கொள்வது போன்றுதான் உள்ளது. ஆமாம், டிவி-நிகழ்ச்சிகள், ரீரியல்கள் இல்லையென்றால், இவர்களுக்கு, வரும்படி எங்கிருந்து வரும்? “தகுதி, அந்தஸ்து, யோக்கியதை” இவர்களை பாதித்து விட்டது என்று தெரிகிறது.

ranjani-sripriya-twitter-comments

தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியது[6]: “தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்யுமாறு மனித உரிமை ஆணையத்தில் முறையிட இருக்கிறோம். அவர்களால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்எனக் கொந்தளிக்கிறார் தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், “ இதுபோன்ற நிகழ்ச்சிகள் பிரச்னைகளைத் தீர்ப்பது போலத் தெரியவில்லை. பிரச்னைகளை மேலும் மேலும் பூதாகரமாக்கும் வேலைகளையே செய்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில், யாரிடம் தவறு இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், வேதனையோடு நிகச்சிகளுக்கு வருபவர்களை மிகவும் கஷ்டப்படுத்துகின்றனர். இது நாகரிகம் கிடையாது. குடும்ப நல நீதிமன்றங்களில் எதற்கு சமசர மையங்களை வைத்திருக்கிறார்கள்? தொலைக்காட்சிகளில் நாள்தோறும் ஒளிபரப்ப, இது ஒன்றும் நாடகம் கிடையாது. ஒரு குடும்பத்தின் கண்ணியம் காக்கப்படாமல் தொடர் போல் நடத்துவது சரிதானா? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது ஆரோக்கியமான சமூகத்துக்கு வழியமைக்காது. சில படங்களில் நடித்துவிட்டால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏதோ அரச சபையை நடத்துவதுபோல் மற்றவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

family-courts-and-actresses

நடிகைகள்-கட்டப்பஞ்சாயத்து விசயத்தில் அமுக்கி வாசிக்கும் பெண்ணியங்கள்: குஷ்பு-கற்பு கருத்து விசயத்தில் பாமக கொதித்து எழுந்தது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குஷ்புவை காப்பாற்றினார் என்று தான் சொல்லவேண்டும், ஏனெனில், மற்ற வழக்குகளோடு, உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக இருந்தது. திமுக இப்படி கருத்து சொன்னபோது, மற்ற கட்சியினர் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. குறிப்பாக, பாஜகக்காரர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தமாஷாகத் தான் இருக்கிறது. பெண்ணிய வீராங்கனைகள் பற்றி சொல்லவே வேண்டாம், இதில் கூட “ரைட்-லெப்ட்” என்று பார்ப்பார்கள் போலும்.

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-fight-scene-sun-tv-radhika

எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை: குஷ்பு இப்படி சொன்னதே வியப்பாக இருக்கிறது. அரசியல், கோவில்-நுழைவு, பெண்ணியம், கற்பு, திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்று தாராளமாக அத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் கருத்து கூறும் குஷ்பு, இதற்கு ஒதுங்குவது வினோதமே! விகடன் நிருபர் நிஜங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை குஷ்புவிடம் பேசியபோது[7], “எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை,” என்றதோடு முடித்துக் கொண்டார். என்று செய்தி காணப்படுகிறது[8]. அப்படியென்றால், அந்நிருபர், குஷ்பு சொன்னதை முழுமையாக வெளியிடவில்லை என்று தெரிகிறது. கருத்து என்று வரும் போது, அதிலும், நடிகைகள் குடும்பப்பிரச்சினை விசயத்தில், மனோதத்துவரீதியில் அல்லது கட்டப்பஞ்சாயத்து பாணியில், டிவி-நிகழ்ச்சிகள் நடத்தலாமா, என்ற கேள்வி எழுந்த விட்டப் பிறகு, இப்படி ஒதுங்குவது, அந்த “யோக்கியதை” பாதிக்க ஆரம்பித்து விட்டது என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

03-12-2016

actresses-cannot-solve-family-problems

[1] விகடன், நாம என்ன நாட்டாமையா?” –டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!, Posted Date : 10:00 (29/11/2016); Last updated : 15:07 (29/11/2016).

[2] தமிழன்.தொலைகாட்சி, என்னம்மா நீங்க இப்படி பண்ட்ரீங்களம்மா? டிஆர்பி .நடிகைகளிடம்ஸ்ரீப்ரியா கேள்வி !! , 30 நவம்பர் 2016.

[3]http://www.tamilantelevision.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3-33341.html

[4] தமிழ்.வெப்துனியா, அறிவில்லாதவர்கள் பார்க்கிறார்கள்பஞ்சாயத்து நிகழ்ச்சியை கலாய்த்த ராதிகா, Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (12:34 IST).

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actess-radhika-sarathkumar-twitteed-tv-shows-116113000015_1.html

[6] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[7] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[8] http://www.vikatan.com/news/tamilnadu/74003-khushbu-slams-activists-for-condemning-family-debates-on-channels.art

குழாயடி சண்டையை காட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்!

திசெம்பர் 3, 2016

குழாயடி சண்டையை காட்டும் சன்டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்!

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-fight-scene-sun-tv

குழாயடி சண்டையை காட்டும் சன்டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும்: டிவியில் நடக்கும் ‘குடும்பப் பஞ்சாயத்து’ ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது, என்ரு தமிழ் ஊடகங்கள் ஆரம்பித்து விட்டன.  சன்-டிவியில் குஷ்பு நடத்தும் ‘நிஜங்கள்’ என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட கணவன் – மனைவி இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள முயற்சி செய்தனர். இதைத் தடுக்கப் போன குஷ்பு, நடந்த களோபரத்தில் அந்த ஆணின் சட்டையை கொத்தாக பிடித்து விலக்கி விட்டார். போதாகுறைக்கு குஷ்பு அந்த ஆணைத் தள்ளி விட்டு, “போ……போ………போ……..” என்று கத்துவது அசிங்கமாக இருந்தது[1]. “….பார்த்தா அசிங்கமாக இருக்கும்……” என்ற கமென்ட் வேறு. இதைப் பார்க்கும் போதே கேவலமாக இருக்கிறதே? இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-sun-tv

கவுன்சிலிங் (ஆலோசனை) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்சிகள் வெட்ககரமானது: நடிகை ஸ்ரீரஞ்சனி தனது பேஸ்புக் பக்கத்தில்[2]இதை விமர்சித்து, “கவுன்சிலிங் (ஆலோசனை) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்சிகள் வெட்ககரமானது. நான் இங்கே நடிகை குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகளை இங்கே பதிவிட்டுள்ளேஎன். அதில் குஷ்பு ஒரு ஆணின் சட்டையை பிடித்து இழுக்கிறார். இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?[3] இது கொடுமை, தவறானது, தாக்குதல், பாலின பாகுபாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது. இந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. மேலும், உங்கள் குடும்ப கவுவரத்தை அந்நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டு காட்டி கேவலப்படுத்துகின்றன. அதன் மூலம் அந்த சேனல்கள் காசு சம்பாதிக்கின்றன.”….“டெலிவிஷனில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு அடிக்க பாய்ந்தது தவறு. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நடிகை ரஞ்சனி கூறினார்[4].

pooooo-pooooooooo-shouting-khusboo

நடிகைகள் நடத்தும் குழாயடி பஞ்சாயத்து: நடிகைகள் குஷ்புவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் டெலிவிஷன்களில் குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கணவன்-மனைவி தகராறு, வரதட்சணை பிரச்சினைகள், காதல் விவகாரம் என்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் காரசார வாக்குவாதம், அழுகை, அடிதடி என்றெல்லாம் போவது உண்டு. சமீபத்தில் குஷ்பு நடத்திய பஞ்சாயத்தில் தகராறு மூண்டு அதில் கலந்து கொண்ட ஒருவரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது[5]. இந்த நிகழ்ச்சிகளுக்கு தற்போது திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகைகள் பஞ்சாயத்தை விமர்சித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து வெளியிட்டார். அவர் கூறும்போது, “குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள்.” என்றார்.

ranjani-chides-kushboo-for-her-tv-show-dm-02_12_2016_012_030

ரஞ்சனி குஷ்புவை விமர்சித்தது: தற்போது முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ரஞ்சனியும், குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்து உள்ளார். டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது: “கவுன்சிலிங் கொடுக்கிறேன் என்று பல்வேறு மொழிகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை வெட்கக்கேடான நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். தாக்குதல், பாலின பாகுபாடு, பொதுமக்களுக்கான தொல்லைகளாகவே இவை இருக்கின்றன. நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம் குடும்ப கவரவம் குறைக்கப்படுகிறது. அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடிகைகளுக்கு தகுதி இல்லை. அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நடிகை குஷ்பு இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து ஆவேசமாக பேசி இருக்கிறார். இதுதான் கவுன்சிலிங்கா? அந்த நபர் கோர்ட்டுக்கு செல்லும் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்,”  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

sripriya-twitter-comments-against-khshboo

ஶ்ரீபிரியா முகநூலில் வெளியிட்ட கருத்து[6]: இந்நிலையில் இது போன்ற ஷோக்கள் தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா தனது முகநூலில் இன்று ஒரு கருத்தை எழுதினார் அது இன்னும் பரபரப்பை கிளப்பியுள்ளது[7]. அந்த பேஸ்புக் ஸ்டேட்டஸில் “கணவன் மனைவிக்கும் இடையில் பிரச்னை என்றால் அதை தீர்த்து வைக்க சட்டம் இருக்கிறது. கோர்ட் இருக்கிறது. அதில் கிரிமினல் குற்றங்கள் நடந்தால் தண்டிக்க பலவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன[8]. அதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர்கள் தொலைக்காட்சியில் பஞ்சாயத்து செய்வதை பார்க்க சகிக்கவில்லை[9]. நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை[10]. இதை தயவு செய்து நிறுத்தலாமே?  நாம் இது போன்றவற்றை விடுத்து நமக்குத் தெரிந்த கலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம், ப்ளீஸ்,என்று எழுதியிருந்தார்[11]. இதை அவரின் நட்புப்பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் எழுதிய ஸ்ரீப்ரியா பின்னர் அதன் திரைச்சொட்டை (ஸ்கீரின் ஷாட்) ட்விட்டரில் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் அக்கௌண்டிலும் இதே பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீப்ரியா,அப்படி இது போன்ற ஆதரவற்ற மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால் அதை கேமரா இல்லாமல் செய்யலாமே. அவர்களின் பிரச்னை தீர சரியான ஆலோசகரிடமோ அல்லது குடும்பநல ஆலோசகரிடமோ அனுப்பலாமே,” என்றும் ட்விட் எழுதினார். இதற்கும் பலத்த ஆதரவு இருந்தது. சிலர் எதிர் கருத்தும் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு பொறுமையாய் பதிலும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்[12].

© வேதபிரகாஷ்

03-12-2016

ranjani-facebook-comments-against-khusboo

[1] https://www.youtube.com/watch?v=aQ-G7YdXLIY

[2] தமிழ்.வெப்துனியா, இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?. நியுசென்ஸ்குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி, வியாழன், 1 டிசம்பர் 2016 (15:31 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-ranjini-angru-with-kushbo-tv-programes-116120100043_1.html

[4] தினத்தந்தி, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் குஷ்பு அடிக்க பாய்ந்தது தவறு; மன்னிப்பு கேட்க வேண்டும்; நடிகை ரஞ்சனி சொல்கிறார், பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 02,2016, 2:47 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 02,2016, 2:47 AM IST

[5] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/02024728/Khushboo-pounced-to-hit-the-wrong-family-on-the-occasion.vpf

[6] விகடன், நாம என்ன நாட்டாமையா?” –டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!, Posted Date : 10:00 (29/11/2016); Last updated : 15:07 (29/11/2016)

[7] நியூஸ்.7.டிவி, குடும்ப பிரச்சனைகளுக்கு நடிகைகள் தீர்வு சொல்வதற்கு நடிகை ஸ்ரீப்ரியா எதிர்ப்பு!, November 29, 2016.

[8] http://ns7.tv/ta/actors-do-not-judge-issues-other-family-judge-shows.html

[9] http://cinema.dinamalar.com/tamil-news/53546/cinema/Kollywood/Sripriya-oppose-TV-Programs-likes-truth-programs.htm

[10] தி.இந்து, கலைகளுக்கு மட்டும் நடுவராக இருப்போம்: நடிகர்களுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை, Published: November 28, 2016 16:28 IST; Updated: November 28, 2016 16:28 IST

[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9394561.ece

[12] http://www.vikatan.com/news/cinema/73696-actress-sripriya-condemns-tv-programmes-which-deals-with-family-issues.art

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

நவம்பர் 8, 2016

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

kushboo-supports-ucc-puthiya-thalaimuraiகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

khusbo-and-nagma-ucc-fightநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில்   தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில்தலாக்பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.

khusbo-and-nagma-uccகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு![9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.

 கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

 பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

 கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?

 பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].

kushboo-supports-ucc-puthiya-thalaimurai-pon-says-she-should-teach-tirivavuதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].

thirunaugasarar-kushboob-nagma-long_12443காங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

08-11-2016

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.art

[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா, By: Mayura Akilan, Updated: Monday, November 7, 2016, 16:12 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-slams-kushboo-talaq-issue/slider-pf214152-266544.html

[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.

[6] http://www.dailythanthi.com/News/State/2016/11/06181731/Uniform-civil-code-Nagma-attacks-Khushbu-over-her.vpf

[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்?:நக்மா காட்டம்!, Sunday, 06 November 2016 20:18 Published in தமிழகம்

[8] http://www.inneram.com/news/tamilnadu/10821-nakma-attack-on-kushboo.html

[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!, திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/khushboo-answer-about-nakma-s-complaint-116110700007_1.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்புநக்மா இடையே எந்த மோதலும் இல்லையேஅடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-rift-bewtween-nagma-kushboo-says-thirunavukkarasan-266570.html

[13] விகடன், குஷ்புநக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் , Posted Date : 12:10 (07/11/2016), Last updated : 12:40 (07/11/2016).

[14] http://www.vikatan.com/news/tamilnadu/71608-rift-between-kushboo-nagma-tirunavukkarasar-explains.art

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

பிப்ரவரி 11, 2015

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்டவர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

Cutz n Glitz

வழக்கமான செய்தி வந்துள்ள விதம்: காதலர் தினத்தை நெருங்கும் வேளையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்[1] என்று செய்தி வந்துள்ளது. தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, 08-02-2015 அன்று, வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார்[2].  அந்த பெயர் தெரியாத வாலிபர் நல்ல காரியத்தை செய்துள்ளார். இருப்பினும், அந்த 14-வயது சிறுமி அல்லது இளம்பெண் மனபாதிப்பு, மற்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு வர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை.

Padma Priya

போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள்: குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இந்த புகார் கொடுக் கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்[3]. அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர்.  அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர்[4]. போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார்[5]. அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது[6].

தாயார் புகார் - மகளை வைத்து ஆபாசப்படம் 2014

தாயார் புகார் – மகளை வைத்து ஆபாசப்படம் 2014 – அது அதோடு போயிற்றோ, இதுவோ?

சினிமா ஆசையில் மகளை நடிக்க வைத்து, பிறகு விபச்சரத்தில் தள்ளிய தாய்: பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. தந்தை இறந்து விட்டதாகவும், இதனால் தாய் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால், தன்னுடைய மகளை நடிகை ஆக்க வேண்டும் என்ற பேராசையில் இறங்கி, விபச்சாரத்தில் தள்ளியதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுகிறது[7]. தாயே நடிகை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது[8], “நடிகை தனது மகளை விபச்சாரத்தில் தள்ளினாள்” என்று தலைப்பிட்டு, இதே செய்தியை கொடுத்துள்ளது[9]. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்தார். குறிப்பிட்ட சிறுமி 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். பலருடன் வாழும் பெண், இப்படி கற்பு பற்றிய சிந்தனை போய், மகளையும் விபச்சாரத்தில் தள்ளுவாள் என்றால், அந்நிலையை மற்ற பெண்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பலருடன் உடலுறவு கொள்வதால் மரத்து விடுவதால், பெண்மையை, தாய்மையை மறந்துவிடுவது வியப்பான விசயமே.

தமிழ்பட படுக்கையறைக் காட்சி

தமிழ்பட படுக்கையறைக் காட்சி – அறையில் நடப்பதை அரங்கேற்றுகிறார்களா?

தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கு அனுப்பிய கொடூரன்: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரை பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் டைரக்டு செய்து வெளியிட்டு இருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறினார்[10]. இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாக தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்[11]. சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் 09-02-2015 அன்று கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்[12]. அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன[13]. இவன் ஒரு கிரிமினல், குற்றவாளி கடுமையாகத் தன்டிக்கப் படவேண்டியவன், அவ்வளவுதான்.

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

நடிப்பதடூள்ளங்களைக் கெடுக்கவா

இயக்குனர் அல்ல அவன், கற்ப்பழிப்பாளி, சமூக சீர்ப்பழிப்பாளி: இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இவர் டைரக்டு செய்யாமல் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எது எப்படியிருப்பினும், அவன் ஒரு கற்ப்பழிப்பாளி மற்றும் சமூக சீர்ப்பழிப்பாளி ஆவான். தாய் முறைதவறி நடக்கும் போது, அவள் மகளையும் கெடுக்கத் துணிந்துள்ளாள் என்றாகிறது. ஆனால், இவ்வாறு கெட்டவர்கள், மற்றவர்களைக் கெடுத்துக் கொண்டு போனால், சமூகம் எப்படி உருப்படும் என்று தெரியவில்லை.

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்!

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்! பெண் உரிமைகள் இவற்ரையும் எதிர்க்குமா?

பெண்களின் பாலிய உரிமைகள் எதுவரை செல்லும்?: சமூகம் இவ்வாறிருக்கும் போது, எப்படி தார்மீக உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை கேலி செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் என்று பேசுபவர்கள் இவற்றையும் பெண்களின் உரிமைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சமீபத்தில் விபச்சாரிகளின் உரிமைகளுக்கு மாநாடு நடத்தி, கோரிய பெண்மணிகள் இப்படி இளம்பெண்கள் சீரழிவதை தவறு என்பார்களா அல்லது தங்களது வியாபாரத்திற்கு இன்னொரு வரவு என்று ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. விவாக ரத்து, பலதார திருமணம், திருமணத்திற்கு வெளியே செக்ஸ்-உடலுறவு, அவற்றை நியாயப்படுத்துக் உக்கால நாரீமணிகள் முதலியவை இனிமேல் என்னாகும், என்ன செய்வார்கள்? தாங்கள் சொன்னது சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிப்பார்களா அல்லது சமூகம் கெடுவதைத் தடுப்பார்களா? அவர்களது பெண்களையும், இப்பெண் போல விபச்சாரத்திற்கு அனுப்புவார்களா, இப்படி கேட்பது தவறுதான், இருப்பினும், அவர்களது வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஆராயும் போது, இத்தகைய எண்ணமும் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் எப்படி கட்டுப்பாடு வரும், எல்லைகள் வரையறுக்கப் படும் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

11-02-2015


 

[1] தினமலர், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய், சினிமா இயக்குனர் உட்பட 3 பேர் கைது, 10-02-2015: 23:57.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1181116

[3] http://www.dailythanthi.com/News/State/2015/02/11013658/Having-cinematic-figure-girl-arrested-for-prostitution.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=131335

[5] தினகரன், பாலியல் புகாரில் திரைப்பட இயக்குனர் கைது பெண் புரோக்கரும் சிக்கினார், 10-02-2015.

[6] தினத்தந்தி, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு விற்ற தாயும் சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்:

புதன், பெப்ரவரி 11,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: புதன், பெப்ரவரி 11,2015, 1:36 AM IST

[7] The girl’s father died when she was young and her mother married another man. It was the zeal to “show off” that her daughter was an actress that made the mother force her child into flesh trade, the officer said.

http://www.newindianexpress.com/cities/chennai/14-yr-old-Girl-Rescued-From-Flesh-Trade-Racket/2015/02/11/article2663106.ece

[8] A Selvaraj, Actress held for forcing daughter into flesh trade, TNN | Feb 11, 2015, 05.33 AM IST

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Actress-held-for-forcing-daughter-into-flesh-trade/articleshow/46194751.cms

[10] The Hindu, Three arrested on prostitution charge, Chennai, February 11, 2015.

[11]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/article2663251.ece

[12] http://www.thehindu.com/news/cities/chennai/three-arrested-on-prostitution-charge/article6880406.ece?ref=tpnews

[13] தினமணி, சிறுமிக்கு பாலியல் நிர்பந்தம்: தாய், திரைப்பட இயக்குநர் கைது, By dn, சென்னை; First Published : 11 February 2015 04:03 AM IST.

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

ஜனவரி 13, 2014

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதாவைவைத்துக்கொண்டுகவர்ச்சிஅரசியல்செய்திதயாரித்தவிதம்: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார் என்று “தமிழ் இந்துவே” செய்தியை நமிதாவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது[1]. அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது என்றும் அது கூறுகிறது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் என்றும் நீட்டுகிறது. சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா? என்று  சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா[2]. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்று அளக்கிறது இன்னொரு ஊடகம்[3]. முன்னர் அவர் அரசியலில் சேருவார் என்று செய்திகளை வெளியிட்டன[4]. “அரசியலில் கலமிரங்கவிருக்கும் நமீதா” என்று வீரகேசரி தலைப்பிட்டுள்ளது[5]. விகடன் தனக்கேயுரிய பாணியில் “அரசியலில் குதிக்கிறார் நமீதா”என்கிறது[6]. தினத்தந்தி, தினகரன்[7], தினமலர் என்று யாரும் நமிதாவை விட்டு வைக்கவில்லை. இந்த கிசுகிசு முடிவதற்குள், இதோ இன்னொன்றை தயார் செய்து விட்டனர்.

Khushboo-in-DMK-decided-stage-managed

Khushboo-in-DMK-decided-stage-managed

திமுக சார்பாக நமீதா பிரச்சாரம்: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி[8] என்று “டமிள்-ஒன்-இந்தியா” குண்டு போட்டுள்ளது. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது, என்று சேர்த்தும் சொல்லியிருக்கிறது. “சென்னை ஆன்லைன்” விட்டுவிடுமா, இதோ – வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், நடிகை நமீதா திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நமீதா, தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், தான் எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார், என்று கூட்டியுள்ளது[9]. வழக்கமாக குஷ்புதான் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக களம் இறக்கப்படுவார். இந்த முறை நடிகை நமீதாவை களம் இறக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்த பரபரப்பு பேச்சு சொல்கிறது. ஏற்கனவே கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரா நமீதா இருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அடுத்த மாதம் நான் சேரவுள்ள கட்சியின் பெயரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். எனவே அடுத்த மாதவாக்கில் நமீதா திமுகவில் சேரக் கூடும் என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது[10].

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

குஷ்புவா, நமீதாவாதாத்தாகருணாநிதியின்தேர்வு: இப்படி “சரியான போட்டி” வீரப்பன் ஸ்டைலில், இந்த இரண்டு குண்டு நடிகைகளும் இறக்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குஷ்பு அப்பொழுது, நான் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடுவேன் என்று கூட பெரிய குண்டைப் போட்டுப் பார்த்தார். ஆனால், அது புஸ்ஸாகி விட்டது. இப்பொழுது ஸ்டாலின்-அழகிரி சண்டையில் நமீதாவை சேர்த்தால், ஒருவேளை சமமாகி விடும் போலிருக்கிறது. ஆமாம், ஸ்டாலினுக்கு குஷ்பு, அழகிரிக்கு நமீதா என்று பிரசாரம் செய்தால், சகோதரப் பாசம் வந்து விடலாம்.

கலைஞர்_மானாட_மயிலாட

கலைஞர்_மானாட_மயிலாட

கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு! அழகான, கவர்ச்சிகரமான, உடலைக் கட்டி நடிக்கும் நடிகைகள் எல்லாம், இப்பொழுது திமுக பக்கம் தான்! அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ, மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நேற்று, “கிஸ்,கிஸ், கிஸ்கால்……………….”, இரும்பு நடிகையால் பிரச்சினையாம்! குஷ்பு இட்லி சாப்பிட்டு வேலைக்கு வந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு, இந்த, “கிஸ்,கிஸ், கிஸ்கால் ” நடிகையால் வந்தது பிரச்சினை! நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரைப் போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்தச் சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர். இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள் தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். குஷ்புவோ குஷியில் இருக்கிறார், இருந்தார், ஏனெனில் திமுகவில் சேர்ந்து விட்டார்[11].

குஷ்பு பேய்!

குஷ்பு பேய்!

குஷ்புவிடம்  ஒழுக்கத்தை  கற்றுக்கொள்ளுங்கள்  இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[12]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார்,  “இப்போது   இருக்கும்   இளம் நடிகைகள்   யாரும்  தங்களது பட புரொமஷன்களுக்கு  கூட வருவதில்லை.  இது மிகவும் கண்டிக்கத் தக்கது.  இதோ  இங்கு இருக்கும்  குஷ்புவை  பற்றி  நான்  சொல்லியாக  வேண்டும்நான் அவரை  ஹீரோயினாக  வைத்து  படங்கள் தயாரித்துள்ளேன்.  அவர்  ஒரு  படத்தின் புரொமஷன்களுக்கு  கூட வராமல்  இருந்தது கிடையாதுஅதேமாதிரி  அவர்  நடிக்கிற  படமாக இருந்தாலும் சரி,  இல்லாத படமாக  இருந்தாலும் சரிவிழா என்று அழைத்தால்  உடனே வந்து விடுவார்அதான்   குஷ்பு.  இன்றைய புது நடிகைகள்  எல்லாம் அவரைப் பார்த்து  அந்த  ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”,  என்றார்[13]. இனிமேல் நமீதாவிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று மாற்றிப் பேசுவார் போலும்!

வேதபிரகாஷ்

© 13-01-2014


சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

ஓகஸ்ட் 6, 2013

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம்,  காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

பிரஸ்மீட்,  பேட்டிவிளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”,  என்றும் பேசினார்[4].

அமீருடைய  ஒழுக்கத்தைப்  பற்றிய  பொன்  மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா? ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும்? இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது? நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா? விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

காதலன்  குடும்பத்தினரின்  பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].

தந்தை  –  மகள்  பரஸ்பர  புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

போலீசாரிடம்  முரண்பட்ட  புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சேரன்,   தாமினி,  சந்துரு  கலந்து  கொண்ட  போலீஸ்  விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சேரனின்  தொடர்  குற்றச்  சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழக  போலீசாருக்கு  காதல்  விவகாரங்களை  ஆராய்வது  தவிர  வேறு  வேலை  இல்லை  போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்!

ஊடகங்களின்  அனுதாபம்,  பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.

சேரனின்  மீது  முன்பு கற்பழிப்  புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.

2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].

போலீசிடமிருந்து  கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

களவு – கற்பு முறைகள்,  விதிகள்,  சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள்,  இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.

வேதபிரகாஷ்

© 06-08-2013


[7] In her petition, Eswari Ammal submitted that her son fell in love with Dhamini, 20, on June 4, 2011 after witnessing her dance programme. When informed, Cheran had initially agreed for the marriage but later said the couple should wait for a couple of years.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Film-director-Cherans-daughter-case-reaches-HC/articleshow/21621677.cms