Archive for the ‘கூட்டம்’ Category

முப்பெருந்தேவியரின் சண்டை ஆரம்பம்: குஷ்பு, நக்மா மற்றும் விஜயதாரிணி – ராகுல் என்ன செய்யப் போகிறாரோ!

ஒக்ரோபர் 17, 2015

முப்பெருந்தேவியரின் சண்டை ஆரம்பம்: குஷ்பு, நக்மா மற்றும் விஜயதாரிணி ராகுல் என்ன செய்யப் போகிறாரோ!

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

நக்மாவுக்கு பொறுப்பு, குஷ்புவுக்கு கடுப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக, நடிகை நக்மா நியமிக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலராக, நடிகை நக்மா, செயலராக, ஹசீனா சையது ஆகியோர், சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தேசிய நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு, மாநிலங்களில் கட்சி விவகாரங்களை கவனிக்க, மேலிடப் பொறுப்பு வழங்கப்படுவது, காங்கிரசின் வழக்கம். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக நக்மாவும்; கேரளா மற்றும் லட்சத்தீவு மாநில மேலிட பொறுப்பாளராக, ஹசீனா சையதும் நியமிக்கப்பட்டு உள்ளனர்[1].  சத்தியமூர்த்தி பவனில், 17-10-2015 அன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில், நக்மா மற்றும் ஹசீனா ஆகிய இருவரும், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் முன்னிலையில் பொறுப்பேற்கின்றனர். அவர்களை வரவேற்க, தமிழக காங்கிரசார் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியை, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு புறக்கணிப்பார் என, தகவல் பரவியிருக்கிறது[2]. இதனால், காங்கிரசினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “துாத்துக்குடியில், 17ம் தேதி, மண்டல மாநாடு நடக்கிறது. மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இதில் பங்கேற்கிறார். தமிழக மகளிர் காங்கிரசில் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நக்மா, குஷ்பு, ஹசீனா சையது, விஜயதாரணி ஆகியோரை, ஒரே மேடையில் கைகோர்க்க வைக்க, அவர் திட்டமிட்டு உள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் சண்டை - இளங்கோவன், விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – இளங்கோவன், விஜயதாரிணி, நக்மா

விஜயதாரிணி மதிக்கவில்லை என்று நக்மா காட்டம்: 16-10-2015 அன்று அவர் சென்னைக்கு வருகை தருவதாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், அவர் சார்பாக மகளிர் குழு ஒன்றை அனுப்பி வைத்தார்[3]. நேற்று இரவு 7.45மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகை நக்மாவை மகளிர் காங்கிரசார் வரவேற்க சென்றனர். ஆனால் அவர்களை நடிகை நக்மா கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணியை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்[4]. இதனிடையே நக்மா தமது ட்விட்டர் பக்கத்தில் தூத்துக்குடி மண்டல மாநாட்டுக்கு தாம் செல்லப்போவதில்லை என பதிவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உரிய மரியாதை தராததால் தூத்துக்குடியில் இன்று நடைபெறும் மண்டல மாநாட்டை கேன்சல் செய்வதாக தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்[6]. இதனால், விஜயதாரிணிக்கும், நக்மாவுக்கும் இடையில் உள்ள புகைச்சலும் வெளிப்பட்டுவிட்டது.

Nagma vs khushboo- Cong-fight started DM

Nagma vs khushboo- Cong-fight started DM

நக்மாவால், குஷ்புவுக்கு செக்கா, இளங்கோவின் அதிகாரம் பறிப்பா?: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மாவை வைத்து, கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு, ‘செக்’ வைக்க, கட்சித் தலைவர்கள் சிலர் முயற்சிப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன[7]. கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், நடிகை நக்மா, காங்கிரசில் இணைந்தார். அவர், வட மாநிலங்களில் கட்சிக்காக, தீவிர பிரசாரம் மேற்கொண்டதால், அவரது முக்கியத்துவம் கட்சி அறிந்தது. ஆனால், கட்சி படுதோல்வி அடைந்து விட்டது. ஆனாலும், அவர் காங்கிரசிலேயே இருந்தார். இந்நிலையில், அவருக்கு கட்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், நக்மாவுக்குப் பின், காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவருக்கு, அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழக காங்கிரசில் அவர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கூடவே, அவர் கட்சியில் தனக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கி வருவதாகவும் தெரிகிறது.

kushboo-leg-raising-before-goddessமுஸ்லிமுக்கு முஸ்லிம் செக்கா, செக்யூலரிஸ விளையாட்டா?: சமீபத்தில், தன் பிறந்த நாள் விழாவை, வெகு விமரிசையாக அவர் கொண்டாட, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், குஷ்புவின் அசுர வளர்ச்சியும், அவருக்கு கட்சியினர் கொடுக்கும் முக்கியத்துவமும், கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால், குஷ்புக்கு போட்டியாக, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஹசீனா சையதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை வழங்குவதோடு, நக்மாவுக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்க, மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக மகளிர் காங்கிரசில், ஏற்கனவே பல கோஷ்டிகள் இருந்தாலும் புதிதாக குஷ்பு கோஷ்டியும் உருவாகி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, பலரும் டில்லி மேலிடத்தை வலியுறுத்துகின்றனர்.  இதற்காக, டில்லி சென்று தலைமையை வலியுறுத்துகின்றனர். அதற்கேற்றார் போல, நக்மாவை, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக நியமிக்கவும், தேர்தலுக்கு முன், நக்மாவை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரசார பயணம் மேற்கொள்ள வைக்கவும், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி
உள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன[8].

Khushbu answerable as an exposed actressஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா: ‘காதலன்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நக்மா. பல்வேறு இந்திப் படங்களிலும் நடித்த இவர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகிகளின் பட்டியல், துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின் பேரில்  வெளியிடப்பட்டது. அதில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்[9]. மேலும் மராட்டிய மாநில முன்னாள் மந்திரி வர்ஷா கெய்க்வாட் உள்பட 11 பேர் பொதுச்செயலாளர் பட்டியலில் இடம் பெற்றனர். டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக பர்கா சுக்லாசிங் நியமிக்கப்பட்டார். இவர் டெல்லி மகளிர் ஆணைய தலைவராக பணியாற்றியவர். இதுதவிர அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஜா மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் பிரபாராவின் மகள் சாருலதா டோகாஸ் மராட்டிய மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், இமாசல பிரதேசத்துக்கு சுசிலா நெகியும், மேற்கு வங்காள மாநில மகளிர் காங்கிரசுக்கு சுப்ரதா தத்தாவும் தலைவராக நியமிக்கப்பட்டனர்[10].

காங்கிரஸ் எம்.எல்.. ஒருவர் நக்மாவுக்கு முத்தமிட்டார் என்று வந்த செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?: நக்மா அந்த நபரை நிச்சயம் அடித்து இருக்க வேண்டும்[11]. நானாக இருந்தால் அடித்து இருப்பேன். அரசியலில் நக்மா என்னை விட மூத்தவர். இதையெல்லாம் எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதிர்ஷ்டவசமாக இத்தகைய நிலை எனக்கு இதுவரை ஏற்படவில்லை. தி.மு.க.வில் என்னை போன்ற தொண்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளோம்[12]. ஆனால், இப்பொழுது, இவர் காங்கிரஸில் உள்ளார். மேலும் இப்பொழுது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்[13]. ஆக காங்கிரசில் பாதுகாப்பு உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சையினை குஷ்பு ஏற்படுத்தியுள்ளாரா என்று பார்க்க வேண்டும். தான் திமிர் பிடித்தவள் என்றெல்லாம் வீராப்பு பேசும் குஷ்பு என்ன செய்ய போகிறார் என்றும் கவனிக்க வேண்டும். இதுவரை, இளங்கோவன் குஷ்புவிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார். இப்பொழுது, நக்மா வந்துவிட்ட பிறகு, தன்னிலையை மாற்றிக் கொள்ளப் போகிறாரா அல்லது விஜயதாரிணி போல சண்டையை ஆரம்பிக்கப் போகிறாரா என்றும் பார்க்க வேண்டும். பாவம், நடிகைகளை வைத்துக் கொண்டு காங்கிரஸ் படாத பாடு படுகின்றது போலும்!

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1365235

[2] தினமலர், நக்மாவுக்கு பொறுப்பு குஷ்பு வெறுப்பு?,அக்டோபர்.17.2015:23.53.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173346

[4] தின்னகரன், மகிளிர் காங்கிரஸ் வரவேற்பைப் புறக்கணித்த நக்மா: கோஷ்டி பூசலால் கட்சியில் புகைச்சல், அக்டோபர்ர்.16.20.12.37.

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-interested-welcome-nagma-tn-congress-237911.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, கட்அடித்த இளங்கோவன், விஜயதாரணிகடுப்பில் தூத்துக்குடி மாநாட்டை கேன்சல் செய்த நக்மா!, Posted by: Vijayalakshmi, Updated: Saturday, October 17, 2015, 11:37 [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1361315

[8] தினமலர், குஷ்புக்குசெக்வைக்க களமிறங்கும் நக்மா?, அக்டோபர்.10, 20.08.

[9] http://www.maalaimalar.com/2015/10/07050902/General-Secretary-of-the-All-I.html

[10] மாலைமலர், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமனம், மாற்றம் செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 07, 5:08 AM IST; பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 07, 5:09 AM IST.

[11] http://www.vikatan.com/news/article.php?aid=26189

[12]  விகடன், நக்மாவுக்கு எம்.எல்.. முத்தம்; நானாக இருந்தால் அடித்திருப்பேன்: நடிகை குஷ்பு ஆவேசம்!, Posted Date : 11:20 (27/03/2014)

Last updated : 11:20 (27/03/2014.

[13] http://www.maalaimalar.com/2015/10/07050902/General-Secretary-of-the-All-I.html

Advertisements