Archive for the ‘கேமராமேன்’ Category

பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன்! கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்!

ஜூலை 29, 2017

 

பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன்! கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்!

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-2-TOI

கேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

Jinson Lonappan - raped Dentist actress-Vedaprakash

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017

அமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-Malayalamanorama

நிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13].  சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15].   அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.

Jinson Lonappan - raped Dentist actress-Vedaprakash-2

புகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-07-2017

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-1

[1] The Huffington Post, Actor Dileep’s Arrest Exposes The Dark Side Of Malayalam Movie Industry:Misogyny, monopoly, rancour and criminalisation of cinema, 11/07/2017 3:40 PM IST

[2] http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/

[3] News.10.com, Women’s Commission Issues Notice To ‘Kasba’ Makers, Mammootty, PTI, Upated:July 20, 2016, 7:44 AM IST.

[4] http://www.news18.com/news/movies/womens-commission-issues-notice-to-kasba-makers-mammootty-1271632.html

[5] The Huffington Post, The Only Thing Worse Than Mammooty’s On-screen Sexism Is His Hypocrisy, A Real Shame,  20/07/2016 9:17 PM IST | Updated 20/07/2016 11:46 PM IST.

[6] http://www.huffingtonpost.in/2016/07/20/the-only-thing-worse-than-mammooty-s-on-screen-sexism-is-his-hyp_a_21435704/

[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.

[8] The Times of India, Kerala: Lensman ‘rapes’ US-based doctor promising movie roles, TNN | Updated: Jul 28, 2017, 09:43 AM IST

[9] http://timesofindia.indiatimes.com/city/kochi/lensman-rapes-us-based-doc-promising-movie-roles/articleshow/59797984.cms

[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே, Posted Date : 17:21 (28/07/2017); Last updated : 17:21 (28/07/2017)

[11] Malayalamanorama, Black magic worth Rs 33 lakh for cine-Gods? Cameraman arrested for swindling actress, Thursday 27 July 2017 04:09 PM IST

[12] http://english.manoramaonline.com/news/kerala/2017/07/27/actress-sexual-abuse-photographer-black-magic-swindle.html

[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்!!, வெள்ளி, 28 ஜூலை 2017 (17:33 IST)

[14] http://www.vikatan.com/news/tamilnadu/97128-photographer-cheats-woman-by-promising-to-offer-roles-in-cinema.html

[15] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/malayalam-photographer-raped-and-cheated-a-woman-117072800064_1.html

[16] NDTV, Photographer Arrested For Allegedly Raping Aspiring Actress: Police, Press Trust of India | Updated: July 28, 2017 01:06 IST

[17].http://www.ndtv.com/south/photographer-arrested-for-allegedly-raping-aspiring-actress-police-1730136

[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.

[19] http://www.dailythanthi.com/News/India/2017/07/28033412/Kerala-woman-doctor-in-rapePhotographer-arrested.vpf

Advertisements

பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள்?

நவம்பர் 15, 2013

பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள்?

சினிமாக்காரர்களைப் பற்றிய செய்திகளை அள்ளிவீசும் ஊடகங்கள்: நடிகைகள் இப்பொழுதெல்லாம் எல்லா பிரச்சினைகளைப் பற்றியும் தங்களது கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அல்லது ஊடகங்கள் ஓடிப்போய் அவ்வாறன செய்திகளை வெளியிடுகிறார்கள் எனலாம்.  அஞ்சலி பற்றி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தொப்புள் நடிகையின் காலில் ரத்தம் சொட்டியது[1], ஆர்யாவுக்குப் பிடித்த ஜோடி நயனதாராதான்[2], டைரக்டர் வீட்டில் திருட்டு[3], குள்ளமணிக்கு உடம்பு சரியாக இல்லை, மருத்துவமனையில் அனுமதி, தொடர்ந்து கவலைக்கிடம்[4] என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தமிழர்கள் கேட்டார்களா அல்லது முகவும் முக்கியமான விசயங்களா என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் தாம் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

வரம்புகளை மீறும் சினிமாக்காரர்கள்: சினிமாக் காட்சிகளில் வரம்புகளை மீறுவதில் அவர்களுக்கு லாபம் இருக்கலாம். ஆனால், தங்களது சினிமாக் கவர்ச்சீயை அரசியலோடு இணைத்து, அதிகாரத்தைப் பெற்று அதனால்,. சாதாரணமான மக்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று போலக் காட்டிக் கொளும் போக்கு இப்பொழுது அதிகமாகியுள்ளது. இதனால் சூட்டிங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பது[5], எம்.பியான கவர்ச்சி நடிகைஸ்டுபிட்என்று பொறியியல் வல்லுனரை திட்டுவது[6], எம்.பி என்னைத் தொட்டுவிட்டார் என்பது, புகார் கொடுப்பது[7], வாபஸ் வாங்குவது[8],உடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்பது[9], குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்  –  இளம் நடிகைகளுக்கு  அறிவுரை கூறுவது[10], என்று பலவிதமாகத்தான் நடந்து வருகிறார்கள்.

சின்னத்திரை – பெரியத்திரை மோதல்கள்: தொலைக்காட்சி தொடர்களை மிஷ்கின் விமர்சித்த பிறகு சின்னத்திரையில் இயங்கும் நடிகைகளுக்கு கோபம் பொங்கிவிட்டது. இப்பொழுது வருகின்ற படங்களெல்லாம் பார்க்கின்ற மாதிரியா இருக்கின்றது என்று கிடைக்கிற கேப்பில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்[11]. பெரியதிரை-சின்னதிரை எதுவானாலும், சினிமாக்காரர்களின் கலாச்சாரம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று தேவயானி தெரிவித்துள்ளார்[12]. அவர் நடித்த படங்களிலேயே அவ்வாறு இருந்ததா, இல்லையா என்று அவர் மறந்து விட்டார் போலும்!

பெரும்பாலான  படங்களில் காமெடி என்ற  பெயரில்  பெண்களை  கேலி,   கிண்டல்  செய்கிறார்கள்!: பட்டாளம்,’ ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் ‘மெய்யழகி’. நாயகியாக ஜெய்குவேதனி நடித்துள்ளார். ஆர்.டி.ஜெயவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே மெய்யழகி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் டிரைலரை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வெளியிட, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை தேவயானி, ‘‘இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவது குறைந்து விட்டது. ‘மெய்யழகிநல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்! மச்சி, மச்சான் என்று வசனம் பேசுகிறார்கள்! குடிக்காரர்கள் ஆட்டம் போடும்டாஸ்மாக்காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. இது சமூகத்துக்கு நல்ல விஷயமாக தோணவில்லை”, என்றார்[13]. இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள், அதில் காமெடியே இல்லை, காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்று வடிவேலு எடுத்துக் காட்டியுள்ளார்[14].

சினிமாவில்  டாஸ்மாக்  காட்சிகள்: நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்[15]: சினிமாவில் டாஸ்மாக் காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும் அதிகரித்துவிட்டதற்கு நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் தெரிவித்துள்ளனர்[16]. தொடர்ந்து பேசிய நடிகை சோனாவும், படத்தில் இடம்பெறும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் குறித்து பேசினார். ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. அது மாதிரிடாஸ்மாக்காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு’’ நிறைய படங்களில் டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை’’, என்றார்!

மச்சி, மச்சான்  என்று  வசனம்  பேசுகிறார்கள்! தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். தமிழைக் கெடுத்தவர்கள், சீரழித்தவர்களும் அவர்கள் தாம். அவர்களது வசனம், பாடல்கள் எல்லாமே கேவலமாகத்தான் இருக்கின்றன. இந்த அழகில் சிறந்த வசனக்கர்த்தா, காமெடி என்றெல்லாம் பட்டங்கள், விருத்துகள் வேறு கொடுக்கிறார்கள். கலைமாமணி பட்டங்களை வாங்கிய நடிக-நடிகைகளை மற்ற துறையினரோடு நிற்கவைத்துப் பார்த்தாலே, அவர்களுக்கு அளிக்கப்படும்ம் அந்த யோக்கியதை நியாயமா என்று தெரிந்து விடும். சமுதாயத்தை நல்வழிபடுத்தும் எத்தனையோ கோடானுகோடி மக்களை பாராட்ட மறந்து விடுகிறார்கள். ஆனால், இத்தகைய ஆட்களுக்கு பட்டமபதவிகள் எல்லாம் கொடுக்க்ப் பாடுகின்றன. பிறகு அவர்களே தங்களது நிலையைப் பற்றிப் பேசிப் புலம்புவதேன்?

© வேதபிரகாஷ்

15-11-2013


[12] தினமணி, இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்: நடிகைகள் ஆவேசம், First Published : 14 November 2013 02:10 PM IST

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

நவம்பர் 14, 2013

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக  சம்பளம்  கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.

சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.

சினிமாக்காரர்கள்  மற்ற தொழில்களில்  ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத்  தேவையான  துறைகளில்  சினிமாக்காரர்கள்  மூலதனம்  போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

வியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.

© வேதபிரகாஷ்

14-11-2013