Archive for the ‘சந்தர்ப்பம்’ Category

படுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]

ஏப்ரல் 27, 2018

படுக்க வா, கேஸ்டிங் கவுச்சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]

Casting couch - Manisha slapped Sachendra

2014ல் வெளிப்பட்ட விவகாரம்: கேஸ்டிங் கவுச்” – நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல்: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட் டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, வியாழக்கிழமை (11-12-2014) அன்று பட விழாவில், ஏராளமானோர் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று செய்திகளை வெளியிட்டார்கள். அந்நடிகை டைரக்டரின் மீது வைத்துள்ள புகார் – “காஸ்டிங் கவுச்” என்பதாகும். நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல் என்ற ரீதியில் “காஸ்டிங் கவுச்” [casting couch] என்று அந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்களாம்[1]. தமிழகத்திலும், இம்முறை இலைமறைகாய் போல இருந்துள்ளது, ஆனால், வெளியே சொன்னதில்லை. இந்த முறை, அடையாளம்-வியாதி, வேலை பார்க்கும் இடத்தில் தனக்குக் கீழேயுள்ள வேலையாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் பதவி உயர்வு, அதிக சம்பளம், அல்லது வேறு பலனை எதிர்பார்க்கும் நேரத்தில், மேலேயுள்ள ஆண் அதிகாரி, பதிலுக்கு பாலியல் ரீதியில் எதிர்பார்க்கும் போக்கை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

Casting couch -Kardar production 1951-3

முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவிபிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது: முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி-பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது[2] என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் சொல்லப்படுகிறது[3]. “ஐடி” துறை வளர்ந்து, பிரபலமான பிறகு, அதிலும், இது வேகமாக வளர்ந்து இந்திய சமூகத்தைப் பாதிக்க ஆரம்பித்து விட்டது. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்றிருந்தாலும், ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. நடிகைகள் ஆசையோடு பணம், புகழ் கிடைக்க வேண்டும் என்றுதான் தயாராக வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் உயர்ந்து விடுகிறார்கள், இல்லையென்றால் கீழே விழுந்து விடுகிறார்கள். “டான்ஸ்” ஆடுவதற்கு இம்மாதிரி அழைத்து வரும் இளம் பெண்களில் பலர் சினிமா உலகத்தில் உள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் என்று பலரைத் திருப்திப் படுத்த பயன்படுத்தப் படுகிறர்கள். சினிமா-சான்ஸ் இல்லையெனும் போது விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

Casting couch - Sri Reddy on Pawan Kalyan

கேஸ்டிங் கவுச் விவகாரமும், உண்டான விவாதமும்: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து  நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை, பல்வேறு நடிகைகள் ஒப்புக்கொண்டு உள்ளன. ஆனால், சினிமாவில் மட்டும் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதில்லை, பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற பாலியல் வற்புறுத்தல்கள் இருப்பதாக சினிமாத்துறையை சார்ந்த பலர் கூறி வருகின்றனர்[4]. மற்ற துறைகளில் இருக்கின்றன என்றெல்லாம் நியாயப் படுத்த வேண்டிய அவசியமே இல்லை, சினிமாத் துறையில், நடிகைகள் உடம்பைக் காட்டி நடிப்பது, நடனமாடுவது, நடிகர்களுடன் நெருக்கமாகக் கட்டிப் பிடித்து நடிப்பது, படுக்கையறைக் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பது என்பதெல்லாம், “படுத்தால் சான்ஸ்” என்ற கொள்கையில் தான் செல்கிறது என்பது தெரிகிறது.

Casting couch - Radhika Apte

படுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[5]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[6]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர்[7]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[8]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[9]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[10].

Casting couch - Lakhsmi Roy

முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் [2017]: 2017ல் சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்தனர்[11]. கஸ்தூரிக்கு அடுத்து நடிகை ராய்லட்சுமி இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[12]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் இவர் தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[13]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா?”, என்று தெரிவித்துள்ளார்[14].

Casting couch - Saroj Khan -Hindi

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை, அது அவர்களுக்கு வேலை கிடைக்கிறதுசோறு போடுகிறதுசரோஜ் கான் கூறியது: இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சரோஜ்கான், பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார்[15]. மேலும் அவர் அளித்த பேட்டியொன்றில்[16], “பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை, அரசுத் துறைகளிலும் இருக்கிறது. மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமேபாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன”என்று சரோஜ் கான் கூறியுள்ளார்[17]. சரோஜ் கான் இவ்வாறு கூறியிருப்பதற்கு நடிகைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது[18]. ரிச்சா சட்டா என்கின்ற கவர்ச்சி நடிகை, “ஒன்னுமே இல்லாத விஷயத்தை மக்கள் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன்[19]. பாலிவுட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமானவர்கள், பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறுவதில் உண்மை இல்லை”என்கிறார்[20]. ஆமாம், சரோஜ் கான் தன்னுடைய அனுபவத்தை சொல்லவில்லையே? ஆடுவதற்காக எத்தனை நடிகைகளை அவர் தயார் செய்திருப்பார், அதில் எத்தனை பேர் தீனியாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உண்மையினை ஒப்புக்கொள்வாரா என்ன?

© வேதபிரகாஷ்

27-04-2018

Casting couch -Kardar production 1951

[1] http://indianexpress.com/article/entertainment/bollywood/rakhi-sawants-friend-slaps-director-of-mumbai-can-dance-saala-over-casting-couch-121209/

[2] http://www.foxnews.com/entertainment/2011/05/31/casting-couch-nightmares-hollywood-megan-fox-lisa-rinna/

[3] The casting couchcasting-couch syndrome or casting-couch mentality is the trading of sexual favors by an aspirant, apprentice employee or subordinate to a superior in return for entry into an occupation, or for other career advancement within an organization. The term “casting couch” originated in the motion picture industry, with specific reference to couches in offices that could be used for sexual activity between casting directors or film producers and aspiring actresses or actors.

[4] வெப்துனியா, வேலை கிடைக்குதுன்னா படுக்கையை பகிர்வதில் தப்பில்லைபெண் டான்ஸ் மாஸ்டரின் சர்ச்சைப் பேச்சு, Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (11:23 IST).

[5] NDTV, Radhika Apte’s Brush With the Casting Couch: She Said ‘Go to Hell’, Written By: Divya Goyal   | September 20, 2016 16:32 IST (New Delhi)

[6]பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காகஎன்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]

[7] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லைகொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai.

[8]http://chennaionline.com/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

[9] [13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்தஇழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.

[10] http://seithi.mediacorp.sg/mobilet/entertainment/radhika-apte/3146810.html

[14] http://tamil.filmibeat.com/heroines/radhika-apte-too-faced-casting-couch-bollywood/slider-pf50072-042355.html

[11] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில்இருந்து நீக்குகிறார்கள்ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST].

[12] http://tamil.filmibeat.com/heroines/raai-laxmi-talks-about-casting-couch-046357.html

[13] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் படவாய்ப்பு கிடைக்காதுராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).

[14]http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/raai-laxmi-about-actress-film-chance-in-industry-117051800041_1.html

[15] http://tamil.webdunia.com/article/trending-news/its-not-a-big-mistake-to-share-bed-when-getting-cine-chance-famous-dancemaster-said-118042500017_1.html

[16] सरोज खान ने कहा था, ‘क्या मैं एक बात बता सकती हूं? यह शुरुआत से ही हो रहा है. यह अभी शुरू नहीं हुआ है. कोई ना कोई शख्स लड़की को इस्तेमाल करने की कोशिश करता है.’ सरकार के आदमी भी यह करते हैं. फिर लोग फिल्म इंडस्ट्री के पीछे क्यों पड़ जाते हैं. सरोज खान ने कहा था, ‘कास्टिंग काउच लोगों को रोजी रोटी मुहैया कराता है. ये रेप करके छोड़ नहीं देते. यह लड़की पर निर्भर करता है कि वह क्या चाहती है. अगर आप गलत हाथों में नहीं पड़ना चाहते तो आप नहीं करेंगे. अगर आपमें कला है तो खुद को बेचने की क्या जरूरत है? फिल्म इंडस्ट्री का नाम खराब करने की जरूरत नहीं है.’

https://hindi.firstpost.com/india/casting-couch-its-not-just-in-film-industry-parliament-also-not-immune-to-it-says-congress-renuka-chowdhary-saroj-khan-107103.html

 

[17] மாலைமலர், நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறதுநடன இயக்குனர் சரோஜ் கான், பதிவு: ஏப்ரல் 24, 2018 19:55

[18] https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/24195519/1158837/Dance-Master-Saroj-Khan-Says-about-Sexual-Harassment.vpf

[19] பிளிம்.பீட், படுக்கைக்கு அழைப்பது சரி என்ற டான்ஸ் மாஸ்டருக்குரீல்ஷகீலா ஆதரவு , Posted By: Siva Published: Thursday, April 26, 2018, 9:41 [IST]

[20] https://tamil.filmibeat.com/news/richa-chadda-supports-saroj-khan-053304.html

படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை!

திசெம்பர் 13, 2014

படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை!

காஸ்டிங் கவுச் ஆங்கில படம்.வீடியோ

காஸ்டிங் கவுச் ஆங்கில படம்.வீடியோ

சினிமா உலகத்தில் நடிகநடிகைகள் அடிதடி நிகழ்ச்சிகள்: சினிமா உலகத்தில் நடிக-நடிகைகள் அடித்துக் கொள்வதே சகஜமாகி விட்டது[1]. அவ்வாறு பொது இடங்களில் சண்டை போட்டது, அடித்துக் கொண்டது என்று பெரிய பட்டியலே போடலாம். சன்னி லியோனி என்ற ஆபாச நடிகையை யாரோ ஆபாசமாகப் பேசியதால், சகநடிகர் அவரை அடித்து விட்டார் என்ற இன்னொரொரு செய்தியும் வந்துள்ளது[2]. அந்நடிகை ரொம்ப அடக்க-ஒடுக்கமாக நடிகை போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள் போலும். யோகிதா டான்டேகர் என்ற நடிகை அன்னா ஹஸாரேவுடன் சேர்ந்து செயல்பட்டதால், ஒரு வியாபாரியால் தாக்கப்பட்டுள்ளார். 09-12-2914 (செவ்வாய்கிழமை) ஜூஹு லேனில் அந்த வியாபாரி மற்றும் அவரது காரோட்டி இருவராலும் [businessman Hansraj Surana and his driver Krishna Kumar Vaidyanath], அந்நடிகை தனது காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு அடிக்கப்பட்டிருக்கிறார்[3]. முன்னர் கௌர் கான் என்ற நடிகை ஆபாசமாக உடை அணிந்தார் என்று ஒரு முஸ்லிம் இளைஞனால் 30-11-2014 அன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு விழாவில் அறையப்பட்டார்[4].

காஸ்டிங் கவுச் - விளக்கம்

காஸ்டிங் கவுச் – விளக்கம்

காஸ்டிங் கவுச்” – நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல்: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட் டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, வியாழக்கிழமை (11-12-2014) அன்று பட விழாவில், ஏராளமானோர் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்நடிகை டைரக்டரின் மீது வைத்துள்ள புகார் – “காஸ்டிங் கவுச்” என்பதாகும். நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல் என்ற ரீதியில் “காஸ்டிங் கவுச்” [casting couch] என்று அந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்களாம்[5]. இந்த முறை, அடையாளம்-வியாதி, வேலை பார்க்கும் இடத்தில் தனக்குக் கீழேயுள்ள வேலையாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் பதவி உயர்வு, அதிக சம்பளம், அல்லது வேறு பலனை எதிர்பார்க்கும் நேரத்தில், மேலேயுள்ள ஆண் அதிகாரி, பதிலுக்கு பாலியல் ரீதியில் எதிர்பார்க்கும் போக்கை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி-பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது[6] என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் சொல்லப்படுகிறது[7]. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்றிருந்தாலும், ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. நடிகைகள் ஆசையோடு பணம், புகழ் கிடைக்க வேண்டும் என்றுதான் தயாராக வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் உயர்ந்து விடுகிறார்கள், இல்லையென்றால் கீழே விழுந்து விடுகிறார்கள். “டான்ஸ்” ஆடுவதற்கு இம்மாதிரி அழைத்து வரும் இளம் பெண்களில் பலர் சினிமா உலகத்தில் உள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் என்று பலரைத் திருப்திப் படுத்த பயன்படுத்தப் படுகிறர்கள். சினிமா-சான்ஸ் இல்லையெனும் போது விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

காஸ்டிங் கவுச் - ஹாலிவுட் ஒப்புதல்

காஸ்டிங் கவுச் – ஹாலிவுட் ஒப்புதல்

அமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை சீரழிக்கிறது: அமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை மதிக்கிறது என்று இம்முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால், பொதுவாக அவர்கள் பெண்கள் உரிமைகள் என்றேல்லாம் பேசி தம்பட்டம் அடித்து ஆர்பாட்டம் செய்து, பறைச்சாற்றிக் கொண்டிருப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள் மூலம், இம்முறை ஏற்கெனவே ஐ.டி கம்பெனிகளில் நடந்து வருவதை, இப்பொழுது குறிப்பாக பெயர் சொல்லி செய்திகளில் “காஸ்டிங் கவுச்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப் பற்றி இந்திய பெண்ணிய பெண்மணிகள், தமிழச்சிகள் போன்ற வீராங்கனைகள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். பாராளுமன்றத்திலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பிஜேபி எம்.எல்.ஏ / எம்.பி செல்போனில் பிரியங்கா படம் / ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஊடகக்காரர்கள் முக்கிய செய்திகளாக வெளியிடுவார்கள்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

நடிகை டைரக்டருடன் மேடையில் வாக்குவாதம்[8]: பாலிவுட்டின் பிரபல டைரக்டர் சச்சேந்திர சர்மா. இவர், ‘மும்பை கேன் டான்ஸ் சலா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், பிரபல குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்தும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மும்பையில் நடந்தது. விழாவுக்கு, ராக்கி சாவந்த், தன் தோழி மனீஷாவுடன் வந்திருந்தார். மனீஷாவும் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். மேடையில் சச்சீந்திர சர்மாவும், ராக்கி சாவந்தும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். விழா நடந்து கொண்டு இருந்தபோது, வேகமாக மேடைக்கு வந்த மனீஷா, டைரக்டர் சச்சேந்திர சர்மாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ‘நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, என்னை ஏமாற்றியது ஏன்?’ என, கேள்வி எழுப்பினார். இருவருக்கும் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மனீஷா, ஒரு கட்டத்தில், டைரக்டரை, கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

Actress  attacks director NDTV photo

Actress attacks director NDTV photo

இதைப் பார்த்து, அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சச்சீந்திர சர்மா, ராக்கி சாவத்திடம் என்ன இந்த மாதிரி நடந்து கொள்கிறார் என்று கேட்டு, அவரை மேடையைவிட்டு கீழே இறங்க சொல்லுமாறு கூறினார்[9]. அங்கிருந்தவர்கள் சொல்லியும் மனிஷா குமாரி கேட்கவில்லை. சத்தம் போட்டுக்கொண்டே மீண்டும் அடிக்க வந்தார்[10]. கடும் ஆத்திரமடைந்த டைரக்டர், பதிலுக்கு, மனீஷாவை பிடித்து, மேடைக்கு கீழே தள்ளினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்த மேலும் சில பெண்கள், மனீஷாவை சூழ்ந்து கொண்டு தாக்கினர்; அவரின் தலை முடியை பிடித்து இழுத்தனர். இதனால், அந்த இடமே, பெரும் களேபரம் ஆனது. இதையடுத்து, மனீஷாவும், ராக்கி சாவந்தும், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று தினகரன் கூறுகிறது[11].

 

நடிகை பிறகு அறைந்தார் .நக்கீரன்.

நடிகை பிறகு அறைந்தார் .நக்கீரன்.

பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அடிதடியும்அதில், ‘நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், என் ஆசைக்கு இணங்க வேண்டும், என, டைரக்டர் சச்சேந்திர சர்மா கேட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற என்னை, ஆட்களை வைத்து தாக்கி விட்டார்’ என, மனீஷாவின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12].

நடிகை புகார், அடிவாங்கிய டைரக்டரின் மனைவியும் புகார்

நடிகை புகார், அடிவாங்கிய டைரக்டரின் மனைவியும் புகார்

ராக்கி சாவந்தும், தன் தோழிக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளார். இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார்[13]. அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்’’ என்றார். ஆனால், மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அவர் கூறுகையில், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது’’ என்றார்[14]. இதைத் தொடர்ந்து, டைரக்டரின் மனைவி மதுவும், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் மீது, மனீஷாதவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதோடு, பொது இடத்தில் அவரை தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்[15].

© வேதபிரகாஷ்

13-12-2014

[1] http://www.ibtimes.co.in/ranveer-priyanka-kajol-karan-other-bollywood-celebs-reunited-after-their-popular-tiffs-photos-617007

[2] http://www.india.com/showbiz/sunny-leones-co-star-slaps-a-man-for-misbehaving-with-the-sultry-actress-219447/

[3] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Actress-dragged-from-car-slapped-by-businessman/articleshow/45488891.cms

[4] http://time.com/3611558/gauhar-khan-india-raw-star-slap/

[5] http://indianexpress.com/article/entertainment/bollywood/rakhi-sawants-friend-slaps-director-of-mumbai-can-dance-saala-over-casting-couch-121209/

[6] http://www.foxnews.com/entertainment/2011/05/31/casting-couch-nightmares-hollywood-megan-fox-lisa-rinna/

[7] The casting couchcasting-couch syndrome or casting-couch mentality is the trading of sexual favors by an aspirant, apprentice employee or subordinate to a superior in return for entry into an occupation, or for other career advancement within an organization. The term “casting couch” originated in the motion picture industry, with specific reference to couches in offices that could be used for sexual activity between casting directors or film producers and aspiring actresses or actors.

[8] தினமலர், பட விழாவில் டைரக்டரை அறைந்த நடிகை, பதிவு செய்த நாள்
டிச 12,2014 23:13.

[9] நக்கீரன், இயக்குனரின் கன்னத்தில் அறைந்த நடிகையின் தோழிஇயக்குநரும் பதிலுக்கு அடித்து உதைத்தார், வெள்ளிக்கிழமை, 12, டிசம்பர் 2014 (18:22 IST)

[10]  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=134153

[11] தினகரன், ஆடியோ வெளியீட்டு வழாவில் பரபரப்பு: இயக்குனரை அறைந்தார் ராக்கி சாவந்தின் தோழி: ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக புகார், சனிக்கிழமை, 00.59.52, 13-12-2014.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1136541

[13] The actress, whose name is reportedly Manisha, has allegedly accused Sachindra Sharma of offering her a role on condition of what is popularly known as the ‘casting couch,’ and then failing to actually cast her. Rakhi told news agency IANS later, “Yes, she is right, the director asked her for favours to get a role in his film.” http://movies.ndtv.com/bollywood/actress-slaps-rakhi-sawants-director-accuses-him-of-casting-couch-712070

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122293

[15] http://www.abplive.in/movies/2014/12/12/article453428.ece/Actress-slaps-director-on-stage-accusing-him-of-casting-couch