Archive for the ‘சபிதா ராய்’ Category

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (3)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய  நடிகைகள்சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (3)

Nothing wromg for close-acting Priyanka - 2-5-2017

கொலையும் செய்வாள்என்ற ரீதியில் நடிகைகள் கொலை செய்வது செய்திகளாக வருவது: பெண்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன போலும். சினிமா உலகத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இவ்வாறு பலவுரிமைகள் இருக்கின்றன போலும். எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டப் பிறகு, இனி கொலைகளும் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. இனி இந்திய சினிமா துறைக்கும், ஹாலிவுட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம் போலிருக்கிறது. அங்கு எத்தகைய குற்றங்கள் நடக்கின்றனவோ, அத்தகைய குற்றங்கள் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. கேரளாவில் கற்பழிப்பு சாதாரணமாகி விட்டது. முன்னர் ஈ.கே. நாயனார் சொன்னது போல, டீ குடிப்பது போலாகி விட்டது. ஆளும் அமைச்சரே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளது, அவர்களின் கீழ்த்தரமான போக்கைக் காட்டுகிறது. பெண்களைப் பற்றிய அவர்களது மனப்பாங்கு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது, போதாகுறைக்கு “கம்யுனிஸம்” எல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நடிகக்களும் சமவுரிமைகளோடு குற்றங்களை செய்ய ஆரம்பித்தால், நடிகர்களால் தாங்க முடியாது. சமூகமும் தாங்காது. ஏனெனில், சினிமாவில் மயங்கிக் கிடக்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள் ஏழைகள்.

Sonaxi died in accident - 29-04-2017

பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் கார் விபத்தில் இறப்பு (29-04-2017): மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 29-04-2017 அன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது[1]. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார்[2]. அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார். கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் இறப்பதும் வருத்தத்திற்குரியதாகும். துணிந்து பிழைப்பிற்கு என்று நடிக்க வந்தால், சாலை விபத்து, இறப்பு முதலியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மலையாள நடிகை கூட, ஷூட்டிங் பிறகு தான் கடட்தப் பட்டு, மானபங்கம் படுத்தப் பட்டு, வீடியோ எல்லாம் எடுத்து, விட்டு-விட்டு சென்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

Sonika Chuhan died in a car accident

பாடகி சுசித்ரா டுவிட்டர் விவகாரம்: சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது.  இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது[3]:

suchis-twitter-anirudh-and-dd

சுசித்ரா மன்னிப்பு கேட்டது: “இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சரிசெய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன்இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்ததுநடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம்என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள்என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன்மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது”, என்று பேட்டியளித்துள்ளார்[4].

What swara says about her touched experience

கண்ட இடத்தில் தொட்டார்கள், சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்தேன் என்றெல்லாம் சொல்லும் ஸ்வரா: நடிகை பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[5]. மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர்[6]. அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன்[7]. ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[8]. முதலில் இந்த நடிகையின் போக்கே விசித்திரமாக இருக்கிறது. அந்த ஆண் அவ்வாறு செய்கிறான் எனும்போது, ஆரம்பத்திலேயே, டி.டி.ஆரிடம் புகார் கொடுத்திருக்கலாம், இல்லை சீட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து அவன் செய்யும் அசிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை, பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. முதல் வகுப்புப் பிரயாணி எனும் போது, அவனது பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று எல்லா விவரங்களையும் சுலபமாக எடுத்து விடலாம், அவனை பிடித்து சட்டப்படி தண்டிக்கலாம். “ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[9]”, என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-05-2017

What swara says about her touched experience-complained

[1] மாலைமலர், கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலிநடிகர் படுகாயம், பதிவு: ஏப்ரல் 29, 2017 15:34.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/29153407/1082718/Model-killed-actor-injured-in-car-mishap.vpf

[3] தினமணி, என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை, ஏப்ரல். 28, 2017, 2017. 03.48.

[4] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/apr/28/it-feels-like-the-end-of-the-world-and-it-has-taken-me-six-weeks-of-very-hard-worksuchitra-2692658.html

[5] தமிழ்.வெப்துனியா, நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி!, ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (16:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/man-mastrubating-in-train-in-front-of-me-swara-bhaskar-117043000013_1.html

[7] தமிழ்.பிளிம்பீட், கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி, Posted by: Siva, Published: Sunday, April 30, 2017, 15:21 [IST].

[8] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html

[9] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html

Advertisements

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? பிரீத்தி ஜெயின் – மதுர் பண்டார்கர் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (2)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? பிரீத்தி ஜெயின் மதுர் பண்டார்கர் பிரச்சினைசீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (2)

internet campaign about Sabita Rai

சபிதாசுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா?: உண்மையிலேயே ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில், பாதிக்கப் பட்ட நடிகை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு, சில இணைதளங்கள் சினிமாவைப் பற்றி “கிசு-கிசு” தோரணையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அச்சு-ஊடகங்களும் மூன்று எழுத்து நடிகை, நான்கு எழுத்து நடிகருடன் ஓட்டலில் கும்மாளம், ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம், பார்ட்டி, ….என்றெல்லாம் செய்திகள், புகைப்படங்களும் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகை-நடிகர்கள் சில நேரங்களில் “அது நானில்லை” என்று அறிவித்து மௌனமாகி விடுகிறார்கள். இல்லை, மின்னணுத்துறை வல்லமையுடன்  படங்களை / வீடியோக்களை திரித்தியுள்ளனர், மாற்றியுள்ளனர், என்று புகார் கொடுத்து இருந்து விடுகின்றனர். நடவடிக்கை எடுத்தது, கைதானது என்று சில செய்திகளே வருகின்றன. பெரும்பாலான விசயங்கள் மறக்கப் படுகின்றன. ஆக, சமிதா-சுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா என்று கவனித்தால், அது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்களின் நடவடிக்கைகள் மக்களால் நிச்சயமாக கண்காணிக்கப் படும்.

internet campaign about and against Sabita Rai

டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள்[1]: மேலும் விளக்கம் அளித்துள்ள சபிதா ராய், தனக்கும் ராடான் மீடியா ஊழியருக்கும் நடு ரோட்டில் சண்டை நடந்தது உண்மை தான். ஆனால், அது எதற்காக என்பது குறித்து சேனல் பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டது, என்று கூறியுள்ளார்…… எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து பாலிமர் தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். பாலிமர் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே,” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்[2]. இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் அண்ணா மற்றும் கார்த்தி அண்ணாவிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. வேறு எந்தவொரு தொலைக்காட்சி வெளியிடவில்லை, டி.ஆர்.பிக்காக இப்படியொரு செய்தியை வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார். டி.ஆர்.பிக்காக செய்தார்களா, வேறு காரணத்திற்காக செய்தார்களா என்று ஆராயும் முன், இத்தகைய கண்றாவிகளை தொலைக்காட்சி செனல்கள் காட்டுவதே கேவலமாக இருக்கிறது. முன்னர் +2 தேர்வின் போது, நாளெல்லாம் சன் டிவி நித்தியானந்தா வீடியோவைக் காண்பித்தது[3]. ஆனால், மற்ற பிஷப்-முல்லாக்களின் வீடியோக்களை லெனினும் எடுக்கவில்லை, ஒளிபரப்பவில்லை போலும். ஆக மொத்தம் இவர்களுக்கெல்லாம், சமூக பிரஞை என்றிருந்தால், இத்தகைய கேவலமான செயல்களை செய்ய மாட்டார்கள்.

Madgur Bhandarkar - Preeti Jain

இயக்குனரை கொலை செய்ய முயன்ற நடிகைக்கு [பிரீத்தி ஜெயின்] சிறைத் தண்டனை: பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது[4]. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், நான்கு வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்[5]. இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

Preeti Jain out on bail

அயல்நாட்டில் பிறந்து, வளர்ந்து லண்டனில் படித்து, தில்லியில் பட்டம் வாங்கிய பிரீத்தி ஜெயன் கொலை வழக்கில் சிக்கியது[6]: பிரித்தீயின் தந்தை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி, கெய்ரோவில் வேலை செய்தபோது, இவர் அங்கு பிறந்தார். பிறகு ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று பல நாடுகளில் குழந்தை பருவம் கழிந்தது. இங்கிலாந்தில் படித்து, தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். மாடலிங் மற்றும் நடிப்பு இவற்றில் அதிக விருப்பம் கொண்டிருந்ததால், 1999ல் தனது பெற்றோர் இறந்தவுடன் மும்பைக்கு வந்தார்[7]. 2004ல் தன்னை மதூர் பண்டார்கர் 1999 மற்றும் 2004 காலத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் மற்றும் தனது படங்களீல் நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் ஆசைகாட்டி பலமுறை கற்பழித்ததாக குற்றம் சாட்டினார், வழக்கும் தொடர்ந்தார்[8]. ஆனால், அது 2012ல் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.  2005ல், இவர் பண்டார்கரை கொலை செய்ய முயற்சித்தார் என்று கீழ்கண்டவர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

  1. பிரீத்தி ஜெயின்
  2. நரேஷ் பர்தேசி,
  3. சிவராம் தாஸ்,
  4. ….
  5. ….

இப்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது[9].

Preeti Jain out on bail- after conviction

சினிமா தொழிலை படிப்பாக சொல்லிக் கொடுப்பது, வேலையாகக் கொள்வது, பென்களின் நிலைமை: நன்றாகப் படித்த, நவநாகரிகமான பிரீத்தி ஜெயின் போன்றவர்களின் நிலைமையே இவ்வாறு இருந்தால், சாதாரணமான பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதனை கவனிக்கலாம். ஆனால், இன்றைய தேதியில், டிவி-சினிமா ஆசைகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் மாடலிங் [விளம்பர நடிப்பு], கம்பெரிங் [நிகழ்ச்சி தொகுப்பாளர்] நடிப்பு போன்ற்வற்றில் ஈடுபட தயாராக இருக்கின்றனர். பணக்கார, நாகரிகமான குடும்பத்தவர் தங்கள் பெண்கள் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதை பெருமையாகவே கருதுகிறார்கள். ஆனால், நடுத்தர வர்க்க  பெண்கள்  அவ்வாறு செய்ய முடியாது. குடும்பமும், சமூகமும் ஒப்புக் கொள்ளமுடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.  இதற்கான பயிற்சிக்காக மத்திய-மாநில அரசுகளின் சினிமா-நடிப்பு முதலியவற்றைக் கற்றுக்கொடுக்கும் பள்ளி-கல்லூரிகள் உள்ளன.  மாணவியர் தயாராக உள்ளார்கள். தவிர தனியார் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களும் இவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆக, இதில் படிக்க, பயிற்சி பெற செல்லும் பெண்கள் 100% ஒழுக்கமாக இருக்க முடியுமா என்று சொல்ல முடியாது. இருப்பினும் பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா நடிப்புத் தொழில் அடுத்து, தொலைக்காட்சியும் சேர்ந்து விட்டது. செய்தி தயாரிப்பு, வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, என்று பலவாறான துறைகளை ஏற்படுத்தி, வியாபார ரீதியில் லபம் பெறத்தான் அந்நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மற்ற சமூக பிரஞை, தனிமனித ஒழுக்கம், கற்பு போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. மேலும், இத்தொழில் செய்பவர்கள், அதைப் பற்றி தரக்குறைவாக பேச மாட்டார்கள்; உயர்வாக மதிக்க வேண்டும் என்று தான் உறுதியாக இருப்பார்கள், பிரச்சரம் செய்வார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2017

Nadgur Bhandarkar titter - 28-04-2017

[1] சென்னை.ஆன்லைன், டிஆர்பிக்காக என் வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்கசபிதா ராய் கண்ணீர், May 01, 2017, Chennai

[2]http://chennaionline.com/article/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

[3]  பிறகு அது போலியாக தயாரிக்கப் பட்டது, என்று நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. இருப்பினும், நக்கீரன் அதனை வைத்து நன்றாகவே காசு சம்பாதித்தது.

[4] மாலைமலர், நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்: சிறைத்தண்டனை 4 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு, பதிவு: ஏப்ரல் 28, 2017 21:06.

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/28210651/1082574/Preeti-Jain-Gets-Bail-and-sentence-suspended-for-4.vpf

[6] Hindusthan Times, Madhur Bhandarkar-Preeti Jain case: Five things we know so far, April.28, 2017. 16.45 IST.

[7] http://www.hindustantimes.com/mumbai-news/madhur-bhandakar-preeti-jain-case-five-things-we-know-so-far/story-fx27FXjZH49hfQGx7n0X0J.html

[8] Indian Express, Who is Preeti Jain? Why did she try to kill Madhur Bhandarkar?, By: Express Web Desk | New Delhi | Published:April 28, 2017 8:44 pm.

[9] http://indianexpress.com/article/entertainment/bollywood/who-is-preeti-jain-why-did-she-try-to-kill-madhur-bhandarkar-4632240/

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சபீதா ராய்-சுகுமாறன் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (1)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சபீதா ராய்சுகுமாறன் பிரச்சினைசீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (1)

Sabita Rai - Polymer News created controversy-Sukumaran

பெண்கள் சினிமா, டிவி, விளம்பரம், மாடலிங் முதலியவற்றில் நடிக்க துணிந்து வந்து விட்டது: கடந்த மூன்று நாட்களில் [27-04-2017 முதல் 19-04-2017 வரை] பல நடிகைகளை சம்பந்தப்படுத்துள்ள செய்திகள், திகைப்படைய வைப்பதாக உள்ளது. இன்றைக்கு படிக்கின்ற-படிக்காத, ஏழை-பணக்கார, என்ற வெவ்வேறான நிலைகளில் உள்ள பெண்கள் நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, சினிமா, பாடலிங், விளம்பரம் போன்றவற்றில் தோன்ற, நடிக்க தயாராகி விட்டார்கள். காசுக்காக இன்றைக்கு ஆனானப்பட்ட கமல் ஹஸன் போன்ற நடிகர்களே, விளம்பரத்தில் கூட நடிக்க தயாராகி விட்டார்கள்[1]. தாத்தாவாகி விட்ட அமிதாப் பச்சன் போன்றோரை சொல்லவேண்டாம்[2]. ஆண்களே இப்படியென்றால், பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண்கள் என்று வரும் போது, நிச்சயமாக கேமரா முன்னால் வரும் போது, பலவிதங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. 1940-50களில் போல எல்லாவற்றையும் மூடிக் கொண்டு விளம்பரத்தில் கூட நடிக்க முடியாது. “காண்டம்” / ஆணுறை விளம்பரங்களில் சன்னி லியோனை மிஞ்சமுடியாது எனலாம், மிஞ்சினால், போர்னோகிராபியாகி விடும்[3].  உடையின் அளவுகள் நிர்ணயிக்கும் போது, சினிமா நடிகையின், மாடலின், விளம்பர நடிகையின் உடல், மார்பு, இடுப்பு, கை-கால்கள் எந்த அளவுக்குக் காட்டவேண்டும் என்ற நியதி அறியப்படுகிறது. பெண்களும் ஒப்புக் கொண்டு தயாராகித் தான் அவ்வாறே காட்ட ஆரம்பிக்கிறார்கள்.

Sabita Rai - Polymer News - controversy-Sukumaran

கேமராவுக்கு முன்னால் செய்ய வேண்டிய சரசம், பின்னால் வேறு மாதிரியாவது நிதர்சனமாகவே இருக்கிறது: அந்நிலையில், மேக்கப்-மேன் தொட்டான், கேமரா-மேன் அட்ஜெஸ்ட் பண்ணான், இயக்குனர் தட்டிக் கொடுத்தார், தயாரிப்பாளர் இடுப்பை வளைத்து அணைத்து பாராட்டினார்…..என்றெல்லாம் ஏற்படும் போது, ஒன்றும் சொல்வதற்கில்லை. கணவன், தந்தை, சகோதரன் கூட ஒன்றும் கேட்க முடியாது. இந்த எல்லைகளையும் மீறி விவரங்கள் நடக்கும் என்பதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. எங்கோ தொலைவில், ஏன் அயல்நாடுகளில், ஓட்டல் அறைகளில் சூட்டிங் நடக்கும் போது, ஒரே ஓட்டலில் எல்லோரும் தங்கியிருக்கும் போது, அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருக்கும் போது, இப்படி – அப்படி நடந்தது என்றாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இப்பொழுதுதான், “சினிமாவில் நடிக்க, தொடர்ந்து நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்கைக்கு வா”, என்று அவர் அழைத்தார், இவர் அழைத்தார் என்று சில நடிகைகள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால், பல நடிககள் சொல்லாமல் இருக்கிறார்கள். ஆக, இதெல்லாம் தொழியில் சகஜமப்பா, என்று சொல்லக் கூடிய நிலையாகி விட்டது.

Sabita Rai - Polymer News created controversy

27-04-2017 அன்று நள்ளிரவில் நடிகை சபீதாராய் மேனஜரான சுகுமாறன் தெருவில் அடித்துக் கொண்டு சண்டை போட்டனர்: 28-04-2017 அன்று இணைதளங்களில் இவ்வாறான விவரங்கள் வெளியாகின: “நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது[4]. அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின்  ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன்.  இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார்.   இந்நிலையில் 27-04-2017 அன்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். “என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு….”, எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்”.   இப்படியெல்லாம் விவரித்து விட்டு, “அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது”, என்று தமிழ்.வெப்துனியா முடித்துள்ளது[5].   வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, என்றும் எடுத்துக் காட்டுகிறது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. இணைதளத்தில் இந்த வீடியோவும் உள்ளது[7].

Sabita Rai - Polymer News created controversy-clarification given by her

விவகாரம் வெளிவந்தவுடன் விளக்கம் கொடுத்தது [28-04-2017]: சுகுமாறனின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாகவும், பணத்தகராறு ஏற்பட்டதையடுத்து சுகுமாறன் சபீதாவை வெளியேற்றியதையடுத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தத் தகவல்களை மறுத்துள்ள நடிகை சபீதா ராய், சுகுமாறன் தனக்கு தந்தை போன்றவர் என்றும், தான் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தரக் கேட்ட போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்[8]. தாங்கள் சண்டையிட்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதில் சில பகுதிகளை எடிட் செய்து சுகுமாறனின் வீட்டருகே வசிக்கும் சில வெளியிட்ட விஷம வீடியோவால் தனது வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கதறுகிறார் சபீதா[9]. தனக்கு நான்கு மாதத்தில் திருமணமாக உள்ள நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தியால் மிகுந்த மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் உண்மையை நிரூபிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார். பணத்தை தருவதாக சுகுமாறன் ஒப்பு கொண்டதாகவும் தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ள சபீதா, தாங்கள் இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாகவும் கூறுகிறார். சண்டை வீடியோ வெளியானதால் தனது திரைத்துறை வாழ்வு பாதிக்கப்கட்டுள்ளதோடு, ராடன் மீடியா நிறுவனமும் பணிநீக்கம் செய்து விட்டதால் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக கலங்குகிறார் சபீதா.

Radan media - IT raid

ராடன் மீடியா நிறுவனத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ரெயிட்[10]: ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு  சம்மன் அனுப்பியது. அதன்படி, 11-04-2017 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜரானார்கள். அவர்களிடம் நீண்ட நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12-04-2017 அன்று பிற்பகல் சோதனையைத் தொடங்கினர்[11]. சென்னை தி.நகரில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது.  சரத்குமாரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், ராதிகாவின் நிறுவனத்தின் சோதனை நடந்தது.  பலதார திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கையினை இங்கு விமர்சிக்க வேண்டாம், என்றாலும், அவர்களது கம்பெனியில் நடப்பதும் சரியாக இல்லை என்று தெரிகிறது. இந்த சமிதா-சுகுமாறன் ஜோடியும் இப்பொழுது “பண விவகாரம்” தான் சண்டைக்குக் காரணம் என்றதால், வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

03-05-2017

Radan media - IT raid- Sarath-Radhika controversy

[1]  தீபாவளி போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது, கோடிகளை வாங்கியது, தானமாக கொடுத்தேன் என்றது, இல்லை என்று பிறகு மறுத்தது முதலிய விவகாரங்கள்!

[2]   காசிருந்தும், புகழுக்காக நடிப்பது என்பதைத் தவிர வேற்ந்த கொள்கையும் இதில் இல்லை. மோடிக்கு வேண்டுமானால் இலவசமாக நடித்து கொடுத்திருக்கலாம், ஆனால், மற்ற விளம்பரங்களுக்கு காசு வாங்கியுள்ளார்.

[3]  இந்த விளம்பரத்தைக் கூட எதிர்க்கத்தான் செய்தனர், ஆனால், காண்டம் தயாரிப்பு, விற்பனை, உபயோகம் முதலியவை நின்றுவிடவில்லை.

[4] இப்பொழுது “கள்ளக்காதல்” என்றால், சேர்ந்து வாழ்வது, “கணவன் – மனைவி” போல் வாழ்வது போன்ற விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இதற்கும் உலக நாயகன் கமல் ஹஸன் தான் உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

[5] தமிழ்.வெப்துனியா, உல்லாசமாக இருந்தாயே..பணத்தைக் கொடுவாணி ராணி நடிகை போட்ட சண்டை(வீடியோ), வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:06 IST).

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tv-actres-fight-with-manager-in-mid-night-video-117042800017_1.html

[7] https://www.youtube.com/watch?v=lL80OjUiVYs

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நள்ளிரவில் நடுரோட்டில் குடுமிபிடி சண்டைநடந்தது இதுதானாம்! வாணி ராணி நடிகை விளக்கம்!, By: Gajalakshmi, Updated: Saturday, April 29, 2017, 15:31 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/vani-rani-serial-actress-sabitta-roi-explains-that-the-deal-281267.html

[10] மாலைமலர், ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை, பதிவு: ஏப்ரல் 11, 2017 14:52; மாற்றம்: ஏப்ரல் 12, 2017 08:32

[11] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11145215/1079364/Income-Tax-raid-Radaan-Media-office.vpf