நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (3)
“கொலையும் செய்வாள்” என்ற ரீதியில் நடிகைகள் கொலை செய்வது செய்திகளாக வருவது: பெண்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன போலும். சினிமா உலகத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இவ்வாறு பலவுரிமைகள் இருக்கின்றன போலும். எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டப் பிறகு, இனி கொலைகளும் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. இனி இந்திய சினிமா துறைக்கும், ஹாலிவுட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம் போலிருக்கிறது. அங்கு எத்தகைய குற்றங்கள் நடக்கின்றனவோ, அத்தகைய குற்றங்கள் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. கேரளாவில் கற்பழிப்பு சாதாரணமாகி விட்டது. முன்னர் ஈ.கே. நாயனார் சொன்னது போல, டீ குடிப்பது போலாகி விட்டது. ஆளும் அமைச்சரே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளது, அவர்களின் கீழ்த்தரமான போக்கைக் காட்டுகிறது. பெண்களைப் பற்றிய அவர்களது மனப்பாங்கு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது, போதாகுறைக்கு “கம்யுனிஸம்” எல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நடிகக்களும் சமவுரிமைகளோடு குற்றங்களை செய்ய ஆரம்பித்தால், நடிகர்களால் தாங்க முடியாது. சமூகமும் தாங்காது. ஏனெனில், சினிமாவில் மயங்கிக் கிடக்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள் ஏழைகள்.
பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் கார் விபத்தில் இறப்பு (29-04-2017): மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 29-04-2017 அன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது[1]. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார்[2]. அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார். கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் இறப்பதும் வருத்தத்திற்குரியதாகும். துணிந்து பிழைப்பிற்கு என்று நடிக்க வந்தால், சாலை விபத்து, இறப்பு முதலியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மலையாள நடிகை கூட, ஷூட்டிங் பிறகு தான் கடட்தப் பட்டு, மானபங்கம் படுத்தப் பட்டு, வீடியோ எல்லாம் எடுத்து, விட்டு-விட்டு சென்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.
பாடகி சுசித்ரா டுவிட்டர் விவகாரம்: சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது[3]:
சுசித்ரா மன்னிப்பு கேட்டது: “இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சரிசெய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்தது. நடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம். என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள். என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன். மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது”, என்று பேட்டியளித்துள்ளார்[4].
கண்ட இடத்தில் தொட்டார்கள், சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்தேன் என்றெல்லாம் சொல்லும் ஸ்வரா: நடிகை பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[5]. மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர்[6]. அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன்[7]. ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[8]. முதலில் இந்த நடிகையின் போக்கே விசித்திரமாக இருக்கிறது. அந்த ஆண் அவ்வாறு செய்கிறான் எனும்போது, ஆரம்பத்திலேயே, டி.டி.ஆரிடம் புகார் கொடுத்திருக்கலாம், இல்லை சீட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து அவன் செய்யும் அசிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை, பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. முதல் வகுப்புப் பிரயாணி எனும் போது, அவனது பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று எல்லா விவரங்களையும் சுலபமாக எடுத்து விடலாம், அவனை பிடித்து சட்டப்படி தண்டிக்கலாம். “ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[9]”, என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
03-05-2017
[1] மாலைமலர், கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலி – நடிகர் படுகாயம், பதிவு: ஏப்ரல் 29, 2017 15:34.
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/29153407/1082718/Model-killed-actor-injured-in-car-mishap.vpf
[3] தினமணி, என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை, ஏப்ரல். 28, 2017, 2017. 03.48.
[4] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/apr/28/it-feels-like-the-end-of-the-world-and-it-has-taken-me-six-weeks-of-very-hard-worksuchitra-2692658.html
[5] தமிழ்.வெப்துனியா, நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி!, ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (16:17 IST).
[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/man-mastrubating-in-train-in-front-of-me-swara-bhaskar-117043000013_1.html
[7] தமிழ்.பிளிம்பீட், கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி, Posted by: Siva, Published: Sunday, April 30, 2017, 15:21 [IST].
[8] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html
[9] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html