Archive for the ‘டயானா மரியம் குரியன்’ Category

செக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.

ஜூன் 21, 2014

செக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்

 

நயந்தாரா பச்சை.2

நயந்தாரா பச்சை.2

நடிகைகளுக்கு எப்பொழுது காதல் வரும்?: நடிகைகளின் காதல், உறவு,  உறவுமுறிவு என்று அளப்பது வேடிக்கைத்தான், ஏனெனில், அவர்களுக்கு எப்படி அவையெல்லாம் இயற்கையில் வருமா,  தூண்டுதல் மூலம் வருமா, ஹீரோ தொடும் போது வருமா, கட்டிப் பிடிக்கும் போது தெரியுமா, புரளும் போது வளருமா, அதிலும்,  பல ஹீரோக்களுடன் நடிக்கும் போது, யாருடன் வரும்-வராது என்றெல்லாம் உணர முடியுமா என்று தெரியவில்லை.  நயன்தாரா சிம்புவுடன் நெருக்கமாக பழகினார், கட்டிப் பிடித்தார்,  முத்தம் கொடுத்தார் என்றெல்லாம் புகைப்படங்கள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், நடிகனுக்கு-நடிகைக்கு அவையெல்லாம் சகஜமாகி விட்டன. மேனாட்டு பாணியில், இந்தியத் திரைவுலக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் எல்லாமே வரம்புகளை மீறி விட்டதால்,  ஆபாசம் தாராளமாக படங்களில் காட்டப் படுகின்றன. சென்சார் போர்டும் கவலைப் படவில்லை.  சிம்புவுடனான நெருக்கமான அப்படங்களும் தமாஷாக இருந்ததால், அத்தகைய காதலும் மறைந்து விட்டது போலும்.

 

நயந்தாரா பச்சை

நயந்தாரா பச்சை

2010களில் ரம்லத் என்ற முஸ்லிம் மனைவி படுத்திய பாடு:  பிரபுதேவா ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது, அவர் தான் இந்துவாக மதம்மாறி,  லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். அண்ணாநகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபுதேவா தங்குகினார்.  பிரபுதேவா நயன்தாராவுடன் சுத்த ஆரம்பிக்கும் போதே,   இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று கூட மிரட்டினார்.  கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார்.பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், முடியவில்லை.  சினிமா குடும்பத்தில் இவர்களது செக்யூலரிஸமே அலாதியானது[1].

 

Nayan provocative postures

Nayan provocative postures

வன்மையான முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்:  சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தனிமையில் வாடிய நயன்தாராவுக்கு, வில்லுபடம் மூலம் பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன! பின்னர் அந்த அன்பு காதலாக மாறியது.  பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளாக அவரை தீவிரமாக காதலித்த நயன்தாரா,  அவர் மீது தான் கொண்ட காதலை நிரூபிக்க கிறிஸ்தவ மதத்தில் இருந்தே இந்துவுக்கு மதம் மாறினார்.  அதாவது டயானா மரியம் குரியன் என்கின்ற நயன்தாரா மதம் மாறி இந்துவானார்[2].  இதனால் பிரபுதேவா மீது நயன்தாரா கொண்ட காதல் ரொம்ப உறுதியானது என்பதை உணர்த்தியது என்று விளக்கம் கொடுத்தன.பிரபுதேவாவும்,  நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள் என்று தூபம் போட்டன.  இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன.  பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர் என்று ரொமான்ஸ் கதைகளை அவிழ்த்து விட்டன.

 

Simbu-nayan romance

Simbu-nayan romance

2011களில் விவாகரத்திற்கு உடன்பாடு – மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி![3]:  நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத்.  நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[4]. ஆனால், இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[5], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[6].  இதனால் வரும் ஜூன்மாதம் 2011 பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகி விட்டது.  இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதியபடங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை.  சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து விட்டார்.  இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால்,  திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர்,  கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல்ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபுதேவாவும் நயனும்[7] அதற்கு தயாராகி விட்டனர் என்று ஊடகங்கள் அளந்தன.

 

நயந்தாரா சிம்பு முத்தக்கடி

நயந்தாரா சிம்பு முத்தக்கடி

2012-13களில் ரோமான்ஸில் மூழ்கிய பிரபுதேவா-நயன்தாரா – பச்சைக் குத்திக் கொண்ட நயன்தாரா:  நயன்தாராவுக்காக பிரபுதேவா, தனது காதல்  மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து,  நயனை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்துமதத்துக்கு மாறினார்.  மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று‌ சுருக்கி தனது இடது கையில் பச்சை எல்லாம் குத்திக் கொண்டார்[8].  எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்[9]. ஆனபோதும்,  திருமணம் செய்து கொண்டு அவர்கள் மும்பையில் செட்டிலாகப் போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு இடையிலான காதல் முறிந்து பிரிந்து விட்டார்கள்.  சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில்,  தங்களது காதலை முறித்து கொண்டனர் இருவரும் பிரிந்து விட்டனராம். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று அளந்து கொட்டின. ஆனால், காதல் ஏன் முறிந்தது என்று சொல்லவில்லை!

 

பிரபுதேவா, ரம்லத் குழந்தைகள்

பிரபுதேவா, ரம்லத் குழந்தைகள்

காதலில் முறிந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடித்தது: நயனதாரா என்ன செய்யப் போகிறார்,  என்றெல்லாம் ஊதப் பார்த்த ஊடகங்கள் மௌனமாகின. காதல் போனாலும், நடிப்பை விடவில்லை.  போதாகுறைக்கு சீதை வேடம் கிடைத்தது. சிலர் அவர் சீதையாக நடிப்பதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அதனால் ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்ததோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறிய நயன்தாரா,  ஆரம்பம் படத்தில் இருந்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.ஆக,  தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகவிட்டார்[10].  இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்களில் அந்த பச்சை பளிச்சென தெரிந்தது.  படங்களிலும், பொது இடங்களிலும் அந்த ‘பச்சை’யை பச்சையாகப் பார்க்க முடிந்தது[11].  இது தெரிந்த விசயமாக இருந்தாலும், ஊடகங்கள் அவ்வப்போது, பெரிய விசயமாக ஊதி வந்தது[12] வேடிக்கைதான்!

 

பிரபுதேவா- நயனதாரா

பிரபுதேவா- நயனதாரா

குத்திய பச்சை வெளியே தெரிந்ததாம்: சென்ற ஜூன் 2012ல் “மா”  திரைப்பட விழா நிகழ்ச்சியில் எவ்வளவு முயற்சி செய்து மறைத்தாலும் அது தெரிந்து விட்டதாம்.  உடனே அவர் துபாய்க்குச் சென்று அதனை எடுத்துவிடப் போகிறார் என்று செய்திகள் வந்தன.  இன்னும் சில செய்திகள் பாங்காக்கிற்குச் சென்று அதனை நீக்கப் போகிறார் என்று அளந்தன[13]. இப்பொழுது ஆனால், அவற்றை மறுத்தார்[14].  இருப்பினும் மறுபடியும் சில ஊடகங்கள் ஊத ஆரம்பித்துள்ளன[15]. இது நயன்தாராவுக்கு உறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது[16].  ஆரம்பத்தில் இந்தப் பச்சையை மேக்கப் மூலம் மறைத்து வந்தவர்,  இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்து விட்டாராம்.  இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்கும் நயன்தாரா லேசர் சிகிச்சை மூலம் மாஜி காதலன் பெயரை அழிக்க இருக்கிறாராம்.  இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் ரன்பீர் கபூரை காதலித்த போது பச்சை குத்திய அவரது பெயரை பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கியதைப் போன்று இப்போது தானும் பிரபுதேவாவின் பெயரை நீக்க முடிவெடுத்துள்ளாராம். அனேகமாக சூர்யா படம் தொடங்கும் போது,  நயன்தாரா கையிலிருந்து அந்த பிரபு என்கிற பச்சை காணாமல் போயிருக்குமாம்.  ஆங்கில ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது[17]

 

பச்சைப் பிரச்சினை

பச்சைப் பிரச்சினை

புதிய சினிமா-இல்லற தர்ம இலக்கணம்: உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்ததால்,  உதட்டைக் கடித்ததால் சிம்பு சேர்ந்து விட்டாரா,  பச்சைக் குத்தியதால் பிரபுதேவா சேர்ந்து விட்டாரா என்று பார்த்தால் எதுவுமே ஒட்டவில்லை என்று தெரிகிறது. கோடிகளை சம்பாதிக்கும் பிரபுதேவா,  ஒருவேளை திருமணம் தனது வியாபாரத்தை பாதிக்கும் என்று நினைத்திருக்கலாம்.  அல்லது மும்பை அனுபவங்களில் அத்தகைய சரசங்கள் சாதாரணமாகி விட்டிருக்கலாம். மனிதனுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டே இருந்தால்,  தேவையில்லாமல், மாட்டிக் கொள்ள விரும்பமாட்டான். அதிலும் சினிமா உலகில் இருப்பவர்களுக்கு ஆண்-பெண் பந்தம், பாசம் முதலியவையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.  கமல்ஹஸனின் வாழ்க்கையினை மற்ற நடிகர்களும் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பார்கள்.  தாலிக் கட்டிய மனைவி ஒன்றும், கட்டாமல் இரண்டு பெண்களைப் பெற்றுக் கொண்ட மனைவி ஒன்று, கூடி வந்த மனைவி,  சேர்ந்து வாழும் மனைவி இல்லாத துணைவி என்று புதிய சினிமா-இல்லற தர்ம இலக்கணத்தையே உருவாக்கி விட்டார். ஆக ஆடவல்ல தேவா, உலகநாயகனின் பாதையைப் பின்பற்ற தீர்மானித்திருக்கலாம்.

 

© வேதபிரகாஷ்

17-06-2014

[1]http://secularsim.wordpress.com/2010/05/28/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

[2] http://daily.bhaskar.com/article/MAH-MUM-mumbai-entertainment-news-know-all-about-prabhu-devas-love-hot-south-indian-actr-4450713-PHO.html

[3] https://evilsofcinema.wordpress.com/2010/12/30/30-crores-divorce-indian-achievement/

[4] http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=4289&id1=3

[5] http://thatstamil.oneindia.in/movies/specials/2010/12/28-ramlath-accepts-mutual-divorce-prabhu-deva.html

[6] http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=25382&id1=9

[7] http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/12/29-prabhu-deva-nayan-marriage-july.html

[8]http://www.dinamani.com/cinema/2014/06/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0/article2281861.ece

[9] http://tamil.oneindia.in/movies/heroines/nayanthara-decides-remove-prabhu-tattoo-203420.html

[10] https://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8D-123100710.html

[11]ஒன்-இந்தியா-தமிள்,நயன்தாராகையில்பச்சைக்குத்தியபிரபுதேவாபெயரைஅழிக்கஆபரேஷன், Posted by: Shankar, Published: Friday, June 13, 2014, 17:16 [IST].

[12] http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news-interviews/Nayantara-hiding-her-tattoo/articleshow/14272040.cms

[13] On an earlier occasion, there were rumours that she made a visit to Bangkok to erase the tattoo, but Nayan oreportedly said she still had it on her hand.

 http://www.kollytalk.com/gossips/nayanthara-detained-at-airport-with-tattoo-problems-59034.html

[14] However, despite all her efforts a glimpse of the tattoo was caught and therefore it is proved that Nayan is still happy to have that tattoo. Recently there were reports that she went to Dubai to remove that tattoo, but Nayan firmly condemned those.

[15] http://www.deccanchronicle.com/140613/entertainment-mollywood/article/nayan-erase-%E2%80%98inked%E2%80%99-memories

[16]தினமணி,பிரபுதேவாபெயரைஅழிக்கலேசர்சிகிச்சை: நயன்தாராமுடிவு, By Sasikumar Balakrishnan,First Published : 15 June 2014 11:42 AM IST

[17] http://ibnlive.in.com/news/did-nayantara-get-prabhu-deva-tattoo-removed/257829-71-174.html