Archive for the ‘திருமணம்’ Category

அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)

பிப்ரவரி 12, 2018

அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்கைதுகளும் (1)

Vijay- Amala Paul divorced- religion

அமலா பாலின் காதல்விவாகம்டைவர்ஸ்ஸ் விவகாரங்கள்: பொதுவாக சினிமா செய்திகளை யரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், ஏதோ ஒரு விசயத்தில், மற்றவர்களை கவர செய்தியாளர்கள் சில விசயத்தைப் பெரிது படுத்துகிறார்கள். இல்லை நடிகர்-நடிகைகளே அதை பெரிதாக்குகிறார்கள். இதனால், பொது மக்களும் சில நேரங்களை அதை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது போலத்தான், இப்பொழுதைய அமலா பால் சமாச்சாரம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் இயக்குனர் ஏ.எல். விஜயை12-06-2010 அன்று காதல் திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிப்ரவ்ரி 2017ல் விவாக ரத்து பெற்று, புரட்சி செய்து தனியாக வசித்து வருகிறார்[1]. மதம், மதமாற்றம்  முதலிய விவகாரங்கள் அவற்றில் வெளிப்பட்டன[2]. தமிழில் “திருட்டுப் பயலே” போன்ற படங்களில் நடித்துள்ளார்[3]. அமலா பால். சினிமா உலகில் காதல்-விவாகம்-டைவர்ஸ்ஸ், இதெல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், கமல் ஹஸன் போன்ற சிறந்த நடிகர்களே, பலதார முறை, சேர்ந்து வாழும் முறை என்பதையெல்லாம் கடை பிடித்து, புரட்சி செய்துள்ளனர். அதேபோல மலையாள திரையுலகத்திலும், இதெல்லாம் சர்வ சகஜமாக உள்ளது. போதா குறைக்கு திலீப் போன்ற பிரபல நடிகர்கள், கோடிகளில் காசு கொடுத்து ஆளை வைத்து, நடிகளை கற்பழித்து தொந்தரவு செய்யும் அளவிலும் இருக்கிறார்கள்.

Amala Paul twitter thanks to Vishal-Z news

மலேசிய நிகழ்ச்சிக்குடான்ஸ் தமிழச்சிஒத்திகையில் ஈடுபட்டிருந்த அமலா பால்: நடிகைகள் துபாய், கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கு, அங்குள்ள பணக்காரர்கள் ஸ்பான்ஸர் செய்து சென்று வருவது தெரிந்த விசயமே. அங்கு குடித்து, கும்மாட்டம் போடுவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு, அத்தகைய பணக்காரர்களை மகிழ்விப்பதும் தெரிந்த விசயமே. இதெல்லாம், அவர்களுக்கு தனியாக பணம், திரைப்பட சான்ஸ் போன்ற விவகாரங்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. அவ்விதத்தில், மலேசியாவில் நடக்கவிருக்கும் “டான்ஸ் தமிழச்சி” என்ற கலைநிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் நடன ஒத்திகையில் நடிகை அமலா பால், தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நடன இயக்குநர் ஶ்ரீதர் என்ற கோரியோகிராபர் ஸ்டூடியோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அழகேசன் / அழகேஸ்வரன்[4] என்ற தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம்[5].  அதோடு மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொந்தரவு செய்தாராம்[6].  ஏதோ பாலியல் தொழில் நடத்துபவர் போல அப்பேச்சு இருந்ததாம்[7], என்றெல்லாம் மற்ற ஊடகங்கள் விவரிக்கும் போது, தினமணி[8], “அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேஸ்வரன் என்பவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா செல்லும் போது மற்றுமொரு பார்ட்யிலும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அங்குள்ள தனது நண்பருடன் இணைந்து டின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறியதோடுசெக்ஸ் டிரேட்செய்வதைப் போல பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது, உடனே அங்கு ஓடி வந்த அமலா பாலின் உதவியாளர் அழகேஸ்வரனை அந்த இடத்தில் இருந்து அகற்ற முயன்றபோது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.”.

Amala Paul twitter thanks to Vishal

ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன?”: நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன? அதனால் தான் இந்த பிரச்னை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரிய தவறு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்[9]. தான் தனியாக இருந்தபோது, தன்னிடம் பேசினார், அந்த நிகழ்சியைத் தெரிந்தவர் போல பேசினார் என்றெல்லாம் சொன்னார். முதலில் அந்த நபரின் பெயர் எல்லாம் குறிப்பிடப் படவில்லை[10]. இதுபற்றி அமலா பால் தி.நகர் போலீசில் 31-01-2018 [புதன் கிழமை] புகார் கொடுத்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

amala-paul-hot-photo-collection-5

 

அழகேசன் யார், இப்ராஹிம் யார்?: அந்த நபர் கிழக்குக் கடற்கரை சாலையில், கானத்தூரில் வசித்து வரும் அழகேசன் என்று தெரிய வந்தது. அங்கிருக்கும் ஒரு ரெடிமேட் கார்மென்ட் தொழிற்சாலையில் மானேஜராக வேலைப் பார்த்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. முதலில் “தொழிலதிபர்” என்றது நோக்கத் தக்கது. மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற தொழிலதிபர் ஒரு தனிப்பட்ட பார்ட்டிக்கு தேதி கேட்டதாக தெரிந்தது[11]. அமலா பாலின் மேனேஜர் தான் தன்னை அங்கு வருமாறு கூறியதாக கதிரேசன் கூறினார், ஆனால், அவர் அதை மறுத்தார். கதிரேசன் சொன்னதை, சரி பார்க்க போலீஸார் முயன்ற போது, தனது போன் உடைந்து விட்டதாக அமலா பால் கூறினார்[12]. பாதுகாப்பு வீரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆக வழக்கம் போல செய்திகள் இவ்வாறு வித்தியாசமாக வெளி வந்தன. போலீசார் அழகேசனை ஒரு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்[13]. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் என்ன பிரச்னையில் தகராறு ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை[14]. எப்படி இருந்தாலும், நடிகை அங்கிருப்பதை அறிந்து தான் அவர் வந்துள்ளார். கதிரேசனப் பற்றிய விவரங்களைக் கொடுத்த போலீஸார், ஊடகங்கள், அந்த இப்ராஹிம் பற்றி மூச்சுவிடாமல் இருக்கின்றனர்.

amala-paul-hot-photo-collection-10

பத்து நாள் கழித்து டுவிட்டரில் பதிவு செய்த அமலா பால்: பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக போலீசில் புகார் கொடுத்த அமலா பாலை பாராட்டி இருந்தார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்[15]. அதற்கு அமலா பால் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்[16]. இதுபற்றி ட்விட்டரில், “என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார்[17]. அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது,” என்று அமலா பதிவிட்டுள்ளார்[18]. பத்து நாட்களுக்குப் பிறகு, டுவிட்டரில் அத்தகைய பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது[19].

© வேதபிரகாஷ்

12-02-2018

amala-paul-hot-photo-collection-11

[1] புதிய தலைமுறை, அமலா பால் பாலியல் புகார்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்,   Web Team Published : 31 Jan, 2018 08:22 pm

[2] https://evilsofcinema.wordpress.com/2014/04/30/amala-paul-viya-love-marriage-conversion-issues/

[3] http://www.puthiyathalaimurai.com/news/cinema/39962-actress-amala-paul-filed-complaint-against-businessmen-azhahesan.html

[4]  தினமணி அழகேஸ்வரன் என்று குறிப்பிட்டுள்ளது.

[5] ஜீநியூஸ், கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்!, Updated: Feb 11, 2018, 02:24 PM IST.

[6] http://zeenews.india.com/tamil/social/he-was-ready-to-trade-me-off-like-a-meatloaf-amala-paul-twitter-303194

[7] “When I had gone to do dance rehearsal, a man spoke to me unpleasantly, like he was conducting a trade. I was very shocked. I was very humiliated. That’s why I immediately came to complain to the police station. I’m going to Malaysia for an event. I went to dance practice for that event. While I was practising, he came inside. He spoke as though he was part of the event. He spoke to me like he was someone known at the event. He spoke to me personally when I was alone inside. That’s why I have complained. He has spoken like he was conducting a sexual trade, for a favour,” said Amala Paul.

http://indianexpress.com/article/entertainment/tamil/amala-paul-alleges-sexual-harassment-case-5047179/

[8] தினமணி, நடிகை அமலா பாலிற்கு பாலியல் தொல்லை! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ்!!, By DIN  |   Published on : 01st February 2018 04:16 PM

[9] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/01/amala-paul-got-sexually-abused-police-arrested-the-culprit-in-one-hour-2855396.html

[10] Indian Express, Amala Paul alleges sexual harassment by stranger, files police complaint, Written by Ashameera Aiyappan | Chennai | Updated: February 1, 2018 11:33 am

[11] News Today, Twist to Amala Paul’s sexual harassment case, February 1, 2018.

https://www.newstodaynet.com/index.php/2018/02/01/twist-to-amala-pauls-sexual-harassment-case/

[12] Police said that Azhagesan, a resident of Kanathur on East Coast Road, was working as a manager in a garment factory. He had told the police during interrogation that he was sent to the actor by Ibrahim, a Malaysia-based businessman, to confirm her appointment for a private party.An investigation officer, quoting Azhagesan, said Amala Paul’s manager asked him to meet her at the studio. However, the manager has denied having a word with him. “We are trying to confirm Azhagesan’s claims with the help of his mobile records. But, it is getting delayed, as his mobile phone broke into pieces in the tussle with Amala Paul’s guards”, police said.

[13] விகடன், நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது, Posted Date : 19:43 (31/01/2018); Last updated : 20:06 (31/01/2018)

[14] https://www.vikatan.com/news/tamilnadu/115065-chennai-based-bussinessman-arrested-based-on-the-complaint-lodged-by-actress-amala-paul.html

[15] பிளிமி.பீட், என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்: விஷாலிடம் கொந்தளித்த அமலா பால், Posted By: Siva, Published: Sunday, February 11, 2018, 11:18 [IST]

[16] https://tamil.filmibeat.com/heroines/he-was-ready-trade-me-off-like-meatloaf-says-amala-paul-051757.html

[17] “Thank you Vishal for standing by me and assuring me that I must not let it go, and I didn’t, now I believe it’s every woman’s duty, to not let it go and stand for themselves. He was ready to trade me off like a meatloaf, his guts make me sick, his existence makes me sick #MeToo,” Amala wrote on her Twitter account.

http://indianexpress.com/article/entertainment/tamil/amala-paul-says-metoo-he-was-ready-to-trade-me-off-like-a-meatloaf-5059742/

[18] சினி.ரிபோர்டர்ஸ், கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால், பிப்ரவரி 11, 2018 03:15 மணி by s அமுதா

 

[19] Indian Express, Amala Paul says #MeToo: He was ready to trade me off like a meatloaf, By: Express Web Desk | Bengaluru | Published: February 11, 2018 5:37 pm

நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்?

ஜூலை 3, 2017

நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்?

women-travelling-in-a-car-be-careful

திலீப்காவ்யா பிரிவுக்கு காரணமாகத்தான் பாவனா கடத்தப் பட்டாரா?: நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, 2017, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. படப்பிடிப்புகளில் திலீப், காவ்யா மாதவன் நெருக்கமாக பழகி வருவதை மஞ்சு வாரியாரிடம் சொல்லி அவர்களின் பிரிவுக்கு பாவனா காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க நடிகர் திலீபின் ஏற்பாட்டில் பாவனா கடத்தப் பட்டார் என்று குற்றம் சாட்டப் படுகிறது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்து வருகிறார்.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor- is he lying

பல்சார் சுனி, திலீப்பிற்கு மிரட்டல் எழுதியது: அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப்பிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த ஜூலை. 1ம் தேதி 2017 போலீசார் திடீர் சோதனை நடத்தினர்[1].  கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலின் நண்பன் ஜின்சன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் இந்த அதிரடி சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது[2].

Bhavana case - role of Kavya Madhavan

சிம்கார்டு காவ்யா மாதவன் கம்பெனியில் இருந்ததா? 01-07-2017 அன்று சோதனை:  பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளிகளும் அவரை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் செல்போன் மெமரி கார்டை அளித்ததாக கூறியுள்ளார்[3]. கொச்சி அருகே காகநாட்டில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் கடந்த மே 30ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள் பல மணிநேரம் ஆய்வு செய்யப்பட்டன[4]. பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை தொடர்ந்து, அவரது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor- complained to police

திலீப், நாதிர்ஷா கொடுத்த புகார்கள், போலீஸ் 30-06-2017 அன்று விசாரணை: இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்[5]. இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் 30-06-2017 அன்று மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்[6]. இவர்களிடம்  நடத்தப்பட்ட விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். போலீசார் அவர்களிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor

சிம் கார்டுகளும், செல்பீக்களும்: பிப்ரவரி 2017ல் ஓதனையிட்டபோதே, இரண்டு-மூன்று சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார், பல்சார் சுனில் நண்பன் மனு வீட்டில் சோதனையிட்டபோது, ஒரு சிம் கார்டை கண்டெடுத்தனர்[7]. ஆனால், அதுதான், சுனில் உபயோகித்ததா என்று தெரியவில்லை[8]. பிரியேஷ் வீட்டில் சோதனையிட்டபோதும், இரண்டு மெமரி கார்ட், பென் டிரைவ் முதலியவை கைப்பற்றப்பட்டன என்று தெரிந்தது[9]. சுனி தான் அந்த சிம் கார்டை, டிரைனேஜில் போட்டு விட்டதாக சொன்னான்[10]. பிறகு, எத்தனை சிம்கார்டுகள் இருந்தன, எவற்றில் அப்படங்கள்-வீடியோ இருந்தன என்று தெரியவில்லை. திலீப் தொடர்ந்து, தனக்கு பல்சார் சுனி யாரென்றே தெரியாது என்று சொல்லிவந்த நிலையில், திலீப் நடித்த ஒரு படத்தின் லொகேஷனில் இருந்தது போன்ற செல்ஃபி புகைப்படங்கள் தெரியவந்துள்ளன[11]. இதனால், பாவனா வழக்கில் திலீப்பின் பங்கு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[12].

© வேதபிரகாஷ்

03-07-2017.

uber-car-driver-rape-delhi-mathura

[1] வெப்துனியா, நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? – போலீசார் விசாரணை, Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (11:41 IST)

[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/police-enquiry-with-kavya-madhavan-in-bhavana-case-117070300014_1.html

[3] தி.இந்து.தமிழ், பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை, Published: July 3, 2017 07:40 ISTUpdated: July 3, 2017 07:46 IST.

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece

[4]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece

[5] ஈநாடு.இந்தியா, பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் போலீசார் 13 மணி நேரம் தீவிர விசாரணை, Published 01-Jul-2017 11:00 IST

http://tamil.eenaduindia.com/Entertainment/OtherEntertainment/2017/07/01110048/Bhavana-Kidnap-case-Police-Interrogated-Actor-Dileep.vpf

[6] http://cinema.dinamalar.com/tamil-news/60673/tamil-news/Why-raid-at-Kavya-Madhavans-office.htm

[7] Manorama.online, Actress attack: police find memory card from Pulsar Suni’s friend’s house, Tuesday 28 February 2017 10:39 PM IST.

[8] http://english.manoramaonline.com/news/kerala/actress-attack-pulsar-suni-phone-memory-card-sim-card.html

[9] Manorama.online, Crucial evidence? Cops find memory cards from house Pulsar Suni visited on night of crime, Saturday 25 February 2017 06:02 PM IST

http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html

[10] http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html

[11] India Samvad, Bhavana abduction case gets ugly as pics of actor Dileep with accused goes viral, 3 July 2017, 03:06 PM

[12] The alleged involvement of Malayalam superstar Dileep in the infamous abduction and molestation case of actress Bhavana is getting support from the recently surfaced pictures of him with accused Pulsar Suni. The photos surfaced online and quickly went viral on social media. These pictures were then aired on most of the TV channels adding fuel to the speculations that Dileep might be a part of the conspiracy of abduction and molestation of the actress. In the viral picture, Pulsar Suni is seen in a selfie at the shooting locations of one of the films starring Dileep in the lead role. On the other hand, Dileep has maintained his stance that he does not even know anyone by the name Pulsar Suni.

http://www.indiasamvad.co.in/entertainment/photos-of-dileep-with-pulsar-suni-goes-viral-22905

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (3)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய  நடிகைகள்சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (3)

Nothing wromg for close-acting Priyanka - 2-5-2017

கொலையும் செய்வாள்என்ற ரீதியில் நடிகைகள் கொலை செய்வது செய்திகளாக வருவது: பெண்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன போலும். சினிமா உலகத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இவ்வாறு பலவுரிமைகள் இருக்கின்றன போலும். எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டப் பிறகு, இனி கொலைகளும் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. இனி இந்திய சினிமா துறைக்கும், ஹாலிவுட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம் போலிருக்கிறது. அங்கு எத்தகைய குற்றங்கள் நடக்கின்றனவோ, அத்தகைய குற்றங்கள் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. கேரளாவில் கற்பழிப்பு சாதாரணமாகி விட்டது. முன்னர் ஈ.கே. நாயனார் சொன்னது போல, டீ குடிப்பது போலாகி விட்டது. ஆளும் அமைச்சரே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளது, அவர்களின் கீழ்த்தரமான போக்கைக் காட்டுகிறது. பெண்களைப் பற்றிய அவர்களது மனப்பாங்கு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது, போதாகுறைக்கு “கம்யுனிஸம்” எல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நடிகக்களும் சமவுரிமைகளோடு குற்றங்களை செய்ய ஆரம்பித்தால், நடிகர்களால் தாங்க முடியாது. சமூகமும் தாங்காது. ஏனெனில், சினிமாவில் மயங்கிக் கிடக்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள் ஏழைகள்.

Sonaxi died in accident - 29-04-2017

பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் கார் விபத்தில் இறப்பு (29-04-2017): மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 29-04-2017 அன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது[1]. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார்[2]. அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார். கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் இறப்பதும் வருத்தத்திற்குரியதாகும். துணிந்து பிழைப்பிற்கு என்று நடிக்க வந்தால், சாலை விபத்து, இறப்பு முதலியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மலையாள நடிகை கூட, ஷூட்டிங் பிறகு தான் கடட்தப் பட்டு, மானபங்கம் படுத்தப் பட்டு, வீடியோ எல்லாம் எடுத்து, விட்டு-விட்டு சென்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

Sonika Chuhan died in a car accident

பாடகி சுசித்ரா டுவிட்டர் விவகாரம்: சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது.  இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது[3]:

suchis-twitter-anirudh-and-dd

சுசித்ரா மன்னிப்பு கேட்டது: “இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சரிசெய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன்இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்ததுநடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம்என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள்என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன்மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது”, என்று பேட்டியளித்துள்ளார்[4].

What swara says about her touched experience

கண்ட இடத்தில் தொட்டார்கள், சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்தேன் என்றெல்லாம் சொல்லும் ஸ்வரா: நடிகை பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[5]. மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர்[6]. அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன்[7]. ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[8]. முதலில் இந்த நடிகையின் போக்கே விசித்திரமாக இருக்கிறது. அந்த ஆண் அவ்வாறு செய்கிறான் எனும்போது, ஆரம்பத்திலேயே, டி.டி.ஆரிடம் புகார் கொடுத்திருக்கலாம், இல்லை சீட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து அவன் செய்யும் அசிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை, பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. முதல் வகுப்புப் பிரயாணி எனும் போது, அவனது பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று எல்லா விவரங்களையும் சுலபமாக எடுத்து விடலாம், அவனை பிடித்து சட்டப்படி தண்டிக்கலாம். “ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[9]”, என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-05-2017

What swara says about her touched experience-complained

[1] மாலைமலர், கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலிநடிகர் படுகாயம், பதிவு: ஏப்ரல் 29, 2017 15:34.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/29153407/1082718/Model-killed-actor-injured-in-car-mishap.vpf

[3] தினமணி, என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை, ஏப்ரல். 28, 2017, 2017. 03.48.

[4] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/apr/28/it-feels-like-the-end-of-the-world-and-it-has-taken-me-six-weeks-of-very-hard-worksuchitra-2692658.html

[5] தமிழ்.வெப்துனியா, நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி!, ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (16:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/man-mastrubating-in-train-in-front-of-me-swara-bhaskar-117043000013_1.html

[7] தமிழ்.பிளிம்பீட், கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி, Posted by: Siva, Published: Sunday, April 30, 2017, 15:21 [IST].

[8] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html

[9] http://tamil.filmibeat.com/heroines/read-how-swara-bhaskar-thrashed-pervert-a-local-train-046042.html

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)!

ஏப்ரல் 8, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (3)!

MGR - wife Sadanandavati - ammukutti

சினிமாகாரர்கள்நடிகநடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].

MGR - three wives Thangamani, Sadanandavati, Janaki

திராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும்நடிகர்கள்ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.

EVR and wives

பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா?: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.

Karunanidhi and his wives

திராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.

self-respect marrage in front of EVR, Anna, Karu etc

ராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா?: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.

  1. பொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.
  2. சட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.
  3. பெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.
  4. அவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].
  5. ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.
  6. தங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.
  7. விவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.
  8. தாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.
  9. இவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
  10. ஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-04-2017

Radhika-Pothen-Sarat etc

[1]  உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.

[2]  எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.

[3]  சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.

[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.

[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.

[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.

[7]  நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]

[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (2)!

ஏப்ரல் 7, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (2)!

Karthikeya- Nandini marriage failure

நடிகைமனைவி கணவனைப் பற்றி கூறுவது: தற்கொலை செய்து கொண்ட கணவன் பற்றி, மனைவி சொல்வது நோக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, “எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். என்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார்[1]. வேலைவாங்கி தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு வெண்ணிலா என்ற வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்[2]. அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.  இறந்த பின்னர், இன்னும் நேசிக்கிறேன் என்பதே புதிராக இருக்கிறது. தீர்மானமாக பிரிந்து வந்த பிறகு, நேசிப்பது என்றால் என்ன என்று புரியவில்லை. இதிலும் ஒன்றும் புதுமையாக இல்லை, கணவன் இறந்து விட்டான், இனி நிம்மதிதான் என்ற போக்கு வெளிப்படுகிறது. பொதுவாக, இறந்தவர் மீது குற்றம் சொல்லமாட்டார்கள், நந்தினி சொல்லியாகி விட்டது, அதாவது, ஒரு தீர்மானத்தோடு இருப்பது தெரிகிறது.

 Karthikeyan - suicide note

தற்கொலை செய்த கொண்ட பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டு: அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி, “எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்,” என அவர் கூறினார். இந்நிலையில் அதே நாளில் வெளிவந்த செய்தியில், நடிகை ரம்பா விவாகரத்து விவகாரத்தில், கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டு, வெற்றி பெற்றது தெரிகிறது.

Karthikeyans mothers grudge against Nandini

நடிகை ரம்பா விசயத்தில் சமரசம்[3]: தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில்  இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது[4].

Ramba - divorce resulted in union

திரையுலக தம்பத்தியத்தின் வெற்றி-தோல்விகள் – சில உதாரணங்கள்: ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதை கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவகாரத்துடன் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மாறுபாடாக இருக்கிறது. இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால், அவ்வாறு நோக்கப்படுகிறது. தமிழக சினியுலக தம்பதியரை ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில தம்பதியரே வெற்றிகரமாக தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து, உதாரணத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். அதில், சிவகுமார்-லக்ஷ்மி, ஜெயசங்கர்- போன்ற தம்பதியரைக் குறிப்பிடலாம். இவ்விவகாரங்களில் கமல் ஹஸன் தான் நிச்சயமாக மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது,. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, இரண்டு பெண்களின் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், இன்றைக்கு வரை “கணவன்–மனைவி தாம்பத்திய உறவு தோல்வி”யின் சின்னமாகவே திகழ்கிறார். அவ்வாறு மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகும், “சேர்ந்து வாழும்” இலக்கணத்தை காட்டுகிறேன் என்பது போல, கௌதமியுடன் வாழ்ந்தாலும், அதிலும் தோல்வியை அடைந்து, சாதனையைப் படைத்துள்ளார். இன்று தேவையில்லாமல், பல பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.

Sivakumar wife Laksmi

கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் காதல்-மோதல் ஏன்?: கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவாகரத்திற்குச் செல்லவில்லை, நீதிமன்றத்திற்கு போகவில்லை. இதிலிருந்து இருதரப்பிலிம் பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட “ஒவ்வாமை” பூதாகாரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையே பிரிந்து வாழும் வாழ்க்கை நிலையானது. முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள் இருவருக்கும் தெரிந்தும் இருந்தது. இருப்பினும், நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கேள்விகளை எழுப்புகின்றன. “என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்”, என்பது உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை. அது உண்மையாயின், பெண்மையின் சபலம் புலப்படுகிறது. அது “சரவணன்-மீனாக்ஷி” தொடரில் வெளிப்பட்டதாகவும் உள்ளது.

Karthikeyan - suicide note-implicating

பிரிந்து வாழும் பெண்னின் நிலை: எக்காலத்திலும், திருமணம் ஆகி, கணவனைப் பிரிந்து வந்து, வாழும் பெண்ணின் வாழ்க்கை பலவிதங்களில் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஆனால், சமூகத்தில், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்காரர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால், மத்திய வர்க்க மற்றும் ஏழைக் குடும்பங்களில் அது பெரிய பிரச்சினையாகிறது. “பந்தம்-முறிவு”, பிரிந்து வாழ்வதினால், நிதர்சனமாகவோ, சட்டப்படியோ முறிந்ததாகாது.

  • சாதாரண, சமூகத்தின் பேச்சிற்கு பயந்து,
  • குடும்ப கௌரவம் காக்கப்பட வேண்டும்,
  • இல்லை பெற்றோர்-சகோதரர்-உறவினர்கள்,
  • “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நிலையில் –

உள்ள பெண்கள் தாம் பிரிந்து சென்று மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். தனது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கூட புகார் கொடுக்காமல் “பெருந்தன்மையோடு” இருந்து விடுகிறாள். குழந்தை, இருந்தால், கூட எந்த உதவியையும் எதுர்பார்க்காமல், அதனையும் வளர்த்து பெரியவனாக்குகிறாள். ஆனால், “தந்தை” என்பவன், தனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பது பல உதாரணங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் “ஜீவனாம்சம்” கேட்டு வழக்குகள் போடுவதும், அளிக்கப் பட்ட “ஜீவனாம்சம்” போதாது என்று, மேலும் வழக்கு போடும் பெண்கள் இருக்கிறார்கள். அந்நிலையில் “விவாக ரத்து” தேவையாகிறது.

Karthikeya- Nandini marriage failure-suicide

கணவன் தற்கொலை – தீர்வு என்ன?: “விவாக ரத்து” ஆனாலும், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்து வாழ்கிறார்கள். நவநாகரிகமான பெண்கள் சிலர் வேண்டுமானால், மறுமணம் செய்து கொள்கின்றனர். சினிமா உலகத்தில் யாரும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை. ஆனால், இங்கு, ஒரு ஆண், “பிரிவு-தற்கொலை” விசயத்தில் உதாரணமாகி விட்டான். ஒன்று-இரண்டு என்று திருமண உறவுகல் தோல்வி, பணப்பிரச்சினை, இரண்டாவது மனைவி சம்பாதிக்கிறாள், ஆனால், தன்னால் சம்பாதிக்க முடியவில்லை, போதா குறைக்கு இரவில் நேரங்கழித்து வருவதால் ஏற்பட்ட சந்தேகங்கள் முதலியவை அந்த ஆணை கோழையாக்கி விட்டது போலும்.  முன்பே குறிப்பிட்டது போல, திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது.  ஆனால், ஆண் தற்கொலை செய்து கொண்டால், எந்த சட்டமும் இல்லை. இவ்வாறு அவலங்கள் தொடருகின்றன. எனவே, சாதாரண மக்கள், இந்த சினிமா-மாயை, திராவிட மாயை, பகுத்தறிவு மாயை முதலியவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.

© வேதபிரகாஷ்

06-04-2017

Jaishakar actor

[1] வெப்துனியா, நந்தினியை சும்மா விட மாட்டேந் –  மாமியார் ஆவேசம், புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nandhini-s-mother-in-law-revengy-for-her-son-death-117040500015_1.html

[3] தினத்தந்தி, நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு, ஏப்ரல் 05, 06:51 PM

[4] http://www.dailythanthi.com/News/State/2017/04/05185117/Rumba-husband-With-Indrakumar-Consent-to-live-together.vpf

 

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (1)!

ஏப்ரல் 6, 2017

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (1)!

Kartikeyan, Nandini marriage

சினிமா உலகத்தில் கணவன் – மனைவி உறவுகள்: ஆரம்ப காலத்திலிருந்தே (1930களிலிருந்தே) நடிகையாக நடிக்க வந்து விட்டால், எப்படி பல ஆண்களுடன் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது, “நடிப்பு” என்ற முறையிலும், “ஷூட்டிங்”, “டேக்கிங்” போன்ற திரும்ப-திரும்ப செய்யும் சேட்டைகளிலும், சகநடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், மேக்கப்-மேன் என்று எல்லோரும் தொடுவது, தொட்டுப் பேசுவது, கட்டிக் கொள்வது என்பதெல்லாம் காமிராவுக்கு முன்பு-பின்பு என்ற விவகாரங்கள் இருந்து வருகின்றன. அப்பொழுது மிகக்குறைவு எனும்போது, இப்பொழுது ஒழுங்காக இருப்பவர்கள் “மிகக்குறைவு” என்றாகி விட்டது. நடிகையைத் திருமணம் செய்து கொண்ட ஆணும், நடிகனைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணும் தனது மனைவி-கணவன் ஒழுக்கமாக இருந்திருக்கிறாளா-இருந்திருக்கிறானா என்று சொல்ல முடியாது. பெண்ணிற்கு “கற்பு” என்று தராதரம் பார்க்கும் போது, ஆணுக்கு அது பார்ப்பதில்லை. பொதுவாக, நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு போன்ற விவகாரங்களில் இதுவரை நடிகைகள் தாம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஒருவேளை முதன்முதலாக, ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டது இதுவே போலும்!

Kartikeyan, Nandini- not faithful she complains

திருமணம் ஆகி ஒரே வருடத்திற்குள் கருத்து வேறுபாடு தோன்றியது: தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த தொடரில் இவர் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் ‘மைனா’ நந்தினி என்று அழைக்கப்பட்டார்[1]. தற்போது மற்றொரு தொலைக் காட்சியில் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ‘வம்சம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட தமிழ் திரைப் படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம்.5, 2016 மதுரையில் கார்த்திக் என்ற கார்த்திகேயனை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்[2]. விருகம்பாக்கம் விஎஸ்எஸ் நகரை சேர்ந்த கார்த்திகேயன், தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். கார்த்திகேயன், நந்தினி இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், என்கிறது தினத்தந்தி[3]. தற்போது, உடற்பயிற்சிக் கூடத்தை வேறு ஒருவரிடம் அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Nandini- not faithful she complains

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கணவன்: வடபழனி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கார்த்திகேயன் அடிக்கடி தங்குவது வழக்கம். 03-04-2017 அன்று இரவும் அவர் அங்கு தங்கியுள்ளார். 04-03-2017 அன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து, தங்கும் விடுதி நிர்வாகிகள் விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை திறக்க முயன்றபோது, அது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கார்த்திகேயன் சடலமாக கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Kartik suicide - Nandini accuses him

நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளது பிரச்சினையாகியுள்ளது: இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் போலீஸார் கூறும்போது, “நந்தினிக்கும் அவரது கணவருக்கும் திருமணமான 2-வது மாதத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். இதை கார்த்திகேயன் விரும்பாததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மூன்று பக்க கடிதத்தை கார்த்திகேயன் எழுதி வைத்துள்ளார். அதை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்றனர். ஆக, புதியதாக எந்த காரணமும் இல்லை. கணவன், நடிகை-மனைவியை நடிக்க ஒப்புக் கொள்கிறான், ஆனால், இரவு மட்டும் நேரத்தோடு வர விரும்புகிறான். தொழில் நிமித்தம் அவளால் முடியவில்லை. இரண்டு மனைவிகளிடமும் தோல்வியுற்ற ஆண், தற்கொலைக்கு சென்று விடுகிறான்.

Kartik suicide - Nandini complains about jim

கார்த்திகேயனின் இறுதி விருப்பம்[4]: இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்[6]. இதிலிருந்து, கார்த்திகேயனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இதனை “கள்ளத் தொடர்பு”, என்று சென்னை.ஆன்.லைன் வர்ணிக்கிறது[7]. ஆனால், அவள் தற்கொலை செய்து கொண்டாள், கைது செய்யப்பட்டார் என்றெல்லாம் குறிப்பிட்டாலும், எப்படி வெளியே வந்தார், மறுபடியும் நதினியைத் திருமணம் செய்து கொண்டார் என்ற விவரங்கள் குறிப்பிடப் படவில்லை[8].

Kartik suicide note -pathetic

திருமணம் ஆகி, ஒரே வருடத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டால், மனைவி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?: திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது. மனைவி தரப்பில் புகார் கொடுத்தாலே, கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினரை கைது செய்யும் அளவுக்கு சட்டநிலை உள்ளது. இங்கு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். மனைவி, நேர்மாறாக, கணவன் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்ததாக மனைவி கூறுகிறாள்! இதை எப்படி சட்டவல்லுனர்கள் அணுகுவார்கள் அல்லது பெண்ணியப் போராளிகளபேடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஆண் சித்தாந்த போராளிகள் சட்டம் என்றால், எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று வாதிப்பார்களா? ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டமா என்ற பல்லவியைப் பாடுவார்களா? இதையும் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்ற முறையில் வாதிப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

06-04-2017

Kartik suicide note

[1] தி.இந்து, நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை: திருமணமான ஒரு ஆண்டுக்குள் சோகம், Published: April 5, 2017 08:26 ISTUpdated: April 5, 2017 08:34 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9616365.ece

[3] தினத்தந்தி, டி.வி.நடிகை நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள், ஏப்ரல் 05, 11:05 AM

[4] வெப்துனியா, நடிகை நந்தினி கணவர் கார்த்திக்கின் கடைசி விருப்பம்!, புதன், 5 ஏப்ரல் 2017 (17:31 IST).

[5] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/04/05110525/Nandinis-husband-tivinatikai-What-is-the-reason-for.vpf

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-nandini-s-husband-karthik-s-last-option-117040500042_1.html

[7] சென்னை.ஆன்.லைன், நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை : காரணம் கள்ளத்தொடர்பாம்!, April 05, 2017, Chennai

[8] http://chennaionline.com/article/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D