Archive for the ‘திருமா வளவன்’ Category

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

நவம்பர் 8, 2016

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

kushboo-supports-ucc-puthiya-thalaimuraiகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

khusbo-and-nagma-ucc-fightநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில்   தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில்தலாக்பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.

khusbo-and-nagma-uccகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு![9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.

 கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

 பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

 கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?

 பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].

kushboo-supports-ucc-puthiya-thalaimurai-pon-says-she-should-teach-tirivavuதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].

thirunaugasarar-kushboob-nagma-long_12443காங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

08-11-2016

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.art

[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா, By: Mayura Akilan, Updated: Monday, November 7, 2016, 16:12 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-slams-kushboo-talaq-issue/slider-pf214152-266544.html

[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.

[6] http://www.dailythanthi.com/News/State/2016/11/06181731/Uniform-civil-code-Nagma-attacks-Khushbu-over-her.vpf

[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்?:நக்மா காட்டம்!, Sunday, 06 November 2016 20:18 Published in தமிழகம்

[8] http://www.inneram.com/news/tamilnadu/10821-nakma-attack-on-kushboo.html

[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!, திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/khushboo-answer-about-nakma-s-complaint-116110700007_1.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்புநக்மா இடையே எந்த மோதலும் இல்லையேஅடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-rift-bewtween-nagma-kushboo-says-thirunavukkarasan-266570.html

[13] விகடன், குஷ்புநக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் , Posted Date : 12:10 (07/11/2016), Last updated : 12:40 (07/11/2016).

[14] http://www.vikatan.com/news/tamilnadu/71608-rift-between-kushboo-nagma-tirunavukkarasar-explains.art

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?

ஒக்ரோபர் 3, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்?

அன்பு தோழி, மின்சாரம், முதலிய சினிமாக்களில் நடித்த திருமாவளவன்: மின்சாரத்தில் நடித்தபோது சொன்னது: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், என்கிறார் திருமாவளவன். ‘மின்சாரம்’ படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

Kaja with other Bigwigs

Kaja with other Bigwigs

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம்: “அன்புள்ள தோழி”யில் நடித்தபோது சொன்னது: கிருபா என்பவர் இயக்கும் “அன்புத் தோழி’ படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன். சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார். இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது: “நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கியகேரக்டர்ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை”, என்றார். “எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றார் திருமாவளவன்.

விளம்பரம் வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டும்: முதல்வராக ஆசையிருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டும்: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்றால், சினிமாவில் நடிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றவரை நிலை மாறியுள்ளது!

முதல்வராக ஆசைப்படும் நடிகர்கள்: நான் முதல்வர் ஆகக்கூடாதா? கேட்பது திருமா, நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறதுஎன்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது?” என்றார் திருமா[1].

பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி: பிரபல தயாரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீனுக்கு[2] விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் திருமாவளவன். காஜா மைதீன் / காஜா மொய்தீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சயில் நேற்று முன்தினம் (29-09-2010) இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார். காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.

நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது:. கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது[3]:தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனைக் கட்டுப்பாடு சகிப்புத் தன்மையால் முறியடிக்க வேண்டும். நிறைய பேர் பதவிக்காக பெரிய அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரி மக்களைப் பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்”.

கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி: சினிமாவில் திருமாவே நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது…” என்றார்.  கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே. செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமைதீன் ஏற்கெனெவே நடிகைகளைக் கட்டிப்பிடித்தவர் தாம், ஒருந்டிகையை கல்யாணமே செய்துகொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியும்!

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்? நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா? சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம்,  அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன்? இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா? மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா? சினிமாவை எதிர்த்து, சினிமாக்காரர்களிடல் பணம் வாங்குவது விபச்சாரமா, முதலீடா?


[1] http://thatstamil.oneindia.in/movies/specials/2009/04/08-thiruma-speaks-on-his-cm-role-in-minsaaram.html

[2] http://rojacombines.com/people.htm

Kajamydeen, gained extensive experience as a producer making live action movie in Tamil Language and Mega Television Serial for Tamil Channel Industry, as well as successfully conducted Star night shows with Tamil film celebrities. In 1981 Kajamydeen came to Tamil film industry and. The film Chutti Kulandhai (shrewd kid) which was originally taken in the language telugu, was a critical and box office success in Tamilnadu.. Due to the nature of the film, Kajamydeen’s company took the task of marketing and distributing the picture. In 1984, at the age of 35 kajamydeen, produced and financed the highly successful “Porkalam,” (Goldendays) which was directed by the in famous director Cheran and the film acclaimed the best movie state award.Kajamydeen, Successfully organized the Mega hit Star night show participated by everyone in the tamil film industry includes Kamalhasan and Rajinikanth in the year 2002 in Malaysia and Singapore for the benefit of Film Artist Association. Once again he organized mega hit show at Dubai and London for tamil film producer council during the year 2003.He won the best producer award for five times from FILM FAN club. Kajamydeen was the vice president for the South Indian Film Producer Council in the year 2006-08 and has served as the Treasurer for the same in the year 2004-2006. Again during the year 2008 he has been elected as the Treasurer for the second time and currently holding the post till the year 2010. Currently Kajamydeen is in development with Rajinikanth starring Enthiran as Executive producer.

[3] http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/02-thiruma-blasts-film-heroes.html