Archive for the ‘தூக்கு’ Category

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

செப்ரெம்பர் 22, 2016

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

twists-and-turns-jia-khan-case

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

mid-day-cutting-jia-khan-caseஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jason-payne-james-of-uk-basedதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

mothers-charges-jia-khan-caseஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.

sooraj-pancholi-abetment-facing-speedy-death-suicide-ht-photoதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].

jiah-khan-funeral

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்?: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2016

pancholi-attended-funeral-of-jia-khan

[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா? இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/09/22010824/Jiyakan-actress-had-been-killed.vpf

[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].

[4] http://tamil.filmibeat.com/news/actress-jiah-khan-s-suicide-case-takes-new-turn-042345.html

[5] Times of India, Jiah Khan’s hanging staged: UK expert, Munish Pandey| Mumbai Mirror | Updated: Sep 20, 2016, 08.38 AM IST.

[6] http://www.payne-james.co.uk/new-role-and-overseas-work/

[7] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Jiah-Khans-hanging-staged-UK-expert/articleshow/54418518.cms

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]

[9] http://tamil.oneindia.com/news/india/jiah-khan-s-hanging-staged-uk-expert-263403.html

[10] The Hindusthan Times, Jiah Khan case: New report suggests suicide was staged, Sooraj Pancholi reacts, HT Correspondent, Hindustan Times, New Delhi, Updated: Sep 21, 2016 14:22 IST

[11] http://www.hindustantimes.com/bollywood/jiah-khan-case-new-report-suggests-suicide-was-staged-sooraj-pancholi-reacts/story-NkyNriCYbnkcgH1l8mYoXK.html

 

Advertisements

எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை!

ஜூலை 6, 2012

எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30  நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை.

கேரளா வழியில் மும்பையில் பிறந்த நடிகை: சனாகான் தந்தை கண்ணூர், கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் கான். தாயார் சஹீதா மும்பையைச் சேர்ந்தவராம்[1].  இருவருக்கும் 21-08-1987 அன்று பிறந்தவராம்[2]. மும்பையில் பிறந்த இவர் விளம்பரங்களில் நடித்து, பிறகு நடிகையானவர். தமிழ் திரைப்படங்களில் நடித்தது மூலம் தான் நடிகை என்று பிரபலமானார்[3]. விளம்பரங்களில் நடிக்கும் போதும் சர்ச்சைக்குறிய விளம்பரங்களில் நடித்து, விளம்பரத்தைத் தேடிக்கொண்டார்.  ஒரு ஆணின் ஜட்டியை தடவி கசக்கி சுத்தம் செய்யும் விளம்பரம் தடைசெய்யப்பட்டது. ஆணின் செக்ஸ் பற்றிய விளம்பரப் படமும் மாற்றியமைக்கப் பட்டது[4].

அந்த “அன்டர்வேர்” விளம்பரத்தை அவருடைய “பாய் பிரென்ட்ஸ்” எல்லோருமே விரும்பினார்களாம்! இதுவரை நாங்கள் பார்த்திராத சிறந்த “அன்டர்வேர்” விளம்பரம் என்று போற்றிப் புகழ்ந்தார்களாம்! அவருடைய சகோதரி, அதனை அப்படியே செய்து காட்டுகிறாளாம். அதுமட்டுமல்லாது, அவருடைய பக்கத்து வீட்டுக் ஆண்குழந்தை, இவரைப் பார்த்ததும், தனது ஜட்டியைக் கழட்டிவிடுகிறதாம். இதெல்லாம் தமாஷாக உள்ளது என்று சிஒல்லிக் கொள்கிறார்[5]. How did her friends react to the first Macho ad? “All my boyfriends loved it! They said it’s the best innerwear ad they had ever seen. My five-year-old sister copies me and takes out a chaddi and pretends to wash it. Even my baby neighbour, who walks around in his chaddis, takes off the one he’s wearing. It’s hilarious.”
அமுல் மச்சோ உரங்-உடான்– புதியதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் கணவுனுடன் படுத்திருக்கிறாள். அப்பொழுது ஒரு குரங்கு வந்து கணவனின் ஜட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறது. முதலில் அதை கழுத்தில் மாட்டிக் கொள்கிறது, பிறகு  இடுப்பில் கால்களின் மழியாக நுழைத்து மாட்டிக் கொள்கிறது. ஒரு குரங்கு வாழைப்பழத்தை வாயில் வைக்கிறது. இன்னொரு குரங்கு அந்த ஜட்டியை பிடித்து இழுக்கிறது. ஆட்டிக் காண்பிக்கிறது. கழட்டுகிறது. அதைப் பார்த்து இன்னொரு குரங்கு வெட்கப்படுகிறது. அதற்குள் சாப்பிட்ட வழைப்பழத்தோல் விழுகிறது. ஜட்டி ஒரு கொம்பு நினியில் தொங்குகிறது. குரங்கு அப்பெண்ணின் பக்கத்தில், தோளின் மீது கைப்போடு நிற்கிறது. அவள், அக்குரங்கைத் தட்டிக் கொடுக்கிறாள்.

“ஹே தோ படா தோயிங் ஹை” – தடை செய்யப்பட்ட விளம்பரத்தின் விவரம்[6] – புதியதாக திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் நதிக்கரையில், துணிகளைத் துவைக்க வருகிறாள். அங்கிருக்கும் மற்ற வயாதான பெண்கள் அவள் செய்வதை உன்னிப்பாக கவனிக்கின்றனர். முகத்தை சுளித்துக் கொண்டு விஷமத்தனமாக கள்ளப்புன்னகையுடன், புடவையைத் தூக்கி விட்டுக் கொண்டு கால்களைக் காட்டியபடி உட்கார்ந்து கொள்கிறாள். ஜட்டியைத் துவைக்க ஆரம்பிக்கிறாள். ஜட்டியை விரிக்கிறாள், கசக்குகிறாள். தனது கால்களின் இடுக்கில் வைத்துக் கொண்டு (ஒரு ஆண் உடலுறவு கொண்டால் எப்படி பெண் முகபாவம் இருக்குமோ) முகத்தை செளித்து சுளித்துக் காட்டுகிறாள். இதைப் பார்க்கும்  இரண்டு இளம்பெண்கள் ரசித்து வெட்கப்படுகிறார்கள். துணியை அடிக்கும் சிறிய கொம்பை எடுத்துக் கொண்டு, அதனை அடிக்கும் போது, அந்த இருபெண்களும் தங்கள்ச்து கண்களை திகைப்புடன் மூடி கொள்கின்றனர். பிறகு அந்த ஜட்டியை தண்ணீருக்குள் அமுக்கி கசாக்குகிறாள். கைகளி பிடித்துத் தூக்கிக் காட்டுகிறாள். நீர் ஜட்டியின் நடுவிலுருந்து சொட்டுகிறது.  அவள் என்ன செய்கிறாள் என்பது மற்ற பெண்களுக்குப் புரிகிறது.

சனாகான் என்ற இந்தி நடிகை அளித்த பேட்டி: “நான் ஒரு மும்பைக்காரி. எனக்கு “பாய் பிரென்டு” என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை. சாதாரணமாக (அல்லோரும் நினைப்பது மாதிரி இல்லாமல்) பாலிஹுட் நடிகைகள் அதிகமாகவே புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து வரும் நடிகைகளும், அவ்விதமான ஆடம்பரங்களில் அதிகமாகவே ஈடுபடுகின்றனர். நான் இங்கு நடிகைகள் குடித்து விட்டுத் தள்ளாடி நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்கிடையேயுள்ள உறவுகளை நன்றாகத் திறம்பட நிர்வகித்து வருவதால், அத்தகைய பழக்க-வழக்கங்கள் வெளிட்யே வராமல் மறைக்கப்படுகின்றன. ஆகையால் ஒருவர் மும்பையில் அல்லது சென்னையில் பிறந்தார் என்பது கேள்வியில்லை[7], சுற்றுப்புற சூழ்நிலகளால் பாதிக்கப்படாமல் எப்படி உறுதியாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியமானது”, என்று சனாகான் என்ற இந்தி நடிகை சென்னைக்கு வந்தபோது பேட்டி அளித்திருக்கிறார்.

  Speaking to newspersons recently in Chennai, she said, “Though I’m a typical Mumbaikar, I don’t have any boyfriend as such.  I pray five times a day like any Muslim does and fast for 30 days in a year[8].  I neither smoke nor drink.  Contrary to the popular perception that Bollywood actresses smoke and drink a lot, I find actresses from South India indulging a lot in such luxuries. I have personally seen many actresses (here) walk with a swagger after drinking heavily.  They manage their PR so well that things such as these don’t come to light.   I personally feel that irrespective of whether you’re born in Chennai or in Mumbai, the way you are brought up and your determination to remain uninfluenced by your surrounding matters a lot,” said Khan.

மதசாயத்துடன் பேசிய பேச்சு நடிகைகளுக்குத் தேவையா? நடிகை என்று வந்துவிட்டால், அதில் யார் தூய்மையாக இருக்கிறார், ஒழுங்காக இருக்கிறார் அல்லது இல்லை என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையுள்ளதா என்று நடிகைகளே தீர்மானித்துக் கொள்ளலாம். கல்யாணத்திற்கு முன்பாக எந்த பெண்ணும் கற்புள்ளவளாக இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது என்று மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குஷ்பு என்ற நடிகை ஏற்கெனவே விள்ளக்கியுள்ளார். சாதாரண பெண்ணின் இலக்கண்மே அப்படியென்றால், நடிகையிடம் எதனை எதிர்பார்க்க முடியும் என்று அந்த மெண்பணி கூறவில்லை. ஆனால், தாங்களாகவே நான் ஒசத்தி, மற்றவர்கள் எல்லாம் அவ்வாறு இல்லை, என்று எந்த நடிகையும் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால், இருப்பதானால், நடிகை தொழிலுக்கே வந்திருக்க மாட்டார்கள். ஐங்குணங்களையும் மறந்தால் தான் ஒரு பெண் நடிகையாக முடியும் என்று அவர்களே பலமுறை நிரூபித்துள்ளார்கள். ஆகவே நான் முஸ்லீம் அதனால் இப்படி இருக்கிறேன் ஆனால், மற்றவர்கள் எல்லோரும் அப்படியில்லை என்றால் சரி. அதனை மேலே நீட்டி “எனக்கு “பாய் பிரென்டு” என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை”, என்று தம்மட்டம் அடித்துக் கொண்ட பிறகு, மேலே குறிப்பிட்டபடி கமென்ட் அடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சனாகான் சொன்னதை கண்டிக்கும் மற்ற நடிகைகள்: இதை திரிஷா கடுமையாகக் கண்டித்துள்ளாராம்[9]. தொடர்ந்து,  “வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் “சந்திரா’ என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்குகிறார். படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள “போர்ப்ரேம்’ தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஸ்ரேயா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்த நீங்கள், இந்தப் படத்தில் இளம் கதாநாயகன் கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே, எப்படி?

பதில்: “சந்திரா’ படத்தை பொருத்தவரை, கதைதான் கதாநாயகன். கதையும், கதாபாத்திரமும் பிடித்து இருந்தால், கதாநாயகர்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

கேள்வி: இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி “மேக்கப்’ போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது டைரக்டர் உட்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருப்பேனோ என்னவோ?

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களைப் பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி: ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாக வந்த தகவல் உண்மைதானே?
பதில்: உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் “மிட் நைட் சில்ரன்’ என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.


[1] Sana Khan, whose father is a Malayali-Muslim from Kannur and mother Saeeda is from Mumbai, worked as model at her birth place Mumbai, appearing in more than 30 ad films alongside the likes of Shahrukh Khan and Akshay Kumar.

http://popcorn.oneindia.in/artist-biography/4665/2/sana-khan.html

[4] The banned advert, showing Sanaa scrubbing a man’s innerwear, “a surrogate for male sexuality”, has now been replaced by her watching with humorous delight an orangutan slipping on Macho undies. The effect it has on his female counterparts (one of them is even seen wearing lipstick) is something else!

http://www.telegraphindia.com/1080221/jsp/entertainment/story_8931529.jsp

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

மார்ச் 16, 2011

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும்! திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.

நடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா?”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

பார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி? 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.

பட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம் செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முடிந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.

1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].

1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].

1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].

1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு

2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.

ஆகஸ்ட் 2008:  நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).

ஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி

அக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].

வேதபிரகாஷ்

16-03-2011


[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.

ஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)?

ஜனவரி 12, 2011

வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்துள்ள ஷோபனா தற்கொலை[1]: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ‘எச்’ பிளாக்கில் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார்.  வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.

துயரத்தில் சுற்றுப்புறம், உறவினர்கள்: ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.

ஏன் இந்த தற்கொலை? ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், “எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.

மீண்டும் மீண்டும் சிரிப்பு…வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’, ‘சுறா’ உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். ‘இளைஞன்’, `சிறுத்தை’ உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன[2]. ‘மாமா மாப்ளே’ டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.

காதல் ஏமாற்றம்… ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது. நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள்[3]. ‘சிக்குன்குனியா’ நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள். அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.
வங்கியிலிருந்து திரும்பி வந்த தாயார் அதிர்ச்சி: சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை…” – இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.

டைரக்டரை, ஷோபனா காதலித்ததாரா? ‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்[4]. நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதபிரகாஷ்

12-01-2011