Archive for the ‘தொடுவது’ Category

ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது?  

மே 16, 2018

ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது?

Yashika, before marriage- chastity, not required-5

பிஞ்சில் பழுத்தஇளம் நடிகையாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.

Yashika, before marriage- chastity, not required-4
கெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.

Yashika, before marriage- chastity, not required

ஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!

Yashika, before marriage- loosing chastity, not any wrong

பிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.

Yashika, before marriage

ஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.

Yashika, before marriage- chastity, not required-8

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம்விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].

Yashika, before marriage- chastity, not required-2

சினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.

© வேதபிரகாஷ்

16-05-2018

Yashika, before marriage- chastity, not required-6

[1] https://www.instagram.com/yashikaaannand/?hl=en; https://www.facebook.com/Yashikaaannand/;

https://twitter.com/iamyashikaanand?lang=en

[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]

[3] https://tamil.filmibeat.com/heroines/there-is-nothing-wrong-losing-virginity-before-wedding-yashika-053606.html

[4] ஈநாடு.தமிழ், திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை, Published 15-May-2018 07:09 IST.

[5] http://tamil.eenaduindia.com/Entertainment/Bollywood/2018/05/15071631/Its-not-wrong-for-women-to-lose-virginity-before-marriage.vpf

[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்துபட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM

[7] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html

[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.!, By Kaniyan – May 15, 2018

[9] https://www.cinemapettai.com/yashika-open-talk-about-1st-standard/

[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை!, Samayam Tamil | Updated: May 15, 2018, 05:27PM IST

[11] https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/iruttu-arayil-murattu-kuthu-actress-yashika-anand-hot-stills/articleshow/64176533.cms

[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்துபட நடிகை யாஷிகாவின் கருத்து!, By ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM.

[13] http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html

நடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது!

மே 24, 2017

 

நடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது!

Amrita Singh is the First Wife of actor Saif Saif Ali Khan

நடிகைமனைவிகள் பயப்படுவது பொறாமை தான்: ஆங்கிலத்தில் வந்துள்ள செய்தியை, தமிழ் இணைதள ஊடங்கள் மாற்றி-மாற்றி, ஏதோ தாங்களாகவே கண்டு பிடித்து போடுவது போல, தலைப்பை மாற்றி வெளியிட்டுள்ளன[1]. பிளிம்பீட் மற்றும் லைவ்டே, ஆங்கிலத்திலும், தமிழிலும், மற்ற மொழிகளிலும் விசயத்தை வெளியிட்டுள்ளது[2].  ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர். இவர்கள் எல்லோருமே நடிகைகள் தாம்.  ஆனானப் பட்ட ஷா ருக் கானின் மனைவி கௌரி கான் போன்றவர்களே, இவரைக்கண்டு பயப்படுகின்றனர் என்பது தமாஷாக இருக்கிறது[3]. தனால் தான், சன்னி, உங்க புருஷன்களை ஆன் ஒன்றுன் செய்து விடமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் போலும்[4]. தன் கணவன் ஒழுங்காக இருக்கிறனா என்று இதுவரை அவர்கள் கண்காணித்தனரா என்று தெரியவில்லை. சன்னி, நிச்சயமாக, மற்ற நடிகைகள் ஆர்த்து பொறாமைப் படும் அளவிற்கு வாட்டம்-சாடமாக இருக்கிறார். கவர்ச்சியாக நடிப்பதில், கைதேர்ந்தவராக இருக்கிறார்.

Sunny leone-5

கரேன்ஜித் கௌர் வோஹ்ரா அன்னி லியோன் ஆன கதை: கரேன்ஜித் கௌர் வோஹ்ரா மே13, 1981ல் பிறந்தவர், பிறகு நடிப்பு, மாடலிங், போர்ன் என்றெல்லாம் தொழிலில் ஈடுப்பட்ட நிலையில் சன்னி லியோனின் பெயர் பிரபலமானது. 2010ல் உலகிலேயே தலைசிறந்த பத்து போர்ன் நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2011ல் டேனியல் வெபர் [Daniel Weber] என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுமார் 60 படங்களில் நடித்த இவர், இப்பொழுது இந்தியாவில் தங்கி விட்டார். பலவித படங்களில், ஆணுறை விளம்பரம் போன்றவற்றில் துணிச்சலாக நடித்திருக்கிறார். இருப்பினும் “போர்ன்” நடிகை என்பதுதான், எல்லோருடைய மனதிலும்  மிஞ்சியிருக்கிறது. உடலுறவு என்பது, நடிகர்-நடிகையர்களையும், அவர்களது மனைவியர்களையும் பயப்பட வைக்கிறது என்று தெர்கிறது. அதே நேரத்தில், “படுத்தால் தான் சான்ஸ்” போன்ற புகார்கள் வெளிப்படையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இது மட்டும் எப்படி வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரியவில்லை.

Saif Ali Khan to take wife Kareena Kapoor

அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி![5]: இந்திப் படங்களில் நடித்துவருபவர் சன்னி லியோன். சமீபத்தில் 36-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் அமெரிக்காவில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். ஷெர்மன் ஓக்ஸ் என்ற இடத்தில் இவரும் கணவர் டேனியல் வெப்பரும் வாங்கியுள்ள இந்தப் பங்களாவில் 5 பெட்ரூம், நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், கார்டன் என உள்ளன. ‘சன்னியும் நானும் இந்த இடத்தை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தோம். அது இப்போது நடந்திருக்கிறது. இத்தாலி, ரோம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து கலைப்பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம். பங்களாவை அழகுபடுத்தும் பொருட்களை வாங்குவதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் டேனியல்[6]. வசதியாகத்தான் உள்ளனர் தம்பதியர்!

Sunny leone-6

வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர்: “நான் எனது பிறந்தநாளை எப்போதும் பிரம்மாண்டமாக கொண்டாடுவேன். இந்த முறையும் அப்படிச் செய்தேன். எனது இளம்பருவ நாட்கள் மகிழ்ச்சியானவை. எனது பெற்றோருடன் நான் செலவிட்ட நாட்களை மறக்க முடியாது. எனக்கு எனது வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர் டேனியல் வெபர்தான். அவர்தான் எனக்கு உறுதுணையாக எப்போதும் இருக்கிறார். இந்த முறை நியூயார்க்கில் எனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினேன்.” என்றார் சன்னி லியோன்[7]. இவர்களே, இப்படியிருக்கும் போது, நடிகர்களின் மனைவிகள், நடிகைகள் இவரைப் பார்த்து பயப்படுவது தமாஷான விசயம் தான். ஒருவேளை பொறாமையாக இருக்கும். நடிப்பு என்றால், எல்லாமே நடிப்பாக எடுத்துக் கொள்கிறார் சன்னி, ஆனால், அத்தகைய பக்குவம், இந்த செக்யூலார் நடிகைகளுக்கு, நடிகர்களின் மனைவிகளுக்கு வரவில்லை போலும். “வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர்”, என்ற நிலையில் இவரிருக்கும் போது, நடிகர்களின் மனைவிகளும் அவ்வாறே இருக்க வேண்டாமோ?

 Sunny leone fan club

தமிழகத்தில் தாக்கம் ஏன்?[8]: தனக்குப் பிடித்த நடிகர் – நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் தொடங்குவதெல்லாம் 1980, 90களில் ஃபேஷனாக இருந்தது. தங்கள் படத்தை வெற்றிபெற வைப்பதற்காக நடிகர்கள், காசு கொடுத்து ரசிகர் மன்றங்களை நடத்திய காலமெல்லாம் உண்டு. ஆனால், நடிகைகள் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது, த்ரிஷா மற்றும் நயன்தாராவிற்கு ரசிகர் மன்றம் இருக்கிறது. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷுக்கு கூட ரசிகர் மன்றம் திறந்தனர். ஆனால், முதன்முதலாக கவர்ச்சி பட நடிகை ஒருவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர் தமிழ் இளைஞர்கள். கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவில் உள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். சன்னி லியோன் படங்களுடன், அவர்கள் படங்களையும் சேர்த்து பிளக்ஸ் அடித்து ஊரில் நட்டுவைத்து ஆனந்தப்பட்டுள்ளனர் இளைஞர்கள்[9]. நடிகைகளுக்கு கோவில் கட்டியவர்கள், தமிழர், ஆக, இதிலும் முந்தி கொண்டு விட்டனர் போலும்.!!

© வேதபிரகாஷ்

24-05-2017

Sunny leone-8

[1] FilmBeat, Sunny Leone Furious With Wives Of A-list Actors For Not Allowing Their Husbands To Work With Her!, By: Vinod Dsouza, Published: Monday, May 22, 2017, 13:48 [IST]

[2] http://www.filmibeat.com/bollywood/news/2017/sunny-leone-furious-over-wives-of-a-list-actors-for-not-allowing-their-husbands-to-work-with-her-261431.html

[3] India Live today, Most of Bollywood mainstream actor’s wives fear Sunny Leone: Why?, Published by : Staff Reporter, May 22, 2017 3:45 pm

[4] http://movies.indialivetoday.com/2017/05/22/most-of-bollywood-mainstream-actors-wives-fear-sunny-leone-why/

[5] புதியதலைமுறை, அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி !, பதிவு செய்த நாள் : May 18, 2017 – 12:17 PMச் மாற்றம் செய்த நாள் : May 18, 2017 – 12:23 PM

[6] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/cinema/21/93532/sunny-leone

[7] தமிழ்.வெப்.துனியா, எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசுஅவர்‘: சன்னி லியோன், Published 18-May-2017 11:54 IST

http://tamil.eenaduindia.com/2017/05/18115434/My-Husband-Is-My-Most-Precious-Gift-Birthday-Girl.vpf

[8] தமிழ்.வெப்.துனியா, கவர்ச்சி கடல் நடிகைக்கு ரசிகர் மன்றம், Last Modified: புதன், 10 மே 2017 (15:21 IST).

[9] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/fans-club-for-sunny-leone-117051000038_1.html

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

ஏப்ரல் 26, 2016

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

can beggars start dancing

மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].

India has been haven for pedophilesமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  2. இரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
  3. மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
  4. அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
  5. அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.
  6. 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.
  7. 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  8. லைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].

give us money - prostitution or just beggingமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

neither begggar nor prostituteபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.

மும்பை நடன பெண்கள்.6பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8].  தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர்.  மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9]. 

 mumbai_dance_bars_dancers_640x360_bbc_nocredit

பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே? பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும்? ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா? யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்?

© வேதபிரகாஷ்

26-04-2016

[1] http://www.vikatan.com/news/india/63085-better-to-dance-than-to-beg-says-supreme-court.art

[2] விகடன், பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!, Posted Date : 18:41 (25/04/2016)

[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/license-for-women-dance-bar-supreme-court-116042500041_1.html

[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)

[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24

[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/25154616/1008388/Better-to-dance-in-bars-than-beg-on-streets-Supreme.vpf

[9] http://ns7.tv/ta/nasty-not-act-dancing-supreme-court.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508964

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1509337

40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை

நவம்பர் 3, 2013

40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை

Swetha Menon - Petambara Kurup

கவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.

Swetha Menon - Petambara Kurup-2

வெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.

sexy-swetha-menon-massage-stills-20_650

காங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].

swetha-menon-actress

மறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].

swetha-menon-actress-photo

மாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார்? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Swetha menon (4)

இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்!

© வேதபிரகாஷ்

02-11-2013


[1] மாலை மலர், அரசு  விழாவில்  நடிகை  ஸ்வேதா  மேனனிடம்  பாலியல்  குறும்பு:   அரசியல்  பிரமுகர்  மீது  கலெக்டரிடம்  புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST