Archive for the ‘நடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்’ Category

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

பிப்ரவரி 26, 2010

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது:

எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்“,  இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி “சாதாரணன்”  என்றாலும் எதையும் சாதாரணமாகச் சொல்லிவிடமாட்டார்!

  • எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.
  • “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர்.
  • இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார்.
  • கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று.
  • தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர்.
  • இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்

நடந்தது திருஷ்டி பொட்டு விழாவா?

பிப்ரவரி 26, 2010

திருஷ்டி பொட்டு விழாவா?

கருணநிதியின் அறிக்கை என்று இன்று வெளியாகியுள்ள செய்தியில் அவர் கூறுவதாக உள்ளது வேடிக்கையாக உள்ளது!

அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பு பொட்டு வைத்து அனுப்புவதைப் பார்க்கிறோமே, அதைப் போன்றதொரு பொட்டு, அந்த விழாவில் வைக்கப்பட்டதைப் பெரிதுபடுத்தி, அந்தப் பொட்டின் வண்ணத்தை முகம் முழுவதும் பூசிக்கொள்ளும், புரியாத குழந்தையைப் போல ஒரு நிகழ்ச்சி அமைந்துவிட்டது உண்மைதான்“.

நாத்திகருக்கு ஏனிந்த கலக்கம்?

  • திருஷ்டி பொட்டு வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன?
  • அது கறுப்பு பொட்டாக இருந்தால் என்ன, சிவப்பாக இருந்தால் என்ன?
  • இதென்ன ப்ளாக் லேபிள், ரெட் லேபில் பிரச்சினையா?

நிச்சயமாக இந்த விளையாட்டில் “புரியாத குழந்தை” ஒன்றுகூட இல்லை!

“ஒன்றும் தெரியாத பாப்பாக்களும்” இல்லை!!

சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்!

பிப்ரவரி 20, 2010

சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்!

சினிமாக்காரர்களுக்குக்காகத் தான் தமிழ்நாடு அரசாங்கம் இயங்குகின்றதா?

சினிமாத்துறையிலிருந்து அரசியல்வாதிகள்: சினிமாவிலிருந்து அரசியல்வாதிகள் வந்தாலும் வந்தார்கள், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்கள் பிரச்சினைத் தவிர, வெறு எந்த பிரச்சினையும், இப்படி முன்வைத்து ஊடகக்காரர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கருணாநிதி அப்படி நடிக-நடிகையர்கள்கூடவே இருப்பதாக, மற்ற வேலைகளையெல்லாம் பின் தள்ளியதாகவும் இல்லை!! மேடையிலே அவர்கள்கூட கழித்த மணிநேரங்கள் ஒருவேளை அதிகமானாலும் ஆகலாம். விழாக்கள் மேல் விழாக்கள், இப்பொழுதுமே நடிக-நடிகையர்கள் கூடம்தாம், பேச்சுகள்தாம் , ஆட்டம்தான்!!! இதோ மறுபடியயம் சினிமாக்காரர்கள்!

நடனமாட மறுத்த நடிகைகளுக்குத் தடை விதிக்கப்படும்:  சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 06-02-2010 அன்று சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடினர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்தது. முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது[1]. பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்[2]. ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை!). இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம்[3]. இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி விழாவில் அஜித் பேச்சு, ரஜினி பாராட்டு[4]: அண்மையில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது குறித்து கருத்து கேட்டதற்கு, “அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன். விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தககூடாது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார் ரஜினிகாந்த். அண்மையில், திரை உலகத்தினர் குடியிருக்க நிலம் ஒதுக்கியதற்காக[5], சென்னையில் ‘பாசக்காரத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதிக்கு பிரமாண்டமான விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் அதிரடியாக பேசிய நடிகர் அஜீத், “எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கை விடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும் விட மாட்டேங்குறாங்கவந்தாலும் மிரட்டுறாங்க,” என்று புகார்களை அடுக்கிக் கொண்டே போனார்.அப்போது, அந்தப் பேச்சை வரவேற்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

செ‌ன்னை கோபாலபுர‌‌ம் இ‌ல்ல‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். தனது ம‌க‌ள் செள‌ந்த‌‌‌ர்யா ‌‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டத‌ற்காக ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌விதமாக முத‌ல்வரை ச‌ந்‌தி‌த்ததாக ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌ப‌த்‌தி‌ரி‌க்கையை கருணா‌நி‌தி‌க்கு ர‌ஜி‌னிகா‌ந்‌த் நே‌ரி‌ல் செ‌ன்று கொடு‌க்காதது பெரு‌ம் ச‌ர்‌ச்சை ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து த‌‌ற்போது அவரை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ளுமாறு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு ப‌த்‌தி‌ரி‌க்கை கொடு‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் அவ‌ர் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொள்ள‌வி‌ல்லை.

கருணாநிதி காலில் அஜித் விழுந்து ஆசி[6].:அஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பின. ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் அஜீ்ததை தாறுமாறாக திட்டினார்[7]. தனது பேச்சு அரசியலாக்கப்படுவதை உணர்ந்த அஜீத், சமீபத்தில் நடந்த சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்ததின் போது கருணநியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு 17-02-2010 அன்று திடீரென்று வந்தார். கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட 30 நிமிடம் முதல்வர் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் மளமளவென்று நிருபர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது[8].  இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
முதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

இது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.

முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே?

இதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா?

அப்படியெல்லாம் கிடையாது.

நீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்…

ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்களா? ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்கள் என சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது[9]. கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர்[10]. கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் தனது வீடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஜாக்குவார்தங்கம் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜாக்குவார்தங்கம், “ஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, என்றார். ஜாக்குவார்தங்கம் பேட்டி கொடுத்த இன்று மாலையே அவரது வீட்டில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி ஒரு காமெடியர் என்று ஜாக்குவார்தங்கம் சொன்னதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தான், ஜாக்குவார்தங்கம் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஜாதிகள், மதங்கள் என்று பொரிந்து தள்ளும் இவர்களைத் தமிழர்கள் பின்பற்ருகிறார்களே? இத்தகைய நிகழ்சிகளை தமிழர்கள் கவனமாக பார்க்கவேண்டும்; அவர்கள் பேச்சை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவர்களைத்தான் அவர்கள் பல நேரங்களில் தமது தலைவர்களாகவும், கனவுக் கன்னிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்பதனை நினைத்துப் பார்க்கவேண்டும். எப்படி தங்களது மனங்களை வெளியில் காட்டுகிறார்கள், வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்………….என்பதெல்லாம் அவர்களை படம் போட்டுக் காண்பிக்கச் செய்கின்றன.

ரஜினி அஜித்துக்கு பெப்சி வினியோகஸ்தர் சங்கம் கடும் கண்டனம்[11]: ரஜினி, அஜீத் பேச்சுக்கு பெப்சி (திரைப்பட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு), விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.  புதுமுகங்கள் நடிக்கும் பாடக சாலை என்ற படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், “திரைப்படத்துறை ஒரு குடும்பம் மாதிரி. இங்கு நிறைய சங்கங்கள் உள்ளன. நான் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலைவனாக இருக்கிறேன். சங்க கட்டுப்பாடுகளையாரும் மீறக்கூடாது. மிரட்டுவது வேறு, வற்புறுத்துவது வேறு. ஒரு கட்சி என்றால் அதன் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவோ வெளியே தூக்கிப்போடவோ அந்த கட்சி தலைமைக்கு உரிமை இருக்கிறது. அது போல் தொழிற்சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்தவும் மீறி செயல்படுபவர்களை மிரட்டவும் அச்சங்கத்துக்கு உரிமை இருக்கிறது. சினிமா குடும்பத்தினர் விழாக்களுக்கு வரும்படி அழைப்பதை மிரட்டுவதாக எடுத்துக் கொள்ள கூடாது. மீறிப் போகிறவர்களை பணிய வைக்க நிறைய வழிகள் இருக்கிறது. மிரட்டித்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைஞர் திரையுலகினருக்கு வரிச்சலுகைகள், நிலம் என எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்கிறார். திரைப்பட துறையில் எந்த தொழிலாளர் இறந்தாலும் ரூ. 1 லட்சம் உதவி, திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் என பல நல்ல திட்டங்களை நல வாரியம் அறிவித்து உள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமாவில் இருந்துதான் முதல்வர்கள் வந்துள்ளனர் இது தொடரும்”, என்றார்[12].

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:  “நடிகர் நடிகைகளை நிர்ப்பந்தப்படுத்தி அழைக்கிறார்கள் என்ற புகாரை பொது மேடையில் பேசி இருக்க கூடாது. நல்ல விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் வருத்தத்துக்குரிய விஷயங்களையும் வருத்தமான விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் நல்ல விஷயங்களையும் பேசுவது மரபு அல்ல. கிராமங்களில் தலக்கட்டு பஞ்சாயத்து உண்டு. ஊரில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வீட்டுக்கு ஒருவர் போக வேண்டும் என்பது விதி. கோவில்களில் பந்தக்கால் நட்டால் கூட உள்ளூர்காரர்கள் வேளியே போகக் கூடாது என்று நிர்ப்பந்திப்பது உண்டு. இவையெல்லாம் அன்பான கட்டுப்பாடுகள்தான் அதை பின்பற்றி நடக்க வேண்டும். மீறினால் தண்டனை உண்டு. சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்க வேண்டும். குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள்”, என்றார்[13].

ஜாகுவார் தங்கத்திற்கு திருமாவளவன் நேரில் ஆதரவு[14]: அஜீத் விவகாரத்தில் ஜாகுவார் தங்கத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன்[15] நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத். இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில்  ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தமிழ் உணர்வாளர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜாகுவார் தங்கம். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியை நலம் விசாரித்தார்.

அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்[16]: ஜாகுவார் தங்கம் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடிகர் அஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சரத்குமார் தலைமையிலான அஜீத்துக்கு நோட்டீஸ் [17]. அஜீத் விவகாரம் முழுமையான அரசியலாகிவிட்டது. சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினராம். வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி இதில் உடைந்து[18]. இதை நடத்தியவர்கள் அஜீத் மற்றும் அவரது ரசிகர்கள்தான் என்று போலீசில் புகார் கூறினார் ஜாகுவார் தங்கம். விசாரித்த போலீஸார், இந்த தாக்குதலுக்கும் அஜீத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து அவர் பெயரை வழக்கில் சேர்க்காமல் விட்டனர்[19]. இதில் பெரும் ஏமாற்றமடைந்த தங்கம், தொடர்ந்து இரண்டு பிரஸ் மீட்டுகள் நடத்தி நிருபர்களிடம் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் பற்றி மிக மோசமாக பேட்டியளித்தார். நேற்று மாலை நடிகர் சங்கத்துக்கு சென்ற ஜாகுவார் தங்கம், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை சந்தித்து அஜீத் மீது புகார் மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளாராம். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்து, அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாம்.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?: தியேட்டர் அதிபர் சங்க அறிக்கை[20]: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானேதொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்? அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்”, என்று கூறியுள்ளார்.

தமிழ்-தமிழல்லாதோர், தமிழ்நாட்டவர்-கர்நாடகத்தவர், மலையாளி பார்ப்பனன்……………………..இதெல்லாம் எதைக் காட்டுகிறது? ஒருவேளை இப்படி, பல பாராட்டு விழாக்கள் நடத்தியே, படோபடமாக தமது பிரிவினை சித்தாந்தங்களுக்கு பிரச்சார ரீதியில் விளம்பரங்களைத் தேடுகின்றனரா? மக்களைப் பிரிக்க இப்படி நடிகர்கள் மூலம் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரா? ஏனெனில் இப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் எல்லாமே சினிமாக்காரர்கள் பேச்சுகளினின்றுதான் ஆரம்பிக்கின்றது! ஜெயராமன் பிரச்சினை எழுந்து அடங்குவதற்குள் இந்த பிரச்சினை! நாளெல்லாம் தமிழ்நாட்டில் சினிமாக்காரர் பிரச்சினைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையா? திருமணம், விவாக ரத்து என்று எதை எடுத்தாலும் அவர்கள் புராணம்தான். நடு-நடுவில்தான் இந்த செம்மொழியும், கூவமும் வந்துவிடுகின்றன!!

வேதபிரகாஷ்

20-02-2010


[1] தமிழ் கலாச்சாரம் இவ்வாறு இருக்கும்போது, இவர்கள்தான் கற்பைப் பற்றியெல்லாம் பேசுகின்றனராம்! நடிகைகள் பற்றி நடிகை சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறதாம்! பிறகு இதெல்லாம் என்ன? அன்று அரசவையில் அந்தப் புரத்தில் ஆஅடியதை இன்று மேடையிலும், திரைபடத்திலும் ஆடவைக்கின்றனர். இதுதானே உண்மை?

[2] “இப்படித்தான் மானாட மயிலாட” நடிகைகளைத் தயார் படுத்துகிறது எனும்போது, தமிழச்சியின் உடலெல்லாம் பூரிக்கிறது! கொங்கைகள் எழும்புகின்றன. அல்குலைகள் விரிகின்றன.

[3] ஆஹா, எப்படியெல்லாம் உரிமைகள், சட்டதிட்டங்கள் வேலை செய்கின்றன எனப் பார்க்கும்போது, திருவள்ளுவரை நிச்சயம் தூக்கிப் போடுவேண்டியதுதான்!

[4] http://www.inneram.com/201002186723/political-parties-should-not-force-actors-says-rajnikanth

[5] இப்படி பணக்காரர்களுக்கு நிலம் ஒதுக்குவதில் சாதாரண மக்களுக்கு என்ன லாபம்? பதிலுக்கு இப்படி நடிகைகளை வற்புறுத்தி ஆடவைக்கலாம்; பார்த்து ரசிக்கலாம்;……………

[6] http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/19-ajith-thanked-rajini-supporting-him.html

[7] அஹா, இனி வசனங்கள் எல்லாம் தமிழர்களுக்கு. இவர்களின் செம்மொழியை வைத்துக் கொண்டே ஒரு மாநாடு நடத்தி விடலாமே?

[8] இதற்கெல்லாம் இந்த ஊடகக்காரர்கள் எப்படிதான் மோப்பம் பிடித்துக் கொண்டு வர்வார்களோ தெரியவில்லை. ஆனால், அரிசி, பருப்பு, புளி என்றால் இந்த கூட்டம் இருக்காது. பொட்டலமாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளவருவார்கள்! கவர், பாட்டில் கொடுத்தால் வருவார்கள்.

[9] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27238

[10] ஜாதியென்றால் கேட்கவேண்டுமா, உடனே வந்துவிடுவார்களே? முதலில் அந்த திருமாவளவன் வந்துவிடுவாறே?

[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27219

[12] என்ன அருமையான பேச்சு, உதாரணங்கள், முன்பு கருணாநிதி சோனியாவின் வார்த்தைகளை வைரங்களால் பொந்தட்டில் பதித்து வைக்கவேண்டும் என்றாறே அதேப்போல இந்த பேசுகளையும் பதிவு செய்துவைக்கவேண்டும்!

[13] இவர்கள் தமது உள்-பிரச்சினைகள் என்றால், ஏன் இப்படி வெளிப்படையாக வைக்கவேண்டும். இதெல்லாம் என்ன மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்திகளா, நிகழ்சிகளா?

[14] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27273

[15] அதானே பார்த்தேன், கரெக்டாக வந்துவிட்டார். ஜாதி என்றதும் வந்துவிடிவாரே, இனி மற்றவர்கள்தாம் – அதாவது ஜாதி சங்கங்களும் இதில் இறங்கவேண்டியதுதான் பாக்கி.

[16] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27270

[17] தட் ஈஸ் தமிள், அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்! சனிக்கிழமை, பிப்ரவரி 20, 2010

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/02/20-nadigar-sangam-sends-notice-ajith.html

[18] தினத்தந்தி, பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நடிகர் அஜீத் மீது நேற்று மாலை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்,,,,,,,,,,,,,, நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் புகாரை அடுத்து நடிகர் அஜீத்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=548108&disdate=2/19/2010&advt=1

[19] போலீஸாரும் இதில் பங்குகொண்டு தமது வேலையைச் செய்கின்றனர், பிறகு அரசங்கம், அதாவது முதல்வர் கருணாநிதி சொல்வது போலத்தானே அனைவரும் நடக்கவெண்டும், அதனால்தான் பெரிய நடிகர்கள் நேரிடையாக கருணாநிதியிடம் செல்கின்றனர். மற்றவர் தங்அளுக்குள் உள்ள அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அந்த தோரணையில் பேசுகின்றனர்.

[20] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27251

அமிதாப் பச்சனும், விஜயும் – நிலவிவகாரத்தில் ஒற்றுமை!

நவம்பர் 1, 2009

அமிதாப் பச்சனும், விஜயும் – “நிலவிவகார”த்தில் ஒற்றுமை!

விஜய் விஷயத்தில் அரசே நிலத்தை ஒதுக்கியதால், பாதிக்கப் பட்டவர் வழக்கு போட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக ஆதரவு நடிகனுக்கு எல்லாம் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே.

கமலஹாசனுக்கு பட்டங்கள், விஜயிற்கு பட்டாக்கள், வித்தியாசம் அவ்வளவே!

இதில் வடக்கென்ன, தெற்கென்ன? எல்லாமே ஒன்றுதானே?.

பெரிய “பி” விஷயமே அலாதிதான்! லக்னோ: விவசாயி என்று கூறி நிலம் வாங்கியதால் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அதை உள்ளூர் பஞ்சாயத்திடமே திருப்பித் தருவதாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன் தற்போது அதை தூக்கி நடிகை ஜெயப்பிரதாவுக்குக் கொடுத்துள்ளதால் நிலத்தைப் பறிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உ.பி. மாநிலம் லக்னோ அருகே உள்ள பாராபங்கி மாவட்டம் தெளலத்பூர் என்ற கிராமத்தில், நிலம் வாங்கியிருந்தார் அமிதாப் பச்சன். விவசாயி என்று கூறி இந்த நிலத்தை வாங்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

விவசாயி என்று அமிதாப் பச்சனைக் காட்டுவதற்காக போலியான ஆவணங்களைக் காட்டி நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலம் ஏழைகளுக்காக கொடுக்கப்படுவதற்காக கிராமத் தலைவர் ராஜ்குமார் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரால் அரசுக்குத் தானமாக கொடுக்கப்பட்டதாகும். ஆனால் முந்தைய முலாயம் சிங் யாதவ் ஆட்சியின்போது போலியான ஆவணங்களைக் காட்டி அமிதாப்பச்சன் இந்த நிலங்களை வாங்கி விட்டார் என்பதுதான் பிரச்சினையே.  இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்திடமே நிலத்தைத் திருப்பித் தந்து விடுவதாக அவர் முதல்வர் மாயாவதிக்கு கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கடிதம் எழுதினார். அமிதாப் சார்பாக அவரது பிரதிநிதியான வினய் சுக்லா என்பவர் இந்தக் கடிதத்தை எழுதினார்.

இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றைத் தொடங்கப் போவதாக அமிதாப் பச்சன் அறிவித்தார். ஆனால் தற்போது தடாலடியாக நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பியுமான ஜெயப்பிரதாவின் நிஷ்தா பவுண்டேஷன் அமைப்புக்கு இந்த நிலத்தைத் தானமாக கொடுத்துள்ளார் அமிதாப் பச்சன்.

இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் ராஜ்குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜ்குமாரின் மகன் முன்னா சிங் கூறுகையில், மகளிர் கல்லூரி தொடங்கப் போவதாக அறிவித்த அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அதற்காக இங்கு அடிக்கல் நாட்டினர். இதில் அமிதாப் பச்சன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அமர் சிங் வந்தார், முலாயம் சிங் வந்தார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வந்தார். ஆனால் அதன் பின்னர் ஒரு வேலையும் நடக்கவில்லை. இந்த நிலையில் அமிதாப்பின் புதிய பிரதிநிதியான ராஜேஷ் ரிஷிகேஷ் யாதவ் என்பவர் அக்டோபர் 23ம் தேதியன்று அனைத்து ஆறு பிளாட்டுகளையும் ஜெயப்பிரதாவின் அறக்கட்டளைக்கு மாற்றிக் கொடுத்து விட்டார். இதுதொடர்பான பத்திரங்களையும் ஜெயப்பிரதாவின் செயலாளர் தேவேந்திர குமாரிடம் ஒப்படைத்துள்ளார் என்றார்.

இந்தப் புகார் குறித்து விரிவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கூடுதல் டிஜிபி பிரிஜ் லால் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பிரச்சினை பெரிதாவதைத் தொடர்ந்து ஜெயப்பிரதாவின் அறக்கட்டளையின் செயலாளர் தேவேந்திர குமார் சிங், இந்த நிலத்தை ஜெயப்பிரதா அறக்கட்டளை கிராமப் பஞ்சாயத்திடேம வழங்கப் போவதாகவும், அதுதொடர்பான நடவடிக்கைகளை அது தொடங்கி விட்டதாகவும் பெரும் பல்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவே இல்லை என்று கலெக்டர் கூறி விட்டார்.