Archive for the ‘நமிதா’ Category

பிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது!

நவம்பர் 18, 2016

பிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது!

namitha-speaking-about-pedophile-acts-and-crime-18-11-2016அரசியலும் சினிமாவும்தான் சமூக விஷயங்களை சார்ந்து இருக்கின்றன: சோனியா அகர்வால் மற்றும் புதுமுகங்கள் சந்தோஷ் கண்ணா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா.’ இந்த படத்தை வி.எஸ்.பழனிவேல் இயக்கி தயாரித்து உள்ளார். சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகை நமீதா கலந்து கொண்டு பேசியதாவது[1]: “சமூக கருத்தை சொல்லும் படமாக சாயா தயாராகி உள்ளது. அரசியலும் சினிமாவும்தான் சமூக விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. இவற்றின் மூலமாகத்தான் சமூகத்துக்கு நல்லது செய்ய முடியும். அதனால்தான் நான் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறேன். கல்வி அதிக செலவு கொண்டதாக மாறி இருக்கிறது. குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கிறது[2]. இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி, அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது[3]. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம். நான் மூன்று நாய்க் குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்[4]. தொடர்ந்து, குழந்தைகளின் மீது நடந்து வரும் பாலியல் தொல்லைகளைப் பற்றி பேசியது, ஆச்சரியமாக இருந்தது[5]. ஒருவேளை, இப்பிரச்சினையைப் பற்றி முதன்முதலாகப் பேசிய நடிகை இவராகத்தான் இருக்க மூடியும்.

namitha-speaking-about-pedophile-crime-18-11-2016

சிறுவர்-சிறுமிகளுக்கு / குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை[6]: “குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது முக்கியம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சமூகத்தில் நிறைய நடக்கின்றன. நம் அருகில் இருந்தும் கூட இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். நல்லது கெட்டது பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல டியூசன் கொடுத்தால் மட்டும் போதாது. நிறைய நல்ல விஷயங்கள் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்பதையும் சொல்லி கொடுக்க வேண்டும்.  அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல டியூசன் போன்றவற்றை கொடுத்தலுடன் நின்றுவிடாமல் நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுத்து அவர்களிடம் நிறைய பேசுங்கள். நிறைய கேளுங்கள். அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள். நிறைய கேளுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டு பேருமே செய்ய வேண்டும்,” இவ்வாறு நமீதா பேசினார்[7]. சமீப காலத்தில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்[8]. பிடோபைல் விசயங்களை படித்தறிந்திருப்பார் என்றூ தெரிகிறது[9]. உண்மையில், இதைப் பற்றி பேசியது அவரது அக்கரையைக் காட்டுகிறது எனலாம், ஏனெனில், அத்தகைய விவாகரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள் என்பதும் திண்ணம்.

normal_namitha_meets_kids_at_children_welfare_association_1ஸ்ரீகாந்த் – பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைத்தால் தவிர்த்து விடுகிறார்கள்- இது வேதனை அளிக்கிறது: விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, “சினிமா விழாக்களுக்கு என்னை அழைத்தால் நான் கலந்துகொள்ள தவறுவது இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள சோனியா அகர்வால் இங்கு வரவில்லை. பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைக்கும்போது சாக்குபோக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. விழா நடத்துபவர்களின் வலிகளை புரிந்து கொண்டு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்,” என்றார். நமீதா பேசியதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை என்ற விதத்தில் இருந்தது. நடிகர் கராத்தே ராஜா, நடிகை வசுந்தரா, தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல், இசையமைப்பாளர் ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். நமீதா சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

normal_namitha_meets_kids_at_children_welfare_association_6விழிப்புணர்ச்சி வருமா-வராதா?: நமீதா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற விதத்தில் தான் நோக்கும் தன்மை இருந்து வருகிறது. அந்நிலையில், பிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி தெளிவாகப் பேசியிருப்பது, அவரது விழிப்புணர்ச்சியைக் காட்டுகிறது. நிச்சயமாக, நடிகை சொன்னதால், ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. குழந்தைகள் / சிறுவர்களின் உரிமைகள் என்றெல்லாம் பேசுபவர்கள் கூட, இப்பிரச்சினைப் பற்றி மூச்சு விடுவது கிடையாது. பெரும்பாலான பிடோபைல் குற்றங்கள், குற்றவாளிகள் கிருத்துவர்களாக இருப்பதால், அவற்றை மறைக்கவே ஊடகங்கள் இருந்து வந்துள்ளன. எனவே, இப்பொழுது விழிப்புணர்வு ஏற்படுமா அல்லது நடிகை சொன்னார் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-11-2016

normal_namitha_meets_kids_at_children_welfare_association_4

[1] தமிழ்.வெப்துனியா, பாலியல் தொல்லை பற்றி பேசிய நடிகை நமீதா!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:07 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-namitha-speech-about-sexual-harassment-116111800014_1.html

[3] பிளிமி.பீட்.தமிழ், பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள்நான் பேசுகிறேன்! – நமீதா, Posted by: Shankar, Published: Tuesday, November 15, 2016, 17:29 [IST]

[4] http://tamil.filmibeat.com/heroines/namitha-speaks-on-sexual-abusing-043304.html

[5]“I was extremely happy when I heard that the film is about parenting and it aims to impart a huge message to the society. Since politics and cinema are two ways by which one can do good to the society, I am showing keen interest in politics,” she revealed. She was also quick to add, “I am going to talk about an issue which many artistes would shun speaking about. Today, we come across so many cases of child sexual abuse, which is scary. And it is happening around us all the time; even within one’s family. So, parenting does not end when one provides quality education. Children should be taught about ‘good touch’ and ‘bad touch’. Parents should discuss important issues with their children and should convey to them in a way they can understand. It is up to them to make sure that their children are sufficiently equipped and prepared to confront such situations in life.”

DECCAN CHRONICLE, Namitha’s concern over sexual abuse against kids, Published: Nov 17, 2016, 12:30 am IST; Updated:Nov 17, 2016, 12:31 am IST.

http://www.deccanchronicle.com/entertainment/kollywood/171116/namithas-concern-over-sexual-abuse-against-kids.html

[6] தினத்தந்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க வேண்டும்பட விழாவில் நடிகை நமீதா பேச்சு , மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 18,2016, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 18,2016, 1:21 AM IST .

[7] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/11/18012135/Film-Festival-Actress-Namitha-Speech.vpf

[8] mirchi9.com, Actress Voices Concern on Good Touch & Bad Touch,  Akhil Vemuganti | November 17, 2016 at 8:25 pm.

[9] https://www.mirchi9.com/movienews/actress-namitha-voices-concern-on-good-touch-bad-touch-child-sexual-abuse/

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு?

ஒக்ரோபர் 19, 2016

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு? 

preity-tabu-shushmita-urmila-etcபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.

nargis-neha-parveen-asha-suraiyya-nanda

கீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

tamanna-namita-kausalya-anushka-nayan-shreyaசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

திருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.

trisha-X

trisha-X

திருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.

Lakshmi Rai

காதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.

© வேதபிரகாஷ்

18-10-2016

[1] pinkvilla.com, 11 Bollywood actresses for whom marriage isn’t the only thing in life, February 12, 2016.

[2] http://www.pinkvilla.com/entertainment/discussion/349643/11-bollywood-actresses-whom-marriage-isn-t-only-thing-life

[3] http://www.mtvindia.com/blogs/general/just-in/7-bollywood-divas-whore-willing-to-sacrifice-their-career-for-marriage-52191842.html

[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1629730

[6] புதியதலைமுறை, திருமணமா? அலறும் தமன்னா!, பதிவு செய்த நாள் : April 24, 2016 – 07:41 AM, மாற்றம் செய்த நாள் : April 24, 2016 – 07:44 AM

[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/cinema/21/20321/rumours-about-tamanna-marriage/C21

[8] http://m.dinakaran.com/cdetail.asp?Nid=9457

[9]  தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.

[10]http://www.tamilcinemafire.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9/

குஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

மே 24, 2016

குஷ்புநமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ்திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

நமீதா-திருமலை-விஜயம்.2

ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].

நமீதா-திருமலை-விஜயம்.1பிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம்! நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.

kushboo, சோனியா, இளங்கோநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.

kushboo-rahul-ilangaovanவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும்!. நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.

குமரி அனந்தன், குஷ்பு பிரச்சாரம்தோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான்!! ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:

ஆௐஆஆ, ௐஊஶ்ஊடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற .தி.மு..வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’  இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.

குஷ்பு, குமரி அனந்தன்நடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.


© வேதபிரகாஷ்

24-05-2016

[1] தினபூமி, .தி.மு.. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016

[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)

[3] http://www.thinaboomi.com/2016/05/22/56438.html

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/namitha-went-to-tirupati-again-for-jayalalithaa-s-win-116052300004_1.html

[5] விகடன், ஜெயலலிதா வெற்றிதிருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா!, Posted Date : 11:44 (23/05/2016).

[6] தினத்தந்தி, .தி.மு.. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:

திங்கள் , மே 23,2016, 3:18 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , மே 23,2016, 3:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்மா வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா!, By: Shankar, Published: Monday, May 23, 2016, 10:24 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/namitha-s-thanks-giving-visit-tirumala-254334.html

[9]  http://www.dailythanthi.com/News/State/2016/05/23031829/Actress-Namitha-darshan-at-Tirupati.vpf

[10] http://www.vikatan.com/news/tamilnadu/64480-jayalalitha-victory-namita-went-to-tirupathi.art

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/khushbu-wishes-jayalalithaa-254210.html

[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.

[14] http://www.dailythanthi.com/News/State/2016/05/22032120/Actress-Khushboo-opinion-about-the-results-of-legislative.vpf

[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?, Last Modified: ஞாயிறு, 22 மே 2016 (09:58 IST).

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-khushboo-congratulate-admk-government-116052200003_1.html

 

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

நவம்பர் 1, 2015

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

கவர்ச்சி அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் தொடர்பு இருந்தாலும், ஊடகங்கள் இப்படி கிசு-கிசுக்களை செய்தியாக்க பார்ப்பது தமாஷாகத்தான் இருக்கிறது[1]. ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதிக்கொண்டிக்கும் செய்தி இன்னும் நிஜ-செய்தியாகவில்லை போலும்[2]. நக்மா வருகிறார் என்றதுமே இருக்கின்ற இருபெரும் நடிகைகள் குஷ்பு மற்றும் விஜயதாரிணி (அரசியல் நடிகை) சந்திக்க பிரச்சினைகள் இருந்ததாக செய்திகள் வந்தன[3]. இனி இளங்கோவனுக்குக் கொண்டாட்டம் தான் போல! நக்மாவைப் பற்றி கமென்ட் அடித்தது போல, நமீதா பற்றி என்ன கமென்ட் அடிப்பார் என்று பார்க்க வேண்டும்[4]. நடிகையை வைத்து, இன்னொரு நடிகையைப் பிடிப்பது என்றெல்லாம் சாதாரணமான அளவில் தான் அரசியல்வாதிகளுக்கு சிந்தனையுள்ளது எனும்போது திகைப்பாக உள்ளது[5]. நல்லவேளை அக்கா நடிகையை வைத்து, தங்கை நடிகையை பிடிப்போம் என்ற அளவுக்கு இருக்கிறது. செய்திகள் தயாரிக்கப்படுகின்றனவா என்ற அளவுக்கு, படிப்பவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

மறுபடியும் நமீதாசெய்திகளை அள்ளிவீசும் ஊடகங்கள்: குஷ்பு, நக்மாவை தொடர்ந்து, நடிகை நமீதாவையும், காங் கிரசில் சேர்க்கும் முயற்சிக்கு, டில்லி மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது[6]. இதையடுத்து, நமீதா தரப்புடன் பேச்சு நடந்து வருவதாக, கட்சி வட்டாரம் தெரிவித்தது. செப்டம்பரில் நமீதா அரசியலில் குதித்து, அமைச்சராகி, மக்களுக்கு சேவை செய்யப் போவதாக செய்தி வெளிவந்தது[7]. அந்த அளவுக்கு தமிழக அரசியல் நிலை மாறிவிட்டது[8]. தமிழக காங்கிரசில், சினிமா நட்சத்திரங்களை சேர்க்க, டில்லி மேலிடம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்றதும், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கார்த்திக்கை காங்கிரசில் இணையும்படி வலியுறுத்தினர். அதற்கான முயற்சியில், காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி இறங்கினார். சட்டசபை தேர்தலுக்கு முன், தன் முடிவை அறிவிப்பதாக கூறிய கார்த்திக், ‘எஸ்கேப்’ ஆகி விட்டார். இருப்பினும் நடிகர், நடிகையரை இழுக்கும் முயற்சி தொடர்கிறது.

Secular Kusgboo with all religious saris

குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நமீதா: முதலில், நடிகை குஷ்புவை இணைத்தனர். அவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே காங்கிரசில் சேர்ந்திருந்த, நடிகை நக்மாவுக்கு, கடந்த மாதம், அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் பதவி அளித்து, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக்கினர். இதை பார்த்ததும், நடிகை நமீதாவுக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது; அதை, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவரை, தி.மு.க.,வுக்கு இழுக்க சிலர் முயன்றனர்; அவர் பிடிகொடுக்கவில்லை. தற்போது, பிரபல நடிகர் ஒருவர் மூலமாக, நமீதாவை காங்கிரசில் சேர்க்க, பேச்சு நடக்கிறது[9]. ‘காங்கிரசில் நமீதா இணைந்தால், அவரது சொந்த மாநிலமான குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்’ என, வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அகில இந்திய காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர், எஸ்.வி.ரமணி கூறுகையில், ”நமீதாவை காங்கிரசில்சேர்க்க, பேச்சு நடக்கிறது. அவர் காங்கிரசில் இணைந்தால், அவர் மூலம், தமிழக காங்கிரசை வலுப்படுத்தும் திட்டமும் உள்ளது,” என்றார்.

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

மே 2014லிலிருந்து செய்யப்பட்டு வரும் முயற்சியா?: தமிழக காங்கிரஸ், 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் அறிவித்து விட்டதால், கட்சியை பலப்படுத்தவும், கவர்ச்சி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நடிகர்கள் கார்த்திக், பாண்டு, நடிகைகள் நமீதா, தேவயானியை காங்கிரசில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரஸ், 39 தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவளித்து, அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக, சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சிரிப்பு நடிகர் பாண்டு ஆகியோரும், பிரசார களத்தில் குதித்தனர்.

இளங்கோவுடன் - முத்தேவியர்- 2015

இளங்கோவுடன் – முத்தேவியர்- 2015

திராவிட கவர்ச்சி அரசியலை பின்பற்ற தீர்மானித்த காங்கிரஸ்: நடிகர், நடிகைகளின் பிரசாரத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அ.தி.மு.க., தி.மு.க.,வில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களால் வெளிப்படுத்தப்படும் கவர்ச்சி அரசியலைப் போல, தமிழக காங்கிரசிலும் கொண்டு வர வேண்டும் என, இளைஞர் காங்கிரசார் விருப்பம் தெரிவித்தனர். நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியில், நடிகர் கார்த்திக் இணைந்தால், அவருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என்றும், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது[10]. இதற்கிடையில் நடிகைகள் நமீதா, தேவயானி ஆகிய இருவரையும், தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரசார் அழைத்தனர். ஆனால், அவர்கள் இருவரும், சின்னத் திரை படப்படிப்புகளில் பிசியாக இருந்ததால், பிரசாரத்திற்கு வர முடியாது என, மறுத்து விட்டனர். இருந்தாலும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான ரஞ்சன் குமார், நடிகைகள் இருவரிடமும், காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

காங்கிரஸின் சினிமா கவர்ச்சி அரசியல் திட்டம்[11] (மே.2014): இதுகுறித்து, தமிழக காங்கிரசார் கூறியதாவது: “லோக்சபா தேர்தல் முடிவில், காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும். அதனால், அடுத்த சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க, திராவிடக் கட்சிகள் போட்டி போடும். ஆனால், 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என, ராகுல் கூறிவிட்டார்.எனவே, கட்சியை பலப்படுத்த, பலதரப்பு மக்களையும் கவரும் வகையில், சினிமா, விளையாட்டு போன்ற புகழ்மிக்க துறையில் பணியாற்றுபவர்களை, கட்சியில் சேர்க்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக்கையும், பாண்டுவையும் கட்சியில் சேர்ப்போம். கர்நாடகாவில் இப்படித்தான் நடிகை குத்து ரம்யாவை கட்சியில் சேர்த்து, கட்சிக்கு பலம் சேர்த்தனர். அவருக்கும் எம்.பி.,யாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தி நடிகை நக்மாவுக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நமீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தேவயானி அல்லது அவரது கணவருமான இயக்குனர் ராஜகுமாரனுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசில் நடிகர், நடிகைள் பலர் சேருவர்”, இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

குஷ்புவிடம் ஆலோசனை கேட்ட நமீதா (ஏப்ரல்.2014): கடந்த ஏப்ரல் 2014ல் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் ஒருவழியாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நடிகை நமீதாவை வேட்பாளராக்கவும் காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது[12]. தமிழகத்தில் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை கடைசிநிமிடம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் சி.கே. பெருமாள், மயிலை பெரியசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை நமீதா தாம் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு குஷ்புவிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவரோ, மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவை பிடித்தால் காங்கிரஸில் சேரலாம் என்று அட்வைஸ் செய்தாராம். நக்மா மூலமாக சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் தொடர்பு நமீதாவுக்குக் கிடைத்தது[13]. ஆனால், முடிவாக எதுவும் நிகழவில்லை.

© வேதபிரகாஷ்

01-11-2015

[1] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-new-remix-of-politics-unethical-journalism/

[2] https://evilsofcinema.wordpress.com/2014/01/13/news-manufactured-involving-sexy-actresses-with-political-parties-now-namita/

[3] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[4] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/sonia-congress-following-dravidian-glamour-politics-with-actresses/

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/why-sonia-treads-the-path-of-dravidian-politics-of-cinema/

[6] தினமலர், குஷ்புநக்மாநமீதாநடிகையரைத் தேடி காங்., பயணம், அக்டோபர்.31, 2015.00.29.

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-be-getting-into-politics-namitha-234869.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, அரசியலில் குதித்து அமைச்சராக ஆசைஅறிவித்த நமீதா, Posted by: Mayura Akilan, Updated: Thursday, September 3, 2015, 9:14 [IST]

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1376277

[10]  தினமலர், நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை, மே.3, 2014:01.14.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=966346

[12] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகை நமீதாவை தென் சென்னை வேட்பாளராக்க முயற்சித்த காங்கிரஸ்!!, Posted by: Mathi,Updated: Saturday, April 5, 2014, 13:05 [IST]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-namitha-will-contest-south-chennai-lse-197314.html#slide54628

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

ஜனவரி 13, 2014

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதாவைவைத்துக்கொண்டுகவர்ச்சிஅரசியல்செய்திதயாரித்தவிதம்: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார் என்று “தமிழ் இந்துவே” செய்தியை நமிதாவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது[1]. அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது என்றும் அது கூறுகிறது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் என்றும் நீட்டுகிறது. சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா? என்று  சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா[2]. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்று அளக்கிறது இன்னொரு ஊடகம்[3]. முன்னர் அவர் அரசியலில் சேருவார் என்று செய்திகளை வெளியிட்டன[4]. “அரசியலில் கலமிரங்கவிருக்கும் நமீதா” என்று வீரகேசரி தலைப்பிட்டுள்ளது[5]. விகடன் தனக்கேயுரிய பாணியில் “அரசியலில் குதிக்கிறார் நமீதா”என்கிறது[6]. தினத்தந்தி, தினகரன்[7], தினமலர் என்று யாரும் நமிதாவை விட்டு வைக்கவில்லை. இந்த கிசுகிசு முடிவதற்குள், இதோ இன்னொன்றை தயார் செய்து விட்டனர்.

Khushboo-in-DMK-decided-stage-managed

Khushboo-in-DMK-decided-stage-managed

திமுக சார்பாக நமீதா பிரச்சாரம்: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி[8] என்று “டமிள்-ஒன்-இந்தியா” குண்டு போட்டுள்ளது. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது, என்று சேர்த்தும் சொல்லியிருக்கிறது. “சென்னை ஆன்லைன்” விட்டுவிடுமா, இதோ – வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், நடிகை நமீதா திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நமீதா, தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், தான் எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார், என்று கூட்டியுள்ளது[9]. வழக்கமாக குஷ்புதான் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக களம் இறக்கப்படுவார். இந்த முறை நடிகை நமீதாவை களம் இறக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்த பரபரப்பு பேச்சு சொல்கிறது. ஏற்கனவே கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரா நமீதா இருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அடுத்த மாதம் நான் சேரவுள்ள கட்சியின் பெயரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். எனவே அடுத்த மாதவாக்கில் நமீதா திமுகவில் சேரக் கூடும் என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது[10].

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

குஷ்புவா, நமீதாவாதாத்தாகருணாநிதியின்தேர்வு: இப்படி “சரியான போட்டி” வீரப்பன் ஸ்டைலில், இந்த இரண்டு குண்டு நடிகைகளும் இறக்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குஷ்பு அப்பொழுது, நான் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடுவேன் என்று கூட பெரிய குண்டைப் போட்டுப் பார்த்தார். ஆனால், அது புஸ்ஸாகி விட்டது. இப்பொழுது ஸ்டாலின்-அழகிரி சண்டையில் நமீதாவை சேர்த்தால், ஒருவேளை சமமாகி விடும் போலிருக்கிறது. ஆமாம், ஸ்டாலினுக்கு குஷ்பு, அழகிரிக்கு நமீதா என்று பிரசாரம் செய்தால், சகோதரப் பாசம் வந்து விடலாம்.

கலைஞர்_மானாட_மயிலாட

கலைஞர்_மானாட_மயிலாட

கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு! அழகான, கவர்ச்சிகரமான, உடலைக் கட்டி நடிக்கும் நடிகைகள் எல்லாம், இப்பொழுது திமுக பக்கம் தான்! அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ, மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நேற்று, “கிஸ்,கிஸ், கிஸ்கால்……………….”, இரும்பு நடிகையால் பிரச்சினையாம்! குஷ்பு இட்லி சாப்பிட்டு வேலைக்கு வந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு, இந்த, “கிஸ்,கிஸ், கிஸ்கால் ” நடிகையால் வந்தது பிரச்சினை! நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரைப் போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்தச் சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர். இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள் தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். குஷ்புவோ குஷியில் இருக்கிறார், இருந்தார், ஏனெனில் திமுகவில் சேர்ந்து விட்டார்[11].

குஷ்பு பேய்!

குஷ்பு பேய்!

குஷ்புவிடம்  ஒழுக்கத்தை  கற்றுக்கொள்ளுங்கள்  இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[12]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார்,  “இப்போது   இருக்கும்   இளம் நடிகைகள்   யாரும்  தங்களது பட புரொமஷன்களுக்கு  கூட வருவதில்லை.  இது மிகவும் கண்டிக்கத் தக்கது.  இதோ  இங்கு இருக்கும்  குஷ்புவை  பற்றி  நான்  சொல்லியாக  வேண்டும்நான் அவரை  ஹீரோயினாக  வைத்து  படங்கள் தயாரித்துள்ளேன்.  அவர்  ஒரு  படத்தின் புரொமஷன்களுக்கு  கூட வராமல்  இருந்தது கிடையாதுஅதேமாதிரி  அவர்  நடிக்கிற  படமாக இருந்தாலும் சரி,  இல்லாத படமாக  இருந்தாலும் சரிவிழா என்று அழைத்தால்  உடனே வந்து விடுவார்அதான்   குஷ்பு.  இன்றைய புது நடிகைகள்  எல்லாம் அவரைப் பார்த்து  அந்த  ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”,  என்றார்[13]. இனிமேல் நமீதாவிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று மாற்றிப் பேசுவார் போலும்!

வேதபிரகாஷ்

© 13-01-2014


நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

மார்ச் 16, 2011

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும்! திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.

நடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா?”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

பார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி? 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.

பட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம் செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முடிந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.

1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].

1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].

1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].

1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு

2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.

ஆகஸ்ட் 2008:  நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).

ஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி

அக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].

வேதபிரகாஷ்

16-03-2011


[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

திசெம்பர் 30, 2010

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

 

தமிழச்சிகள் கலக்குகிறார்கள்! குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான்! திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்! கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள்! எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது!

திகவினரையும் வென்றுவிட்ட பிரபுதேவா! மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு! மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள்! ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது!

கமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார்? கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே? கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை!

மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி!: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].


கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (3)

நவம்பர் 11, 2010

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (3)

நமீதாவின் யோகா டீச்சர் அவதாரம்[1]: யோகா மூலம் தான் நான் எனது உருண்டு திரண்ட ஷேப்பை வைத்திருக்கிறேன் என்றதும், அந்த ஷேப்பை திறமையாக பயன்படுத்திக் கொள்ள ஜெயசிம்ம ரெட்டி கிளம்பி விட்டார். நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டதாம்[2]. குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நமீதாவின் சமீபத்திய தமிழ் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி தூக்கலாக இருந்தது. ஆபாச கதையம்சம் உள்ள படங்களிலும் துணிச்சலாக நடித்தார். இதனால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இயக்குனர்கள் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்கவே அவரை அணுகினர். இதனால் வருத்தமாகி இருந்தார் நமீதா. தற்போது முதல் தடவையாக சண்டை படமொன்றில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது: இதுபற்றி நமிதா சொல்கிறார், “என் சினிமா வாழ்க்கையில் போதுமான அளவுக்கு கவர்ச்சியாக நடித்து விட்டேன். அலுத்து விட்டது[3]. கன்னட படங்களிலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள். ஆனால் இப்போது முதல் தடவையாக கன்னட படமொன்றில் கவர்ச்சி இல்லாமல் யோகா ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன். இதில் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பம் உள்ளது”, என்றார். சினிமா நடிகைகளை வைத்தும், யோகாவை இணைத்து இப்படி பணம் பண்ணுவது, பாலிஹுட்டில் எற்கெனெவே ஆரம்பித்துவிட்ட விஷயம்தான்!

ஷில்பா ஷேட்டியின் யோகா சிடி (ஜூன் 2008): “ஒல்லிப்பிச்சான் உடம்பாக இருக்க வேண்டும் என நினைப்பது ஆரோக்கியமானதல்ல, மாறாக ஆபத்தானது’, என்று கூறுகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி[4]. “ஐஸ்வர்யா ராய் முதல் பிரியங்கா சோப்ரா வரை, பிபாஷா பாசு முதல் கரீனா கபூர் வரை சிக் உடம்புடன், ஒல்லியான உடல் வாகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். மாடல் அழகிகளும் கூட ஸ்லிம்மாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் இதெல்லாம் உடம்புக்கு நல்லதல்ல, ஆரோக்கியத்திற்கு கேடானது”, என்கிறார் யோகா டீச்சராக புது அவதாரம் எடுத்துள்ள ஷில்பா ஷெட்டி[5]. ஷில்பா ஷெட்டி யோகாசனம் குறித்த விளக்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஷில்பாஸ் யோகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ டெல்லியில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியபோதுதான் மேற்கண்ட அட்வைஸை வழங்கினார் ஷில்பா. இதுகுறித்து ஷில்பா கூறுகையில், ஒல்லிப்பிச்சான் உடம்பாக இருக்க பலரும் ஆசைப்படுகிறார்கள். அப்படி இருந்தால்தான் அழகு என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஷில்பா ஷேடி: கரீனாவின் சைஸைப் பற்றிய விளக்கம்: “நான் சைஸ் ஜீரோவாக இருக்கிறேன் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்றுதான் பொருள். அதேபோல யாராவது ஒல்லியாக இருந்தால் அவர்களைப் பார்த்து ஸ்லிம்மாக, அழகாக இருக்கிறீர்கள் என்று பாராட்டாதீர்கள். மாறாக, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்ய வேண்டும். நான் சைஸ் ஜீரோ கிடையாது, சைஸ் 8 ஆக வேண்டுமானால் இருக்கலாம். கண்டிப்பாக சைஸ் ஜீரோவை நான் விரும்ப மாட்டேன். கரீனாவை பலரும் சைஸ் ஜீரோவை எட்டி விட்டதாக கூறுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் சைஸ் 4 அல்லது சைஸ் 5 ஆக இருக்கக் கூடும். உடம்பு ஸ்லிம்மாக அழகாக இருக்க வேண்டும் என்றால் வயிற்றைக் காயப் போடத் தேவையில்லை. ஆரோக்கியமான, சத்தான ஆகாரம் உட்கொண்டால் போதும். அதேசமயம், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக வேலை பாருங்கள் என்பதுதான் எனது பாலிசி. எனது யோகாசன விளக்க வீடியோ, கேரளாவின் எழில்கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையை இலக்காக வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது[6].

வெளிநாட்டவர்களுக்காக தயாரிக்கப் பட்ட வீடியோ: “யோகாசனம் இந்தியாவின் கண்டுபிடிப்பு. ஆனால் வெளிநாடுகளில் இந்தியர்களின் யோகா வீடியோக்கள் கிடைப்பதில்லை. மாறாக, வெளிநாட்டவர்களின் யோகா விளக்க வீடியோக்கள்தான் நிறைய உள்ளன. இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவே இந்த வீடியோ. இந்த வீடியோவில் நடித்த அனுபவத்தால் நானே இப்போது தீவிர யோகாசன விசிறியாகி விட்டேன். யோகாசனம் எனக்கு மன மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் தருகிறது. அலைபாயும் மனதுக்கு கடிவாளம் போடுகிறது யோகா. அதேபோல நமது ஆத்மாவுக்கு நிம்மதியான உணர்வைத் தருகிறது. நமது உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றிலுமே இது பரவசமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனது வாழ்க்கையில் யோகாசனம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது”, என்று கண்டிப்பாக சொல்வேன் என்றார் ஷில்பா.

ஷில்பாவின் சைஸ் 8, கரினாவின் சைஸ் 4 அல்லது சைஸ் 5 ஆக இருக்கக் கூடும், என்றால், நமிதாவின் சைஸ் என்னவோ? சில்பாவே சொல்வது, “நான் சைஸ் ஜீரோ கிடையாது, சைஸ் 8 ஆக வேண்டுமானால் இருக்கலாம். கண்டிப்பாக சைஸ் ஜீரோவை நான் விரும்ப மாட்டேன். கரீனாவை பலரும் சைஸ் ஜீரோவை எட்டி விட்டதாக கூறுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் சைஸ் 4 அல்லது சைஸ் 5 ஆக இருக்கக் கூடும்”. கத்ரினா கைப் சைஸ் ஜீரோவை அடைந்து விட்டார் என்று இப்பொழுது செய்தி வந்துள்ளது[7]. கரினா கபூரை  இதனால் வென்றுவிட்டாராம்[8].

நமிதாவைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? சைஸ் ஜீரோ என்றால் மார்பு-வயறு-இடுப்பு அளவுகள் 30-22-32 முதல் 33-25-35 இன்சுகள் அல்லது 84-64-89 செ.மீ இருக்கவேண்டும்[9]. நமிதாவின் சைஸ் இருந்தால், ஏன் நம் மச்சான்கள் பார்க்கப் போகிறார்கள்? நமதாட்களுக்கு, சைஸ் பெரிதாகத்தான் இருக்கவேண்டும், நமிதாவைப் போல 48-40-44 அல்லது 50-40-45 இருந்தால்தான் பார்ப்பார்கள். நமிதாவை பரிந்ததரைத்தபோது, கருணாநிதி இதையெல்லாம் கணக்கு பார்த்தா சொன்னார்? கருணாநிதியைப் பொறுத்த வரைக்கும் சைஸ் ஜீரோ எல்லாம் தேவையில்லை. ராஜாவுக்கு ஜீரோக்கள் நிறையவே பிடிக்குமாம்! இப்பொழுது உயர்ந்து வந்துள்ள ஃபிகர் – 1760000000000! அம்மாடியோவ்!
வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] Namitha is playing the role of yoga teacher in “Namitha I Love You”, directed by Jayasimha Reddy from Hyderabad.

He says that he was very happy with Namitha’s discipline, punctuality and cooperation. “The shooting of Namitha I Love You has been in progress for the last 25 days. I never felt uncomfortable with the actress. She is very nice and cooperative,” says Reddy. According to Reddy, the script  is about a yoga teacher, who declares war on the drug mafia. Bank Janardhan, Tennis Krishna, Dingri Nagaraj, Prithvi are the other members of the cast. The director has also composed music, prepared script and written dialogues. When asked what made Namitha to act in this film that has no potential to showcase her features, Namitha says: “I agree that there is no scope for glamour in this film. I am fed up acting in glamour-oriented films that focus on hot and spicy scenes. I agreed to act in this film because of its script. It has a message for the society.”Namitha not only teaches yoga but also fights against goondas in this film. “I am confident that the audience will accept the film. It has all the ingredients to cater to the audience,” says the director.

http://expressbuzz.com/entertainment/news/namitha-turns-yoga-guru/220396.html

[2] இணைத்தளத்தில் குஷ்புவை சேலையை மறைத்து மார்பகங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து காட்டியுள்ள நிலைதான். பார்த்தாலே பரிதாபகரமாக இருக்கிறது.

[3] ஆனால் ரசிகர்களுக்கு அலுக்காதே, பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள்! இப்பொழுது மட்டும் என்ன, யோகா செய்வது, ஃபைட்டிங் செய்வது நமீதா என்பதால்தான் பார்ப்பார்கள், ரெட்டி அதை செய்தால் பார்ப்பார்களா?

[6] இப்படி, “சர்வதேச சந்தையை இலக்காக வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது”,  அதாவது வியாபாரத்திற்காகத் தான் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

[9] Size 0 is a women’s clothing size in the US catalog sizes system, roughly equivalent to a UK size 4. Size 0 and 00 were invented due to the changing of clothing sizes over time (referred to as vanity sizing or size inflation), which has caused the adoption of lower numbers. Modern size 0 clothing, depending on brand and style, will fit measurements of chest-stomach-hips from 30-22-32 inches (76-56-81 cm) to 33-25-35 inches (84-64-89 cm).

https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/

https://evilsofcinema.wordpress.com/2010/11/07/303-namita-yoga-karunanidhi/

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)

நவம்பர் 7, 2010

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)

யூனிகோடில் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால், அதன் பலன் வேண்டும்[1]: வேதங்கள் வேண்டாம், வேதாங்கங்கள் வேண்டும்;

வேதாங்கங்களையும் படிக்க வேண்டாம், அனால், வேதாங்கங்களில் யோகம் வேண்டும்,

யோகாவிலும் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால் தமிழ் வேண்டும்;

தமிழ் எழுத்துகளில் கிரந்தம் இருக்கலாம், ஆனால், கிரந்த எழுத்துருக்களில் தமிழ் எழுத்துக்கள் இருக்கக் கூடாது;

இப்படி, கருணாநிதிக்கும் போலித்தனத்திற்கும் சொல்லவே வேண்டாம், ஏனெனில் அதுதான் திராவிட கலாச்சாரம் எனலாம். “சமஸ்கிருதத்தை” எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் “சமச்கிருதம்” என்று எழுதி, தட்டெழுத்து அடித்து, பேசி பார்த்ததில்லை. அதுப்போலத்தான் தமிழில் மொழிபெயர்த்து மந்திரம் சொல்கிறேன், யோகாவின் பலன் மட்டும் எனக்குக் கிடைத்தால் போகும் என்றால், என்ன செய்வார் தேசிகாச்சாரி அல்லது எந்த சாரி? சாரி! இப்படித்தான், இப்பொழுது யோகாவில் இறங்கிவிட்டார்கள். அதையும் மாற்றிவிட்டால் போயிற்று!

இனிஷியல், பெயர், மந்திரம் மாற்றும் கருணாநிதி: உண்மையான பெயர் – தட்சிணாமூர்த்தி, அது “கருணாநிதி” ஆனது. டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். இப்போது மு.க!. கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார்[2]. `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்! இதோ, கருணாநிதியே அதைப் பற்றி சொன்னது[3]:

“நான் விடியற்காலையில் யோகா பயின்று வருகிறேன். இதனை எனக்கு ஒரு பெரிய ஆசிரியர் கற்றுத் தருகிறார். வயதில் பெரியவரான அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யோகா கற்றுக் கொடுத்தவர். நான் யோகா கற்றுக் கொடுக்க அவரிடம் கேட்டபோது அவரும் விரும்பி பயிற்சி அளிக்க முன்வந்தார்.

“யோகா பயிற்சியைத் தொடங்கும்போது வடமொழியில், `நாராயணா நமகா’ என்று சொல்லச் சொன்னார். அவருடைய ஆன்மிக உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பயிற்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், `நாராயணா நமகா’ என்று சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். நீங்கள் இதனை தமிழில் சொன்னால் என்ன? என்று கேட்டேன்.

“இந்த பயிற்சிக்கு இந்த சொற்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதற்கு நாராயணா என்றால் என்ன என்று நான் சொன்னேன். அவர் சூரியனை குறிப்பிடுகிறேன் என்றார். இப்போது கூட பழக்கத்தில் சூரிய நாராயணன் என்று சொல்வதில்லையா? அதைப் போல சூரியனைத்தான் அவர் குறிப்பிட்டு `நாராயணா நமகா’ என்று சொல்ல வேண்டும் என்றார். அதன்பிறகு நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன். நீங்கள் சூரிய வணக்ககத்தை `நாராயணா நமகா’ என்று சொல்கிறீர்கள். அதையே ஞாயிறு போற்றுதும் என்று சொன்னால் என்ன என்று கேட்டேன். அவர் அதை முணுமுணுத்துப் பார்த்து, நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளலாம் என்றார். இப்போது, வகுப்பின்போது ஞாயிறு போற்றுதும் என்றுதான் சொல்கிறேன். அதனால் இந்த ஞாயிறு என்னை மிகவும் கவர்ந்தது”.

இப்பொழுது எல்லாமே உலக அளவில் நடப்பதால், அதற்கேற்றப்படி தயார் செய்து கொள்கிறார்கள். இன்றைக்கு ஒபாமாவே இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்கிறார்[4] என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆக அங்கிருந்து ஒரு “சான்றிதழ்” வேண்டும்.

யோகாவும், செக்ஸும் (ஜனவரி 2009): மேனாட்டவரைப் பற்றியும் கேட்கவே வேண்டாம், அவர்களும் எந்த விஷயமானாலும் உச்ச-நீச்சங்களில் போய்விடுவர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில், “செக்ஸ் மீதான ஆர்வத்தை பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்”, என்று கூறியுள்ளனர்[5]. செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்[6]. கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் “செக்ஸ் ஜர்னல்’ என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில், “68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்‘ என்று எழுதப்பட்டுள்ளது.

இரட்டை வேடம் போடும் அமெரிக்கர்கள்: மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. “யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால், யோகா கற்றுக் கொண்டதால், அமெரிக்கர்கள், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது, என்னால் குரு சொன்னது போல எல்லா நிலைகளையும் என்னால் அடைய முடியவில்லை என்றெல்லாம் வழக்குகள் போட்டு[7], தொல்லை கொடுத்தது, மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றது முதலியவற்றைப் பற்றி சொல்வதில்லை / ஞாபகபடுத்திக் கொள்வதில்லை[8]. இவையெல்லம் சுத்த “ஃபிராட்” என்ற அளவில் அவதூறு செய்து விட்டார்கள்[9]. பிறகு எதற்கு செக்ஸ்-மிட்டாய்கள்?

கருணாநிதியும், நமிதாவும்; கருணாநிதியின் இளமை, நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை[10]: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. பாவம் இணைத்தள வீரர்கள். ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைத்திருக்கிறேன்”, என்றாராம்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும்! பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி! தங்கம் தென்னரசு சட்டசபையில் பதிலளித்துப் பேசுகையில், “யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. 84 வயதிலும் தினந்தோறும் முதல்வர் கருணாநிதி யோகா பயிற்சி மேற்கொள்வதால்தான் 24 வயது இளைஞரை போல உழைத்து வருகிறார்[13]. இதுதான் ரகசியம்!

வடக்கில் ஒல்லியாக இருக்கவேண்டும் என்றால், தெற்கில் குண்டாக இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்? வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு! குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள்[14], எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை? அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை? அதுவும் ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.

கருணாநிதியும், யோகாவும், எந்திரனும், கலாநிதியும்: ஷேப்பைப் பற்றிய ரகசியம்[15]: கருணாநிதி, நமீதா முதலியோருக்கு மட்டுமல்ல இந்த ஆசை, மற்றவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரம் அல்லது ஒன்றில் காசு வருகிறது என்றால், இன்றைய நிலையில், பணக்காரர்கள், அந்த குறிப்பிட்ட தொழிலை குத்தகை எடுத்து, பெரிய அளவில் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவர். ஆகவே இப்பொழுது யோகா இவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடு படுகின்றது. எந்திரன் மாதிரி, யோகா “சப்ஜெக்ட்” செய்து கோடிகள் வரும் என்றால், ஐஸ்வர்யாவை வைத்து அடுத்த படத்தை எடுக்க கலாநிதி தயங்க மாட்டார். எனெனில், அவர் தனது பணத்தின் ஷேபைப் பற்றிதான் கவலைப் படுகிறார். சமயம் பார்த்து, தயாநிதி போல அரசியலில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாமே யோகா தான்! இந்நிலையில் ரஞ்சிதாவை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (யோக நிலை), ஏன் அவர்களை புதைத்துவிட்டார்கள் (சமாதி நிலை) என்ற மர்மமும் புரியாமல் இருக்கிறது.

ரஞ்சிதாவின் யோக நிலையும், நித்யானந்தாவின் சமாதி-நிலையும்: ரஞ்சிதாவின் யோக நிலை, நித்யானந்தாவின் சமாதி-நிலையும் பற்றி விவரமாக பார்த்து விட்டாகியது. நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர்களின் உபயத்தால் தமிழகத்தின் கண்மணிகள் அதிகமாகவே பார்த்து அவற்றைப் புரிந்து கொண்டு விட்டன.. பிறகு யோகா பற்றிய சி.டி. ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இருந்த நடிகை ரஞ்சிதா அதனால் நொடிந்து போய்விட்டார். அவரே பல நிலைகளில் யோகாசனம் செய்து காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த சி.டி, தயாரித்திருந்தார், ஆனால், திருட்டு விசிட் வெளியிடுவது மாதிரி நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர் செய்துவிட்டதால், அந்த யோகா-சிடி விற்க்குமோ-விற்க்காதோ என்று பயந்து விட்டார் போலும்!

 

வேதபிரகாஷ்

© 07-11-2010


[1] தினமலர், கிரந்த எழுத்துருக்களில் தமிழ்: ராஜாவுக்கு கருணாநிதி கடிதம், நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121149

[3] ஜனவரி 2008, சங்கமம் நிகழ்ச்சியில் பேசியது.

[4] அமெரிக்க ஜனாபதி நவம்பர் 6 முதல் 9 வரை 2010 இந்தியாவில் வியாபார நிமித்தமாக வந்துள்ளாராம்!

[5] தினமலர், ஜனவரி, 2009. http://www.dinamalar.com/worldnewsdetail.asp?News_id=2273&cls=row4&nc

[6] இனி செக்ஸ் கிளினிக்குகளை மூடிவிட வேண்டியது தான், பாவம், வால்-போஸ்டர்களும் இனி குறைந்து விடும்.

[7]Excerpts from “The Troubled Guru: Maharishi Mahesh Yogi Faces Tough Times,” by Anuradha Dutt — ® 1988, The Illustrated Weekly of India. http://www.trancenet.net/news/molest.shtml

[8] COURT CASE: United States District Court DISTRICT OF NEW JERSEY, Civil Action No. 76-341, ALAN B. MALNAK, et als, Plaintiffs, v. MAHARISHI MAHESH YOGI, et als, Defendants (Excerpts). http://trancenet.net/law/nj/nj1.shtml

[10] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/

[12] The ideal man for this lady is the Wolverine star Ryan Reynolds, “I would like to date Ryan Reynolds,” she smiles. Speaking on how she maintains her curves, she says, “I am not a gym person, I prefer going the Indian way by doing some yoga, which have helped me shape my curves.”

[13] மார்ச் 2008ல் பேசியது.

[14] கமலஹாசனுக்கு அதில் நிறையவே அனுபவம் இருக்கிறது, அவர் எல்லாவகைகளையும் பிடித்துப் பார்ததிருக்கிறார்.

[15] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

ஒக்ரோபர் 15, 2010

கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)

தமிழகம் ஏற்கெனெவே சினிமா-அரசியல் கூட்டணியால் சீரழிந்துள்ள நிலையில், அவற்றை கம்பெனிகளக மாற்றியப் பின்னர், இவ்வாறு வியாபாரங்கள் செய்வது, ஜனநாயகத்தை பாதித்துள்ளது, சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். 

கடின உழைப்பில் மக்கள் சம்பாத்தித்து விலை உயர்வால் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில், மக்களது தவிப்புகளை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்ய கவலைப்படாமல், தங்களது லாபங்களைப் பெருக்கிக் கொள்ளவே இம்மாதிரி வழி செய்து வருகிறார்கள். இதுவும் அத்தகைய மக்கள் விரோத சூழ்ச்சியே ஆகும்.

இங்கு “நமிதா” மற்றும் “கருணாநிதி” அவ்வாறான உருவகங்களாக இருக்கின்றன. தனியார் கம்பெனிகள், சிபாரிசு நியமனங்கள், சமரச வியாபார விருத்தி, கொள்ளை லாபம், பரஸ்பர லாப விநியோகம், என்றுதான் இவர்கள் செயல்படுகின்றனர்.

கருணாநிதி நமிதாவை பரிந்துரைத்தாராம்: கருணாநிதி நடிகைகளைச் சுற்றி வருகிறார்களா அல்லது நடிகைகள் கருணாநிதியை வலம் வருகிறார்களா? என்னதான் அரசியல் பணிகள் ஆற்றினாலும், கூட்டணி-சூழ்ச்சிகள் புரிந்தாலும், கருணநிதிக்கு திரை/கலைப்பணிகள் மீதுள்ள ஆசையே அலாதிதான். இம்முறை பதவிக்கு வந்த பிறகு மட்டும் மூன்று நான்கு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், தன் வசனத்துக்காக கலைமாமணி விருதே பெற்றிருக்கிறார் என்றால் அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ளலாம்[1]. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கும் 50வது படமான[2] “இளைஞன்” படத்திலும் தன் கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதோடு நிறுத்தாமல் கூடுதலாய் ஒரு சகாயமும் செய்திருக்கிறார்[3]. படத்தில் வில்லத்தனமான ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.

கருணாநிதியை பாராட்டிய நமிதா[4]: கருணநிதிக்கு நமீதா மீது அப்படியென்ன பாசம் / நேசம் / பிடிப்பு என்று தெரியவில்லை[5]. இதையறிந்த நமிதா மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துள்ளார்[6]. நல்லவேலை கருணநிதி போலவே யோகா செய்வதினால், பெருத்துவிடவில்லை! நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார்! குஷ்பு கொதிப்பாரா, குதிப்பாரா  என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது[9].

CM Karunanidhi Makes Namitha A Bitch! ஆனால், ஆங்கிலத்தில் இப்படி தலைப்பு கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது[10]. ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். “ஆங்கிலோ இந்தியப் பெண்” என்றால், ஆங்கிலேயர் மற்றும் இந்தியர்களின் கலப்பினால் உருவாகிய இனத்தைச் சேந்தவர்கள் என்று குறிக்கிறது. அதனால் அந்த வார்த்தை பிரயோகம் இருக்கலாம்!

தனது உடல், உருவம், நன்றாக, வளைவுகளுடன் / உருண்டையாக வைத்திருக்கும் மர்மம்: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைஇத்திருக்கிறேன்”, என்றார்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும்! பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி!

‘மச்சான்களுக்கு முன்பு” மயங்கி விழுந்த நமிதா[13]: நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நமீதா பேசமுடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை சென்னை அடையாறில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். நமீதா உடல்நிலையை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

நமிதாவிற்கு மலேரியா – சிகிச்சையளிக்கப்படுகிறதாம்: நமீதாவுக்கு சிகிச்சை அளித்து அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாவம், கருணாநிதி, சென்னையாக இருந்தால், நாற்காலியை உருட்டிக் கொண்டு போய் நலம் விச்சரித்திருப்பாரோ என்னமோ?

முன்பு தற்கொலை வதந்தி – நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் விளக்கம்: ஆம்பிவேலி என்றதும் முந்தைய செய்தி நினைவிற்கு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நமிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி / வதந்தி இருந்தது[14]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர் (ஜூலை 2010). ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், ஜூலை.1, 2010 அன்று, நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது. ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டபோது, அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார். எப்படியெல்லாம் வதந்திகலைக் கிளப்புகிறர்கள் மச்சான்கள்…?

கருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி? எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம்! முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன? எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது?


[1] தனது மீது போடப்பட்ட வழக்குகளையே, தான் முதல்வராகியதும் ஜி.ஓ போட்டு வாபஸ் வாங்கும் போது, பரிசுகள் பெறுவது என்ன முடியாத காரியமா?

[5] ஒரு வேளை குஷ்புவிற்கு கோபம் வந்தாலும் வரலாம். ஏனெனில், குஷ்புதான் கருணாநியுடன் நெருங்கிப் பழகி வருபவர். ஏற்கெனவே புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

[7] Namitha says “It’s an honour that the Chief Minister himself has handpicked me for the role. Hopefully I would fulfill his expectations by giving my best to my character in Ilaignan”. She describes her role in the movie lets listen in her words “I play a woman hailing from a mixed race- party English and partly Indian. It is a film set in the 1940s and my role could remind you that of Ramya Krishnan’s in Padayappa”. The glam doll praises the director too “He is a cool man who makes his colleagues feel comfortable. The director behind many a blockbuster of Tamil cinema, it is a delight to work with him”.

[9] வேதபிரகாஷ், கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு!, https://evilsofcinema.wordpress.com/2010/05/15/கொதிக்கும்-நமிதா-குதிக்கும்-குஷ்பு/

[10] Sexy heroine Namitha confirmed that she is going to act as a hardcore bitch in the movie ‘Ilaignan’. The story of this movie was given by Tamilnadu CM Mr. Karunanidhi, and it is going to be directed by Suresh Krishna. This movie will be made under the backdrop of 1940s. Namitha expressed her thankfulness towards Karunanidhi for portraying this memorable character exclusively keeping her looks in mind. Namitha fans are excited as well and they are hoping to see a very nice natural acting performance from Namitha.

http://www.weekendcreations.com/tollywood_talk.php?talk_id=836

[12] The ideal man for this lady is the Wolverine star Ryan Reynolds, “I would like to date Ryan Reynolds,” she smiles. Speaking on how she maintains her curves, she says, “I am not a gym person, I prefer going the Indian way by doing some yoga, which have helped me shape my curves.”

[14] வேதபிரகாஷ், நான் நலமாக இருக்கிறேன்தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு, https://evilsofcinema.wordpress.com/2010/07/01/நான்-நலமாக-இருக்கிறேன்-த/