Archive for the ‘பல்லவி’ Category

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதியும், தனுசுடன் ரொமான்ஸ் செய்யும் அக்ஷராவும்!

பிப்ரவரி 27, 2014

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதியும், தனுசுடன் ரொமான்ஸ் செய்யும் அக்ஷராவும்!

hruti-haasan-s-late-night-fun-with-anirudh

Shruti-haasan-s-late-night-fun-with-anirudh

சினிமா  தொழிலுக்கு  கலைவிபச்சாரிகளின்  பங்குதான்  என்ன?: கமல் ஹஸனின் பங்கு அபரீதமானது என்றிருக்கும் நிலையில், அவரது மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷரா இவர்களின் பங்கும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. “காதல் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட அப்பாவின் லீலைகள் அநேகம் தான், அதற்கேற்றாற் போல, மகள்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஒருநிலையில் பார்க்கும் போது, கமல் ஹஸன் மாற்றும் ரஜினி காந்த வாரிசுகளும் இவர்களுடன் சேர்ந்து ஏதோ கூட்டணி ஆரம்பித்துள்ளனர் போன்று தோன்றுகிறது. தொழில் ரீதியாக, அவர்கள் என்னவேண்டுமானாலும், செய்யலாம். யாரும் கேட்கப்பொவதில்லை. ஆனால், ஏதோ சமூகக்காவலர்களாக, சமூக சேவகர்களாக, பின்பற்றக் கூடிய மாதிரிகளாக இருக்கின்றவர்களைப் போல இந்த சினிமாக்காரர்கள் காட்டிக் கொள்வதை கண்டிக்காமல் இருக்க முடியாது.

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு

நீண்ட  நேரம்  அநிருத்துடன்  மதுவிருந்திலும்  பங்கேற்று  உற்சாக  ஆட்டம்  போட்டு  விட்டுப்  போனாராம்  ஸ்ருதி[1]: மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசை “Shruti Haasan’s late night fun with Anirudh”யில்[2] ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி [Pretty actress cum singer Shruti Haasan], இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன[3] என்று இப்பொழுது செய்திகள் வந்துள்ளன. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி என்கின்றன ஊடகங்கள். நெருக்கமான தோழி என்றால் என்னவென்பது அவைதாம் விஉளக்க வேண்டும். இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார்[4], அதாவது அவருக்காகவே, வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்து பாடினாராக்கும்! ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம் என்று ஊடகங்கள் விவரித்துள்ளன. அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி. ஆக, இதற்கும் அவருக்கு நேரம் இருக்கிறது என்றாகிறது.

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு.கூட்டு

சுருதி அநிருத் ரொமான்டிக் பாட்டு.கூட்டு

சமூகத்திற்கு  வேண்டிய  எந்த  ஒழுக்கத்தை  இவர்கள்  எடுத்துக்  காட்டுகின்றனர்?: அப்பன் யார்யார்கூட வேண்டுமானாலும் வாழலாம், யாரிடமாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம், பிறகு பெற்ற அக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, இன்னொரு பெண்ணையும் கூட்டி வைத்துக் கொள்ளலாம் – என்ற பரந்த மானுட சித்தாந்தத்தில் உள்ள அப்பனின் மகள்களாகத்தான் இவ்விருவரும் உள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்…” என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதுமட்டுமன்றி, இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே ‘3’ படத்தின் மூலம் – “வொய் திஸ் கொலைவெறிடி” [the superhit ‘Why this Kolaveri‘] ஏற்பட்ட நட்பால் இப்பாடலுக்கு மிகக்குறைவான சம்பளமே வாங்கினாராம் ஸ்ருதிஹாசன்[6]. சமூகத்திற்கு வேண்டிய எந்த ஒழுக்கத்தை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் என்று இவர்கள் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில், இன்றைய நிலையில் ஊருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கே அறிவுரை கூறும் அளவிற்கு இவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக, பொருளாதாரத்தில் தலைச்சிறந்த சாணக்கியர்களாக மாறிவிட்டதைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

தனுசுடன்  ரொமான்ஸ்  செய்யும்  சுருதி  ஹாசனின்  தங்கை[7]: நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நடிக்க வந்துவிட்டார்[8]. “டி டே”ஏன்ற படத்தில் படுக்கையறை காட்சியில் தத்ரூபமாக நடித்து, ஹாலிவுட் நடிகைகளையும் மிஞ்சிவிட்டார் என்ற நிலையில் ஊடகங்கள் விமர்சித்தன, காட்சிகளையும் வெளியிட்டன[9]. ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில்  சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர், ஆனால், யார் அந்த “பலர்” என்று தெரியவில்லை. இறுதியில் இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார்[10] என்று செய்திகள் வந்துள்ளன. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடித்தார்[11]. இந்த படத்தை பால்கி இயக்குகிறார். இப்படியாக கமல் ஹஸனின் இரண்டு பெண்களும் சினிமாத்தொழிலில் தீவிரமாக இறங்கி விட்டனர். அதாவது, அவர்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறாமல், தாங்கள் எப்படி வேண்டுமானாலும், இருந்து கொண்டால், இந்தியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள். ஆனால், இவர்கள் ஏதோ பெரிய அறிவுஜீவிகள் போலக் காட்டிக் கொண்டு, சமூகத்தையே இவர்கள் தாம் வழிநடத்திக் கொண்டு செல்வதைப் போல பேசும் அதிகப்பிரசங்கித்தனம் முதலியவை உள்ளதால், தட்டிக் கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Americanized westernized Indians degrading Indian womanhood.song

Americanized westernized Indians degrading Indian womanhood.song

அம்மாவை  மதிக்கும்  ரஜினியும், அம்மாவை  மிதிக்கும்  அனிருத்தும்[12]: கேவலமான, அசிங்கமான, கீழ்த்தரமான பாடலை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது – இதை எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை. ரஜினிகாந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வயதான இவன் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளான் என்றால், இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் தெரிடயவில்லை. “First time ever, independent music, it is Anirudh You can fuck with me but aint nobody fucking with my music, music, music, musoooosic…………………….ic, ic, ……………..music, …… You can fuck with me but aint nobody fucking with my music,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” இத்தகைய கேவலமான பாட்டு இன்னும் இணைதளத்தில் இருந்து வருகின்றது[7]. அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

nirudh Dhanush anti-Indian attitude

nirudh Dhanush anti-Indian attitude

சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது: சரி, அம்மா-அப்பா உறவுகளைக் கேவலப்படுத்துவது, தாய்மையினை தூஷிப்பது, மனித தாம்பத்ய உறவுகளை கொச்சைப் படுத்துவது, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது போல அறிவுறுத்துவது, முதலிய ஆபாசங்களை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த அழகில் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வேறு கொடுத்துள்ளது. சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், இவர்கள் சமூகப் பிரஞையுடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும், வாழ்வோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றால், அவ்வாறே சினிமா கூத்தாடிகளாகவே இருந்து விட்டு போங்கள்.

வேதபிரகாஷ்

© 27-02-2014

 


[1] தமிள் ஒன் இந்தியா, அனிருத்துடன்நள்ளிரவில்ஆட்டம்போட்டஸ்ருதி!, Posted by: Shankar, Updated: Tuesday, February 25, 2014, 15:25 [IST]

[5] The excited Shruti after recording the song posted a picture with Anirudh and tweeted “Recording a song with @anirudhofficial for maan karate! Fun fun fun!”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Shruti-Haasan-has-late-night-fun-with-Anirudh/articleshow/30836192.cms

[7] தினமணி,தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை,By Web Dinamani, First Published : 06 February 2014 04:14 PM IST

Advertisements

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

திசெம்பர் 30, 2010

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

 

தமிழச்சிகள் கலக்குகிறார்கள்! குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான்! திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்! கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள்! எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது!

திகவினரையும் வென்றுவிட்ட பிரபுதேவா! மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு! மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள்! ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது!

கமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார்? கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே? கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை!

மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி!: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].