Archive for the ‘புருசன் மாற்றம்’ Category

கமல்-கவுதமி விவகாரம் – அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

நவம்பர் 2, 2016

கமல்கவுதமி விவகாரம்அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

gautami-says-goodbye

கமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்.  ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.

கமலின் அந்தப் பாடல்[1] நடிகை / சக்களத்தி விளக்கம்
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
ஸ்ரீபிரியா
கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
ஸ்ரீதேவி
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
சரிகா
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
வாணி கணபதி
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்

கமலைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தன.

shruti-haasan-gautami-fight

கவுதமிகமல் பிரிவுக்குக் காரணம் நடிகையா, காதலா, மகளா, நஷ்டமா?: ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 05-11-1954ல் பிறந்த 63வயதில் உள்ள கமல் ஹஸனுக்கு காதல் வருமா, கத்தரிக்காய் காய்க்குமா என்பது பிரச்சினை அல்ல, இந்த வயதிலும்  அதெல்லாம் தேவையா ஏன்பது தான் கேள்வி. கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது[2]என்று தமிழ் ஊடகம் நக்கலடிக்கிறது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்[3] என்று கூட்டிச் சொல்கிறது. “பார்த்தச்சாரதி”யானவர் இவர் இப்படி பார்த்து ஓட்டுகிறார் எனும் போது, இனி யார் மாட்டிக் கொள்ளப் போகிறாரோ என்று தெரியவில்லை.

kamal-gautami-break

சந்திரபாபு பாடிய பாட்டு, கமலின் வாழ்க்கைக்கு பொறுத்தமாக உள்ளது இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மனம் முடிப்பதில்லை

மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

© வேதபிரகாஷ்

02-11-2016

gautami-says-goodbye-to-kamal-hassan

[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்!, வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, கமல்கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா?, Updated: Tue, Nov 1, 2016, 23:52 [IST]

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-is-the-reason-behind-the-split-between-kamal-gautami-266135.html

 

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

திசெம்பர் 30, 2010

மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!!

 

தமிழச்சிகள் கலக்குகிறார்கள்! குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான்! திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்! கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள்! எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது!

திகவினரையும் வென்றுவிட்ட பிரபுதேவா! மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு! மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள்! ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது!

கமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார்? கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே? கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை!

மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி!: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].