Archive for the ‘மகளை நடிகையாக்க விரும்பிய தாயார்’ Category

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

பிப்ரவரி 11, 2015

சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்டவர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!

Cutz n Glitz

வழக்கமான செய்தி வந்துள்ள விதம்: காதலர் தினத்தை நெருங்கும் வேளையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்[1] என்று செய்தி வந்துள்ளது. தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, 08-02-2015 அன்று, வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார்[2].  அந்த பெயர் தெரியாத வாலிபர் நல்ல காரியத்தை செய்துள்ளார். இருப்பினும், அந்த 14-வயது சிறுமி அல்லது இளம்பெண் மனபாதிப்பு, மற்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு வர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை.

Padma Priya

போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள்: குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இந்த புகார் கொடுக் கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்[3]. அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர்.  அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர்[4]. போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார்[5]. அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது[6].

தாயார் புகார் - மகளை வைத்து ஆபாசப்படம் 2014

தாயார் புகார் – மகளை வைத்து ஆபாசப்படம் 2014 – அது அதோடு போயிற்றோ, இதுவோ?

சினிமா ஆசையில் மகளை நடிக்க வைத்து, பிறகு விபச்சரத்தில் தள்ளிய தாய்: பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. தந்தை இறந்து விட்டதாகவும், இதனால் தாய் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால், தன்னுடைய மகளை நடிகை ஆக்க வேண்டும் என்ற பேராசையில் இறங்கி, விபச்சாரத்தில் தள்ளியதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுகிறது[7]. தாயே நடிகை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது[8], “நடிகை தனது மகளை விபச்சாரத்தில் தள்ளினாள்” என்று தலைப்பிட்டு, இதே செய்தியை கொடுத்துள்ளது[9]. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்தார். குறிப்பிட்ட சிறுமி 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். பலருடன் வாழும் பெண், இப்படி கற்பு பற்றிய சிந்தனை போய், மகளையும் விபச்சாரத்தில் தள்ளுவாள் என்றால், அந்நிலையை மற்ற பெண்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பலருடன் உடலுறவு கொள்வதால் மரத்து விடுவதால், பெண்மையை, தாய்மையை மறந்துவிடுவது வியப்பான விசயமே.

தமிழ்பட படுக்கையறைக் காட்சி

தமிழ்பட படுக்கையறைக் காட்சி – அறையில் நடப்பதை அரங்கேற்றுகிறார்களா?

தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கு அனுப்பிய கொடூரன்: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரை பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் டைரக்டு செய்து வெளியிட்டு இருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறினார்[10]. இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாக தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்[11]. சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் 09-02-2015 அன்று கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்[12]. அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன[13]. இவன் ஒரு கிரிமினல், குற்றவாளி கடுமையாகத் தன்டிக்கப் படவேண்டியவன், அவ்வளவுதான்.

ஸ்ருதி நடித்ததும், எதிர்ப்பதும் 2013-14

நடிப்பதடூள்ளங்களைக் கெடுக்கவா

இயக்குனர் அல்ல அவன், கற்ப்பழிப்பாளி, சமூக சீர்ப்பழிப்பாளி: இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இவர் டைரக்டு செய்யாமல் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எது எப்படியிருப்பினும், அவன் ஒரு கற்ப்பழிப்பாளி மற்றும் சமூக சீர்ப்பழிப்பாளி ஆவான். தாய் முறைதவறி நடக்கும் போது, அவள் மகளையும் கெடுக்கத் துணிந்துள்ளாள் என்றாகிறது. ஆனால், இவ்வாறு கெட்டவர்கள், மற்றவர்களைக் கெடுத்துக் கொண்டு போனால், சமூகம் எப்படி உருப்படும் என்று தெரியவில்லை.

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்!

அசினின் மார்பகத்தை யாரோ பிடித்து விட்டார்களாம்! பெண் உரிமைகள் இவற்ரையும் எதிர்க்குமா?

பெண்களின் பாலிய உரிமைகள் எதுவரை செல்லும்?: சமூகம் இவ்வாறிருக்கும் போது, எப்படி தார்மீக உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை கேலி செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் என்று பேசுபவர்கள் இவற்றையும் பெண்களின் உரிமைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சமீபத்தில் விபச்சாரிகளின் உரிமைகளுக்கு மாநாடு நடத்தி, கோரிய பெண்மணிகள் இப்படி இளம்பெண்கள் சீரழிவதை தவறு என்பார்களா அல்லது தங்களது வியாபாரத்திற்கு இன்னொரு வரவு என்று ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. விவாக ரத்து, பலதார திருமணம், திருமணத்திற்கு வெளியே செக்ஸ்-உடலுறவு, அவற்றை நியாயப்படுத்துக் உக்கால நாரீமணிகள் முதலியவை இனிமேல் என்னாகும், என்ன செய்வார்கள்? தாங்கள் சொன்னது சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிப்பார்களா அல்லது சமூகம் கெடுவதைத் தடுப்பார்களா? அவர்களது பெண்களையும், இப்பெண் போல விபச்சாரத்திற்கு அனுப்புவார்களா, இப்படி கேட்பது தவறுதான், இருப்பினும், அவர்களது வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஆராயும் போது, இத்தகைய எண்ணமும் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் எப்படி கட்டுப்பாடு வரும், எல்லைகள் வரையறுக்கப் படும் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

11-02-2015


 

[1] தினமலர், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய், சினிமா இயக்குனர் உட்பட 3 பேர் கைது, 10-02-2015: 23:57.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1181116

[3] http://www.dailythanthi.com/News/State/2015/02/11013658/Having-cinematic-figure-girl-arrested-for-prostitution.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=131335

[5] தினகரன், பாலியல் புகாரில் திரைப்பட இயக்குனர் கைது பெண் புரோக்கரும் சிக்கினார், 10-02-2015.

[6] தினத்தந்தி, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு விற்ற தாயும் சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்:

புதன், பெப்ரவரி 11,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: புதன், பெப்ரவரி 11,2015, 1:36 AM IST

[7] The girl’s father died when she was young and her mother married another man. It was the zeal to “show off” that her daughter was an actress that made the mother force her child into flesh trade, the officer said.

http://www.newindianexpress.com/cities/chennai/14-yr-old-Girl-Rescued-From-Flesh-Trade-Racket/2015/02/11/article2663106.ece

[8] A Selvaraj, Actress held for forcing daughter into flesh trade, TNN | Feb 11, 2015, 05.33 AM IST

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Actress-held-for-forcing-daughter-into-flesh-trade/articleshow/46194751.cms

[10] The Hindu, Three arrested on prostitution charge, Chennai, February 11, 2015.

[11]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/article2663251.ece

[12] http://www.thehindu.com/news/cities/chennai/three-arrested-on-prostitution-charge/article6880406.ece?ref=tpnews

[13] தினமணி, சிறுமிக்கு பாலியல் நிர்பந்தம்: தாய், திரைப்பட இயக்குநர் கைது, By dn, சென்னை; First Published : 11 February 2015 04:03 AM IST.

மறுபடியும் சனாகான் பேட்டி – சினிமா வசனமும், நிஜவாழ்க்கையும்

ஏப்ரல் 9, 2013

மறுபடியும் சனாகான் பேட்டிசினிமா வசனமும்,  நிஜவாழ்க்கையும்

 

சனாகான் என்ற இந்தி நடிகை அளித்த பேட்டி: அசிங்கமான, ஆபாசமான பொருள் தரும் வகையில் நடித்துவிட்டு, பெரிய ஞானி போல பேசுவதில் திறமைசாலியாக இருக்கும் நடிகை சனாகா எனலாம்[1]. முன்பு நடிகைகள் புகைப்பது, குடிப்பது பற்றி அளித்த பேட்டி: நான் ஒரு மும்பைக்காரி. எனக்கு பாய் பிரென்டு என்று யாரும் இல்லை. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை. சாதாரணமாக (அல்லோரும் நினைப்பது மாதிரி இல்லாமல்) பாலிஹுட் நடிகைகள் அதிகமாகவே புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து வரும் நடிகைகளும், அவ்விதமான ஆடம்பரங்களில் அதிகமாகவே ஈடுபடுகின்றனர். நான் இங்கு நடிகைகள் குடித்து விட்டுத் தள்ளாடி நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்கிடையேயுள்ள உறவுகளை நன்றாகத் திறம்பட நிர்வகித்து வருவதால், அத்தகைய பழக்கவழக்கங்கள் வெளியே வராமல் மறைக்கப்படுகின்றன. ஆகையால் ஒருவர் மும்பையில் அல்லது சென்னையில் பிறந்தார் என்பது கேள்வியில்லை[2], சுற்றுப்புற சூழ்நிலகளால் பாதிக்கப்படாமல் எப்படி உறுதியாக இருக்கவேண்டும் என்பது தான் முக்கியமானது”, என்று சனாகான் என்ற இந்தி நடிகை சென்னைக்கு வந்தபோது பேட்டி அளித்திருக்கிறார். இப்பொழுது (ஏப்ரல் 2013) மறுபடியும் அளித்த பேட்டியில், செக்ஸ் உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

 படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: 

நடிகை சனாகான் 

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘நடிகையின் டைரி’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், சில்க் சுமிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். அனில் டைரக்டு செய்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. அதன்பிறகு நடிகை சனாகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சனாகான் அளித்த பதில்களும் :

 

சில்க் சுமிதாவின் படங்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

அவர் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு ஆனதும், இணையதளத்தில் அவர் நடித்த படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகளை பார்த்து தெரிந்துகொண்டேன்.

 

 அவருடைய மரணம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சில்க் சுமிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தரப்பினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னொரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும், சில்க் சுமிதாவின் மரணம் திரையுலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

 

நிஜ வாழ்க்கையில் சில்க் சுமிதாவுக்கு நடந்த சோகங்கள் உங்களுக்கும் நடந்தால், என்ன செய்வீர்கள்?

நான் தைரியமான பெண். நான் யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன்[3]. என் சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஒரு ஆண் மகனாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிப்புக்குள்ளாக மாட்டேன்.

சினிமாவில், செக்ஸ் உடன்பாடு செய்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்றுநடிகையின் டைரிபடத்திலேயே வசனம் வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

செக்ஸ் உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்[4]. நடிகையின் டைரியில் ஒரு வசனம்: “ஒரு நட்கைக்கு என்னதான் திறமை இருந்தாலும், பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்துதான் ஆகணுமா?” என்று பேசி நடித்தபோது, வருத்தமாக இருந்தது. வய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்று திரையுலகத்தில் சொவது உண்மை. அது அவரவருடைய விருப்பம். ஆனால், அப்படி எந்த சம்பவத்தையும் நான் சந்தித்தது இல்லை”. இவ்வாறு சனாகான் பேசினார்.
‘செக்ஸ்’ உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்[5]. அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். செக்ஸ் உடன்பாடு வைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் பர்சனல் விஷயம். ஆனால் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. நடக்கவும் அனுமதிக்க மாட்டேன். நான் உறுதியான பெண். யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்[6].

இப்படி நாளிதழ்கள் சிறிதே மாற்றி, அச்செய்தியை அப்படியே போட்டிருக்கிறார்கள்.

 

சில்க் சுமிதாவின் வேடத்தில் நடிப்பதால், அவருடைய ஆவி உங்கள் கனவில் வந்தால்…?

நிச்சயமாக சில்க் ஆவி என்னை மிரட்டாது. பாராட்டும். என் வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்லும்.

சினிமாவைப் பொறுத்த வரையில், உடம்பைக் காட்டி நடிப்பதே சமரசம் செய்து கொண்டது போலத்தான். மார்பகங்களைக் காட்டி நடிப்பதில் எந்த நடிகையும் மறுப்பதில்லை. வெளியே காண்பிப்பதில் தான் வித்தியாசம் உள்ளது. முன்பெல்லாம் முத்தம் கொடுக்க மாட்டேன் என்றர்கள். இப்பொழுதோ முத்தம் கொடுக்கிறார்கள். கொஞ்சம் நாட்களில் ஹாலிவுட்டைப் போல எல்லா விஷயங்களுக்கும் தயார் என்று வந்து விடுவார்கள். பிறகென்ன, நான் செய்யவில்லை, இதுவரயிலும் செய்யவில்லை………..என்ற பேச்சு?

அசிங்கமாக, ஆபாசமாக நடிப்பது சரியா, உடைகளை அப்படி அணிந்து கொண்டு நடிப்பது நியாயமா, தூண்டுவதாக இரட்டைப் பொருள் அளிகும் வகையில் செய்து காட்டுவது தர்மமா…….என்றெல்லாம் அந்த நடிகைதான் பதில் சொல்லவேண்டும். குஷ்புவும் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். ஒரு இடத்தில், இருவரும் சந்தித்துக் கொண்டால், அவர்கள் என்ன்ச் பேசுவார்கள், பேசியிருப்பார்கள் என்பது அவர்களது புத்தகங்களினின்று அறிந்து கொள்ளலாம்.


நமிதாவும், அரவிந்த் மேத்தாவும்: எல்லாமே தொழில் பிரச்சினைதான்!

மார்ச் 18, 2010

நமிதாவும், அரவிந்த் மேத்தாவும்: எல்லாமே தொழில் பிரச்சினைதான்!

இந்த செய்தி வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், நமிதா மற்றும் அரவிந்த மேத்தா விஷயங்களில் நடிக்க வந்துள்ளவர்கள் பெண்கள். பிறகு அது சரியில்லை, இது சரியில்லை என்பதெல்லாம் வேடிக்கைதான்.நடிகர் சங்கம் வற்புறுத்தியதால் தன் நடித்தேன் என்றால், இல்லையென்றால் மறுத்திருப்பார் என்ற தொணி தெரிகின்றது. இதுதானே அரவிந்த் விஷயத்திலும். உள்ளே ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, நடிப்பு உண்மையாகிறதே, இல்லை உண்மை நடிப்பாகிரதே?

  • நடிப்பதே தொழில் எனும்போது, பிறகென்ன கூட நடிக்கும் பையனைப் பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்வது?
  • டைரக்டரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்பது?
  • டைரக்டருக்கு இங்கிலீஸ் தெரியவில்லை என்பது?
  • அவர் பேசும் தமிழே புரியவில்லை என்பது?
  • நடிப்பதே தொழில் எனும் போது எல்லாவிதத்திலும் நடிகைகள் நடிக்கத்தானே செய்கிறார்கள்?
  • முழு நிர்வாணக் காட்சிகளில் தான் நடிக்கவில்லை. மற்றபடி எல்லாவற்றைலும் நடித்து விட்டார்கள்.
  • போதாகுறைக்கு அரசியல்வாதிகளுடன், ஏன் முதலமைச்சருடனே சரியாக கால்மேல் கால்போட்டு உட்காரும் அளவிற்க்கு உயர்ந்திருக்ல்கிறார்கள்.
  • அதுவும் ஜட்டித் தெரியாததுதான் பாக்கி!
  • பிறகென்ன……………………?

நமிதா நடிக்க ஒத்துழைப்புத் தரவில்லை: ”அழகான பொண்ணுதான் படத்தில் நடித்த நமீதா சரியான ஒத்துழைப்பு தராததால் நாங்கள் செலவழித்த பணம் முழுக்க வீணாகிவிட்டது. அவரை நெருங்கவே முடியாததால் நினைத்த கதையைப் படமாக்க முடியவில்லை,” என்று அந்தப் படத்தின் இயக்குநர் திரு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இது சுத்தப் பொய் என்றும் மலிவான பப்ளிசிட்டி என்றும் கடுமையாக மறுத்துள்ளார் நமீதா.

அம்பேலான அழகான பொண்ணுதான்: அழகான பொண்ணுதான் சில தினங்களுக்கு முன் வெளியானது. மோசமாக படமாக்கப்பட்டிருப்பதாக பேச்சு பரவியதில், ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படம் இது. இந் நிலையில் நிருபர்களிடம் அந்த இயக்குநர் நமீதா மீது பின்வரும் குற்றச்சாட்டுகளை வைத்தார்:

நமீதா சும்மாயிந்தபோது பெரும் தொகையைக் கொடுத்துக் கூப்பிட்டாராம்: நமீதா பட வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தபோது இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம், 3 ஆண்டுகளுக்கு முன். பெரும் தொகையை அட்வான்சாகக் கொடுத்தோம். உடனே ஒப்புக் கொண்டார். பூஜை போட்டு 6 மாதங்கள் கழித்து, படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கினோம். சில நாட்களே நடித்த நமீதா, அப்புறம் படத்தில் நடிக்க மறுத்து, சென்னை திரும்பிவிட்டார்.

திருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது! இதுபற்றி நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் நமீதாவை அழைத்து விசாரித்தபோது, ‘திருவுக்கு டைரக்டு செய்ய தெரியவில்லை’ என்று சொன்னார். படத்தைக் காட்டினேன். உடனே ‘திருவை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டார். படப்பிடிப்பை தொடங்கிய பின், நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. என்னை ஒரு இயக்குநராகவே அவர் மதிக்கவில்லை. சிரிக்க சொன்னால் கூட சிரிக்க மாட்டார். அவரிடம், பத்து அடி தூரத்தில் நின்றுதான் பேசவேண்டும். அருகில் நெருங்கவே விடவில்லை.

நமிதாவின் ஊடல் – பயனைப் பிடிக்கவில்லை! உடன் நடித்த பையனை பிடிக்கவில்லை என்றார். ஒருவழியாக சமாதானம் ஆகி நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்துக்காக நமீதாவிடம் மொத்தம் 35 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். ஆனால், அவர் நடித்தது 25 நாட்கள்தான். அதற்கு மேல் நடிக்க மறுத்து விட்டார். அதனால் நான் நினைத்த கதையை படமாக்க முடியவில்லை. அதனாலதான் நினைத்தமாதிரி படம் வரவில்லை” என்றார் திரு.

இது பப்ளிசிட்டி டெக்னிக்-நமீதா: இதுகுறித்து நமீதாவிடம் பேசினோம். அவர் இப்படிச் சொல்கிறார், “உண்மையிலேயே திருவுக்கு படத்தை எடுக்கத் தெரியவில்லை. கிறுக்குத்தனமாக உளறுகிறார். உண்மையிலேயே இந்தப் படத்தை நான் பண்ணமாட்டேன் என்றுதான் சொன்னேன். என்னை வற்புறுத்திதான் நடிக்க வைத்தனர். தயாரிப்பாளர் சங்கம் வேறு கம்பெல் பண்ணார்கள். திருவுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அவர் பேசுகிற தமிழ் எனக்குப் புரியவில்லை. உதவிக்கும் யாரையும் அழைத்து வரமாட்டார். இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இதையெல்லாம் மீறி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தும் படத்தை குறித்த காலத்தில் முடிக்கவில்லை. மலிவான விளம்பரத்துக்காக இப்போது என் பெயரைக் கெடுக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு ரியாக்ட் பண்ணக்கூடாது என்று அமைதி காத்தது தவறாகப் போய்விட்டது. என்பெயரைக் கெடுத்து பப்ளிசிட்டி தேடித்தான் படத்தை ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அந்த டைரக்டர்…,” என்றார் நமீதா.

கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது!

மார்ச் 17, 2010
கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது
மார்ச் 17,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17006

குழந்தை, +2 மகள், மகள், மகன்……………… சினிமாவில் நடிக்க வைக்கவேண்டும், கதாநாயாகியாக்க வேண்டும் என்று பெற்ற தாய்களே தயாராக உள்ளார்கள் என்பதை நினைத்தௌப் பார்க்கும் போது, அவர்கள் – அந்தா தாயார்கள் – தனது மகளை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

உண்மையை சொல்ல போனால், எந்த தாயும் அவ்வாறு விரும்பமாட்டாள், ஏனெனில் ஒரு நிலையில் / இன்றைய சூழ்நிலையில் விபச்சாரத்திற்கு போவதும் நடிகைத் தொழிலும் ஒன்றுதான். ஐங்குணக்களை விடுத்துதான் அவள் வாழ வேண்டும். இருப்பினும் மாதம் லட்சம் கொடுக்கிறேன் என்றால் நம்பி நடீகப் போகிறேன் இல்லை அனுப்புகிறேன் என்று பெண்கள் புறப்பட்டுவிட்டது எதனைக் காட்டுகிறது?

நிச்சயமாக வீட்டுக்கு வீடு கலர்-டிவி, டன் டனா-டன் கொடுத்து, நன்றாகவே சினிமா பித்தை ஏற்றிவிட்டிருப்பது தெரிகிறது.

வென்றுவிட்டார்கள் அந்த தந்தையும், மகனும் – தோற்று விட்டார்கள் இந்த தாயார்களும், மகன்களும்!

வாழ்க தமிழச்சிகள்!

செம்மொழி!!

கனிமொழி!!! [பெண்கள் டிவி சீரியல் பார்க்க வேண்டாம் என்று சொன்னதற்காக]

Important incidents and happenings in and around the world
நடிப்பு சொல்லிக்கொடுக்கும் இயக்குனர்: ராணுவ மேஜரின் மகளை சினிமா கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஸ்ரீரங்கனின் மகன் அரவிந்த் மேத்தா(32). பளஸ் 2 படித்த இவர், சினிமா பயிற்சிக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று நடிகராக முயன்றார்.  வாய்ப்புக் கிடைக்காததால், சொந்த ஊருக்குச் சென்று ப.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவர், மீண்டும் 2001 – 04ம் ஆண்டில், இயக்குனர் பயிற்சி பெற்றார்.இயக்குனர் வாய்ப்பு தேடிய போது, அதுவும் கிடைக்கவில்லை. இயக்குனராகும் ஆசையில், தி.நகர் அபபுல்லா தெருவில், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்தார். அங்கு, “ஜீனியஸ்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அப்பயிற்சி மையத்தில், 5,400 ரூபாய் கட்டணத்தில், ஆறு மாத நடிப்பு, இயக்குனர் பயிற்சி அளித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சில படங்களில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.“மிரர் விஷன்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம், “நிலவே வருக’ என்ற புதிய படத்தை எடுப்பதாகவும், அப்படத்திற்கு புதுமுக நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரம் செய்தார்.

எடுக்காத படமும், பூட்டிய வீடும்: இவ்விளம்பரத்தைப் பார்த்து, திருச்சியில் ராணுவ மேஜராக பணிபுரியும் ரீட்டா(41) என்பவர் அரவிந்த் மேத்தாவை தொடர்பு கொண்டார்.பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஜெனிபரை, நடிகையாக்குமாறு கேட்டார். ஜெனிபரை ஹீரோயின் ஆக்குவதாக ஒப்புக் கொண்ட அரவிந்த் மேத்தா, படம் தயாரிக்க பணம் வேண்டும் என கேட்டார். தன் மகளை ஹீரோயின் ஆக்குவார் என நம்ப, ரீட்டா முதலில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார். புதிய படத்திற்கு பூஜை போட்ட அரவிந்த் மேத்தா, இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும் படத்தை முடிக்கவில்லை. இதுகுறித்து ரீட்டா ஆறு மாதங்களுக்கு முன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். விரைவில் படத்தை முடித்து வெளியிடுவதாக அரவிந்த் மேத்தா போலீசாரிடம் உறுதியளித்தார்.இந்நிலையில், கடந்த வாரம் ரீட்டா மீண்டும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். “முன்பு போலீசில் கூறியபடி, அரவிந்த மேத்தா படத்தை முடித்து வெளியிடவில்லை. அவரது சினிமா பயிற்சி மையமும் மூடப்பட்டுள்ளது’ என, ரீட்டா புகாரில் கூறினார். இதுமட்டுமின்றி, சந்துரு, வெங்கடேசன் ஆகியோரும், அரவிந்த மேத்தா பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்தனர்.போலீசார் அபபுல்லா தெருவில் உள்ள அரவிந்த மேத்தா வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் உரிமையாளர், “அரவிந்த மேத்தா மூன்று மாதமாக வாடகை தரவில்லை. அட்வான்சில் கழித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்’ என, போலீசில் கூறினார். அரவிந்த மேத்தாவை போலீசார்  கைது செய்தனர்.

சினிமா மோகத்தால் சீரழிந்த மாணவி! பரபரப்பு தகவல்கள்!!

March 17, 2010

தனியார் திரைப்பட கல்லூரி: சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நி‌லவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் – நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

பிளஸ் 2 மகளை நடிகையாக்க விரும்பிய தாயார்! இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

டைரக்டர் – அரவிந்தனின் வாக்குமூலம்: இதையடுத்து டைரக்டர் அரவிந்‌தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ – மாணவிகளை வைத்து “நிலவே வருக’ என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். இவ்வாறு அரவிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி சினிமா இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன
மார்ச் 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17045

Important incidents and happenings in and around the world

ரீட்டாவைத் தொடர்ந்து – கரோலின், பானு, நசீமா அக்தர்: கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனருக்கு எதிராக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரவிந்த் மேத்தா தங்களையும் ஏமாற்றியதாக, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். நேற்று புகார் அளித்த தரமணி எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்த கரோலின்(22) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, இரண்டாவது கதாநாயகி ஆக்குவதாகக் கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். கடந்த ஜனவரி 22ம் தேதி பணம் கொடுத்தேன். கணேசன் என்பவர் தான் பணத்தை வாங்கிச் சென்றார். பணத்தை பெற்றுக் கொண்ட அரவிந்த், கால்ஷீட் டைரி, ஐ.டி., கார்டு ஆகியவற்றை கொடுத்தார். ஆனால், படப்பிடிப்பை துவக்கவில்லை; போட்டோ ஷூட் கூட நடத்தவில்லை. சில வாரம் கழித்து, ‘எப்போது படப்பிடிப்பு?’ என கேட்ட போது, காலம் கடத்தி வந்தார். மீண்டும் அலுவலகம் சென்று கேட்ட போது, ‘உன்னை சினிமா துறையில் நுழைய விடாமல் செய்து, ஆளையே காலி செய்து விடுவேன்’ என, அரவிந்த் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த வாசு, ‘நானும் போலீஸ் தான்; நீ எங்கு வேண்டுமானாலும் போ’ என மிரட்டினார். இவ்வாறு கரோலின் கூறினார்.

பானுவின் அனுபவங்கள்: குழந்தை நட்சத்திரம் ஆக்க ஆசைப்பட்டாராம்!: மூலக்கடை டீச்சர்ஸ் காலனி முதல் தெருவைச் சேர்ந்த பானு(29) என்பவர் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, எனது மகள் நந்தினியை நடிக்க வைக்கும் எண்ணத்தில் அரவிந்தை அணுகினேன். என் மகளை நடிக்க வைக்க 15 ஆயிரம் ரூபாய் கேட்டதால், பணம் கொடுத்தேன். ‘இமை தேடும் கண்கள்’ என்ற படத்தில் என் மகள் உட்பட 12 குழந்தைகளை நடிக்க வைப்பதாகக் கூறினார். என் மகளை நடிக்க வைப்பதற்கான தேதியை, மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார். என்னிடம், ‘உன் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது; உன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக சேர்த்து விடுகிறேன்’ எனக் கூறி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.

“ராத்திரிக்கு வா என்று கூட்டது”: ஒரு நாள் அலுவலகத்தில் அரவிந்தின் நண்பர் குட்டியான் பாபு, ‘நான் தான் படத்தின் டைரக்டர். நீ உண்மையிலேயே நடிக்க வேண்டும் என ஆசையிருந்தால், நான் சொல்கிறபடி நட. எனக்கு மட்டும் நீ ஒரு நாள் இரவு கம்பெனி கொடுத்தால், அடுத்த நாளே உன்னையும், உன் மகளையும் நடிகை ஆக்கி விடுவேன்’ என்றார். ‘இதே போன்று எனக்கு கம்பெனி கொடுத்த பலரை நடிகை ஆக்கியிருக்கிறேன்’ என குட்டியான் பாபு கூறினார். பயந்து போன நான், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். என்னை தொடர்ந்து பஸ் நிலையம் வரை வந்த குட்டியான் பாபு, ‘நான் சொல்கிறபடி நடக்காவிட்டால், உன்னை சினி பீல்டிலேயே வரவிடாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். என் தம்பி சீனிவாசனை, ‘ஆயுள் தண்டனை’ என்ற படத்தில் எஸ்.ஐ., வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, அரவிந்த் 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். இரண்டு நாள் சாப்பாடு கட்டணமாக 1,800 ரூபாய் வசூலித்தார். இவ்வாறு பானு கூறினார். சீனிவாசனும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் அளித்தார்.

மகனை நடிகனாக்க ஆசைப் பட்ட நசிமா அக்தர்! சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த நசீமா அக்தர்(35) அளித்த புகாரில் கூறியதாவது: என் மகனை நடிக்க வைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அரவிந்த், மகனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, அரவிந்திடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தேன். என் மகனை நடிக்க வைக்காததால், அரவிந்திடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி 6,000 ரூபாய்க்கு செக் கொடுத்தார். வங்கியில் கேட்ட போது, அந்த வங்கிக் கணக்கே இல்லை என தெரிவித்தனர். மற்றொரு வங்கியில் கொடுத்த செக்கும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ‘செக் வேண்டாம்; பணமாகக் கொடு’ என கேட்ட போது, ‘இன்னும் ஒருமுறை இங்கே பணம் கேட்டு வந்தால், உன் பிணம் தான் இங்கே இருக்கும்’ என மிரட்டினார். இவ்வாறு நசீமா அக்தர் கூறினார்.

இரண்டாவது கதாயனாக ஆசைப்பட்ட மணிக்குமார்! கிண்டி மடுவங்கரை, புதுத் தெரு மசூதி காலனியைச் சேர்ந்த மணிகுமார்(24) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, ‘தாய் தந்தை தாரம்’ என்ற படத்தை எடுக்கிறேன். உன்னை இரண்டாவது கதாநாயகன் வேடத்தில் நடிக்க வைக்கிறேன்’ எனக் கூறி, 16 ஆயிரம் ரூபாய் கேட்டார். மேக்கப் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட், போட்டோ எடுக்கவும் பணம் கேட்டார். மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். என்னை வைத்து போட்டோ எடுத்தார். அதன் பிறகு, எந்த சரியான பதிலும் சொல்லவில்லை. கடைசியாக ஜனவரி 22ம் தேதி கேட்ட போது, ‘எனக்கு நிறைய ஆள் செல்வாக்கு உள்ளது; உன்னை ஆளே இல்லாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். இவ்வாறு மணிகுமார் கூறினார்.

சினிமா ஆசையை பயன்படுத்திக் கொண்ட சினிமா ஸ்டை மோசடி: அரவிந்த் மேத்தாவுடன், மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால், மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்? சினிமா இயக்குனர் அரவிந்த் மேத்தா மீது நேற்று மேலும் பலர் புகார் கொடுத்தனர். வேலூரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். சாந்தியைப் போல், தமிழகம் முழுவதும் பலரை அரவிந்த் மேத்தா ஏமாற்றி பணம் வசூலித்துள்ளார். ஏமாந்தவர்களில் மேலும் சிலர் இன்று புகார் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அரவிந்த் மேத்தா, தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருப்பதால், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. இக்கும்பல் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி கற்பழித்திருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் மேத்தாவை, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அரவிந்த் மேத்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தும் போது, அவரிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து மேலும் விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். ஏதோ “டிப் ஆஃப் தி ஐஸ் பர்க்” (பனிக்கட்டியின் நுனியைத் தட்டிவிடுவது போல) என்பார்களே அது போல ஒரு துளி தான் சிதறியிருக்கிறது!

கோடம்பாக்கத்தில் இதெல்லாம் 60ற்கும் மேற்பட்ட வருடங்களாக சகஜமாக நடக்குன் விஷயங்கள்தாம்!

இதைப்போல பிரபலமில்லாத, பிரபலமிழந்த, நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள்………….பல கதைகளை, மன்னிக்கவும், உண்மைகளை முழு விவரங்களுடன் சொல்லுவார்கள்.

கேட்டால் திகைக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனெனில் அவ்வாறான விஷயங்களில் இப்பொழுதுள்ள பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்தான்!