நடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (2)!
நடிகை–மனைவி கணவனைப் பற்றி கூறுவது: தற்கொலை செய்து கொண்ட கணவன் பற்றி, மனைவி சொல்வது நோக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, “எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். என்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார்[1]. வேலைவாங்கி தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு வெண்ணிலா என்ற வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்[2]. அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார். இறந்த பின்னர், இன்னும் நேசிக்கிறேன் என்பதே புதிராக இருக்கிறது. தீர்மானமாக பிரிந்து வந்த பிறகு, நேசிப்பது என்றால் என்ன என்று புரியவில்லை. இதிலும் ஒன்றும் புதுமையாக இல்லை, கணவன் இறந்து விட்டான், இனி நிம்மதிதான் என்ற போக்கு வெளிப்படுகிறது. பொதுவாக, இறந்தவர் மீது குற்றம் சொல்லமாட்டார்கள், நந்தினி சொல்லியாகி விட்டது, அதாவது, ஒரு தீர்மானத்தோடு இருப்பது தெரிகிறது.
தற்கொலை செய்த கொண்ட பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டு: அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி, “எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்,” என அவர் கூறினார். இந்நிலையில் அதே நாளில் வெளிவந்த செய்தியில், நடிகை ரம்பா விவாகரத்து விவகாரத்தில், கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டு, வெற்றி பெற்றது தெரிகிறது.
நடிகை ரம்பா விசயத்தில் சமரசம்[3]: தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது[4].
திரையுலக தம்பத்தியத்தின் வெற்றி-தோல்விகள் – சில உதாரணங்கள்: ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதை கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவகாரத்துடன் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மாறுபாடாக இருக்கிறது. இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால், அவ்வாறு நோக்கப்படுகிறது. தமிழக சினியுலக தம்பதியரை ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில தம்பதியரே வெற்றிகரமாக தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து, உதாரணத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். அதில், சிவகுமார்-லக்ஷ்மி, ஜெயசங்கர்- போன்ற தம்பதியரைக் குறிப்பிடலாம். இவ்விவகாரங்களில் கமல் ஹஸன் தான் நிச்சயமாக மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது,. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, இரண்டு பெண்களின் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், இன்றைக்கு வரை “கணவன்–மனைவி தாம்பத்திய உறவு தோல்வி”யின் சின்னமாகவே திகழ்கிறார். அவ்வாறு மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகும், “சேர்ந்து வாழும்” இலக்கணத்தை காட்டுகிறேன் என்பது போல, கௌதமியுடன் வாழ்ந்தாலும், அதிலும் தோல்வியை அடைந்து, சாதனையைப் படைத்துள்ளார். இன்று தேவையில்லாமல், பல பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.
கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் காதல்-மோதல் ஏன்?: கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவாகரத்திற்குச் செல்லவில்லை, நீதிமன்றத்திற்கு போகவில்லை. இதிலிருந்து இருதரப்பிலிம் பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட “ஒவ்வாமை” பூதாகாரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையே பிரிந்து வாழும் வாழ்க்கை நிலையானது. முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள் இருவருக்கும் தெரிந்தும் இருந்தது. இருப்பினும், நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கேள்விகளை எழுப்புகின்றன. “என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்”, என்பது உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை. அது உண்மையாயின், பெண்மையின் சபலம் புலப்படுகிறது. அது “சரவணன்-மீனாக்ஷி” தொடரில் வெளிப்பட்டதாகவும் உள்ளது.
பிரிந்து வாழும் பெண்னின் நிலை: எக்காலத்திலும், திருமணம் ஆகி, கணவனைப் பிரிந்து வந்து, வாழும் பெண்ணின் வாழ்க்கை பலவிதங்களில் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஆனால், சமூகத்தில், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்காரர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால், மத்திய வர்க்க மற்றும் ஏழைக் குடும்பங்களில் அது பெரிய பிரச்சினையாகிறது. “பந்தம்-முறிவு”, பிரிந்து வாழ்வதினால், நிதர்சனமாகவோ, சட்டப்படியோ முறிந்ததாகாது.
- சாதாரண, சமூகத்தின் பேச்சிற்கு பயந்து,
- குடும்ப கௌரவம் காக்கப்பட வேண்டும்,
- இல்லை பெற்றோர்-சகோதரர்-உறவினர்கள்,
- “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நிலையில் –
உள்ள பெண்கள் தாம் பிரிந்து சென்று மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். தனது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கூட புகார் கொடுக்காமல் “பெருந்தன்மையோடு” இருந்து விடுகிறாள். குழந்தை, இருந்தால், கூட எந்த உதவியையும் எதுர்பார்க்காமல், அதனையும் வளர்த்து பெரியவனாக்குகிறாள். ஆனால், “தந்தை” என்பவன், தனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பது பல உதாரணங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் “ஜீவனாம்சம்” கேட்டு வழக்குகள் போடுவதும், அளிக்கப் பட்ட “ஜீவனாம்சம்” போதாது என்று, மேலும் வழக்கு போடும் பெண்கள் இருக்கிறார்கள். அந்நிலையில் “விவாக ரத்து” தேவையாகிறது.
கணவன் தற்கொலை – தீர்வு என்ன?: “விவாக ரத்து” ஆனாலும், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்து வாழ்கிறார்கள். நவநாகரிகமான பெண்கள் சிலர் வேண்டுமானால், மறுமணம் செய்து கொள்கின்றனர். சினிமா உலகத்தில் யாரும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை. ஆனால், இங்கு, ஒரு ஆண், “பிரிவு-தற்கொலை” விசயத்தில் உதாரணமாகி விட்டான். ஒன்று-இரண்டு என்று திருமண உறவுகல் தோல்வி, பணப்பிரச்சினை, இரண்டாவது மனைவி சம்பாதிக்கிறாள், ஆனால், தன்னால் சம்பாதிக்க முடியவில்லை, போதா குறைக்கு இரவில் நேரங்கழித்து வருவதால் ஏற்பட்ட சந்தேகங்கள் முதலியவை அந்த ஆணை கோழையாக்கி விட்டது போலும். முன்பே குறிப்பிட்டது போல, திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது. ஆனால், ஆண் தற்கொலை செய்து கொண்டால், எந்த சட்டமும் இல்லை. இவ்வாறு அவலங்கள் தொடருகின்றன. எனவே, சாதாரண மக்கள், இந்த சினிமா-மாயை, திராவிட மாயை, பகுத்தறிவு மாயை முதலியவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.
© வேதபிரகாஷ்
06-04-2017
[1] வெப்துனியா, நந்தினியை சும்மா விட மாட்டேந் – மாமியார் ஆவேசம், புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nandhini-s-mother-in-law-revengy-for-her-son-death-117040500015_1.html
[3] தினத்தந்தி, நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு, ஏப்ரல் 05, 06:51 PM
[4] http://www.dailythanthi.com/News/State/2017/04/05185117/Rumba-husband-With-Indrakumar-Consent-to-live-together.vpf