Archive for the ‘மனைவி’ Category

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (2)!

ஏப்ரல் 7, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (2)!

Karthikeya- Nandini marriage failure

நடிகைமனைவி கணவனைப் பற்றி கூறுவது: தற்கொலை செய்து கொண்ட கணவன் பற்றி, மனைவி சொல்வது நோக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, “எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். என்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார்[1]. வேலைவாங்கி தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு வெண்ணிலா என்ற வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்[2]. அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.  இறந்த பின்னர், இன்னும் நேசிக்கிறேன் என்பதே புதிராக இருக்கிறது. தீர்மானமாக பிரிந்து வந்த பிறகு, நேசிப்பது என்றால் என்ன என்று புரியவில்லை. இதிலும் ஒன்றும் புதுமையாக இல்லை, கணவன் இறந்து விட்டான், இனி நிம்மதிதான் என்ற போக்கு வெளிப்படுகிறது. பொதுவாக, இறந்தவர் மீது குற்றம் சொல்லமாட்டார்கள், நந்தினி சொல்லியாகி விட்டது, அதாவது, ஒரு தீர்மானத்தோடு இருப்பது தெரிகிறது.

 Karthikeyan - suicide note

தற்கொலை செய்த கொண்ட பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டு: அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி, “எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்,” என அவர் கூறினார். இந்நிலையில் அதே நாளில் வெளிவந்த செய்தியில், நடிகை ரம்பா விவாகரத்து விவகாரத்தில், கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டு, வெற்றி பெற்றது தெரிகிறது.

Karthikeyans mothers grudge against Nandini

நடிகை ரம்பா விசயத்தில் சமரசம்[3]: தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில்  இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது[4].

Ramba - divorce resulted in union

திரையுலக தம்பத்தியத்தின் வெற்றி-தோல்விகள் – சில உதாரணங்கள்: ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதை கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவகாரத்துடன் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மாறுபாடாக இருக்கிறது. இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால், அவ்வாறு நோக்கப்படுகிறது. தமிழக சினியுலக தம்பதியரை ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில தம்பதியரே வெற்றிகரமாக தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து, உதாரணத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். அதில், சிவகுமார்-லக்ஷ்மி, ஜெயசங்கர்- போன்ற தம்பதியரைக் குறிப்பிடலாம். இவ்விவகாரங்களில் கமல் ஹஸன் தான் நிச்சயமாக மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது,. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, இரண்டு பெண்களின் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், இன்றைக்கு வரை “கணவன்–மனைவி தாம்பத்திய உறவு தோல்வி”யின் சின்னமாகவே திகழ்கிறார். அவ்வாறு மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகும், “சேர்ந்து வாழும்” இலக்கணத்தை காட்டுகிறேன் என்பது போல, கௌதமியுடன் வாழ்ந்தாலும், அதிலும் தோல்வியை அடைந்து, சாதனையைப் படைத்துள்ளார். இன்று தேவையில்லாமல், பல பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.

Sivakumar wife Laksmi

கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் காதல்-மோதல் ஏன்?: கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவாகரத்திற்குச் செல்லவில்லை, நீதிமன்றத்திற்கு போகவில்லை. இதிலிருந்து இருதரப்பிலிம் பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட “ஒவ்வாமை” பூதாகாரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையே பிரிந்து வாழும் வாழ்க்கை நிலையானது. முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள் இருவருக்கும் தெரிந்தும் இருந்தது. இருப்பினும், நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கேள்விகளை எழுப்புகின்றன. “என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்”, என்பது உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை. அது உண்மையாயின், பெண்மையின் சபலம் புலப்படுகிறது. அது “சரவணன்-மீனாக்ஷி” தொடரில் வெளிப்பட்டதாகவும் உள்ளது.

Karthikeyan - suicide note-implicating

பிரிந்து வாழும் பெண்னின் நிலை: எக்காலத்திலும், திருமணம் ஆகி, கணவனைப் பிரிந்து வந்து, வாழும் பெண்ணின் வாழ்க்கை பலவிதங்களில் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஆனால், சமூகத்தில், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்காரர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால், மத்திய வர்க்க மற்றும் ஏழைக் குடும்பங்களில் அது பெரிய பிரச்சினையாகிறது. “பந்தம்-முறிவு”, பிரிந்து வாழ்வதினால், நிதர்சனமாகவோ, சட்டப்படியோ முறிந்ததாகாது.

  • சாதாரண, சமூகத்தின் பேச்சிற்கு பயந்து,
  • குடும்ப கௌரவம் காக்கப்பட வேண்டும்,
  • இல்லை பெற்றோர்-சகோதரர்-உறவினர்கள்,
  • “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நிலையில் –

உள்ள பெண்கள் தாம் பிரிந்து சென்று மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். தனது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கூட புகார் கொடுக்காமல் “பெருந்தன்மையோடு” இருந்து விடுகிறாள். குழந்தை, இருந்தால், கூட எந்த உதவியையும் எதுர்பார்க்காமல், அதனையும் வளர்த்து பெரியவனாக்குகிறாள். ஆனால், “தந்தை” என்பவன், தனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பது பல உதாரணங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் “ஜீவனாம்சம்” கேட்டு வழக்குகள் போடுவதும், அளிக்கப் பட்ட “ஜீவனாம்சம்” போதாது என்று, மேலும் வழக்கு போடும் பெண்கள் இருக்கிறார்கள். அந்நிலையில் “விவாக ரத்து” தேவையாகிறது.

Karthikeya- Nandini marriage failure-suicide

கணவன் தற்கொலை – தீர்வு என்ன?: “விவாக ரத்து” ஆனாலும், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்து வாழ்கிறார்கள். நவநாகரிகமான பெண்கள் சிலர் வேண்டுமானால், மறுமணம் செய்து கொள்கின்றனர். சினிமா உலகத்தில் யாரும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை. ஆனால், இங்கு, ஒரு ஆண், “பிரிவு-தற்கொலை” விசயத்தில் உதாரணமாகி விட்டான். ஒன்று-இரண்டு என்று திருமண உறவுகல் தோல்வி, பணப்பிரச்சினை, இரண்டாவது மனைவி சம்பாதிக்கிறாள், ஆனால், தன்னால் சம்பாதிக்க முடியவில்லை, போதா குறைக்கு இரவில் நேரங்கழித்து வருவதால் ஏற்பட்ட சந்தேகங்கள் முதலியவை அந்த ஆணை கோழையாக்கி விட்டது போலும்.  முன்பே குறிப்பிட்டது போல, திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது.  ஆனால், ஆண் தற்கொலை செய்து கொண்டால், எந்த சட்டமும் இல்லை. இவ்வாறு அவலங்கள் தொடருகின்றன. எனவே, சாதாரண மக்கள், இந்த சினிமா-மாயை, திராவிட மாயை, பகுத்தறிவு மாயை முதலியவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.

© வேதபிரகாஷ்

06-04-2017

Jaishakar actor

[1] வெப்துனியா, நந்தினியை சும்மா விட மாட்டேந் –  மாமியார் ஆவேசம், புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nandhini-s-mother-in-law-revengy-for-her-son-death-117040500015_1.html

[3] தினத்தந்தி, நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு, ஏப்ரல் 05, 06:51 PM

[4] http://www.dailythanthi.com/News/State/2017/04/05185117/Rumba-husband-With-Indrakumar-Consent-to-live-together.vpf

 

Advertisements

டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

திசெம்பர் 3, 2016

டிவி-கட்டப்பஞ்சாயத்து- இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது – சொன்னது நடிகை ராதிகா!

khushboo-ramakrishnan-sripriya

விகடனுக்கு ஶ்ரீபிரியா சொல்லியது[1]: இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “எப்ப டீவியை போட்டாலும் எதோ குடும்பத்தின் பிரச்னையும் கண்ணீரும் அடிதடியும்தான் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் தமிழ் சேனல்களை மட்டும் சொல்ல வில்லை. தென்னிந்திய சேனல்கள் அனைத்திலும் இதுதான் இருக்கிறது. இன்னும் சொல்வதானால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அனைவரும் எனக்கு மிக நெருக்கம். இருந்தாலும் என் கருத்தினையும் என் உணர்வினையும் பகிர்ந்துதானே ஆக வேண்டும். திரைத்துறையில் அடிமட்ட தொழிலாளிகளான புரொடக்ஷன் உதவியாளரில் தொடங்கி தயாரிப்பாளர், கலைஞர்கள், இயக்குநர்கள் வரை மிகமிக உணர்வு பூர்வமானவர்கள். கண்ணீர் சுரப்பி என்பது நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆசையுடன் திரைத்துறைக்குள் வந்த அனைவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். நிகழ்ச்சியை நடத்தும் முன்னணி நடிகைகளுக்கு அங்கு பங்கேற்கும் நபர்களின் பின்னணியோ, பிரச்னைகளின் ஆழமோ 100 சதவிகிதம் முழுதாக தெரியப்போவதில்லை.”

 khushboo-rowdism-malaimalar-photo

நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே[2]: ஶ்ரீபிரியா தொடர்கிறார், “அப்படியான சூழலில் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் அதை கேமரா இல்லாமலே செய்யலாமே. இன்றைக்கும் சினிமாவில் எவ்வளவோ பேர் சத்தமில்லாமல் உதவி வருகின்றனர். அதே போல தனிப்பட்ட மனிதர்களின் துயரங்களையோ, கஷ்டங்களையோ வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற குடும்பப் பிரச்னைகளில் ஈடுபடுவதை என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் 8-வது வரைதான் படித்துள்ளேன். ஒருவர் அவரின் வாழ்க்கை பிரச்னை குறித்து என்னிடம் யோசனை கேட்டாலோ அல்லது அந்த பிரச்னையை சொன்னாலோ என் அனுபவத்தின் அடிப்படையில்தான் என்னால் யோசனை சொல்லமுடியும். அதற்கு என படித்த சட்ட அறிஞர்களோ, குடும்ப நல ஆலோசகர்ளோ தான் சரியான ஆலோசனையோ, வழிகாட்டுதலோ செய்ய முடியும். யாரையும் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் என் நெருங்கிய தோழிகள்தான். இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை,” என்று தெரிவித்தார்[3].

khushboo-rowdism-malaimalar-photo-ranjani-condemns

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்: “இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம். ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாகநல்லடிரஸ்பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது,” இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக, பிரச்சினையை விட்டுவிட்டு, குழாயடி சண்டையில் இறங்கி விட்டனர். இனி, இவர்களுக்கு “கவுன்சிலிங்” கொடுக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

pooooo-pooooooooo-shouting-khusboo-inciting-fight

“ராடான்” ராதிகா கூறிய கருத்து[4]: அதேபோல், நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள். அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்று குறிப்பிட்டுள்ளார்[5]. பலமுறை திருமணம் செய்த இவர், இப்படி சொல்லியிருப்பதும் வேடிக்கைதான். “இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பறிவில்லாதவர்கள் சிக்குகிறார்கள்”. என்றால், முட்டாள் பெட்டி நிகழ்ச்சிகளை உருவாக்கும், இந்த அம்மையாரைப் பற்றி என்ன சொல்வது?அறிவில்லாதவர்கள் அதை பார்க்கும் வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிவே கிடையாது,” என்பது ஒப்புக்கொள்வது போன்றுதான் உள்ளது. ஆமாம், டிவி-நிகழ்ச்சிகள், ரீரியல்கள் இல்லையென்றால், இவர்களுக்கு, வரும்படி எங்கிருந்து வரும்? “தகுதி, அந்தஸ்து, யோக்கியதை” இவர்களை பாதித்து விட்டது என்று தெரிகிறது.

ranjani-sripriya-twitter-comments

தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியது[6]: “தொலைக்காட்சிகளில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்துகளுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தடை செய்யுமாறு மனித உரிமை ஆணையத்தில் முறையிட இருக்கிறோம். அவர்களால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும்எனக் கொந்தளிக்கிறார் தி.மு. செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், “ இதுபோன்ற நிகழ்ச்சிகள் பிரச்னைகளைத் தீர்ப்பது போலத் தெரியவில்லை. பிரச்னைகளை மேலும் மேலும் பூதாகரமாக்கும் வேலைகளையே செய்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில், யாரிடம் தவறு இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால், வேதனையோடு நிகச்சிகளுக்கு வருபவர்களை மிகவும் கஷ்டப்படுத்துகின்றனர். இது நாகரிகம் கிடையாது. குடும்ப நல நீதிமன்றங்களில் எதற்கு சமசர மையங்களை வைத்திருக்கிறார்கள்? தொலைக்காட்சிகளில் நாள்தோறும் ஒளிபரப்ப, இது ஒன்றும் நாடகம் கிடையாது. ஒரு குடும்பத்தின் கண்ணியம் காக்கப்படாமல் தொடர் போல் நடத்துவது சரிதானா? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது ஆரோக்கியமான சமூகத்துக்கு வழியமைக்காது. சில படங்களில் நடித்துவிட்டால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏதோ அரச சபையை நடத்துவதுபோல் மற்றவர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை மிரட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

family-courts-and-actresses

நடிகைகள்-கட்டப்பஞ்சாயத்து விசயத்தில் அமுக்கி வாசிக்கும் பெண்ணியங்கள்: குஷ்பு-கற்பு கருத்து விசயத்தில் பாமக கொதித்து எழுந்தது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குஷ்புவை காப்பாற்றினார் என்று தான் சொல்லவேண்டும், ஏனெனில், மற்ற வழக்குகளோடு, உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக இருந்தது. திமுக இப்படி கருத்து சொன்னபோது, மற்ற கட்சியினர் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. குறிப்பாக, பாஜகக்காரர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தமாஷாகத் தான் இருக்கிறது. பெண்ணிய வீராங்கனைகள் பற்றி சொல்லவே வேண்டாம், இதில் கூட “ரைட்-லெப்ட்” என்று பார்ப்பார்கள் போலும்.

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-fight-scene-sun-tv-radhika

எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை: குஷ்பு இப்படி சொன்னதே வியப்பாக இருக்கிறது. அரசியல், கோவில்-நுழைவு, பெண்ணியம், கற்பு, திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்று தாராளமாக அத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் கருத்து கூறும் குஷ்பு, இதற்கு ஒதுங்குவது வினோதமே! விகடன் நிருபர் நிஜங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை குஷ்புவிடம் பேசியபோது[7], “எதைப் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொரு ஒப்பீனியன் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை,” என்றதோடு முடித்துக் கொண்டார். என்று செய்தி காணப்படுகிறது[8]. அப்படியென்றால், அந்நிருபர், குஷ்பு சொன்னதை முழுமையாக வெளியிடவில்லை என்று தெரிகிறது. கருத்து என்று வரும் போது, அதிலும், நடிகைகள் குடும்பப்பிரச்சினை விசயத்தில், மனோதத்துவரீதியில் அல்லது கட்டப்பஞ்சாயத்து பாணியில், டிவி-நிகழ்ச்சிகள் நடத்தலாமா, என்ற கேள்வி எழுந்த விட்டப் பிறகு, இப்படி ஒதுங்குவது, அந்த “யோக்கியதை” பாதிக்க ஆரம்பித்து விட்டது என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

03-12-2016

actresses-cannot-solve-family-problems

[1] விகடன், நாம என்ன நாட்டாமையா?” –டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!, Posted Date : 10:00 (29/11/2016); Last updated : 15:07 (29/11/2016).

[2] தமிழன்.தொலைகாட்சி, என்னம்மா நீங்க இப்படி பண்ட்ரீங்களம்மா? டிஆர்பி .நடிகைகளிடம்ஸ்ரீப்ரியா கேள்வி !! , 30 நவம்பர் 2016.

[3]http://www.tamilantelevision.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3-33341.html

[4] தமிழ்.வெப்துனியா, அறிவில்லாதவர்கள் பார்க்கிறார்கள்பஞ்சாயத்து நிகழ்ச்சியை கலாய்த்த ராதிகா, Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (12:34 IST).

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actess-radhika-sarathkumar-twitteed-tv-shows-116113000015_1.html

[6] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[7] விகடன், இவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ –கொந்தளிக்கும் குஷ்பு, Posted Date : 16:30 (02/12/2016); Last updated : 16:46 (02/12/2016)

[8] http://www.vikatan.com/news/tamilnadu/74003-khushbu-slams-activists-for-condemning-family-debates-on-channels.art

குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா? நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா?:

நவம்பர் 19, 2016

குடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா? நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா?:

relations-coming-together-viji-chandrasekarநடிகைகள் ஒவ்வொரு செனல்களிலும் குடும்ப பஞ்சாயத்து செய்து வைப்பது: விஜய் டிவியின் “கதையல்ல நிஜம்” தொடங்கி இன்றைய சன்டிவியில் “நிஜங்கள்” வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. என்னத்தான் நிஜம், உண்மை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவர்கள் “குடும்பம்”, “உறவு” முதலிய காரணிகளில் போலியாக இருப்பதால், அந்நிகழ்ச்சிகள் வேடிக்கைக்காக, பொழுது போக்கிற்காக அமைகிறதே அன்றி, “உண்மைக்காக” – “நிஜத்திற்காக” யாரும் பார்ப்பதாக இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது[1]. எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது[2]. அதிகம் அழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது. ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

family-courts-and-actressesகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சின்னிமா நடிகைகளும் ஒன்றாவார்களா?: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா? நடிகை என்ற தகுதி மட்டும் போதுமா?

tv-show-responsible-for-the-suicide-of-the-driverலாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்[3]: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்தார். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்தினார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்தார். இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்[4]. இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால், போன உயிர் வராதே?

actress-gita-chided-transgender-for-relationship-11-2016

20 வயது பெண், 23 வயது திருநங்கையை கல்யாணன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததை கண்டித்த நடிகை கீதா: நடிகை கீதா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர். 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா? என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார். மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6].

could-lakhsmi-viji-roja-khushboo-have-solved-their-problemsஇவ்விசயத்தில் கீதா சொன்னதில் தவறில்லை: 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கல்யாணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தது தவறு என்று கண்டிக்க, “ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா?,” என்று அந்த பெண்ணிடம் நிதர்சனமாக கேட்டதில் தவறில்லை. ஏனெனில், திருமங்களைகள், கல்யாணம் செய்து கொண்டால், குழந்தை பெறமுடியாது. அதிலும், பெண், திருநங்கையை திருமணம் செய்வது என்பது அபத்தமானது. அப்பெண் இக்காலத்தில் ஏதோ புரட்சிகரமாக செய்ய வேண்டும் என்றா ரீதியில், குழப்பத்தில் மேற்கொண்ட முடிவு என்று சொல்லலாம். மேலும், டிவி-ஷோக்களில் அவ்வாறு பங்கு கொள்வது, விளம்பரத்திற்காக என்றும் சொல்லலாம். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறியது சரியாகத்தான் உள்ளது.

amala-paul-divorceசினிமா நடிகைகளை வைத்து, பேட்டி கண்டு, அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போல டிவி-செனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்களா?:  சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா? ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா? டிவி-செனல்கள் முன் வருவார்களா? இல்லை அந்த நடிகை-நடிகர்கள் முன் வௌவார்களா?

© வேதபிரகாஷ்

19-11-2016

khushboo-show

[1] பிளிமி.பீட்.தமிழ், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, Posted by: Mayura Akilan, Published: Wednesday, October 5, 2016, 9:01 [IST]

[2]  http://tamil.filmibeat.com/television/lakshmi-ramakrishnan-kushboo-tv-reality-show/slider-pf50425-042581.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை? புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன், By: Karthikeyan, Published: Sunday, September 4, 2016, 1:55 [IST]

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/lakshmy-ramakrishnan-explanation-about-landed-controversy-261945.html

[5] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-you-can-have-relationship-after-marriage-actress-geetha-in-telugu-tv-program-116110700032_1.html

[7] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)

கமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)

நவம்பர் 2, 2016

கமல்கவுதமி விவகாரம்மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)

Shruti_Hassan_Gautami_2016_08_16_18_27_33

தன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2].  தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.

gautami-met-modi-10-2016

மோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.

492080-shruti-gautami

01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு  நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.

மகள் / பெண்   2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்
சுருதி 1986 17 30
அக்ஷரா 1991 12 25
சுப்புலக்ஷ்மி 1999 4 17

தாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.

kamal-shruti-gautami

குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதுகுழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்?

ஸ்ருதி, கௌதமி

சுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டதுஎங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியதுஇப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”

 

© வேதபிரகாஷ்

02-11-2016

Kamal new relationship it is too real, but not so real

Kamal new relationship it is too real, but not so real

[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=255941

[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)

[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actress-gauthami-had-a-meet-with-narendra-modi-about-life-again-foundation-116102800035_1.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!, By: Mathi, Updated: Tuesday, November 1, 2016, 22:54 [IST]

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html

[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்!

ஓகஸ்ட் 19, 2016

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்!

Shruti_Hassan_Gautami_2016_08_16_18_27_33

மகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்த மற்றும் கணவன்: கமல் ஹஸன் பொருத்த வரையிலும், பெண்களிடம் கொண்ட உறவுகள் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்துள்ளன. திரைக்கு முன் மற்றும் பின் என்று அவ்விவகாரங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இருந்துள்ளன. கௌதமி கமலுடன் சேர்ந்து வாழும் முறையில் வந்து சேர்ந்த பிறகு, ஸ்ருதி மற்றும் பல்லவி இருவருக்கும் தாயன்பு கிடைத்தது என்ற விதத்தில் கூட சொல்லப்பட்டது. ஆனால், பெண்கள் வளர-வளர சிறிது சிறிதாக வேறுபாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கமலின் துணைவி கவுதமி இருந்து வருகிறார். அந்த வகையில், சபாஷ் நாயுடு படத்திற்கும் கவுதமி காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில், கவுதமியை தவிர்த்து படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டாக்களை சமூக வலை தளங்களில் கமலின் இரு பெண்களும் வெளியிட்டனர். இது கவுதமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது[1]. மேலும், அமெரிக்காவில் கவுதமி தரும் ஆடைகளை குறை சொல்லி, வேண்டாம் என்று மறுத்து ரகளை செய்துள்ளார் ஸ்ருதி[2]. இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிப்பதை அறிந்த கமல் ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளார். ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

492080-shruti-gautami

சபாஷ் நாயுடுபடத்தின் படப்பிடிப்பின் போது கெளதமிஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு: ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவில் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பின் போது கெளதமி – ஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்த படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது[3] என்கிறது தினத்தந்தி. அதாவது, கமலுக்கு சாதகமாக செய்தியை வெளியிட்டது போலும்.

kamal-shruti-gautami

ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம்: இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்[4]. அதில், “ஸ்ருதி ஒரு ஃபேஷன் பிரியை. அதனால் அவரது படங்களிலும் கூட அது பிரதிபலிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதேவேளையில் தயாரிப்பாளர், இயக்குநருடன் இணைந்தே தன்னுடைய தோற்றம் ஆடைகளை அவர் இறுதி செய்கிறார். அப்படித்தான் அவரது தந்தையின் படத்திற்கும் அவர் மெனக்கெட்டிருக்கிறார். தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் தனக்கென்று ஒரு தனி டிசைன் என்று தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் விரும்புகிறார். தனது ஆடை அலங்காரம் பற்றி இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் அவர் கலந்து பேசுவது வழக்கம்[5]. ஆனால், இம்முறை பேசவில்லையா என்ன? இப்பொழுது, தோற்றம் ஆடைகளை தேர்ந்தெடுப்பது ஸ்ருதிக்கு என்பதால் தான் பிரச்சினையே. ஸ்ருதி, அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடிப்பது, கௌதமிக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ள வேளையில், தெலுங்கில் தாராளாமாக கவர்ச்சி காட்டி வரும் ஸ்ருதி, இப்படத்திலும் அவ்வாறே தோன்ற விரும்பியதில் வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

ஸ்ருதி, கௌதமி

ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது: ‘சபாஷ் நாயுடு’வில் ஸ்ருதியின் கதாபாத்திரம் வித்தியாசமானது. ஒரு ஃபேஷனபிள் இளம் பெண். குறும்புக்கார பெண். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளர்ந்த கவலைகள் அறியா பெண்ணாக நடிக்கிறார். இதை மனதில் கொண்டு கெளதமி சில ஆடைகளை ஸ்ருதிக்காக வாங்கினார். ஆனால், வழக்கம்போல் அந்த ஆடை அலங்காரப் பொருட்கள் பற்றி தயாரிப்பாளர் மற்ற கலைஞர்களுடன் ஆலோசித்தபோது ஸ்ருதிக்கு அந்த ஆடைகளை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் ஆடைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. கெளதமியும் அதை ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைக்குப் பின்னர் அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து திரையுலகில் ஒருவர் “ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது[6]. ஸ்ருதிக்கும் கமலுக்கும் இடையில் அன்பும் திறந்த மனப்பான்மையும் கொண்ட உறவு நிலவுவதால் அவர்கள் குடும்பத்தில் கெளதமியையும் ஏற்றுக் கொண்டனர். ஸ்ருதி தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய போது, அதில் கெளதமியும் பங்கேற்றுக் கொண்டார். இதிலே அவர்களுடைய உறவு எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்கும்” என்று தெரிவித்தார்[7].

ஸ்ருதி, கௌதமி., பல்லவி

உண்மையில் நடந்தது என்ன?: இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரியாக செய்திகளை வெளியிட்ட நிலையில், ஆங்கில ஊடகங்கள், இல்லை அண்டை போட்டது உண்மைதான் என்கின்றன. மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஸ்ருதி ஒரு முன்னணி வேடத்தில் நடிக்கிறார். கௌதமி, ஸ்ருதியின் தோற்றம் மாறும்படியான, ஆடைமாற்றத்தை செய்யும் கௌதமியின் போக்கு பிடிக்கவில்லை என்று பலர் சொல்லித் தெரியய வந்துள்ளது[8]. செட்டிங்குகளில், ஆடைப்பற்றிய விவகாரத்தில், இருவரும் எப்பொழுதுமே வாதித்துக் கொண்டிருப்பதை பலரும் பார்க்க நேர்ந்தது[9]. இதனால், சூடான வாதம், விவாதமாகி, வாய் சண்டை வரைக்கும் போய் விட்டது[10]. ஒருமுறை, இவ்விருவருக்கும் ஏற்பட்ட சண்டையினால், சூட்டிங்கே ஒத்திவைக்கும் நிலைக்குப் போய்விட்டது[11]. அந்நிலையில் தான், விசயம் அனைவருக்கும் தெரிந்து, வெளியே வந்தது. இந்தியா-பாகிஸ்தான் சண்டையா இது, முக்கியமாக செய்திகளை போட, மக்கள் படித்துத் தெரிந்து கொள்ள? ஆனால், தமிழ் மக்களுக்கு உக்கியமாக உள்ளது, தேவையாக உள்ளது. இனி ஸ்ருதி மற்றும் கௌதமிகளுக்கு ஏதாவது நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டியது தான் பாக்கி. சீகிரம் அதுவும் நடக்கும், செய்தி வரத்தான் செய்யும்!


© வேதபிரகாஷ்

19-08-2016

27-1467012572-shruti-hassan

[1] தமிழ்.வெப்.துனியா, ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை, Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:51 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/what-is-problem-between-shruti-haasan-and-gowthami-116081800016_1.html

[3] தினத்தந்தி, நடிகை கவுதமியுடன் சுருதிஹாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி செய்தி தொடர்பாளர் அறிக்கை, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 12:15 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST

[4] தி இந்து, கெளதமியுடன் கருத்து வேறுபாடா? – ஸ்ருதி தரப்பு விளக்கம், ஸ்கிரீனன், Published: August 16, 2016 18:07 ISTUpdated: August 16, 2016 18:07 IST

[5] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/08/17001555/Actress-Shruti-Hassan-differences-with-kavutami.vpf

[6] http://tamil.filmibeat.com/heroines/no-difference-opinion-with-gouthami-shruthi-hassan-041744.html

[7] http://cinema.dinamalar.com/tamil-news/49875/cinema/Kollywood/Shruti-denied-there-is-miff-behttp://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8994441.ecetween-her-and-Gouthami.htm

[8] Gautami had been brought on as a costume designer for the trilingual film, which has Shruti in the lead role. Several sources from the film’s sets had revealed that Shruti was unhappy with Gautami for changing her look in the film, leading to a spat between the two of them. “There was always tension in the atmoshpere as Shruti and Gautami would constantly quabble over costumes. There would heated arguments and tiffs between the two of them. At one stage, things got so ugly that a whole day’s shoot had to be cancelled,” a source said.

Indian Express, Shruti-Gautami spat: The real story, By Suhas Yellapantula, Published: 17th August 2016 02:47 AM; Last Updated: 17th August 2016 11:02 AM

[9] http://www.newindianexpress.com/entertainment/telugu/Shruti-Gautami-spat-The-real-story/2016/08/17/article3582770.ece

[10] DNA, Shocking: Shruti Haasan and Kamal Haasan’s partner have an ugly fight on the sets!, Mon, 15 Aug 2016-05:01pm , dna webdesk

[11] http://www.dnaindia.com/entertainment/report-shocking-shruti-haasan-and-kamal-haasan-s-partner-have-an-ugly-fight-on-the-sets-2245379

ஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்!

செப்ரெம்பர் 30, 2014

ஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்!

 

உலக அழகி மாட்டிக் கொண்ட விதம்!

உலக அழகி மாட்டிக் கொண்ட விதம்!

பெண்கள் தாக்கப்படுவது ஏன்?: இன்று காலை இச்செய்தியை சிறியதாக தினமரில் படித்தபோதே, எனக்கு இது சரியில்லை என்று தோன்றியது. பெண்கள் இவ்வாறு இலக்காகுவது சமுதாயத்திற்கு அழிவை வரவழைக்கும் செயல் என்றும் புலப்பட்டது. ஆனால், அதில் விவரங்கள் இல்லாமலிருந்தது. இப்பொழுது சில விவரங்கள் வந்துள்ளன. அவற்றைப் படித்தப் பிறகு, எனக்கு அதிகமாகவே கவலை எழுந்தது. பொதுவாக, இந்தியா பெண்களை சரியாக நடத்துவதில்லை என்று இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் பேசி-எழுதி பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். ஆனால், கற்பழிப்பு, கற்பு போன்ற விசயங்களில் ஏதாவது பெண்கள் சரியாக இருக்க வேண்டும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால், உடனே அவர்கள் “இதைக்காலத்தவர், பழம்-பஞ்சாங்கங்கள், பெண்களின் முன்னேற்றத்தில் முட்டுக்கடை போடுபவர்கள்……………..” என்றெல்லாம் வசைப்பாட ஆரம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மறுபடி-மறுபடி பெண்கள் தாக்கப் பட் டு வருகிறார்கள். நவீன யுகத்தில் பிறகு ஏன் பெண்கள் அவ்வாறு நடத்தப் படுகிறார்கள்? ஒரு பெண்ணிற்கு வெளியே வர ஏன் பிரச்சினைகள் இருக்க வேண்டும்? தனது குழந்தையை பள்ளிக்கு விட்டு வரும் வேளையில் அத்தகைய தாக்குதல் நடத்த தயாரான நிலை இருக்க வேண்டும்?

 

Shruti opposing bed scene in Tamil

Shruti opposing bed scene in Tamil

சினிமாத்துறை தொடர்புடைய பெண்களின் நிலை: சினிமா தொழிலில் உள்ளவர்களின் தாய், மனைவி, மகள், சகோதரி போன்றோர்கள் எளிதில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுவார்கள் போலத் தெரிகிறது. இது சினிமா என்று பார்ப்பதை விட, பெண்களின் பிரச்சினை என்று அணுக வேண்டியுள்ளது. நடிகர் சக்தியின் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்[1]. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட தமிழ் படங்களில் சக்தி கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்கிறார். வாசுவின் மறுமகள்[2] / சக்தியின் மனைவி எங்கு வெளியில் சென்றாலும், பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே சென்னை ராயப்பேட்டை போலிசில் புகார் கொடுக்கப்பட்டு, ராயப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ஜாகீர்உசேன் ( 27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

 

Sarika kamal divorce 2002

Sarika kamal divorce 2002

ஜாகீர் உசேன் என்ற சினிமா பிரமுகரும், பாலியல் தொந்தரவும்: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேனும் சினிமா பிரமுகர்தான். சினிமா உலகத்தில் இருந்தால் சபலங்கள் அதிகம் இருக்கும் போலிருக்கிறது. நேற்று அவர் மீண்டும், நடிகர் சக்தியின் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் அபிராமபுரம் பொலிசில் சக்தியின் மனைவி வாலிபர் ஜாகீர்உசேன் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகீர்உசேன் பின்னால் தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இவர்களுக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை எப்படி என்ற்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த புகார் அடிப்படையில் ஜாகீர்உசேன் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3].

 

Americanized westernized Indians degrading Indian womanhood.song

Americanized westernized Indians degrading Indian womanhood.song

சினிமாத்துறை பெண்களை மதிப்பதில்லை: இப்பொழுதைய சினிமா உலக முதலாளிகள், வியாபாரிகள், விற்பன்னர்கள், வல்லுனர்கள், தொழிலாளிகள், வேலையாட்கள், பண்டிதர்கள் முதலியோர் பெண்களை சரியாக மதிப்பதில்லை, நடத்துவதில்லை, திரையிலும் முறையாக காண்பிக்கப் படுவதில்லை. அவர்கள் செக்ஸ் பொருளாக, காமக்களியாட்ட பொம்மைகளாக, நிர்வாண பிரதிமைகளாக, பாலியல் பிண்டமாகத்தான் காட்டப் படுகிறார்கள். தாய்மையினயும் கேவலப்படுத்துகிறார்கள்[4]. வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்களும் அதைவிட மோசமாக வார்த்தைகளை பிரயோகித்து தங்களது வேசித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்[5]. நகைச்சுவை, ஜோக், என்றே தங்களது பரத்தைத் தனத்தை பகட்டாக பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்பண்டிதத்தனத்திற்குத் தான் பரிசுகளும், பாராட்டுதல்களும் கொடுக்கப் படுகின்றன. அந்நிகழ்சிகளை, ஏதோ பெரியதை சாதித்து விட்டதைப் போன்று டிவி-செனல்களிலும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஊடகக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நடிகைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்[6]. நடிகைகளின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளதும் நோக்கத் தக்கது[7].

 

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

சினிமா மோகம் பெற்றோர்களின் ஊக்குவிப்பால் வளர்கிறது: போதாகுறைக்கு 5-10 வயதிலுள்ள சிறுமிகளைக் கூட ஆபாசப்பாடல் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து பெற்றோர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அவர்களையும் ஆபாசமான உடைகளை அணிய வைத்து, அத்தகைய நிகழ்சிகளில் தோன்ற ஒத்துழைத்து, பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு தனது மகள் ஒரு பாடகி அல்ல நடிகையாக வந்தாலும் தயார் என்றா ரீதியில் அத்தகைய பெற்றோர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். “மானாட-மயிலாட” போன்ற மோசமான நிகழ்சிகளில் தமது பெண்களை ஆட வைத்து பெற்றொர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறும்படங்களில், விளம்பரங்களில் நடிக்க வைக்கவும் தயாராக உள்ளார்கள். ஆனால், பிரச்சினை வரும் போது அலறுகிறார்கள்[8]. 50-60களில் போல சினிமா தொழில் என்றால் கேவலமானது என்று நினைக்கும் மனப்பாங்கு இப்பொழுது மாறி விட்டது. முன்பெல்லாம், இளம் பெண்கள் ஓடி வந்து நடிக்க சான்ஸ் கேட்க வந்து, ஏமாற்றப் பட்டு விபச்சாரத்தில் தள்ளப் பட்டார்கள் என்று செய்திகள் வரும். இப்பொழுது அம்மாதிரி வருவதைவிட, வேறுவிதமாக செய்திகள் வருகின்றன[9]. நடிக-நடிகர்களாக இருக்கும் பெற்றோர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களின் பாணியே அலாதியானதுதான்[10]. ஆண் நடிகளில் சிலர் “விபச்சாரிகளாக” இருந்தாலும் அது கற்பின் மகத்துவமாகக் கருதப் படுகிறது[11]. அவர்களின் குடும்பமே மிகவும் வேறுபட்ட கருத்துகளை அள்ளி வீசுகிறார்கள். அதன்படியே நடந்து கொள்கிறார்கள்[12].

 

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்முதலியவற்றின் விளைவுகள் இப்படியும் வெளியாகின்றன: என்.ஜி.ஓக்கள், தனிமனிதர்கள் முதலியோர் போதை மருந்து, செக்ஸ், விபச்சாரம் முதலியவற்றை பெருக்க திட்டமிட்டே வந்து கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பப் கலாச்சாரத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி பேசியதை நினைவு கொள்ளலாம். பெண்கள் பப்புகளுக்குச் செல்லலாம், குடிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம் என்றெல்லாம் நியாயப் படுத்தப்பட்டு பேசப் பட்டது. எதுர்த்தவர்களை தலிபான் என்று முத்திரைக் குத்தி அடக்கப் பார்த்தனர். இதனால், மாணவ-மாணவியர் நட்பு ஆபாசமாகிறது, அது அத்தகைய வக்கிரங்களுக்கு பயனாகிறது. அறிந்தும்-அறியாமலும் அவர்கள் அவ்வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே அறிந்து கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர், மற்றவர்கள் விழுகின்றனர். செக்ஸ்-ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாத்திரிகைகளை உற்பத்தி செய்ய மருந்து கம்பனிகள் ஆரம்பித்து விட்டன. இதில் கூட பெண்களுக்கு தனி என்று விளம்பரங்கள் செய்கின்றன. போதாகுறைக்கு எப்படி ஒரு பெண் நூற்றுக் கணக்கான ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்துள்ளாள் என்று செய்திகள் வேறு! போலந்து நாட்டின், அனிய லைசேஸ்கா என்ற [Ania Lisewska] 21-வயது பெண் 1,00,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைப்பேன் என்று அறிவித்துள்ளாள்[13].

 

வேதபிரகாஷ்

30-09-2014

[1] http://www.newindianews.com/view.php?22SOllbbcS40044e2SMW3022mmD3dddDDmA300M6AKee4W044ccb2lOO23

[2] http://tamil.filmibeat.com/news/youth-is-arrested-teasing-director-p-vasu-s-daughter-law-031075.html

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1081464

[4] https://evilsofcinema.wordpress.com/2014/01/22/anti-indian-music-under-the-guise-of-westernization-degrading/

[5] https://evilsofcinema.wordpress.com/2013/11/15/if-women-are-degraded-in-characterization-in-cine-field-why-then-actresses-act-in-such-roles/

[6] https://evilsofcinema.wordpress.com/2014/01/22/anti-indian-music-under-the-guise-of-westernization-degrading/

[7] https://evilsofcinema.wordpress.com/2013/11/17/srividya-an-actress-much-suffered-ignored-actress-till-death-exploited-by-men/

[8] https://evilsofcinema.wordpress.com/2014/03/17/kamasutra-pill-ad-film-sexy-porn-or-acceptable-to-society/

[9] https://evilsofcinema.wordpress.com/2013/11/26/why-porn-nude-actress-should-be-allowed-to-act-in-tamil-movies/

[10] https://evilsofcinema.wordpress.com/2014/02/27/what-kamal-hassan-and-her-dughters-contribute-to-society-through-their-cine-life/

[11] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/bhuvaneswari-and-kamal-hassan-the-products-of-cinema-industry-publicized-differently/

[12] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/bhuvaneswari-and-kamal-hassan-the-products-of-cinema-industry-publicized-differently/

[13] There’s a 21-year-old woman from Poland who wants to have sex with 100,000 men, which would definitely be a world record.  She wants to have sex with each of them for 20 minutes, which comes out to three years and 10 months of sex.  She says her boyfriend wasn’t thrilled with her plan, but, quote, “had to come to terms with it.”

http://www.huffingtonpost.com/2013/08/28/ania-lisewska_n_3831495.html?utm_hp_ref=weird-news

கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்

ஏப்ரல் 30, 2013

கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[1]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[2]. நடிகைகளும் மன-அழுத்தம், நடிகன்களின் காம வெறியாட்டம் முதலியவற்றைத் தாங்காமல் தற்கொலையிம் செய்து கொண்டுள்ளனர்[3]. சினிமாவில் திருமாவளவன் நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள்”, என்று விமர்சனம் செய்தது ஞாபகத்தில் இருக்கலாம்[4]. அரசியல்வாதிக்கு அப்படியொரு ஆசையென்றால், நடிகனுக்கு இப்படியொரு காம வெறி[5]. கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்தால், பிரதமர் கூட ஆகிவிடலாம் போலிருக்கிறது[6]. சினிமாகாரர்கள் யோக்கியதை இந்த லட்சணத்தில் உள்ளது[7].

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

விபச்சாரிகள் நடத்தும் பொது அறிவுப் போட்டி: கிரிக்கெட் சூதாட்டம் ஆகி, விபச்சாரம் ஆகி, போதை மருந்து விற்பனை வழியாகி விட்ட நிலையில், தமிழர்களுக்கு பொது அறிவு புகட்ட, இல்வாழ்க்கையில் கொஞ்சம் கூட ஒழுக்கம் இல்லாத நடிகன்களை வைத்துக் கொண்டு, கேடுகெட்ட விஜய் டிவி ஒரு நிகழ்சி நடத்தி வருகின்றது. அதில் போதாகுறைக்கு நடிகன்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்கள் யாதோ பெரிய மேதாவிகள் போல காட்டப்படுகிறார்கள். கிரிக்கெட்டில் எப்படி, அரை நிர்வாண பெண்களை ஆட வைக்கிறார்களோ, அதுபோல, இங்கு நடிகன்களை வைத்து தமாஷா காட்டுகிறர்கள். இந்நிலையில் தான், உலக நாயகன் கமல் ஹஸன் தன்னுடைய “துணைவி” அல்லது சேர்ந்து வாழும் நடிகையுடன் வந்து, தன்னுடைய மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டான்.

 

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமலைக் கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும்என்பது நிறைவேறாத ஆசை: இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விஜய் டிவி மீது புகார் அளித்தார்[8]. அந்த புகார் மனுவில், “தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் “நீங்களும் வெல்லலாம்” என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த பிரகாஷ்ராஜும், இல்லற வாழ்க்கையில் தோல்வி அடைந்த மனிதன். அறிவுப் பூர்வமாக இந்நிகழ்சி நடத்துவதற்கே யோக்கியதை இல்லை. கடந்த 15, 16, 17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார், அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்[9]. அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்.

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

திருமணம்  செய்து  கொள்ளாமல்   குடும்பம்  நடத்தினால்  என்ன  தவறு: வாணி கணபதி முதல் சிம்ரன் வரை பல நடிகைகளுடன் வாழ்க்கை நடத்திய கமல் ஹஸன், திருமணம் இல்லாமலே இரு பெண்களுக்கும் தந்தையாக இருக்கிறான். அவனுடைய அத்தகைய சாமர்த்தியத்தைப் பற்றி, முஸ்லீம்களே வியந்தனர், பொறாமை கொண்டனர். ஆகவே, இந்நிகழ்சியில், திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது, ஒன்றும் வியப்பான விஷயம் இல்லை, ஏனெனில், அதிலும் உலக மகா நாயகன் திருவாளர் கமல் ஹஸன் தான்.

 

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

கட்டிப்பிடித்து  முத்தம்  கொடுப்பதுதான்  இந்தியநாட்டு  கலாச்சாரமா?: பாவம், இந்து மக்கள் கட்சிக்காரர் நொந்துபோய், இப்படி கேட்டு கேட்டுள்ளார். பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[10]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

30-04-2013