கமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)
தன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.
மோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.
01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.
மகள் / பெண் | 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் | 2016ல் கமலைப் பிரிந்தார் | |
சுருதி | 1986 | 17 | 30 |
அக்ஷரா | 1991 | 12 | 25 |
சுப்புலக்ஷ்மி | 1999 | 4 | 17 |
தாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.
குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்?
சுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].

Gautami, Kamal and Akshara
மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”
© வேதபிரகாஷ்
02-11-2016

Kamal new relationship it is too real, but not so real
[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=255941
[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)
[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actress-gauthami-had-a-meet-with-narendra-modi-about-life-again-foundation-116102800035_1.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!, By: Mathi, Updated: Tuesday, November 1, 2016, 22:54 [IST]
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/gowtami-kamal-separted-266125.html
[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST