நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? பிரீத்தி ஜெயின் – மதுர் பண்டார்கர் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (2)
சபிதா–சுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா?: உண்மையிலேயே ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில், பாதிக்கப் பட்ட நடிகை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு, சில இணைதளங்கள் சினிமாவைப் பற்றி “கிசு-கிசு” தோரணையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அச்சு-ஊடகங்களும் மூன்று எழுத்து நடிகை, நான்கு எழுத்து நடிகருடன் ஓட்டலில் கும்மாளம், ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம், பார்ட்டி, ….என்றெல்லாம் செய்திகள், புகைப்படங்களும் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகை-நடிகர்கள் சில நேரங்களில் “அது நானில்லை” என்று அறிவித்து மௌனமாகி விடுகிறார்கள். இல்லை, மின்னணுத்துறை வல்லமையுடன் படங்களை / வீடியோக்களை திரித்தியுள்ளனர், மாற்றியுள்ளனர், என்று புகார் கொடுத்து இருந்து விடுகின்றனர். நடவடிக்கை எடுத்தது, கைதானது என்று சில செய்திகளே வருகின்றன. பெரும்பாலான விசயங்கள் மறக்கப் படுகின்றன. ஆக, சமிதா-சுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா என்று கவனித்தால், அது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்களின் நடவடிக்கைகள் மக்களால் நிச்சயமாக கண்காணிக்கப் படும்.
டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள்[1]: மேலும் விளக்கம் அளித்துள்ள சபிதா ராய், தனக்கும் ராடான் மீடியா ஊழியருக்கும் நடு ரோட்டில் சண்டை நடந்தது உண்மை தான். ஆனால், அது எதற்காக என்பது குறித்து சேனல் பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டது, என்று கூறியுள்ளார்…… எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து பாலிமர் தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். பாலிமர் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே,” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்[2]. இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் அண்ணா மற்றும் கார்த்தி அண்ணாவிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. வேறு எந்தவொரு தொலைக்காட்சி வெளியிடவில்லை, டி.ஆர்.பிக்காக இப்படியொரு செய்தியை வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார். டி.ஆர்.பிக்காக செய்தார்களா, வேறு காரணத்திற்காக செய்தார்களா என்று ஆராயும் முன், இத்தகைய கண்றாவிகளை தொலைக்காட்சி செனல்கள் காட்டுவதே கேவலமாக இருக்கிறது. முன்னர் +2 தேர்வின் போது, நாளெல்லாம் சன் டிவி நித்தியானந்தா வீடியோவைக் காண்பித்தது[3]. ஆனால், மற்ற பிஷப்-முல்லாக்களின் வீடியோக்களை லெனினும் எடுக்கவில்லை, ஒளிபரப்பவில்லை போலும். ஆக மொத்தம் இவர்களுக்கெல்லாம், சமூக பிரஞை என்றிருந்தால், இத்தகைய கேவலமான செயல்களை செய்ய மாட்டார்கள்.
இயக்குனரை கொலை செய்ய முயன்ற நடிகைக்கு [பிரீத்தி ஜெயின்] சிறைத் தண்டனை: பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது[4]. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், நான்கு வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்[5]. இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
அயல்நாட்டில் பிறந்து, வளர்ந்து லண்டனில் படித்து, தில்லியில் பட்டம் வாங்கிய பிரீத்தி ஜெயன் கொலை வழக்கில் சிக்கியது[6]: பிரித்தீயின் தந்தை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி, கெய்ரோவில் வேலை செய்தபோது, இவர் அங்கு பிறந்தார். பிறகு ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று பல நாடுகளில் குழந்தை பருவம் கழிந்தது. இங்கிலாந்தில் படித்து, தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். மாடலிங் மற்றும் நடிப்பு இவற்றில் அதிக விருப்பம் கொண்டிருந்ததால், 1999ல் தனது பெற்றோர் இறந்தவுடன் மும்பைக்கு வந்தார்[7]. 2004ல் தன்னை மதூர் பண்டார்கர் 1999 மற்றும் 2004 காலத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் மற்றும் தனது படங்களீல் நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் ஆசைகாட்டி பலமுறை கற்பழித்ததாக குற்றம் சாட்டினார், வழக்கும் தொடர்ந்தார்[8]. ஆனால், அது 2012ல் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 2005ல், இவர் பண்டார்கரை கொலை செய்ய முயற்சித்தார் என்று கீழ்கண்டவர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
- பிரீத்தி ஜெயின்
- நரேஷ் பர்தேசி,
- சிவராம் தாஸ்,
- ….
- ….
இப்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது[9].
சினிமா தொழிலை படிப்பாக சொல்லிக் கொடுப்பது, வேலையாகக் கொள்வது, பென்களின் நிலைமை: நன்றாகப் படித்த, நவநாகரிகமான பிரீத்தி ஜெயின் போன்றவர்களின் நிலைமையே இவ்வாறு இருந்தால், சாதாரணமான பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதனை கவனிக்கலாம். ஆனால், இன்றைய தேதியில், டிவி-சினிமா ஆசைகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் மாடலிங் [விளம்பர நடிப்பு], கம்பெரிங் [நிகழ்ச்சி தொகுப்பாளர்] நடிப்பு போன்ற்வற்றில் ஈடுபட தயாராக இருக்கின்றனர். பணக்கார, நாகரிகமான குடும்பத்தவர் தங்கள் பெண்கள் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதை பெருமையாகவே கருதுகிறார்கள். ஆனால், நடுத்தர வர்க்க பெண்கள் அவ்வாறு செய்ய முடியாது. குடும்பமும், சமூகமும் ஒப்புக் கொள்ளமுடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இதற்கான பயிற்சிக்காக மத்திய-மாநில அரசுகளின் சினிமா-நடிப்பு முதலியவற்றைக் கற்றுக்கொடுக்கும் பள்ளி-கல்லூரிகள் உள்ளன. மாணவியர் தயாராக உள்ளார்கள். தவிர தனியார் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களும் இவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆக, இதில் படிக்க, பயிற்சி பெற செல்லும் பெண்கள் 100% ஒழுக்கமாக இருக்க முடியுமா என்று சொல்ல முடியாது. இருப்பினும் பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா நடிப்புத் தொழில் அடுத்து, தொலைக்காட்சியும் சேர்ந்து விட்டது. செய்தி தயாரிப்பு, வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, என்று பலவாறான துறைகளை ஏற்படுத்தி, வியாபார ரீதியில் லபம் பெறத்தான் அந்நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மற்ற சமூக பிரஞை, தனிமனித ஒழுக்கம், கற்பு போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. மேலும், இத்தொழில் செய்பவர்கள், அதைப் பற்றி தரக்குறைவாக பேச மாட்டார்கள்; உயர்வாக மதிக்க வேண்டும் என்று தான் உறுதியாக இருப்பார்கள், பிரச்சரம் செய்வார்கள்.
© வேதபிரகாஷ்
03-05-2017
[1] சென்னை.ஆன்லைன், டிஆர்பி–க்காக என் வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்க – சபிதா ராய் கண்ணீர், May 01, 2017, Chennai
[2]http://chennaionline.com/article/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
[3] பிறகு அது போலியாக தயாரிக்கப் பட்டது, என்று நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. இருப்பினும், நக்கீரன் அதனை வைத்து நன்றாகவே காசு சம்பாதித்தது.
[4] மாலைமலர், நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்: சிறைத்தண்டனை 4 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு, பதிவு: ஏப்ரல் 28, 2017 21:06.
[5] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/28210651/1082574/Preeti-Jain-Gets-Bail-and-sentence-suspended-for-4.vpf
[6] Hindusthan Times, Madhur Bhandarkar-Preeti Jain case: Five things we know so far, April.28, 2017. 16.45 IST.
[7] http://www.hindustantimes.com/mumbai-news/madhur-bhandakar-preeti-jain-case-five-things-we-know-so-far/story-fx27FXjZH49hfQGx7n0X0J.html
[8] Indian Express, Who is Preeti Jain? Why did she try to kill Madhur Bhandarkar?, By: Express Web Desk | New Delhi | Published:April 28, 2017 8:44 pm.
[9] http://indianexpress.com/article/entertainment/bollywood/who-is-preeti-jain-why-did-she-try-to-kill-madhur-bhandarkar-4632240/