Archive for the ‘மோகக் காதல்’ Category

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (2)!

ஏப்ரல் 7, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (2)!

Karthikeya- Nandini marriage failure

நடிகைமனைவி கணவனைப் பற்றி கூறுவது: தற்கொலை செய்து கொண்ட கணவன் பற்றி, மனைவி சொல்வது நோக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, “எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். என்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார்[1]. வேலைவாங்கி தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு வெண்ணிலா என்ற வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்[2]. அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.  இறந்த பின்னர், இன்னும் நேசிக்கிறேன் என்பதே புதிராக இருக்கிறது. தீர்மானமாக பிரிந்து வந்த பிறகு, நேசிப்பது என்றால் என்ன என்று புரியவில்லை. இதிலும் ஒன்றும் புதுமையாக இல்லை, கணவன் இறந்து விட்டான், இனி நிம்மதிதான் என்ற போக்கு வெளிப்படுகிறது. பொதுவாக, இறந்தவர் மீது குற்றம் சொல்லமாட்டார்கள், நந்தினி சொல்லியாகி விட்டது, அதாவது, ஒரு தீர்மானத்தோடு இருப்பது தெரிகிறது.

 Karthikeyan - suicide note

தற்கொலை செய்த கொண்ட பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டு: அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி, “எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்,” என அவர் கூறினார். இந்நிலையில் அதே நாளில் வெளிவந்த செய்தியில், நடிகை ரம்பா விவாகரத்து விவகாரத்தில், கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டு, வெற்றி பெற்றது தெரிகிறது.

Karthikeyans mothers grudge against Nandini

நடிகை ரம்பா விசயத்தில் சமரசம்[3]: தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில்  இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது[4].

Ramba - divorce resulted in union

திரையுலக தம்பத்தியத்தின் வெற்றி-தோல்விகள் – சில உதாரணங்கள்: ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதை கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவகாரத்துடன் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மாறுபாடாக இருக்கிறது. இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால், அவ்வாறு நோக்கப்படுகிறது. தமிழக சினியுலக தம்பதியரை ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில தம்பதியரே வெற்றிகரமாக தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து, உதாரணத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். அதில், சிவகுமார்-லக்ஷ்மி, ஜெயசங்கர்- போன்ற தம்பதியரைக் குறிப்பிடலாம். இவ்விவகாரங்களில் கமல் ஹஸன் தான் நிச்சயமாக மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது,. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, இரண்டு பெண்களின் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், இன்றைக்கு வரை “கணவன்–மனைவி தாம்பத்திய உறவு தோல்வி”யின் சின்னமாகவே திகழ்கிறார். அவ்வாறு மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகும், “சேர்ந்து வாழும்” இலக்கணத்தை காட்டுகிறேன் என்பது போல, கௌதமியுடன் வாழ்ந்தாலும், அதிலும் தோல்வியை அடைந்து, சாதனையைப் படைத்துள்ளார். இன்று தேவையில்லாமல், பல பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.

Sivakumar wife Laksmi

கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் காதல்-மோதல் ஏன்?: கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவாகரத்திற்குச் செல்லவில்லை, நீதிமன்றத்திற்கு போகவில்லை. இதிலிருந்து இருதரப்பிலிம் பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட “ஒவ்வாமை” பூதாகாரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையே பிரிந்து வாழும் வாழ்க்கை நிலையானது. முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள் இருவருக்கும் தெரிந்தும் இருந்தது. இருப்பினும், நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கேள்விகளை எழுப்புகின்றன. “என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்”, என்பது உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை. அது உண்மையாயின், பெண்மையின் சபலம் புலப்படுகிறது. அது “சரவணன்-மீனாக்ஷி” தொடரில் வெளிப்பட்டதாகவும் உள்ளது.

Karthikeyan - suicide note-implicating

பிரிந்து வாழும் பெண்னின் நிலை: எக்காலத்திலும், திருமணம் ஆகி, கணவனைப் பிரிந்து வந்து, வாழும் பெண்ணின் வாழ்க்கை பலவிதங்களில் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஆனால், சமூகத்தில், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்காரர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால், மத்திய வர்க்க மற்றும் ஏழைக் குடும்பங்களில் அது பெரிய பிரச்சினையாகிறது. “பந்தம்-முறிவு”, பிரிந்து வாழ்வதினால், நிதர்சனமாகவோ, சட்டப்படியோ முறிந்ததாகாது.

  • சாதாரண, சமூகத்தின் பேச்சிற்கு பயந்து,
  • குடும்ப கௌரவம் காக்கப்பட வேண்டும்,
  • இல்லை பெற்றோர்-சகோதரர்-உறவினர்கள்,
  • “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நிலையில் –

உள்ள பெண்கள் தாம் பிரிந்து சென்று மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். தனது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கூட புகார் கொடுக்காமல் “பெருந்தன்மையோடு” இருந்து விடுகிறாள். குழந்தை, இருந்தால், கூட எந்த உதவியையும் எதுர்பார்க்காமல், அதனையும் வளர்த்து பெரியவனாக்குகிறாள். ஆனால், “தந்தை” என்பவன், தனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பது பல உதாரணங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் “ஜீவனாம்சம்” கேட்டு வழக்குகள் போடுவதும், அளிக்கப் பட்ட “ஜீவனாம்சம்” போதாது என்று, மேலும் வழக்கு போடும் பெண்கள் இருக்கிறார்கள். அந்நிலையில் “விவாக ரத்து” தேவையாகிறது.

Karthikeya- Nandini marriage failure-suicide

கணவன் தற்கொலை – தீர்வு என்ன?: “விவாக ரத்து” ஆனாலும், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்து வாழ்கிறார்கள். நவநாகரிகமான பெண்கள் சிலர் வேண்டுமானால், மறுமணம் செய்து கொள்கின்றனர். சினிமா உலகத்தில் யாரும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை. ஆனால், இங்கு, ஒரு ஆண், “பிரிவு-தற்கொலை” விசயத்தில் உதாரணமாகி விட்டான். ஒன்று-இரண்டு என்று திருமண உறவுகல் தோல்வி, பணப்பிரச்சினை, இரண்டாவது மனைவி சம்பாதிக்கிறாள், ஆனால், தன்னால் சம்பாதிக்க முடியவில்லை, போதா குறைக்கு இரவில் நேரங்கழித்து வருவதால் ஏற்பட்ட சந்தேகங்கள் முதலியவை அந்த ஆணை கோழையாக்கி விட்டது போலும்.  முன்பே குறிப்பிட்டது போல, திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது.  ஆனால், ஆண் தற்கொலை செய்து கொண்டால், எந்த சட்டமும் இல்லை. இவ்வாறு அவலங்கள் தொடருகின்றன. எனவே, சாதாரண மக்கள், இந்த சினிமா-மாயை, திராவிட மாயை, பகுத்தறிவு மாயை முதலியவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.

© வேதபிரகாஷ்

06-04-2017

Jaishakar actor

[1] வெப்துனியா, நந்தினியை சும்மா விட மாட்டேந் –  மாமியார் ஆவேசம், புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nandhini-s-mother-in-law-revengy-for-her-son-death-117040500015_1.html

[3] தினத்தந்தி, நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு, ஏப்ரல் 05, 06:51 PM

[4] http://www.dailythanthi.com/News/State/2017/04/05185117/Rumba-husband-With-Indrakumar-Consent-to-live-together.vpf

 

மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்!

ஜூலை 2, 2011

மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்!

கொலை வழக்கில் காதலி விடுதலை, காதலன் சிறையில்: டி.வி.,தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டவழக்கில் மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் டி.வி.,நடிகை மரியா மற்றும் கப்பல் படை ஜெரோம் மேத்யூ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும் , ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்

முக்கோணக்காதல்: டி.வி. தொடர்அதிபர்கொலைவழக்கில்கன்னடநடிகைவிடுதலை[1]: கன்னட நடிகை மரியா சூசைராஜ். இவர் கடற்படை அதிகாரியான எமிலி ஜெரோமை காதலித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளராக விளங்கிய நீரஜ் குரோவரை மரியா சந்தித்தார். நடிக்க வாய்ப்பு கேட்டார். இதில் இருவர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை மலாடில் உள்ள காதலி மரியாவின் வீட்டுக்கு ஜெரோம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 7 ந் தேதி சென்றார். அங்கே மரியாவின் படுக்கை அறையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் இருந்தார். இதைக்கண்டதும் ஜெரோமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இருவர் இடையே வாய்த்தகராறு மூண்டது. இது வலுத்தபோது, நீரஜ் குரோவரை ஜெரோம் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதையடுத்து அவரது உடலை காதலியுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி இரண்டு பைகளில் போட்டுக்கொண்டு காரில் தானே அருகிலுள்ள மானோர் என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று ஜெரோம் எரித்தார். இந்த முக்கோணக் காதல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குரூரமான கொலை: மரியா ஜெரோமுக்கு என்று தீர்மானித்திருந்தார்களாம். ஆனால், மரியா நீரஜுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள், ஜெரோம் கொச்சியிலிருந்து மரியாவின் வீட்டிற்கு வந்தபோது, மரியாவின் படுக்கையறையில் நீரஜ் இருந்ததைப் பார்த்ததும், கொதித்துப் போன ஜெரோம் அவனைக் குத்திக் கொலைசெய்து விட்டான். இதனை மறைக்க இருவரும் முயன்றுள்ளனர். இருவரும் சேர்ந்து தான் அவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிகிறது. மரியா மாலிற்கு (கடைக்கு)ச் சென்று கத்தி முதலியவற்றை வாங்கி வருகிறாள். கொலை நடந்த பிறகு, ராம் மூன்னூறு துண்டுகளாக வெட்டப்பட்டது.
நீதிபதியின் தீர்ப்பு வியப்பாக இருக்கிறது: இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பு துலக்கி நடிகை மரியாவையும், அவரது காதலர் ஜெரோமையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 30.06.2011 அன்று நீதிபதி எம்.டபிள்யூ. சந்த்வானி தீர்ப்பு வழங்கினார், தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது: “இந்த வழக்கில் நீரஜ் குரோவரை ஜெரோம்தான் கொலை செய்தார் என்பதற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. ஆனால் என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்தது என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. ஜெரோம் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக மரியாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ளார். மரியா மூலமாக அவருக்கு நீரஜ் குரோவரை தெரிந்திருக்கிறது. அவருக்கு அவர்களது உறவில் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே தான் அவர் சம்பவத்தன்று மும்பைக்கு வந்திருக்கிறார். இந்த சம்பவம் கண நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ள பெண்ணுடன் இன்னொரு ஆண் இருப்பதை பார்க்கிறபோது எந்த ஒரு ஆணும் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். கட்டுப்பாட்டை இழக்கத்தான் செய்வார். அந்த சூழ்நிலையின் நிமித்தமாக ஜெரோமும் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

 

நீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டியிருக்க வாய்ப்பில்லை: “அதேபோன்று நீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டி இருக்க வாய்ப்பில்லை. எனவே இருவர் மீதான கொலைக்குற்றச்சாட்டும் ரத்து செய்யப்படுகிறது. ஜெரோம் நோக்கமின்றி நீரஜ் குரோவரை சாகடித்த வகையில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304(1)ன்படியும், சாட்சியங்களை அழித்த வகையில் அந்த சட்டத்தின் 201 வது பிரிவின்படியும் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது. மரியாவைப் பொறுத்தமட்டில் சாட்சியங்களை அழித்த வகையில் மட்டுமே குற்றவாளி ஆகிறார்”, இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.
தண்டனை ஒரு நாள் தள்ளி வைத்தாலும் முடிவில் ஒன்றும் மாற்றம் இல்லை: இருவருக்குமான தண்டனை விவரத்தை அறிவிப்பதை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் ஆர்.வி.கினி கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றார். எனவே இருவருடைய தண்டனை விவரம் 01.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும், ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஏமாற்றம் அடைந்த நீரஜின் பெற்றோர்கள்: 30.06.2011 அன்று தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த நீரஜ் குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். “இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்தவனுக்கு, இவ்வாறு தாராளமாகத் தன்டனையளிப்பது வெட்கப்படக்கூடிய, திகைப்பளிப்பதாக, தார்மீகத்தை மீறுவதாக, சமூகத்தில் ஒப்புக்கொள்ளமுடியாததாக உள்ளது. ஜெசிகா லால் திப்பைப் போலவே கொலையாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒரே குற்றத்திற்கு இருவர் வேறுமாதிரியாக தண்டனைக்குள்ளாவது சரியல்ல. நான் நிச்சயமாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்”, என்று தனது கருத்தை வெளியிட்டார்[2].

மகனை இழந்து வருந்திய தாயார்: குரோவரின் தாயார் (58) சொன்னதாவது, “தாமதமான தீர்ப்பு நீதியையே தாமதிக்க வைத்து வைத்துள்ளது. அந்நிலையில் மரியா சூசைராஜ் (தண்டனையின்றி வெளியே) நடந்து செல்வது எங்களால் தாங்கிக் கொள்ள முடிய இயவில்லை. செய்த கொலைக்கு அவள் தண்டனையை அனுபவிக்கவில்லை. என்னால் என் மகனை திரும்பப் பெறமுடியாது. ஆகவே இருவருமே திட்டமிட்டு என்னுடைய மகனைக் கொன்ற போது, இருவருமே தூக்கிலிட வேண்டும்”.

தண்டனைப் பெற்ற மகன் விடுதலையடைய விரும்பும் மற்றொரு தந்தை: அதே நேரத்தில் 10 வருட தண்டனைப் பெற்ற ஜெரோமின் தந்தை, எமிலி ஜெரோம்[3], “நான் என்னுடைய மகன் ஜெயிலிலிருந்து வெளிவர விரும்புகிறேன். ஆனால், அவன் யாதாவது செய்திருந்தால் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அவனுடைய தாயார் அவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பினாள். ஆனால் வக்கீல் மேல்முறையீடு செய்யவேண்டியிருக்கும் என்றார்”.

விடுதலைப் பெற்ற மரியாவின் ஆசை: மரியா சூசைராஜ் தான் முழுவதும் குற்றமற்றவள் என்று தீர்ப்பில் இருக்கவேண்டும் என்று விரும்பினாளாம். தன்னுடைய சகோதரன் ரிச்சர்ட் (32) என்பவனோடு வந்திருந்த மரியா, சகோதரி வெரோனிகாவுடன் தனது தந்தையைப் பார்க்க செல்வதாகக் கூறினாள். இந்த வழக்கினால், ஊடகங்களினால், தனது குடும்பம் பாதித்துள்ளதாக கூறினாள்[4]. ஜெரோமோ, தண்டனைக் குறைக்கப்படலாமா என்று நீதிபதியிடமே கேட்டானாம். ஆனால், மிகவும் குரூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால், தண்டனையௌக் குறைக்க முடியாது என்றாராம்[5].

கொலையிலும் லாபம் தேடும் மனிதர்கள்: கொலை நடந்துள்ளது உண்மை, அதிலும் குரூரமாக உடல் 300ற்கும் மேலாக வெட்டப்பாட்டு, எரிக்கப்பட்டுள்ளது உண்மை. இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு தண்டனை, மற்றொருவருக்கு விடுதலை.தைந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் வர்மா, ஜேரோமை / மரியாவை  வைத்து படமே எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.

சர்ச்சில் பிரார்த்தனை: விடுதலையான, மரியா சர்ச்சிற்குச் சென்று, பிரார்த்தனை செய்துள்ளார்.  எப்படித்தான், இருவரை காதலித்தாள் அல்லது இன்னொருவனுடன் இருக்கும் போது, முன்னவன் பார்த்து விட்டான், இல்லை அவ்வாறு வரவழைத்து தீர்த்து விட்டார்களா, இல்லை ஒரு காதலனை இன்னொரு காதலன் கொன்று விட்டதும், மனம் மாறி ஒத்துழைத்தாளா……இவையெல்லாம் கர்த்தருக்கோ, தேவனுக்கோ தான் தெரியும் போலும். ஒரு வேளை பாவ மன்னிப்புக் கொடுத்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் போலும். பிறகு எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்! குறிப்பாக ராம்கோபால் வர்மாவிற்கு!

ஜெரோமும், ஜான் டேவிட்டும்: காதலை மட்டும் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், இரு கொலைகள், கொலை செய்த விதம், பிணத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அதிக அளவில், தாங்கள் கிருத்துவர்கள் என்று காட்டிக் கொள்ளும் தோரணை, பைபிளை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது, சர்ச்சில் முட்டிப் போட்டு வணங்குவது…………………இவற்றையெல்லாம் ஊடகங்களில் காட்டுவது முதலியவயும் விசித்திரமாக உள்ளது. ஜெசிகா லால் வழக்கை, இந்தியர்கள் பார்த்துள்ளதால், தீர்ப்பு பாரபட்சமாக இருப்பது நெஅன்றாகவே தெரிகிறது, மேலும் நீதிபதியே, குற்றவாளிகளுக்கு தூண்டுதல் போல பேசியிருப்பதும் அத்தன்மையைக் காட்டுகிறது. இனி, மேல்முறையீடு, அதன் முடிவு முதலியவை எப்படி இருக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.


நித்யானந்தா விவகாரம்: ஊடக-சினிமாக்காரர்களின் சதி வெளிப்படுகிறது

மார்ச் 28, 2010

நித்யானந்தா விவகாரம்: ஊடக-சினிமாக்காரர்களின் சதி வெளிப்படுகிறது

வேதபிரகாஷ்

 

மார்ச் மாத காமச்செய்திகள், வீடியோக்கள், விவகாரங்கள்: செவ்வாய்கிழமை 02-03-2010 மாலையிலிருந்து சன் நியுஸ் தொலைக்காட்சி முன்பு காசியைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தது போல அதே பாணியில் அதிரடியாக செய்திகள் நடுவே, கீழே ஓடும் துண்டு செய்தியில் தொடர்ந்து சேலம் சாமியார் சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருக்கிறார், சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி, ………………என்று இந்த காமக்கதையை ஆரம்பித்தது[1]. உடனே 04-03-2010 அன்று நித்யானந்தா விளக்கம் அளித்துவிட்டார்[2]. பிறகு ஸ்ரீதர் என்ற வக்கீல், சாமியார் தரப்பில் சொன்ன விஷயங்களில் ஒன்று – பணம் கேட்ட விவகாரம்[3]. அதற்குப் பிறகு லெனின் கருப்பன் / ஸ்ரீநித்ய தர்மானந்தா விவகாரம் வெளிவந்தது[4]. ரஞ்சிதா விவரங்கள் வெளி வந்தன. உடனே சாமியார் முதலில் “நான் அவனில்லை” என்றார்[5], பிறகு, நானும் இருக்கிறேன், மற்றவை மார்ஃபிங் செய்யப்படது என்றார்!

ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு (மார்ச் 11, 2010): தினமலரில் இப்படியொரு தலைப்பில் செய்தி! ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது[6]. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்[7]. அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர். நித்யானந்தாவின் உருவப் படத்தை, “விசிட்டிங் கார்டு’களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், “சிடி’யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்[8]. நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது[9].

தகவல் பரவாது, வதந்திதான் பரவும்: தமிழ் செய்தியளர், செந்தமிழ் ஊடகக்காரர், தகவல் பரவியது என்கிறார்! தகவல் பரவாது, வதந்திதான் பரவும். முன்பெல்லாம் ஊர்செய்தி, அலர்…..என்றெல்லாம் சொல்லப்படும். புரளிக் கிளப்பி, வதந்தியைப் பரப்பலாம். பரபரப்பும் கூட வரும்! பாவம் ஊடகக் காரர்களும், சினிமாக் காரர்களும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்! நடிகர் சங்கத்தின் எதிராகவே ரஞ்சிதாவின் வீடாம்! அவரது ஃபோன் ஆஃபில் உள்ளதாம், கடத்திக் கொண்டு சென்றுவிட்டனராம்…………………..இப்படியேல்லாம் புருடா விடுகிறர்கள்! இன்னும் எத்தனை நடிகை-நடிகர்கள் நித்யானந்தாவுடன் சம்பந்தப் பட்டிருக்கிறர்கள் என்ரு சொல்ல தைரியம் உண்டா?

வெள்ளையுடையும், காவியுடையும்: தினமலர் “தகவல்” தொடர்கிறது: “ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர். கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, “இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லைஎன, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார். புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், “பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்என்றனர். நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது”. [தினமலர் ஒன்றும் குழப்பத்தைத் தீர்ப்பதாக இல்லை என்று நன்றாகவேத் தெரிகிறது!].

தினமலரின் “காவி-வெள்ளை” போலித்தனம்: பொதுவாக தினமலர் நடுநிலையாக செய்திகள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கருணாநிதி எதிர்ப்பிற்கு வாங்கிக் கட்டிக் கொண்டப் பிறகு, கருணாநிதி புகழ் பாட ஆரம்பித்துவிட்டது தெரிந்ததே[10]. கருணாநிதியை வைத்தே விழாவையும் கொண்டாடி விட்டார்கள்! திராவிட / நாத்திக போர்வையில் இதை ‘பார்ப்பனப் பத்திரிக்கை” என்று சாடுவதும் தெரிந்ததே. ஆனல் இப்படி ஆடைநிறத்தை வைத்துக் கொண்டு, ஒரு ஆஸ்ரமத்தின் புகைப் படத்தையும் போட்டு இப்படி ஆதாரமில்லாது, ஏதோ சந்தேகத்தின்மீது ஆதாரமாக செய்தி வெளியிட்டிருப்பது, விஷமத்தனமாக உள்ளது. இன்று இந்தியாவில் அதிகமாக காவியுடை உடுத்துபவர்கள் கிருத்துவ மற்றும் முஸ்லீம் சாமியார்கள் தாம்[11]. அதற்கடுத்தபடியாக கோடிக்கணக்கன பிச்சைக்காரர்கள் உடுத்துகிறார்கள்[12]. அவ்வளவு ஏன் இந்த சினிமாக்காரர்களே காவியுடை உடுத்திக் கொண்டு, சாமியார்களையே மிஞ்சும் வண்ணம் திரிகிறார்கள்! அன்று குடிரையேறும் நடிகையின் விரசத்தை சரசமாக ரசித்த காவிக் கட்டிய ஒருசினிமாக்காரர்[13] ராகவேந்திர மடம் திறந்து வைக்கிறாராம்! இதெல்லாம் எதில் அடங்கும்? கிருத்துவர்கள், முஸ்லீம்கள் காவியுடைக் கட்டிக்கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஆஸ்ரமங்களை வைத்துக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவிற்கு எதிராக வேவு பார்த்தும் வருகின்றனர். தைரியம் இருந்தால் அவர்களைப் பிடித்துப் போடவேண்டியதுதானே? [அவ்வளவு ஏன் – இன்னும் தொடர்ந்து வரும் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள வில் ஹியூம், ஜோ, ஷாஜி, பினு, பால், அபயா-கேசில் சமந்த பட்டுள்ளவர்கள்……………………, கோவா, குளு, மணலி, ஒரிஸா-ஆந்திராவில் பல இடங்கள்………….., தமிழகத்தில் திருச்சி, கன்யாகுமரி, குளித்தலை………………..எல்லோருமே ஆஸ்ரமங்கள் வைத்துள்ளனரே. அங்கெல்லாம் ஏன் கேமராக்கள் செல்வதில்லை? அவர்கள் என்ன அவ்வாறு பாலுறவு கொள்ளாமல், உடலுறவு கொள்ளாமல், சிலுமிசம் செய்யாமல், நிர்வாணமாக வேலை செய்யாமல், ஆபாச படங்கள் எடுக்காமல் தான் மாட்டிக் கொண்டார்களா? அங்கேயெல்லாம் போகவேண்டியதுதானே. ஆனால் குறிப்பிட்ட சாமியார்களின் படங்கள் மட்டும் வெளிவருகின்றன என்றால், “செக்யூலா செக்ஸ்” என்று ஏதாவது உள்ளது போலும்! கிருத்துவர்கள், முஸ்லீம் மற்ற சாமியார்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் சிறுமிகளை கற்பழிக்கலாம், பெண்களை பலாத்காரம் செய்யலாம், ஆபாச வீடியோக்கள் எடுக்கலாம், அவற்றாஇ இணைதளத்தில் போடலாம். ஆனால், யாரும் கேட்க மாட்டார்கள். இவையெல்லாம் சென்னை மற்ரும் சென்னை சுற்றியுள்ள இடங்களில் நடந்தவை தாம்].

வில் ஹியூம் முதல் ஷாஜி வரையிலுள்ள படங்களை டிவியில் ஏன் காட்டுவதில்லை? ஹியூம், மாத்யூ, ஜோ, ஷாஜி, பினு, பால், வேளாங்கன்னி பலான சாமியார்கள்[14], ……….இவர்கள் விஷயத்தில் அவர்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் முதலியன உள்ளனவே, அதை ஏன் சன்-டிவி காட்டவில்லை? நிஜத்திற்கும், பூதக்கண்ணாடிக்கும் தெரியவில்லை? அப்பொழுது மட்டும் பொய்யாக, குருடராகி விட்டனரா அந்த ஊடகக்காரர்கள்? இது முடியும், அது முடியாது என்றால், எது அவ்வாறு செய்யத் தூண்டுகிறது? தேவநாதன் பார்ப்பனன், இருப்பினும் சம்பந்தப் பட்டவர்கள் “நம்மவர்கள்” என்றதும் அமுக்கிவிட்டார்கள் போலும். ஆனால் நித்யானந்தா பார்ப்பனன் இல்லை முதலியார், ஆகவே அதற்கும் மீறி ஒன்று செயல்படுகிறது! அது என்ன? தேவநாதன் விஷயத்தில் துடப்பக்கட்டைகள்-செருப்புகள் வந்தன; நித்யானந்தா விஷயத்தில் காவியும் கருப்புமே ஒன்று சேர்ந்தன! அதாவது நாத்திகர்கள்-ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்தனர்[15]. ஆகவே, சித்தாந்தம், ஜாதி, சினிமா, அரசியல், தொழில்துறை, முதலியவற்றைக் கடந்து செயல்படும் அது என்ன?

நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு, ஆதரவு தகவலை சேகரிப்பதி ல்அரசு தீவிரம் (மார்ச் 13, 2010): நித்யானந்தா ஆசிரமங்களில் உள்ள வழக்கு விவரங்கள், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியது குறித்த விவரங்களைத் தருமாறு, விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திடம் அரசு கேட்டுள்ளது[16]. நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த ஆபாச, “சிடி’ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது[17]. அதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல இடங்களில் நித்யானந்தா ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன; சில இடங்களில் ஆசிரமங்கள் மூடப்பட்டுள்ளன [ஆனால் மற்ற மதச்சாமியார்கள் தாக்கப்படவில்லை. கிருத்துவர்களே ஊட்டியில் ஒரு ஆபாச பிஷப்பை பத்திரமாக வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். இவர் அமெரிக்காவில் ஒரு இளம் ப்ந்ண்ணைக் கற்பழித்துவிட்டு ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்கிறாராம்]. தன் மீதான புகார்களை நித்யானந்தா மறுத்து வருகிறார். நித்யானந்தா குறித்து மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில், மாவட்ட போலீஸ் நிர்வாகங்களிடம் நித்யானந்தா பற்றி சில விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது. தமிழகத்தில் எந்தந்த பகுதிகளில் நித்யானந்தா ஆசிரமங்கள் உள்ளன; அங்குள்ளோர் மீது இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, வழக்கு பதிவு செய்திருந்தால் அதன் விவரங்கள், ஆசிரமத்தில் தங்கியிருப்போருக்கும், நித்யானந்தாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. நித்யானந்தாவை எதிர்த்தும், ஆதரித்தும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எத்தனை; அதை நடத்திய அமைப்புகள் எவை; அந்த அமைப்புகள் மீது தீர்மானங்கள் எதுவும் போடப்பட்டுள்ளதா போன்ற அனைத்து விவரங்களையும், போலீசார் திரட்டி வருகின்றனர். ஆசிரமங்களுக்கு நித்யானந்தா எப்போது வந்தார்; அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், எத்தனை முறை வந்தார் போன்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 

ரஞ்சிதா கடத்தலா (மார்ச் 11, 2010)? தினமலர் அப்படி கலர் விவகாரத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது, தினகரனுக்குத் தாளவில்லை போலும். பிறகு, அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்துவிட்டது[18]. இதோ செய்தி இப்படி: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் நித்யானந்தாவின் ஆட்களே அவரை கடத்தி கேரளாவில் அடைத்து வைத்திருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உலகின் பல நாடுகளிலும்நித்யானந்த தியான பீடம்என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதாவுடன் இவர் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் டிவி, பத்திரிகைகளில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் உள்ள தலைமை ஆசிரமம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அவரது ஆசிரமங்களை பக்தர்கள் அடித்து நொறுக்கினர். நித்யானந்தாவை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. நித்யானந்தா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல், கடத்தல் உள்பட 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தினகரனின் “எஸ்கேப்” தியரி (மார்ச் 10-15, 2010)[19]: கும்பமேளாவுக்கு சென்றுள்ளார், கேரளாவில் பதுங்கியிருக்கிறார், வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்று அவரைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஓரிரு நாட்களில் அவரே நேரில் வந்து விளக்கம் அளிப்பார் என்று ஆசிரம நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனாலும், அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில், வீடியோ காட்சி மற்றும் மோசடி புகார் குறித்து நடிகை ரஞ்சிதாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டிடத்துக்கு எதிரே உள்ள அபார்ட்மென்டில் பெற்றோருடன் ரஞ்சிதா வசித்து வந்தார். போலீசார் சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அங்கே விசாரித்தும், அவர்களை பற்றிய தகவல் தெரியவில்லை. ரஞ்சிதாவின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. போலீசார் பல முறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சிடி வெளியானதில் இருந்தே அவரை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறியதாக தெரிகிறது. படுக்கையறை வீடியோ தொடர்பாக போலீசில் முக்கிய தகவல்களை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நித்யானந்தா ஆட்களால் ரஞ்சிதா கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவில் அவர் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடியோவிக்கு பதில் வீடியோ “நித்யானந்தாவின்” ஸ்ட்ராடெஜி: நித்யானந்தா திடீரென அனுப்பிய தன்னிலை விளக்க சிடியில், ‘சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார். ஆபாச சிடி பற்றி எதையும் குறிப்பிடவில்லை. மேஜர் பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி தவறில்லை என்றாலும், சொத்து, பணம் தருவதாக கூறி ஏமாற்றி உறவு கொள்வது சட்டப்படி தவறு என்பதால் இதுதொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாமியாரின் மோசடிகளில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். ரஞ்சிதா இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இதென்ன, பெரிய தெரியாத சமாச்சாரமா?

போலீஸாரும் ஊடகக்காரர்களுக்கு ஒத்துழைக்கிறர்களா (மார்ச் 6-15, 2010)? சட்டப்படி நடவடிக்கை என்றால், இந்நேரத்தில் தாராளமாக எடுத்திருக்கலாம். ஏதோ உபியில் இருந்து சென்னையில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய-தீவிரவதியை பிடித்து விட்டதாக பெருமைப் படும்போது, உபிக்குச் சென்று நித்யானந்தாவைப் பிடிக்க முடியாதா? செல்போனை ஆஃப் செய்திருந்தால் ரஞ்சிதாவைப் பிடிக்கமுடியாதா? இதெல்லாம் ஏதோ சொல்லிவைத்து பேட்டி கொடுப்பதைப் போல உள்ளது. நக்கீரன் ஏற்கெனவே நன்றாக சம்பாதித்து விட்டதாம். சிடியோ ரூ.500/- க்கு விற்கிறது. இதை பிடிக்கமுடியவில்லை போலும்! போலீஸார் பல தொழிற்நுடபக் கருவிகள்-வசதிகள் வைத்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, இப்படி “காணவில்லை தேடுகிறோம்” என்று பாட்டு பாடுவது, பேட்டி கொடுப்பது, கேவலமாக இருக்கிறது.

 

சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது (மார்ச் 15, 2010): மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்[20]. நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார். சரத்குமார் – சினேகா நடிக்கும் புதிய படமான விடியலுக்காக நேற்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

புவனேஸ்வரியும், ரஞ்சிதாவும், ஊடக-விற்பன்னர்களும்: அப்போது, “புவனேஸ்வரி விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தி பெரிதாக ரியாக்ட் பண்ண நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சரத்குமார், “புவனேஸ்வரி விவகாரத்தில் எல்லா நடிகைகளையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியதால்தான் அந்த கண்டனக் கூட்டமே நடந்தது. ஆனால் அதுகூட பின்னர் சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ரஞ்சிதா விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்?”, என்றார். “நடிகை ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஞ்சிதா குற்றவாளிதானே…அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?” என்றதற்கு, இந்த விவகாரத்தில் யார் மீது தப்பு என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. சாமியார் தப்பு செய்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னொன்று, சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது. சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், ‘நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு?’ என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

சங்கஉறுப்பிர், கால-நேரம், இதெல்லாம் தேவையா? ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல[21]. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும்.  மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது…” என்றார். “சாமியாருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை. அவரது உணவு கூட தனிப்பட்ட விஷயம் இல்லை, அவர் உண்மையிலேயே துறவி என்றால். அப்படியெனில் ரஞ்சிதாவுடனான அவரது தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருந்து வந்தது? துறவியை காமத்தில் தள்ளிய ரஞ்சிதா எப்படி குற்றமற்றவராகிறார்?”

மனைவி-துணைவி உள்ளவர்கள் துறவியாக முடியாதேஇதுகூட தெரியாதா ஊடக பண்டிதர்களுக்கு? ஊடகம் இப்படி தலைப்புக் கொடுத்துள்ளதே வேடிக்கையாக உள்ளது. இந்தக் கேள்விக்கு சரத்குமார் பதிலளிக்கத் தடுமாறினார். அதுமட்டுமல்ல, “எனக்கு இதில் முழுமையான விவரங்கள் தெரியாது. படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி என்ன நடக்குமோ அது நடக்கும்” என்று நழுவினார். சரத்குமார் ஆசிரியராக உள்ள அவரது சொந்தப் பத்திரிகையான மீடியா வாய்ஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் நித்யானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இதழிலும் அவர் பேரானந்தம் அடைவது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். நித்யானந்தனின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அந்தக் கட்டுரையினிடையே பிரசுரமாகியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் இதையும் குறிப்பிட்ட சரத்குமார், எனக்கு நித்யானந்தனை நல்ல அறிவாளியாகத் தெரியும். அதை நான் மறைக்கவில்லை. அதற்காக என்னையும் குற்றவாளியாக்கி விடுவீர்களா? என்றார். அதற்கு நாம், “போலீசார் விசாரணை என்று வரும்போது முதலில் குற்றவாளிக்கு தெரிந்தவர்களிடம் எப்படி விசாரணை மேற்கொள்வார்களோ, அப்படி உங்களிடமும் மேற்கொள்ளலாம். சாமியைரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் நீங்களும் பதில் சொல்ல வேண்டி வரலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறதே!” என்று நாம் பதில் சொன்னபோது, சரத் “இல்லையில்ல… நான் அடுத்த இதழிலிருந்து அவர் கட்டுரையை பிரசுரிப்பதாக இல்லை. ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்’ என்றார் சரத். [சரத்தைப் போல பல நடிகர்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகளும் சம்பந்தப் பட்டிருக்கிறர்கள். தாங்கள் எங்கே இதில் மாட்டிக் கொள்வோம், என்று பயப்பட்டு நடிக்கிறர்கள்]. மோடிவித்தைக் காட்டும் அரசியல்வாதிகளும், நித்யானந்தாவும்: காங்கிரஸ்காரர்கள் கேட்கிறார்களாம், மோடிக்கும் நித்யனந்தாவிற்கும் என்ன தொடர்பு என்று? நல்ல கேள்விதான், ஆனால் அதே மாதிரி அவர்கள் மற்ற எல்லா விவகாரங்களுக்கும் கேள்வி கேட்பார்களா? நேருக்கும் மற்ற பென்களுக்கும் என்ன தொடர்பு? ராஜிவ் காந்திக்கும் தெலுங்கு நடிகைகளுக்கும் என்ன தொடர்பு? பிரியங்காவிற்கும் அந்த மந்திரி மகனுக்கும் என்ன தொடர்பு? ராஹுல் காந்திக்கும் அந்த பொலிவியா பெண்ணிற்கும் என்ன தொடர்பு?………….இப்படி அடுக்கிக் கொண்டு போகலாமே? சாமியார் விவகாரம் என்றாலும், நிறைய விஷயங்கள் உண்டே? உதாரணத்திற்கு, ராஜிவ் காந்தி ஏன் நந்த உபி-நிர்வாண சாமியிடம் ஆசி பெற்றார்? சந்திர சுவாமியைப் பற்றியும் சொன்னால்…………………

ராஜிவ் மல்ஹோத்ராவின் நேர்காணல் வீடியோவிற்குப் பிறகு யு-டார்ன் அடிக்கும் மீடியாக்கள்: ஏற்கெனவே நித்யானந்தாவின் வீடியோ பதில் / தன்னிலை விளக்கம் வேலை செய்ய ஆரம்பித்தது. என்னடா இது, வீடியோக்கு பதில் வீடியோவிலேயே தருகிறான் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். பிறகு ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர் சந்தித்து நேர்காணல் செய்ததாக ஆங்கிலத்தில் ஒரு வீடியோ ஒளிபரப்பு ஆரம்பித்தது. உடனே நமது தமிழ் ஊடகக்காரர்கள் முழித்துக் கொண்டனர். நக்கிரன் உடனே தமிழில் பொழிபெயர்த்துப் போட்டுவிட்டது. நாளைக்குச் சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால், சாமியார் சொன்னதையும் நான் போட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் வெளியிட்டுவிட்டது.

வேதபிரகாஷ்

28-03-2010


[1] வேதபிரகாஷ், நித்தியானந்தா, தமிழ்நடிகை, சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[2] வேதபிரகாஷ், நித்யானந்தா விளக்கம், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://dravidianatheism.wordpress.com/2010/03/04/நித்யானந்தா-விளக்கம்/
http://www.maalaisudar.com/newsindex.php?id=33858%20&%20section=1
http://thatstamil.oneindia.in/news/2010/03/04/swami-moves-court-restrain-media.html

[3] வேதபிரகாஷ், வீடியோஒளிபரப்பியடிவிசெனல்நித்யானந்தாவிடம்ரூ. 50 கேட்டதாம்!, http://dravidianatheism.wordpress.com/2010/03/06/வீடியோ-இளிபரப்பிய-டிவி-ச/

[4] தேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்ய வேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:: http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[5] வேதபிரகாஷ், நான் அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[6] தினமலர், ஏற்காட்டில்காவிஉடைநடமாட்டத்தால்பரபரப்பு, மார்ச் 11,2010,00:00  IST; மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16859

[7] துப்பறியும் பத்திரிகைகளுக்கு எந்த ஆண்டுகளில் என்று தெரியாத மாதிரி எxஉதுவதும் வேடிக்கைதான்.

[8] இதெல்லாம் பயத்தின் விளைவேயன்றி, நம்பிக்கையின் விளைவில்லை. குல்லா போட்டு கஞ்சி குடித்து அந்த புகைப் படங்களையெல்லாம் மறைக்கும் கருணாநிதியின் செயலைப் போன்றதே இது!
இந்த விடிக்களைக் கொளுத்தினர் ஆனால் அந்த சிடிக்கள் ரூ.500/-க்கு விற்கப் படுகின்றன. ஒருவேளை அதையும் வாங்கிப் பார்த்து பத்திரமக வைத்துக் கொள்வார்கள் போலும்!

[9] வதந்திகளை “தகவல்” என்று கேவலமாகப் போட்டு, அதனை செய்தியாக்கிய பெருமை தமிழனுக்கே உரியதுத்தான்!

[10] எல்லாம் அந்த ரமேஷ் பிரச்சினையால் வந்த்க விளைவு. அதுவும் ‘ஸ்டிங்” ஆபரேஷனா அல்லது உண்மையா என்று சொல்லவில்லை. இருப்பினும் புவனேஸ்வரி விஷயத்தில், ஸ்ரீபிரியா “ரமேஷ்” பெயர் சொல்லித் திட்டியது திகைப்பாக இருக்கிறது!

[11] அவர்கள் ஆஸ்ரமங்களுக்கு இவர்கள் ஏன் செல்வதில்லை அல்லது அவ்விஷயங்களைப் பற்றி ஊடகங்களில் போடுவதில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை இலவசமாக ஏதாவது கொடுத்து அமுக்கி விட்டார்களோ என்னவோ?

[12] பிச்சைக்காரர்கள் ராத்திரியில் பிளாட்ஃபாரத்திலேயே அவ்வாறு செய்வார்கள். நம்மாட்கள், இவ்வாறு போனால், அதையும் வீடியோ எடுத்துப் போடுவார்கள் போல!

[13] இது உதாரணத்திற்காக – அதாவது அத்தகைய முரண்பாட்டை எடித்துக் காட்டவே சொல்லப்படுகிறது. நம்பிக்கை என்றால், அது அவர்-அவருக்கு தனிபட்ட விழயம் தான். ஆனால், மற்றவர்களையும் சம்பந்தப் படுத்தும்போது, அதனையும் ஆராய வேண்டியுள்ளது.

[14] நக்கீரனே, வீடியோ ஆதாரத்துடன் என்று பீத்திக் கொண்டது, ஆனால் அந்த வீடியோவைப் போட வக்கில்லை. சன்–டிவி செனலும் ஒளிபரப்பத் துணிவில்லை!

[15] நாத்திகர்கள் = திக, திமுக, பாமக, மற்ற கருப்புப் பரிவார் கோஷ்டிகள் (கிருத்துவர்-முஸ்லீம்கள் உள்பட – இவர்கள் “நாத்திக” வகையில் வரமாட்டார்கள்);
ஆத்திகர்கள் = ஹிந்து முன்னணி (இரண்டு-மூன்று பிரிவுகள்), இந்து மக்கள் கட்சி, முதலியோர்

[16] தினமலர், நித்யானந்தாவுக்குஎதிர்ப்பு, ஆதரவுதகவலைசேகரிப்பதில்அரசுதீவிரம், மார்ச் 13,2010,00:00  IST; மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16905

[17] ஆனால் போலீஸார் அதைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ரைடு செல்லவில்லை, பறிமுதல் செய்யவில்லை, டிவியில் தோன்றி விளக்கவில்லை………………..!

[18] தினகரன்  நடிகை ரஞ்சிதா கடத்தலா? – ‎12 மார்., 2010‎

[19] http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=1194&id1=3

[20] தட் ஈஸ் தமிள், மாலை 6 மணிக்குமேல்சொந்தவிஷயங்களில்நடிகர்சங்கம்தலையிடாது! – சரத்குமார், சனிக்கிழமை, மார்ச் 13, 2010, 12:46[IST]

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/03/13-sarath-says-nadigar-sangam-not.html

[21] http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1003/13/1100313003_1.htm

நித்யானந்தா-ரஞ்சிதா-கோபிகா: காமவெறி பிடித்து அலையும் உள்ளங்கள்

மார்ச் 15, 2010

நித்யானந்தா-ரஞ்சிதா-கோபிகா: காமவெறி பிடித்து அலையும் உள்ளங்கள்

நித்யானந்தா தமிழர்களின் போலித்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார் எனலாம்.

தமிழர்களின் காமவெறி, உடலுறவு இச்சை, கலவி மயக்கம், அல்குலை வக்கிரம் முதலிய வக்கிரங்கள் எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளே வெட்கிக் குனியும் வகையில் சன்-டிவிக்காரர்கள், நக்கீரன், தினகரன் முதலிய பச்சைத்திராவிட பாரம்பரியத்தில் ஊறித்திளைத்த பண்பாளர்கள் 24 x 7 வகையில் செயல்பட்டு ஒரு மாபெருயும் புரட்சியை உருவாக்கி இருக்கிறார்கள்!

பகுத்தறிவு திருமணம் செய்து சட்டப்படி அசிங்கப்பட்டது, 1960-70களில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்! அப்பொழுது நித்யானந்தா இல்லை!

பகுத்தறிவு பேசிய திராவிடத் தலைவர்களுக்கு எல்லாம் ஏன் மனைவி, துணைவி,…….என்றெல்லாம் பல இருந்தது என்று உடன்பிறப்புகள் கேட்கவில்லை!

பத்தினி தத்துவம், கண்ணகிக்கு வக்காலது வாங்கும் திராவிடச்சிகள், தமிழச்சிகள், திராவிடத் தலைவிகளுக்கும் ஏன் ஒன்றிற்கு மேலான திருமணங்கள் நடக்கவேண்டும், மணமுறிவில் தாலிகள் அறுக வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவில்லை………………………..

இங்கெல்லாம், நித்யானந்தாவை மிஞ்சித்தானே உள்ளார்கள்……………….

அப்பொழுது வீடியோ இருந்திருந்தால், அவற்றையும் எடுத்திருக்கலாம்……………………..,

ஒலி/ஒளி பரப்பு செய்திருக்கலாம்…………..

அப்புரட்சி ஒரு செக்ஸ் புரட்சி, புளூ-ஃபிளிம் முன்னோடி புரட்சி, திராவிட செக்ஸ், பெரியாரிஸ செக்ஸ், நக்கீரன் செக்ஸ், சன்-டிவி செக்ஸ், தினகரன் செக்ஸ்……………என தொடர்ந்தது!

அங்கோ பசுமையெனப் பாடுகிறது, இல்லை, இங்கு நீலம்தான் என்று வெப்பமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது!

குதிரையேறும் நடிகையின் அல்குல் படும் உணர்ச்சியை ரசித்தான் அந்த ஆஸ்தான திராவிட கவிஞன். தனது காருக்குக் கிடைத்த ஸ்பரிஸம் தனக்குக் கிடைக்கவில்லையே தன்னையே என்று உசுப்பிக் கொண்டான் அந்த வயதிலும்!

இனி திராவிடத்திற்கு கவலையில்லை!

ஒசத்தி கண்ணா ஒசத்தி செக்ஸ்!!

6 மணிக்கு மேலே நாங்கள் உத்திரவாதம் இல்லை, நடிகைகள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இனி அங்கீகாரம் பெற்ற செக்ஸ் செனல் – சன்-டிவி தான்!

டன் னடா டன்!

சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்!

பிப்ரவரி 20, 2010

சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்!

சினிமாக்காரர்களுக்குக்காகத் தான் தமிழ்நாடு அரசாங்கம் இயங்குகின்றதா?

சினிமாத்துறையிலிருந்து அரசியல்வாதிகள்: சினிமாவிலிருந்து அரசியல்வாதிகள் வந்தாலும் வந்தார்கள், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்கள் பிரச்சினைத் தவிர, வெறு எந்த பிரச்சினையும், இப்படி முன்வைத்து ஊடகக்காரர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கருணாநிதி அப்படி நடிக-நடிகையர்கள்கூடவே இருப்பதாக, மற்ற வேலைகளையெல்லாம் பின் தள்ளியதாகவும் இல்லை!! மேடையிலே அவர்கள்கூட கழித்த மணிநேரங்கள் ஒருவேளை அதிகமானாலும் ஆகலாம். விழாக்கள் மேல் விழாக்கள், இப்பொழுதுமே நடிக-நடிகையர்கள் கூடம்தாம், பேச்சுகள்தாம் , ஆட்டம்தான்!!! இதோ மறுபடியயம் சினிமாக்காரர்கள்!

நடனமாட மறுத்த நடிகைகளுக்குத் தடை விதிக்கப்படும்:  சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 06-02-2010 அன்று சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடினர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்தது. முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது[1]. பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்[2]. ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை!). இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம்[3]. இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி விழாவில் அஜித் பேச்சு, ரஜினி பாராட்டு[4]: அண்மையில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது குறித்து கருத்து கேட்டதற்கு, “அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன். விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தககூடாது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார் ரஜினிகாந்த். அண்மையில், திரை உலகத்தினர் குடியிருக்க நிலம் ஒதுக்கியதற்காக[5], சென்னையில் ‘பாசக்காரத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதிக்கு பிரமாண்டமான விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் அதிரடியாக பேசிய நடிகர் அஜீத், “எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கை விடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும் விட மாட்டேங்குறாங்கவந்தாலும் மிரட்டுறாங்க,” என்று புகார்களை அடுக்கிக் கொண்டே போனார்.அப்போது, அந்தப் பேச்சை வரவேற்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

செ‌ன்னை கோபாலபுர‌‌ம் இ‌ல்ல‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். தனது ம‌க‌ள் செள‌ந்த‌‌‌ர்யா ‌‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டத‌ற்காக ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌விதமாக முத‌ல்வரை ச‌ந்‌தி‌த்ததாக ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌ப‌த்‌தி‌ரி‌க்கையை கருணா‌நி‌தி‌க்கு ர‌ஜி‌னிகா‌ந்‌த் நே‌ரி‌ல் செ‌ன்று கொடு‌க்காதது பெரு‌ம் ச‌ர்‌ச்சை ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து த‌‌ற்போது அவரை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ளுமாறு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு ப‌த்‌தி‌ரி‌க்கை கொடு‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் அவ‌ர் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொள்ள‌வி‌ல்லை.

கருணாநிதி காலில் அஜித் விழுந்து ஆசி[6].:அஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பின. ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் அஜீ்ததை தாறுமாறாக திட்டினார்[7]. தனது பேச்சு அரசியலாக்கப்படுவதை உணர்ந்த அஜீத், சமீபத்தில் நடந்த சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்ததின் போது கருணநியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு 17-02-2010 அன்று திடீரென்று வந்தார். கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட 30 நிமிடம் முதல்வர் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் மளமளவென்று நிருபர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது[8].  இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
முதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

இது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.

முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே?

இதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா?

அப்படியெல்லாம் கிடையாது.

நீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்…

ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்களா? ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்கள் என சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது[9]. கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர்[10]. கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் தனது வீடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஜாக்குவார்தங்கம் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜாக்குவார்தங்கம், “ஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, என்றார். ஜாக்குவார்தங்கம் பேட்டி கொடுத்த இன்று மாலையே அவரது வீட்டில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி ஒரு காமெடியர் என்று ஜாக்குவார்தங்கம் சொன்னதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தான், ஜாக்குவார்தங்கம் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஜாதிகள், மதங்கள் என்று பொரிந்து தள்ளும் இவர்களைத் தமிழர்கள் பின்பற்ருகிறார்களே? இத்தகைய நிகழ்சிகளை தமிழர்கள் கவனமாக பார்க்கவேண்டும்; அவர்கள் பேச்சை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவர்களைத்தான் அவர்கள் பல நேரங்களில் தமது தலைவர்களாகவும், கனவுக் கன்னிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்பதனை நினைத்துப் பார்க்கவேண்டும். எப்படி தங்களது மனங்களை வெளியில் காட்டுகிறார்கள், வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்………….என்பதெல்லாம் அவர்களை படம் போட்டுக் காண்பிக்கச் செய்கின்றன.

ரஜினி அஜித்துக்கு பெப்சி வினியோகஸ்தர் சங்கம் கடும் கண்டனம்[11]: ரஜினி, அஜீத் பேச்சுக்கு பெப்சி (திரைப்பட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு), விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.  புதுமுகங்கள் நடிக்கும் பாடக சாலை என்ற படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், “திரைப்படத்துறை ஒரு குடும்பம் மாதிரி. இங்கு நிறைய சங்கங்கள் உள்ளன. நான் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலைவனாக இருக்கிறேன். சங்க கட்டுப்பாடுகளையாரும் மீறக்கூடாது. மிரட்டுவது வேறு, வற்புறுத்துவது வேறு. ஒரு கட்சி என்றால் அதன் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவோ வெளியே தூக்கிப்போடவோ அந்த கட்சி தலைமைக்கு உரிமை இருக்கிறது. அது போல் தொழிற்சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்தவும் மீறி செயல்படுபவர்களை மிரட்டவும் அச்சங்கத்துக்கு உரிமை இருக்கிறது. சினிமா குடும்பத்தினர் விழாக்களுக்கு வரும்படி அழைப்பதை மிரட்டுவதாக எடுத்துக் கொள்ள கூடாது. மீறிப் போகிறவர்களை பணிய வைக்க நிறைய வழிகள் இருக்கிறது. மிரட்டித்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைஞர் திரையுலகினருக்கு வரிச்சலுகைகள், நிலம் என எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்கிறார். திரைப்பட துறையில் எந்த தொழிலாளர் இறந்தாலும் ரூ. 1 லட்சம் உதவி, திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் என பல நல்ல திட்டங்களை நல வாரியம் அறிவித்து உள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமாவில் இருந்துதான் முதல்வர்கள் வந்துள்ளனர் இது தொடரும்”, என்றார்[12].

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:  “நடிகர் நடிகைகளை நிர்ப்பந்தப்படுத்தி அழைக்கிறார்கள் என்ற புகாரை பொது மேடையில் பேசி இருக்க கூடாது. நல்ல விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் வருத்தத்துக்குரிய விஷயங்களையும் வருத்தமான விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் நல்ல விஷயங்களையும் பேசுவது மரபு அல்ல. கிராமங்களில் தலக்கட்டு பஞ்சாயத்து உண்டு. ஊரில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வீட்டுக்கு ஒருவர் போக வேண்டும் என்பது விதி. கோவில்களில் பந்தக்கால் நட்டால் கூட உள்ளூர்காரர்கள் வேளியே போகக் கூடாது என்று நிர்ப்பந்திப்பது உண்டு. இவையெல்லாம் அன்பான கட்டுப்பாடுகள்தான் அதை பின்பற்றி நடக்க வேண்டும். மீறினால் தண்டனை உண்டு. சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்க வேண்டும். குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள்”, என்றார்[13].

ஜாகுவார் தங்கத்திற்கு திருமாவளவன் நேரில் ஆதரவு[14]: அஜீத் விவகாரத்தில் ஜாகுவார் தங்கத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன்[15] நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத். இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில்  ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தமிழ் உணர்வாளர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜாகுவார் தங்கம். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியை நலம் விசாரித்தார்.

அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்[16]: ஜாகுவார் தங்கம் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடிகர் அஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சரத்குமார் தலைமையிலான அஜீத்துக்கு நோட்டீஸ் [17]. அஜீத் விவகாரம் முழுமையான அரசியலாகிவிட்டது. சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினராம். வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி இதில் உடைந்து[18]. இதை நடத்தியவர்கள் அஜீத் மற்றும் அவரது ரசிகர்கள்தான் என்று போலீசில் புகார் கூறினார் ஜாகுவார் தங்கம். விசாரித்த போலீஸார், இந்த தாக்குதலுக்கும் அஜீத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து அவர் பெயரை வழக்கில் சேர்க்காமல் விட்டனர்[19]. இதில் பெரும் ஏமாற்றமடைந்த தங்கம், தொடர்ந்து இரண்டு பிரஸ் மீட்டுகள் நடத்தி நிருபர்களிடம் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் பற்றி மிக மோசமாக பேட்டியளித்தார். நேற்று மாலை நடிகர் சங்கத்துக்கு சென்ற ஜாகுவார் தங்கம், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை சந்தித்து அஜீத் மீது புகார் மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளாராம். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்து, அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாம்.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?: தியேட்டர் அதிபர் சங்க அறிக்கை[20]: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானேதொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்? அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்”, என்று கூறியுள்ளார்.

தமிழ்-தமிழல்லாதோர், தமிழ்நாட்டவர்-கர்நாடகத்தவர், மலையாளி பார்ப்பனன்……………………..இதெல்லாம் எதைக் காட்டுகிறது? ஒருவேளை இப்படி, பல பாராட்டு விழாக்கள் நடத்தியே, படோபடமாக தமது பிரிவினை சித்தாந்தங்களுக்கு பிரச்சார ரீதியில் விளம்பரங்களைத் தேடுகின்றனரா? மக்களைப் பிரிக்க இப்படி நடிகர்கள் மூலம் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரா? ஏனெனில் இப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் எல்லாமே சினிமாக்காரர்கள் பேச்சுகளினின்றுதான் ஆரம்பிக்கின்றது! ஜெயராமன் பிரச்சினை எழுந்து அடங்குவதற்குள் இந்த பிரச்சினை! நாளெல்லாம் தமிழ்நாட்டில் சினிமாக்காரர் பிரச்சினைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையா? திருமணம், விவாக ரத்து என்று எதை எடுத்தாலும் அவர்கள் புராணம்தான். நடு-நடுவில்தான் இந்த செம்மொழியும், கூவமும் வந்துவிடுகின்றன!!

வேதபிரகாஷ்

20-02-2010


[1] தமிழ் கலாச்சாரம் இவ்வாறு இருக்கும்போது, இவர்கள்தான் கற்பைப் பற்றியெல்லாம் பேசுகின்றனராம்! நடிகைகள் பற்றி நடிகை சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறதாம்! பிறகு இதெல்லாம் என்ன? அன்று அரசவையில் அந்தப் புரத்தில் ஆஅடியதை இன்று மேடையிலும், திரைபடத்திலும் ஆடவைக்கின்றனர். இதுதானே உண்மை?

[2] “இப்படித்தான் மானாட மயிலாட” நடிகைகளைத் தயார் படுத்துகிறது எனும்போது, தமிழச்சியின் உடலெல்லாம் பூரிக்கிறது! கொங்கைகள் எழும்புகின்றன. அல்குலைகள் விரிகின்றன.

[3] ஆஹா, எப்படியெல்லாம் உரிமைகள், சட்டதிட்டங்கள் வேலை செய்கின்றன எனப் பார்க்கும்போது, திருவள்ளுவரை நிச்சயம் தூக்கிப் போடுவேண்டியதுதான்!

[4] http://www.inneram.com/201002186723/political-parties-should-not-force-actors-says-rajnikanth

[5] இப்படி பணக்காரர்களுக்கு நிலம் ஒதுக்குவதில் சாதாரண மக்களுக்கு என்ன லாபம்? பதிலுக்கு இப்படி நடிகைகளை வற்புறுத்தி ஆடவைக்கலாம்; பார்த்து ரசிக்கலாம்;……………

[6] http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/19-ajith-thanked-rajini-supporting-him.html

[7] அஹா, இனி வசனங்கள் எல்லாம் தமிழர்களுக்கு. இவர்களின் செம்மொழியை வைத்துக் கொண்டே ஒரு மாநாடு நடத்தி விடலாமே?

[8] இதற்கெல்லாம் இந்த ஊடகக்காரர்கள் எப்படிதான் மோப்பம் பிடித்துக் கொண்டு வர்வார்களோ தெரியவில்லை. ஆனால், அரிசி, பருப்பு, புளி என்றால் இந்த கூட்டம் இருக்காது. பொட்டலமாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளவருவார்கள்! கவர், பாட்டில் கொடுத்தால் வருவார்கள்.

[9] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27238

[10] ஜாதியென்றால் கேட்கவேண்டுமா, உடனே வந்துவிடுவார்களே? முதலில் அந்த திருமாவளவன் வந்துவிடுவாறே?

[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27219

[12] என்ன அருமையான பேச்சு, உதாரணங்கள், முன்பு கருணாநிதி சோனியாவின் வார்த்தைகளை வைரங்களால் பொந்தட்டில் பதித்து வைக்கவேண்டும் என்றாறே அதேப்போல இந்த பேசுகளையும் பதிவு செய்துவைக்கவேண்டும்!

[13] இவர்கள் தமது உள்-பிரச்சினைகள் என்றால், ஏன் இப்படி வெளிப்படையாக வைக்கவேண்டும். இதெல்லாம் என்ன மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்திகளா, நிகழ்சிகளா?

[14] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27273

[15] அதானே பார்த்தேன், கரெக்டாக வந்துவிட்டார். ஜாதி என்றதும் வந்துவிடிவாரே, இனி மற்றவர்கள்தாம் – அதாவது ஜாதி சங்கங்களும் இதில் இறங்கவேண்டியதுதான் பாக்கி.

[16] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27270

[17] தட் ஈஸ் தமிள், அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்! சனிக்கிழமை, பிப்ரவரி 20, 2010

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/02/20-nadigar-sangam-sends-notice-ajith.html

[18] தினத்தந்தி, பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நடிகர் அஜீத் மீது நேற்று மாலை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்,,,,,,,,,,,,,, நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் புகாரை அடுத்து நடிகர் அஜீத்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=548108&disdate=2/19/2010&advt=1

[19] போலீஸாரும் இதில் பங்குகொண்டு தமது வேலையைச் செய்கின்றனர், பிறகு அரசங்கம், அதாவது முதல்வர் கருணாநிதி சொல்வது போலத்தானே அனைவரும் நடக்கவெண்டும், அதனால்தான் பெரிய நடிகர்கள் நேரிடையாக கருணாநிதியிடம் செல்கின்றனர். மற்றவர் தங்அளுக்குள் உள்ள அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அந்த தோரணையில் பேசுகின்றனர்.

[20] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27251

ஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்!

பிப்ரவரி 17, 2010
காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை
பிப்ரவரி 17,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16335

Important incidents and happenings in and around the world

நாகர்கோவில்: காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்தவர் மேள்சி தாஸ். இவரது மனைவி கனகம். இவர்களது மூத்த மகள் ஷர்மிலி. இவரது ஒரு தங்கையும், தம்பியும் சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஷர்மிலி எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

பெண் அதிகம் படித்துள்ளாள் என்ற குற்றா உணர்வு மற்றும் ஏமாற்றவேண்டும் என்ற மனப்பாங்கு: ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார்.

கொலைக்காரன்-ஷாஜன்

கொலைக்காரன்-ஷாஜன்

வன்முறை காதல், தீவிரவாத பெண்-கேட்பு, கொடூரமான செயல்: இதனால் “தாக்குதல் போக்கில்” தானே பெண் கேட்டு மிரட்டல் வேலையிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமாக்காரர்களுக்கு எச்சரிக்கை: குறிப்பாக சில நடிகர்கள் – விஜய், தனுஷ், சிம்பு, அஜித்……………………முதலியோர்க்கு இத்தகைய “ஃபர்முலா”வை விட்டால், வேறு விஷயமே கிடைக்காது. இப்படி அதே மாவைத் திரும்ப-திரும்ப மாறி-மாற்றி திரைப்படங்கள் எடுத்துவருகின்றனர். காதலைக் கொச்சைப்படுத்தி, விரசப்படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப்படுத்தி, அசிங்கப்படுத்தி, …………………இன்னும் எனென்ன வார்த்தைகள் உண்டோ அனைத்தையும் செர்த்துக் கொள்ளலாம். காமத்தைக் காதலாக்கி, விபச்சாரத்தை நட்பாக்கி, அபாசத்தை சினிமாவாக்கும் இவர்கள் மிகப்பெரிய சமூகத் தீவிரவாதிகளே.

ஒரு பெண்ணை பலர் காதலிப்பது, ஒருவன் பல பெண்களைக் காதலிப்பது, ஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது, “முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும்” சபலங்களை நியாயப்படுத்துவது, இப்படி ஆண்மைத்தனமற்ற பேடித்தனத்தை “ஹீரோயிஸமாக்கி” உண்மயான, மென்மையான காதலை விபச்சாரமயமாக்கப் பட்டுவிட்டதால், அதனையே நிஜ வாழ்க்கையில் பின்பற்ற முயல்கிறார்கள்.